ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 29, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம்..பதினெட்டு மற்றும் பத்தொன்பது..(18, 19)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏அத்தியாயம்..பதினெட்டு மற்றும்      பத்தொன்பது..(18, 19)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேதநூல்  என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்...ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏🙏

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் தன்மையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில், ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித    வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்.... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப் பெறலாம்....🙏🏼🙏🏼

🙏அத்தியாயம்..பதினெட்டு மற்றும் பத்தொண்பது ..(18)மற்றும் (19)🙏

🙏முன்னுரை...🙏

சீரடி பகவான் தன்னை நாடி வரும் பக்தர்களின் ஆத்ம பலத்தை பரிசோதித்து, ஒவ்வொரு  தனி மனித உயிருக்கும் தேவையான உபதேசங்களையும், செயல்முறைகளையும் தாய்மையுணர்வுடன் உற்று நோக்கி,  எவ்வாறு கடைத்தேற்றம்  அடையச் செய்கிறார் என்பதன் விளக்கம்...

சீரடி பகவான் தன்னை நாடி வந்த சாதே என்ற பக்தருடைய  இடர்பாடுகளை எவ்வாறு  நீக்கினார் என்பதைப் பற்றியும், மற்றும் கனவில் மூலமாக   சாதேவிற்கு  உபதேசம் செய்ததைப் பற்றிய அனுபவ விளக்கவுரை....

சீரடிபகவான், தன் உயரிய ஆத்மார்த்தமான பக்தர்களின் ஒருவரான ஹேமந்பந்தின் உயரிய அன்பினால் ஈர்க்கப்பட்டு,  எவ்வாறு அவரை ஆசிர்வதித்து உயரிய நிலையை அடையச் செய்தார் என்பதன் விளக்கம்..

திருமதி ராதாபாய் தேஷ்முக் என்ற ஆத்மார்த்தமான பக்தையின் கடும் விரதத்தை கண்டு பகவான் மனமிரங்கி உபதேசித்த மறைஞான மூல சூட்சம உரைகள்....

பகவான்  தன் பக்தர்களின் நல்ல எண்ணங்களின் ஆவலைப்  எவ்வாறு பூர்த்தியடையச் செய்து  ஊக்குவிக்கின்றார் என்பதைப் பற்றிய விளக்கவுரை....

நாம் எவ்வாறு உயரிய இறைப்பண்புகளைக் கடைப்பிடித்து  வாழ வேண்டும் என்பதைப் பற்றி சீரடி பாபாவின்  உபதேச அருளுரைகளும் அறிவுரைகளும் இங்கே...

பகவான் தன் பக்தர்களைக் கடைத்தேற்றம் அடையச் செய்வதற்கான எவ்வாறெல்லாம்  உபதேசம் செய்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி இங்கே காண்போம்..

🔥முதலில்  சீரடி  பகவான் தன்னை நாடி வரும் பக்தர்களின் ஆத்ம பலத்தை பரிசோதித்து, ஒவ்வொரு  தனி மனித உயிருக்கும் ஏற்றாற்ப்போல்  உபதேசங்களையும், செயல்முறைகளையும் தாய்மையுணர்வுடன் உற்று நோக்கி,  எவ்வாறு கடைத்தேற்றம்  அடையச் செய்கிறார் என்பதன் விளக்கத்தைக்  காண்போம்...🔥

முந்தைய இரு அத்தியாயங்களில் துரித பிரம்மஞானத்தை பெறவிழைந்த பக்தருக்கு  பாபா, எவ்வாறு மறைஞான  விளக்கவுரைகளை எடுத்துக்கூறி உமதேசித்தார் என்பதை ஹேமத்பந்த் விரிவாக  விவரித்துள்ளதை அனைவரும்  பாராயணம் செய்தோம்... இப்போது இங்கே இவ்விரண்டு அத்தியாயங்களில் முதலில்,  ஆசிரியர் ஹேமாட்பந்தின் அன்பினால் ஈர்க்கப்பட்ட பகவான் அவரை எவ்வாறு  ஆசீர்வதித்தார்  எனவும், எவ்வாறு  பக்தர்களுடைய நல்ல  எண்ணங்களை பகவான்  ஊக்குவித்து அந்த எண்ணங்களை  பலனளிக்கச் செய்தார் என்பதைப்பற்றி  விளக்கமாக கூறப்பட்டுள்ளது.. தனிமனித உயிர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பகவான் அறிவுருத்திய உபதேச அருளுரைகள்  பற்றியும், அவதூறு பேசுவது குறித்தும், உழைப்புக்குரிய ஊதியத்தைப் பற்றி, பாபா அளித்த  போதனைகளைப் பற்றிய  விளக்கவுரையைக் இங்கே  ஒவ்வொன்றாக காண்போம்....

தமது அடியவர்களின் ஆத்ம பலத்தை சத்குருவானவர் மிகுந்த விழிப்புணர்வுடன்  கவனித்து ,பின்னர் அவர்களின் இயல்தன்மை பாதிக்காமல் ,ஒவ்வொரு மனித உயிர்களுக்கு ஏற்றவாறு உயரிய  சத்திய  உபதேசங்களையும், செயல்திட்டங்களையும் அளித்து  கடைத்தேற்றம் அடையச்செய்து, ஆத்மானுபூதி என்ற இலட்சியத்திற்கு, தொடர்ந்து பக்தர்களை  இட்டுச்செல்கிறார் என்பதே  நன்றாக அறியப்பட்ட உண்மை ஆகும்...இவ்வகையில் சத்குருவானவர் உபதேசம் செய்ததையும், கட்டளையிட்டதையும் பிறரிடம் வெளிப்படுத்தக் கூடாது  என்று சிலருடைய  கருத்தாக உள்ளது.. பகவான் செய்த  உபதேசங்கள் பிரசுரிக்கப்பட்டால், அவை பயனற்றதாகி விடுகின்றன என்று சிலர் நினைக்கிறார்கள்.. இக்கருத்து  சரியானதன்று...

சத்குருவானவர் ஒரு பருவமேகம் போன்றவர்... தமது  பக்தர்களுக்கு வழங்கும் அமிர்தம் போன்ற  உயரிய சத்திய உபதேச மொழிகளைத் தங்குத் தடையின்றி விரிவாக அனைத்து இடங்களிலும் பரவும்படிச் செய்கின்றார்கள்... இவைகளை நாம் மகிழ்ந்தனுபவித்து, நமது உள்ளம் நிறையும்  வரை ஜீரணித்துக்கொண்டு, அதன்பின் தனிப்பயன் கருதி ஷேம ஒதுக்கீடு ஏதுமின்றி மற்றவர்களுக்கும்  பரிமாற வேண்டும்..நமது விழிப்பு நிலையில் அவர் போதிப்பவைகளுக்கு இந்நியதி பொருந்துவதுடன் நில்லாது,  கனவு நிலையில் அவர் நமக்கு அளிக்கும் காட்சிகளுக்கும் இது பொருந்தும்....உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறும் பொருட்டு,  புதகௌசிக ரிஷி தாம் கனவில் கண்டதைத்  தான்,  புகழ்பெற்ற ராமரக்ஷ ஸ்தோத்திரத்தைப் பதிப்பித்தார். (ஸ்ரீ ராமரைப் புகழ்ந்து இரக்ஷணையை வேண்டிப்பாடப்பெறும் இரட்டை வரி செய்யுட்களான சுலோகம்)        

தனது குழந்தைகள் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக வாழும்  பொருட்டாக கசப்பான, ஆனால் ஆரோக்கியமான மருந்துகளை அவைகளின் தொண்டைக்குள் வலிந்து புகட்டும் பாசமுள்ள தாயைப் போன்றே, சாயீபாபா தமது அடியவர்களுக்கு ஆன்மீக செயல்துறைக் கட்டளைகளைத் தெரிவிக்கின்றார்..பகவானின் உபதேச வழிமுறை  திரையிடப்பட்டதோ, இரகசியமானதோ அல்ல...ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை.  அவருடைய கட்டளைகளைப் பின்பற்றிய அடியவர்கள் தங்களின் குறிக்கோளை  விரைவில் எய்தினார்கள்....

சாயீபாபாவைப் போன்ற சத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்படுத்துகிறார்கள். இது செய்யப்படும்போது புலனுணர்வுப் பொருட்களில் நமக்குள்ள ஆசை மறைந்து விடுகிறது...விவேகம்(பகுத்துணர்தல்), வைராக்கியம்(பற்றறுத்தல்) என்னும் இரட்டை கனிகள் நமது கைகளுக்குக் கிட்டுகின்றன... ஞானமென்பது தூக்கத்தில் கூடத் துளிர்விடுகின்றது...சத்குருவின தொடர்பைப் பெறும்போதும், அவர்களுக்குச் சேவை செய்யும்போதும், அவர்களின் அன்பைப் பெறும்போதும், இவைகள் அனைத்தினையும் நாம் எய்துகிறோம்....

தமது அடியவர்களின் அவாக்களைப் பூர்த்தி செய்யும் ஆண்டவனாக சத்குருவே  நமது உதவிக்கு வருகிறார்... நமக்கு ஏற்படும்  தொல்லைகளையும், கஷ்டங்களையும் நீக்கி மகிழ்வெய்தச் செய்கிறார்.. சத்குருவின் உதவியே அனைத்து உயரிய  முன்னேற்றத்திற்கு முழுவதுமான காரணமாகும்.. எனவே நாம் எப்போதும் சத்குருவையே பின்பற்றி இருந்து, அவர்தம் உபதேச அருளுரைகளைச்  செவிமடுத்து சத்குருவின்  பாதத்தில் வீழ்ந்து வணங்கி குருசேவை செய்யவேண்டும்... 

🔥பகவான் தன்னை நாடி வந்த சாதே என்ற பக்தருடைய  இடர்பாடுகளை எவ்வாறு  நீக்கினார்..மற்றும் கனவில் மூலமாக  பகவான்  சாதேவிற்கு குருசரித்திர பாராயண  உபதேசம் செய்ததைப் பற்றிய அனுபவ விளக்கம் இங்கே....🔥

பலஆண்டுகளுக்கு முன் பம்பாயின் கவர்னர் ரே பிரபுவால் அடக்கப்பட்ட க்ராஃபோர்ட் நடப்பாட்சியின்போது,  பிரசித்தி பெற்றிருந்த சாதே என்ற  பெருந்தகை   ஒருவர் இருந்தார். அவர் வணிகத்தில் கடுமையான நஷ்டமடைந்தார்...மற்றுமுள்ள பிரதி கூலமான சூழ்நிலைகளும், அவருக்குப் பெருமளவு தொல்லையளித்து கவலையடையவும், உள்ளம் சோர்வுறவும் செய்தது...இருப்புக்கொள்ளாமல் இருந்துக் கொண்டிருந்த அவர் வீட்டை விடுத்துத் தொலை தூரத்திற்கு வெளியேறிப் போய்விட எண்ணினார்.  

பொதுவாக மனிதன் கடவுளை நினைப்பதில்லை....ஆனால் இடர்பாடுகளும், பேராபத்துக்களும் அவனைச் சூழும்போது அவன் ஆண்டவரை நோக்கித் திரும்பி நிவாரணத்திற்காக வேண்டுகின்றான்...  அவனுடைய தீய கர்மங்கள் யாவும் முடிவுற்றதென்றால், சத்குரு  ஒருவரை அவன் சந்திக்கும் வாய்ப்பினைக் கடவுள் ஏற்பாடு செய்கிறார்..சத்குருவும்  அவனுக்கு நலமளிக்கக்கூடிய வழிமுறைகளை உபதேசிக்கிறார்...சாதேவுக்கும் அத்தகைய அனுபவமே ஏற்பட்டது..தத்தம் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், மனச்சாந்தியை அடைவதற்கும் ஏதுவாக, சாயீபாபா தரிசனத்தைப் பெற ஏராளமான மக்கள் திரளாகச் சென்றுக் கொண்டிருக்கும் சீரடிக்குப் போகும்படி அவருக்கு அவரது நண்பர்கள் அறிவுரை கூறினார்கள்...அவருக்கு இக்கருத்து பிடித்திருந்தது...உடனே சீரடிக்கு 1917-ஆம் ஆண்டில் வருகைப்புரிந்தார்..

பரப்பிரம்மமாகவும், சுயஞ்ஜோதியாகவும், களங்கமற்றவராகவும், தூய அன்பின் பிறப்பிடமான  சாயீபாபாவின் ரூபத்தைக் கண்ணுற்ற சாதேவின்  மனம் பதைபதைப்பை விடுத்துச் சாந்தமுற்றது.. தமது முற்பிறவிகளில் ஏற்பட்ட நல்வினைகளின் குவியலே தம்மை பாபாவின் புனிதத் திருவடிகளுக்குக் கொணர்ந்தது என அவர் நினைத்தார்...சாதே அவர்கள்  உறுதியான மனதிட்டம் வாய்க்கப்பெற்ற மனிதர்.. உடனேயே அவர் குருசரித்திரமான  ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் அவரது மறு அவதாரங்களான ஸ்ரீபாத, ஸ்ரீவல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஆகியோரின் புனித சரித்திரம் பாராயணம் செய்யத்  தொடங்கினார்...  ஸப்தாகத்தில் (ஏழு நாட்களில்) பாராயணம் பூர்த்தியானதும் அன்று இரவு பாபா அவருக்கு ஒரு காட்சி அளித்தார்..

பகவான்  சாதேவிற்கு அளித்தக் கனவுக் காட்சியின் விளக்கம் இங்கே..குருசரித்திரத்தை தமது கரங்களில் வைத்துக்கொண்டு அதன் உட்பொருளை, முன்னால் அமர்ந்து கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக் கொண்டிருந்தார்... அவர் விழித்தெழுந்து பின்னர் தமது கனவினை நினைவுக்கூர்ந்து மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார்.. அறியாமையில் குறட்டைவிடும் தம்மைப் போன்ற ஆத்மாக்களை பாபாவின் எல்லையற்ற கருணையே எழுப்பிவிட்டு குருச்சரித்திர அமுதத்தினைச் சுவைக்கும்படி செய்கிறது என்று அவர் நினைத்து ஆனந்தலயமானார்...  

மறுநாள் காகா சாஹேப் தீஷித்திடம், சாதே  தான் கண்டக்  காட்சியைப்பற்றி  தெரிவித்து சாயீபாபாவிடம் அதன் பொருளைப்பற்றிய நுட்பமானக் குறிப்பினைக் குறித்துக் கேட்கும்படி வேண்டிக்கொண்டார்..அதாவது ஒருவாரம் பராயணம் செய்தது போதுமா...?அல்லது மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமா என்பதாக கேட்கக் கூறினார்...காகா சாஹேப் தீஷித்தும் தமக்குக் கிடைத்த ஓர் உரிய சந்தர்ப்பத்தில் பாபாவை நோக்கி, "தேவா (ஓ..! தெய்வமே) இந்தக் காட்சியால் சாதேவுக்கு எதனைக் குறிப்பிடுகிறீர்கள்...? அவர் சப்தாஹத்தை நிறுத்திவிடலாமா...? தொடர வேண்டுமா...? அவர் ஓர் எளிய அடியவர்.அவரது அவா நிறைவேற்றப்படுதல் வேண்டும்... அவருக்கு காட்சியின் பொருள் விளக்கப்பட்டு, அவர் ஆசீவதிக்கப்படவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.  பாபாவும் "அவர் மற்றுமொரு சகாப்தம் பாராயணம் செய்யவேண்டும்.  அதை அவர் கவனமாகக் கற்பாராயின் அவர் தூயவராகி நன்மை பெறுவார்..  பரமாத்மாவும் மகிழ்வடைந்து, இச்சம்சார வாழ்க்கையின் பந்தங்களினின்று அவரை விடுவிப்பார்" எனப் பதிலளித்தார் பகவான்...

🔥சீரடிபகவான்,  தன் உயரிய ஆத்மார்த்தமான முதன்மைப்  பக்தர்களின் ஒருவரான ஹேமாட்பந்தின் உயரிய அன்பினால் ஈர்க்கப்பட்டு,  எவ்வாறு அவரை ஆசிர்வதித்து கடைத்தேற்றம்  அடையச் செய்தார் என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

சாதேவிற்கு, பகவான் குருசரித்திர பாராயணம் எவ்வாறு மேற்க்கொள்ள வேண்டும்   என்பதைப் பற்றிய உபதேசம்  வழங்கும் போது,  அச்சமயத்தில்  பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார் ஹேமாட்பந்த்... பாபாவின் சொற்களைக் கேட்டதும், அவர் தன் மனதில் பின்வருமாறு சிந்திக்கலானார்...  "என்ன..! சாதே ஒரு வாரமே படித்துப் பரிசைப் பெற்றுக்கொண்டார்.  நாற்பது ஆண்டுகளாக ஒரு பயனுமின்றி நான் பாராயணம் செய்துக்  கொண்டிருக்கின்றேன்..இந்த இடத்தில் அவரது ஏழுநாள் பாராயணம்  பலனளிக்க நேரிட்டது.. எனது ஏழுவருட பாராயணம்  (1910-1917) பலனேதுமின்றிப் போகின்றது...? தம் அறிவுரையால் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் எனவும், தமது அமுதத்தை என்மீது பொழிய வேண்டும் எனவும், கருணை மேகத்திற்காக (பாபாவிற்காக) காத்துக் கொண்டிருக்கும் சாதகப் பறவையைப் போல எப்போதும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்ற  இந்த எண்ணம் அவர் மனதில் குறுக்கிட்ட அத்தருணமே, பாபா அதனை அறிந்துக் கொண்டார்....

பாபா பக்தர்களின் எண்ணங்களையும் உற்றுநோக்கி படித்துப் புரிந்துகொண்டு தீய எண்ணங்களை நீக்கி,  நல்ல எண்ணங்களை ஊக்குவித்தார் என்பது அடியவர்களின் அனுபவமாகும்....ஹேமாட்பந்தின் உள்ளத்தைப் படித்தறிந்துகொண்ட பகவான்,  உடனே அவரை எழுந்து ஷாமாவிடம் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) சென்று ரூ. 15ஐ தக்ஷணையாகப் பெற்றுக்கொண்டு,.. அங்கு சிறிது நேரம் அவருடன் உரையாடியப் பின்னர் திரும்பி வரும்படி அறிவுருத்தினார்...பாபாவின் மனதில் கருணை உதயமாகியது...  எனவேதான் அவர் இக்கட்டளையை இட்டார்.  யார்தான் பாபாவின் ஆணையை மீற முடியும்..?

ஹேமாட்பந்த் உடனே மசூதியைவிட்டு, ஷாமாவின் வீட்டிற்கு வந்தார்... அவர் அப்போதுதான் குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக் கொண்டிருந்தார்.  அவர் வெளியே வந்து ஹேமாட்பந்தை  நோக்கி, "தங்கள் இப்போது இங்கே இருப்பது எங்ஙனம்...? மசூதியிலிருந்து தாங்கள் வந்துள்ளதாகத் தோன்றுகிறதே..?  இருப்புக் கொள்ளாதவரைப் போன்றும், உளச் சோர்வுடையவராகவும் ஏன் காணப்படுகிறீர்கள்...? ஏன் தாங்கள் தனித்து இருக்கிறீர்கள்...?  தயவுசெய்து அமர்ந்து சிறிதுநேரம் இளைப்பாறுங்கள்.  நான் எனது வழிபாட்டை உடனே முடித்துவிட்டுத் திரும்புகிறேன்...அதுவரை வெற்றிலைப்பாக்கு போட்டுக் கொள்ளுங்கள்..பின்னர் மகிழ்ச்சியுடன் உரையாடலாம்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

ஹேமத்பந்த் முன் திண்ணையில் அமர்ந்திருந்தார்...ஜன்னலில் 'நாதபாகவதம்' என்ற பிரசித்திபெற்ற மராத்தி நூலை அவர் காண நேர்ந்தது... பெரிய சமஸ்கிருத நூலான பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தைப் (அத்தியாயம்) பற்றிய ஏக்நாத் முனிவரின் விளக்கவுரையாகும்...சாயீபாபாவின் யோசனையின் பேரில் திருவாளர்கள் பாபு சாஹேப் ஜோகும், காகா சாஹேப் தீஷித்தும் சீரடியில் தினந்தோறும் பகவத்கீதை...அதாவது  கிருஷ்ணருக்கும் அவரது தோழரும் பக்தருமான அர்ஜுனனுக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை அதன் மராத்திய விளக்க உரையான பாவார்த்த தீபிகா அல்லது ஞானேஷ்வரியுடன்... நாதபாவதம்..அதாவது கிருஷ்ணருக்கும் அவரது சேவகரும் பக்தருமான உத்வருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்) மற்றும் மற்றைய பெரிய நூலான ஏக்நாத்தின் பாவார்த்த ராமாயணத்தையும் படித்தார்கள்..

பாபாவிடம் அடியவர்கள் வந்து சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டபோது சிலசமயங்களில் அதில் ஒரு பகுதிக்கு விடையளித்துவிட்டு பாகவத தர்மத்தின் முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளான மேட்குறிப்பிட்ட நூல்களைப் பராயணம் செய்வதைச் சென்று கேட்கும்படி கூறுவார்.. அடியவர்கள் சென்று அவற்றைக் கேட்கும்போது தங்கள் வினாக்களுக்குப் பூரண திருப்தியான பதில்களைப் பெறுவார்கள்...  நாதபாகவதம் என்ற நூலின் சில பகுதிகளை ஹேமாட்பந்தும் படிப்பது வழக்கம்... அன்று மசூதிக்குச் சென்றுகொண்டிருந்த சில அடியவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக தினந்தோறும் தாம் படிக்கும் பகுதியை அவர் பூர்த்தி செய்யவில்லை...

