வெள்ளி, செப்டம்பர் 08, 2023

நான் யார்...?

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்..🙏🏻🙏🏻

நான் யார்...?

"ஏழு விதமான தாதுக்களால் (அதாவது, குருதி நீர், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் இவற்றால்) உருவாகியுள்ள இந்த ஸ்தூலமான உடம்பு நான் அல்ல. ஒளி, ஒலி, சுவை, மணம், தொடு உணர்வு என்னும் ஐம்புலன்களை அறிகின்ற கண், காது, மூக்கு, நாக்கு, தோல் எனும் அறிவு உறுப்புகளாகிய ஐம்பொறிகளும் நானல்ல. பேசுதல், நடத்தல், கொடுத்தல், மலம் கழித்தல், சுகித்தல் என்னும் ஐந்து தொழில்களை செய்யும் வாய், கால்கள், கைகள், குதம், பிறப்புறுப்பு என்னும் செயல் உறுப்புகளும் நானல்ல...

"மூச்சு விடுதல், பிரித்து நீக்கல்,ஜெரித்தல் போன்ற அகத் தொழில்களை இயக்கும் பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் எனும் ஐந்து வாயுக்களும் நானல்ல. நினைக்கின்ற மனமும் நானல்ல. இப்படி எல்லா விஷயங்களும், தொழிற்பாடுகளும் அற்று அதே சமயத்தில் விஷயங்களைப்பற்றிய நுண்ணுணர்வுகளோடு (வாசனைகளோடு) மட்டும் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானல்ல...

"இப்படி ‘நானல்ல’ ‘நானல்ல’ என்று தள்ளிய பிறகும் தனித்திருக்கும் அறிவே நான். அந்த அறிவின் சொரூபமே (மெய்யியல்பே) சச்சிதானந்தம்."...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

சரணாகதி...!!??

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

 சரணாகதி...!!?? 🙏🏻

சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச்சொல்லும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான்...அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி பார்த்தன் மாமணித் தேர்விடும் பாகனாய்” நன்கமர்ந்து கீதையாம் அமுதமொழியில் அதையே பலவாறாக மொழிந்து அருளினான். ‘வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்சந்தி” என்பது வேதவாக்யம். இதன் பொருள் “கொல்லத் தகுந்த குற்றமே செய்திருந்தாலும் அடிபணிந்வனைக் காட்டிக் கொடுப்பதில்லை” என்கிறது மறை. இதை விளக்கவே ஸ்ரீராம கிருஷ்ண அவதாரம் தோன்றிற்று.

சுவாமி ஸ்ரீதேசிகன் தாம் இயற்றி அருளிய அபயப்ரதான ஸாரம்’ என்ற நூலில், ஸ்ரீமத் ராமாயணத்தில் சரணாகதி அஞ்சுருவாணியாய் கோர்க்க பட்டது என்கிறார்...ஸ்ரீமத் ராமாயணம் ஒரு தேர் என்று எடுத்துக்கொண்டால் அதனுடைய சட்டங்களையெல்லாம் சேர்த்து இடையிலே கடை ஆணி போடப்பட்டுள்ளது. அக்கடையாணிதான் சரணாகதி என்பது. சரணாகதி என்கிற ஆணியை ராமாயணத்தில் எடுத்துவிட்டால் ராமாயணமாகிற தேர் நிலைகுலைந்து விழுந்துவிடும் என்கிறார் அவர்...

ஸ்ரீபாலகாண்டத்தில் தேவர்கள் அனைவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடன் செய்யும் சரணாகதி. அதே பாலகாண்டத்தில் ஸ்ரீதசரத சக்ரவர்த்தி, ஸ்ரீபரசுராமரிடம் செய்யும் சரணாகதி.

ஸ்ரீ அயோத்யா காண்டத்தில் ஸ்ரீ சீதாபிராட்டியின் முன்பு ஸ்ரீலக்ஷ்மணன், ஸ்ரீ ராமபிரானிடம் செய்யும் சரணாகதி அயோத்யா காண்டத்தில் ஸ்ரீவசிஷ்டர் முதலானோர்களை முன்னிட்டுக் கொண்டு சித்திரகூட பர்வதத்தில் ஸ்ரீ பரதன் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி.

ஸ்ரீ ஆரண்ய காண்டத்தில் தபோதனர்கள் ஆன மகரிஷிகள் அனைவரும் ஸ்ரீராமபிரான் இடம் செய்த சரணாகதி அடுத்து கிஷ்கிந்தா காண்டத்தில் வானர தலைவனான ஸ்ரீசுக்ரீவன் ஸ்ரீராமனிடம் செய்தசரணாகதி.

ஸ்ரீ சுந்தரகாண்டத்தில் ஸ்ரீவிபீஷணன் ராமனிடம் செய்த சரணாகதி. அதே காண்டத்தில் ஸ்ரீராமன், சமுத்ர ராஜனிடம் செய்த சரணாகதி. ஸ்ரீஉத்தரகாண்டத்தில் தேவர்கள் திருப்பாற்கடலில் ஸ்ரீமன் நாராயணனிடம் செய்த சரணாகதி.

