ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், ஜூன் 28, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் ஐம்பது(50)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::ஐம்பத்தொன்று(51)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்..இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும்  வியாப்பித்து  படர்ந்து  இருக்கின்றது..

ஶ்ரீசாய்  சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்.ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்..மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் :: ஐம்பத்தொன்று (51)🙏

🙏முன்னுரை.🙏

சத்குருநாதர் சீரடிபாபா மிகுந்த தாய்மையுணர்வுடன்  ஏழ்கடலுக்கு அப்பால் இருக்கின்ற எமது பக்தனை சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கின்றேன் என்று கூறியதற்கு இணங்க, தன்னை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட  காகா சாஹேப் தீஷித்தை தம்மிடம் வரவழைக்க, எவ்வாறு  பாபா ஷாமாவை அனுப்பி  சீரடிக்கு  அழைத்து வரும்படிச் செய்து, ஆசியையும் அனுக்கிரகத்தையும் வழங்கினார் என்பதன் அனுபவ விளக்கவுரை...

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டும் விதமாக,ஶ்ரீவாசு தேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே சுவாமி மிகுந்த அன்புடன் சீரடிக்குச் செல்லவிருந்த ஶ்ரீ புண்டலிக்ராவ் என்பவரிடம் ,  எனது வணக்கங்களுடன் இந்தத் தேங்காயை சாயீயிடம் சமர்ப்பித்து விடுங்கள் என்று கூறியதை மறந்தக் காரணத்தால், பாபாவைக் கண்டவுடன் மிகுந்த  அச்சத்துடன் புண்டலிக்ராவ்  மன்னிப்புக் கோரியதற்கு , பகவான்  அவரை ஆசிர்வதித்து அளித்த உபதேசம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரை...

சத்குருநாதர் சீரடி பாபா  தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால், இன்று எனது தர்பாரைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள் என்று பாலாராம் துரந்தர் சகோதரர்களை முன்னரே  சுட்டிக்காண்பித்து, பாபா  மிகுந்த  மகிழ்ச்சியுடன் அவர்களை  ஆசிர்வதித்து, எவ்வாறு   ஆஸ்துமாவினால்  பாதிக்கப்பட்ட  பாலாராமைக் குணப்படுத்தினார் என்பதன் அனுபவ விளக்கவுரை....

மேற்க்கண்ட தலைப்புக்களைப்  பற்றிய  விளக்கவுரைகளை  ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்..

🔥முக்கியக் குறிப்பு:🔥 

ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்ற புனித வேத  மூலநூலில் ஐம்பதாவது அத்தியாயத்தின் மையப்பொருளானது,  39-ஆம் அத்தியாயத்தில் உள்ள அதே மையப் பொருளைப் பற்றியது... ஆதலால் ஐம்பதாவது அத்தியாயத்தை முப்பத்தொன்பது அத்தியாயத்தில்  இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இங்கு  51-வது அத்தியாயத்தின் விளக்கவுரை இங்கே... இந்த அத்தியாயம் காகா சாஹேப் தீஷித், ஸ்ரீ தேம்பே சுவாமி, பாலாராம் துரந்தர் ஆகியோரின் அனுபவ  நிகழ்வை  எடுத்துக் கூறுகின்றது. இந்த நிகழ்வைப் பற்றி இங்கே காணலாம்..

🔥சத்குருநாதர் சீரடிபாபா, தான் மிகுந்த தாய்மையுணர்வுடன்  ஏழ்கடலுக்கு அப்பால் இருக்கின்ற எமது பக்தனை சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கின்றேன் என்று கூறியதற்கு இணங்க, தன்னை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட  காகா சாஹேப் தீஷித்தை தம்மிடம் வரவழைக்க , எவ்வாறு  பாபா ஷாமாவை அனுப்பி  சீரடிக்கு  அழைத்து வரும்படிச் செய்து, ஆசியையும் அனுக்கிரகத்தையும் வழங்கினார் என்பதன் அனுபவ விளக்கவுரை...🔥

பக்தர்களின் மூலாதாரமும், சத்குருவும், கீதையை விளக்குபவரும், நமக்கு எல்லா ஆற்றல்களையும் கொடுப்பவருமான சாயீக்கு ஜெயம் உண்டாகட்டும். ஓ...! சாயீ, பூரண மங்களத்தின் பிறப்பிடமானவரே, சத்தியத்தின் பிறப்பிடமானவரே. எங்களுக்கு அனுகூலம் செய்து ஆசீர்வதியுங்கள். மலயகிரியில் வளரும் சந்தன மரங்கள் உஷ்ணத்தைப் போக்குகின்றன... மேகங்கள் மழைநீரைப் பொழிந்து மக்களைக் குளிர்வித்து புத்துணர்வூட்டுகின்றன...வசந்தகாலத்தில் மலர்கள் மலர்ந்து, அவைகளால் நாம் கடவுளை வழிபட வகை செய்கின்றன..அது போலவே சாயீபாபாவின் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரமும், அற்புத அனுபவங்களும், உபதேச அருள்மொழிகளும், பல்வேறு உவமானக் கதைகளும் பயில்வோருக்குச் சாந்தியையும், சௌகரியத்தையும் அளிக்க முன்வருகின்றன.. பாபாவின் அனைத்து உபதேச அருளுரைகளை  எடுத்துக் கூறுவோர், அதைக் கேட்போர் இருபாலரும் பாபாவின்   ஆசியைப் பெறுகின்றனர். மேலும் முன்னவர்களின் வாக்கும், பின்னவர்களின் காதுகளும் ஆசீர்வதிக்கப்பட்டுப் புனிதம் அடைகின்றன...

ஆகவே நூற்றுக் கணக்கான பயிற்சிகளையும், செயல்முறைகளையும்,  வேத சாஸ்திரங்களைக் கடைப்பிடித்தாலும்,  ஒரு சத்குரு அவர்தம் அருளால் தம் பக்தர்களை  ஆசீர்வதித்தாலன்றி நாம் ஆன்மிக இலட்சியத்தை அடையமுடியாது.. இந்த வாக்கிற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கதையினைக்  கேளுங்கள்...காகா சாஹேப் தீஷித் (1864 - 1926) என்ற பக்தரின் அனுபவ நிகழ்வைப்பற்றி இங்கே காண்போம்..

ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் என்ற பக்தர், 1864-ஆம் ஆண்டில்  வத்நாகர நகர், காண்ட்வாவில் (மத்திய மாகாணம்) பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்...அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார்...மேற்படிப்புக்காக பம்பாய் சென்று  வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார்..1883-ஆம் ஆண்டில்  பட்டம் பெற்ற பிறகு, அவர் L.L.B.யில் வக்கீல் தேர்விலும் தேர்ச்சிப் பெற்று, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில்  என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்..

1909-ஆம் ஆண்டுக்கு முன்னர், சாயீபாபாவின் உயரியத் தன்மைகளையும், மகிமைகளையும்  பற்றி  காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது..ஆனால் பகவானிடம் சென்று சரணாகதி அடைந்தப் பிறகு, அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார்.. லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது..பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர்..காகா சாஹேப் தீஷித்,  தாம் லண்டனில் ஒரு முக்கியப் பயிற்சியை மேற்க்கொள்ளும் போது, எவ்வாறு தனக்கு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்பதனை நானாசாஹேப்பிற்கு  விளக்கினார்... நூற்றுக்கணக்கான  சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால்,  தனது சத்குரு சாயீபாபாவிடம் செல்லவேண்டும் என்றார்...மேலும் சாயீபாபாவைப் பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து, சாயிபாபாவின் மகா வாக்கியமான "எனது மக்களை நெடுந் தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.

பாபாவின் ஆசியும் அனுக்கிரகமும் இல்லாவிட்டால், எவரும்  பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும்  நானா சாஹேப் தெளிவாக்கினார். இவற்றைக்  கேட்டவுடன். காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று...தாம் பாபாவிடம் செல்லப் போவதாதவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும், ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி, தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்...

காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு, பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அகமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார்..காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்பவர்  கோபர்காவனின் மம்லதார்.. இச்சமயத்தில் அகமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும் பொருட்டு வந்தார். தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் சீரடி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய மிரீகர் குடும்பத்தினர், காகா சாஹேப் தீஷித்துடன் சீரடி  அனுப்புவதற்கு  ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக் கொண்டிருந்தனர்.

சீரடியில் சாயிபாபா, அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தார்....ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து, ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அகமத்நகர் வரவேண்டும்  என்றும் ஒரு தந்தி வந்தது...ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியாரைப் பார்த்து,  முன்னைவிட  இப்போது  நலமாகி வருவதைக் கண்டார்... நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித் என்பவர்  சீரடிக்குச் செல்வதற்கு  ஆவலாய் இருப்பதாகவும்,  சீரடிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.. காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது.  மாலையில் ஷாமா மிரீகர் இல்லத்திற்கு  வந்தார்.. அப்போது மிரீகர் குடும்பத்தினர் காகா சாஹேப் தீஷித்திற்கு, ஷாமாவை  அறிமுகப்படுத்தினார்கள்...  

ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி இரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது...இதற்கு இடையில்  முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது.. பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு, அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார்..யாரைப் பார்க்க சீரடிக்குப் போகப் போகின்றாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்...அவர் மிகவும் மனமுருகி  படத்தின்முன் வீழ்ந்துப் பணிந்தார்.. அப்படம் மேகாவுடையது..  அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது..  தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமா, காகா சாஹேப் மூலமாக  அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டனர்..ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாது இருப்பதையும் அறிந்தனர்..அதிர்ஷ்டவசமாக அந்த இரயில்  வண்டியின் முக்கிய அதிகாரியானவர், காகா சாஹேப் தீஷித்தின்  நண்பராக இருந்தார்...வர்களை முதல் வகுப்பில் இடம் கிடைத்தது.. இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள்...சீரடிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.. காகா சாஹேபும் , நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்...பிறகு புனித கோதாவரியில் நீராடிய பின்னர் அவர்கள் சீரடிக்குப் புறப்பட்டனர்...சீரடிக்குச் சென்று  பாபாவின் தரிசனத்தைப் பெற்ற கணத்தில், காகா சாஹேப்பின் மனது உருகியது...அவர் கண்கள் குளமாயின...அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்...  

பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக் கொண்டிருப்பதாகவும், உம்மை உபசரிப்பதற்காக  ஷாமாவை முன்பே அனுப்பியதாகவும் கூறினார்...பின்னர் காகா சாஹேப்  தீஷித்  தம் வாழ்நாட்களில்  பல வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார்...சீரடியில் அவர் ஒரு வாதா(சத்திரம்) கட்டினார்...ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார்...  பாபாவிடமிருந்து காகா சாஹேப் தீஷித்  பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலாள்  அவைகளை எல்லாம் கூறுவதற்கு  இங்கு இடமில்லை...இது குறித்துத் தெரிந்துக் கொள்வதற்கு  சாயிலீலா சஞ்சிகை (தொகுப்பு 12, எண் 6,7,8,9) 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு சாய்பக்தர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஒரே ஒரு கடைநிலை அனுபவ நிகழ்வைக் கூறி,  இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம்..  பாபா காகா சாஹேப் தீஷித்திடம்,  "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார்.. (அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல்) இது உண்மையாயிற்று...  1926-ஆம் வருடம் ஜூலை மாதம் 5-ஆம் தேதி அவர் ஹேமாட்பந்துடன் ரயிலில் செல்லும் போது சாயீபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.. அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார். திடீரெனத் தமது கழுத்தை ஹேமாட்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🔥ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டும் விதமாக, ஶ்ரீவாசு தேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே சுவாமி  அவர்கள் பாபாமீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக,  சீரடிக்குச் செல்லவிருந்த ஶ்ரீ புண்டலிக்ராவ் என்பவரிடம், எனது வணக்கங்களுடன் இந்தத் தேங்காயை சாயீயிடம் சமர்ப்பித்து விடுங்கள் என்று கூறியதை மறந்தக் காரணத்தால், பாபாவைக் கண்டவுடன்  புண்டலிக்ராவ்  மிகுந்த  அச்சத்துடன் மன்னிப்புக் கோரியதற்கு பகவான் அளித்த உபதேசம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரை..🔥

ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக் கொள்கிறார்கள் என்பதை விளக்கும் நிகழ்வை இங்குப் பார்ப்போம்.. ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி அவர்கள்  ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார்..அவர் பக்தியும்,  வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார்.. நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார்..அவர்கள் தேம்பே சுவாமியிடம்  பேசிக்கொண்டிருந்த போது,  சீரடி சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன..பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயீயிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள்...என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார்...மேலும் "சுவாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை... ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார்.  புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார்.. பாபாவைச் சகோதரன் என்று தேம்பே  சுவாமி அழைப்பது சரியே..  ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்து வந்ததைப் போலவே பாபாவும் அக்னியை  அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார்... ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும், மற்றவர்களும் தேங்காயுடன் சீரடிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர்...தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர்..வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர்...அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார்...சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துக்கொண்டனர்...துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது...

அவர்கள் சீரடியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு விட்டது என்பதை வெகுவருத்ததுடன் உணர்ந்தார்...பயந்து நடுங்கிக் கொண்டு சீரடிக்கு வந்து சாயீபாபாவைப் பார்த்தார்.. பாபா முன்பே  தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்..பாபா,  தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார்.  அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு,  தமது குற்றத்தையும், கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார்..மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்து விடுவதாகக் கூறினார்...ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணத் தேங்காயைக்  காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி, பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார்...மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை...எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது..  செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்...?

நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக் கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே....எல்லாவற்றிலும் முழுமையாக அகங்காரமற்று இருப்பீராக.. இதனைக் கடைப்பிடித்தால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார் பாபா... எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தி இருக்கின்றார் பாருங்கள்..!   

🔥சத்குருநாதர் சீரடி பாபா  தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால், இன்று எனது தர்பாரைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள் என்று பாலாராம் துரந்தர் சகோதரர்களை முன்னரே  சுட்டிக்காண்பித்து, பாபா  மிகுந்த  மகிழ்ச்சியுடன் அவர்களை  ஆசிர்வதித்து, எவ்வாறு   ஆஸ்துமாவினால்  பாதிக்கப்பட்ட  பாலாராமைக் குணப்படுத்தினார் (1978-1925) என்பதன் அனுபவ விளக்கவுரை..🔥

பாலாராம் துரந்தர் என்பவர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர்..அவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தின்  வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் (Law School) தலைவராகவும் பணியாற்றினார்.. .துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது.  பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார்..அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.. பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார்..கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார்..அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர்...  பாபாவுடன்  1912-ஆம் ஆண்டில் தொடர்பு கொண்டார்..அதற்கு ஆறு மாதங்களுக்கு முன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற பாலாராம் துரந்தரின்  இரு சகோதரர்களும், சீரடிக்கு சென்று  பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர்..  வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர்..அதன் பின்னர், அவர்கள் அனைவரும் பாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்..

பாலாராம் குடும்பத்தினர்கள்  சீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகின்றார்கள்" என உரைத்தார்.. துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து  பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர்.  மற்றவர்கள் அனைவரும்  பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.. பாபா அவர்களிடம் "நான் முன்னர் குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம்  ஒருவரொடு ஒருவர் உறவுப்பூண்டு இருக்கின்றோம்" என்றார்...அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும் , பணிவுடனும் பாபா கூறுவதை  உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர்...கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின..அவர்கள் எல்லையற்ற  மகிழ்ச்சி அடைந்தனர்.. பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். பாலாராம் துரந்தர்  பாபாவின் அருகில்  அமர்ந்து, அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்...சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக் கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார்..புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் துரந்தர் அக்குழாயை வாங்கிக் கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார்...பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம்..ஆறு ஆண்டுகளாக  பாலாராம் ஆஸ்துமா வியாதியினால்  பாதிக்கப்பட்டு இருந்தார்.. இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன், மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை.. 

ஆறு ஆண்டுகளுக்குப் பின், ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் பாலாராமிற்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது...இது பாபா மகாசமாதி அடைந்த அதே நேரம் என்பது குறிப்பிடத்தக்கது...அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமை என்பதால், பாலாராம் துரந்தர் சகோதரர்கள்  சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுக்களிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்...சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின் போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார்....மறுநாள் காலை காகட் ஆரத்தியின் போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான  பாண்டுரங்கரின் ஜோதியானது  பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்...

பாலாராம் துரந்தர் அவர்கள், மராத்தியில் மகாராஷ்டிர ஞானி  துக்காராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார்.. ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடன் இருக்கவில்லை..பின்னர் 1928-ஆம் ஆண்டில் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது...  பாலாராம் துரந்தரின்  வாழ்க்கையைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது... பாலாராம் துரந்தரைப்  பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.(அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க)..

ஓம் ஶ்ரீ  சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீசாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼

ஞாயிறு, ஜூன் 27, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தொன்பது (49)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🙏🏼🙏🏼

🙏 ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::நாற்பத்தொன்பது (49)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்... ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு:: ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்...

அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

 🙏அத்தியாயம் ::நாற்பத்தொன்பது(49)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருவைத் தியானித்து, ஆத்மார்த்தமாக சரணாகதி அடைவதன் மூலமாக, எவ்வாறு மாயை, கர்மவினையின் தாக்கம் மற்றும் சம்சாரப் பந்தத்திலிருந்து விடுபட்டு உயரிய நிலையை அடைகின்றோம்  என்பதைப் பற்றிய சூட்சம விளக்கவுரை..

எந்தவிதக் குறிக்கோளும் இன்றி தன்னை சோதிக்க  வந்த பக்தர் ஹரி கானோபா என்பவரின்,  தொலைந்தக் காலணிகளை சிறுவன் மூலம் மீட்டுக் முகவரியைக்  கூறிக் கொடுக்க வைத்த  பாபாவின் எங்கும் நிறைந்த பேரறிவைக் கண்டு  வியந்து மேன்மேலும் சரணாகதி அடைந்ததைப் பற்றிய நிகழ்வின்  அனுபவ விளக்கவுரை....

சோமதேவ் சுவாமி அவர்கள்,  பாபாவைக் காண வேண்டும் என்று ஆவலினால் சீரடிக்கு வருகைப் புரிந்தப் போது, அங்கே கொடிகள் பறப்பதைக் கண்டவுடன் ஞானி என்பவர்  கொடிகள் மீது ஏன்  ஆர்வம்  கொள்ள வேண்டும்  என்று நினைத்த காரணத்தினால்,  சோமதேவ் சுவாமி அவர்கள் பகவானை சந்தித்த போது, பாபா  சுவாமி மீது முதலில்  கோபம் கொண்டு, பிறகு ,ஆசி வழங்கியதைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை..

நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தர், பாபாவை தரிசிக்க வந்த  பெண்மணியின் அபூர்வ அழகினால்  பாதிக்கப்பட்டு நிலைக் குலைந்து போனதைத் கண்ட பாபா, உள்ளம் தூய்மையாகவும், கெட்ட எண்ணமும் இல்லையென்றால் ஏன் பயப்பட வேண்டும் என்று அறிவுரைக்கூறி, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரை ...

