ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, ஆகஸ்ட் 26, 2023

உண்மையை தேடி...!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏

உண்மையை தேடி...!🙏

குருஷேத்திரபோர் என்றால் நாம் அனைவருக்கும்  நினைவுக்கு வருவது  இருபுறமும் படைகள் அணிவகுத்திருக்க,  கிருஷ்ணர் தேர் சாரதியாய் வீற்றிருக்க, அர்ஜுனன்  இருக்கையில் அமர்ந்தபடி இருக்கும் படக்காட்சிதான் நினைவுக்கு வரும்...இது வெறும் படம் மட்டுமில்ல. நம் வாழ்வியல் தத்துவத்தை எடுத்துச்சொல்வதே இப்படம். இதில் இருக்கும் ஒவ்வொரு குறியீடும் நம்மில் இருக்கும் அம்சத்தின் குறியீடாகும்...

முதலில்  நம்மிடம் இருக்கும் எவையெல்லாம் குறியீடுன்னு சொல்றேன் நிதானமாக கேளுங்கள்...நாம் வாழும் இந்த பூமிதான் போர்க்களம், நம்மோட வாழ்க்கைதான் அதில் நடக்கும் போர்...கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமர்ந்திருக்கும் தேர் நமது உடல்...அர்ஜுனர் தான் நம்ம ஆன்மா, உயிர், ஜீவன் எனப்படும் தனிமனிதன்...தேர்க்குதிரைகள் நம்ம மனசு,  கிருஷ்ணர்தான் நம்ம மனசாட்சி, உள்ளுணர்வு வடிவில் இருக்கும் பரமாத்மா, பரம்பொருள் எனப்படும் கடவுள்...கிருஷ்ணர் கையிலிருக்கும் குதிரையின் கடிவாளம் நம்ம  விதி...கிருஷ்ணர் கையிலிருக்கும்  சாட்டை- நம்ம அறிவு புத்திசாலித்தனத்தை குறிக்குது...அர்ஜுனனின் தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சனேயர்- நம்முடைய நல்ல நடத்தை, நல்லொழுக்கம்.   எதிர் அணியில் அணிவகுத்து நிற்கும் கௌரவப்படைகள்தான் நம்மோட தப்புகள் எனப்படும் கர்மா, வினை தீவினைகள்.  கௌரவர்கள் எப்படி வியூகம் மாத்தி, மாத்தி அமைச்சு போரிட்டாங்களோ..! அதுமாதிரி நமது தீவினைகள்/ கர்மாக்கள் ஒரு பிரச்சனை மாற்றி ஒரு பிரச்சனையாக கொடுத்துக்கொண்டே இருக்கும்...அர்ஜுனன் பக்கமிருக்கும் பாண்டவர் படை நாம் செய்த புண்ணியங்கள். அவை நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நாம் செய்த தீவினைகள் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க நாம் செய்த புண்ணியங்கள் போராடும். குதிரைகள் இழுத்துச் செல்லும் திசையில் எப்படி தேர் செல்கிறதோ அப்படிதான் நம் உடலும் மனம் இழுத்துச் செல்லும் திசையில்போகுது. உடலின் தேவைக்கேற்பதான் மனசு செயல்படும். பசியெடுத்தால் உணவினை தேடி கால்கள் செல்லும்.  அதனால்தான் தேர் நம்ம உடம்பை குறிக்குது. அர்ஜுனர்தான் தனிமனிதன்னு சொன்னேன்ல. அர்ஜுனர் தேரில் நிற்பதை போன்று ஜீவாத்மா நம் உடலில் உரைகிறது.   அர்ஜுனர்  அம்புகள் எய்வது மாதிரிதான் நமது செயல்கள் கடமையை செய்வது மட்டுமே!  .மனம் குதிரை போன்றது. அது ஒரே சமயத்தில் நான்கு விஷயங்களை சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. ஒரேசமயத்தில் நான்கு விஷயத்தை சிந்திக்கக் கூடியதா இருந்தாலும், ஒரு முகப்பட்டு செயல்பட வேண்டும். மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும் குதிரையை அடக்குவது போலதான். மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொண்டால் குதிரை முரண்டு பிடிக்கும். அதனால் மெல்லமெல்ல தட்டி கொடுத்து வழிக்கு கொண்டு வர வேண்டும். கொள்ளு வைக்கவேண்டிய நேரத்தில் கொள்ளு வைத்தும், நீர் வைக்கவேண்டிய நேரத்தில் நீரினை காட்டியும் அதை தாஜா பண்ணனும். அதேமாதிரிதான் நம்ம  மனசும் அப்படித் தான். ஓரேயடியாக அடக்கி வைத்தால் மன அழுத்தம், சோர்வு வரும். அதனால, மனசு சொல்றதை முழுக்க ஒதுக்காம, அது ஆசைப்படியும் அப்பப்ப நடக்கனும். அப்பதான் அது கிருஷ்ணர் ஓட்டிச்செல்லும் குதிரை போல கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கிருஷ்ணர் கையிலிருக்கும் கடிவாளம்தான் விதி. மனம் விதியின் பிடியில் இருக்குது. விதி எந்த திசையில் திரும்புகிறதோ மனமும் அந்த திசையில்தான் பயணிக்கும்...