இப்படி ஸ்ரீமத் ராமாயணத்தில் காண்டம் தோறும் சரணாகதி அழுத்தம் திருத்தமாக பேசப்பட்டது அதை நன்கு கவனிக்க வேண்டும் அதனால்தான் ஸ்ரீமத் இராமாயணத்திற்கு ஸ்ரீ சரணாகதி சாஸ்திரம் என்றே பெயர் அமைந்தது

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻.

இறைவனிடம் சரணடைந்தவன் எந்த இடத்தில் வசிக்கவேண்டும்..


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

யோகம் என்பது என்ன...

குகையிலோ, வீட்டிலோ, வெளியிலோ, காட்டிலோ, மலையின் உச்சியிலோ, நீரிலோ, நெருப்பிலோ, ஒருவன் வசிக்கட்டும். இவைகளில் எங்கு வசித்தாலும்,..! எவனது உள்மனம் உமது திருப்பதத்தில் ஒன்றியதோ, அப்படி ஒன்றியிருத்தலே யோகம் எனப்படும்.. அவனே பரம யோகி எனப்படுவான்..அவனே எப்போதும் இன்பமயமாய் இருப்பவன்...!?🔥

இறைவனிடம் சரணடைந்தவன் எந்த இடத்தில் வசிக்கவேண்டும்.. எந்த மாதிரி வாழவேண்டும் என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்வது போல இந்த வரிகள் அமைந்திருக்கிறது...

இவ்வுலகவாழ்க்கை முறைப்படியே வாழ்ந்து வரும் பக்தனுக்கு இப்படியான சந்தேகங்கள் எல்லாமே வரும். எதைச் செய்யவும் ஒரு நல்ல காலம் என்பதுபோல், எவரும் இடம், பொருள், ஏவல் என்று பார்த்துத் தான் எதையும் சொல்கிறார்கள், செயலும் ஆற்றுகிறார்கள். அதில் முதலாவதாக வரும் இடம் என்ற பரிமாணத்தைப் பற்றித்தான் இங்கு பேசப்பட்டிருக்கிறது. அதனால் பக்தன் தனது முயற்சி நன்கு கைகூடி வருவதற்கு ஏற்ற இடம் எது என்று கேட்கும் குணம் உள்ளவன்தான்....

எப்போதும் போல் வீட்டிலேயே இருக்கலாமா, அல்லது வீட்டை விட்டு வெளியேறி தனிமை மிகுந்த காட்டிற்குச் சென்று, அங்கு குகை எதிலாவது வசிக்கலாமா, அல்லது எவரும் எளிதில் அணுகமுடியாத மலைக்குச் சென்று அதன் உச்சியில் இருக்கலாமா, அல்லது எவரும் எதிர்பார்க்கக் கூட முடியாது நீரில் அமிழ்ந்தோ, நெருப்பினில் புகுந்தோ தவம் செய்ய வேண்டுமா என்று முடிந்தது, முடியாதது என்று எல்லாவற்றையும் அவன் கேட்கலாம். அதற்குப் பதிலாக “எங்கு முடியுமோ அங்கேயே இரு, ஆனால் எங்கிருந்தாலும் சரண் அடைந்திருக்கிறாயே அந்த ஞானியோ, பகவானோ அவனது பாதங்களை மனதினில் இறுகப் பற்றிக்கொள்”, அதுதான் மிக மிகத் தேவையானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அப்படி ஒன்றி இருப்பதுதான் யோகம் என்றும், அப்படி இருப்பவனை பரம யோகி என்றும் சொல்வார்கள். அவனுக்கு இன்பம்-துன்பம் என்று மாறி மாறி வராது, எப்போதும் அவன் இன்ப நிலையிலேயே இருப்பான் என்ற உத்திரவாதமும் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻.

வியாழன், செப்டம்பர் 07, 2023

யார் கடவுள்..புரிந்தவர்களுக்கு அவரவர்களே கடவுள்...?!?!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீன் கூற்று....மலர்களின் வண்ணங்களும்..வாசனையும் ஒவ்வொரு மலருக்கு மாறினாலும்..எல்லா மலரிலும் மகரந்தம் ஒன்று தான்.. அதுபோலவே எல்லா மகான்களின் உருவிலும் என்னை காண முயற்சி செய்யுங்கள் ..!?🙏🏻

தியானம் என்றால் என்ன...?ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தியானம் என்றால் என்ன என்று  தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை..ஒரு நாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்..சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா..?" என்றார் சிரித்துக் கொண்டே...!சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்....

மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்...அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளையாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளையாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளயையில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்...

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளயை வாயில் போட்டுக் கொண்டான்...இரண்டு 'ம்'களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ..?’ என்றார் மகரிஷி புன்னகைத்தபடி...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

மலர்களின் வண்ணங்களும்..வாசனையும் ஒவ்வொரு மலருக்கு மாறினாலும்..எல்லா மலரிலும் மகரந்தம் ஒன்று தான்.. அதுபோலவே எல்லா மகான்களின் உருவிலும் என்னை காண முயற்சி செய்யுங்கள் ..!?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீன் கூற்று....மலர்களின் வண்ணங்களும்..வாசனையும் ஒவ்வொரு மலருக்கு மாறினாலும்..எல்லா மலரிலும் மகரந்தம் ஒன்று தான்.. அதுபோலவே எல்லா மகான்களின் உருவிலும் என்னை காண முயற்சி செய்யுங்கள் ..!?🙏🏻

தியானம் என்றால் என்ன...?ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தியானம் என்றால் என்ன என்று  தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை..ஒரு நாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்..சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா..?" என்றார் சிரித்துக் கொண்டே...!சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்....

மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்...அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளையாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளையாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளயையில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்...

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளயை வாயில் போட்டுக் கொண்டான்...இரண்டு 'ம்'களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ..?’ என்றார் மகரிஷி புன்னகைத்தபடி...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

நான் எனும் அகந்தை...!???


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

 நான் எனும் அகந்தை...!???

எழும்பும் அகந்தை எழுமிடத்தை நீரில்

விழுந்த பொருள் காண வேண்டி – முழுகுதல் போல்

கூர்ந்த மதியால் பேச்சு மூச்சு அடக்கிக்கொண்டு உள்ளே

ஆழ்ந்து அறிய வேண்டும் அறி..!

பொருள் :  

தண்ணீரில் விழுந்த ஒரு பொருளைக் கண்டெடுக்கும் பொருட்டு, அந்த நீரில் மூழ்கும் ஒருவன் பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு முழுகுவது போல, அனைத்திற்கும் முதல் காரணமான “நான்” எனும் அகந்தை கிளம்பும் இடத்தைக் காண தனது எண்ணங்களாகிய பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு, தன் உணர்வாகிய இதயத்தில் ஆழ்ந்து, கூர்மையான ஒருமுனை நினைவின் உதவியால் அதி நுட்பமான அதை அறிய வேண்டும் என்பதை அறி.

நமது எந்த நிலையிலும், உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக மூச்சு இருக்கிறது... ஆக மூச்சு என்பது பிராணனின் இயக்கம். நாம் பேசுவதற்கும் மூச்சு தேவை ஆகிறது. நாம் எதைப் பேசுகிறோம்..? நமது எண்ணங்களை வெளிப்படுத்தவே நாம் பேசுகிறோம். அவைகளை வெளிப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம் இருந்தாலோ, அல்லது எண்ணங்களே இல்லாது போனாலோ பேச்சு என்ற சாதனமே வேண்டாம். ஆக பேச்சு என்பது எண்ணத்தின் வேறோர் உரு என்று கொள்ளலாம். எண்ணம் என்பது சூக்ஷுமமாகிய மனதின் சலனத்திற்கும், பிராணன் என்பது தூலமாகிய  நமது ஐம்புலக் கருவிகளின் சலனத்திற்கும் காரணமாவதினால், அவை இரண்டும் அடங்கிவிட்ட உள்ளமானது அலைகளற்ற ஆழ்கடல் போல் அமைதியாகிறது.

நீரில் உள்ள பொருளை எடுக்க முனைபவன் பேச்சையும், மூச்சையும் அடக்கிக் கொண்டு நீரில் மூழ்குகிறான். அதே போல, “நான்” எனும் அகந்தை கிளம்பும் இடத்தை நாடுபவன், அது தனக்குள் இருந்து கிளம்புகிறது என்பதை முதலில் உணர்வதால், தனது எண்ணங்களையும், மற்ற கருவிகளின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தி தன்னுள் ஆழ்கிறான். அப்படி மூழ்கும்போது, தனது அதி நுட்பமான புத்தியை உபயோகப்படுத்தி, வேறு எதிலும் மனதைச் செலுத்தாத வைராக்கியத்துடன் தன்னுள் நோக்குகிறான். இங்கு வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்வது என்பது நீரில் மூழ்குபவன் ஒரு கல்லைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்குவது போல ஆகும். இவை தவிர, தன்னிழப்பைச் சார்பவனுக்கு ஏதோ ஒரு வடிவில் குருவருளும் கிடைக்கும். அதுவன்றி அவனால் மேலே செல்ல இயலாது என்பது ஆன்றோர்களின் வாக்கு.

மூச்சை அடக்க வேண்டும் என்பதற்காக ஒருவன் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யவேண்டும் என்பது கிடையாது. தனது ஆன்ம சொரூபத்தை உணர வேண்டும் என  ஒருவன் தீவிரமாக முனையும் போது, பிராணன் உட்பட அவனது மற்றைய இயக்கங்களும் தானாகவே அடங்கிவிடும். ஆனாலும் முதல் முயற்சி நமதாக இருத்தல் அவசியம். இல்லையென்றால் இதைப் பற்றிய அறிவு, தெளிவு அனைத்துமே புத்தி பூர்வமாக நின்று விடுமே அல்லாது அனுபவத்திற்கு வராது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

நான் எனும் அகந்தை...!???

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நான் எனும் அகந்தை...!??

 இழி உடல் யான் என்னால்  இகந்திடுக என்றும்,

ஒழிவில் இன்பாம் தன்னை  ஓர்க – அழியும்

உடல்  ஓம்பலோடு தனை  ஓர உனல் ஆறு

கடக்கக் கராப்புணை கொண்டற்று.... 

பொருள்....