ஷாமாவின் ஜன்னலிலிருந்து அந்த புத்தகத்தினை எடுத்து, தற்செயலாக அதைப் புரட்டியபோது, அவரது ஆச்சரியத்திற்கேட்ப முடிக்கப்படாத பகுதி வந்தது...தமது நித்ய பாராயணத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பாபா தன்னை வெகு அன்புடன் ஷாமாவின் வீட்டிற்கு அனுப்பி இருப்பதாக அவர் எண்ணினார்....எனவே முடிக்கப்படாத பகுதியைப் படித்து பூர்த்தி செய்தார்.  இது முடிவடைந்த உடனேயே ஷாமா வழிபாட்டை முடித்துவிட்டு வந்தார்.... அவர்களிடையே பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது...  

ஹேமாட்பந்த் கூறுகின்றார்... பாபாவிடமிருந்து ஒரு தூதுக் குறிப்புடன் நான் வந்துள்ளேன்... தங்களிடமிருந்து தக்க்ஷிணையாக ரூ.15 பெற்றுக்கொண்டு, சிறிது நேரம் தங்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடிவிட்டு, பின்னர் தங்களுடன் மசூதிக்குத் திரும்பும்படி என்னை பாபா கேட்டுக்கொண்டிருக்கிறார்..

ஷாமா : (ஆச்சரியத்துடன்) என்னிடம் கொடுக்கப் பணம் ஏதுமில்லை.  ரூபாய்களுக்குப் பதிலாக என்னுடைய பதினைந்து நமஸ்காரங்களை பாபாவிடம் எடுத்துச் செல்லுங்கள்... 

ஹேமாட்பந்த் : மிக நல்லது.  தங்களுடைய வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன... இப்போது நாம் சிறிது உரையாடுவோம்...நமது பாவங்களை அழிக்கும் பாபாவின் கதைகளையும், லீலைகளையும் கூறுங்கள்...  

ஷாமா : அப்படியென்றால் சற்றே இங்கே அமருங்கள்.  இக்கடவுளின் (பாபா) விளையாட்டு (லீலை) வியக்கத்தக்கது.. அது தங்களுக்கு முன்னமே தெரியும்.. நான் ஒரு கிராமத்துக் குடியானவன்...  ஆனால் தாங்களோ அறிவுடைய குடிமகன்...தாங்களே இங்கு வந்துற்றது முதலாகச் சிறிது அதிகமாகவே லீலைகளைக் கண்டுக் கொண்டிருக்கிறீர்கள்.  அவற்றை எங்ஙனம் நான் தங்கள் முன் விவரிப்பேன்...? சரி இந்தாருங்கள்... வெற்றிலை-பாக்கு சேர்த்து தாம்பூலம் போட்டுக் கொள்ளுங்கள்... நான் உள்ளே சென்று உடுத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்...  

சில நிமிடங்களில் ஷாமா வெளியே வந்து ஹேமாட்பந்த்துடன்பேசத் தொடங்கினார்...இந்த ஆண்டவனின் (பாபா) லீலைகள் அறிந்துக் கொள்ள இயலாதவை...அவர் தம் லீலைகளுக்கு முடிவில்லை...யார் அவற்றைக் கண்டுகொள்ள இயலும்...?  தமது லீலைகளினால் அவர் விளையாடுகிறார் என்றாலும், அவைகளுக்குப் புறம்பாகவே அதனால் பாதிக்கபடாதவராகவே  சாட்சியில் இருக்கிறார்..நாகரீகமற்றவர்களாகிய நமக்கு என்னதான் தெரியும்...? பாபா தாமே ஏன் கதைகள் சொல்லவில்லை.  தங்களைப் போன்ற கற்றறிந்தோரை என்போன்ற அறிவிலிகளிடம் அவர் ஏன் அனுப்புகிறார்....? அவர்தம் வழிகள் கருதுதற்கு இயலாதவை...அவைகள் மனிதத் தன்மை வாய்ந்தவையல்ல என்று மட்டுமே என்னால் கூற இயலும்."..என்றார் ஷாமா..

இந்த முன்னுரையுடன் ஷாமா தொடர்ந்தார்.  "இப்போது என் நினைவில் இருக்கும் ஒரு கதையை நான் தங்களுக்கு விவரிக்கிறேன்.  அதை நானே நேரிடையாக அறிவேன்... ஓர் பக்தன் எவ்வளவுதூரம் நெஞ்சுரம் கொண்டவனாகவும், தீர்மானமுள்ளவனாகவும் இருக்கின்றானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச்செயலும் இருக்கிறது... சில சமயம் பாபா தனது பக்தர்களைத் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்திப் பின்னர், அவரவர்களுக்குரிய உபதேசங்களை அளிக்கின்றார்....உபதேசம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே, ஹேமாட்பந்த்திற்கு தனது மனதில் ஏதோ ஒரு மின்னலைப் போன்ற ஒளி பாய்ந்தது போன்றிருந்தது...  

அவர் உடனே சாதேவின் குருசரித்திரப் பாராயணக்கதையை நினைவுகூர்ந்து தமது பதைபதைப்பான மனதிற்கு அமைதியளிக்கவே நிச்சயமாக பாபா தம்மை ஷாமாவிடம் அனுப்பியிருக்கவேண்டும் என்று எண்ணினார், என்றாலும் இந்த உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்திக்கொண்டு ஷாமாவின் கதைகளைக் கேட்கத் தொடங்கினார்.  அவை அனைத்தும் பாபா தமது பக்தர்களிடம் எவ்வளவு அன்புடனும், பாசமுடனும் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கின்றன. இவைகளை எல்லாம் கேட்ட ஹேமத்பந்த் ஒருவித மகிழ்ச்சியை எய்தலானார். பிறகு பின்வரும் கதையை ஷாமா கூறத் தொடங்கினார்....

🔥திருமதி ராதாபாய் தேஷ்முக் என்ற ஆத்மார்த்தமான பக்தையின் கடும் விரதத்தை கண்டு பகவான் மனமிரங்கி உபதேசித்த மறைஞான மூல சூட்சம விளக்க  உரைகள்....🔥

ராதாபாய்  தேஷ்முக் என்ற பெயருடைய ஒரு மூதாட்டி  இருந்தாள்... அவள் காஷாபா தேஷ்முக் என்பவரின் தாயாராவாள்... பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு சங்கம்னேர் நகர மக்களுடன் அவள் சீரடிக்கு வந்தாள்... பாபாவின் தரிசனத்தைப் பெற்று மிகவும் திருப்தியடைந்தாள்....பாபாவை மிகவும் உள்ளார்ந்த அன்புடன் அவள் நேசித்தாள்...தான் பாபாவைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து ஏதேனும் உபதேசம் பெறவேண்டும் என்று தீர்மானித்தாள்.... அதைத்தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியாது.  பாபா அவளை ஏற்றுக்கொண்டு மந்திரமோ, உபதேசமோ அளிக்காத வரையில் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதியும் பூண்டாள்...  தனது இருப்பிடத்தில் தங்கி, மூன்று நாட்களாக உணவையும், நீரையும் விட்டொழித்தாள். வயது முதிர்ந்த  மூதாட்டியின்  இந்த மிகக் கடுமையான பரீட்சையைக் கண்டு நான் திகிலடைந்தேன்..மூதாட்டியின்  சார்பில் பாபாவிடம் இடையிட்டுப் பரிந்து பேசினேன் என்று ஷாமா ஹேமாட்பந்த்திடம் கூறுகின்றார்... நான் கூறினேன், "தேவா, தாங்கள் இவ்வாறாகத் தொடங்கியிருப்பது என்ன...?  தாங்கள் ஏராளமானவர்களை இவ்விடம் ஈர்த்து இழுக்கிறீர்கள்.  தங்களுக்கு அம்மூதாட்டியைத்  தெரியும்..மூதாட்டி மிகவும் பிடிவாதக் குணமுடையவளாகவும், தங்களையே முழுவதுமாகச் சார்ந்தும் இருக்கின்றாள்... தாங்கள் அவளை ஏற்றுக்கொள்ளும்படி உபதேசம் தந்தாலொழிய சாகும்வரை  உண்ணாவிரதம் இருப்பதாகத் தீர்மானித்து இருக்கிறாள்...ஏதாவது மோசமாக நிகழ்ந்துவிட்டால் மக்கள் தங்கள்மீது பழி சுமத்துவார்கள்....பாபா அவளுக்கு ஏதும்  உபதேசிக்கவில்லை..அதன் விளைவாக அவள் மரணமடைந்தாள் என்று கூறுவார்கள்... எனவே மூதாட்டியின் மீது கருணைகூர்ந்து மூதாட்டியை  ஆசீர்வதியுங்கள், மூதாட்டிக்கு அறிவுறுத்துங்கள்"  என்று ஷாமா கேட்கின்றார்... ..உடனே மூதாட்டியின் தீர்மானமான உறுதியைக் கண்டு பகவான், மூதாட்டியை  கூப்பிட ஆள் அனுப்பினார்... மூதாட்டி வந்தவுடன்  பின்வருமாறு உரையாற்றி, மூதாட்டியின்  மனப்போக்கை மாற்றினார்.  

"ஓ..! அம்மா, (பாபா எப்போதும் பெண்களை அம்மா என்றும், ஆண்களை காகா, பாபா, பாவ் என்றும் அன்புடன் அழைப்பார்)  ஏன் தேவையற்ற சித்திரவதைக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொண்டு இறப்பை  எதிர்நோக்குகிறீர்கள்...? தாங்கள் உண்மையிலேயே எனது தாய்... நான் தங்களது குழந்தையல்லவா...என்மேல் இரக்கம்கொண்டு நான் சொல்வதை முழுவதும் கேட்பீர்களாக.. .எனது சொந்தக் கதையிலேயே சொல்கிறேன்..... அதைக் கவனமாகக் கேட்பீர்களானால், தங்களுக்கு அதனால் நன்மை விளையும்.... எனக்கு ஒரு குரு இருந்தார்.அவர் ஒரு மாபெரும் முனிவர்...மிக்க கருணையுள்ளவர்...என்மீது மிகுந்த அன்புடையவர்...நான் அவருக்கு நெடுங்காலம் சேவை செய்தேன் தாயே.. அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள்..எனினும், அவர் ஏன் காதுகளில் எவ்வித மந்திரத்தையும் ஓதவில்லை...  அவரை ஒருபோதும் விட்டுப் பிரியாமல் இருக்கவும், அவருடனேயே தங்கியிருந்து அவருக்குச் சேவை செய்யவும், எப்பாடுபட்டாவது அவரிடமிருந்து சிறிது உபதேசம் பெறவும் எனக்கும் மிகுந்த  ஆர்வம் இருந்தது...ஆனால் அவருக்குத் தமக்கே உரிய வழிமுறை இருந்தது... அவர் ஏன் தலையை மொட்டை அடிக்கச்செய்து, இரண்டு பைசாக்களைத் தக்க்ஷிணையாகக் கேட்டார்... நான் அவைகளை உடனே அளித்தேன்.  எனது குரு முழு நிறைவானவராய் இருப்பதால் அவர் ஏன் பணத்தைக் கேட்கவேண்டும்...?  அப்படியாயின் அவரை எங்ஙனம் பற்றற்றவர் என்று கூற இயலும்...? என்று தாங்கள் கேட்பீர்கள் என்றால், காசுகளை அவர் இலட்சியம் செய்யவில்லை என்று நான் ஒளிவு மறைவின்றி பதில் கூறுவேன்...அவைகளைக் கொண்டு அவருக்கு ஆகவேண்டியது என்ன...?

பகவானுடைய குருவானவர் கேட்ட  இரண்டு பைசாக்கள் என்பது என்னவென்றால்..

(1)  உறுதியான நம்பிக்கை (நிஷ்டா)..

(2) பொறுமை அல்லது விடாமுயற்சி (சபூரி)..

 இந்த இரண்டு பைசாக்களை நான் அவருக்கு அளித்தேன்.  அவர் பெரிதும் மனம் மகிழ்ந்தார்..  எனது குருவிடம் தஞ்சமாக நான் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தேன்... அவர் என்னை வளர்த்தார்.  உணவுக்கும், உடைக்கும் பஞ்சமில்லை...அவர் முழுமையும் அன்புடையவராக இருந்தார்...ஆம், அவர் அன்பின் அவதாரமே ஆவார்... எங்ஙனம் நான் அதை விவரிக்க இயலும்...?  அவர் என்னை மிகமிக அதிகமாக விரும்பினார்.. அவரைப்போன்ற குரு கிடைப்பது  அபூர்வம்...  நான், அவரை நோக்கும்போது ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகக் காணப்பட்டார்... பின்னர் நாங்கள் இருவரும் பேரின்பத்தில் நிரம்பிவிடுவோம்..  இரவும், பகலும் நான் பசி தாகத்தை மரத்து, அவரையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டு இருப்பேன்...அவரின்றி நான் இருப்புக் கொள்ளாதவன் ஆனேன்.  எனக்கு, எனது தியானதிற்கு அவரைத்தவிர வேறெவ்விதப் பொருளும் தேவையில்லாமல் போனது...எமது குருவிற்கு   பணிவிடை செய்வதைத் தவிர எனக்கு வேறெவ்வித வேலையும் இல்லை.  அவரே எனது ஒரே அடைக்கலம்...  எனது மனம் எப்போதும் அவர்மீதே உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிஷ்டா (உறுதியான நம்பிக்கை) ஒரு பைசா தக்க்ஷிணையாகும்.  சபூரி (பொறுமை அல்லது விடாமுயற்சி) என்பது மற்றொரு பைசாவாகும்.  குருவிடம் நான் பொறுமையுடன் மிக நீண்டகாலம்வரை சேவை செய்தேன்...  இந்த சபூரியானது உங்களை இவ்வுலக வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்குரிய தோணியிலேற்றி அக்கரை சேர்ப்பிக்கும்.. மனிதனிடத்தில் உள்ள ஆண்மையே சபூரி...அது பாவங்களையும், வேதனைகளையும் நீக்குகிறது... பல்வேறு வகைகளில் பேராபத்துக்களை விலக்குகிறது....  எல்லா அச்சம்களையும் அப்பால் அகற்றுகிறது... கடைமுடிவாக உங்களுக்கு வெற்றியளிக்கிறது.  சபூரி நற்பண்புகளின் சுரங்கம்........  நல்லெண்ணங்களின் கூட்டாளி.  நிஷ்டாவும் (நம்பிக்கை), சபூரியும் (பொறுமை) ஒருவரையொருவர் மிக நெருக்கமாக நேசிக்கும் இரட்டைச் சகோதரிகள் போல் உள்ளத்தன்மைத் தாயே...

என்னுடைய குரு ஒருபோதும் வேறெதையும் என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை... அவர் என்னை ஒருபோதும் புறக்கணித்ததும் இல்லை.  எப்போதும் என்னைப் பாதுகாத்தார்... நான் அவருடன் தங்கி வாழ்ந்தேன்... சிலசமயம் அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தேன்...எனினும் நான் ஒருபோதும் அவரிடம், அன்பின்மையையோ கண்டதில்லை.. தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன்னருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணிவளர்க்கும்.  அதேவிதமாக, அவர்தம்முடைய கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் என்னைப் பாதுகாத்தார். ஓ..! அன்னையே, எனது குரு எனக்கு எவ்வித மந்திரத்தையும் போதிக்கவில்லை.  பின்னர் நான் எங்ஙனம் தங்கள் காதுகளில் மந்திரத்தை ஓதமுடியும்..?  குருவின், ஆமையினத்தை நிகர்த்த அன்புக் கண்ணோட்டம் ஒன்றே நமக்கு மகிழ்ச்சியை நல்குகிறது.  எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதீர்கள்.  என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்... சந்தேகம் ஏதுமின்றி நீங்கள் நிச்சயம் பரமார்த்திகத்தை (வாழ்வின் ஆன்மீகக் குறிக்கோளை) எய்துவீர்கள்....என்னை உங்களது முழுமனத்தோடு நோக்குங்கள்... பதிலாக நானும் அங்ஙனமே தங்களை நோக்குவேன்....

இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையே பேசுகிறேன்.  உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை.  சாதனைகள் ஏதும், ஆறு சாஸ்திரங்களில் கைதேர்ந்த அறிவு ஏதும் தேவை இல்லை...உங்களது குருவினிடத்தில் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொள்ளுங்கள்...குருவே தனி ஒருவரான  நடத்துனர், இயக்குனர் என நம்புங்கள்....  தனது குருவின் பெருமையை அறிபவன், அவரையே ஹரிஹர பிரம்மமென்ற திருமூர்த்தி அவதாரமென்று கருதுபவன், ஆசீர்வதிக்கப்பட்டவன்."  இவ்வாறாக அறிவுறுத்தப்பட்டு, மூதாட்டி பகவானால்  உடன்பட்டாள். உடனே மூதாட்டி  பாபாவை வணங்கி உண்ணாவிரதத்தைக் கைவிட்டாள்.....

இக்கதையைக் கவனத்துடனும், கருத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த ஹேமாட்பந்த் அதன் குறிப்பு நுட்பத்தையும், பொருத்தத்தையும் குறித்துப் பெருமளவு ஆச்சரியத்தில் மூழ்கினார். பாபாவின் இவ்வதிசய லீலையைக் கண்டுகொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர் உருகினார்.  மகிழ்ச்சிப் பெருக்கால் பொங்கி வழியலானார். அவர்தம் தொண்டை அடைத்தது.. ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை... ஷாமா இந்நிலையில் அவரைநோக்கி, "தங்களுக்கு என்ன நேர்ந்தது...?  ஏன் மௌனமாகி விட்டீர்கள்...? பாபாவின் கணக்கற்ற லீலைகள் இன்னும் எவ்வளவை நான் விவரிக்க வேண்டும்...?" என்று கேட்டார்....

இத்தருணம் மத்தியான வழிபாடும், ஆரத்தி சடங்கும், மசூதியில் ஆரம்பமாகிவிட்டன என்பதை அறிவிக்கும் வகையில் மசூதியில் இருக்கும் மணி அடிக்கத் தொடங்கியது....எனவே ஷாமாவும், ஹேமத்பந்த்தும் மசூதியை நோக்கி விரைந்தனர்....பாபு சாஹேப் ஜோக் அப்போதுதான் வழிபாட்டைத் துவக்கி இருந்தார்...பெண்கள் மசூதியினுள்ளே மேல்தளத்திலும், ஆண்கள் கீழே உள்ள திறந்த வெளித் தாழ்வாரத்திலும் ஆரத்தியைக் கோஷத்துடன் பலமாக மேளங்கள் முழங்கப் பாடிக் கொண்டிருந்தனர்..ஷாமா தன் கூடவே ஹேமத்பந்த்தையும் இழுத்துக்கொண்டு மேலே சென்றார்...பாபாவுக்கு வலதுபுறம் ஷாமாவும், ஹேமாட்பந்த் முன்னாலும் அமர்ந்தனர். அவர்களைக் கண்டு ஷாமாவிடமிருந்து கொண்டுவந்த தக்க்ஷிணையைக் கொடுக்கும்படி ஹேமாட்பந்த்திடம் பாபா கூறினார்.... 

ஹேமாட்பந்த் பகவானிடம் கூறுகிறார்...யான்  நேரே சென்று  ஷாமாவிடம் தக்ஷிணைக் கேட்டேன்..அவர் தக்க்ஷிணைக்குப் பதிலாக நமஸ்காரங்களை அளித்ததாகவும் அவர் அங்கேயே நேரில் இருப்பதாகவும் கூறினார்.. பாபா அதற்கு, "நன்று, தாங்கள் இருவரும் சம்பாஷனை செய்தீர்களா...?அப்படி என்றால் நீங்கள் பேசியவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்லுங்கள்" என்றார்.  மணியோசை, மேளம், கோஷ்டிகானம் இவற்றைப் பொருட்படுத்தாது ஹேமாட்பந்த் அவர்கள் பேசியதைக் கூற ஆவலாய் இருந்தார்....அதை எடுத்துரைக்கவும் ஆரம்பித்தார்.. பாபாவும் அதைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தார்...  எனவே அவர் தமது திண்டைவிட்டு நீங்கி முன்னால் சாய்ந்து கொண்டார்...நாங்கள் இருவரும்  உரையாடியவை எல்லாம் மிகவும் மகிழ்வானவை... குறிப்பாக மூதாட்டியின் கதை மிகமிக அற்புதமானது என்றும், அதைச் செவிமடுத்ததன் பொருட்டு அவர் பாபாவின் லீலை விவரிக்க இயலாதது என்றும், கதை என்ற புறத்தோற்றத்தில் பாபா தம்மையே உண்மையில் ஆசீவதித்திருப்பதாகத் தாம் நினைப்பதாகக் கூறினார்.  பின்னர் பாபா "கதை அற்புதமானது, எங்ஙனம் நீங்கள் ஆசீவதிக்கப்பட்டீர்கள்..? நான் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்....எனவே அவை அனைத்தையும் குறித்து இப்போது சொல்லுங்கள்" என்றார்...  ஹேமாட்பந்த் தாம் சற்றுமுன்னர் கேட்ட தனது உள்ளத்தில் நிலையான முத்திரையை ஏற்படுத்திய மூதாட்டி கதையை முழுக்க விவரித்தார்.... இதைக் கேட்டு பாபா மிகவும் மகிழ்ச்சியுற்றார்...மேலும் அவரை நோக்கி, "இக்கதை உமதுள்ளத்தில் பதிவுற்றதா..?  அதன் குறிப்பு நுட்பத்தைப் பிடித்துக் கொண்டீரா...? என்றார்.  அவர் "ஆம் பாபா! எனது மனத்தின் பதைபதைப்பு மறைந்தொழிந்தது.  எனக்கு உண்மையான சாந்தியும், அமைதியும் கிடைத்தன... நான் உண்மையான வழியை அறியப்பெற்றேன்" என்றார்....

