சனி, செப்டம்பர் 23, 2023

பாபாவின் தியான வழி..!!

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபேசித்த தியான வழி..!!

தியானம் சரிவர அமையப்பெற்றால் உடலில் உள்ள சக்கரங்களும், சுரப்பிகளும் சிறப்பாக செயல்படும்...!பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள். இதை நினைவில் கொள்ள வேண்டும்….தியானம்! மிக மிக சக்தி வாய்ந்தது. நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதை மிக எளிதாக அடைய தியானம் ஒன்றே கைகொடுக்கும்...புத்தரும், இயேசுவும் அன்பை பிரதானமாக கொண்டனர். அன்பின் உருவமாக வாழ்ந்தனர். அதற்கு காரணம் அவர்கள் செய்த தியானம்தான். முகமது நபி, ஹீராமலையில் தியானத்தில் ஆழ்ந்தபோதுதான் மிகப் பெரிய மாற்றத்தை கண்டார்.

மகாவீரர் தியானம் செய்து தன்னையே வென்றார். இவர்களைப்போல நீங்களும், நானும் தியானம் செய்தால் நிச்சயமாக நாம் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க முடியாத ஒருவராக மாறிவிடுவோம். சீரடி சாய்பாபாவும் இதைத்தான் சொன்னார். பாபா காட்டிய பல வகையான ஆன்மீக பாதைகளில் இந்த தியானப் பாதை தனித்துவம் கொண்டது. ஆத்மார்த்தமான பலன்களை அள்ளித் தரவல்லது. தன்னை நாடி வந்த லட்சக்கணக்கான பக்தர்களில் சில பக்தர்களை மட்டும் சாய்பாபா தேர்வு செய்து, ‘தியானம் செய். தியானம் செய்.’ என்று விடாப்பிடியாக வலியுறுத்தியது உண்டு. அதை ஏற்று தியானத்தில் மூழ்கியவர்கள் மிகப்பெரிய பலன்களை அறுவடை செய்தனர்.

தியானத்துக்கு ஆத்மாவை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. உங்களை சுற்றி மிகப்பெரிய கலவரமே நடந்தாலும்கூட தியானத்தால் ஆன்மா அமைதியும், தூய்மையும் அடையும். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் தெய்வீக சக்தி நிரம்பி இருக்கிறது. நம்மிடம் உள்ள கோபம், தாபம், காமம், ஆசை, பொறாமை காரணமாக நாம் அந்த தெய்வீக சக்தியை உணராமலேயோ அல்லது புரிந்து கொள்ளாமலேயோ இருக்கிறோம். ஆனால், யார் ஒருவர் தியானம்செய்கிறாரோ அவரிடம் ஆசை, கோபம், காமம், பொறாமை போன்றவை குறையும். இதனால் தெய்வீக சக்தியை பெறும் ஆற்றலை எட்டமுடியும். இப்படி தியானம் மூலம் நம் எண்ணங்கள் சுத்தம் அடைந்தால் தாமாகவே ஆத்மபலம் ஏற்பட்டுவிடும். எனவே ஒருவர் ஆன்மீகத்தில் மேம்படவும், ஆரோக்கியத்தில் மேம்படவும் தியானம் மிகமிக முக்கியமானதாக உள்ளது.

தியானம் சரிவர அமையப்பெற்றால் உடலில் உள்ள சக்கரங்களும், சுரப்பிகளும் சிறப்பாக செயல்படும். இது நமக்கு தெளிவான சிந்தனையைத் தரும். மனதை பக்குவப் படுத்தும். நம் மனதில் விநாடிக்கு 14 எண் ணங்கள் ஏற்படுவதாக ஆய்வுகளில் கண்டு பிடித்துள்ளனர். நாம் தியானம் செய்தால் இந்த எண்ண அலைகள் குறைந்துவிடும். இதன் காரணமாக நாளடைவில் நமது மனம் ஒருமித்த நிலைக்கு வந்துவிடும். புருவ மத்தியில் கவனம் செலுத்தி தியானத்தில் ஈடுபட்டால் அது நம்மை ஆன்மீகத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும். தியானத்தில் சுவாச தியானம், விளக்கு தியானம், ஓம்கார தியானம், குண்டலினி தியானம் என்று எத்தனையோ வகைகள் உள்ளன.

ஆனால் பாபா இத்தகைய தியானங்களை எல்லாம் சொல்லி தனது பக்தர்களை கஷ்டப்படுத்தவில்லை. ‘என்னை (பாபா) நினைத்து தியானம் செய். அதுபோதும்’ என்று பல தடவை தனது பக்தர்களிடம் கூறியுள்ளார். அதன் சாராம்சம் வருமாறு....நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. என் வழி அனைத்தில் இருந்தும் விலகி நிற்கும் தனி வழி. நம் உள்ளிருக்கும் ஞானத்தை அடைய தியானம் மிகமிக முக்கியமானது-. ஒருமுனை சித்தமாக தியானம் செய்வதால் ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அதை நீ தொடர்ந்து பழகினால் அலைபாயும் எண்ணங்கள் அமைதியாகிவிடும்.

உன் மனதில் துளி அளவுகூட ஆசை இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில் நின்றுகொண்டு எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கும் கடவுளை நினைத்து தியானம் செய்தால் மனம் ஒருமைப்படும். அப்போது உன் இலக்கை நீ அடைவாய். இதுதான் ஆத்ம ஞானத்தை உணர்வதற்கு உரிய வழியாகும்.   அவ்வாறு உனக்கு தியானம் செய்ய இயலாவிட்டால் வேறு ஒரு எளிய வழியை சொல்லித்தருகிறேன் கேள். என்னையே நினைத்து தியானம் செய். அதாவது, என் அவதார உருவத்தை நினைத்துக்கொள். கண்களை மூடி அமர்ந்து என்னையே நினைத்துப்பார். என் முழு உருவத்தையும் உன் மனதுக்குள் கொண்டுவா. கால் நகத்தில் தொடங்கி தலை முடிவரை என் ரூபத்தை நினைத்துப் பார். எப்போது தியானத்தில் உட்கார்ந்தாலும் இத்தகைய குணாதிசயங்களுடன் தியானம் செய்.