மேற்க்கண்ட தலைப்புக்களைப் பற்றிய  விளக்கவுரைகளை  ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥சத்குருவைத் தியானித்து, ஆத்மார்த்தமாக சரணாகதி அடைவதன் மூலமாக, எவ்வாறு மாயை, கர்மவினையின் தாக்கம் மற்றும் சம்சாரப் பந்தத்திலிருந்து விடுபட்டு உயரிய நிலையை அடைகின்றோம்  என்பதைப் பற்றிய சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

வேதங்களும், புராணங்களும் கூட  பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது...அவ்வாறென்றால்  ஏதுமறியாதவர்களாகிய நாம், எங்ஙனம் நமது சத்குரு  சாயீபாபாவைப் பற்றிய சிறப்பு இயல்புகளையும், அருட்செயல்களையும், பாபாவின் ஏகத்தன்மைகளையும்  விவரிக்க இயலும்.?  இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகின்றோம்.. உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும்..ஆனால் நம் சத்குருநாதர் பாபாவின் உயரிய  நல்ல பண்புகளும், மிகுந்த  தாய்மையுணர்வும்,  பேதமின்றி அனைத்து பக்தர்களையும்  நேசிக்கும் பாங்கும், நம்முடைய மௌன விரதத்தை மறக்கச்செய்து நாவால் ஏதாவது உரைக்குமாறு  ஊக்குவிக்கின்றன...  நண்பர்கள், உறவினர்கள் போன்றோர்கள்  நம்மோடு இருந்து உண்ணவில்லை என்றால்,  நல்ல ருசியான உணவுக்கூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை...ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து  உணவை உண்டால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன.  சாயீ லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயீ லீலாம்ருதமும் இது போன்றதே...இந்த சாயீன்  அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ண முடியாது..அனைத்து சாயீன்  அடியவர்களும்  ஒன்றுச்சேர்ந்து, எவ்வளவு சாயீன் அமிர்தத்தைப் போன்ற உபதேச அமுத மொழிகளையும், லீலைகளையும்  பருக முடியுமோ, அவ்வளவு அதிகமாக  ஏற்றுக் கொண்டால் எளிதில் உயரிய நிலையை அடைய ஏதுவாக இருக்கும்..

இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும்,  தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும், பாபாவின் அனுக்கிரகம் ஆசியும்  இருப்பதால் மட்டுமே என்பதே உண்மை....சத்குருவிடம்  பரிபூரண சரணாகதி அடைவதும்,  தியானிப்பதும் மட்டுமே நமது தலையாயக்  கடமை என்றுக் கூறலாம்... க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும் விட தவமிருத்தல் நல்லது..மேலும்  தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம்...

இவையனைத்தையும்  விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது..ஆகவே சாயீயின் நாமத்தை ஸ்மரணம் செய்து, அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக..மாயை, கர்மவினையின் தாக்கம், மற்றும் சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை என்று அறிவீர்களாக.. மேலே கூறியவாறு நமது கடமையைச் சரிவர செய்தோமேயானால் சாயீநாதர்  நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர் ஆவார்...  இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்...

🔥எந்தவிதக் குறிக்கோளும் இன்றி தன்னை சோதிக்க  வந்த பக்தர் ஹரி கானோபா என்பவரின்,  தொலைந்தக் காலணிகளை சிறுவன் மூலம் மீட்டுக் முகவரியைக்  கூறிக் கொடுக்க வைத்த  பாபாவின் எங்கும் நிறைந்த பேரறிவைக் கண்டு  வியந்து மேன்மேலும் சரணாகதி அடைந்ததைப் பற்றிய நிகழ்வின் அனுபவ விளக்கவுரையை இங்கே காண்போம்🔥

பம்பாயைச் சேர்ந்த ஹரி கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் பாபா புரிந்த  லீலைகளைப் பற்றி  கேள்வியுற்றார்.. அவர் ஒரு சந்தேகப் பிராணியாக இருந்ததால் அவற்றை நம்பவில்லை..அவர் பாபாவைத் தாமே சோதிக்க விரும்பினார்...எனவே சில பம்பாய் நண்பர்களுடன் சீரடிக்கு வந்தார்... ஜரிகைத் தலைப்பாகையும், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார். பாபாவைத் தொலைவிலிருந்து கண்ட அவர், அவரிடம் சென்று வீழ்ந்துப்பணிய எண்ணினார்..இருப்பினும் தமது  புதிய காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை..எனினும் திறந்தவெளியில் ஒரு மூலைக்குச் சென்று காலணிகளை கழட்டி  வைத்துவிட்டு, மசூதிக்குள் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்...பாபாவைப் பக்தியுடன் வணங்கி உதீயும், பிரசாதமும்  பெற்றுக் கொண்டு  திரும்பினார்..அங்கு மூலையில் வைத்திருந்த காலணிகள் மறைந்து போயிருந்ததை அவர் கண்டார்..அனைத்து இடங்களிலும் தேடியும்  கிடைக்கவில்லை.. ஆகவே தான் இருந்த இடத்துக்கு மிகவும் மனமுடைந்துப் போய்த் திரும்பினார்..  

குளித்து வழிப்பட்டு நிவேதனம்  சமர்ப்பித்து விட்டு, உணவுக்காக அமர்ந்தார்..ஆயினும் நீண்ட  நேரம் காலணிகளைத் தவிர வேறொன்றையும் பற்றி அவர் நினைக்கவில்லை...உணவை முடித்துக் கொண்டபின், கை கழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்தியப் பையன் அவரை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.அவனது கையில் ஒரு கோல் இருந்தது..அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன....கை கழுவ வெளியே வந்த நண்பர்களிடம் பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், 'ஹரிகா பேடா ஜரிகா ஃபேடா..!' ('க' என்பவரின் புதல்வரான ஹரியே..! ஜரிகைத் தலைப்பாகைக்காரரே..!) என்று கூவிக்கொண்டே வீதிகளில் செல்லும்படி சொல்லியிருப்பதாகவும், யாராவது இக்காலணிகளைக் கேட்டால் அவரது பெயர் ஹரிதானா என்றும், அவர் 'க'வின் அதாவது கானோபா புதல்வர்தானா என்றும்,  ஜரிகை தலைப்பாகை அணிபவர் தானா என்றும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, அதை உரியவரிடம்  கொடுக்கும்படி கூறியிருப்பதாகவும் கூறினான்....இதைக்கேட்டு ஹரி கானோபா மிகவும் மகிழ்வும், ஆச்சரியமும் அடைந்தார்...அவர் பையனிடம் சென்று காலணிகள் தம்முடையவையே என்றார்...தனது பெயர் ஹரி என்றும், தாம் 'க'வின் அதாவது கானோபாவின்  புதல்வன் என்றும் கூறி ஜரிகைத் தலைப்பாகையையும் காண்பித்தார்....

உடனே சிறுவன்  திருப்தியடைந்து அவரிடம் காலணிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.. தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியில் அனைவருக்கும் தெரியுமாறு இருந்தது..எனவே பாபாவும் அதைக் கண்டு இருக்கலாம்...ஆனால் தன் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் முதல் முறையாக சீரடிக்கு வந்திருப்பதால் பாபா எங்ஙனம் அறிந்திருக்கக் கூடும் என மனதில் நினைத்து  ஒரு கணம் வியந்தார்..வேறு எவ்வித குறிக்கோளும் இன்றி, பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் சீரடிக்கு பாபாவை தரிசனம் செய்ய  வந்தார்..இந்நிழ்ச்சியால் பாபா ஒரு மிகப்பெரும் சத்புருஷர் என்று அவர் அறிந்துகொண்டார்...அவர் விரும்பியதை அறிந்துகொண்டு திருப்தியுடன் வீடு திரும்பினார்...

🔥சோமதேவ் சுவாமி அவர்கள், பாபாவைக் காண வேண்டும் என்று ஆவலினால் சீரடிக்கு வருகைப் புரிந்தப் போது, அங்கே கொடிகள் பறப்பதைக் கண்டவுடன் ஞானி என்பவர்  கொடிகள் மீது ஏன்  ஆர்வம்  கொள்ள வேண்டும்  என்று  கருதியதன் காரணமாக, சோமதேவ் சுவாமி அவர்கள் பகவானை சந்தித்த போது, பாபா  சுவாமி மீது  முதலில் கோபம் கொண்டு, பிறகு  ஆசி வழங்கியதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள்..காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார்..1906-ஆம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார்...இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக் கொண்டனர்..ஐந்தாண்டுகளுக்குப் பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார்..பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்..

சீரடிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆவல்  எழுந்தது.. பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, சீரடிக்குக் கிளம்பினார்..  மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக் கொண்டு சீரடிக்குச் சென்றார்...சீரடிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார்... வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம்.. ஆயின் இப்புறச் சின்னங்கள்  ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா.  ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில் அது வேறு விதமாய் இருந்தது...கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்.?  இது துறவையா உணர்த்துகிறது...?  இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்...

இவ்வாறாக அவர் தமது சீரடி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார்..அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும். கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது, சீரடியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்கள் அனைத்தையும்  கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைக் குலையும்" என்றார்கள்...  இதைக்கேட்டு ஸ்வாமி மேலும், குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு போன்ற  படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, (அனேகரைக் கண்டிருக்கிறேன்)...அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிச் செல்வதே  எனக்கு நன்று" என்றுரைத்தார்.. இதைக் கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார்...உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்...

பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், நாம் தரிசனம் செய்யப்போகும் சாதுவாகிய  பாபா எவ்வித  கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர்...அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர்..முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து, சீரடிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர்....  பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க, குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின.  "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகின்றதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுக் கூர்ந்தார்... பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும்....நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ.  இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை.  மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்...?  இது துறவின் அறிகுறியா...?  இங்கே கணமேனும் இருக்காதே" என்றார்.  ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்..

பாபா  தன் எங்கும் நிறைந்த பேரறிவால் தமது உள்ளத்தில் இருப்பதை அறிந்துப்  பேசுகின்றார்  என்று  உணர்ந்தார்....எத்தகைய நிறைப் பேரறிவுடையவர் அவர்!  தாம் ஞானமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார்...சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார்...தான் மட்டும் ஏன் இவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்...? அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து, இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேற வேண்டுமென நினைத்தார்... பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே. பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு, பாபாவின் மீது  முற்றிலும் பற்று உறுதியுள்ள அடியவராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது...  