கடிவாளத்தை பிடித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணர் கடவுள். விதியை கடவுள் இயக்குகிறார்.  கடவுள் நம் விதியை இயக்கனும்ன்னா  நாம இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கனும்.  கிருஷ்ணர் கையிலிருக்கும் சாட்டைதான் நம் புத்தி/அறிவு. புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்குது. புத்தி மனசாட்சியின் பிடியில் இருந்தால் மனம் சரியான திசையில் போகும்போது அதை வேகப்படுத்தும். தவறான திசையில் போகும் போது இயங்காமல் இருந்து, வேகத்தை குறைச்சுடும். கிருஷ்ணர் எனப்படும் கடவுள் மனசாட்சி, ஆழ்மனம், பேருணர்வு, பரமாத்மா.. இந்த மனசாட்சியானது இந்த வாழ்க்கையால் துளிகூட பாதிக்கப்படுவது  இல்லை.  இது ஜீவாத்மாவிற்கு துணையாக இந்த வாழ்க்கையில் பங்கெடுக்குது.  நல்லொழுக்கமெனும் தேர்க்கொடியிலிருக்கும் ஆஞ்சநேயர்- . ஆஞ்சநேயர் நல்லொழுக்கத்தை குறிக்கிறார். நல்லொழுக்கம் நம்மக்கிட்ட இருக்கும்வரை நமக்கு எந்த பாதிப்பும் வராது.. இந்த வாழ்வியலை உணர்த்துவதே இந்த அர்ஜுனர்-கிருஷ்ணர் இருக்கும் பகவத் கீதை குருஷேத்திர போரின்  தத்துவம்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

யான் ஞானம் அடைந்த நிலையை உங்களுக்கு புரியவைக்க முற்ப்பட்டால் அது உங்களுக்கு புரியாது..மாறாக நீங்கள் உணர்ந்து தெளி(ரி)வதே ஞானம்...!!??

 

ஓம்  ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

யான் ஞானம் அடைந்த நிலையை உங்களுக்கு புரியவைக்க முற்ப்பட்டால் அது உங்களுக்கு புரியாது..மாறாக நீங்கள்  உணர்ந்து தெளி(ரி)வதே ஞானம்...!!??🙏

ஞானம் அடைந்த நிலை என்பது மனம் அழிந்த நிலை. அது மனத்தைக் கடந்த அனுபவம். ‘கண்டதை விள்ளுவதற்கு’ மனம் வேண்டும். அந்த அனுபவத்தை ஓரளவேனும் புரிந்துக் கொள்வதற்கு, நமது சுஷுப்தி எனும் ஆழ் உறக்க நிலையே ஒரு நல்ல உதாரணம்..ஆழ் உறக்க நிலை, நம் எல்லாருக்குமே மிகவும் பிடித்திருக்கிறது. அதில் ஒரு ஆனந்தம் இருப்பதால்தான் எல்லாருக்கும் அது மிகவும் வேண்டியிருக்கிறது. "அந்த ஆனந்தத்தை விளக்கு" என்றால் எப்படி விளக்க முடியும்..? ஏனென்றால் அது மனம் வேலை செய்யாத நிலை..! அந்நிலையில் நாம் பெறற்கரிய ஏதோ ஒரு இனிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம்..