இப்படி நீ தியானம் செய்யும்போது முழுக்க முழுக்க என் உருவத்தையே நினைத்துக் கொண்டால் நிச்சயமாக ஒரு காலகட்டத்துக்கு பிறகு உன்னுடைய மனம் அமைதி அடைந்துவிடும். அதன் பிறகு என் உருவம் உனக்குள் பதிந்து படிப்படியாக ஒருமுக நிலை உருவாகிவிடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள் ஆகிய 3-க்கும் இடையே உள்ள வேற்றுமைகள் மறைந்துவிடும். ஒரே முகமான சிந்தனைதான் இருக்கும். அந்த சிந்தனை தூய்மையான, உன்னதமான, உயர்வான நிலை கொண்டதாக இருக்கும். எனது உருவம் எல்லையற்ற ஞானம், கருணை கொண்டது. அதை நினைத்து தியானம் செய்ய செய்ய மனம் வெறுமையாகி பிரம்மத்தோடு பிரம்மமாக இணைந்து ஒன்றாகிபோவாய். சிலருக்கு எனது உருவத்தை தியானத்தில் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படலாம். அப்படி இருப்பவர்கள் என்னை நேரில் பார்க்கும்போது எதை உணர்ந்தார்களோ அதை நினைத்து தியானம் செய்யலாம். நிச்சயமாக பலன்கிடைக்கும்.

தாய் ஆமை நதியின் ஒரு கரையில் இருக்குமாம். மறுகரையில் அதன் குஞ்சுகள் இருக்கும். தாய் ஆமை அவற்றுக்கு பால் தருவது இல்லை. அரவணைத்து பாதுகாப்பது இல்லை. அதற்கு பதில் மறுகரையில் இருந்தபடியே கனிவான பார்வை ஒன்றை பார்க்கும். அந்த ஒரு பார்வையிலேயே ஆமை குஞ்சுகள் தெம்பான நிலைக்கு வந்துவிடும். ஆமை குஞ்சுகளின் தியானம்தான் இந்த வெற்றிக்கு காரணம். இதே போன்றதுதான் எனக்கும், உனக்கும் உள்ள உறவு. நீ எங்கு இருந்தாலும் என் பார்வை உன் மீது இருந்துகொண்டே இருக்கும். என்னையே நினைத்து தியானம் செய். அதற்கான பலனை அறுவடை செய்வாய்.

அதே சமயத்தில் என் பக்தனின் பெயரை உச்சரிப்பதே எனக்கு தியானம் ஆகும். என் பக்தரோடு நடப்பதே ஆனந்தம். என் பக்தன் தவறி விழும்போது என் கைகளை நீட்டி தாங்கி பிடிப்பேன். அவனை ஒருபோதும் விழுந்துவிட அனுமதிக்க மாட்டேன். என் பக்தன் தியானம் செய்து மேம்பட்டிருந்தால் நிச்சயமாக என்னிடம் இருந்து விலகமாட்டான். தியானத்திலும் என் பெயரை உச்சரிக்கும்போதும், உங்கள் மனக் கண் முன் என்னை நிலை நிறுத்துங்கள். இவ்வாறு தொடர்ந்து தியானம் செய்யும்போது ‘சாமீப்யமுக்தி’ என்ற முக்தி நிலையை நீங்கள் அடைய முடியும். இப்படி பாபா பல தடவை தன் பக்தர்களுக்கு தியானத்தின் முக்கியத்துவத்தை சொல்லியுள்ளார். பாபா காட்டிய இந்த பாதையை எத்தனையோ பக்தர்கள் கடைபிடித்துள்ளனர்.

சீரடி சாய்பாபாவின் அற்புதங்களை இந்த உலகுக்கு காட்டியவர்களில் ஒருவரான நரசிம்ம சுவாமிஜி தியானத்தின் மூலம் பாபாவை நெருங்கினார். பாபாவையே எப்போதும் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். பாபாவை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது சீடர் ராமகிருஷ்ண சுவாமிஸ்ரீக்கு ஒரு தடவை சொல்லிக் கொடுத்தார். அதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

முதலில் உங்கள் வீட்டின் ஒரு பகுதியில் அமைதியாக அமருங்கள். கண்களை மூடி தியானத்தில் ஈடு படுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் சாய்பாபாவின் காலடிகளில் கவனத்தை செலுத்துங்கள். பிறகு அப்படியே மேல் நோக்கி உங்கள் பார்வையையும், கவனத்தையும் கொண்டு வாருங்கள்.

சாய்பாபாவின் ஜொலிக்கும் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் நினைத்துப் பாருங்கள். அவரது தலை முடி வரை உங்களது பார்வை, கவனம் செல்ல வேண்டும். இறுதியில் பாபாவின் திருஉருவம் முழுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து நினைத்துப் பாருங்கள். இப்படியே சாய்பாபா அவதார உருவத்தை கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் கொண்டுவந்து எண்ணிப் பாருங்கள். பிறகு மனம் முழுவதையும் சாய்பாபா திருஉருவத்தின் காலடியில் கொண்டுபோய் குவித்துவிடுங்கள். அப்படி செய்தால் பாபாவின் முழுமையான கருணையையும், அருளையும் நீங்கள் பெற முடியும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள். இதை நினைவில் கொள்ள வேண்டும். தியானத்தில் பாபாவை எந்த அளவுக்கு தேடுகிறீர்களோ அந்த அளவுக்கு ஆனந்தம் பொங்கும். சாய்பாபாவுக்கு உனக்கு என்ன தேவை என்பது தெரியும். அவரை தியானித்து வழிபட்டால் மிக உயர்ந்த ஆன்மீக பலன்களை பெற முடியும். சாய்பாபாவின் பாதங்களை விட்டுவிடாதே. கெட்டியாக பிடித்துக்கொள். நீ ஆசிர்வதிக்கப்படுவாய். இவ்வாறு நரசிம்ம சுவாமிஜி தனது சீடரிடம் தெரிவித்தார். இந்த கருத்து சாய்பாபாவின் ஒவ்வொரு பக்தனுக்கும் பொருந்தும். பாபாவை நினைத்து தியானம் செய்யுங்கள். பலன்கள் தானாக தேடி வரும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

பிரார்த்தனையும், சரணாகதியும்.....!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

பக்தரின் கேள்வி....பல்வேறான துயரத்தின் பிடியில் உள்ள எமக்கு மீண்டு வர முடியவில்லை.எவ்வித உதவியும் கிடைக்கவில்லை...இறைவனின்  ஆசியும் கிடைக்க வில்லையே...என்பதாக கூறுகின்றவர்களுக்கான பதிவு..🙏

