ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻
ஶ்ரீசீரடி சாயீன் உபதேச பொன்மொழிகள்...🙏🏻
நம்முடைய சந்தேகங்கள் கேள்விகள், பதில்கள் மூலமாக தீர்க்கப்பட்டு விட முடியும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஒரு கேள்வியை பதிலளிப்பதென்பது,மனதில் வேறு பத்து கேள்விகளுக்கு வழிவகுக்கும்.ஒரு ஜோடி கேள்வி பதில் பத்து புதிய கேள்விகளுக்கு இடமளிக்கிறது, பின்னர் இந்த கேள்விகள், பதில்கள் சங்கிலி முடிவில்லாமல் தொடர்கிறது ஆனால் சந்தேகம் விலகுவதில்லை. நாம் கேவிகள் கேட்பதன் காரணமே நமது சந்தேகங்களைத் தீர்க்கவே, ஆனால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுவது, அனைத்து சந்தேகங்களிலிருந்து விடுபட்டுள்ள ஒருவனே சத்தியத்தை அறியும் திறன் படைத்தவன் என்பதாகும். சந்தேகத்தின் பொருள், உன்னுடைய பிராணன் முழுவதுமாக மலரவில்லை என்பதே, அது அதன் உன்னத நிலையை அடையவில்லை. பிராணன் உடலில் எங்கேயோ சிக்கியுள்ளது.
நீ முழுவதும் பிராணனாக இருக்கும் போது, அனைத்து சந்தேகங்களும் தானாகவே மறைகின்றன. ஆகவே தான் நீ மிகவும் சந்தோஷமாக இருக்கும் போது, உன் மனதில் சந்தேகங்கள் இல்லை. நீ ஆழ்ந்த அன்பில் இருக்கும் போது, உன்னுள் எந்த சந்தேகங்களும் எழுவதில்லை.சந்தேகம் என்றால் நீ ஒன்றை நம்புகிறாய், நீ அதில் நம்பிக்கையற்றும் இருக்கிறாய். நீ எதையாவது முழுவதும் நம்பவில்லையென்றால், அப்போது சந்தேகம் கிடையாது, நீ ஒன்றை முழுவதுமாக நம்பினால், அப்போதும் உனக்கு எந்த சந்தேகமும் இருக்காது.ஆகவே, நீ ஒன்றை நம்பியும், நம்பாமலும் இருக்கும் போது சந்தேகம் எழுகிறது, இந்த நிலையில், எவ்வாறு ஒருவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு, ஒன்றை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்..? இதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதெல்லாம்: ‘ஞானம் தேஹம் ஸ-விஞானம் இதம் வக்ஸ்யாமி ஆஸேஸாத். யஜ் ஞாத்வா நேஹ பூயோ ந்யாஜ் ஞாதவ்யம் அவஸிஸ்யதே.(7.2), அவர் ‘இது ஒரு ஆழ்ந்த ஞானம் ஆனால் அதற்கு ஒரு விஞ்ஞானமும் இருக்கிறது. இதைத்தான் நான் உனக்கு சொல்லப் போகிறேன்,தெரிவதற்கு இல்லை என்று தெரிந்தபின்பு.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார், ‘உனக்குத் தெரியாமல் நான் ஒன்றையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. நான் உனக்கு முழு அறிவையும் வழங்குகிறேன்.’ அவர், அந்த அறிவின் ஒரு பகுதியை இன்றும், மிச்சமுள்ளதை நாளைக்கும் சொல்கிறேன் என்று சொல்லவில்லை...
ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