ஆனால், அது என்ன என்று அறிந்து சொல்ல வழியில்லை..காரணம் அங்கே மனம் இல்லை..! காற்று நீக்கப்பட்டு வெற்றிடமாக்கப் பட்ட ஓர் கண்ணாடிப் பெட்டியில் ஓர் அலாரம் கடிகாரம் மணி அடித்துக்கொண்டிருந்தால் நம்மால் கேட்கமுடியுமா..? ஒலியைக் கடத்த அங்கே காற்று இல்லாததால் கேட்க முடியாது. அதே போலத்தான் மனம் செயல்படா நிலை.

“திரிபுடி" என்று ரிஷிகள் சொல்லுவார்கள். ஒரு காட்சியின் அனுபவத்தை விளக்கிக்கூற மூன்று அம்சங்கள் வேண்டும்..காண்பான், காண் பொருள், காணும் செயல். ஞான நிலையில், காண்பான், காண்பொருள், காணும் செயல் இவை மூன்றும் ஒன்றாகி விடுகிறது. பின்னர் அதை எப்படி விளக்குவது..? அனுபவிப்பவன், அனுபவம், அனுபவிக்கும் செயல் இவை மூன்றும் ஒன்றாகிவிடுகிறது..! விளக்கம் கேட்டால், “என்ன இருக்கிறதோ அது தான் இருக்கிறது" என்று தான் சொல்ல முடியும்...!

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மிகச் சிறப்பான ஓர் உதாரணம் இது...“ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச்சென்றது.. ‘அடிவரை போய் ஆழம் எத்தனை என்று கண்டுவந்து சொல்வேன்’ என்று சொல்லிச் சென்றதாம் அது..! அது கடலில் மூழ்கி ஆழத்தில் செல்லச் செல்லக் கரைந்துபோய் கடலோடு ஒன்றாகி விட்டது..! பின்னர் யார் வந்து ஆழத்தைச் சொல்வது...?”

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

உன்னை உலகறிய நீயே போராடி..உன் மக்களை காத்து நிற்கிறாய்..!!

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

உன்னை உலகறிய நீயே போராடி..உன் மக்களை காத்து நிற்கிறாய்..!!🙏

1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் தேதியன்று நெல்லூரில் இருந்து வந்த பாப்பையா செட்டீ என்ற ஜமீன்தார் நரசிம்மஸ்வாமிஜி சாயியை பற்றி எழுதிய புத்தகத்தினால் பெரிதும் கவரப்பட்டு நரஸிம்மஸ்வாமிஜியிடம் வந்து 11,455 ரூபாயை தந்தார். தன்னுடைய சொந்த சொத்தான பல லட்சக்கணக்கான பணத்தையே உதறிவிட்டு வந்தவர் அதை பெற்றுக்கொள்ள ஒரு கணம் யோசித்தார்...அவர் முன் மூன்று கேள்விகள் எழுந்தன...அதை சாயி பிரச்சாரத்திற்காக ஏற்றுக்கொள்வதா , இல்லை பிக்செட் டெபோசிட்டில் போட்டு அதில் வரும் வட்டியில் ஏழைகளுடைய நலனுக்குத்தருவதா இல்லை சாயி சமஸ்தானத்திடம் ஆலய வைப்பு நிதியாகத் தரலாமா..? விடை தெரியாததினால் சீட்டு குலுக்கி போட்டு அதை ஒரு குழந்தையய் அழைத்து எடுக்கச்சொல்லி முடிவு செய்தனர். அந்த பணத்தை சீரடி சாயி சமஸ்தானத்திடம் கொடுக்க அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர்...ஆகவே அதை சென்னைக்கு கொண்டு வந்து சாயி பிரசாரத்திற்கு உபயோகிக்க முடிவு செய்தார்.

1940...ஆம் ஆண்டு சாயீசுதா என்ற பத்திரிகை துவங்கப்பட்டது...தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் பத்திரிகை துவங்கியது .. 1943.ஆம் ஆண்டில் மரணம் அடைந்த திரு சம்பத்குமார் என்பவர் அதுவரை அதன் ஆசிரியராக இருந்தார்... ஸ்ரீஸ்வாமி சிவானந்தரும் , ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமி என்பவர்களும் அதன் பின் அதை நிர்வாகித்தனர் . நரஸிம்மஸ்வாமிஜி அடுத்து சாயி பக்தர்களின் அனுபவம் என்ற புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டார்...அதே நேரத்தில் அகில இந்திய சாயி சமாஜத்திற்கு இளமை துடிப்பான ஒருவர் பிரசாரத்தை மேற்கொள்ளத் தேவையாக இருந்தது. அதைத் தவிர வயதாகி வந்ததினால் நரஸிம்மஸ்வாமிஜிக்கும் ஒரு உதவியாளர் தேவையாக இருந்தது....