தனிப்பட்ட மனித உயிர்களின் பிரார்த்தனை, மற்றும் சரணாகதியாலும் ...பாரத்தை எங்கும் வியாபித்திருக்கும் அவனிடம் கொடுத்து விடுங்கள்....அந்த மாபெரும் சக்தி உங்களை சரியான வழியில் நடத்தும்...சந்தேகமே வேண்டாம்....பிரார்த்தனைக்கும் சரணாகதிக்கும் வலிமை அதிகம்...மேலும் உங்களின் பிரச்சனைகளை தெள்ளத்தெளிவுடன் ஒளிவு மறைவின்றி முறையிடுங்கள்...நீங்கள் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோருங்கள்...இறைவன் வழங்கிய நல்ல வாழ்க்கைக்கு நன்றி கூறுங்கள்...உங்களின் தற்போதைய வாழ்க்கை வரை பேருதவியாக இருந்த அனைத்து மனிதர்களுக்கும் நன்றி கூறுங்கள்....ஒளிவு மறைவின்றி இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து  ஆத்மார்த்தமாக இறையுடன் அன்பு செய்து திடமாக விசுவாசம் கொண்டு இறையாற்றலை உங்களுக்குள் உருவேற்றிக் கொள்ளுங்கள்...இங்கு இறைவனை எவ்வாறு பாவித்து உள்ளுக்குள் ஏற்கின்றீர்களோ அவ்வாறாகத்தான் அவ்வாற்றல் செயல்பட முடியும்...முயற்சித்துப் பாருங்கள்..தினந்தோறும் இறையைத் தொழுவதை வழக்கமாக்கிக் கெள்ளுங்கள்...உங்களுக்கும் இறைக்குமான தனிவழிப்பாதையில் நீங்கள் அடைந்த உணர்வின் வெளிப்பாடு உங்களுக்கு மட்டும் உரித்தானது...இதனை பிறருடன் ஒப்பிட முடியாது....இது தனிவழிப்பாதை...ஆகவே எந்த அளவிற்கு சிரத்தையுடன் பக்தி செய்ய முடியுமோ அவ்வளவிற்கு பக்தி செய்து பூஜித்து வந்தால் உயரிய நிலையை எளிதாக அடையலாம்...எதிர்பார்ப்பற்று பூஜித்தல் உகந்தது...இறையுடன் மல்லுக்கட்டாமல் இணத்துடனும்,  ஏக்கத்துடனும்,  தாக்கத்துடன் அவனது அன்பை ஆசியைப் பெற முயற்சித்தல்அவசியம்....நான் என்கிற அகந்தை அகங்காரமற்று இறையை இயல்புடன் பூஜித்து வாருங்கள்...அனைத்து இடர்களும் நீங்கிட துணையிருப்பார்கள்... 

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

குரு என்பவர்..!!?

 



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

குரு என்பவர்..!!?

வாஹேகுரு என்றால், ஒரே ஒரு குருதான் இருக்கிறார். அவர்தான் கடவுள் எனப்பொருள். அவரே லட்சியம். இந்த குருவிலிருந்து அந்த குரு என்று அங்கும் இங்கும் அலைய வேண்டாம். எந்த நிலையிலும் இறைவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்....

 குரு பிரம்மா,

 குரு விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வரஹ...

கடவுள் தான் உங்களது உண்மையான குரு. நீங்கள் அவரை எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம். குரு என்ற வார்த்தையில் ‘கு’ என்பது குணாதீதன் (குணங்களற்றவன்) என்பது ருபரஹிதன் (உருவமற்றவன்) எனவும் குறிப்பிடுகின்றன. ஆகவே குரு என்பவர், குணங்களைக் கடந்த உருவமற்றவர் என ஆகிறது. ஆகவே, இறைவனே உங்களது உண்மையான குரு...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

வெள்ளி, செப்டம்பர் 22, 2023

இப்போது நான் யார்..?

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

தத்வமஸி..

அகம் பிரம்மாஸ்மி...!!

காலத்தால் எழுந்த தத்துவ ஞானத்தின் 

இரண்டு பிரிவுகள் உள்ளன.

தத்துவமஸி....

முதலில் எல்லாப் பொருட்களும் அணுக்கள். அணுவாக இணைந்ததுதான் எல்லா பொருட்களும். எல்லாமே ஒன்றுதான். ஆதிநிலையாகிய சிவம்தான் என்று கண்டுபிடித்தார்கள்..தத்துவம்ஸி என்ற வார்த்தை அப்போது வந்தது...

அகம் பிரம்மாஸ்மி....

பிற்காலத்தில் சித்தர்கள் அகத்தவம் புரிந்து மனமே புறமனதிலிருந்து நடு மனம் சென்று அங்கிருந்து இறை நிலையோடு ஒன்றி அவனேதான் அறிவாக இருக்கிறான் என்ற போது "அகம் பிரம்மாஸ்மி" என்று சொன்னார்கள்...இறைவனேதான் மாற்றம் பெற்றுக் கொண்டே வந்த நிலையிலே இன்று மனிதனாக வந்திருக்கிறான்.

இப்போது நான் யார்..?

இறைவனே நானாக இருக்கிறேன் என்ற உண்மையை தெளிவாக உணர்ந்த நிலையில் தன் முனைப்பு எழவே எழாது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

இறைவனைப் பற்றி நினைப்பது எது..? நமது மனம். இது எப்படிப்பட்டது..? மனம் என்பது மாட்டைப் போன்றது என்று கூறுகின்றன நீதி நூல்கள்.


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

இறைவனைப் பற்றி நினைப்பது எது..?நமது மனம். இது எப்படிப்பட்டது..?மனம் என்பது மாட்டைப் போன்றது என்று கூறுகின்றன நீதி நூல்கள்....

"மனமென்னும் மாடடங்கில்" எனத் தொடங்குகிறது இடைக்காட்டுச் சித்தரின் ஒரு பாடல்....

ஆடு காட்டி வேங்கையை...

அகப் படுத்துமாறு போல

மாடுகாட்டி என்னை நீ

மதிமயக்கல் ஆகுமோ..?