🔥நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தர், பாபாவை தரிசிக்க வந்த  பெண்மணியின் அபூர்வ அழகினால்  பாதிக்கப்பட்டு நிலைக் குலைந்து போனதைத் கண்ட பாபா, உள்ளம் தூய்மையாகவும், கெட்ட எண்ணமும் இல்லையென்றால் ஏன் பயப்பட வேண்டும் என்று அறிவுரைக்கூறி, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரை ...🔥

நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமாட்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கின்றார்...ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மகல்சாபதி மற்றவருடன்  அமர்ந்திருக்கையில், பீஜாப்பூரிலிருந்து ஒரு முகமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார்...கோஷா (பர்தா) அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பெண்களைக் காண நேரலாம் என்றுக் கருதி வேறிடம் சற்று நேரம்  போய்விட விரும்பினார்.  ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார்.. அந்தப்  பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர்... பாபாவின் பாதங்களை வணங்குவதற்காக, அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார்...அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பகவான் அவரை நோக்கி,  நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய்..புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச்  செய்யட்டும்.. நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம்...கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார்..அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்...இவ்வாறு இருந்தால் மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும்...முன் கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும்...உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்தில்  எவ்வகையிலும், எவ்விதக் கஷ்டமும் இல்லை... நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்..? கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்..?" என்றார்.

ஷாமா அவ்விடத்தில் இருந்தார்...பாபா கூறியதன் பொருளை அவரால் உணர்ந்துக் கொள்ள  இயலவில்லை..  எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார்...நானா கூறுகின்றார்..நான் இங்கு பகவானை தரிசிக்க வந்த  அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கம் அடைந்ததையும்,  பாபா அதை எங்ஙனம் அறிந்து, அதைப்பற்றி என்ன  அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார்..மேலும்  பாபா அறிவுருத்தியதைப்  நானா இவ்வாறாக மேலும்  விளக்கினார். ."அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது...அதைத் தான்தோன்றித் தன்மையுடன்  போக அனுமதிக்கக் கூடாது... உணர்வுகள் குழப்பமுறலாம்..ஆயினும் மனதை விழிப்புணர்வுடன் கவனித்துக்  கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும்...  பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது....

விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன..ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது...பொருமையான,  படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிக்காண இயலும்...  உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது...ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது.  தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.  அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே...பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும்..வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை...கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது.. பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும்...  இவ்வாறாக அனைத்து உணர்வுகளும்  எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டு விடும்... இவ்வாறாக பயிற்சி மேற்க்கொண்டால், அனைத்து வித பொருள் மற்றும் தேகம் சார்ந்ததை  அனுபவிப்பதில் கூட நீங்கள் இறைவனைப் பற்றி ஞாபகப்படுத்தப் படுவீர்கள்...வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித் தொடர அனுமதிக்கப்பட்டு, அவைகள்பால் பற்றுக் கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது....புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது.. .விவேகம் என்னும் சாரதியைக் கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத்  தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம்...  அத்தகையதொரு சாரதியின்  முடிவான இருப்பிடமும், நமது உண்மையான  வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்த பாபாவின் திருவடிகளை எய்துவோம்" என்றார்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும்  சாந்தி நிலவட்டும்..🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏

சனி, ஜூன் 26, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தெட்டு(48)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏻

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::நாற்பத்தெட்டு(48)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது.ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின்  மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று  உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது..மேலும் இப்பாராயணத்தின்  மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...

அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம்:: நாற்பத்தெட்டு(48)🙏

🙏முன்னுரை...🙏

சத்குரு என்பவர் யார்..? சத்குருவின் சிறப்பியல்புகளும், லக்ஷணங்கள் பற்றிய சூட்சம விளக்கமும் மற்றும் சீரடிபாபா தன்  இயல் வாழ்க்கை முறையை எவ்வாறு  அனுஷ்டித்தார்  என்பதன் விளக்கம் மற்றும்  தூய்மையான அன்புடன் இறையைப் பின்பற்றுதலே உயரிய  நிலையை அடைய வழி  வகுக்கும் என்பதன் மூல சூட்சம உரை ..

சேவடே  தன்னுடைய சத்குருவின் வைத்திருந்த நம்பிக்கையினால், என்னை பாபா தேர்வில் வெற்றிப்பெறச் செய்வார் என்று கூறியதைக் கேட்டு  அவமதித்த சபட்ணேகர், மேலும் பாபா மீது வைத்திருந்த  நம்பிக்கையையும், பாபாவின் அருட்செயலையும் கேலிசெய்தக் காரணத்தால் , பாபாவின் ஆசியைப் பெறமுடியாமல் போனதற்காக எவ்வாறு பிரார்த்தனைச் செய்து ஆசிப்பெற்றார் என்பதன் அனுபவ விளக்கவுரை... 

திருமதி சபட்ணேகர் என்ற பக்தையின்  கனவில் பகவான் காட்சி  வழங்கியதைப் பற்றி தன் கணவனிடம் எடுத்துக் கூறியவுடன்,  இருவரும் சீரடி சென்று  பாபாவைச் சந்தித்தப் போது , பாபா  இவ்விருவர்களின் இயல் வாழ்க்கையில் நடந்த அனைத்து  நிகழ்வையும் எடுத்துக்கூறி, எவ்வாறு  குழந்தைப்பாக்கியத்தை அருளி ஆசிர்வதித்தார் என்பதைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை.. 

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில் சத்குரு என்பவர் யார்..? சத்குருவின் சிறப்பியல்புகளும், லக்ஷணங்கள் பற்றிய சூட்சம விளக்கமும் மற்றும் சீரடிபாபா தன்  இயல் வாழ்க்கை முறையை எவ்வாறு  அனுஷ்டித்தார்  என்பதன் விளக்கம் மற்றும்  தூய்மையான அன்புடன் இறையைப் பின்பற்றுதலே உயரிய  நிலையை அடைய வழி வகுக்கும் என்பதன் மூல சூட்சம உரையை இங்கு காண்போம்....🔥

இவ்வத்தியாயத் தொடக்கத்தில் சாயீபகவான் என்பவர், குருவா அல்லது  சத்குருவா என்று ஒரு பக்தர்  கேட்டக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக,  ஆசிரியர்  ஹேமாட்பந்த் அவர்கள்  சத்குருவின் லட்சணங்களையும், அடையாளங்களையும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..வேதம், வேதாந்தம் அல்லது சாஸ்திரங்கள் ஆறையும் நமக்குக் கற்பிப்பவர், மூச்சைக் கட்டுப்படுத்துபவர், தமது உடம்பில் முத்திரைச் சின்னகளைப் ( அதாவது விஷ்ணுவின் சங்கு சக்கரச் சின்னங்களைப்) பொறித்துக் கொண்டிருப்பவர், பிரம்மத்தைப் பற்றி இனிமையாக உபதேசம் செய்பவர், தமது சீடர்களுக்குச் சில மந்திரங்களை உபதேசித்து, அதைக் குறிப்பிட்ட முறை ஜெபிக்கச் கூறி குறிப்பிட்ட நிச்சயக்கப்பட்டக்  காலத்திற்குள் அதனால் ஏற்படும் பலனைக் காட்டஇயலாதவர், உயரிய மூலத் தத்துவங்களைத் தனது வார்த்தை ஞானத்தால் அழகாக விளக்கினாலும் தனக்கு எவ்வித சொந்த அனுபவமோ, ஆன்ம உணர்வோ இல்லாதவர் எவரோ ஆகிய இவரெல்லாம் சத்குரு என்பவர்  அல்ல என்பதைப் புரிந்துக்கொள்ளவும்...

தனது உபன்யாசத்தால் இகபர இன்பங்களின் மீது வெறுப்புத் தோன்றச் செய்து, ஆன்ம உணர்வில் ஒரு சுவையை அளிப்பவரும், ஆன்ம உணர்வைப்பற்றிய அனுபூதி தன்மையும், எதிலும் பற்றின்மையும், அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டவரும், தனக்குள்ளே அண்ட சராசரத்தையும் கண்டவரும்,  நடைமுறை ஞானம் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவரும் 'சத்குரு' என்று அழைக்கபபடுவற்குத் தகுதி உடையவராகின்றார்.  ஆத்ம மறுமலர்ச்சி பெறாமல்  குறைபாடு உடையவரும், ஆத்ம அனுபூதி அடையாத   ஒருவர் அஃதை எவ்வாறு  பிறருக்கு  உபதேசம் அளிக்க இயலும்..? சத்குரு என்பவர்  கனவிலும் கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ,உதவியையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை... மாறாக அவர்களுக்குச் சேவைகள் செய்ய விரும்புகின்றார்..தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் ஒருபோதும்  எண்ணியதில்லை..தன் பக்தர்களைத்  தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது,  தமக்குச் சமமானவன் அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன்  என்றேக்  கருதுகின்றார்.. சத்குருவின் முக்கியமான சிறப்பியல்புகள் என்னவென்றால, அவர் அமைதி, சாந்தம், சத்தியம், உண்மை, உயரிய தூய்மையான அன்பு, தாய்மையுணர்வு ஆகியவற்றின் உறைவிடமாக இருக்கின்றார்  என்பதேயாகும்.. அவர் அமைதியற்றோ, வருத்தமாகவோ,  எதனையும்  எதிர்பார்த்தோ  இருந்ததே இல்லை எனலாம்.. மூத்தோன், கற்றோன், அனைத்தும் தெரியும்  என்ற கர்வம், அவருக்குக் ஒருபோதும் கிடையாது.. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்லவன், கெட்டவன்,  அர்த்தசாஸ்த்திரம் அறிந்தவன், ஒன்றுமே அறியாதவன், சத்தியன், அசத்தியன் ஆகியோர் எவராக இருந்தாலும் பேதம். பாராது  அனைவரையும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வோரு தனிமனித உயிருக்கு ஏற்றாற்ப்போல் உபதேசம் வழங்கி சூட்சமமாக அறிவுருத்திக் கடைத்தேற்றம் அடையச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