அப்போது சென்னை தலைமை நீதிபதியின் மாப்பிள்ளையான ஒ .கே . வரதராவ் என்பவர் ரிசர்வ் பாங்கில் வேலை பார்த்து வந்தார். அவர் அகில இந்திய சாயி சமாஜத்தின் முதல் செகரட்டரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடைய மனைவியான சாரதா என்பவர் நரஸிம்மஸ்வாமிஜிக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய அவருடைய தத்து மகளாயினார். பினர் சாரதாவே நரஸிம்மஸ்வாமிஜிக்கு அனைத்து உதவியும் செய்து வந்தார், அவருடைய பயணங்களை தீர்மானித்தார், பத்திரிகையில் எழுத உதவினார்..அவர்கள் நரஸிம்மஸ்வாமிஜியிடம் வந்தபொழுது அவர்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது...

''சாயிபாபாவே அனைத்து கடவுளின் அவதாரமும் என்றால் நாங்கள் லக்ஷ்மி , சரஸ்வதி , கணேஷர் போன்றவர்களை வணங்கலாமா வேண்டாமா...?''நரசிம்மசுவாமி அவர்களுக்கு விளக்கினார்..'‘ சாரதா இதோ பார் . நான் நரசிம்மசுவாமி என்ற உருவத்தில் உள்ளவன் என்றாலும் என் உடம்பில் உள்ள கை , மூக்கு , கண்கள் , காது என அனைத்தும் தத்தம் வேலையை தனித்தனியாக செய்கின்றன . அனால் அவை அனைத்தும் உள்ளது ஒரு உடலில்தானே. ஆகா நாம் பல செயல்களை செய்யும் ஒரு உடலை கொண்டவர்கள் எனும் பொழுது ஏன் இந்த கேள்வி எழ வேண்டும்...?''சாரதா மௌனம் ஆகி விட்டாள். அவளுக்கு விடை கிடைத்துவிட்டது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஞானம் பெறுவதற்கு நேரம்..காலங்களை நம்மால் நிர்ணயிக்க முடியாது...!?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஞானம் பெறுவதற்கு நேரம்..காலங்களை  நம்மால் நிர்ணயிக்க முடியாது...!?

ஞானம் பெறுவதுவதற்கு ஒரு கண நேரம் போதும் என்பார்கள் ஆன்றோர்கள். ஆனால் அந்தக் கண நேர அனுபவத்திற்குப் பக்குவப்பட எத்தனையோ காலம் ஆகலாம்..அது பல பிறவிகள் தாண்டி நிகழலாம்...ஒரு மாங்காய், மரத்திலேயே முற்றும் பழுப்பது போல இது...பிஞ்சு காயாகி, காய் முற்றிப் பின் கனிந்து பக்குவமாகி விடக் காலம் தேவை. அதற்குள் எவ்வளவோ நிகழலாம்.. பிஞ்சிலேயே வெம்பிப் போகலாம், சிறுவர்கள் கல்லால் அடித்து வீழ்த்தலாம்.. அணிலும் வவ்வாலும் கடித்துக் குதறி வீணாகலாம். தோட்டக் காரன் முற்றிய காயைப் பறித்து விற்றுவிடலாம். இந்த எல்லா ஆபத்துகளையும் தாண்டி காய் மரத்திலேயே பழுக்கக் கொடுப்பினை இருக்க வேண்டும்.