அருவருப்புடைய இழிவான இத்தேகத்தை ஆத்மா என்று எண்ணுவதை விட்டு விடுக. எப்போதும் ஒழிவற்று இடைவிடாமல் இன்பமயமாய் விளங்கும் தன் சொரூபத்தை அறிந்திடுக. அழியும் தன்மையுள்ள உடலின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையுடன் கூடவே தனது ஆத்ம சொரூபத்தை அறிவதற்கு முயற்சி செய்வது ஓர் ஆற்றைக் கடந்து அக்கரை செல்வதற்கு முதலையைக் கட்டுமரமாகக் கொள்ளும் முயற்சி போன்றதாகும்...ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய ஒருவன் படகையோ அல்லது தெப்பக் கட்டையையோ பிடித்துக் கொண்டுபோய் அக்கரை அடையலாம்...ஆனால் ஆற்றில் உள்ள முதலையின் மீதேறி அவ்வாறு ஒருவன் செல்ல முயன்றால் அவன் கதி என்ன ஆகும்..? அது போன்றே ஆன்ம முத்தைத் தேடுபவன் முதலில் தேக அபிமானத்தை விட வேண்டும். இல்லையென்றால் அவனுக்கும் முதலையின் மீதேறியவன் அனுபவம்தான் கிடைக்கும். ஏனென்றால் தேக அபிமானம் கொண்டவனுக்கு அவனது உடல் உலகத்தில் உள்ளதால் உலகமும் தெரியும். உலகம் தெரியும்போது அவனது பார்வை வெளியேதான் செல்லுமே தவிர உள்முகப்படாது. உள்முக நோக்கில்லாது ஆன்ம அனுபவம் சித்திக்க வாய்ப்பில்லை....

ஆக முதலில் தன்னை ஒருவன் உடல் அளவில் குறுக்கிக் கொள்ளக்கூடாது. அடுத்தபடியாக எது பரமார்த்திக உண்மையோ அந்த இடைவிடாது இலங்கும், ஆனந்த மயமான சொரூபத்தை தியானித்தல் அவசியம். தியானம் என்பது தனது இருப்பில் எப்போதும் இன்புற்று இருப்பதே. இங்குதான் மற்ற எண்ணங்கள் தலைதூக்கும். ஒவ்வொரு எண்ணமும் வரும்போது எந்த ஒரு எண்ணத்தையும் பின்பற்றிச் செல்லாது, அது யாருக்கு உண்டாயிற்று என்று விசாரித்து எண்ணங்களின் மூலத்தை நோக்கிச் செல்வதே ஒருவனின் முயற்சியில் முக்கிய அம்சம். அந்த நிலையிலிருந்து வழுவாமல் இருப்பதற்கே தியானம் அவசியம் ஆகிறது. இல்லையென்றால் மனம் மறுபடியும் உலகின் வெளிப்புறத் தோற்றத்தில் லயிக்க ஆரம்பித்துவிடும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

புதன், செப்டம்பர் 06, 2023

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் என்ன செய்கிறார் என்று தெரியுமா..?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் என்ன செய்கிறார் என்று தெரியுமா..?

அர்ஜுனரின் மனம் எங்கெல்லாம் கவரப்பட்டு செல்லுமோ அங்கிருந்தெல்லாம் அதைத் திரும்ப வரவழைத்து தன் மீதே குவிய வைக்கிறார். அதனால் தான் இதில் ஞானமும் அறிவியலும் ஈடுபட்டு இருக்கிறது, மேலும் இதுதான் இந்த கீதையின் தனித்துவம். ஸ்ரீ கிருஷ்ண பகவான் இந்த விசேஷமான ஞானத்தை கொண்டு, அர்ஜுனரின் மனம் எங்கெல்லாம் போகுமோ அங்கிருந்தெல்லாம் அதை இழுத்து தன் மீது குவிய வைக்கிறார். அப்படியென்றால், அர்ஜுனருடைய மனதை அர்ஜுனருகுள்ளேயே செலுத்தி அர்ஜுனரின் மெய்யுணர்வின் மீது குவிய வைக்கிறார். இதுதான் குருவின் வேலை மற்றும் ஒரு சீடனின் கடமை...

எனவே, ஒருவர் எங்கெல்லாம் பெருவலிமையைக் காண்கிறாரோ, அதெல்லாம் இறைவனுடையது, அதை வெளிக் காட்டுபவருக்கு சொந்தமானது அல்ல என்பதை ஒருவர் உணர வேண்டும். எங்கெல்லாம் ஒருவர் அழகைக் காண்கிறாரோ, அது அந்த மனிதருடையதல்ல, அழகின் பின் இறைவன் இருக்கிறார் என்பதை உணர வேண்டும். இறைவன் இல்லாமல் எந்த அழகும் இருக்க முடியாது. அதனால் தான், ‘சத்யம் சிவம் சுந்தரம்’, என்று சொல்லப்படுகிறது. எங்கெல்லாம் சிவ பெருமான் இருக்கிறாரோ அங்கெல்லாம் அழகும் சத்தியமும் இருக்கிறது. இதை சொல்வதின் மூலம், ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரின் மனம் கவரப்படக்கூடிய எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து, தன்னை நோக்கி இழுக்கிறார். கிருஷ்ணா என்றால் கவர்ச்சி.. அப்படியென்றால் எல்லாவற்றையும் தன்னை நோக்கிக் கவரக் கூடிய ஒருவர் என்று பொருள். மனம் எங்கெல்லாம் அலையக்கூடுமோ அதிலிருந்தேல்லாம் விடுவித்து மையத்திற்கு கொண்டுவருவது  அதுதான் அந்த மையம் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