பாபா பின்வருமாறு உரைத்தார்.  "எனது நிகழ்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இக்கதையை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்... அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஆத்மாவின் ஞானத்தை (அனுபூதி) அடைவதற்குத் தியானம் இன்றியமையாதது... அதை இடையறாது பயிற்சித்தீர்களேயானால் எண்ணங்கள அமைதிப்படுத்தப்படும்..ஆசைகள் அற்ற நிலையில் இருந்துகொண்டு, நீங்கள் அனைத்துயிர்களிலும் இருக்கின்ற இறையைத்  தியானியுங்கள்... மனது ஒருமுகப்படுத்தப்பட்ட பின்பு நமது குறிக்கோள் எய்தப்பட்டுவிடும்....  ஞானமெனும் (சத்து) பண்பே திருவுருக் கொண்டது எனவும், உணர்வுத் திரளும் பேரானந்தமுமாகிய எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள்..இதைச் செய்ய தங்களால் இயலாவிடின் இங்கே இரவும், பகலும் காண்பதைப் போன்று, உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள்.. இதைத் தாங்கள் செய்துகொண்டே போகும்போது, தங்களின் விருத்திகள் (எண்ணங்கள்) ஒரே இல்லக்கில் குவிக்கப்படும்...தியானம் செய்பவர், தியானம், தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும்.  தியானம் புரிபவர் உச்சத் தன்மையில்  பரவசத்தில்  ஒன்றி, பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார்கள்...

தாய் ஆமை, நதியின் ஒரு கரையிலும் அதன் குட்டிகள் மறுகரையிலும் இருக்கின்றன.  அவைகளுக்கு அது பாலோ,போஷாக்கோ அளிப்பதில்லை.  அதனுடைய கண்ணோட்டம் ஒன்றே அவைகளைப் போஷிக்கிறது.... குட்டிகள் தமது தாயாரை ஞாபகத்தில் கொள்ளுதலைத் (தியானிப்பதை) தவிர வேறொன்றும் செய்வதில்லை...தாய் ஆமைகளின் கண்ணோட்டம் குட்டிகளுக்கு, ஒரு  அமுதமழையாகவும், ஊட்டப்பண்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள ஒரே தேற்றுகின்ற  தன்மையில் இருக்கிறது...குருவுக்கும், சீடர்களுக்கும் இடையிலுள்ள  உறவும் அத்தகையதேயாகும்"....பாபா இம்மொழிகளை உதிர்த்து முடித்தபின்பு ஆரத்தி கோஷ்டிகானம் முடிவுற்றது.அனைவரும் உரக்க ஒரே குரலில் "சச்சிதானந்த சொரூபியாய் இருக்கிற சத்குரு சாயிநாத் மஹாராஜுக்கு ஜெய்" என்று கூவினார்கள்...

அன்பார்ந்த சாய் பக்தர்களே... நாம் அனைவரும்  மசூதியில் கூட்டத்துடன் நின்றுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வோம்.  ஜய ஜய கோஷத்தில் நாமும் அவர்களுடன் பங்கு கொள்வோம்.....ஆரத்திச் சடங்கு முடிவடைந்த பின்னர் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.  வழக்கம்போல் பாபா சாஹேப் ஜோக் முன்னே வந்து பாபாவை வணங்கியபின் அவரின் உள்ளங்கை நிறையக் கற்கண்டை அளித்தார்... பாபா இவை முழுவதையும் ஹேமாட்பந்த்தின் கைகளில் திணித்து அவரிடம், "இக்கதையை உள்ளத்தில் இருத்தி நன்றாக நினைவில் வைத்துக் கொள்வீர்களேயானால், தங்களது நிலையும் கற்கண்டைப் போலவே சுவையுள்ளதாகும் என்றார்... உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும்.... நீங்களும் சந்தோஷமாய் இருப்பீர்கள்" என்று கூறினார்...ஹேமாட்பந்த் பாபாவின் முன்னால் பணிந்து வணங்கி "இவ்வாறே எனக்கு அனுகூலம் செய்யுங்கள்.  என்னை எப்போதும் ஆசீர்வதித்துக் காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டுகொண்டார். பாபா அதற்கு "இக்கதையைக் கேட்டு, அதனைக் குறித்துத் தியானித்து, அதன் மெய்க்கருத்தை ஜீரணித்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களிடமிருந்து தாமே உருவேற்றி எம்மை  வெளிப்படுத்திக் காட்டுவேன்.. அப்போது எம்மை  தவறாது  ஞாபகமூட்டித் தியானித்துக் கொண்டிருப்பீர்கள்" என்று பதிலளித்தார்....  

அன்பான சாய்  பக்தர்களே...! அப்போது ஹேமாட்பந்த் கற்கண்டுப் பிரசாதத்தைப் பெற்றார்.  நாமும் இப்போது கற்கண்டுப் பிரசாதம் அல்லது இக்கதையின் அமிர்தத்தைப் பெறுவோம்.  அதை நாம் உளநிறைவடையும் வரை பருகுவோம்...மேன்மேலும்  தியானிப்போம்...அதை  ஜீரணித்துக் கொள்வோம்... பாபாவின் அருளினால் வலிமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்போம்....  பத்தொன்பதாம் அத்தியாயத்தின் இறுதியில் ஹேமாட்பந்த் மற்றும் சில  விஷயங்களைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.அவைகள் கீழே தரப்பட்டுள்ளன...  

🔥நாம் எவ்வாறு உயரிய இறைப்பண்புகளைக் கடைப்பிடித்து  வாழ வேண்டும் என்பதைப் பற்றி   சீரடி பாபாவின்  உபதேச அருளுரைகளும் அறிவுரைகளும் இங்கே.🔥

பின்வரும் பாபாவின் மொழிகள் பொதுவானவை..விலைமதிக்க முடியாதவை...  அவைகள் மனதில் இருத்தப்பட்டு, அதற்கேற்பச் செயல்படுத்தப்பட்டால் எப்போதும் உங்களுக்கு நன்மை அளிக்கும்..  "ஏதேனும் உறவோ, தொடர்போ இல்லாவிடில் இருவரும் எங்கும் செல்வதில்லை, ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வரநேர்ந்தால், அவர்களைப் பண்பின்றி விரட்டிவிட வேண்டாம்....உங்களை நாடி வந்த எந்த ஜீவராசிகளாக இருந்தாலும்  நன்றாக வரவேற்று உரியமரியாதையுடன் நடத்துங்கள்....தாகமாய் இருப்போர்க்குத் தண்ணீர் கொடுத்தபோதும், பசியாய் இருப்போர்க்கு உணவு அளித்தபோதும், ஆடையற்றவர்களுக்கு ஆடையளித்தபோதும், உட்காருவதற்கும், இளைப்பாறுவதற்கும் உங்களது திண்ணையை மற்றவர்களுக்கு  அளித்த போதும் ஸ்ரீஹரி நிச்சயம் மகிழ்வெய்துகிறார்...  

யாராவது உங்களிடம் பணம் கேட்டு உங்களுக்கு கொடுக்க மனதில்லாமல் இருந்தால்,கொடுக்காதீர்கள்.. ஆனால் அவரைப் பார்த்து நாய் போன்று குறைக்க வேண்டாம்... யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராகக் கூறட்டும்...ஆனால் கசப்பாக எவ்விதத்திலும் அவர்களுக்குப் பதிலளிக்கும்படியாக சீற்றங்கொள்ளாதீர்கள்.

இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துகொண்டிருப்பீர்கள் என்றால் , நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.  உலகம் தலைகீழாக மாறட்டும்...நீங்கள் இருந்த இடத்திலே இருங்கள்.  உங்கள் இருப்பிடத்தில் நின்றுகொண்டோ, வசித்துக்கொண்டோ அனைத்து விஷயங்களையும் உங்கள் முன்னர் கடந்து செல்லும் காட்சியாக அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்களாக..!  உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள்...  பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும், திறந்தும் இருக்கும்...'நான்', 'நீ' என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையான அரனாக இருக்கின்றது... அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது ஐக்கியமாதல் இயலாது...  

கடவுளே சகலத்திற்கும் ஒரே உரிமையாளர்.  'அல்லா மாலிக்'... வேறோருவரும் நமது பாதுகாவலரல்ல.... அவர் வேலைசெய்யும் முறைமை அசாதாரணமானது,.. விலை மதிக்கமுடியாதது..  அறிவாலறிய முடியாதது... அவரது சங்கல்பமே ஈடேறும்...அவரே  நமக்கு வழிகாட்டுவார்... நமது .உள்ளத்தின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார்.... ருணானுபந்தத்தின் (முன்ஜென்மத்தின் உறவு) மூலமாகவே நாம் இணைந்துள்ளோம்.  ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தும், செவைசெய்தும் நாம் மகிழ்ச்சியுடனிருப்போம்.  எவன் வாழ்க்கையில் மிகமிக  உயர்ந்த குறிக்கோளை எய்துகின்றானோ அவன் இறவாப் புகழுடையவன், மகிழ்ச்சியுடையவன்.  மற்றவர் எல்லாம் வெறுமனே உளதாயிருக்கின்றார்கள்.. அல்லது மூச்சு விடும்வரை வாழ்ந்திருக்கின்றார்கள்...  

🔥பகவான் தன் பக்தர்களின் நல்ல எண்ணங்களின் ஆவலைப்  எவ்வாறு  நிறைவேற்றிப் பூர்த்திசெய்து   ஊக்குவித்தார் என்பதன் விளக்கம் இங்கே . .🔥

நல்ல எண்ணங்களை சாயீபாபா எங்ஙனம் ஊக்குவித்தார் என்பதை அறிவது சுவாரசியமானது.  அன்புடனும், பக்தியுடனும் முழுமையாக உங்களை நீங்கள் அவரிடம் சரணாகதியாக்கிக்கொள்ள வேண்டும்.  பின்னர் எவ்வளவோ விஷயங்களில் அடிக்கடி அவர் உங்களுக்கு உதவி செய்வதைக் காண்பீர்கள்.  தூக்கத்திலிருந்து எழுந்த உடனே உங்களுக்கு ஏதாகிலும் ஒரு நல்ல எண்ணம் உதிக்கின்ற போது அதையே பின்னர் பகற்பொழுதில் அனுசரித்தால் உங்களது புத்தியின் திறம் மலர்ந்து வெளிப்பட்டு மனது சாந்தியடையும் என்று ஒரு முனிவர் கூறியிருந்தார்...

ஹேமாட்பந்த் இதை முயற்சிக்க விரும்பினார். ஒரு புதன்கிழமை இரவு படுக்கும்முன் அவர் சிந்தித்தார்...  "நாளை வியாழக்கிழமை ஒரு புனிதமான நாள், சீரடியும் மிகவும் புனிதமான இடம்.  எனவே நான் நாளை முழுவதும் ராமநாமத்தை நினைவூட்டிக் கொள்வதிலும், போற்றுவதிலும் கழிப்பேன்" என்றவாறு அவர் உறங்கினார்....அடுத்தநாள் காலை அவர் துயில் நீங்கி எழுந்தபோது, எவ்வித முயற்சியும் இன்றி ராமநாமத்தை நினைவு கூர்ந்தார்...தமது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டபின், மலர்களுடன் பாபாவைக் காணச் சென்றார்...  தீஷித் வாதாவிலிருந்து புறப்பட்டு, பூட்டி வாதாவை (தற்போதைய சமாதி மந்திர்) கடந்து கொண்டிருக்கும் அதே தருணத்தில் பாபாவுக்கு முன்னால், மசூதியில் ஔரந்காபாத்கர் என்னும் இனிமையாகப் பாடப்படுகின்ற ஓர் அழகிய பாடலைக் கேட்டார்.  

அது ஏக்நாத்தின் 'குரு கிருபாஞ்ஜன் பாயோ மேரே பாயி.. !'  என்ற பாடல், அப்பாடலில் குருவின் கடாஷம் என்னும் ரூபத்தில் தரிசனம்  அவருக்குக் கிடைத்தது என்றும், அது அவரின் பார்வையைத் திறந்துவிட்டு அவருக்கு ராமரை அகத்தும், புறத்தும், உறக்கத்திலும், கனவிலும், விழிப்பு நிலையிலும், எவ்விடத்தும் காணும்படி செய்தது என்றும் கூறினார்..  எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன. பின்னர் ஏன் இக்குறிப்பிட்ட பாட்டு, பாபாவின் பக்தரான ஔரந்காபாத்கரினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. பகற்பொழுதில் ராமநாமத்தை இடைவிடாமல் பாடவேண்டும் என்ற ஹேமாட்பந்த்தின் தீர்மானத்திற்கு ஊட்டமளிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டதல்லவா தனித்திறம் வாய்ந்த இந்நிகழ்வுப் பொருத்தம்..!

🔥பகவான் தன் பக்தர்களைக் கடைத்தேற்றம் அடையச் செய்வதற்காக, எவ்வாறெல்லாம்  உபதேசம் செய்தார் என்பதைப் பற்றிய  விளக்கவுரை... 🔥

அவதூறு பேசுவோர் (புறங்கூறுவோர்) கண்டிக்கபடுதல் ..அறிவுரை வழங்குவதற்கு, சாயீபாபாவிற்கு எத்தகைய சிறப்பான இடமோ, குறிப்பிட்ட நேரமோ தேவை இருக்கவில்லை....  சந்தர்ப்பம் நேரிட்ட போதெல்லாம் தாராளமாக அவற்றை அவர் வழங்கினார். ஒருமுறை பாபாவின் பக்தனொருவன் வேறொருவரை அவர் அறியாதபடி மற்ற ஜனங்களின் முன்னிலையில் திட்டினான்... தனது சகோதரரின் நன்மைகளையெல்லாம் புறத்தொதுக்கி, அவரின் குறைபாடுகள் குறித்து கேட்போர்கள் அருவருப்படையும்படியாக பழித்துப் பேசினான்...  

அவசியமின்றி மற்றவர்களைப் புறங்கூறுவது மக்களுக்குரிய ஒரு மனப்பாங்காக இருப்பதைப் பொதுவாக நாம் காண்கிறோம்.  முனிவர்கள் இந்தப் புறங்கூறுதலை வேறொரு கோணத்தில் இருந்து நோக்குகிறார்கள். அழுக்கை நீக்குவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. மண், நீர், சோப்பு முதலானவை...ஆனால் புறங்கூறுபவனுக்கோ அவனுக்கே உரித்தான வழி இருக்கிறது...அவன் மற்றவர்களது அழுக்கை (குறைபாடுகளை) தனது நாவினால் அகற்றி நீக்குகிறான்.... ஒருவகையில் அவன் தன்னால் திட்டப்படுபவனுக்கே உதவுகிறான்.... .இதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்..புறங்கூறுபவனைத் திருத்துவதற்கு சாயீபாபாவுக்கு அவருக்கே உரியதான வழி இருக்கிறது...அவர் தமது நிறைபேரறிவினால் அந்த புறம் கூறுபவன் செயலை அறிந்திருந்தார்....மதியம் அவர் அவனை லெண்டித் தோட்டத்துக்கருகில் பார்த்தபோது, வேலிக்கருகில் இருந்த மலத்தை உண்ணும் பன்றியை அவனுக்குச் சுட்டிக்காண்பித்து, "பார், அது எத்தகைய சுவைமணச் சிறப்புடன் மலத்தைப் பேராவலுடன் விழுங்குகின்றது, உனது நடத்தையும் அத்தகையதே.  உனது தோழர்களை நீ மனதாரத் திட்டித் தீர்த்துகொண்டே இருக்கிறாய்...பல்வேறு நல்வினைகளைச் செய்ததன் பலனாக நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்...இவ்வாறு நீ நடந்துகொண்டால், சீரடி உனக்கு எவ்விதத்திலாவது உதவி செய்யுமா..?" என்று கேட்டு அவனுக்கு அறிவுரை வழங்கினார்.  அப்பக்தன் இப்பாடத்தை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு சென்றான் என்று சொல்லத் தேவையில்லை...

இவ்விதமாக பாபா அவசியம் நேர்ந்தப் போதெல்லாம் அறிவுரைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்..இவைகள் நமது மனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்படி செயலாற்றப்பட்டால், ஆன்மீக இலட்சியம் (அனுபூதி) வெகுத்தொலைவில் இல்லை...ஏன் ஹரி (கடவுள்) இருந்தால் அவர் எனது கட்டிலிலேயே உணவளிப்பார் என்னும் ஒரு பழமொழி இருக்கிறது....உணவு, உடை விஷயத்தில் மட்டுமே இப்பழமொழி உண்மை.. ஆனால் இதை நம்பி எவனாகிலும் அமைதியாக அமர்ந்துக்கொண்டு, ஆன்மீக விஷயங்களில் ஒன்றும் செய்யாமல் இருந்தால் அவன் படு வீழ்ச்சி எய்துவான்...ஆன்ம உணர்வடைய தன்னைத்தானே தனக்கு இயலும், உச்ச அளவு செயலில் முனைவித்துக் கொள்ளவேண்டும்..  எவ்வளவு அதிகம் அவன் பெருமுயற்சி கொள்கிறானோ, அவ்வளவு அதிகம் அவனுக்கு நல்லது.... 

பாபா தாம் நிலம், காற்று, நாடு, உலகம், ஒளி, மோஷம் ஆகியவை எங்கணும் நிறைந்திருக்கும் சர்வவியாபி என்றும் தாம் ஒரு வரையறை உடையவரல்ல என்றும் கூறினார்.  பாபா மூன்றரை முழ உயரமுள்ள அவரின் உடம்பே என்று எண்ணுபவர்களின் தவறான கருத்தை நீக்குதற்பொருட்டாக அவர் இந்த ரூபத்தில் தாமே அவதரித்துக் கொண்டார்.  இரவும் பகலும் எந்த பக்தனாவது பூர்ண ஆத்ம சரணாகதியுடன் அவர்மீதே தியானம் புரிவானாயின், அவன் அவருடன் இரண்டற இனிப்பும் - சர்க்கரையும் போன்றும்,, அலையும் - கடலும் போன்றும்,, கண்ணும் - ஒளியும் போன்றும் முழுமையான ஐக்கியத்தைத் துய்த்துணர்வான்.... பிறப்பு - இறப்பு என்னும் சுழலை ஒழித்து அமைதியுற வேண்டியவன், நேர்மையான வாழ்க்கை நடத்த வேண்டும்.  அமைதியாகவும், கட்டுப்பட்ட மனத்துடனும் இருக்க வேண்டும்...யாரையும் புண்படுத்தும் படியாக வெடுக்கென்று பேசக்கூடாது.... எப்போதும் நல்வினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்... தனது கடமைகளைச் செய்யவேண்டும்... தானே உள்ளத்தாலும், உயிராலும் எம்மிடம்  சரணாகதி அடையவேண்டும்....அதன் பின்னர் அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.  அவரையே முழுமையாக நம்புபவனும், அவரது லீலைகளைக் கேட்டு அதையே விவரமாக எடுத்துக் கூறுபவனும், வேறெதைப் பற்றியும் சிந்திக்காதவனும் ஆத்மானுபூதியை அடைவது உறுதி....

பாபா தமது பெயரையே நினைவில் வைக்கும்படியும் தம்மிடமே சரணாகதி அடையும்படியும் பலரைக் கேட்டுக்கொண்டார்.  ஆனால் தாங்கள் யார்..? என்று (நான் யார் விசாரணை) அறிய விரும்பியவர்களுக்கு ஸ்வரணத்தையும்(கற்றல்), மனனத்தையும்  (தியானம்) அறிவுறுத்தினார்.  சிலரைக் கடவுள் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும்,  சிலரை அவரது லீலைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியும், சிலரைத் தமது பாதபூஜை செய்யும்படியும், சிலரை ஆத்மாத்ய ராமாயணம், ஞானேஸ்வரி, மற்றும் பிற திருமுறை நூல்களைப் படிக்கும்படியும் அறிவுறுத்தினார்....சிலரைத் தமது பாதத்தடியில் அமரும்படி இருத்தி வைத்தார்....சிலரைக் கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார்...சிலரை விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை ஜெபம் செய்யும்படியும், மற்றும் சிலரை சாந்தோக்ய உபநிஷதம், கீதையைக் கற்கும்படியாகவும் கூறினார்.. அவர்தம் உபதேஷங்களுக்கு எவ்வித வரையறையோ, கட்டுப்பாடோ கிடையாது...சிலருக்கு அதை நேரிடையாகவே கொடுத்தார்...மற்றும் சிலருக்கு கனவில் காட்சிகள் மூலம் அளித்தார்....

குடிப்பழக்கத்துக்கு அடிமையாய் இருந்த ஒருவரின் கனவில் தோன்றி அவரது மார்பில் உட்கார்ந்து அழுத்தி, மதுவைத் தொடுவதில்லை என்று அவர் சத்தியம் செய்துகொடுத்தபின்பு அவரை விட்டகன்றார்.  சிலருக்கு கனவில் 'குரு பிரம்மா... குரு விஷ்ணு....' போன்ற மந்திரங்களை விளக்கினார்... ஹடயோகம் பழகிக்கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு ஹடயோகப் பயிற்ச்சியை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும், அமைதியுடன் அமர்ந்து பொறுமையாய் (சபூரி) இருக்கவேண்டும் என்றும் கூறியனுப்பினார்.  அவரது எல்லா வழிகளையும், செயல் முறைகளையும் விவரிக்க இயலாது.  சாதாரண உலக விவகாரங்களில் தமது செயல்களால் முன் உதாரணகள் அமைத்தார்.  அவைகளில் ஒன்று கீழே தரப்பட்டிருக்கிறது.....

உழைப்புக்குக் கூலி....