🔥(அதே போலத்தான் ஞான வேட்கை உள்ளவனுக்கு சம்சாரத்தில் எத்தனையோ தடைகளும், தடங்கல்களும் நேரும்)..ஆனால் கனிந்த பழம் எப்போது தானே விழும் என்பதை ஊகிக்க முடியாது. காம்பு முற்றிலும் காய வேண்டும் (பற்றுகள் முற்றிலும் ஒழிய வேண்டும்)அந் நிலையில் ஒரு பலமான காற்றிலோ, அல்லது ஒரு பறவை கிளையில் உட்கார்ந்த அதிர்ச்சியிலோ, அல்லது காற்றின் சலனமற்ற ஒர் நண்பகலிலோ நள்ளிறவிலோ பிடித்திருந்த காம்பு முற்றிலும் பலமற்றுப் போக, கனி பொத்தென்று விழலாம். யாரால் சொல்ல முடியும்...?🔥

அது போலத்தான் ஞானம் உள்ளில் ஒளிரும் அந்தத் தருணமும். அதை ஊகிக்க இயலாது... சத்குருவின் சங்கல்பமும் அருளும் சேரும் அந்த நொடியில் ஒரு பக்தன் ஞானம் பெருகிறான். அது எப்போது என்பதை சத்குரு மாத்திரமே அறியக்கூடும்..!

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2023

ஞானம் அடைய முயற்சிகள் செய்யும்பொழுது, நமக்கு ஏற்படும் சில அனுபவங்கள் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

ஞானம் அடைய முயற்சிகள் செய்யும்பொழுது, நமக்கு ஏற்படும் சில அனுபவங்கள் நம்மை அந்த முயற்சியிலிருந்து விலக வைக்கும் வல்லமை உள்ளது...முதலில் வருவது  அளவுக்கதிகமான ஞான ஆர்வத்தினால் தம் கடமைகளை மறத்தல் / மறுத்தல்.  சிலருக்கு ஞான ஆர்வம் வந்ததும் தத்தம் குடும்பக் கடமைகளை மறந்து, அதை மறுத்து ஞானத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக, குடும்பக் கடமைகளையே செய்ய முடியாவிட்டால் நிச்சயம் ஞானக் கடமைகளை செய்ய முடியாது...இதற்கு முக்கிய காரணம், ”நாம்” முயற்சி செய்து நாமே ஞானம் அடைகிறோம் என்கின்ற ஆணவம் தான். இதை முதலில் விடவேண்டும்.  ஞானம் நம்மைத் தேடி நிச்சயம் வரும். முயற்சி மட்டுமே நம்முடையது. இந்தத் தெளிவை நம் குரு மட்டுமே தர முடியும். நம் மீது உண்மையான அக்கறை கொண்ட ஞான குரு நிச்சயம் நம்மை சரியான வழியில் வழி நடத்துவார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

யத் பாவம்; தத் பவதி" ..எப்படிப் பாவிக்கிறாயோ அப்படிக் கிட்டும்.

 

ஓம் ஶ்ரீ சாயீரநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்....🙏🙏

எமது குழந்தைகளே....உனது கடமையை நீ ஒருபோதும் கைவிடாதே.,.அதனை உனது நன்மைக்காக என ஆற்றாமல் பொது நலத்திற்காக என மட்டும் ஆற்று.. உனக்கு அதனால் பயன் என்ன விளையும் என எதிர்பார்த்து எதையும் மேற்கொள்ளாதே.. ஏனெனில், உன் செயலின் பயன் விளைவு உன் கையில் முற்றிலும் இல்லை..ஆனால் உனது திறமையின் முழுவீச்சுடன் உன்கடமையைப் புரிவது உன் கையில் உள்ளது என்னும் நம்பிக்கையுடன் செயலாற்றி உயர்வடை..! அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கலாகாது..!

யத் பாவம்; தத் பவதி" ..எப்படிப் பாவிக்கிறாயோ அப்படிக் கிட்டும்..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஒருவரின் மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்கும் காரணம்...!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் அருளுரைகளும், உபதேச மொழிகளும்...🙏

ஒருவரின் மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்கும் காரணம் அவர்களது செழுமையோ, வறுமையோ அல்ல. நிலையற்ற அது, வரும் போகும். ஒருவரின் மகிழ்ச்சிக்குக் காரணம் தூய உள்ளமும்,. கள்ளம் கபடம் அற்ற பிள்ளைத் தனமுமே.நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். அவர் சந்தோக்ஷமாக இருப்பதற்காக நம்மைப் படைத்துள்ளார். ஏதாவது நமக்குச் செய்ய வேண்டும் என்றால், எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எனவே, அனைத்து பாரங்களையும் நம் குரு நாதரிடம், நீயே சத்யம், நீயே நித்யம் - நீயே சர்வமும் என்று நம்பிக்கையுடன் ஒப்படைத்து விட்டு,..அமைதியாக இருங்கள்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் ஒரு அற்புதமான சம்பவம் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி பகவானின் உபதேச மொழிகள்...🙏

சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் ஒரு அற்புதமான சம்பவம் ...!.🙏

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஓர் தருணம்...ஓர் அடர்ந்த புல் வெளியைக் கண்டது...அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு....இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது..அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன...! மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன...பலத்த மழை வரும்போல் இருந்தது...மான் தன் இடப்பக்கம் பார்த்தது...அங்கே, ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்...! மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது...மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது...! ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்..?அதற்கு வலியும் வந்து விட்டது..!என்ன நடக்கும்..?மான் பிழைக்குமா..?...மகவை ஈனுமா..?குட்டி பிழைக்குமா...இல்லை,..காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா..?வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா...?புலியின் பசிக்கு உணவாகுமா...? பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம்..! பசியோடு புலியும்,வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்..மான் என்ன செய்யும்..?கண்ணீருடன் கடவுளை சரணாகதி அடைந்தது..! 

இறைவன் விட்ட வழி என, மனதைத் தேற்றிக்கொண்டு, எதைப் பற்றியும் கவலைப் படாமல்.....தன் கவனம் முழுவதையும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.... மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை..... கடவுள் காப்பாற்றுவான் என்பதில் திட நம்பிக்கை கொண்டது...! அப்போது நடந்த நிகழ்வுகள்..!? மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்...!அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது..!தீவிர மழை, காட்டுத் தீயை தீயை அணைத்தது..! அந்த மான் அழகான ஒரு குட்டி மானைப்பெற்றெடுக்கிறது..!வாழ்வின் பெரும் புயலில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்...நாம் நம் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்..!அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்..!கடவுள் தூங்குவதும் இல்லை..! நம்மை துயரப்படுத்துவதும் இல்லை..!உன் செயலில் நீ முழு கவனம் செலுத்து..!மற்றவை நடந்தே தீரும்..!

ஓம் ஶ்ரீ  சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

புதன், ஆகஸ்ட் 23, 2023

உண்மையை தேடுங்கள்...!!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

உண்மையை தேடுங்கள்...!!முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அதன்பிறகு, ஆண்டவனை நம்புங்கள்.உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும்...

உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால், இதயத்தைப் பின்பற்றி நடங்கள் நாம் எல்லாரும் குழந்தைகள் கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே, எங்கும் நிறைந்திருக்கிறார் பற்றி உங்கள் கருத்து என்ன...? சற்றுக் கண்களை மூடிக்கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்குக் கூறுங்கள்.

உங்கள் சிந்தனையில் விரிவதுதான் என்ன...? ஏற்கனவே நீங்கள் கண்ட பரந்த கடல் அல்லது விரிந்த நீல வானம், அல்லது அகன்ற புல்வெளி அல்லது இவை போன்ற வேறு எதோ ஒன்று, அப்படித்தானே...? இதுதான் எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நீங்கள் சொல்லும் பொருளானால் அது பயனற்றது, நீங்கள் அதன் பொருளை உணரவே இல்லை...

இறைவனின் மற்ற குணங்களும் அப்படித்தான். அவர் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர் என்று கூறும்போது நாம் என்ன புரிந்துக் கொள்கிறோம்...? எதுவும் இல்லை. மதம் என்பது அனுபூதி. இறைவனை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் அனுபூதியில் அறியும் போதுதான் நீங்கள் இறைவனை வழிபடுகிறீர்கள் என்று கூறுவேன். அதை அடையாதவரை, நீங்கள் அந்தச் சொற்களிலுள்ள எழுத்துக்களை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான்...

இந்த அனுபூதி நிலையை அடைய, நாம் கண்ணுக்குப் புலனாகின்றவற்றின் வாயிலாகச் செல்ல வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கை கற்கும்போது முதலில் புறபொருட்களின் மூலம்தான் ஆரம்பிக்கிறது, பிறகுதான் மனத்தாலேயே செய்ய கற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தையிடம் 5 x 2 = 10 என்று கூறினால் அதற்கு ஏதும் புரியாது. ஆனால் பத்துப் பொருட்களைக் கொடுத்து, அது எப்படி என்பதைக் காட்டி விளக்கினால் புரிந்துகொள்ளும்....