எனவே, எங்கேனும் யாராவது ‘தேஜ்-புஞ்’ ஆல் (ஆன்மீக ஞானத்தால் விளைந்த பிரகாசம் – ஞானப் பிரகாசம்) பிரகாசமாக காணப்பட்டால், அவர் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது ஆழ்ந்த அன்பில், காதலில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அதனால் தான் அவரால் எல்லோரையும் தன்னை நோக்கிக் கவர முடிகிறது. மூன்று குணங்களால் உலகில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசமான வற்றிலிருந்து மனதைத் திருப்பி இழுத்து, நம்முள் இருக்கும் பரிசுத்தமான மெய்யுணர்வின் மீது குவிப்பது...

சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்..🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறுகிறார்,..

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

சுலோகம்....

யே ச்சை-வ சாத்விகா பாவா ராஜசாஸ் தாமசாஸ் ச்ச யே. மத்த ஏவேதி தான் வித்தி ந த்வ-ஹம் தேஷூ தே மயி. (7.12)

ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மா  கூறுகிறார்,..ஓ அர்ஜுனா, மூன்று குணங்களான, சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்றும் என்னிடமிருந்து பிறந்தவை. ஆனால் அதில் நான் இல்லை மற்றும் அதுவும் என்னிடம் இல்லை, ஆனாலும் அவை என்னிடமிருந்து வந்தவை. இதைத்தான் நீ தெரிந்து கொள்ள வேண்டும்’.இது மிகப் புதிதாய் இருக்கிறது.…

ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறுகிறார்,..‘நான் இந்த மூன்று குணங்களால் ஆளப்படுவதில்லை மற்றும் இந்த மூன்று குணங்களும் என்னிடம் இல்லை, ஆனாலும் இவை என்னிடமிருந்து மட்டுமே உருவாகி இருக்கிறது. இதற்குப் பின்னே ஒரு மிகப் பெரிய அறிவியல் உண்மை இருக்கிறது. இந்த மூன்று குணங்களின் விளையாட்டிற்கு சாட்சியாய் மாறிவிட்டால், அவை எல்லாவற்றிலுமிருந்து நீங்கள் பிரிந்து விடுகிறீர்கள் என்பதை, இதை ஆழமாய் புரிந்து கொள்ள விழைந்தால் நீங்கள் உணர்வீர்கள். எனவே அவர் கூறுகிறார், ‘இந்த மூன்று குணங்களும் என்னிடமிருந்து பிரிந்து இருந்தாலும், அவை என்னுடைய தொடர்ச்சியே.’ நான் இந்த ஆடையை என் உடம்பில் உடுத்தியிருக்கிறேன் ஆனால் நான் அந்த ஆடை அல்ல, நான் அந்த ஆடையின் ஒரு பாகமுமல்ல. எப்படி நாம் ஆடையை உடுத்தினாலும் நாம் அந்த ஆடையல்லவோ மற்றும் அந்த ஆடையின் ஒரு பாகமும் அல்லவோ, ஆனாலும் அந்த உடை நம்முடையது தானோ - அப்படித்தான் இது. இதைப் புரிந்துகொண்டீர்களா..?

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘நான் தான் இந்த மூன்று குணங்களை (உடை) உருவாக்கினேன் மற்றும் அவை என்னுடையது, ஆனாலும் அவற்றால் நான் பாதிக்கப்படவில்லை மற்றும் அவை என்னிடம் இருப்பதில்லை மற்றும் நான் இந்த மூன்று குணங்களுமல்ல. எனவே, ஓ தனஞ்சயா (மாபெரும் செல்வங்களை வெல்பவன் என்ற பொருள் கொண்ட அர்ஜுனரின் மற்றொரு பெயர்), நீயும் இந்த மூன்று குணங்களுக்கு சாட்சியாய் மாற வேண்டும். இவை என்னுடைய இறை இயல்பின் ஒரு அங்கம் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். இவை என்னால் உருவாக்கப்பட்டது மற்றும் இதை நான் தான் தாங்கிக் கொண்டிருக்கிறேன், ஆனாலும் நான் இந்த மூன்று குணங்கள் அல்ல’...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

ஸ்ரீ கிருஷ்ணர். ‘பலமான அர்பணிப்புடன் தடுமாற்றமில்லாமல் என்மீது நம்பிக்கை வை..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஸ்ரீ கிருஷ்ணர்.....‘பலமான அர்பணிப்புடன் தடுமாற்றமில்லாமல் என்மீது நம்பிக்கை வை’, என்று சொல்லும் போது அவருடைய பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லி கொண்டேயிரு என்ற பொருளில் சொல்லவில்லை. .