மாட்டின் இயல்பென்ன..? தனக்குத் தெரிந்த எல்லையை மட்டுமே சுற்றி வர விரும்புவது. அதைவிடுத்து புதிய இடத்திற்கு போக விரும்பாதது...விவசாயிகள் மாட்டு வண்டிகளில் விளை பொருட்களை ஏற்றிவிட்டு வண்டியை பூட்டி வண்டியிலே படுத்து தூங்கி விடுவார்கள். மாடு வழக்கமான பாதையில் பயணித்து செல்ல வேண்டிய இடத்தை தானாக அடையும்..தனக்கு தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல மனமும் தனக்குத் தெரிந்த எல்லையையே சுற்றி வருகிறது. நமக்கு தெரிந்த எல்லை நாம் இந்த பிரபஞ்சத்தை எந்த அளவு உணந்துள்ளோமோ அவ்வளவே..

மனிதன் இந்த அண்டத்தை ஐந்து வகையில் உணர்கிறான். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், ஸ்பரிசம் போன்ற ஐந்து வகையில் இந்த அண்டத்தை உணர்வதால் தான் இந்த அண்டத்திற்கு பிரபஞ்சம் என்று பெயர் வைத்தான்....நமக்கே மற்றொரு புலன் இருந்திருந்தால் இந்த அண்டத்தை பற்றிய அறிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம். பிற விலங்குகள், புழு, பூச்சிகள் இந்த உலகத்தை எவ்வாறு உணர்கிறது என்பது நமக்கு தெரியாது. மரம், செடி, கொடி போன்றவற்றிற்கு இந்த உலகத்தை பற்றிய புரிதல் எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரியாது....

நாம் வசிக்கும் பூமி, சூரியன், மற்ற கோள்களை அடக்கியது ஒரு சூரியக் குடும்பம். இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான சூரிய குடும்பத்தைக் கொண்டது ஒரு galaxy எனும் அண்டம். இப்படி கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது ஒரு பேரண்டம். பிறகு..? பிறகு..? அது நமது எண்ணங்களுக்கு எட்டாதது, நாம் கற்பனை செய்தே பார்க்க இயலாதது...தெரிந்த எல்லையிலேயே சுற்றி வரும் மாட்டைப் போல நாம் உணர்ந்த எல்லையிலேயே எண்ணக்கூடிய மனதால் பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதும் சிந்திக்கவே இயலாத போது பிரபஞ்சத்தை படைத்த இறைவனை நாம் அறிந்துக் கொண்டோம் என்று சொல்வது கடலிலே உள்ள ஒரு துளி நீரைப் பருகிவிட்டு கடல் முழுவதும் குடித்ததாக சொல்வதற்குச் சமம் அல்லவா..?இதனால் தான் "எண்ணிறந் தெல்லை யிலாதானே...!" எண்ணங்களால் சிந்திப்பதற்கும் அப்பாற்பட்டவனே என்று இறைவனை துதிக்கிறார்கள்....

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

அல்லும் பகலும் உன்னை  பற்றியே எனது சிந்தனை. எனக்கு உறக்கம் இல்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய பெயரை உச்சரித்த வண்ணம் உள்ளேன். ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது....உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன். கவனி, உன் பொருட்டு, உன் வேதனைகளை அகற்றி நான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. உன்னை நான் ஒருபோதும் மறவேன்....

இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் நீ இருப்பினும் உன்னை நினைவில் வைத்திருப்பேன். நான் உன்னுடைய பக்தியை விரும்புகிறேன்.

சீடர் என்பவர், குருவின் பொற் பாதங்களில் தமது தலையை வைப்பது என்பது புறத்தோற்றமே. அந்தரங்கமாக இவர்கள் ஒன்றே. இருவரிடையே வேறுபாடு காண்பவர், இன்னும் பக்குவம் அற்றவராகவும், முதிர்ச்சியற்றவருமேயாவர். குருவும், சீடரும் ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து சேவை செய்ய வேண்டும். அவர்களிடையே எவ்வித பாகுபாடும், வித்தியாசமும் இல்லை என்பது பாபாவின் கருத்தாக இருந்தது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ  சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

வியாழன், செப்டம்பர் 21, 2023

தக்க குருவை அடைவதற்கான வழியை தெரிவிக்க வேண்டும்..?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

கேள்வி : தக்க குருவை அடைவதற்கான வழியை தெரிவிக்க வேண்டும்..?

குருநாதர் அகத்திய மாமுனிவர வாக்கு...🙏

இறைவன் அருளால் தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து கேட்பார்கள் 'என் குரு யார்..? எங்கிருக்கிறார்..? எந்த குருவை நான் பின்பற்ற வேண்டும்..? என்றெல்லாம் கூட கேட்பதுண்டு. நாங்கள் கூறுவது என்னவென்றால் ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களை பாேதிக்கின்ற எல்லாேருமே குருமார்களே. ஒவ்வாெரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக் காெள்ள உதவினால் அதுவும் குருதான்....எனவே நாங்கள் பாெதுவாகக் கூறுவது என்னவென்றால் குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக்கூடாது. சிஷ்யனை தேடிதான் குரு வரவேண்டு்ம். அந்த அளவிற்கு அந்த சிஷ்யன் நடந்து காெள்ள வேண்டும்.இந்த இடத்தில் ஆழ்வார்களின் கதையை நினைவூட்டிக் காெண்டால் நன்றாகவே புரியும். அந்த புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் காெண்டால் மற்றவை தானாக விளங்கும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

இறைவனை உணர்ந்தவர்கள் உலக பொருட்கள் சுகம் மற்றும் பாதுகாப்பை தரும் என்ற மாயையிலிருந்து விடுபடுவார்கள்.