இது நிதானமான நீண்டப்பாதை...இங்கு நாம் எல்லாரும் குழந்தைகள்....நாம் வயது முதிந்தவர்களாக இருக்கலாம், உலகிலுள்ள எல்லா நூல்களையும் படித்திருக்கலாம்..ஆனால் ஆன்மிகத் துறையில் நாம் எல்லாரும் குழந்தைகளே. கொள்கைகள், தத்துவங்கள், அறக்கோட்பாடுகள் எல்லாவற்றையும் எவ்வளவு தான் உங்கள் மூளைக்குள் திணித்தாலும் அவற்றால் பெரிதாகப் பலன் ஒன்றும் இல்லை...

நீங்கள் யார்...? அனுபூதியில் என்ன உணர்ந்திருக்கிறீர்கள்...? இவை தான் பயனுள்ளவை, சாரமானவை. நாம் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிந்திருக்கிறோம், அனுபூதியில் எதையும் உணரவில்லை..

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

பகவான் கூறுகிறார்...உன்னை(ஆத்ம ஞானத்தை) தேடி( வெளியே அலையாதே..!?

ஓம் ஶ்ரீ  சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

பகவான் கூறுகிறார்...உன்னை(ஆத்ம ஞானத்தை) தேடி( வெளியே அலையாதே..!?

ஆத்ம ஞானம் என்பது மிக எளிதாகப் பெறக்கூடிய ஒன்று.ஏனெனில் அதை எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது உன்னிடத்திலேயே உள்ளது. எப்போதும் இருந்து கொண்டே இருப்பது. நீ செய்ய வேண்டியதெல்லாம் வெளியே நோக்குவதை விட்டு, விட்டு உள்ளே திரும்பி நோக்க வேண்டும். அவ்வாறு நோக்க, நோக்க. நீ உடனே ஒரு பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்கிறாய்.ஆத்ம சிம்மாசனத்தில் அமர்ந்து ஞான சாம்ராஜ்யத்தை ஆளத்துவங்குகிறாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் திரும்பி காண வேண்டியதுதான்.அதுவே ஆத்ம ஞானத்தின் திறவுகோல்.

இது வரை நீ கற்றதெல்லாவற்றையும் மறந்து விடு.உனது புத்திசாலித்தனம், சாதுர்யம்  எல்லாவற்றையும் துறந்து, ஒரு குழந்தை போன்ற தன்மையுடனும், நம்பிக்கையுடன் உள் நோக்கிச்செல்.. உன்னைத் தவிர வேறு ஒன்றுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை. எனவே ஒரு திறந்த இதயத்துடன் ஞானத்தை வரவேற்பாய்.. இதுவே உண்மையான சிரத்தை உண்மையான அறிதல் என்கிறார் பகவான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

சரணாகதி...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

சரணாகதி...!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான முதிர்ந்த நிலையில் இருப்பார்கள். அவரவர்களுக்கு எந்த மாதிரியான மார்க்கம் தேவையோ அதை அவர்களுக்குக் காட்டி, அவர்களை அதில் நிலைத்து நிற்கவும் செய்வேன் என்று அனைவருக்கும் கண்ணன் உறுதிமொழி  அளிக்கிறார். தான் செய்வது சரியோ, தனது வழி சரியோ என்று எந்த சாதகனும் ஐயம் கொள்ள வேண்டாம். ஆன்மீக வழியில் ஈடுபடும் எவரும் இறைவன் மேல் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு முக்கியமான கோட்பாடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சாட்சாத் பரமாத்வாவே கூறும்போது, எவருக்கும் அவர் செல்லும் வழியிலோ, தான் கடைத்தேறுவேனோ என்ற எந்த விதமான சந்தேகமும் வந்தால் சாதகன் இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடையவில்லை என்றே பொருள். அந்த நிலையை எவரும் தவிர்க்கவேண்டும். நீயே எல்லாம் என்று கண்ணனிடம் ஐக்கியமாவதே அனந்னிய பக்தி பாவம்...!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...