ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
தெரியாத நபரைப் போலத்தான் பாபா வருவார் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு. தெரிந்தவர் வடிவிலும் பாபா வருவார் என்பதை நாம் அறிய வேண்டும்...ஒவ்வொரு நாளும் பாபா நம்மை நோக்கி வருகிறார். நம்மிடம் பேசுகிறார். நம்மிடம் கேட்கிறார். ஆனால் நாம்தான் அவரை அடையாளம் கண்டுக் கொள்வதில்லை...நமக்கு தெரிந்தவர் போலவே கூட அவர் வந்து செல்வார். எச்சரிக்கை உணர்வுடன் அவரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்....
அந்நியரை உபசரியுங்கள்...அந்நியர் மட்டும் அல்லாமல் நமக்கு தெரிந்தவர்களையும் உபசரியுங்கள். யாராவது ஒருவர் அதில் பாபாவாக இருக்கலாம்....சாயீ கண்ணெதிரே உள்ள கங்கா ஜலம் போன்றவர்...அவரை எப்படி இழுத்தாலும் உங்கள் இழுப்புக்கு , இறங்கி வருவார். நிதர்சனத்தை,. யதார்த்தத்தை சொல்லித்தருவார். எப்படி வணங்கினாலும் ஏற்றுக் கொள்வார். இவரைப் போன்று வேறு யாரும் ஆன்மீகத்தை எளிமையாக போதிக்கவில்லை என்பது அனுபவஸ்தர்களின் கருத்து...
ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