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை சுகம் மற்றும் பாதுகாப்பைத்தேடும் வேட்கையே...எதையெல்லாம் சுகம் தரும்... எதெல்லாம் பாதுகாப்பைத் தரும் என்று மனம் எண்ணுகிறதோ அதை அடைய மனம் ஏங்குகிறது. வீடு, பணம் சொத்து சுகம் மற்றும் பாதுகாப்பைத் தரும் என்று சிலர் எண்ணுகின்றனர். மனைவி, மக்கள், உறவு, நட்பு சுகம், பாதுகாப்பைத் தரும் என்று சிலர் எண்ணுகின்றனர்...ஆனால் நிரந்தரமான சுகம் என்பது உலகில் உள்ள எந்த பொருளிலும் கிடைப்பதே இல்லை. அந்த நிரந்தரமான சுகம் தன்னிலேயே இருக்கிறது என்பதை மனிதன் உணர்வதே இல்லை. சுகம் என்பது ஆத்மாவின் சொரூபமே...மனம் வெளியே உள்ள பொருட்களில் கூடி அனுபவிக்கும் போது துக்கத்தை அடைகிறது. மனம் மீண்டும் தன்னுடைய உண்மையான சொரூப சுகத்தை நாடித் திரும்புகிறது. இது மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

உதாரணமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, சுகமாக இருப்பதாக நினைக்கிறோம் ஆனால் சிறிது நேரத்திலேயே போரடிப்பதாக உணர்கிறோம். தூக்கம், சமாதி, மூர்ச்சை போன்றவற்றிலும் எப்போது மனம் அந்தர்முகமாகிறதோ அப்போதும் மனம் ஆத்ம சுகத்தை அனுபவிக்கிறது. தூக்கத்தில் எதையும் செய்யாவிட்டாலும் சுகமாக தூங்கினேன் என்கிறோம். இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளிக் கிளம்புவதும் மீண்டும் ஆத்மாவை அடைவதும் போக்கும் வரவுமாக நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது...

ஒரு ஞானியின் மனம் பிரம்மத்தை விட்டு என்றுமே அகலுவதில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ உலக விஷயத்தில் ஈடுபட்டு துக்கப்படுகிறது. சிறிது நேரம் பிரும்மத்திற்கு திரும்பி சுகமடைகிறது....

இறைவனை உணர்ந்தவர்கள் உலக பொருட்கள் சுகம் மற்றும் பாதுகாப்பை தரும் என்ற மாயையிலிருந்து விடுபடுவார்கள். மலை போன்ற சொத்துக்களையும் துச்சம் என்று கருதிய பல மகான்களை இந்த உலகம் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது....

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மீக விஷயங்கள் ..?!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மீக விஷயங்கள் ..?!

மைக் பிடித்து , மேடையில் பேசி,பெரிய நிலங்களை வளைத்துபோட்டு, ஆடல் பாடல்களுடன், கைதட்டினால் தான் இறைவனுக்கு கேட்கும் என்பது போல, பெரிய சிலைகள், அதைவிட பெரிய உண்டியல்கள். இதெல்லாம் இருந்தால் தான் ஆன்மீகம்...இப்படி தான் மக்களும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்...என்னைக்காச்சும் யோசிச்சு பார்த்து இருக்கீங்களா..? ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் என்று மேடைகளில் பிரச்சாரம் செய்யும் இந்த மத அரசியல்வாதிகள், மத வியாபாரம் செய்யும் விற்பனையாளர்கள் தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஏன் இலவச கல்வியை ஏழை மாணவர்களுக்கு வழங்க முன்வருவதில்லை..?இங்கு மக்களும் கூட, குறிப்பாக படித்த மக்களும் கூட வியாபாரம் செய்யும் மத விற்பனையாளர்கள் செய்வது தான் ஆன்மீகம் என்கிற தவறான புரிதலில் இருக்கிறார்கள்....

இறைவனை அடைவதற்கு இடைத்தரகர்கள் எதற்கு..? ஆன்மீகம் என்பது உன்னை சார்ந்தது, உன்னை மட்டுமே சார்ந்தது....அதனை இமயமலை மூலமோ, ஜெருசலேம் மூலமோ, ஹஜ் பயணம் மூலமோ கொடுத்துவிட முடியாது...அவைதான் கொடுக்க முடியும் என்றால் இந்நேரம் காற்றில் ஆன்மீகம் பரவியிருக்கும், அந்த காற்றும் இமயமலை தொடங்கி, ஜெருசலேம் சென்று, ஹஜ் பயணம் செய்திருக்கும்...தற்போது அந்த காற்றின் ஆன்மீக மதம் என்ன..? அனைத்து மதங்களிலும் ஆன்மீகம் என்பது மதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது...

இறைவன் குடிகொள்ளும் உள்ளமே இறைவனது இல்லம்...ஆன்மீகத்தை வெளியில் தேடாதீர்கள், அது உங்களுக்கு உள்ளே இருக்கிறது....உணருங்கள். இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்...அன்பே சிவம் இயேசு அல்லா

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்... 🙏🙏🙏

குருவின்‌ தேவையைப்‌ பற்றி...!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🙏

குருவின்‌ தேவையைப்‌ பற்றி...

எனக்கும்‌(ஹேமட்பந்த்), பாலா சாஹேப்‌பாடேக்கும்‌ இடையில்‌ ஓர்‌ சூடான விவாதம்‌ நான்‌ ஷீர்டிக்கு வந்த தினத்தன்று நடைபெற்றது. “நம்‌சுதந்திரத்தை நாம்‌ ஏன்‌ இழக்க வேண்டும்‌, மற்றவர்களிடம்‌ ஏன்‌ சரணாகதி அடைய வேண்டும்‌” என்று நான்‌விவாதித்தேன்‌. “நாம்‌ நம்முடைய கடமையைச்‌ செய்ய வேண்டியிருக்கையில்‌ ஏன்‌ குரு தேவைப்படுகிறார்‌..? ஒருவன்‌ தன்னாலான முயற்சிகளைச்‌ செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்‌. சோம்பேறியாகத்‌ தூங்குவதைத்‌ தவிர வேறெதையும்‌ செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்‌..?” இங்ஙனம்‌ நான்‌ சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன்‌. பாடே கர்மத்துக்காக (தலைவிதி) வாதாடிக்‌ கூறியதாவது, “நடப்பது நடந்தே தீரும்‌. பெரியோர்கள்‌ எல்லாம்‌ தோல்வியுற்றிருக்கிறார்கள்‌. மனிதன்‌ ஒருவழியில்‌ நினைக்க, தெய்வம்‌ வேறு வழியில்‌ செயல்படுகிறது. உம்முடைய புத்தி சாதுர்யத்தைத்‌ தள்ளிவிடுக. பெருமையும்‌, அஹங்காரமும்‌ உமக்கு உதவாது”. கொள்கைகள்‌, மாறுபாடுகள்‌ இவற்றுடன்‌ இவ்விவாதம்‌ ஒருமணி நேரத்திற்குமேல்‌ நடைபெற்றும்‌ வழக்கம்போல்‌ ஒருமுடிவும்‌ காணப்படாது முடிவாக களைப்படைந்துவிட்டோம்‌. நானும்‌ மன அமைதியை இழந்தேன்‌. வலிவான சரீர அபிமானம்‌, அஹங்காரம்‌ இவை இல்லாவிடில்‌ விவாதமே இல்லையெனக்‌ கண்டேன்‌. அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம்‌....