ஒரு முறை அவர் மீது நம்பிக்கை வைத்து விட்டால் பிறகு அவ்வளவு தான். பிறகு ஒரு அணுவளவு கூட சந்தேகம் வரக்கூடாது. இதுதான் உண்மையில் இறைவனை அறிந்துகொள்வது என்பது. ஒருமுறை இறைவனைத் தெரிந்து கொண்டு அவர் மீது மொத்த நம்பிக்கையும் வைத்துவிட்டால், பிறகு அந்த நம்பிக்கை எப்போதும் இருக்கிறது. அந்த ஞானம் மறைவதேயில்லை. அது உங்களுடனேயே எப்போதும் இருக்கும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்...!,

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

🙏🏻ஸ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்.., 🙏🏻

‘பலரால் என்னை ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை..? அதன் காரணம் இச்சையும் (வேட்கையும்) துவேஷமும் (வெறுப்பும்) தான். அவர்கள் இதற்கு நடுவே எப்போதும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.’ யாராவது ராகத்தில் (தீவிர வேட்கை) சிக்கியிருந்தாலோ, அல்லது யார் மீதாவது துவேஷத்தில் இருந்தாலோ, அவர்களுடைய மனதை முழுமையாக நிறைத்து விடுவதால், வேறெதையும் பார்க்க முடிவதில்லை...யார் மீதாவது தீவிர வேட்கை அல்லது தீவிர வெறுப்பு கொண்டவர்கள், மோஹத்தின் (பந்தத்தின்) வலையில் வீழ்ந்து விடுகிறார்கள். எல்லா உயிரினங்களும் இதனால் பாதிக்கப்பட்டு, இந்த காரணத்தினாலேயே துயரப்படுகின்றன...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

ஒரு முட்டாளிடமிருந்தும் கற்கத் தயாராகவும், ஒரு குழந்தையிடமிருந்து அல்லது மாதர் அல்லது ஆடவர் இவர்களிடமிருந்து கற்கத் தயாரக இரு...,

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

எமது குழந்தைகளே....ஒரு முட்டாளிடமிருந்தும் கற்கத் தயாராகவும், ஒரு குழந்தையிடமிருந்து அல்லது மாதர் அல்லது ஆடவர் இவர்களிடமிருந்து கற்கத் தயாரக இருப்பவனும், இறைவனை அனைத்திலும் காணும் காரணத்தால் எதன் மூலமாக வேண்டுமானாலும் அறிவைப் பெற தயாராக உள்ள ஒருவனும் பார்ப்பதற்கு அரிதானவன். அனைத்திலும் இறைவனைக் காணும் ஒரு மஹாத்மாவைப் பார்ப்பது கடினம்... 

சாபமிடும் ஒருவனிடமும், புகழும் ஒருவனிடமும் வாஸுதேவனைக் (தெய்வத்தை) கண்டு, உள்உறையும் ஆத்மாவை (வெளித் தோற்றத்தினாலும், வெளிப்பாடுகளினாலும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படாமல்) அறிந்து கொள்ளும் திறன் படைத்தவனைக் காண்பது அரிது. இதன் பொருள் நீ குழந்தைகளின் கால்களில் விழுந்து, அவர்களை, ‘வாசு தேவா! வாசுதேவா..! என்று அழைப்பது என்றல்ல. நீ அவர்களை பயமுறுத்தி விடுவாய். நீ சாதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் ஆனால் உன்னுடைய உள் மனதில், அனைத்தும் ஒரே தெய்வீகத்திடமிருந்து வந்துள்ளது என்ற ஆழ்ந்த உணருந்திறனைக் கொண்டிருக்க வேண்டும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம். ..🙏🏻🙏🏻

செவ்வாய், செப்டம்பர் 05, 2023

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்,...!

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஸ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்,...‘தர்மத்திற்கு எதிராக இல்லாத ஆசைகள் அனைத்தும் நானே. தர்மத்தின் வழியில் நடப்பவர்கள் மற்றும் தன் ஸ்வதர்மத்தை (தன் பொறுப்புகளை ஒரு இயல்பாக அல்லது கடமையாகச் செய்வது) பின்பற்றுபவர்கள், இவர்களுள் எழும் ஆசை நான் தான், நான் மட்டுமே.’ இதை நீங்கள் எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள்: உங்கள் இதயத்தில் எழும் ஒரு ஆசையின் படி நீங்கள் செயலாற்றும் போது, அது உங்களையும் உங்களைச் சுற்றி உள்ளோரையும் மேன்மையடையச் செய்யும். எல்லோரும் பயனடைவார்கள்....அப்படிப்பட்ட ஆசைகள் இறைவனின் அம்சம்....நாம் தர்மத்தின் வழியில் செயலாற்றும் போது, நம்மால் தவறு ஏதும் செய்ய முடியாது. மேலும், தர்மத்தோடு, ஆசைகளும் கூட எழுகின்றன.ஆனால் அப்படிப்பட்ட ஆசைகள் தெய்வீகமானது (இறைவனின் விருப்பதால் தூண்டப்படுவது)

‘தன்மேய மனஹா சிவ சங்கல்பமஸ்து’என்று அதனால் தான் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது...அப்படியென்றால் எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய ஆசைகள் மனதில் எழட்டும். எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய ஆசைகள் எனக்கு இருக்கட்டும். உண்மையை நோக்கி, மற்றும் புனிதமானது எல்லாவற்றையும் நோக்கி என் ஆசைகள் இருக்கட்டும். இப்போது உண்மைக்கான ஆசையும் ஆசை தான். வாழ்க்கையில் நீங்கள் முன்னேற விரும்பினால், அதுவும் ஆசை தான். எல்லோரும் நன்மையடைய ஆசைப்படுவதும் ஆசை தான்....