ஒருநாள் மத்தியான வேளையில் ராதாகிருஷ்ணமாயின் வீட்டிற்கு அருகில் பாபா வந்து, "எனக்கு ஒரு ஏணி கொண்டுவாருங்கள்" என்று கூறினார்.  சிலர் அதைக் கொண்டுவந்து பாபா குறிப்பிட்டபடி அதை ஒரு வீட்டுச் சுவரில் சாய்த்து  வைத்தனர்.  வாமன் கோந்த்கருடைய வீட்டுக் கூரையின் மீது ஏறி, ராதா கிருஷ்ணமாயின் கூரையின் மீது நடந்து சென்று, மற்றொரு மூலையில் இருந்து கீழே இறங்கினார்.  பாபா எந்தக் குறிக்கோளுடன் இறந்தார் என்பதை ஒருவராலும் அறிய இயலவில்ல...மலேரியா காய்ச்சலால் ராதா கிருஷ்ணமாயீ நடுங்கிக் கொண்டிருந்தாள்..... அதை ஒட்டி விரட்டுதற்பொருட்டே அவர் மேலே ஏறியிருக்கலாம்...கீழே இறங்கியவுடனே ஏணியைக் கொண்டுவந்தவர்களுக்கு பாபா இரண்டு ரூபாய் கொடுத்தார்... சிலர் தைரியத்துடன் பாபாவை ஏன் அவர் அவ்வளவு அதிகம் பணம் கொடுத்தார் எனக் கேட்டனர்.  அதற்கு அவர் ஒருவரும் மற்றவர்களின் உழைப்பை வெறுமையாகக் கொள்ளக்கூடாது என்று கூறினார்.  உழைப்பவனுக்கு அவனுக்கு உரியவைகள் ஒழுங்காகவும், தாராளமாகவும் கொடுக்கப்பட வேண்டும்... பாபா அறிவுறுத்திய இக்கொள்கை பின்பற்றப்பட்டால், அதாவது உழைப்பிற்கான கூலி ஒழுங்காகவும், திருப்திகரமாகவும் அளிக்கப்பட்டால் தொழிலாளர்கள் இன்னும் சிறப்பாக வேலை செய்வார்கள்...தொழிலாளர்களும், முதலாளிகளும் இலாபம் அடைவார்கள்.  இழுத்து மூடுவதற்கோ (lock-out) வேலை நிறுத்தங்களுக்கோ இடமேயில்லை.  தொழிலாளி, முதலாளி மனஸ்தாபமும் இல்லை  ..

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்....🙏🙏🏼🙏🏼

https://youtu.be/8yz8WU76bkg

வெள்ளி, மே 28, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதினாறு மற்றும் பதினேழு (16,17)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏻 அத்தியாயம்::..பதினாறு மற்றும் பதினேழு (16,17)

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம் பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேதநூல்  என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்....சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல்,  மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே  சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித    வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  வேண்டியது  கிடைக்கப்பெறும்... .சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது  திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🔥

         🙏ஶ்ரீ சாய்சரித்திர அத்தியாயம்...🙏

       🙏பதினாறு மற்றும் ::பதினேழு (16 ,17)🙏 

🙏முன்னுரை...🙏

🔥 முதலில் துரித பிரம்ம ஞானத்தைப் பெற , தன்னை நாடி வந்த பக்தரிடம் பகவான் எவ்வாறு பிரம்ம ஞானத்தின் மூல சூட்சமத்தை உணர்த்தி பக்தரின் அறியாமையைப் போக்கிய அனுபவ மறை ஞான விளக்கவுரை....மற்றும்  பதினாறு மற்றும் பதினேழு என்கிற இவ்விரண்டு அத்தியாயங்களும், பாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெறவிழைந்த ஒரு செல்வந்தரின் கதையைப் பற்றிய விளக்கவுரையைப் பற்றி இங்கே காண்போம்.🔥

பதினைந்தாவது  அத்தியாயத்தில் சோல்கரின் சிறிய அளவிலான சமர்பண சங்கல்ப விரதம் எவ்விதம் நிறைவேற்றப்பட்டு ஏற்கப்பட்டது என்று  விளக்கப்பெற்றது...அன்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் ஏற்றுக் கொள்வார் என்று அக்கதையின் வாயிலாக பகவான்  அறிவுறுத்தினார்....ஆனால் அதுவே பெருமையுடனும், இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்...தாமே சச்சிதானந்தத்தினால் (சத்து - சித்து - ஆனந்தம்) முழுமையும் நிரம்பப் பெற்றிருந்தமையால், வெறும் புறச் சம்பிரதாயங்களை அவர் பெருமளவு இலட்சியம் செய்வதில்லை...அதுவே நான் என்ற அகந்தையின்றி,  பணிவான உணர்வுடன் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டால், அதை பகவான் வரவேற்று பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது..

உணமையில் சாயீபாபாவைப் போன்ற தாய்மையுணர்வு, தன்னடக்கம்,எளிமை, அன்பு,  அனைவரின் பாலும் பேதமின்றி நேசித்தல், மிகுதியான தாராளம், தயை முதலான பண்புகள் அமையப்பெற்ற பிறிதொருவர் எவரும் இல்லை என்றே கூறலாம்...சீரடி பகவானுக்கு நிகர்  பகவானே...அவரை சிந்தாமணிக் கல்லுக்கோ (நினைத்தவை அனைத்தையும் தரும் ஓர் அரும் பொன்மணி), கற்பக தருவிற்கோ(விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீக மரம்), காமதேனுவிற்கோ (விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீகப்பசு) ஒப்பிடமுடியாது...ஏனெனில் நாம் விரும்பியவற்றை மட்டுமே அவை அளிக்கின்றன...ஆனால் சத்குருவோ, கருதுதற்கியலாத, ஆராய்ந்து அறிதற்கியலாத, மெய்ப்பொருளாம் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு நல்கிறார்...

இப்போது சாயீபாபாவை  நாடி வந்த பக்தர், தனக்கு துரிதமாக பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென்று மன்றாடி வேண்டிக் கொண்ட  பக்தரிடம், பகவான் எவ்வாறு பிரம்மஞானத்தின் மூல சூட்சமத்தை எளிய அனுபவ  நிகழ்ச்சி மூலம் உணர்த்தி அந்த பக்தரின் அறியாமையைப் போக்கினார் என்பதைப் பார்ப்போம் இங்கே....தனது வாழ்க்கையில் மிகவும் சுபிட்சத்துடன் விளங்கிய பணக்காரர் ஒருவர் இருந்தார்.  (துரதிஷ்ட வசமாக அவர் பெயர், இருப்பிடம் முதலியன குறிக்கப்படவில்லை) அவர் ஏராளமாக செல்வம், வீடுகள், வயல்கள், நிலங்கள் முதலியவற்றைப் பெற்று ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்... பல வேலையாட்களும், சார்ந்து வாழ்வோரும் வாய்க்கப்பட்டவராக இருந்தார்...பாபாவினது புகழ் பணக்காரரின்  செவிகளை எட்டியபோது, அவர் தனது நண்பர் ஒருவரிடம், தனக்கு எவ்விதமான பொருளும் தேவையிருக்கவில்லை  என்றும்,  எனவே அவர் சீரடிக்குச் சென்று, பாபாவிடம் பிரம்மஞானத்தை அருளும்படி பிரார்த்தனைச் செய்யப் போவதாகவும், அங்ஙனம் நான் ஞானத்தைப்  பெற்றால், அது நிச்சயம் தன்னை இன்னும் அதிக மகிழ்ச்சியுடையவராக்கும் என்றும் கூறினார்...அவருடைய நண்பர் பின்வருமாறு உரைத்து, அவர் கருத்தை மாற்ற முயன்றார்.. "பிரம்மத்தை அறிவதென்பது அவ்வளவு எளிதல்ல...அதிலும் குறிப்பாக மனைவி, மக்கள், செல்வம் என்னும் கவனங்களிலேயே முழுவதுமாகக் கவரப்பட்டிருக்கும் பேராசைக்காரர்களுக்கு அது எளிதே அல்ல.  ஒரு பைசாவும் தர்மத்திற்காக வழங்காத  மனிதராகிய உம்முடைய பிரம்மஞான நாட்டத்தை யார் திருப்தி செய்ய இயலும்...?" என்று நண்பர் பணக்காரரிடம் அறிவுருத்தியிருக்கின்றார்.

இந்தப் பணக்கார பெருந்தகை ,தமது நண்பரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது சீரடிக்குச் சென்று வர  குதிரைவண்டியைப் பேசியமர்த்தி சீரடிக்கு வருகைப்புரிந்தார்..மசூதிக்குச் சென்று சாயீபாபாவை தரிசித்தார்..பகவானின்  பாதங்களில் வீழ்ந்து, "பாபா, இங்கு வருவோர் அனைவருக்கும் எவ்விதத் தாமதமுமின்றித் தாங்கள் பிரம்மத்தைக் காண்பிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு தொலைவிலுள்ள இடத்தில் இருந்து நான் இங்கு வந்திருக்கிறேன்... எனது பிரயாணத்தால் மிகவும் களைப்படைந்து உள்ளேன்.  நான் தங்களிடமிருந்து பிரம்மத்தைப் பெறுவேனாகில் எனது கடின முயற்சிகளுக்கெல்லாம்  கடைத்தீர்வாக இது அமையும் என்றார்....பாபா அப்போது கூறியதாவது, "ஓ! எனதருமை நண்பனே, ஏங்கிக் கவலையுறாதே... நான் உடனேயே உனக்குப் பிரம்மத்தைக் காண்பிக்கிறேன்...எனது நடைமுறைத் தொடர்புகள் அனைத்தும் ரொக்கத்திலேதான்...கடனில் அல்ல... எனவே பலர் என்னிடம் வந்து, செல்வம், தேக ஆரோக்கியம், ஆற்றல், புகழ், பதவி, நோய் தீர்த்தல் போன்ற இவ்வுலகப் பொருட்களையே கேட்கின்றனர்... இங்கு வந்து பிரம்ம ஞானத்தைக் கேட்டவர் மிகவும் அரிது...  இவ்வுலகப் பொருள்களைக் கேட்டவர்களுக்குப் பஞ்சமே இல்லை...ஆத்மார்த்த விஷயங்களில் ஆர்வமுடைய மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகையால், உம்மைப்போன்ற மனிதர்கள் வந்து என்னைப் பிரம்மஞானம் தரச்சொல்லி வற்புறுத்தும்போது அத்தருணத்தை யான் அதிஷ்டமும், புனிதமும் வாய்ந்ததாகக் கருதுகிறேன்...எனவே, உடனே மகிழ்ச்சியுடன் உனக்கு பிரம்மத்தின் சுற்றுச்சூழலையும், அதை அடைவதில் உள்ள சிக்கல்களையும், தெரிவித்துத் தெளிவிப்பேன்" என்றார் பகவான்....

இவ்வாறு அறிவுருத்தியப் பின்னர், பாபா பிரம்மத்தைப் பற்றி தெளிவுப்படுத்த  ஆரம்பித்தார்..பக்தரை அங்கே அமரும்படி செய்து, பிறிதோர்உரையாடலிலோ, விவகாரத்திலோ அவர் ஈடுபடும்படியாகச் செய்தார்....இவ்வாறாகத் தற்காலிகமாக பிரம்மஞானம் கேட்ட பக்தரின்  வினாவினை மறக்கச் செய்தார்..பிறகு ஒரு சிறுப்பையனைக் கூப்பிட்டு, நீ  நந்து மார்வாடியிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கி வரும்படி கூறினார்.  பையன் சென்று உடனே திரும்பிவந்து, இல்லையென்றும் அவர் வீடு பூட்டி இருப்பதாகவும்  கூறினான்...பின்னர் பாபா அவனை, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம் சென்று அவரிடமிருந்து குறிப்பிட்ட கைமாற்றை வாங்கிவரும்படி கூறினார்....இம்முறையும் பையன் வாங்கி  வெற்றிபெறாமல் திரும்பி வந்தான்..இந்தப் பரிசோதனை இரண்டு, மூன்று முறை அதே விளைவுடன் நடத்தப்பட்டது.  

நாம் அனைவரும் அறிந்தவாறு சாயீபாபா பூரணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, இயங்கிக் கொண்டிருக்கின்ற அவதாரமாகும்... பின்னர் அற்பத் தொகையான ஐந்து ரூபாய் அவருக்கு ஏன் தேவைப்படுகிறது..?அதனைக் கைமாற்றாகப் பெறுவதற்கு அவர் ஏன் அரிதில் முயலவேண்டும் என்று சிலர் வினவக்கூடும். உண்மையில் அவருக்கு இத்தொகை தேவையிருக்கவில்லை.  நந்துவும், பாலாவும் அவரவர் இடங்களில் இல்லை தனது ஞானத்திருஷ்டியால்  பாபா நிச்சயமாக முழுமையும் தெரிந்துகொண்டே அச்சிறுவனை அனுப்பினார்.. 

இவ்வழிமுறையை பிரம்மத்தினை எய்த நினைக்கின்றவருக்கு ஒரு சோதனையாக மேற்கொண்டார் போலும்...அப்பெருந்தகை கரன்சி நோட்டுக்களின் கற்றை ஒன்றைத் தம் பையில் வைத்திருந்தார்....  அங்ஙனம் அவர் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருந்திருப்பின், ஐந்து ரூபாயைப் பெறுவதற்காக பாபா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் அத்தருணம், அங்கே அமைதியாக உட்கார்ந்துகொண்டு, நிகழ்வனவற்றின் வெறும் மேலோட்டப் பார்வையாளராக இருந்திருக்க மாட்டார். பாபா தமது மொழிகளைக் காப்பாற்றுவார் என்றும், கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்றும், தேவையான பணமும் ஓர் அற்பத் தொகையே என்றும் பிரம்மத்தை நாடிவந்தவர் அறிந்தே  இருந்தார்...  எனினும் அவருக்கு ஓர் உறுதியான தீர்மானத்திற்கு வரவோ, தொகையை முன்வந்து அளிக்கவோ இயலவில்லை.. 

அத்தகைய மனிதர் உலகிலேயே மிகமிகப் பெரிய கிடைத்தற்கரிய  பிரம்மஞானத்தை பாபாவிடமிருந்து பெற விரும்பினார்...  பாபாவிடம் அன்பு பூண்ட வேறெந்த பக்தரும், இவ்வாறு  பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக உடனடியாக பாபாவுக்கு ஐந்து ரூபாயை அளித்திருப்பான்...இம்மனிதரின் இயல்போ வேறானதாக இருந்தது.  அவர் எவ்விதப் பணமும் கொடுக்கவில்லை, அமைதியாகவும் அமர்ந்திருக்கவில்லை.  திரும்பிச் செல்வதற்குப் பதட்டமாக இருந்தமையால், பொறுமை இழக்கத் தொடங்கினார்....பாபாவிடம் மன்றாடி, "ஓ..! பகவானே,  தயவு செய்து சீக்கிரம்  எனக்கு பிரம்மத்தைக் காண்பியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்... 

பாபாவும், "ஓ..! எனதருமை நண்பனே, நீ பிரம்மத்தைக் கேட்டதன்  பொருட்டாகவே இவ்விடத்தில் அமர்ந்துகொண்டு நான் நுணுக்க விபரமாக ஆராய்ந்து நடத்திய அனுபவ  வழிமுறைகளையெல்லாம் நீ புரிந்து கொள்ளவில்லையா..?  சுருக்கமாக அவை இவ்வாறானதாகும்....பிரம்மத்தினைக் கண்டுணர்வதற்கு ஒருவன் ஐந்து நிலைகளைச்  சமர்ப்பிக்கவேண்டும்.. அவையாவன..

(1)  ஐந்து பிராணன்கள் (முக்கிய சக்திகள்)..

(2) ஐந்து உணர்வுகள்(செயலில்   ஐந்து, பார்வையில் ஐந்து)..

(3)  மனது..

(4)  புத்தி..

(5)  அகங்காரம் ...

பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதி என்னும் வழியானது கத்தி முனையில் நடப்பதற்கு  நிகரான கடினமான ஒன்றாகும்" என்று ஆரம்பித்து பிரம்மஞானத்தைப் பற்றி சாயீபாபா நீண்ட போதனை அளித்தார்....அதனுடைய கருத்துரை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.. பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதியைப் பெறுவதற்கு வேண்டிய முன்னீட்டான வரையறைகள் (தகுதிகள்) பெற்றிருப்பது அவசியமாகின்றது..எல்லோரும் தத்தமது வாழ்நாட்களிலேயே பிரம்மத்தைப் பார்க்கவோ, தெளிவாக உணரவோ முடியாது... அதற்கென்றே  சில  உயரியத் தகுதிகள் முழுமையாகத் தேவைப்படுகின்றன.. அத்தகுதிகளின் மூல சூட்சம விளக்கவுரைகளை இங்கே காண்போம்...

முதலாவதாக...

1. முமுக்ஷை::...என்பது விடுதலையடைய செறிந்த விருப்பம்..அதாவது ஒரு மனித உயிரானவன்  தான் மாயையில்  கட்டுப்படிருப்பதாக நினைத்து, தடைகளினின்று விடுபட வேண்டும் என்ற அந்த இலட்சியத்திற்காக  ஊக்கத்துடனும், தீர்மானத்துடனும் உழைப்பவனும் , மற்றெதைப் பற்றியும் கவலையுறாதவன் ஆத்மீக வாழ்க்கைக்குத் தகுதியுடையவன் ஆகின்றான்....  

2. விரக்தி:: -  என்பது இவ்வுலக, மறுஉலகப் பொருட்களின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி... அதாவது  இகபரங்களில் தனது செய்கையால் விளையும் ஐஸ்வர்யப் பொருட்கள், ஆதாயங்கள், கௌரவங்கள் இவைகளை ஒருவன் வெறுத்தாலன்றி ஆத்மீக ராஜ்யத்தின் எல்லைக்குள் நுழைய உரிமை இல்லை.

3. அந்தர் முகதா:: -  என்பது உள்முக சிந்தனை..அதாவது கடவுளால் நமது உணர்வுகளனைத்தையும் புறத்தே செல்லும் போக்குடையவைகளாய் படைக்கப்பட்டிருக்கின்றன.  எனவே, மனிதன் எப்போதும் தனக்குப் புறத்தே உள்ளனவற்றையே நோக்கி அகத்தைப் பாராதிருக்கின்றான்.. ஆத்மானுபூதியையும், இறவாப் புகழுடைய பெருவாழ்வையும் விரும்புபவன், தனது கூர்ந்த நோக்கை உள்முகமாகத் திருப்பி உள்ளிருக்கும் ஆத்மாவைப் பார்க்கவேண்டும்....

4. தீவினைகள் கசடறக் கழிபடுதல்::- ஒருவன் தீய மற்றும் கொடுந்தன்மைகளிருந்து மாறினாலன்றியும், தவறுகள் செய்வதை நிறுத்தினாலன்றியும், தன்னைத் தான் ஒருங்கிணைத்து அமைதியுற்றாலன்றியும், மனம் சாந்தமுற்றாலன்றியும், தத்துவ ஞானத்தின் மூலமாக மட்டும் ஆத்மானுபூதியை எய்துவிட இயலாது...

5. ஒழுங்கான நடத்தையும், உண்மையுடைய, தவமுடைய,  சத்திய உள்தரிசனத்துடன் கூடிய பிரம்மச்சர்ய வாழ்க்கையை நடத்தினாலன்றி, ஒருவன் இறையனுபூதியை எய்த இயலாது....

6. புலனுணர்வு மகிழ்ச்சி:: - என்பது நலம் பயப்பவைப்பொருட்கள் இரண்டு படித்தரமானவை.... அதாவது நன்மையானவைகளும், மனமகிழ்ச்சிக்கு உரியவையுமாகும்... முன்னவை ஆன்மீகச் செயல் தொடர்புடையவை... பின்னவை இகலோகப் பொருட்களின் செயல் தொடர்புடையவை....தம்மை ஏற்றுக் கொள்ளும்படி இவை இரண்டுமே மனிதனை அணுகுகின்றன....ஆலோசித்து அவற்றினுள் ஒன்றை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  விவேகமுள்ளவன் மகிழ்வைவிட நன்மையைத் தேர்ந்தெடுக்கிறான்.ஒன்றுமறியாத  அவிவேகியோ, பேராசையாலும், பற்றாலும், மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கிறான்...

7. மனத்தையும் மற்ற உணர்வுகளையும் அடக்கியாளுதல்..அதாவது நமது தேகமே தேர்...ஆத்மாவே எஜமானர்...புத்தியே தேரோட்டி.. மனதே கடிவாளம்..உணர்வுகளே குதிரைகள்... உணர்விற்குரிய பொருட்களே அவைகளின் பாதைகள்... எவனொருவன் அனைத்தையும்  பற்றுணர்வுடன் பற்றிக் கொள்கின்றானோ, எவனுடைய மனம் கட்டுப்பாட்டுடன் தடுக்கப்பட இயலாததோ, எவனுடைய  உணர்வுகள் அடக்கியாளப்பட முடியாதவைகளோ, இவை  தேரோட்டியின் குறும்புச் சூழ்ச்சியுடைய பொல்லாத குதிரையின் செயலைப் போன்று , அவன் தன் பயண இலக்கான ஆத்மானுபூதியை சென்றடையாமல் பிறப்பு-இறப்பு என்னும் சுழலுக்கு ஆட்படுகிறான்...

ஆனால், எவரொருவர் அனைத்தையும் பற்றில்லாமல் சாட்சியாக பார்க்கின்றாரோ,  அடக்கியாளப்படுகிறதோ, எவரது  உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் சாரதியின் (குதிரையை திறம்பட செலுத்துபவர் )குதிரையின் செயலை நிகர்ப்ப,  அதற்க்குரிய சேரும் இடத்தையடைகிறான்.  அதாவது, ஆத்மானுபூதியென்ற நிலையை  எய்துகிறான்.  அங்கே அவன் மீண்டும் பிறப்பதில்லை... தனது சாரதியை (வழிகாட்டியை) போன்ற பற்றுணர்வுத் திறம் உள்ளவனும், தன்  மனத்தைக் கடிவாளத்தினால் கட்டுப்படுத்தக் கூடியவனும், பிரயாணத்தின் இலக்கான எவற்றினும் மேம்பட்ட எங்கும்நிறை விஷ்ணுவின் (கடவுள்) வாசஸ்தலத்தை எய்துகிறான்....