பிறகு நாங்கள்‌ மசூதிக்கு மற்றவர்களுடன்‌ சென்றபோது காகா சாஹேப்‌ தீக்ஷித்தை, பாபா பின்வருமாறு வினவினார்‌. சாதே வாதாவில்‌ என்ன நடந்துகொண்டிருந்தது..? விவாதம்‌ எதைப்‌ பற்றியது..? என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும்‌ வினவியதாவது, “ஹேமத்பந்த்‌ என்ன கூறுகிறார்‌..?” இவ்வார்த்தைகளைக்‌ கேட்டு நான்‌ மிகவும்‌ ஆச்சரியமடைந்தேன்‌. நான்‌ தங்கியிருந்ததும்‌ விவாதம்‌ நடந்ததுமான சாதே வாதாவானது மசூதியினின்று நல்ல தூரத்திலிருக்கிறது. சர்வ வியாபியாகவும்‌, அகத்திலிருந்து ஆட்டிவைப்பவராகவும்‌ இல்லாவிடில்‌ எங்களது விவாதத்தை பாபா எங்ஙனம்‌ அறிந்திருக்க முடியும்‌..?

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏 

இறைவன் மனிதனைப் படைக்கும்போது...!


ஓம்  ஶ்ரீ  சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

இறைவன் மனிதனைப் படைக்கும் போது தன்னுடைய ஒரு அம்சத்தை சேர்த்து (இறை அம்சம் = ஆத்மா) அதை லீலையாக அமைப்பதற்காக அந்த ஆத்மாவை சுற்றி மாயை என்ற (முக்குணங்கள்) ஆவரணத்தையும் சேர்த்தே படைத்தார். மனிதன் என்றால் இறை அம்சம் + மாயை. அவர் மனிதனுக்கு தன் ஆத்மாவை சுற்றியுள்ள மாயையாகிய ஆவரணத்தைக் களைந்து ஈஸ்வர ஸ்வரூபத்தில் இணையும் (ஆத்ம ஸ்வரூபம்) லட்சியத்தையும் வைத்தார். மனிதன் ஈஸ்வர ஸ்வரூபத்துடன் இணையும்போது அந்த ஜீவனின் லீலை பூரணமாகிறது. எல்லா மனிதர்களும் இறை ஸ்வரூபத்துடன் ஒன்றிய பின்பு ஜகத் லீலை பூரணமடைந்து கல்பம் முடிவு பெறுகிறது..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

திங்கள், செப்டம்பர் 18, 2023

புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்ற சுழற்சியில் சிக்கிக்கொள்வது...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மீகம் என்றால் உங்கள் தாத்தாவும், அப்பாவும், அம்மாவும் உங்கள் மூலமாக ஜீவிப்பதற்கு அனுமதிக்காமல் உங்களது வாழ்க்கையை ஒரு புத்தம்புது உயிராக, ஒரு புதிய சாத்தியமாக நீங்களாகவே உருவாக்கிக் கொள்வதுதான்  இதுதான் ஆன்மீகம். இந்த சுழற்சியை உடைப்பதுதான் ஆன்மீகம்...

வட்டங்களில் சுழலும்போது முன்னோக்கி நகரமாட்டீர்கள் அல்லவா..? வட்டங்களில் சுழல்கிறீர்கள் என்றால் எங்கும் சென்று சேராமல் ஒரே இடத்தில் தேங்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்ற சுழற்சியில் சிக்கிக் கொள்வது.

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஆன்மீகம் என்பது இருமை நிலையை கடந்து செல்லும் ஒன்று..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மீகம் என்பது இருமை நிலையை கடந்து செல்லும் ஒன்று..!நல்லது கெட்டது உலகத்தில் நீங்கள் பார்த்தீர்களானால் எல்லாமே இருமை தன்மையைக் கொண்டது தான் உதாரணமாக ஆண், பெண் இரவு, பகல் இப்படி பல....உலகத்தில் நல்லது, கெட்டது என்பது தான் உலகத்தை இரு வகையாகப் பிரித்துள்ளது...

வெறும் ஆன்மீக சிந்தனை மட்டுமே நம்மை ஆன்மீகத்தின் உண்மை தன்மையை அறிய உதவாது...நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பாகுபாடு மூலமாக பார்த்தால் உலகத்தில் உள்ள அத்தனை துறைகளிலும் ஆன்மீகம் உட்பட நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்.

உண்மையில் ஆன்மிகம் ஒருவரை என்ன செய்கிறது என்றால் இந்த இருமை நிலையான, நல்லது கெட்டது இவைகளை கடந்து உலகத்தின் உண்மைத் தன்மையை அறிந்துக்  கொள்ள உதவி, உலகத்துக்கு நமக்கும் இருக்கும் அனைத்து வேற்றுமைகளையும் ஒன்றுமில்லாமல் செய்து உலகத்தோடு ஒன்றினைக்கிறது...

எப்படி ஒன்று இனைக்கிறது என்றால் இந்த உலகம் ஐந்து பூதங்களால் ஆனது நம் உடலும் ஐந்து பூதங்களால் ஆனது. ஆன்மிகத்தின் மூலம் இரண்டு தனித்தனி ஐம்பூதங்களும் ஒன்றோடு ஒன்றாகி விடுகிறது..

ஆன்மீகத்தின் இந்த அனுபவ நிலையில் உள்ள‌ ஒரு யோகி.. ஞானி , உலகத்தை எப்படிப் பார்க்கிறார் என்றால் தான் வேறு உலகம் வேறு என்று பார்ப்பதில்லை உலகத்தையே தனதாக பார்க்கிறார்.

ஞானியின் பார்வையில் உலகத்தில் அவர் ஒருவர்தான் இருக்கிறார் மற்றவர்கள் எல்லாமே மனிதன், விலங்குகள், மரம், செடி, கொடி எல்லாமே அவர்தான்...அண்டமும் பிண்டமும் ஒன்றே.. !