ஆசைகள் இல்லாமல் வாழ்க்கையில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. வாழ்வில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஒரு ஆசை இருக்கிறது. வாழ்வில் நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் உண்டு, அந்தக் காரணம் ஆசை. எனவே, என்ன விதமான ஆசையாக இருக்க வேண்டும்..? தர்மத்திற்கு முரணான ஒன்றாக இல்லாமல் அது தர்மத்தின் வழியில் இருக்க வேண்டும். எனவே, ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘தர்மத்தின் வழியில் இருக்கும் எல்லா ஆசைகளும் நான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻.

ஆனந்த தாய நம”


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ  அஷ்டோத்திர சத நாமாவளியில்” காணப்படும் நாமங்களை பாபா தான்(ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி) ஞானம் பெற்றது பற்றி கூறும் பொழுது...

“ஆனந்தாய நம”

“ஆனந்த தாய நம”

இரண்டிற்கும் ஒரு எழுத்துதான் வேறுபாடு. அந்த ஒரு வித்தியாசத்தில் பொதிந்துள்ள பெரியதொரு தத்துவத்தை அறிய நமது விழிகள் வியப்பில் விரியும். முதல் நாமாவளியின் பொருள் “ஆனந்தமாக இருப்பவர்”, அடுத்ததின் பொருள் “ஆனந்தத்தை வழங்குபவர்” என்பதாகும்‌...

மகழ்ச்சியை நமக்குத் தருவதுடன், அவரும் சந்தோஷம் குறையாதவராகவே  காணப்படுகிறார்‌. பாபாவின் மகிழ்ச்சி அணு அளவும் குறையாது என்பதே பொருள்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறிக் கொண்டே ஆரம்பிக்கிறார்..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பகவத் கீதையின் ஏழாவது அத்தியாயத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு கூறிக் கொண்டே ஆரம்பிக்கிறார்...🙏🏻

மையா அசக்தாமனா பார்த்தா யோகம் யுஞ்சன் மத்-ஆஷ்ரயா. அஸம்ஸயம் ஸமாக்ரம் மாம் யதா ஞாஸ்யாஸி தத்-ச்ருணு’ (7-1). அவர் சொல்கிறார்.,‘ உன்னுடைய பாசம் முழுவதையும் என்னிடம் வைத்து, நான் விவரித்துள்ளவாறு யோகப் பாதையைப் பயிற்சி செய்து, என்னை நீ எவ்வாறு முழுமையாக தெரிந்து கொள்வதென நான் உனக்கு இப்போது விவரிக்கிறேன்...

இங்கு,ஆசக்தி என்பது பாசமென பொருள்படும்,ஆஷ்ரயா என்பது நாம் எதைச் சார்ந்திருக்கிறோமோ அது. நாம் அன்பு செலுதுபவர்களைக் குறித்து பாசம் (ஆசக்தி) உள்ளது, நாம் சார்ந்திருப்பவர்களும் (ஆஷ்ரயா) இருக்கிறார்கள். நாம் எதோடு தொடர்பு கொண்டுள்ளோமோ அது யோகா எனப்படுகிறது.  இங்கே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் சேர்க்கிறார். உங்கள் இருதயம், உங்கள் மனம், இரண்டும் ஈடுபட்டுள்ளன. உதாரணத்திற்கு, உன்னுடைய வேலை, உன்னுடைய பொழுது போக்கிலிருந்து மாறுபட்டது. உன்னுடைய பொழுதுபோக்கு குறித்து ஆசக்தி, (அதாவது ஆசை அல்லது பிடிப்பு)  உள்ளது ஆனால் நீ வேலை என்று செய்ய வேண்டியிருப்பதால் நீ அதைச் செய்கிறாய். ஆகவே, எவ்வாறு இருந்தாலும் வேலை செய்துகொண்டிருப்பது கர்ம யோகமாகும் (ஒருவர் பணி செய்யும் பாதை). நாம் வேலை செய்ய வேண்டியுள்ளதால் ஒரு பக்கம் வேலை செய்யும் போது, நம்முடைய பிடிப்பு வேறெங்கேயோ, வேறெதையோ குறித்து உள்ளது..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🏻🙏🏻

இறைவனின் பாதம் ஒன்றே கதி...!!?

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

இறைவனின் பாதம் ஒன்றே கதி...!!?

“இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியை தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை.அப்படிப்பட்ட அந்த இறைவனின் சரணத்தை கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை...ஸ்ரீ ராமருக்கு சரணாகத வத்ஸலன் என்ற ஒரு திருநாமம் உண்டு. ராமாயணத்தில் பால காண்டம் துவங்கி, யுத்த காண்டம் வரை இந்த சரணாகதி தத்துவத்தை மிகவும் அழகாய் பார்க்கலாம்...

1... பால காண்டத்தில் தேவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் சரணாகதி செய்கிறார்கள்....

2.. அயோத்யா காண்டத்தில் பரதன் சரணாகதி மற்றும் குகனோடு சக்யம்.