8.  மனத்தூய்மை ஒருவன் தனது பணித்துறைக் கடைமைகளை மனநிறைவுடனும், பற்றின்றியும் செய்தாலொழிய மனம் தூய்மைப்படாது... மனம் தூயதாக்கப்படாவிடில் அவன் ஆத்மானுபூதியைப் பெற இயலாது...  தூய்மையான மனம் ஒன்றினாலேயே விவேகமும் (நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பரிந்துணரும் ஆற்றல்), வைராக்கியமும் முளைத்து மேல் எழும்பி ஆத்மானுபூதிக்கு இட்டுச் செல்கின்றன...

9.குருவின் இன்றியமையாமை..அதாவது ஆத்ம ஞானமானது, எவரொருவரும் தன்னுடைய சுய முயற்சியால் அடைந்து விடலாம்  என்று ஒருகாலும் நினைக்கக்கூட முடியாத அளவுக்கு, சூட்சமமாகவும், அறிவுநிலை கடந்ததாகவும் இருக்கிறது...ஆகவே தாமே ஆத்மானுபூதி எய்தப்பெற்ற மற்றொருவர் - அதாவது, குருவின் உதவி முழுமையாக வேண்டப்படுகிறது...பெரும் உழைப்பாலும், தீவிர  முயற்சிகளாலும் பிறர் அளிக்க இயலாதவைகளை அத்தகைய குருவின் உதவியால் எளிதில் அடையலாம்.... ஏனெனில், அவர், முன்னரே ஆத்மானுபூதி  என்ற  அப்பாதையில் நடந்திருப்பதால் தன் சீடர்களை ஆன்மீக முனேற்றத்தின் ஏணியில், பட்ப்படியாக எளிதில் அழைத்துச் செல்ல முடியும்...

10. இறுதியாக கடவுள் அனுக்கிரகம் மிகமிக முக்கியமான பொருளாகும்... கடவுள் எவர் மீதாவது மகிழ்ச்சியுற்றவராயின், அவருக்கு விவேகம், வைராக்கியத்தை அளித்து, இகவாழ்வென்னும் பெருங்கடலைத் தாண்டி பத்திரமாக அவரை அழைத்துச் செல்கிறார்... "ஆத்மாவானது வேதங்களைக் கற்பதாலோ, புத்தியாலோ, மிகுதியான புலமையினாலோ பெறப்படுவதன்று...ஆத்மா எவனைத் தேர்ந்தெடுக்கின்றதோ, அவனாலேயே அது பெறப்படுகின்றது.அவனுக்கே, அது தனது இயல்தன்மையை  வெளிப்படுத்துகின்றது" என்று கடோபநிஷதம் கூறுகின்றது...

இவ்வாறாக பகவான் பிரம்மஞானத்தின்  மூல சூட்சம  விளக்கவுரையை முடித்ததும், பகவான், பிரம்மஞானம் கேட்டு வந்த பக்தரிடம்  திரும்பி, "பக்தனே.., உனது பையில் ஐந்து ரூபாயைப் போன்று ஐம்பது மடங்குள்ள உருவில் (ரூ. 250) பிரம்மம்  இருக்கிறது. அவற்றைத் தயவுசெய்து வெளியே எடு" என்றார்...அந்தப் பக்தரும்  நோட்டுக்களின் கற்றையைத் தமது பையினின்று வெளியே எடுத்தார்....அவற்றை அவர் எண்ணியபோது அவரது பெருவியப்பிற்குரிய வகையில், ஒவ்வொன்றும் பத்து ரூபாயான இருபத்தைந்து நோட்டுக்கள் இருப்பதைக் கண்டார்.. பாபாவின் எங்கும்நிறை பேரறிவைக் கண்ணுற்று உணர்ந்த பக்தர் மனதுருகி, பாபாவின் ஆசீவாதங்களுக்காக தாக்கம் கொண்டு  பகவான்  பாதத்தடியில் வீழ்ந்தார்....

அப்போது பாபா அவரிடம், "உனது  பணக் கட்டுப்பிரம்மதைச் சுருட்டிக்கொள்க...(அதாவது கரன்சி நோட்டுக்கள்)  உன் பேராசையை முழுமையாக விட்டொழித்தாலன்றி, மெய்யான பிரம்மத்தை நீ அடையமுடியாது...  செல்வம், மக்கள், சுபிட்சம் என்னும் கவனங்களால் முழுமையுமாய் கவரப்பட்டிருக்கும் மனதை உடைய மனிதன், அவைகளுக்கான அவனது பற்றுக்களையெல்லாம் விட்டொழித்தாலன்றி, எவ்வாறு  பிரம்மத்தை அறிந்து உணர்வதை  எதிர்பார்க்கமுடியும்... பற்றென்னும் மாயத்தோற்றம் அல்லது பணத்தாசை என்னும் இறுமாப்பு, பொறாமை போன்ற குணமானது, எங்கும்  முதலைகள் நிறைந்த துன்பப் பெருநீர்ச்சுழி ஆகும்... ஆசைகளை விட்டொழிந்தவனுக்கே சுழியைக் கடத்தல் இயலுவதாம்...  பேராசையும், பிரம்மமும் எதிர் எதிர் துருவங்கள். அவைகள் நிரந்தரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.  எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே பிரம்மத்தைப் பற்றிய எண்ணத்திற்கோ, தியானத்திற்கோ இடமில்லை...  பின்னர் எங்கனம் ஒரு பேராசைக்காரன் சாந்தத்தையும், பரகதியையும் பெற்றிடமுடியும்.பேராசைக்காரனுக்கு அமைதியில்லை, திருப்தியுமில்லை, நிலையுறிதிப்பாடுமில்லைஎன்பதை அறிவீர்களாக...

பேராசையுள்ளவன் செய்கின்ற  சாதனைகள் (ஆன்மீக முயற்சிகள்) அனைத்தும் பயனற்றவையேயாம்.  தனது இக கர்மங்களின் விளைவால் அடையவிருக்கும் பொருட்களின் ஆசையினின்று விடுபடாமலும், அவைகளின் மேல் வெறுப்புறாமலும் உள்ளவனுடைய ஞானமும், நன்றாகக் கற்றறிந்தவனுடைய ஞானமும் கூடப் பயனில்லை..அது அவனுக்கு ஆத்மானுபூதியைப் பெறுவதில் உதவ இயலாது...அகங்காரம் முழுமையும் நிரம்பப்பெற்று புலனுணர்வுப் பொருட்களையே சிந்தித்துக்கொண்டு இருப்பவனுக்குக் குருவின் போதனைகள் கூடப் பயனற்றவையே.  மனத்தூய்மை மட்டுமே இங்கு தேவைப்படுகிறது.  அஃதின்றி நமது ஆன்மீக சாதனைகள் யாவும் பயனற்ற வெளித்தோற்றமும், பகட்டு ஆரவாரமுமேயன்றிப் பிறிதில்லை... எனவே, ஒருவனால் ஜீரணிக்க முடிந்த, கிரகிக்க இயன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வது நலமாகும். எனது கருவூலம் நிறைந்திருக்கிறது.  எவனுக்கும் அவன் விரும்புவதை நான் அளிக்க முடியும்... ஆனால் நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அந்தந்த மனித உயிருக்கு  இருக்கிறதா என்பதை நான் கவனிக்க வேண்டும். யான் உபதேசிப்பதை  கவனத்துடன் கேட்பீர்களேயானால், நீங்கள் உண்மையிலேயே நன்மை அடைவீர்கள்.  இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை" என்று பகவான் தீர்க்கமாக  உரைத்தார்....

ஒரு வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கும் போது, வீட்டைச் சேர்ந்தவர்களும், அங்கிருக்க நேரிடும் மற்ற நண்பர்களும், உறவினர்களும், விருந்தாளியுடன் உபசரிக்கப்பட்டு மகிழ்வெய்துவார்கள்.  அவ்வாறே மசூதியில் அப்போது இருந்த அனைவரும், பாபாவினால் பிரம்மஞானம் கேட்டு வந்த பக்தருக்கு  பரிமாறப்பட்ட ஆன்மீக விருந்தில் பங்குக் கொண்டு லாபமடைந்தனர்...பணக்காரப் பெருந்தகை உள்ளிட்ட அனைவரும், பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர், மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்...

🔥பாபாவின் சிறப்பான குணாதிசயங்கள் பற்றிய சிறுகுறிப்பு.... 🔥

தங்களது வீட்டைத் துறந்து காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்துகொண்டு, தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கும் பல முனிவர்கள் உள்ளனர்.மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை...எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறந்து மூழ்கி இருப்பார்கள்... ஆனால் சாயீபாபா அவ்வகையைச் சார்ந்தவர் அல்லர்...  அவருக்கு வீடில்லை,  மனைவி இல்லை,  மக்களில்லை, சேய்மை அண்டைய  உறவினர்கள் யாருமே இல்லை...  எனினும் அவர் இவ்வுலகில் (சமூகத்தில்) வாழ்ந்தார்.. நாலைந்து வீடுகளிலிருந்து தமது உணவை அவர் தானே  இரந்துண்டு தன்னுடைய பசியாற்றி , எப்போதும் வேப்பமரத்தடியில் தவத்தில் தன்னிலையில்  வாழ்ந்தார்.... 

உலக விவகாரங்களை நடத்திக்கொண்டு, மக்களுக்கு உலகில் எங்ஙனம்  சத்திய மற்றும் விவேகத்துடன் மிகச் சிறந்த  கர்மயோகியாக வாழ வேண்டுமெனப் போதித்தார்...வாழ்க்கைப் பாதையையும் ஞானப்பாதையையும் ஒருசேரக் கற்பித்தார்...அனுபூதியடைந்தப் பிறகு   மக்களின் சுபிட்சத்துக்காகப் பாடுபடும் முனிவர்களையோ, சாதுக்களையோ காண்பதரிது...சாயீபாபா இவர்களிலெல்லாம் தலையாயவர்... எனவே ஹேமத்பந்த் பின்வருமாறு கூறுகிறார்.....இத்தகைய அசாதாரணமான, அறிவாற்றல் மிகுந்த, விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல் (சாய்பாபா) அவதரித்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டது.  குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது.தூயவர்களாகிய அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🙏🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🙏

https://youtu.be/8yz8WU76bkg


https://youtube.com/channel/UC_StOEm4cGxRNjlt1vSjs8A

http://o8ng7.163esports.com/jp/1620979331.html

வியாழன், மே 27, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதினைந்து🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏻 அத்தியாயம்.::-பதினைந்து (15 ) 🙏🏻

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப்பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல்  என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்.. இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம்  செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏🏻

🔥குறிப்பு...சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...இவ்வேதப்  பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும்இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்.. சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🙏🏻

🙏🏻அத்தியாயம்..பதினைந்து15)🙏🏻

🙏🏻முன்னுரை..🙏🏻

சீரடி பகவானால் கீர்த்தனைகள் பாடுவதற்கு தாஸ்கணு  எவ்வாறு நியமிக்கப்பட்டார்..மேலும் கீர்த்தனைகள்  பாடும் போது எவ்வாறு  புறத்தோற்றம் இருக்க வேண்டும் என்பதை அறிவுருத்திய அனுபவ விளக்கவுரை ...

பகவான் தன்னுடைய ஆத்மார்த்தமான எளிய  பக்தரான சோல்கரின்  வேண்டுதலை  நிறைவேற்றி, மிகுந்த தாய்மையுணர்வுடன் பக்தனின் பிரார்த்தனை  சங்கல்பத்தை அறிந்து தேநீரில் சர்க்கரையை சேர்த்து அருந்துமாறு கூறித் தேற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே...

பகவான் தன்னுடைய ஞான திருஷ்டியால்,அங்கேயுள்ள இரண்டு  பல்லிகளின்  அதிநுட்பமான  சூட்சம உரையாடல் பற்றி தன் பக்தர்களிடம் அறிவுருத்துகின்ற அனுபவ விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்....

🔥 முதலில் சீரடி பகவானால்  கீர்த்தனைகள் பாடுவதற்கு  எவ்வாறு தாஸ்கணு நியமிக்கப்பட்டார்..கீர்த்தனைகள் பாடும் போது எவ்வாறு  புறத்தோற்றம் இருக்க வேண்டும் என்பதை அறிவுருத்திய அனுபவ விளக்கவுரை ...🔥

சீரடியில் ராமநவமித் திருவிழாவைப் பற்றி ஆறாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டதை ஏற்கெனவே பாராயணம் செய்திருப்பீர்கள்... அதாவது  எவ்விதம் ராமநவமி பண்டிகை முதன்முதலாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதைப் பற்றி சென்ற  அத்தியாயத்தில்  பார்த்தோம்...ஆரம்ப வருடங்களில் அவ்விழாவின்போது கீர்த்தனைகள் பாடுவதற்கான ஹரிதாசகர்கள்  பெறுவது மிகக்கடினமாய் இருந்தது.ஆகவே பகவான் தாஸ்கணுவிற்கே இவ்விழாவினுடைய கீர்த்தனைப்  பொறுப்பை நிரந்தரமாக  ஒப்படைத்தார் அதிலிருந்து தாஸ்கணு அதனை  எவ்வாறு மிகவும்  வெற்றிகரமாக நிறைவேற்றிக்  கொண்டு வருகிறார் என்பதைப் பற்றி விரிவாக இங்கே காண்போம்...

பொதுவாக நமது ஹரிதாசர்கள் கீர்த்தனைகள் செய்யும்போது விரும்பியவாறு ஆடம்பர  முழு உடைகளையும் அணிகிறார்கள்...  ஃபேடாவோ, டர்பனோ ஏதோ ஒரு தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள்..நீளமான அலைமோதும் கோட், உள்ளே ஒரு சட்டை, தோள்களில்அங்கவஸ்திரம், இடுப்புக்குக் கீழே வழக்கமான நீள வேட்டி ஆகியவற்றை அணிகிறார்கள்..சீரடி கிராமத்தில் ஒரு கீர்த்தனைக்காக தாஸ்கணு ஒருமுறை இவ்வாறாக உடையணிந்து,  பாபாவிடம் வணங்குவதற்காகச் சென்று இருக்கின்றார்... உடனே  பாபா  என்ன  அழகாக  மாப்பிள்ளையைப் போல்  உடையணிந்துக் கொண்டு எங்கே செல்லப் போகின்றீர்கள் என்று கூறினாராம்...அதற்கு தாஸ்கணு  "கீர்த்தனை செய்வதற்கு" என்று பதில் உரைத்திருக்கின்றார்...

அப்போது பாபா, "இச்சிறு அலங்காரப் பொருட்கள் எல்லாம் எதற்கு..? கோட்டு, அங்கவஸ்திரம், குல்லாய் முதலிய எல்லாவற்றையும் எனக்கு முன்னால் கழற்றிவிடு" என்று கூறினாராம்... தாஸ்கணு உடனே அவற்றை எடுத்து பாபாவின் பாதத்தடியில் வைத்திருக்கின்றார்..  அதிலிருந்து கீர்த்தனை செய்யும்போது தாஸ்கணு இடுப்புக்குமேல் ஒன்றும் அணிவதில்லை... கைகளில் ஒரு ஜதை சப்ளாக் கட்டை, கழுத்தில் மாலை இவற்றுடனேயே எப்போதும் இருந்தார்...எல்லாப் பாடகர்களும் கைக்கொள்ளும் முறையுடன் இது ஒத்ததாய் இல்லை....ஆனால் இதுவே மிகச்சிறந்த, மிகத்தூய வழியாகும்...கீர்த்தனை பத்ததிகளை படைத்து உருவாக்கிய நாரத ரிஷியே மேல் உடம்பிலும், தலையிலும் ஏதும் அணியவில்லை. தம் கையில் வீணையேந்தி அனைத்து இடந்தோறும் அலைந்து திரிந்து கடவுளின் புகழைப் பாடினார்..

புனே, அஹமத்நகர் ஜில்லாக்களில் பாபாவின் புகழ் பரவக் காரணமாயிருந்த இருந்தவர்கள்  நானா சாஹேப் சாந்தோர்கர் மற்றும் தாஸ்கணு என்பவர்கள்  குறிப்பிடத்தக்கவர்கள்... தனது சொந்த தனிப்பட்ட முறையிலான  உரையாடல்களால் நானா பாபாவின் உயரிய உபதேசங்களை மக்களிடம் கொண்டுச்   சென்றார். தாஸ்கணு தனது மிக உயர்வான கீர்த்தனைகளாலும் கொங்கணத்தில் பாபாவின் புகழைப் பரப்பினார்.. தாஸ்கணு அவர்கள்,  தமது அழகிய உயரிய  கீர்த்தனைகளால் அங்கேயிருந்த ஏராளமான மக்களை  தெய்வீக இறை  ஆற்றலை  ஈர்க்கும் படிச்செய்து   பாபாவை வழிபடக் காரணமாக இருந்தார்.... கீர்த்தனைகளைக் கேட்கவந்த மக்கள் வெவ்வேறு சுவையுள்ளவர்களாய் இருப்பார்கள்.. சிலர் ஹரிதாசின்  ஆழமான  அறிவுத் திறமையையும் , சிலர்  அவரின் புலமையையும் விரும்புபவர்...சிலர் அவரது அபிநயங்களையும், சிலர் அவரது பாடலையும், சிலர் அவரது விகட நகைச்சுவைகளையும், சிலர் அவரது துவக்க வேதாந்த வியாக்கியானங்களையும்,  மற்றும் சிலர் அவரது முக்கிய கதைகளையும்,இவ்வாறாக  பலர் பலவிதமாக ஆர்வம் கொண்டிருப்பர்..

அவர்களுக்குள் மிகச்சிலரே கீர்த்தனைகளைக் கேட்பதன் வாயிலாக ஞானிகள் மற்றும்  கடவுளிடத்தில்  நம்பிக்கையும், பக்தியும் பெறுகின்றார்கள்..ஆயினும் தாஸ்கணுவின் கீத்தனைகளைக் கேட்கும் அவையோர்களது உள்ளத்தில்  தெய்வீக இறையாற்றல் வியாப்பித்து அனைவரையும் பரவசப்படுத்தியது...தாஸ்கணு ஒருமுறை தாணேவில் கௌபினேஷ்வர் கோவிலில் சாயீபாபாவின் புகழைப்பாடி கீர்த்தனை செய்து வந்துள்ளார்.. அவையோர்களுள் சோல்கர் என்பவர் சிவில் கோட்டில் ஒரு தற்காலிக ஊழியராக வேலைப் பார்த்துவந்த ஒரு ஏழைப் பக்தர் ஆவார்... இவர் மிகவும் கவனத்துடன் தாஸ்கணுவின் கீர்த்தனையை  கேட்டுப் பெரிதும் உருகிப்போனார்...அவர் அங்கேயே, அப்போதே மானசீகமாக  பாபாவுக்கு வணக்கம் செலுத்தி, ஒரு சங்கல்ப  விரதம் எடுத்துக் கொண்ட அனுபவ விளக்கத்தை விரிவாக கீழே காண்போம்...

🔥பகவான் தன்னுடைய ஆத்மார்த்தமான எளிய  பக்தரான சோல்கரின்  வேண்டுதலை எவ்வாறு  நிறைவேற்றினார்...மற்றும் தாய்மையுணர்வுடன் பக்தனின்  ஆழமான பிரார்த்தனை  சங்கல்பத்தை  அறிந்து, தேநீரில்  சர்க்கரையை சேர்த்து அருந்துமாறு கூறித் தேற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே...🔥

சோல்கர் கூறுகின்றார் பாபாவிடம்...பகவானே  நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற இயலாத ஓர் ஏழை... தங்களுடைய அருளினால் நான் இலாகாவிற்குரிய தேர்வில் வெற்றிபெற்று, நிரந்தர உத்தியோகம் பெற்றால் சீரடிக்கு வந்து , தங்கள் பாதங்களில் வீழ்ந்து, தங்கள் நாமத்தினால் கற்கண்டை வினியோகிப்பேன்." என்று பிரார்த்தித்து கொள்கின்றார் பாபாவிடம்.. இது நிறைவேறுவதற்குரிய நல்ல அதிஷ்டம் இருந்ததால், சோல்கர் பரீட்ஷையில் தேர்வு பெறவே செய்தார்... எவ்வளவு விரைவில் முடியுமோ, தனது விரதத்தை விரைவில்  நிறைவேற்றுவது  என்பது ஒன்றே அவருக்கு  எஞ்சியிருந்தது...  பெருங்குடும்பத்தைத் தாங்கவேண்டிய ஏழை மனிதர் சோல்கர்...அவரால் சீரடி பயணத்திற்கு நேரும் செலவைத் தாங்குதல் இயலாது...தாணே ஜில்லாவில் உள்ள நாணே காட்டையும்  அல்லது சஹ்யாத்ரி மலைத் தொடரையைக்  கூட ஒருவன் எளிதில் கடந்துவிடலாம். உம்பரேகாட்டை, அதாவது வீட்டின் தலைவாயிலை, ஓர் ஏழை மனிதன் கடப்பது என்பது மிகமிகக் கடினமானது....

எவ்வளவு விரைவில் தனது விரதத்தைப் பூர்த்திசெய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் பூர்த்திசெய்ய ஆவலும், கவலையுமுற்ற சோல்கர் தனது செலவைக் குறைத்துச் சிக்கனப்படுத்தி பணத்தைச் சேகரிக்கத் தீர்மானித்தார்..தனது உணவிலும்,  தேநீரிலும் சர்க்கரை உபயோகிப்பதில்லை என முடிவுசெய்து, தேநீரைச் சர்க்கரை இன்றியே அருந்தத் தொடங்கினார்.  இவ்வாறாக அவர் சிறிது பணம் சேகரிக்க இயன்றதும், சீரடியை வந்தடைந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அவர் பாதங்களில் வீழ்ந்தார்... இரு தேங்காயை அர்ப்பணித்தார்.. தனது விரதப்படி அந்தக்கரண சுத்தியுடன் கற்கண்டை விநியோகித்தார்...