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஆன்மீக அறிவு...!

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மீக அறிவு..

ஆன்மீக அறிவு என்றால் என்ன...?

காலையில், மலை மேல் ஏறி உதித்தெழும்பிய சூரியனை பார்,..அதிலிருந்து வெளி வரும் ஒளியை பார், இதன் தொடக்கம் என்ன..?என்று முதல் இது நடக்கிறது...? தெரியாது...தெரியாத தொடக்கம் முதலே குறைவில்லாமல் வந்து இறங்கும் ஒளி,..இந்த மாயை என்ன..?இந்த மகிமை என்ன..?இந்த மகத்துவம் என்ன..?இந்த அதிசயம் என்ன..? இந்த மகா பிரமாண்ட அமிர்த ஒளிக்கும், ஒளி வெளிவிடும் உறைவிடத்திற்கும்ஆதார விதிமூலம் ஆனவரை மனதால் நினைத்து இன்பம் அடைவதே ஆன்மீக அறிவு...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்..நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்..நான்... நான்... நான்...நான் சம்பாதித்தேன்,நான் காப்பாற்றினேன்,..நான் வீடு கட்டினேன்.நான் உதவி  செய்தேன்,...நான்  உதவி  செய்யலனா..?அவர்  என்ன ஆகுறது..!நான் பெரியவன்,நான் தான் வேலை  வாங்கி  கொடுத்தேன்...நான்..  நான்..  நான்..  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே..!!!

நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா..? நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா..? நான் தான் என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன் என்று  சொல்ல முடியுமா..? நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா..? நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா.. ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு முழு அதிகாரமும்,  உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும்....உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்...

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேச பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

அவர் ,’நான் இந்த பௌதீக உடல் தான் என்று நீ நினைக்கிறாயா..? இல்லை...! நான் பூமி, நான் நீர், நான் நெருப்பு, நான் காற்று, நான் ஆகாயம். நான் மனம், புத்தி மற்றும் அகங்காரம். இவைகள் எட்டு விதமான சக்திகள், அதாவது நான், நான் இவைகளை என்னுடைய அபார-ப்ரக்ருதி (பௌதீக பிராந்தியத்தில், தெய்வீகத்தின் எட்டு விதமான குணங்கள் அல்லது வெளிப்பாடுகள்). நான் இந்த எட்டுமே. நான் இந்த பூமியின் ஒவ்வொரு துகளின், நீரின் மூலக்கூறு. நீர் எல்லா இடங்களிலும் உள்ளது.. பூமியில், ஆகாயத்தில், காற்றில் மேலும் கடலில்; அது எங்குமிருக்கிறது. உனக்குத் தெரியுமா, உன் உடலில் 60% நீர் நிறைந்தது என்று..? ஆகவே, இங்கு, இன்று அமர்ந்திருக்கும் மக்கள் அனைவரும் பல லிட்டர்கள் நீரே (சிரிப்பு).

அறுபது கிலோ உங்களின் எடை என்றால் அப்போது உன்னுடைய உடலில் சுமார் 36 கிலோ நீரை தவிர வேறொன்றுமில்லை. ஒவ்வொரு நபரும் நீரால் நிரப்பப்பட்ட ஒரு மண்பாண்டம் போன்றவரே. அது போலவே, உன் உடலின் 15% காற்றாலானது. உன்னுடைய உடலும் பூமியின் அம்சத்தை கொண்டது. மேலும் இவைகள் அனைத்தும் நெருப்பு அம்சத்தால் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன, அங்கிருந்து தான் உடல் வெப்பம் வருகிறது. ஆக, நெருப்பு அம்சத்தால் உடலில் வெப்பம் உள்ளது. பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘நான் மனம், புத்தி மற்றும் அகங்காரம்’ என்றும் சொல்கிறார். பல சந்தர்பங்களில் மக்கள் என்னிடம் வந்து சொல்கிறார்கள், ‘குருதேவ், நான் என் அகங்காரத்தை விட ஆசைப்படுகிறேன்.’

நீ எதை விட வேண்டுகிறாய்..? அகங்காரமும் ஒரு வடிவான இறைவன், ஆகவே, அதை சும்மா இருக்க விடு. உன்னுடைய ஆழத்தில் அமர்ந்திருக்கும் அகங்காரமும் ஒரு வகையான தெய்வீகம். அவர், ‘இந்த எட்டு விதமான குணங்களும் உன்னுள் இருக்கின்றன... அவைகளெல்லாம் என்னுடைய வெவ்வேறு வடிவங்களைத் தவிர வெறொன்றுமில்லை, இதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  சொல்வது..அறிந்து உணர்ந்து வாழ்வில் அனைவரும் உயர்வடைவோமாக...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

துறவு பலருக்கும் நடைமுறை சாத்தியமற்றது.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஆன்மிகம் என்பது நமது அன்றாட வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டாடி மகிழும் கலை ஆகும்....ஆன்மிகம் என்னும் வார்த்தையை பிரித்தெழுதினால், ஆன்மீகம் = ஆன்மா + இகம்...இங்கு ஆன்மா என்பது மனநிறைவை குறிக்கும் சொல்லாகும். இகம் என்பது இம்மை/இவ்வுலக வாழ்வை குறிக்கும் சொல்லாகும்...

மனநிறைவான வாழ்க்கையை எப்படி வாழ்வது என தெரிந்து கொண்டு அதன்படி வாழ்பவது ஆன்மீகம் ஆகும்...துறவு பலருக்கும் நடைமுறை சாத்தியமற்றது. அதனால்தான் மெய்தேடும் பொருட்டு, துறவறம் வேண்டி வருவோருக்கு, மெய்ஞானம் அடைந்த குருமார்கள் சாமானியமாக சன்யாஸ தீக்ஷை அளித்துவிட மாட்டார்கள்....

இல்லறத்தில் ஈடுபட்டு, அதற்கான கடமைகளைச் செவ்வனே செய்தவாறே, மெய்தேடலில் ஈடுபடுவது, விருப்பமும், ஆர்வமும், முயற்சியும், முனைப்பும் உடைய எல்லோருக்கும் சாத்தியம். அம்மாதிரி வழிகாட்டலையே தற்காலத்தில் குருமார்கள் பெரும்பாலும் தம்மை நாடி வரும் ஆர்வலர்களுக்கு வழங்குகின்றனர்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்,..!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்,..