முந்தைய பிறப்புக்களில் செய்த நற்கருமங்களின் குவியலின் விளைவால் சாயீபாபாவைப் போன்ற சத்குருவைச் சந்தித்து தாம் அவரால் ஆசீர்வதிக்கப்படும் நல்லதிர்ஷ்டத்தைப் பெற்றதாக ஹேமாட்ப்ந்த் இங்கே குறிப்பிடுகின்றார்.. தம்முடைய இளமையான காலத்தில் கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை எதன்மீதும் பற்று இல்லை.. (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் கரங்களில்  இருந்திருக்கின்றது.) அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர்கள்  யாருமில்லை, வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை.. பதினெட்டாம் வயதிலிருந்தே பாபாவின் மனக்கட்டுப்பாடு முழுமையானதாகவும், எதிலும்  பற்றின்மையும், அசாதாரணமானதாகவும் இருந்தது..அப்போது அவர் தனிமையான  இடத்தை தேர்வு செய்து தியானம் மேற்க்கொண்டவாறு பயமற்று வாழ்ந்தார்...  எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார்..தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார்.  எனவே ஒருவகையில் தன் அடியவர்கள் பால் சார்ந்தவரானார்... பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு, மகாசமாதியான பின்பும்  இன்று வரையில்  அளித்து வருகின்றார்.

பக்தி, நம்பிக்கை என்னும் அகவிளக்கை நாம்  ஏற்றி, அன்பெனும் திரியை ஏற்றவேண்டும்.. இவ்வாறு செய்யப்படும்போது, ஞானம் (ஆன்ம உணர்வு) என்னும் ஜோதி சுடர்விட்டு அதிகமாகப் பிரகாசிக்கும்.  அன்பில்லாத வெறும் ஞானம் வறண்டது, எவரும் அத்தகைய ஞானத்தை விரும்புவதில்லை.  அன்பின்றி திருப்தி ஏற்படுவதில்லை..எனவே நாம் தடையற்ற, எல்லையற்ற,  எதனையும் எதிர்பாராத  அன்பு உடையவர்களாக வேண்டும்...அன்பை எங்ஙனம் நாம் எடுத்துக்கூறினாலும், தூய்மையான அதன்முன் எதுவும் முக்கியமற்று விடுகிறது...? அன்பின்றி நமது கல்வி, கேள்வி, படிப்பு யாவும் பயனற்றுவிடுகிறது..அன்பு உள்ளத்தில் உதயமாகும்போது பக்தி, பற்றின்மை, அமைதி, விடுதலை இவையாவும் அவைகளின் அனைத்துச் செல்வக் களஞ்சியங்களுடன் வருகின்றன..அன்பை அடைய ஊக்கத்துடன் விரும்பினாலன்றி, எதைக்கொடுத்தும் பெற இயலாது..எனவே எங்கே உண்மையான அன்பும், ஆர்வமும், ஏக்கமும் இருக்கின்றதோ, கடவுள் தம்மைத்தாமே அவ்விடத்தில் ப்ரதிஷ்டை செய்துக் கொள்கின்றார்..அது அன்பை உள்ளடக்கிய விடுதலைக்கு ஒரு வழியாகிறது...இப்பொழுது  இந்த அத்தியாயத்தின் முக்கிய நிகழ்விற்கு  இப்போது திரும்புவோம்..ஒரு ஞானியிடம் ஒரு மனிதன் தூய உள்ளத்துடன் சத்குருவின் பாதக்கமலத்தில் சரணாகதி அடைந்தால், முடிவாக அவன் காப்பாற்றப்படுவது உறுதி.  இது பின்வரும் நிகழ்வால் விளக்கப்படுகிறது...

🔥சேவடே  தன்னுடைய சத்குருவின் வைத்திருந்த நம்பிக்கையினால், என்னை பாபா தேர்வில் வெற்றிப்பெறச் செய்வார் என்று கூறியதைக் கேட்டு  அவமதித்த சபட்ணேகர், மேலும் பாபா மீது வைத்திருந்த  நம்பிக்கையையும், பாபாவின் அருட்செயலையும் கேலிசெய்தக் காரணத்தால் , பாபாவின் ஆசியைப் பெறமுடியாமல் போனதற்காக எவ்வாறு பிரார்த்தனைச் செய்து ஆசிப்பெற்றார் என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

சோலாப்பூர் ஜில்லா, அக்கல்கோட்டைச் சேர்ந்த சபட்ணேகர் வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார்..அவருடன் படிக்கும் சேவடே அவரைச் சந்தித்தார்..மற்றும் பல மாணவர்களும் ஒன்றாகக் கூடித் தாங்கள் படிக்கும் பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர்..அவர்களுக்குள் ஏற்பட்ட வினா விடைகளிலிருந்து சேவடே என்பவர்தான் எல்லோரைக்காட்டிலும் பரீட்சைக்குத் தயாரற்ற நிலையிலிருந்தார் என்று தெரியவந்தது... எனவே, மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர்...தாம் சரியாகப் படிக்கவில்லையாயினும் தமது சாயிபாபா இருப்பதால் தம்மை வெற்றியடையச் செய்வார் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.

சபட்ணேகர் இக்கூற்றால் ஆச்சரியமடைந்தார்.. அவர் சேவடேயைத் தனியே அழைத்துக் கொண்டுபோய் அவர் அவ்வளவு உயர்வுபடக் கூறும் சாயீபாபா என்பவர் யார் என்று கேட்டார்.  அகமத்நகர் ஜில்லா சீரடியில் உள்ள மசூதியில் பக்கிரி ஒருவர் வாழ்கின்றார்...அவர் மிகப்பெரும் சத்புருஷர்.. மற்ற ஞானிகள் இருக்கலாம், ஆனால் இவர் ஒப்பற்றவர்... முன்வினையில் பல நற்கருமங்களின் பலன் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தாலன்றி ஒருவரும் அவரைப் பார்க்க முடியாது...நான் முழுமையும் அவரை நிச்சயம் நம்புகிறேன். அவர் சொல்வது பொய்யாவதில்லை.. அடுத்த ஆண்டு நான் தேறிவிடுவேன் என்று அவர் எனக்கு உறுதிக் கூறி இருக்கிறார்...கடைசி வருடத் தேர்வையும், அவர்தம் கருணையால் நான் தேறிவிடுவேன் எனக்கூறினார் சேவடே...  சபட்ணேகர் அவர் நம்பிக்கையைக் கண்டு சிரித்து அவரையும், சாயீபாபாவையும் கேலி செய்தார்.....

சபட்ணேகர் தமது தேர்வில் வெற்றிப்பெற்று  அக்கல்கோட்டில் குடியேறி அங்கு வக்கீலாகத் தொழில் நடத்தினார்... இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1913-ஆம் ஆண்டில் தொண்டையில் வந்த வியாதி காரணமாக அவரது ஒரே மகனை இழக்க நேரிட்டது..அது அவர் உள்ளத்தைப் பிளந்தது...பண்டரீபுரம், கனகாபூர் மற்றும் பல புனித க்ஷேத்திரங்களுக்கு அவர் க்ஷேத்ராடனம் செய்து அமைதியைத் தேடினார்..அவருக்கு மனஅமைதி கிடைக்கவில்லை.. பின்னர்  வேதாந்தம்  கற்கத் தொடங்கினார்..அதுவும் அவருக்குப் பயனளிக்கவில்லை.... இத்தருணத்தில், தமது நண்பரான  சேவடே, பாபாவைப் பற்றிக் கூறியதும், பாபாவின்மேல் அவருக்குள்ள நம்பிக்கையையும், சபட்ணேகர் நினைவு கூர்ந்தார்.  தாமும் சீரடிக்குச் சென்று பாபாவைக் காணவேண்டுமென்று அவர் எண்ணினார்..தம் தம்பி பண்டிட்ராவுடன் அவர் சீரடிக்குச் சென்றார்.. பாபாவைத் தூரத்திலிருந்து கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்..பாபா அருகே சென்று வீழ்ந்துபணிந்து, பக்தியுடன் ஒரு தேங்காயை முன்னே வைத்தபோது, "போ...! வெளியே" என்று பாபா கூச்சலிட்டார்...சபட்ணேகர் தலைகுனிந்துக்  கொண்டு, பின்னால் நகர்ந்துபோய் வேறுபக்கம் அமர்ந்திருந்தார்...  மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவர் யாரிடமாவது கலந்து ஆலோசிக்க விரும்பினார்...யாரோ பாலா ஷிம்பியின் பெயரைக் குறிப்பிட்டனர்..  சபட்ணேகர் அவரைச் சந்தித்து அவருடைய உதவியை வேண்டினார்... அவர்கள் பாபாவின் போட்டோக்களை வாங்கிக்கொண்டு அவற்றுடன் மசூதிக்குள் வந்தனர்..பாலா ஷிம்பி ஒரு போட்டோவை எடுத்து பாபா கையில் கொடுத்து அது யார் போட்டோ என்று கேட்டார்.. பாபா சபட்ணேகரைக் காண்பித்து, இது அவரது காதலன் போட்டோ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.  எல்லோரும் சிரித்தனர்.  பாலா ஷிம்பி பாபாவை அச்சிரிப்பின் குறிப்பு என்ன என்று கேட்டுக்கொண்டே சபட்ணேகரை முன்னால் வந்து தரிசனம் செய்துகொள்ளும்படி சமிக்ஞை செய்தார்....