பாபாவிடம், அவரது தரிசனத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும், அன்றைய தினத்தில் அவரது ஆசைகள் பூர்த்தியாயின என்றும் சோல்கர்  கூறினார்...விருந்து  உபசரிப்பளராகிய பாபு சாஹேப் ஜோகுடன், சோல்கர் மசூதியில் இருந்தார்... பாபு சாஹேப்பும் , சோல்கரும் எழுந்து மசூதியை விட்டுப் புறப்படப் போனபோது, பாபா, ஜோகிடம் பின்வருமாறு கூறினார்.  "அவருக்கு (சோல்கருக்கு) சர்க்கரை நிறை முழுமையாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுப்பீராக... இத்தகைய உட்கருத்து சொற்களை பாபா கூறியதைக்  கேட்டு சோல்கர் மிகவும் மனதுருகிப் போனார்...வியப்பால் செயலிழந்தார்.. அவரின் கண்கள் கண்ணீரால் பனித்தன.. மீண்டும் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்....தனது விருந்தினருக்கு அளிக்கபடவேண்டிய தேநீரைப்பற்றிய வழிமுறலயைக் கேட்டு ஜோகும் ஆச்சரியமடைந்தார்..

தமது சொற்களின் மூலம் சோல்கரின் மனத்தில் நம்பிக்கையையும், பக்தியையும் தோற்றுவிக்க பாபா விரும்பினார்.... அவருடைய விரதப்படி தாம் கற்கண்டைப் பெற்றுக் கொண்டதையும், உணவில் சர்க்கரை பயன்படுத்தக் கூடாது என்ற அவரது இரகசியத் திட்டத்தையும் தாம் முழுமையாக அறிந்திருப்பதாக, அங்ஙனம் இருந்தபடியே, பாபா குறிப்பிட்டார்... பாபா கூறியதன் பொருளாவது, "என் முன்னர் பக்தியுடன் உங்களது கரங்களை நீட்டுவீர்களேயானால்,யான்  இரவும், பகலும் உங்களுடன் கூடவே  யான்  இருப்பேன்....யான்  இந்த தேகத்தால்  இங்கேயே இருப்பினும், ஏழ்கடலுக்கப்பால் நீங்கள் செய்வதையும் நான் அறிவேன்.  இந்த பரந்த உலகில்  நீங்கள் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்...நான் உங்களுடனேயே இருக்கிறேன்....உங்களது இதயமே எனது இருப்பிடம்.  நான் உங்களுக்குள்ளேயும்  இருக்கிறேன்...உங்களது இதயத்துள்ளும், அதைப் போன்ற சகல ஜீவராசிகளின் இதயங்களினுள்ளும் இருக்கும் என்னையே எப்போதும் வணங்குவீர்களாக..! என்னை இங்ஙனமாக அறிபவர்  உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவரும், அதிஷ்டசாலியும் ஆவர்....

இவ்வாறாக, பகவானால் அழகிய அதி  முக்கியமான  சூட்சம  உபதேசமொழி எளிமையான வார்த்தையால்  சோல்கருக்கு உபதேசிக்கபட்டது...

🔥பகவான் தன்னுடைய ஞான திருஷ்டியால்,அங்கேயுள்ள  இரண்டு  பல்லிகளின்  அதிநுட்பமான  சூட்சம உரையாடல் பற்றி தன் பக்தர்களிடம் அறிவுருத்துகின்ற அனுபவ விளக்கவுரை... 🔥

இரண்டு சிறிய பல்லிகளின் கதையுடன் இவ்வத்தியாயத்தை முடிப்போம்...ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தார்...  ஒரு பக்தரும் அவர் முன்னர் அமர்ந்திருந்தார்....ஒரு பல்லி, 'டிக்..!.. டிக்..! துடிப்பை விளைவித்தது..  ஆச்சரியத்தால் உந்தப்பட்ட அடியவர், பல்லியின் இத்துடிப்பு, ஏதேனும் பின்விளைவு காட்டுதல் குறித்ததா...?அது நல்ல அடையாளமா அல்லது தீய சகுனமா என்று பாபாவைக் கேட்டார்.. அப்பல்லியின் சகோதரி அதனைப் பார்க்க ஓளரங்காபாத்திலிருந்து வந்துக்கொண்டு இருப்பதாகவும் அதனால் அப்பல்லி மிகவும் மகிழ்ச்சியுற்றிருக்கிறது என்றும் பாபா கூறினார்...பாபா கூறுவதன்  அர்த்தம் புரியாமல் அவர் மௌனமாய் அமர்ந்து இருந்தார்... உடனேயே  ஓளரங்காபாத்திலிருந்து குதிரையில் ஒரு பெருந்தகை பாபாவைப் பார்க்க வந்தார்....அவர் மேற்கொண்டு பயணத்தைத் தொடர விரும்பினார்....ஆனால் அவரது குதிரை பசியாய் இருந்தபடியால், நகர்வதாக இல்லை...அதற்குக் கொள்ளு தேவைப்பட்டது.. கொள்ளு கொண்டு வருவதற்காகத் தனது தோளில் இருந்து ஒரு பையை எடுத்தார்.  தூசியைப் போக்குவதற்காகத் தரையில்  கொட்டினார்... அதிலிருந்து ஒரு பல்லி விழுந்தது....எல்லோர் முன்னிலையிலும் அது சுவரில் ஏறியது... கேள்விகேட்ட பக்தரிடம் அப்பல்லியை நன்றாகக் கவனிக்கும்படி பாபா கூறினார்...அது உடனே தனது பெருமையான சூதுகல  நடையுடன் தன் சகோதரியை நோக்கிச் சென்றது...நீண்ட காலத்திற்குப் பின்னர் இரண்டு பல்லிகளும்  சந்தித்தன....

ஒன்றையொன்று  முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கொண்டன...சுற்றிச்சுற்றி ஓடி வந்து அன்பால் நடனம் ஆடின... சீரடி  எங்கே இருக்கிறது..? ஓளரங்காபாத் எங்கே இருக்கிறது..? குதிரையிலிருந்த மனிதர் எங்ஙனம் ஓளரங்காபாத்திலிருந்து வந்தார்..?  இரண்டு சகோதரிகள் சந்திக்கப்போவதை எவ்வாறு  பாபா ஞான திருஷ்டியால்  அறிந்தார்.. இவையெல்லாம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானதும், பாபாவின் எங்கும் நிறைந்த சூட்சம பேராற்றலையும், பேரறிவையும் உணர்ந்து பகவானை  மேன்மேலும் சரணாகதி அடையவே இங்கு உரைக்கப்பட்டுள்ளது..

🔥குறிப்பு....🔥

எவரொருவர் இவ்வத்தியாயத்தை பக்தியுடன் படிக்கின்றாரோ அல்லது தினமும் கருத்தூன்றிப் பயில்கின்றாரோ, சத்குரு சாய்பாபாவின் அருளால் அவரது அனைத்து ஆழ்துயர் நிலைகளும் அகற்றப்படும்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏻🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...மங்களம்..🙏🏻🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏻🙏🏻🙏🏼

https://youtube.com/channel/UC_StOEm4cGxRNjlt1vSjs8A

https://youtube.com/playlist?list=PL2wMPZhligflE6VZJndcQUXqkIxidNcmW

புதன், மே 26, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதினான்கு🙏🏻

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய  வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼

🙏🏻அத்தியாயம்::பதினான்கு(14)🙏🏻

🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே.🔥

ஶ்ரீசாயீன் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில்  சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத் சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேதபாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதக் கமலத்தில் சரணடைவோமாக.🔥

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்...🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்..இவ்வேதப்  பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  வேண்டியது கிடைக்கப்பெறும்... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🙏அத்தியாயம் ::பதினான்கு(14)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பகவான்  தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, எவ்வாறு எளிய  உபதேசங்கள் மூலமாக உயரிய நிலையை அடைய  வழிநடத்தினார் என்பதன்  விளக்கவுரை....

பகவான், தன்னுடைய  ஆத்மார்த்தமான பக்தர்  நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி வாடியாவின் நீண்ட நாள் குறையை தீர்த்து குழந்தைப் பாக்கியம்  வழங்கியதைப் பற்றிய  அனுபவ விளக்கவுரை....

பகவான் தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன்  தக்ஷிணையைப்  பெற்றார்.. அவ்வாறு தக்ஷிணைப் பெற்றதன் மூல சூட்சம விளக்கங்களும், தக்ஷிணை அளித்தவர்களின்  அனுபவ விளக்கவுரைகளும் ....

மேற்க்கண்டத் தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்...

🔥முதலில் சீரடி பகவான்  தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, எவ்வாறு எளிய  உபதேசங்கள் மூலமாக உயரிய நிலையை அடைய  வழிநடத்தினார் என்பதன் விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

இயற்கையிலேயே ஞானியரின்  வாழ்க்கையானது அகமும்  புறமும் இனிமையானதாய் இருக்கிறது...சீரடி பகவானின் இயல் வாழ்வியல் இயக்க முறைகளும்  கூட,  பிற உயிர்கள் எவ்வாறு உயிரியப் பண்புகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக  இருந்தது.. அதாவது பகவானின் வாழ்வியல் இயக்க  செயல்பாடுகளும் ,பகவான்  வாழ்ந்த விதமும், கடைப்பிடித்த கோட்பாடுகளும் , உபதேச மொழிகளும், ஆதி மூல மறை ஞான விளக்க உரைகளை எளிமையான நடையில் போதித்த விதமும், மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக அனைத்து மத சடங்குகள்,விழாக்கள் ஆகியவற்றை அனுசரித்த விதமும், சக  உயிர்களை  சமமாக பாவித்து,  சகிப்புத் தன்மையுடன்  எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்பித்த விதமும்,  ஏகத்தன்மையுடன் அனைத்து ஜீவராசிகளையும்  ஒன்றாக பாவித்தத் தன்மையும், தன்னை நாடி வந்த  ஏழை  எளியவர்களுக்கு அன்னதானமிட்டு அன்னதானத்தின் மகிமையை உலகறியச் செய்த நிலையும், எளிமையாக எவ்வாறு , எதிலும் பற்றில்லாமல் சாட்சியாக வாழ்வது என்பதை போதிக்க , பகவான் வாழ்ந்த காலம் முழுவதும்  நமக்கான பாடசாலையாக தன்னை உருமாற்றி,  அனைத்து உயரிய சத்திய உண்மை  நற்ப்பண்புகளுடன்  தான் வாழ்ந்து காட்டினார்... நாம் அவ்வாறு வாழ வேண்டும் என்பதற்காகத் தான், பகவான் முன் உதாரணமாக  வாழ்ந்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது..

சாட்சிநாதராக எதிலும் ஒட்டாமல்  விழிப்புணர்வுடன் தனக்குள் அனைத்தையும்  கண்டு , அகத்தில் மகிழ்ந்து புறத்தில் பற்றற்று வாழ்ந்தார்...பகவான் மிகுந்த தாய்மை உணர்வுடன் தன்னை நாடி வந்த பக்தர்களின் ஆவல்களையும்,ஏக்கங்களையும், நோய் நொடிகளையும் தீர்த்து சகல சம்பத்துக்களையும்  வழங்கி ஆசிர்வதித்த  விதமானது அபூர்வமானது..மிக ஆழமான  அற்புதங்களை உள்ளடக்கியது...பகவான் தன்னை பேரன்பின் பிறப்பிடமாகவும், பேரானந்தத்தின் பிறப்பிடமாகவும், உயரிய சத்திய தன்மையின் பிறப்பிடமாக, மிகுந்த தயை நிரம்பிய தாய்மையுணர்வின் பிறப்பிடமாகவும், சகிப்புத்தன்மையின் பிறப்பிடமாக  பகவானின் பேராற்றல்  இருந்தது...அனைவரும் தன்னை எளிமையாக பூஜிக்க வேண்டும் என்பதற்காக, ஆத்மார்த்தமாக உண்மையான தூய்மையான அன்புடன் தமக்கு ஓர் இலையைக் கூட வைத்து வழிப்பட்டால்  போதுமானது என்றார்..நம்பிக்கை மற்றும் பொருமை, நேர்மை, சகிப்புத்தன்மை, சாந்தம், சத்தியம், உண்மை, மனிதநேயம், தெய்வீகம், ஒற்றுமை, பிற உயிர்களை நேசித்தல் , தர்ம காரியங்களைச் செய்தல், வைராக்கியம், தவம், தானம், வஞ்சகமின்மை, புறங்கூறாமை,  மற்றும்  எவ்வாறு  கர்மயோகியாக  வாழ்வது  போன்ற  இறைப் பண்புகளுடன், எவ்வாறு தன் பக்தர்கள்  வாழ வேண்டும் என்பதற்காக பல உவமான அனுபவ உபதேச  விளக்கவுரைகளை எடுத்துக்காட்டாக  கூறி  மக்களுக்கு நல்வழிக்காட்டினார்.. இவ்வுலகில்  அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக பல உயரிய  உபதேசங்களைக் கூறி வழிநடத்தினார்...  வாழ்க்கையின் மூல உயரிய  நோக்கத்தை ஒவ்வொரு மனித உயிரும்  உணர்ந்து,  தெளிந்து வாழ வேண்டும் என்பதற்காக வழிக்காட்டினார்....அதாவது  அனைத்து மனித உயிர்களும்  சித்தம் சீரடைந்து ஆத்மானுபூதி அடைய வேண்டும் என்று  உயரிய சத்திய உபதேசங்களை போதித்தார்..

முந்தைய ஜென்மங்களிலுள்ள நல்வினைகளால்  நாம் இவ்வுடம்பைப் பெற்றிருக்கிறோம்...பக்தியையும், விடுதலையையும் பெற, இந்த ஸ்தூல உடலே  தகுதியுடையதாகும்.எனவே எப்போதும் நாம் சுய விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும்  இருக்கவேண்டும்...நமது குறிக்கோளையும், நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய்,  நாம் நம்மை உற்று நோக்கிக் கொண்டே இருக்கவேண்டும்...நாம்  தினந்தோறும்  சாயீன்   நாமத்தை ஜெபித்தல்,  சத்திய உபதேச உரைகளைக் கேட்டல், சாய்சரித்திர பாராயணம் மேற்க்கொள்ளல், அற்புத அனுபவ உரைகள்,  லீலைகள் போன்றவற்றை  அகந்தையின்றிக் கேட்டு, பகவானை  எப்போதும்  நமக்குள் கண்டு சத்தியப் பாதையை நோக்கிச் செல்ல முன்வர வேண்டும்...நாம்  இவ்வாறாக அனைத்து உபதேச உரைகளையும்,  சாயீ லீலைகளையும், விழிப்புணர்வு தியானத்தையும் பின்பற்றினால் , நமது மனம்,சொல், செயல் ஆகியன ஒரே நேர்க்கோட்டில் இயங்கப் பெற்று  சித்தம் தெளிவடையும்.. இவ்விதமாகவே முழுமைத் தன்மையுடன் அனைத்தையும்  பின்பற்றினால்  அது முடிவாகச் சுத்த  ஞானத்தில் இரண்டறக் கலந்து பகவானின் மூல  சைதன்யத்தை அடைந்து விடுவோம்...

🔥பகவான், தன்னுடைய  ஆத்மார்த்தமான பக்தர்  நாந்தேடைச் சேர்ந்த   ரத்தன்ஜி வாடியாவின் நீண்ட நாள் குறையை தீர்த்து குழந்தைப் பாக்கியம்  வழங்கியதைப் பற்றிய  அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்....🔥

நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேடில், ஒரு பார்சி மில் காண்ட்ராக்டரும், வியாபாரியுமான ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் வசித்து வந்தார்...இவர் பெருமளவு செல்வம் சேகரித்து வயல்களையும், நிலங்களையும் பெற்றிருந்தார்...ஆடு, மாடு, குதிரை, போக்குவரத்து வசதிகள் இவ்வளவையும் பெற்று மிகவும் சகல விதமான  சுபிட்சத்துடன் வாழ்ந்தார். புறத்தோற்றங்கள் அனைத்திற்கும் மிகவும் திருப்தி வாய்ந்தவராகவும், சந்தோஷமுடையவராகவும் காணப்பட்டார்...ஆனால் அந்தரங்கமாகவும், உண்மையாகவும் அவர் அங்ஙனம் இருக்கவில்லை.  ஒவ்வொரு மனித உயிருக்கும் ஏதோ ஒரு குறையிருப்பது போல்,   ரத்தன்ஜிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை....

ரத்தன்ஜி  தாரரளமானவராகவும்,தான தர்மசீலராகவும், ஏழைகளுக்கு  உணவு, உடையளித்தும், சக உயிர்களுக்கு தன்னால் முடிந்தளவு  உதவிபுரிந்தார்.  மக்கள் அவரை நல்லவர், மகிழ்ச்சி நிரம்பியவர் என்று கருதினர்...ஆனால் நெடுநாளாகத் தனக்கு  குழந்தை  இல்லாததனால் தமக்குள்ளேயே அவர் மிக்க துயர் கொண்டவரானார்.  அன்பும் பக்தியுமின்றிப் பாடப்பெறும் இறைவன் புகழ் குறித்த கீர்த்தனை போன்றும், பக்க வாத்தியங்களற்ற இசையைப் போன்றும், பூணூல் அற்ற பிராமணனைப் போன்றும், பொது அறிவின்றிக் கலைகளில் பெற்ற சிறப்பறிவைப் போன்றும், பாவத்திற்காகக் கழிவிரக்கமின்றிச் செய்யும் தீர்த்த யாத்திரையைப் போன்றும், அட்டிகை அற்ற ஆபரண அணிமணிகள் போன்று அழகற்றதாகவும், பயனற்றதாகவும் இருப்பதைப் போன்றே ஆண் குழந்தையற்ற இல்லறத்தானுடைய நிலையும் என்பது குறிப்பிடத்தக்கது..

இவ்விஷயத்தைப் பற்றியே ரத்தன்ஜி சதா சிந்தித்து, எனக்கொரு புத்திரனைக் கடவுள் எப்போதாவது மகிழ்ந்தருளுவாரா..? என்று ஏங்கினார்...  இவ்வாறாக அவர் கலகலப்பின்றியும், முகவாட்டத்துடனும் எப்போதும்  காணப்பட்டார்....உணவில் அவருக்குச் சுவை  ஈடுபாடு  இல்லை.  தான் ஒரு புதல்வனுக்காக ஆசீர்வதிக்கப்படுவோமோ என்று அவர் அல்லும் பகலும் இதே கவலையால் பீடிக்கப்பட்டார்...தாஸ்கணு மகராஜி என்ற பகவான் பக்தரிடம்  ரத்தன்ஜிக்கு   மரியாதை அதிகம்...  அவரைக் கண்டு ரத்தன்ஜி, தன் உள்ளத்தின் ஆவலை  வெளியிட்டார்... தாஸ்கணுவும் அவரை சீரடிக்குப் போகும்படியும், பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர்தம் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்று குழந்தை வேண்டுமென வேண்டிக்கொள்ளவும் அவருக்கு அறிவுறுத்தினார் ரத்தன்ஜிக்கு இக்கருத்துப் பிடித்தது...சீரடிக்குப் போகவும் தீர்மானித்தார்...

சில நாட்களுக்குப் பின்னர் ரத்தன்ஜி  சீரடிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்...பிறகு தம் கூடையைத் திறந்து ஒரு அழகிய பூமாலையை எடுத்து, அதை பாபாவின் கழுத்திலிட்டுக் கூடைநிறையப் பழங்களையும் சமர்ப்பித்தார்... பிறகு  பாபாவின்  அருகில் மிக்க மரியாதையுடன் அவர் அமர்ந்து பின்வருமாறு வேண்டத் தொடங்கினார்... "இக்கட்டான நாட்களில் இருக்கும்போதே அநேகர் தங்களிடம் வருகிறார்கள்...தாங்கள் அவர்களின் துன்பங்களை உடனே துடைக்கிறீர்கள்... இதைக்கேட்டு நான் தங்களது பாதகமலத்தை அடைக்கலம் புகுந்தேன்.ஆகவே தயவுசெய்து என்னை ஏமாற்றாதீர்கள்"..என்று ரத்தன்ஜி வேண்டுதலை வைத்தார்....

பகவான்  ரத்தன்ஜி கொடுக்க இருந்த ரூ.5 கேட்டார்.  ஆனால் ரூ. 3.14  முன்னரே வாங்கிக்கொண்டதாகவும், மீதம் உள்ளதை மட்டும்  கொடுக்க வேண்டும் என்றார்...ரத்தன்ஜி பெரிதளவில் குழப்பமடைந்தார்...பாபா என்ன கூறினார் என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை...அவர் சீரடிக்குச் செல்வது இதுவே முதல்முறை...முன்னமே ரூ. 3.14 ஐ தாம் வாங்கிக்கொண்டதாக பாபா  கூறியது எங்ஙனம் என்று அவர் நினைத்தார்...அவரால் புதிரை விடுவிக்க இயலவில்லை. ஆனால் ரத்தன்ஜி  பாபாவின் பாதத்தடியில் அமர்ந்து, கேட்கப்பட்ட மீதமுள்ள தட்ஷிணையை அளித்தார்.