3... ஆரண்ய காண்டத்தில் ரிஷிகள் ராமச்சந்திர மூர்த்தியிடம் சரணாகதி செய்கிறார்கள்.

4... கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் சரணாகதி.

5... யுத்த காண்டத்தில் விபீஷணன் சரணாகதி செய்கிறார்.

இதில் விபீஷண சரணாகதிக்கு தான் தனியொரு பெருமையும், விசேஷமும் இருக்கும். சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது இதில்தான்...சரணாகதிக்கு ஐந்து அங்கங்கள் உள்ளது.விபீஷண சரணாகதி யில்தான் அது பூர்த்தியாய் இருந்தது. அந்த சரணாகதி தத்துவத்தில் சொல்லப்படும் ஐந்து அங்கங்கள் என்னென்ன......?

1. அனுகூல்ய சங்கல்பம் - இறைவனுக்கு அனுகூலமான செயல்களைச் செய்தல். அதாவது எவையெல்லாம் தர்மத்துக்கு உகந்ததோ, அவையெல்லாம் இறைவனுக்கு அனுகூலம்.

2. ப்ராதிகூல்ய வர்ஜநம் - இறைவனுக்கு விரோதமானவற்றை செய்யாதிருத்தல். தர்மத்துக்கு மாறுபட்ட, முரணான அனைத்தும் இறைவனுக்கு விரோதம்...

3. மகாவிசுவாஸம் - இறைவன் அவசியம் ரக்ஷிப்பான் என்ற நம்பிக்கை கொள்ளல். காலக்கெடு நிர்ணயம் செய்யாமல், சந்தேகம் கொள்ளாமல், பூர்ணமா இருத்தல்.

4...கோப்த்ருத்வ வரணம் - சரணம் அடைந்தேன், ரட்சகனாக இருத்தல் வேண்டும் என பிரார்த்தித்தல்.

5... கார்ப்பண்யம் - என்னைக்காத்துக் கொள்ள என்னிடம் ஆற்றல் இல்லை எனச் செருக்கு நீங்கிடல்.

6... சரணாகதியில் இருக்கக்கூடிய இந்த ஐந்து அங்கங்களையும் தாண்டி, விபீஷணரிடம்தான் ...அங்கீ என்கிற ஆறாவது.. தன்மையும் இருந்தது..அங்கீ (அகிஞ்சன:)... அகிஞ்சன என்றால் விருப்பு, வெறுப்பின்றி இருத்தல் என்பது பொருள்....

ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சொல்றார் ...

பிராட்டியும், பகவானும் விட்டாலும், நான் விடமாட்டேன் என அவர்களின் பாத கமலம் சொல்லுமாம். விபீஷணர் எல்லாத்தையும் விட்டுட்டு பகவான் ஸ்ரீராமனின் பாதமே கதி என அப்படித்தானே வந்தார்.

ஸ்ரீராமன்...பரிபூர்ண பக்திக்கு, சரணாகதிக்கு பகவான் தன்னையே தருகிறார் என்பது இங்கே சூட்சுமமாக உணர்த்தப்படுகிற விஷயம்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம். .🙏🏻🙏🏻


திங்கள், செப்டம்பர் 04, 2023

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வாறு ஆரம்பிக்கிறார்,...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வாறு ஆரம்பிக்கிறார்... ‘என்னிடம் முழு பாசம் உடையவன், என்னை முழுவதுமாக சார்ந்துள்ளவன், யோகப் பயிற்சியின் மூலம் (பரமாத்மாவே விவரித்துள்ளபடி) சதா என்னோடு தொடர்பு உண்டாக்கிக் கொள்வதில் முனைந்திருப்பவன் மேலும் சந்தேகமற்று இருப்பவன்; எவ்வாறு அத்தகைய ஒருவன் என்னையும், என் முழு வடிவத்தையும் முழுவதுமாக அறிய முடியும், அதை நான் உனக்கு விவரிக்கிறேன்.’ பல முறைகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம் கூறினார்,‘என்னிடம் மட்டும் மனதை நிலை நிறுத்து,இங்குமங்கும் அல்ல’. இதை அவர் ஏன் பல முறைகள் கூறினார்? ஏனெனில் அர்ஜுனன் அவ்வளவு மனமுடைந்து, அவனுடைய சந்தேகத்தினாலேயே பீடிக்கப்பட்டிருந்தான்...

எவன் ஒருவனுடைய சந்தேகங்கள் மறைந்துள்ளனவோ அவன் மட்டுமே அறிவைப் பெற முடியும். வழக்கமாக நாம் அது நேர்மாறாக என்று நினைக்கிறோம். அறிவை பெறுபவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் நிவாரணமடைகிறான். இரு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அறிவைப் பெறுபவன் அனைத்து சந்தேகங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான், இது, பௌதீக உலகத்திற்குப் பொருந்தும், அது வரையறக்குட்பட்டது. மற்றொன்று, சந்தேகத்திலிருந்து விடுவிக்கப்பட்டவன்; எந்த ஒருவனுடைய பிராணன் (நுண்ணிய உயிர் சக்தி அல்லது சக்தி) மிகவும் உயர்ந்துள்ளதோ, அறிவை மிகவும் ஆழமான நிலையில் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாக ஆகிறான்... அவனே உண்மையில் அறிந்தவன்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