சபட்ணேகர் வீழ்ந்து கும்பிடத் தொடங்குகையில், பாபா மீண்டும் "போ...! வெளியே" என்று கூச்சலிட்டார்...சபட்ணேகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..பின்னர், இருவரும் (பாலா ஷிம்பி, சபட்ணேகர்) கைக்கோர்த்து பாபாவின்முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.  பாபா முடிவாக சபட்ணேகரை உடனே வெளியே போகும்படி கட்டளையிட்டார்...இருவரும் வருத்தமடைந்து, மனமுடைந்து போயினர்.  பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டுமாதலால் மறுமுறை வரும்போது தரிசனம் தரவேண்டுமென்று, பிரார்த்தனை செய்துக்கொண்டு சபட்ணேகர்  சோர்ந்த உள்ளத்துடன் வீடு திரும்பினார்..

🔥திருமதி சபட்ணேகர் என்ற பக்தை, தனது  கனவில் பகவான் காட்சி  வழங்கியதைப் பற்றி தன் கணவனிடம் எடுத்துக் கூறியவுடன்,  இருவரும் சீரடி சென்று  பாபாவைச் சந்தித்தப் போது , பாபா  இவ்விருவர்களின் இயல் வாழ்க்கையில் முன்னர்  நடந்த அனைத்து  நிகழ்வையும் எடுத்துக்கூறி, எவ்வாறு குழந்தைப் பாக்கியத்தை  அருளி ஆசிர்வதித்தார் என்பதைப்  பற்றிய அனுபவ விளக்கவுரை.. 🔥

ஓர் ஆண்டு ஓடியது.. எனினும் சபட்ணேகர் மனம் அமைதியடையவில்லை...கனகாபூருக்குச் சென்றார்.. அங்கு அவர் இன்னும் அதிகமான மனக் கலக்கத்தை அடைந்தார்.. பின்னர் ஓய்வுக்காக மதேகாவன் சென்றார்... பின்னர் முடிவாக காசிக்குச் செல்லத் தீர்மானித்தார்.  புறப்படுவதற்கு இரண்டு தினங்களுக்குமுன் அவரின் மனைவி ஒரு கனவு கண்டாள்.  அக்கனவில் தான் ஒரு மண் பானையுடன் லக்கட்ஷாவின் கிணற்றுக்குப் போய்க்கொண்டு இருப்பதாகவும், வேப்பமரத்தடியில் ஒரு துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதையும், அவர் அவளருகில் வந்து, "அன்புள்ள பெண்ணே...! எதற்காக ஒன்றுமில்லாத ஆயாசம்..? நான் உனது பானையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன்" என்று கூறியதாகவும் கண்டாள். .அப்பக்கிரிக்குப்  பயந்து காலிப்  பானையுடன் விரைவாகத் திரும்பியபோது, அவரால்  தொடரப்பட்டத்  தருணத்தில்  தூக்கம் கலைந்து  கண்ணைத் திறந்து பார்த்தாள். இக்கனவைத் தனது கணவனிடம் கூறினாள்...இது ஒரு புனிதமான நேரம் என்று அவர்கள் நினைத்து சீரடிக்குப் புறப்பட்டனர்.. அவர்கள் மசூதியை அடைந்தபோது பாபா அங்கில்லை... லெண்டித்தோட்டத்திற்குச் சென்றிருந்தார்.. பகவான்  திரும்பிவரும் வரையில் காத்திருந்தனர்..அவர் திரும்பிவந்ததும் அவள் கனவில் கண்ட அப்பக்கிரியின் தோற்றம் பாபாவுடன் சரியாக ஒத்திருந்ததைக் கண்டு அவள் ஆச்சரியம் அடைந்தாள்..பணிவுடன் அவள் பாபாவின்முன் வீழ்த்து வணங்கிவிட்டு அவரை நோக்கி அமர்ந்திருந்தாள்...

அவளது பணிவைக்கண்டு பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கே உரிய விசித்திரமான பாணியில் மூன்றாமவர் ஒருவரிடம் ஒரு கதை சொல்லத் தொடங்கினார்.. எனது புயம், அடிவயிறு, இடுப்பு எல்லாம் நீண்ட நாட்களாக வலித்துக்கொண்டு இருந்தன..பல மருந்துகளைச் சாப்பிட்டேன்...வலி குறையவில்லை. மருந்துகள் எவ்வித நிவாரணத்தையும் அளிக்கவில்லை...ஆதலால் நான் மருந்துகளின் மேல் வெறுப்படைந்தேன்.  ஆனால் இப்போது திடீரென்று எல்லா வலிகளும் நீங்கிவிட்டது கண்டு ஆச்சரியம் அடைகிறேன்" என்றார்... எவ்விதப் பெயரும் கூறப்படவில்லை..ஆயினும் உண்மையில் அது திருமதி  சபட்ணேகரின் கதையே ஆகும்..பாபா விவரித்தபடியே அவளது வலி உடனே நீங்கிவிட்டது... அவள் மகிழ்ச்சி அடைந்தாள்...

பின் சபட்ணேகர்  தரிசனம் செய்துகொள்ள  முன்னால் சென்றார்..அவர் மீண்டும் முந்தைய "வெளியே போ!" என்ற வார்த்தைகளுடன் வரவேற்கப்பட்டார்...இந்த முறை அவர் தவறுக்கு வருந்துபவராகவும், இன்னும் விடாமுயற்சி உள்ளவராகவும் இருந்தார்..தனது முந்தைய வினைகளே பாபாவின் அதிருப்திக்குக் காரணம் என்று நினைத்து  அதற்கு ஈடுசெய்யத் தீர்மானித்தார்..பாபாவைத் தனியாகக் கண்டு, தனது முந்தைய வினைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள முடிவுசெய்து தனது தலையை பாபாவின் பாதத்தின் மீது வைத்தார்..பாபா தமது கையை கையை அவர் தலைமீது வைத்தார்..பாபாவின் கால்களை சபட்ணேகர் கீழே அமர்ந்து வருடத் தொடங்கினார்..பின் ஆடுமேய்க்கும் ஆய்மகள் ஒருத்தி பாபாவின் இடுப்பை உட்கார்ந்து பிடித்துவிடத் தொடங்கினாள்...பாபா தமக்கே உரிய பாணியில் ஒரு வணிகனின் கதையைக் கூறத்  தொடங்கினார்....

வணிகனின்  வாழ்க்கை முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல்களையும்,  அவனது ஒரே மகன் இறந்தது உட்பட அனைத்தையும் எடுத்துரைத்தார்...பாபா கூறிக் கொண்டிருந்த கதை முழுவதும் தன்னுடையதே என்று அறிந்து, சபட்ணேகர் ஆச்சரியமடைந்தார்...பாபாவுக்கு அதன் ஒவ்வொரு விவரமும் தெரிந்தது கண்டு அதிசயமடைந்தார்...அவர் நிறைப் பேரறிவுடையவர் என்றும், அனைவரின் இதயங்களையும் அறிந்திருப்பவர் என்றும் அறியலானார்...இந்த எண்ணம் அவர் மனதில்  எழுந்த போது, பாபா ஆடுமேய்க்கும் பெண்ணை நோக்கி சபட்ணேகரைச் சுட்டிக்காண்பித்து, "இந்த ஆள் அவரது குழந்தையை நான் கொன்றுவிட்டதாக, என் மீது பழி சுமத்தித் திட்டுகின்றார்...நான் எனது மக்களின் குழந்தைகளைக் கொல்கின்றேனா..? ஏன் இவர் மசூதிக்கு வந்து அழுகிறார்..?  நான் இப்போதே ஒன்றைச்  செய்கிறேன்..அதே குழந்தையை மீண்டும் அவரது மனைவியின் கருப்பையில் கொண்டு வைக்கின்றேன்"  என்று கூறினார்...

இவ்வார்த்தைகளைக் கூறிக்கொண்டே தமது ஆசி வழங்கும்  கரத்தை, அவர் தலைமீது வைத்து, "இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை...இப்போது உனக்குக் கவலையில்லை...என்மீது முழு நம்பிக்கையையும் வைப்பீராக...நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்.!" என்று கூறித் தேற்றினார்..சபட்ணேகர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, பாபாவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தார்..பின்னர் அவர் பூஜை, நிவேதனம்  இவைகளைத் தயார் செய்துக் கொண்டு மனைவியுடன் மசூதிக்கு வந்தார்...தினந்தோறும் இவைகளை பாபாவுக்குச் சமர்ப்பித்து, அவரிடமிருந்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தார்..மசூதிக்குள் கூட்டமாக இருந்தது...சபட்ணேகர் அங்குசென்று மீண்டும் மீண்டும் வணங்கிக் கொண்டிருந்தார்.. தலையோடு தலைகள் மோதிக் கொள்வதைக் கண்ட பாபா சபட்ணேகரை நோக்கி, "ஓ...! நீ ஏன் அடிக்கடி வணங்கிக் கொண்டிருக்கின்றாய்...?" என்று கேட்டார்...  "பணிவுடனும், அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்" என்றார்..  அன்றிரவு முன்னரே விவரிக்கப்பட்ட சாவடி ஊர்வலத்தை சபட்ணேகர் கண்டுகளித்தார்.  ஊர்வலத்தின்போது பாபா, பாண்டுரங்கன் மாதிரியே காட்சியளித்தார்...

மறுநாள் விடைபெறும்போது தக்ஷிணையாக ஒரு ரூபாய் கொடுக்க வேண்டுமென்றும், பாபா மீண்டும் கேட்டால் இல்லையென்று கூறாமல், பிரயாணம் செய்வதற்குப் போதுமான பணத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டு என்றும் நினைத்தார்...  மசூதிக்கு அவர் சென்று ஒரு ரூபாய் அளித்தபோது, அவருடைய எண்ணத்தின் படியே பாபா மேலும் ஒரு ரூபாய் கேட்டார்..அது கொடுக்கப்பட்டபோது, பாபா இதைக்கூறி ஆசீர்வதித்தார்...இத்தேங்காயை எடுத்து உனது மனைவியின்  சேலை  முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும் படாமல் சௌகரியமாகப் போய் வா" என்றார்..அவரும் அங்ஙனமே செய்தார்... 

ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஒரு மகன் பிறந்தான்...எட்டு மாதக் குழந்தையுடன் அவ்விருவரும் சீரடிக்கு வந்தனர்..அதை பாபாவின் காலடிகளில் வைத்து, "ஓ...! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கின்றோம்.. எனவே தங்கள்முன் வீழ்ந்து பணிகின்றோம்.. எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்..இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும்...பற்பல எண்ணங்கள் கனவிலும், நினைவிலும் எங்களை தொல்லைப் படுத்துகின்றன... எங்கள் மனதை அப்பாதிப்பிலிருந்து திரும்பச்செய்து, எங்களை  தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்" எனப் பிரார்த்தித்தனர்..  புத்திரனுக்கு 'முரளீதர்' என்று பெயரிடப்பட்டது..  பின்னர் பாஸ்கர், தினகர் என்ற இருவரும் பிறந்தனர்..இங்ஙனமாக சபட்ணேகர் தம்பதிகள் பாபாவின் மொழிகள் பொய்ப்பதில்லை என்றும், நிறைவேறாமல் போவதில்லை என்றும், முற்றிலும் உண்மையாகவே நிகழ்கின்றன என்றும் உணர்ந்தனர்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப்  பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🏼🙏🏼

வெள்ளி, ஜூன் 25, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தேழு (47)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🙏🙏

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம் ::நாற்பத்தேழு (47)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்.. இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்....ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...,

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

 🙏அத்தியாயம் :: நாற்பத்தேழு(47)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தான்  அண்ட சராசரத்திலும் இருக்கின்ற அனைத்து  ஜீவராசிகளிலும்  நீக்கமற நிறைந்து வியாப்பித்திருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, பாம்பு மற்றும் தவளையும், எவ்வாறு  முன் ஜென்மத்தில் மனிதர்களாக வாழ்ந்து, பிறகு  பகைமைக் கொண்டார்கள் என்பதை வழிப் போக்கனிடம் பாபா  விவரித்து,  எவ்வாறு தவளையை பாம்பிடமிருந்து மீட்டார் என்பதன்  விளக்கவுரை ...

வீரபத்ரப்பா என்பவர்  பாம்பாகவும், சனபசப்பா என்பவர்  தவளையாக ஏன் பிறந்தார்கள் என்பதைப் பற்றியும் ,  முன் ஜென்மத்தில் வீரபத்ரப்பாவிற்கும் சனபசப்பாவிற்கும். இடையேயான பகைமையின் மூலக் காரணம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரை... 

மேற்க்கண்ட தலைப்புக்களைப் பற்றிய விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கு கீழே காண்போம்...

🔥 முதலில்  சத்குருநாதர் சீரடி பாபா, தான் அண்ட சராசரத்திலும் இருக்கின்ற அனைத்து ஜீவராசிகளிலும்  நீக்கமற நிறைந்து வியாப்பித்திருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, பாம்பு மற்றும் தவளையும், எவ்வாறு  முன் ஜென்மத்தில் மனிதர்களாக வாழ்ந்து, பிறகு  பகைமைக் கொண்டார்கள் என்பதை வழிப் போக்கனிடம் பாபா  விவரித்து,  எவ்வாறு தவளையை பாம்பிடமிருந்து மீட்டார் என்பதன்  விளக்கவுரையை இங்கு காண்போம் ...🔥

சாயீயின் முகம் புனிதமானது...சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையழித்து நம்மீது பேரானந்தத்தைப் பொழிகிறார்...  கருணையுடன் அவர் நம்மை ஆழமாக  நோக்குவாராயின் நமது முன் ஜென்மக்  கர்மவினைக் கட்டுக்களெல்லாம் அறுப்பட்டு உயர்ந்த நிலையில் வாழ  வழிக் காட்டப்படுகின்றோம்.. கங்கை என்கின்ற புனித நதியானவள், தன்னிடம்  குளிப்பதற்காக வரும்  மக்களனைவரின் பாவங்களையும், சாபங்களையும்  நீக்குகின்றாள்...ஆனால் கங்கை கருதுகின்றாள், ஞானிகள் தன்னிடம் வரவேண்டுமென்றும், அவர்களது பாதாரவிந்தங்களால்  தான் ஆசீர்வதிக்கப்பட்டு, தன்னிடம் குவிக்கப்பட்ட பாவங்களும், சாபங்களும்  நீக்கப்படவேண்டுமென்றும் மிகுந்த ஆவலுடன் விரும்புகின்றாள்... ஞானிகளின் பாதாரவிந்தங்களால் மட்டுமே இப்பாவமூட்டை அழிக்கப்படும் என்று அவள் உறுதியாக அறிகிறாள்...ஞானிகளுக்கெல்லாம்  தலையாய முடிமணியாக சாயீநாதர் விளங்குகின்றார்..அவரிடமிருந்து இப்போது நம்மைத் தூய்மைப்படுத்தும் பின்வரும் நிகழ்வைப்  பார்ப்போம்....

சத்குருநாதர் சீரடி பாபா கூறுகின்றார்...ஒருநாள் எனது காலை உணவை உண்டபின் ஒரு சிறு நதிக்கரை வரும்வரை மெதுவாக உலவிக் கொண்டிருந்தேன்..களைப்பாய் இருந்தபடியால் அங்கு சற்று இளைப்பாறினேன்..எனது கைகால்களைக் கழுவிக்கொண்டு, குளித்துவிட்டு புத்துணர்ச்சி பெற்றேன்.. அங்கு மரங்கள் அடர்ந்து நிழல்மிகுந்த ஒரு வண்டிப்பாதையும், ஒற்றையடிப்பாதையும் இருந்தது..மெல்லிய இளங்காற்றும் இதமாக வீசிக்கொண்டிருந்தது.  நான் புகைபிடிப்பதற்கு சில்லிம் (புகைக்குழாய்) தயார் செய்துக் கொண்டிருந்தபோது ஒரு தவளை ஒலமிடுவதைக் கேட்டேன்...சிக்கிமுக்கிக் கல்லைத் தட்டி நெருப்புப் பற்றவைத்தபோது, ஒரு வழிப்போக்கன் எனதருகில் வந்து அமர்ந்து, என்னைப் பணிவுடன் வணங்கி உணவுக்கும், இளைப்பாறுதலுக்கும் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான்... புகைக்குழாயைப் பற்றவைத்து என்னிடம் கொடுத்தான்....மீண்டும் தவளையின்  ஓலம் கேட்டது...அவன் அது என்னவென்று அறிந்துக் கொள்ள விரும்பினான்...

நான் கூறினேன்  அவனிடம், ஒரு தவளை கஷ்டத்தில் இருக்கிறதென்றும், அது தன்னுடையதேயான முந்தைய வினைகளின் கசப்பான கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறினேன்.. முந்தைய பிறவிகளில் நாம் விதைத்த  விதையின்  பலனை நாமே அறுவடை செய்ய வேண்டும் தானே..ஆகவே தவளைக்  கதறுவதால் பலன் ஒன்றும் இல்லை என்றேன்...பின்னர் அவன் புகைப்பிடித்துவிட்டு குழாயை என்னிடம் கொடுத்துவிட்டு தானே நேரடியாகச் சென்று அதைப் பார்த்து வருவதாகக் கூறினான்...அதற்கு நான்(சீரடி பாபா), ஒரு பெரிய பாம்பு தவளையைப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், தவளை ஓலமிட்டு அழுவதாகவும், முந்தைய மனிதப் பிறவியில்  இவ்விருவருமே மிகக் கொடூரமானவர்களாக இருந்தனர் என்றும், இப்போது அவர்களின் கர்மப்பலனை இவ்வுடம்பில் அனுபவிக்கின்றார்கள் என்றும் நான் அவனிடம் கூறினேன்....

வழிப்போக்கன்  வெளியேச் சென்று தவளையின் நிலையைப் பார்த்துவிட்டு எம்மிடம் கூறினான், ஒரு பெரும் கருநாகம் ஒன்று   தவளையைத் தன் வாயில் கவ்விக் கொண்டிருந்ததைக் கண்டேன்  என்று கூறினான்...மேலும்  என்னிடம் திரும்பிவந்து இன்னும் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களில் தவளையைப் பாம்பு தின்றுவிடும் என்றும்  கூறினான்.. நான், "இல்லை அப்படி இருக்கமுடியாது...நானே அதன் தந்தை.. (பாதுகாவலன்)  மேலும் நான் இப்போது இங்கேயே இருக்கிறேன்..அப்பாம்பு அதைத் தின்பதை எங்ஙனம் நான் அனுமதிப்பேன்...?  வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கின்றேன்...?  அதை எங்ஙனம் விடுவிக்கிறேன் என்பதைச் சற்றே பாருங்கள்" என்று கூறினேன் வழிப்போக்கனிடம்.. மீண்டும் புகைபிடித்தப் பின்னர் நாங்கள் அவ்விடத்துக்கு நடந்துச் சென்றோம்..அவன் பயந்து அப்பாம்பு எங்களைத் தாக்கலாமாதலால், மேற்கொண்டு செல்ல வேண்டாமென்று என்னிடம் கூறினான்.. அவனைப் பொருட்படுத்தாது நான் முன்னே சென்று அந்த ஜந்துக்களை நோக்கி இங்ஙனம் விளித்துக் கூறினேன், "ஓ...! வீரபத்ரப்பா, உனது பகைவனான சனபசப்பா தவளையாகப் பிறந்தபோதிலும், தான் செய்ததற்காக வருத்தப்படவில்லையா...?  நீயும் பாம்பாகப் பிறந்தும், அவன்மீது இன்னும் கசப்பான பகைமையை வைத்திருக்கின்றாயா...?  சீ...! கேவலம் வெட்கப்படு... உன்னுடைய பகைமையை இப்போதே ஒழித்துவிட்டு அமைதியாக இரு" என்றேன்...