பாபாவிடம் தாம் வந்த காரணத்தை முழுமையும் விளக்கிக்கூறி, அவருடைய உதவியைக் கோரினார்.. தமக்கு ஒரு புத்திரனை பாபா ஆசீர்வதித்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். பாபாவும் மனதுருகி, ரத்தன் ஜியிடம் கவலைப்படாமல் இருக்கும்படியும், அதிலிருந்து அவரின் கஷ்டமான நாட்கள் முடிந்துவிட்டன என்றும் கூறினார்... பின்னர் அவருக்கு உதீயை அளித்து, அவரது தலையில் கையை வைத்து, அல்லா உமது  உள்ளத்தின் ஆசையைப் பூர்த்திசெய்வார் என்றும் கூறினார்...

பின்னர் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு நாந்தேடுக்குத் திரும்பி, சீரடியில் நடந்த எல்லாவற்றையும் தாஸ்கணுவுக்குக் கூறினார்...அங்கு எல்லாம் நன்றாகவே நிறைவேறியதாகவும், தாம் பாபாவின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும், பிரசாதத்துடன் பெற்றதாகவும், ஆனால் அவரால் ஒன்றை மட்டுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார்....பாபா அவரிடம் தாம் ஏற்கனவே  ரூ 3.14 ஐ வாங்கிக்கொண்டதாகக் கூறினார்.இக்குறிப்பினால் பாபா என்ன கூறுகிறார் என்பதைத் தயவுசெய்து விவரியுங்கள்...நான் சீரடிக்குச் சென்றதில்லை.. பிறகு பாபாவிடம் அத்தொகையை நான் எவ்விதம் கொடுத்திருக்க முடியும் என்று தாஸ்கணுவிடம் கூறினார்...தாஸ்கணுவுக்கும் அது ஒரு புதிராகத்தான் இருந்தது....  அதைப்பற்றிப் பெரிதும் அவர் நீண்ட நேரம் சிந்தித்தார்...சிறிது நேரத்திற்குப் பிறகு பின்வரும் நிகழ்ச்சி அவர் கவனத்திற்கு வந்தது...சில நாட்களுக்கு முன் ரத்தன்ஜி, மௌலா சாஹேப் என்ற ஒரு முகம்மதிய முனிவரை வரவேற்று, அவரின் வரவேற்பு உபசாரணைக்காக  சிறிது பணம் செலவழித்தார்.  

மௌலா சாஹேப், நாந்தேட் மக்களை நன்றாக அறிந்த ஒரு முனிவர்.  (சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர்)  ரத்தன்ஜி  சீரடிக்குப்  போகத் தீர்மானித்தபோது, இந்த மௌலா சாஹேப் தற்செயலாய் ரத்தன்ஜியின் வீட்டிற்கு வந்தார்...ரத்தன்ஜி அவரை அறிந்திருந்தார்.. அவரிடம் அன்பு செலுத்தி, சாஹேப்பை  கௌரவிக்கும் விதமாக ஒரு விருந்து கொடுத்தார்.  தாஸ்கணு, ரத்தன்ஜியிடமிருந்து விருந்து உபசாரத்துக்கான செலவுக் குறிப்புக்களை வாங்கிப் பார்த்தார்.  எல்லாம் சரி நுட்பமாக ரூ 3.14 ஆகியிருந்தது.  அதற்குக் கூடவோ, குறையவோ இல்லாதது கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் செயலிழந்தனர்...அவர்கள் பாபா எங்கும் நிறை பேரறிவுடையவர்  என்பதை அறியத் தலைப்பட்டார்கள்...சீரடியில் வாழ்ந்தாலும், சீரடியிலிருந்து நெடுந்தூரம் உள்ள வெளியிடங்களில் நடப்பதையும் பகவான்  அறிந்திருந்தார்.  

உண்மையில் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் தன்னுடைய  எங்கும் நிறைந்த பேரறிவால்  அறிந்திருந்தார்... அனைத்து ஆத்மாவினுள்ளும் தன்னைக் கண்டார்....  மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மூலம் பகவான் அனைவருக்குள்ளும் நீக்கமற நிறைந்ததன் சூட்சம மூல காரணத்திற்கு எடுத்துக்காட்டே, ரத்தன்ஜி மௌலா சாஹேபுக்குக் கொடுத்த வரவேற்பு பற்றியும், அதற்கு அவர் செலவழித்த தொகையைப் பற்றியும் பகவான் அறிந்திருப்பதைக் காட்டுகின்றது. ஏனெனில் மௌலா சாஹேப்புக்குள்ளும்  பகவான் இருந்தக் காரணத்தால் தான்  அனைத்தையும் அறிந்திருந்தார்....மேலும் ரத்தன்ஜி தாஸ்கணுவின் விளக்கத்தால் திருப்தியுற்றார்.  பாபாவிடம் அவருக்குள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுப் பல்கிப் பெருகியது.  பின்னர் உரிய காலத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை ஆசீர்வதிக்கப்பட்டது...அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை...அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் மொத்தத்தில் பிறந்தன என்றும் அதில் நான்கே உயிர் பிழைத்ததாகவும்  கூறப்படுகிறது...

இவ்வத்தியாயத்தின் அடிக்குறிப்பில் பாபா, ராவ்பகதூர் ஹரி விநாயக் சாதே என்பவரை, அவர் முதல் மனைவி இறந்த பின்னர் மீண்டும் மணம் செய்துகொள்ளுமாறும், அவருக்கு மகன் பிறப்பான் என்றும் கூறினார்.... சாதே இரண்டாவது மணம் புரிந்துகொண்டார்.  இம்மனைவி மூலம் அவருக்குப் பெண் குழந்தைகளே பிறந்தன.  எனவே அவர் மிகவும் மனத்தளர்வடைந்தார்.  ஆனால் மூன்றாவது ஆண் குழந்தையாகப் பிறந்தது.  பாபாவின் சொற்கள் உண்மையாயின.  அவரும் திருப்தியுற்றார்.

🔥பகவான் தன்னை நாடி வந்த பக்தர்களிடம் ஏன்  தக்ஷிணையைப்  பெற்றார்.. அவ்வாறு தக்ஷிணைப் பெற்றதன் மூல சூட்சம விளக்கங்களும், தக்ஷிணை அளித்தவர்களின்  அனுபவ விளக்கவுரைகளும் இங்கே. ...🔥

தக்ஷிணையைப் பற்றிய சில குறிப்புக்களுடன் இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்....பாபாவைப் பார்க்கச் சென்றவர்களிடத்தில் பகவான்   தக்ஷிணைப் பெற்றது  என்பது எல்லோரும் அறிந்த உண்மை..சிலர் பாபா ஒரு பக்கிரியாகவும், அறவே பற்றன்றியும் இருந்தக் காரணத்தினால் , அவர் ஏன் தக்ஷிணை கேட்கவேண்டும்...? ஏன் பணத்தைப்பற்றி இலட்சியம் செய்யவேண்டும்...? என்ற பலருடைய மனதில் தோன்றலாம்.... இவைகளை இப்போது விளக்கமாகக் கவனிப்போம்....  

ஆரம்பத்தில் நெடுநாட்களுக்கு பாபா எதையுமே கேட்கவில்லை.  அவர் எரிக்கப்பட்ட தீக்குச்சிகளைச் சேமித்து தம் பைகளில் வைத்துக்கொண்டார்....  எவரிடமிருந்தும், அவர் அடியவராக இருப்பினும் பாபா எதையும் ஒருபோதும் கேட்கவில்லை... யாராவது ஒரு பைசாவோ, இரண்டு பைசாவோ அவர் முன்னால் வைத்தால், அவர் எண்ணெயோ அல்லது புகையிலையோ வாங்கினார்... அவர் புகையிலையின் மீது விருப்பமுடையவராக இருந்தார்....ஏனெனில் அவர் எப்போதும்  சில்லிம் (புகைபிடிக்கும் ஒரு மண்குழாய்) குடித்தார்.

பின்னர் சில பக்தர்கள் ஞானிகளை  வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என நினைத்தனர்.  எனவே அவர்கள் பாபாவின் முன்னால் சில செப்புக் காசுகளை வைத்தனர்....  ஒரு பைசா கொடுக்கப்பட்டால் அதை அவர் பைக்குள் போட்டுக்கொள்வார்.  இரண்டு பைசா நாணயமாக இருப்பின் அது உடனே திருப்பிக் கொடுக்கப்படும்... பாபாவின் புகழ் திக்கெங்கும் பரவிய பின்னர், மக்கள் அவரிடம் பெருந்திரளாக வரத் தொடங்கினர்...  அவர்களிடம் பாபா தக்ஷிணை கேட்கத் தொடங்கினார்.  ஒரு தங்கக் காசு வைக்கப்பட்டாலன்றி கடவுளின் பூஜை பூர்த்தியாவதில்லை என்று ஸ்ருதி (வேதங்கள்) அறிவுருத்துகின்றது..

கடவுள்களின் பூஜைக்கு தக்ஷிணை  தேவைப்பட்டிருந்தால், ஞானிகளின் பூஜைக்குக் கூட ஏன் அது அங்ஙனம் இருக்கக்கூடாது..?  ஒருவன் கடவுள், அரசன், ஞானி, குரு இவர்களைப் பார்க்கும்போது வெறும் கையுடன் போகலாகாது என்று விதிக்கப்பட்டது...அவ்வாறு ஞானி மற்றும் மகானை தரிசிக்க விரும்புகின்றவர்கள் பழங்கள், பூ, தக்ஷிணை என்று முடிந்தளவு  எதையாவது அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்...இது சம்பந்தமாக உபநிஷதங்கள் சிபாரிசு செய்த கருத்தை நாம் கவனிக்கலாம்...

பிருதாரண்ய உபநிஷதம் பிரஜாபதிக் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், பிசாசுகள் இவைகளை 'த' என்ற ஒரே எழுத்தால் அறிவுருத்துகின்றது.. இச்சொல்லால், தேவர்கள * த*  வை  தமா என்ற தன்னடக்கத்துடன்  பழகவேண்டுமென்று புரிந்துக் கொண்டனர்.. மனிதர்கள் *த * வை  தானம் அல்லது தர்மம் செய்ய வேண்டுமென்று புரிந்துக்கொண்டனர்... பேய்கள் * த*  வை தயை அல்லது பரிவு செய்யவேண்டுமென்று புரிந்துக்கொண்டனர்.. எனவே மனிதர்கள் தர்மம் அல்லது ஈகை செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகின்றது.... தைத்ரீய உபநிஷத்தின் குரு தனது மாணவர்களை தர்மத்தையும், மற்ற நல்ல பண்புகளையும் பயிலும்படி ஊக்குவித்து உபதேசிக்கிறார்...தர்மத்தைப்பற்றி அவர், நம்பிக்கையுடன் தானம்  வழங்குங்கள்..ஆனால்  தானத்தை வழங்கும் போது  பெருந்தன்மையுடனும்,  தாராளமாகவும், பணிவுடனும், பயபக்தியுடனும், இரக்கத்துடனும் பிற உயிர்களுக்கு  கொடுங்கள் என்று அறிவுறுத்துகின்றது..  

தான தர்மத்தை அடியவர்களுக்குப் போதிப்பதற்கும், ஐஸ்வர்யத்தில் உள்ள  பெரும் பற்றுக்கள் குறைவதற்கும், அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும், பகவான் தன்னை நாடி வந்தவர்களிடம்  தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். ஆனால் அதில் இவ்விசித்திரம் இருந்தது. அதாவது  பகவான் , தாம் வாங்கியதைப் போன்று நூறு மடங்குக்கு  அதிகமாக  திரும்பக் கொடுத்தார்... இவ்வாறாகப் பல இடங்களில் நிகழ்ந்தது... உதாரணத்திற்கு , பிரசித்திபெற்ற நடிகரான கணபதிராவ் போடஸ் தனது மாராத்திய சுயசரிதையில், பாபா தம்மைத் திரும்ப திரும்ப தக்ஷிணை கேட்டதாகவும், தனது பணப்பையையே அவர் முன்னர் காலியாக்கியதாகவும், இதன் விளைவாகப் பிற்கால வாழ்வில் தமக்கு ஏராளமாக ஐஸ்வர்யம்  வந்ததால் பணத் தேவையே இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.  

பல சந்தர்ப்பங்களில் தக்ஷிணைக்கு பதிலாக  மற்ற உயரியத் தன்மைகளைக்  கேட்ட  மறைபொருளும் உண்டு. இரண்டு நிகழ்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.  

பேராசிரியர் G.G.நார்கேயிடமிருந்து பாபா தட்ஷிணையாக ரூ. 15  கேட்டார்...நார்கே தன்னிடம் ஒரு  பைசாகூட இல்லையென்று பதிலளித்தார்...அதற்குப் பாபா கூறியதாவது, "உன்னிடம் பணம் இல்லையென்பதை நான் அறிவேன்...யோக வசிஷ்டத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள்...அதிலிருந்து எனக்கு தக்ஷிணை கொடுங்கள்"...தக்ஷிணை அழிப்பது என்பதற்கு இதற்கு  பொருள்...அதாவது நூலிலிருந்து நீதிகளை உய்த்துணர்ந்து அவைகளை பாபா வாசம் செய்கிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்திக் கொள்ளுதல் என்பதாகும்.. 

இரண்டாவது சந்தர்ப்பத்தின்போது, திருமதி தர்கட் என்ற அம்மையாரிடம் ரூ.6 தக்ஷிணையாகக் கொடுக்கும்படி பாபா கேட்டார்...ஏதும் அவள் பகவானுக்கு  கொடுக்க இயலவில்லை என்று மன வருத்தம் அடைந்தாள்...பின்னர்,  பாபா கூறுகின்றார் ... ஆறு என்பது மனித உயிரின்  உட்பகைவர்களையே  (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம்) தம்மிடத்தில்  சமர்ப்பிக்கும்படி கேட்டார் என்று அம்மையாருக்கு விளக்கினார்...   

தக்ஷிணையின் மூலம் பாபா ஏராளமாகப் பணம் சேகரித்தார் என்பதும், அவ்வளவு பணத்தையும் அதே நாளில் பகிர்ந்தளித்து விடுவார் என்பதும், அடுத்த நாள் காலை வழக்கம்போல் பகவான்  ஒரு ஏழைப் பக்கிரியாகிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏறக்குறையப் பத்து வருடங்களாக ஆயிரம் ஆயிரம் ரூபாய்களைத் தக்ஷிணையாகப் பெற்றுவந்த பாபா, பின்னர் மகாசமாதி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது... சீரடி பாபா தன் பக்தர்களிடம் ஏன் தக்ஷிணைப் பெற்றார் என்றால், நாம் அனைவரும் அனைத்திலும் பற்றில்லாமல் சாட்சியாக வாழ வேண்டும் என்று வலியுருத்தவும்,  சக உயர்களுக்கு உதவிகள் செய்து, தூய்மையான உயரிய நிலையை அடையவும், நம்முடைய கர்ம வினைகளைத்  தக்ஷிணையாகப் பெற்று உயரிய நிலையை அடையச்செய்தார்  என்பது குறிப்பிடத்தக்கது...

🙏பின்னுரை..🙏

B.V.தேவ் என்பவர் ஓய்வுபெற்ற மம்லதாரும், பாபாவின் பெரும் அடியவர்களுள் ஒருவரும் ஆவார்...அவர் சாயீலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7, எண். 25, பக்கம் 26) தக்ஷிணையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்... 

"பாபா எல்லோரிடமிருந்தும் தக்ஷிணை கேட்கவில்லை. கேட்காமலேயே சிலர் தக்ஷிணை அளித்தால் அவர் அதைச் சில சமயங்களில் ஏற்றுக்கொண்டார்..மற்ற நேரங்களில் மறுத்துவிட்டார்...சில குறிப்பிட்ட அடியவர்களிடமே தக்ஷிணைக்   கேட்டார்... பாபா தங்களிடம் எதற்காகக் கேட்கவேண்டும்..ஏன்  கொடுக்கவேண்டும் என்று நினைத்தவர்களிடம் அவர் கேட்டதேயில்லை.  பாபாவின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் அதைச் சமர்ப்பித்தால், அவர் தொடுவதில்லை...அந்த அடியவர் அஃதை அங்கேயே வைத்திருந்தாள், அதை அப்பால் எடுத்துக் கொள்ளும்படி பாபா கூறுவார்...பக்தர்களின் விருப்பம், பக்தி, சௌகர்யம் இவைகளுக்கேற்றவாறு அவர் சிறிய, பெரிய தொகைகளைக் கேட்டார்.  எல்லாச் செல்வந்தர்களையும் கேட்கவில்லை...அன்றி எல்லா ஏழைகளிடமும் கேட்கவுமில்லை...

தக்ஷிணை கேட்டு கொடுக்காதவர்களிடம் பாபா கோபம் அடைந்ததே இல்லை..யாரேனும் நண்பன் மூலம் தக்ஷிணை அனுப்பப்பட்டு, அவன் அதை பாபாவிடம் கொடுக்க மறந்துவிட்டானாயின், பகவான்  அவனுக்கு அதை எப்படியோ ஞாபகமூட்டி தனக்கு  கொடுக்கும்படி செய்தார்...சில சந்தர்ப்பங்களில் தக்ஷிணையாகக் கொடுத்தப் பணத்தில் கொஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதைப் பாதுகாக்கும்படியோ  அல்லது வழிபாட்டிற்காக அவர்களின்  இல்லத்து  பூஜை அறையில் வைக்கும்படியோ கேட்டுகொள்வார்....

இம்முறையானது பணம் அளித்தவருக்கோ அல்லது அந்த பக்தருக்கோ எல்லையற்ற அளவு நன்மையளித்தது... தான் கொடுக்க நினைத்திருந்ததை  விட அதிகமாக யாரேனும் கொடுத்தால், அவர் அதிகப்படியான மீதமுள்ள தொகையைத் திரும்ப அளித்துவிடுவார்...  சிலரிடம் தாங்கள் முதலில் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாகவும், அப்படி அவர்களிடம் பணம் இல்லையானால் மற்றவர்களிடம் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ அளிக்கக் கூறினார்..சிலரிடம் அவர் ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தக்ஷிணை கேட்டார்.  

தக்ஷிணையாகச் சேர்ந்த பணத்திலிருந்து அவர் தமக்காக மிகவும் கொஞ்சமே செலவழித்தார்.  அதாவது சில்லிம் என்ற புகைக் குழாய் வாங்குவதற்கும், துனி என்ற புனித அடுப்புக்கு எரிபொருள் வாங்குவதற்கும் செலவழித்து மிச்சமனைத்தையும் பல்வேறு மனிதர்களுக்கு வேறுபடும் விகிதங்களில் தர்மமாகப் பகிர்ந்து அளித்தார்.. சீரடி சமஸ்தானத்தின் சிறுசிறு பொருட்களெல்லாம் அப்போது இருந்த பணக்கார அடியவர்களால் ராதாகிருஷ்ணமாயீன் வேண்டுகோள், யோசனையின் பேரில் வாங்கி அளிக்கப்பட்டவை...விலைமதிப்புள்ள, செல்வமிகு பொருட்களை யாரேனும் கொணர்ந்தால் பாபா சீற்றமடைந்து அவர்களைக் கடிந்துக்கொள்வார்...  நானா சாஹேப் சாந்தோர்கரிடம் தமது உடைமைகள் ஒரு கௌபீனம், ஒரு துண்டு, ஒரு கஃப்னி, ஒரு தகரக்குவளை என்றும் அவரைப் பலர் தேவையற்ற, பயனற்ற விலையுயர்ந்த பொருட்களெல்லாம் கொண்டுவந்து தொல்லைப்படுத்துவதாகவும் கூறினார்.

நமது பரமார்த்திக வாழ்வில் இருக்கும் இரு பெரிய தடங்கல்கள் பெண்ணும், செல்வமும். பாபா சீரடியில் இரண்டு நிலையான அமைப்பு முறைகளைஏற்படுத்தினார் அதாவது தக்ஷணையும், ராதாகிருஷ்ணமாயீயும் ஆகும்...எனவே பக்தர்கள் அவரிடம் வந்த போதெல்லாம் அவர்களிடம் தக்ஷணை கேட்டார்...பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னார்....பள்ளிக்கூடமென்பது  ராதா கிருஷ்ணமாயீயின் வீடு  என்பதாகும்..அவர்கள் இவ்விரண்டு சோதனைகளில் நன்றாகத் தேறினார்களேயானால், அதாவது செல்வத்துக்கும், பெண்ணுக்குமுள்ள பற்றுக்களிலிருந்து விடுபட்டவர்கள் என்று தெளிவுப்படுத்துவார்களேயானால் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் துரிதமானது..பாபாவின் அருளாலும், ஆசிகளாலும் உறுதியளிக்கப்பட்டது...

தேவ், கீதை உபநிஷதங்களிளிருந்து புண்ணிய க்ஷேத்திரத்தில் புண்ணிய ஆத்மாவுக்குக் கொடுக்கப்பட்ட தர்மமானது கொடுத்தவருக்கு அதிக பலன் அளிக்கிறது என்பதை ஸ்லோகங்கள் மூலம் எடுத்துக் காண்பித்து இருக்கிறார்.  சீரடியில் அதில் உறையும் தெய்வவுமான சாயீபாபாவையும் தவிர புனிதமானது என்ன இருக்க முடியும்...?

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🙏🙏🙏🏼🙏🏼


https://youtube.com/playlist?list=PL2wMPZhligflE6VZJndcQUXqkIxidNcmW


https://eprofile.brandspot365.com/business409542


https://www.facebook.com/groups/1257804604570307/permalink/1435376020146497/



செவ்வாய், மே 25, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் பதிமூன்று..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏🏼 அத்தியாயம்:: பதிமூன்று (13)🙏🏼

 🔥முதலில் புனித வேத நூலான சாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில்  சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து  சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்..

இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே  சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்....நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏🏻🙏🏻

🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப்  பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும்  இந்த சத்சரித வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது..