என்னுடைய பக்தனாகவும், என்னை முழுவதுமாக நம்பியும், இப்படைப்பில் என்னை அனைத்திலும் காணும் ஞானியானவன் ஒரு மஹாத்மா..இது, ஞானிக்கும், மஹாத்மாவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். மஹத் ததுவத்திற்கு (அகங்காரத்தை விடவும் நுண்ணியதென்று சொல்லப்படுகிறது) அப்பாற்பட்ட ஒருவன் ஒரு மஹாத்மா. எட்டு வித ப்ரக்ருதியைப் போல – பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அகங்காரம் (பரமாத்மாவின் சக்திகளின் எட்டு பௌதீக படைப்புகளைக் குறிப்பிட்டு) – மஹத் தத்துவம் அகங்காரத்திற்கும் அப்பாற்பட்டது, மிகவும் நுண்ணியது. அஹங்காரத்தைக் கடந்து, மஹத் தத்துவத்தை அனுபவித்தவன், மஹாத்மா எனப்படுகிறான்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

ஆன்மீக விழிப்புணர்வு..!?

 ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

ஆன்மீக விழிப்புணர்வு..!?

பல கோடி ஆண்டுகளாக ஒரு குகைக்குள் வெளிச்சமே போகவில்லை. இருட்டாகவே இருந்தது...இந்த இருண்ட குகைக்குள் வெளிச்சம் வர ஒரே ஒரு தீக்குச்சியின் நெருப்பு போதும்...அந்த தீக்குச்சியின் நெருப்பை மூட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகுமே அவ்வளவே ஆன்மீகத்தின் விழிப்பும்...

ஒரு கலையை கற்க வேண்டுமானால் நிறைய நிலைகள் இருக்கலாம். ஆனால் ஆன்மீகத்தில் விழிப்புணர்வு ஒரு நொடியிலும் வரலாம், ஓராயிரம் பிறப்பிற்கு பிறகும் வரலாம், வராமலும் போகலாம்...பல நூல்கள் படித்து, பூஜை செய்து, யோகப் பயிற்சி செய்து வராமல் போகலாம். வெறும் வானத்தைப் பார்த்து விழிப்புணர்வு வரலாம்...இப்படி பல பேர்களுக்கு சித்தியாவது நமக்கு ஏன் ஆகவில்லை என்ற கவலையை விடுங்கள்...நமக்குள் இருக்கும் ஒரு சக்தி, இந்த பிரபஞ்ச சக்தியை போன்றது. அதற்குத் தெரியும்… எப்பொழுது வெளிவரவேண்டுமென்று...நிம்மதியாய், ஆனந்தமாய், தாமரை இலையில் நீர் போல், உலகவாழ்வின் உங்களுக்கு பிடித்த, ஏற்ற எல்லா விஷயங்களிலும் ஈடுபடுங்கள்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய வழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

ஸ்ரீமத் பகவத்கீதை

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஸ்ரீமத் பகவத்கீதை..🙏🏻🙏🏻

🙏🏻அத்தியாயம்.18🙏

மோக்ஷ சந்நியாசயோகம்

சுலோகம்..18_71

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்...

"ஷ்ரத்தாவான் அனஸூயஷ் சஷ்ருணுயாத் அபி யோ நர:ஸோ (அ)பி முக்த: ஷுபாங்ல் லோகான்ப்ராப்னுயாத் புண்ய–கர்மணாம்" நம்பிக்கையுடனும் மற்றும் பொறாமையின்றியும் மனிதன் யாரொருவன் கேட்கின்றானோ, அவனும் கூட முக்தி பெற்று, புண்ணியம் செய்தவர்களின் மங்களமான உலகங்களை அடைகிறான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

திருவண்ணாமலையில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மகான்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

கர்மாவிலிருந்து தப்ப வழி உள்ளதா..?

நிச்சயமாக இல்லை..! வணக்கத்துக்குரிய திரு. ராம் சுரத்குமார் யோகி அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? அவரைச் சிரட்டைச் சாமியார் என்றும் அழைப்பார்கள்....

திருவண்ணாமலையில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மகான்...ஒருமுறை  மிக திறமையான மருத்துவர் ஒருவர்  திருவண்ணாமலை போன போது அவரைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது...அந்த மருத்துவர் போன போது அந்த மகான் கையில் இருந்த ஒரு புண்ணில் ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்திருக்கின்றன. அதைப் பார்த்த அந்த மருத்துவர் " I'm a Doctor by profession. If you permit me shall I clean this wound.. apply some medicine and dress it up,.? " என்று மிகவும் பணிவுடன் கேட்டிருக்கிறார்....அதற்கு அந்த மகான் பெரிதாகச் சிரித்து விட்டு.." you mean this..? Just see" என்று சொல்லி விட்டு தன் பக்கத்தில் வைத்திருந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிரட்டையிலிருந்து ( கொட்டாங்கச்சி) சிறிது நீரைக் கையில் எடுத்து.. கண்ணை மூடி ஓரிரு நிமிடங்கள் ஏதோ ஜபம் செய்து விட்டு அந்தப் புண்ணின் மேல் தெளிக்க.. அது காணாமல் போய் விட்டதாம்..

அந்த மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லையாம்....பிறகு மீண்டும் அதேபோல் இன்னொரு முறை அந்த மகான் செய்ய அந்தப் புண் திரும்பவும் அவர் கையில் தோன்றி விட்டதாம்...

" This is my Karma.. I have to bear it.. live and suffer with it.. " என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் அந்த மகான்....பல சித்துகள் தெரிந்த இவரைப் போன்ற மகான்களால் தங்கள் நோய் எதுவானாலும் அதைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா..?அதேபோல் வணக்கத்துக்குரிய மகான்கள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ரமண மகரிஷி ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அதிலிருந்து மீண்டிருக்கலாம் அல்லவா ...? அதற்கு அவர்கள் முயற்சி எடுத்தார்களா ...? இல்லவேயில்லை.. ! ஏன்.. ? அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.. " இது நமது கர்மா என்று.. நமது கர்ம வினைப்பயன்.. அதை நாம் அனுபவித்தே கழிக்க வேண்டும் "..

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