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்.... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥

🙏🏼அத்தியாயம்::..பதிமூன்று(13)🙏🏼

🙏🏻முன்னுரை..🙏🏻

மாயையின் அளப்பறியச் சக்தியைப் பற்றி விளக்கமும், தன்னை ( சீரடி பகவான்) மாயை எவ்வாறு ஆட்கொண்டு வழி  நடத்துகின்றது  என்பதைப்  பற்றி  பகவானின் சூட்சம உரை....

பகவானின் ஆத்மார்த்தமான பக்தர்களாகிய 

1.  பீமாஜி பாடீல் 

2.  பாலா ஷிம்பி

3.  பாபு சாஹேப் பூட்டி 

4.  ஆலந்தி ஸ்வாமி

5.  காகா மஹாஜனி

6. ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்... ஆகியோர்களைப் பற்றிய  குறிப்புரையும், பகவான் மேற்க்கண்ட பக்தர்களின்  தீர்க்க முடியாத நோய்களை எவ்வாறு குணப்படுத்தி உயரிய நிலையை அடையச் செய்தார் என்பதன் விளக்கவுரை....

மேற்க்கண்ட தலைப்புகளின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கே காண்போம்...

🔥முதலில் மாயையின் அளப்பறியச் சக்தியைப் பற்றி பகவானின் விளக்கமும், தன்னை( சீரடி பகவான்)  மாயை  எவ்வாறு  ஆட்கொண்டு வழி  நடத்துகின்றது என்பதைப்  பற்றி  பகவானின் சூட்சம உரையைப் பற்றி இங்கே காண்போம்..🔥

 பாபாவின் சாய்சரித்திர அருளுரைகளும், உபதேச மொழிகளும் ,மறை ஞான விளக்கவுரைகளும் எப்போதும் சுருக்கமானவை, மிருதுவானவை,  ஆழமானவை,பொருள் செறிந்தவை, சத்தியத்தன்மையை எடுத்துக்காட்டுபவை... பகவான்  எப்போதும் அனைத்திலும்  திருப்தியடைந்தவராய் பற்றில்லாமல்  இருந்தார்.எதற்கும் கவலைப்படவில்லை...பகவான்  கூறுகின்றார்.. "நான் ஒரு பக்கிரியானபோதும், எனக்கு வீடோ, வாசலோ இல்லாதிருப்பினும் எல்லாக் கவலைகளையும் விட்டொழித்து நான் ஒரே இடத்தில் வசித்தாலும் தடுக்கமுடியாத விஷ்ணு மாயை என்னை அடிக்கடி துரத்துகிறாள்... என்னை மறந்தாலும், அவளை மறக்கமுயயவில்லை... அவள் என்னை எப்போதும் சூழ்ந்துகொள்கிறாள்.  பரமாத்மா ஸ்ரீ ஹரியினுடைய  தோற்ற சக்தி பிரம்மா, மற்றவர்களையும் துரத்துகிறது.. பின் என்னைப்போன்ற ஏழைப் பக்கிரியைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது..? பரமாத்மாவிடம் சரண் புகுந்தோர், அவரது அருளால் அவளது பந்தங்களினின்றும் விடுவிக்கப்படுவார்கள் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு கூறுகின்றார்....உயரிய பேராற்றலாக அனைத்தும் தன் வசம் இருந்தாலும் பகவான் தன்னை எளிமையின் பிறப்பிடமாக  திகழ்கின்றார்....

மாயையின் சக்தியைப் பற்றி இம்மொழிகளால் பாபா கூறியிருக்கின்றார்... கிருஷ்ண பரமாத்மா ஞானிகள் தமது உயிருள்ள ரூபங்கள் என்ற பாகவதத்தில் உத்தவருக்கு உபதேசித்திருக்கிறார்..பாபா தமது அடியவர்களின் நலனுக்காக  என்ன  கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.. "யார் அதிஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள்.. 'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக் கொண்டு இருந்தால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன்... இம்மொழிகளை நம்புங்கள்... நீங்கள் நிச்சயம் நன்மை அடைவீர்கள்... வழிபாட்டின் கூறுகள் எட்டோ, பதினாறோ எனக்குத் தேவையில்லை... எங்கு முழுமையான பக்தி இருக்கின்றதோ அங்கு நான் அமர்கிறேன்"... 

🔥ஆத்மார்த்தமாக சரணாகதி அடைந்த பக்தர்களாகிய ...

1.  பீமாஜி பாடீல் 

2.  பாலா ஷிம்பி

3.  பாபு சாஹேப் பூட்டி 

4.  ஆலந்தி ஸ்வாமி

5.  காகா மஹாஜனி

6.  ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்... ஆகியோர்களைப் பற்றிய  குறிப்புரையும், பகவான் மேற்க்கண்ட பக்தர்களின் தீர்க்க முடியாத நோய்களை எவ்வாறு குணப்படுத்தி உயரிய நிலையை அடையச் செய்தார் என்பதன் விளக்கவுரையைக் காண்போம்...🔥

🔥முதலில் பீமாஜி பாடீல் பற்றிய  அனுபவ விளக்கம் இங்கே...🔥

புனே ஜில்லா, ஜுன்னர் தாலுக்கா நாரயண்காவனைச் சேர்ந்த பீமாஜி பாடீல் என்பவர் பல வியாதிகளாலும், நெடுநாள் நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார்.  முடிவில்  அது கொடிய நோயாக  மாறியது...அவர் எல்லாவித சிகிச்சைகளையும் முயன்று ஒரு பிரயோசனமுமில்லை...அனைவரின்  நம்பிக்கைகளையும் இழந்து, முடிவாகக் கடவுளை நோக்கி அவர் வேண்டிக்கொண்டார். "ஓ..! நாராயண மூர்த்தியே, இப்போது என்னைக் குணப்படுத்தும்".சூழ்நிலைகள் எல்லாம் நன்றாய் இருக்கையில் நாம் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை. ..கேடும், துரதிஷ்டமும் நம்மைத் தாக்கும்போது நாம் அவரை நினைக்கிறோம்...எனவே பீமாஜி இப்போது கடவுளை நோக்கித் திரும்பினார்.  இவ்விஷயத்தில் பாபாவின் பெரும் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்க்கரைக் கலந்தாலோசிக்க அவருக்குத் தோன்றியது. தனது துன்பங்கள்  அனைத்தையும் கூறி, அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய கருத்தைத் தெரிவிக்கக் கேட்டிருந்தார் பீமாஜி...

நானா பதிலுரை எழுதுகின்றார்.....பீமாஜி உனது நோய் தீர ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது.. அதாவது பாபாவின் பாதங்களினின்று உதவி பெறுவதேயாகும் என்று கூறுகின்றார்...சீரடிக்கு பீமாஜி  அழைத்து வரப்பட்டு பாபாவின் முன்னர் அமர்த்தப்பட்டார்...  நானா சாஹேப்பும், ஷாமாவும் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) அங்கு இருந்தனர்...முன்னைய தீய கர்மங்களாலேயே இவ்வியாதி என்று பகவான் சுட்டிக்காண்பித்து முதலில் இதில் தலையிடத் தீர்மானம் இல்லாதவராய் இருந்தார்...  நோயாளியோ தாம் அனாதரவானவர் என்றும், உங்களையே  சரணாகதி அடைந்து இருப்பதாகவும், நீங்கள் தான்  கடைசி கதியென்றும், கருணை காட்டும்படியும் கூறி அலறத் தொடங்கினார்.... அப்போது பாபாவின் உள்ளம் உருகியது... அவர் கூறியதாவது,  "பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர ஏறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.  ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு, வேதனைப்பட்டவனாக இருப்பினும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்.. இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர்...அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார்.  எல்லோரையும் அன்புடனும், ஆசையுடனும் பாதுகாப்பார்"... ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நோயாளி இரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.  ஆனால் பாபாவின் சந்நிதானத்தில் எவ்வித வாந்தியும் இல்லை.. நம்பிக்கையும், கருணையும் கொண்ட மொழிகளை பாபா உதித்த அதே தருணத்திலிருந்தே வியாதி குணமடையும் நிலைக்குத் திரும்பியது...அசௌகரியமும், சுகாதாரக் குறைவுமுள்ள  பீம்பாயின் வீட்டில் தங்கும்படி பாபாவால் அறிவுருத்தப்பட்டார்...  ஆனால் பாபாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவேண்டும்...அவர் அங்கு தங்கியிருக்கையில் பாபா அவரை இரண்டு முறை  கனவுகள் மூலம் குணப்படுத்தினார்.

முதல் கனவில் தன்னை ஒரு பையனாகவும், மராட்டிச் செய்யுள் ஒப்பிக்காததற்காக உபாத்தியாயரின் கடுமையான பிரம்படியை வாங்கிக் கஷ்டப்படுவதைப் போன்றும் கண்டார்...  இரண்டாவது கனவில் ஒரு கல்லை யாரோ ஒருவர் தனது நெஞ்சின்மீது மேலும் கீழும் உருட்டிக் கடுமையான வலியையும், வேதனையையும் உண்டாக்குவதாகக் கண்டார்.  கனவில் அவர்பட்ட இக்கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்து அவர் வீடு திருப்பினார். பின்னர் அடிக்கடி சீரடி வந்து பாபா தனக்குச் செய்ததை நன்றியுடன் நினைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் பீமாஜி.. மகாராஷ்டிர மக்கள் பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை தங்களது இல்லங்களில் சத்யநாராயண பூஜையை எப்போதும் செய்கிறார்கள்.  ஆனால் தனது கிராமத்திற்கு திரும்பியபோது பீமாஜி பாடீல் புதிய சத்யசாயீ விரத பூஜையை, சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக தனது இல்லத்தில் ஆரம்பித்தார்....

🔥பாலா கண்பத் ஷிம்பி என்ற பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே ....🔥 

பாபாவின் மற்றொரு பக்தரான பாலா கண்பத் ஷிம்பி என்பவர், கொடியவிஷத்தைச் சேர்ந்த மலேரியாவினால் மிகவும் கஷ்டப்பட்டார்.  எல்லாவித மருந்துகளையும், கஷாயங்களையும் உபயோகித்தார், பலனேதுமில்லை. காய்ச்சல்  சிறிதளவும் குறைந்தபாடில்லை.. அவர் சீரடிக்கு ஓடி பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  பாபா இவ்விஷயத்தில் ஒரு நூதனமான செயல்முறையை அனுசரிக்கச் செய்தார்.  கொஞ்சம் சாதத்தைத் தயிருடன் கலந்து, லக்ஷ்மி கோவிலுக்கு முன்னால் உள்ள கருப்பு நாய்க்கு உணவு  கொடுக்கும்படி கூறினார்... பாலாவுக்கு இதை எங்ஙனம் நிறைவேற்றுவதென்று புதிராக இருந்தது.  ஆனால் அவர் வீட்டிற்குப் போனவுடனேயே, தயிரையும் சாதத்தையும் கண்டார்.  அவை இரண்டையும் கலந்து லக்ஷ்மி கோவிலுக்கு அருகில் கொணர்ந்தார்.  அப்போது ஒரு கருப்பு நாய் வாலையாட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டார்.  நாயின் முன்னர் தயிருடன் கலந்த சாதத்தை வைத்தார்.  நாயும் அதை உட்கொண்டது.  ஆச்சர்யமாகவே, பாலா கண்பத் ஷிம்பி மலேரியாவிலிருந்து விடுபட்டார்.....

🔥பாபு சாஹேப் பூட்டி  என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ  விளக்கம் இங்கே...🔥

பாபு சாஹேப்  பூட்டி, ஒருமுறை வாந்தியெடுத்தல், வயிற்றுப்போக்கு முதலியவற்றால் அவதியுற்றார்.  அவருடைய அலமாரி மருந்து, மாத்திரைகளால் நிறைந்து இருந்தது.  ஆயினும் அவற்றால் ஒரு பயனும் இல்லை...வாந்தியெடுத்து வயிற்றுப்போக்கு ஆனதன் காரணமாக பாபு சாஹேப் மிகவும் தளர்ச்சி அடைந்தார்.  எனவே பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்லக்கூட அவரால் இயலவில்லை...பாபா அப்போது அவரைக் கூட்டனுப்பி, அவரைத் தன்முன் உட்காரச் செய்து, "இப்போது கவனி, இனிமேல் நீ வெளியேறக்கூடாது" என்று கூறி, தமது ஆட்காட்டி விரலை ஆட்டி, மேலும் "வாந்தியெடுத்தலும் நிற்கவேண்டும்" எனக் கூறினார்.  இப்போது பாபாவின் சொற்களில் உள்ள சக்தியைக் கவனியுங்கள்... இரண்டு வியாதிகளும் ஓடிவிட்டன.... பூட்டியும் குணமானார்....  

மற்றோர்முறை காலராவால் அவர் தாக்கப்பட்டு கடினமான தாகத்தால் அல்லலுற்றார். டாக்டர் பிள்ளை எல்லாவித சிகிச்சைமுறைகளைக் கையாண்டும் குணமளிக்க முடியவில்லை... பின்னர் அவர் பாபாவிடம் சென்று தனது தாகத்தைத் தணித்துத் தன்னைக் குணமாக்கும் ஒரு பானத்தைப் பற்றிக் கலந்தாலோசித்தார்.. பாபா அவருக்கு, சர்க்கரை கலந்த பாலில் வேகவைக்கப்பட்ட கலவைக்கூழாகிய பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு, பிஸ்தா பருப்பு  இவற்றைச் சாப்பிடுவதைத் தேர்ந்து அருளினார்...எந்த வைத்தியராலும் இது நிலைமையை மோசப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று கருதப்படும்.  ஆனால் பாபாவின் கட்டளைக்கு  கீழ்ப்படியும் குணத்தால் இவை உட்கொள்ளப்பட்டு அதிசயப்படும் வகையில் குணமாக்கப்பட்டது...

🔥ஆலந்தி சுவாமி  என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே...🔥

பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய ஒரு சாமியார் ஆலந்தியிலிருந்து சீரடிக்கு வந்தார்...தன் காதிலுள்ள கடுமையான வலியால் அவர் அல்லலுற்றார்...அது அவரைத் தூங்க விடாமல் தடை செய்தது.  இதற்க்காக அவர் ரணசிகிச்சை செய்யப்பட்டார்..ஆனால் அது அவருக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை..இவ்வலி மிகவும் கடினமானதாய் இருந்தது...அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...அவர் திரும்பிச் செல்லும்போது பாபாவின் அனுமதியைப் பெற வந்தார்...அப்போது ஷாமா, ஸ்வாமிகளின் காது வலிக்கு ஏதாவது  வழங்குமாறு பாபாவை வேண்டினார்.. "அல்லா அச்சா கரேகா!" எனக் கூறித் தேற்றினார்...பிறகு சுவாமிகள் புனேவுக்குத் திரும்பினார்... ஒருவாரம் கழித்து சீரடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்..அதில் தனது காதுவலி மறைந்துவிட்டது என்றும், வீக்கம் இருந்தது என்றும், அவ்வீக்கத்தைப் போக்குவதற்காக பம்பாய்க்கு, ரணசிகிச்சை செய்துகொள்ளச் சென்று இருந்ததாகவும், ஆனால் மருத்துவர்கள்  காதைச் சோதித்துவிட்டு ரணசிகிச்சை தேவையில்லை எனக்கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்....பாபாவின் மொழிகளுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தது இந்த நிகழ்வின் மூலம் மேலும் உறுதியாகின்றது..

🔥காகா மஹாஜனி  என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே..🔥

பாபாவின் மற்றொரு அடியவரான காகா மஹாஜனி என்பவர் ஒருமுறை வயிற்றுப் போக்கால் அவதியுற்றார்..பாபாவுக்குத் தனது சேவை தடைப்படாமல் இருக்க, ஒரு மூலையில் பானையில் தண்ணீரை வைத்துவிட்டு, பாபா கூபிடும் போதேல்லாம் செல்வார்.  சாயீபகவான்  அனைத்தையும் அறிந்தவராயிருப்பதால், தனது வியாதியையும் அவர் சீக்கிரம் குணப்படுத்துவார்  என்று எண்ணிய காகா அதைப்பற்றி எதையுமே பாபாவிடம் தெரிவிக்கவில்லை... மசூதிக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கும் தாழ்வாரத்தின் வேலை, பாபாவால் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.  ஆனால் உண்மையில் வேலை தொடங்கியவுடன் பாபா கொந்தளிப்புற்று பலமாகக் கூச்சலிடத் தொடங்கினார்...  எல்லோரும் ஓடினார்கள்.  காகாவும் ஓடினார்.  பாபா அவரைப் பிடித்து அங்கேயே உட்கார வைத்தார்.... 

பின்னர் நேரிட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய நிலக்கடலைப் பையை விட்டு ஒடியிருந்தார்...பாபா கைநிறையக் கடலைப் பருப்புக்களை எடுத்து தமது கைகளால் அவற்றைத் தேய்த்து, தோலை ஊதி சுத்தமான கடலைப் பருப்புக்களை காகாவிடம் கொடுத்துச் சாப்பிடக் கூறினார்..  திட்டுவது, கடலையைச் சுத்தம் செய்வது, காகாவைச் சாப்பிடக் கூறியது  அனைத்தும்  சமகாலத்தில் நடைபெற்றன.... பாபா தாமே சிலவற்றைச் சாப்பிட்டார்...பையில் உள்ளவை தீர்ந்ததும், பாபா அவரைத் தாம் தாகமாய் இருப்பதால் தண்ணீர் கொணரக் கூறினார்.  பின்னர் பாபா சிறிது தண்ணீர் அருந்திவிட்டு, காகாவைத் தண்ணீர் குடிக்கும்படி  கூறினார்.  பாபா அப்போது, "உனது வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது.  நீ இனிமேல் தாழ்வாரத்தின் வேலையைக் கவனிக்கலாம்" என்று கூறினார்...

இதற்கு இடையில் ஓடிப்போனவர்கள் எல்லாம் திரும்பிவந்தனர்.. தனது வயிற்றுப்போக்கு நின்றுபோன காகாவும் திரும்பி வந்து வேலையில் கலந்துகொண்டார்.  நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து,..?  நிகழ்கால மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரிக்கும்.  அதைக் குணப்படுத்தாது...பாபாவின் மொழிகளே இவ்விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் உள்ள உண்மையான சிகிச்சையாகும் என்பதனை உணர்வதற்கான அனுபவ  விளக்கம் என்று கருத வேண்டும்...

🔥ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த் என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே....🔥

ஹர்தாவிலிருந்து வந்த தத்தோபந்த் என்னும் பெருந்தகை பதினான்கு ஆண்டுகளாக வயிற்றுவலியால் அல்லலுற்றார்....எவ்விதச் சிகிச்சையும் அவருக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.... பின்னர், பாபா பார்வையாலேயே வியாதியைக் குணப்படுத்துகிறார் என்ற அவரின் புகழைக் கேள்விப்பட்டு சீரடிக்கு ஓடிவந்து பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்... பாபா அவரை அன்புடன் நோக்கி ஆசீர்வாதங்கள் அளித்தார்....  பாபா தமது கரத்தை அவரது தலையின்மீது வைத்து ஆசீர்வாதத்தையும், உதியையும் அளித்தபின் அவர் குணமடைந்தார்.  அதற்கப்பால் இவ்வியாதியைப் பற்றி எவ்விதத் தொந்தரவும் இல்லை.....இந்த அத்தியாயத்தின் முடிவில் மூன்று நிகழ்ச்சிகள் அடிக்குறிப்பில் காணப்படுகின்றன....

(1) மாதவ்ராவ் தேஷ்பாண்டே மூல வியாதியால் அல்லலுற்றார். பாபா அவருக்கு சோனமுகியின் (சூரத்தாவாரை - மிதமான பேதி மருந்து)  கஷாயத்தைத் தேர்ந்து கொடுத்தார்....இது அவரைக் குணமாக்கியது ..  இரண்டு ஆண்டுகளுக்குப்

பின் இத்தொந்தரவு மீண்டும் தலையெடுத்தது.... மாதவ்ராவ் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் அதே மருந்தை உட்கொண்டார்.  பெருமளவிற்கு இது வியாதியை அதிகப்படுத்தியது...ஆனால் பின்னர் அது பாபாவின் அருளால் குணமாக்கப்பட்டது.....

(2) கங்காதர் பந்த் என்பவர், காகா மகாஜனியின் அண்ணன்...பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியுற்றுக் கொண்டிருந்தார் ... பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு சீரடிக்கு வந்து தன்னைக் குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார்...பாபா அவரின் வயிற்றைத் தொட்டு "கடவுள் குணமாக்குவார்" என்று கூறினார்...அது முதற்கொண்டு அவருக்கு வயிற்றுவலி ஏதுமில்லை...அவர் முழுவதுமாகக் குணமாக்கப்பட்டார்....  

(3)  ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கரும் கடுமையான வயிற்றுவலியால்  அல்லலுற்றார்.. இரவு, பகல் முழுவதும் அவரால் இருப்புக் கொள்ள முடியவில்லை...மருத்துவர்கள்  ஊசி போட்டும் பலனளிக்கவில்லை...பின்னர் அவர் பாபாவை அணுகினார்....பின்னர் அவரை பர்ஃபி என்ற இனிப்புப் பண்டத்தை நெய்யுடன் உண்ணச் சொன்னார்....இச்செயல் முறையைப் பின்பற்றியதும் அவர் முழுக்கக்குணமடைந்தார்.

பாபாவின் சொற்களும், கருணையுமே பல்வேறு வியாதிகளை நிரந்தரமாகக் குணப்படுத்திய உண்மையான மருந்தாகும் என்று இக்கதைகள் மூலம் படித்து உணர்ந்து தெளிவடைந்தோம்.

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼.

ஸ்ரீ சாயீயைப் பணிக....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏻🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

https://eprofile.brandspot365.com/business409542

https://youtube.com/channel/UC_StOEm4cGxRNjlt1vSjs8A

https://youtube.com/playlist?list=PL2wMPZhligflE6VZJndcQUXqkIxidNcmW




அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...