இவ்வார்த்தைகளைக் கேட்டு, பாம்பு தவளையை விட்டு உடனே அகன்று ஆற்றில் தாவி மறைந்துவிட்டது...தவளையும் குதித்து புதர்களில் தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கன் மிகவும் ஆச்சரியப்பட்டான்... நீங்கள்  கூறியவுடன் பாம்பு எங்ஙனம் தவளையைப் போட்டுவிட்டு மறைந்தது என்பது தனக்கு விளங்கவில்லை என்றும், யார் வீரபத்ரப்பா...?  யார் சனபசப்பா...?  அவர்களின் பகைக்குக் காரணம் என்ன என்றும்  வழிப்போக்கன் எம்மிடம்  கேட்கின்றான்.. அவனுடன் நான் மரத்தடிக்கு வந்து சிறிது புகைபிடித்தப்  பின்னர் அப்புதிர் முழுவதையும் பின்வருமாறு விளக்கினேன்...  

🔥வீரபத்ரப்பா என்பவர்  பாம்பாகவும், சனபசப்பா என்பவர்  தவளையாக ஏன் பிறந்தார்கள் என்பதைப் பற்றியும் ,  முன் ஜென்மத்தில் வீரபத்ரப்பாவிற்கும் சனபசப்பாவிற்கும். இடையேயான பகைமையின் மூலக் காரணம் என்ன என்பதன் அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்🔥

எனது இடத்திலிருந்து நாலைந்து மைல் தொலைவில் மஹாதேவரின் கோவிலால் புனிதமாக்கப்பட்ட ஒரு புராதன க்ஷேத்திரம் இருந்தது...கோவில் மிகப் பழமையானதாகவும், சிதிலம் அடைந்தும் இருந்தது.. அவ்வூரார் கோவிலின் பழுதுபார்க்கும் வேலைகளுக்கு நிதி வசூலித்தனர்..  பெருந்தொகை நிதி வசூலிக்கப்பட்டதும்  வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன...பழுதுப் பார்ப்பதற்குத் திட்டமும், மதிப்பீட்டுப் பட்டியல்  தயாரிக்கப்பட்டது.  ஒரு உள்ளூர் பணக்காரனை அதிகாரியாக  நியமிக்கப்பட்டு,முழுப்பொருப்பும்  அவனிடம் ஒப்படைக்கப்பட்டது..அவன் ஒழுங்காகக் கணக்கு வைத்துக் கொண்டு, தனது எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருந்திருக்கவேண்டும்...அவன் முதல் தரமான கஞ்சன்...பழுதுபார்க்கும் செலவுகளுக்காக மிகக்கொஞ்சமே பணம் கொடுத்ததால் வெகுசொற்ப முன்னேற்றமே காணப்பட்டது.. எல்லா நிதியையும் அவனே செலவழித்து ஏப்பம் விட்டுவிட்டான்..தனது பணம் ஏதுமே செலவழிக்கவில்லை..அவனுக்கு இனிமையாகப் பேச்சுத்திறன் இருந்தது...  வேலையின் தாமதத்தைப் பற்றியும், வேலைத் தாமதமாவதற்கு காரணங்களை மிகச்  சாமர்த்தியமாக,  பிறர்  ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில்  சமாதானங்கள் கூறினான்.. அவனாலான மிகச்சிறந்த முயற்சியை செய்து உதவினாலன்றி வேலை பூர்த்தியடையாது என்று மக்கள் மீண்டும் அவனிடம் சென்று கூறினர்...அவ்வேலையைச் செய்துமுடிக்க அவர்கள் அவனிடம் வேண்டிக் கொண்டு மீண்டும் நிதி சேகரித்து அவனிடம் கொடுத்தனர்...அவன் அதைப் பெற்றுக் கொண்டு  முன்போலவே எவ்வித முன்னேற்றமும் செய்யாமல் இருந்தான்..

சிலநாட்களுக்குப் பிறகு கடவுள் (மகாதேவ்) அவனது மனைவியின் கனவில் தோன்றி, "எழுந்திரு, கோவிலின் கோபுரத்தைக் கட்டு..நீ செலவழித்ததைப் போல் நூறு பங்கு உனக்குத் திருப்பித் தருகிறேன்" என்று அவளிடம் கூறினார்..இக்காட்சியை அவள் தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள்..உடனே அவளின் கணவன் இது வெறும் கனவே என்றும், அதை நம்பிச் செயலில் இறங்கத் தேவையில்லை என்றும், அல்லாவிடில் தன்னிடமும் ஏன் கடவுள் தோன்றிச் சொல்லவில்லை என்றும் கூறி, சிரித்து மழுப்பிவிட்டான்..அவன் அவளிடமிருந்து நெடுந்தொலைவிலா இருந்தான்...?  கணவன் மனைவியிடத்தே மனஸ்தாபம் உண்டாக்கும் நோக்கத்துடன் கூடிய கெட்டக் கனவு மாதிரி தோன்றுகிறது என்றான்...  அவள் அமைதியாக இருக்கவேண்டியதாயிற்று. 

நன்கொடையாளர்களின் விருப்பத்துக்கு மாறாக சேகரிக்கப்படும் பெருந்தொகைகளைக் கடவுள் விரும்புவதில்லை..ஆனால் அன்பு, பக்தி, ஆர்வம் இவற்றுடன் கொடுக்கப்படும் எளிய தொகைகளையே அவர் உவப்புடன் ஏற்கிறார்... சில நாட்களுக்குப் பின்னர், கடவுள் மீண்டும் அவளது கனவில் தோன்றி, "உனது கணவனைப் பற்றியோ அல்லது அவனிடமிருக்கும் நிதியைப் பற்றியோ கவலைப்படாதே....கோவிலுக்காக அவனை எதையும் செலவு செய்யும்படியும் வற்புறுத்தாதே...எனக்குத் தேவையானது அன்பும், பக்தியுமே..எனவே உனக்குச் சொந்தமானது எதையும் நீ விரும்பினால் கொடுப்பாயாக" என்று அவளிடம் கூறினார்.  இக்காட்சியைப் பற்றி அவள் தன் கணவனுடன் கலந்தாலோசித்தாள்....

தனது தந்தையால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களையெல்லாம் கொடுக்கத் தீர்மானித்தாள். கஞ்சன் கலக்கமடைந்து கடவுளையே இவ்விஷயத்தில் ஏமாற்றத் தீர்மானித்தான்...அவன் அவ்வாபரணங்களை ரூபாய் ஆயிரத்துக்கு குறைவாக மதிப்பீடு செய்து தானே வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக கடவுளுக்கு ஒரு நிலத்தை பாதுகாப்புச் சொத்தாக அளித்தான்..இதற்கு மனைவியும் சம்மதித்தாள்.. இந்நிலமும் அவனுடையது அல்ல..டுபகி என்ற ஏழைப் பெண்மணி ஒருத்தி அதை அவனிடம் ரூ.200க்கு அடமானம் வைத்து நெடுநாளாக அதை மீட்க முடியாமல் இருந்தாள்..  எனவே கபடம் உள்ளமான   அக்கஞ்சன் தனது மனைவி, டுபகி மற்றும் கடவுள் அனைவரையும் ஏமாற்றினான்.. நிலமோ தரிசு, ஒன்றுக்கும் பயனற்றது...சிறந்த பருவகாலங்களில் கூட விளைச்சல் ஏதும் கொடுக்காது...இவ்விதமாக இந்த வாணிப நடவடிக்கை முடிவுபெற்றது...ஒரு ஏழைப் பூசாரியின் பொறுப்பில் நிலம் விடப்பட்டது..அவனும் இத்தர்மத்தால் மகிழ்ச்சியடைந்தான்..சில நாட்களுக்குப் பிறகு வினோதமான நிகழ்சிகள் நடைபெற்றன.. பயங்கர புயலும், பேய்மழையும் வந்தது..கஞ்சன் வீட்டில் இடிவிழுந்து கணவனும், மனைவியும் இறந்தனர்.  டுபகியும்  மரணமடைந்தாள்..

அடுத்த பிறவியில் அப்பணக்காரக் கஞ்சன் மதுராவில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து வீரபத்ரப்பா என்று பெயரிடப்பட்டான்..  அவளுடைய பக்தியுள்ள மனைவி கோவில் பூசாரியின் மகளாகப் பிறந்து கௌரி என்று பெயரிடப்பட்டாள்.. டுபகி என்பவள்  கோவில் பணி செய்பவர் ஒருவரின் குடும்பத்தில் ஆணாகப் பிறந்து சனபஸப்பா என்று பெயரிடப்பட்டாள்.  அப்பூசாரி எனது நண்பன்..  அவன் அடிக்கடி என்னிடம் வந்து உரையாடி புகைப்பிடிப்பான்.அவனது மகளான கௌரியும் என்னிடம் பக்தி பூண்டவள்.  அவள் வேகமாக வளர்ந்தாள்...அவளது தகப்பனார் நல்ல வரன் ஒன்றை அவளுக்குத் தேடினார்..அவனிடம் நான் இதைப்பற்றிக் கவலையுற வேண்டாமென்றும், மாப்பிள்ளையே அவளைத் தேடிக்கொண்டு வருவானென்றும் கூறினேன்..அவர்கள் ஜாதியில் உள்ள வீரபத்ரப்பா என்ற ஏழைப்பையன் ஊரூராகத் திரிந்துகொண்டும், பிச்சையெடுத்துக் கொண்டும் அப்பூசாரியின் வீட்டுக்கு வந்தான்...என்னுடைய சம்மதத்தின் பேரில் பூசாரி கௌரியை அவனுக்கு திருமணம் செய்து வைத்தான்..அவனுடைய திருமணத்திற்கு நான் சிபாரிசு செய்ததால் வீரபத்ரப்பாவும்  முதலில் என்பால் பக்தி பூண்டவனாக இருந்தான்...இந்த  ஜன்மத்திலும் அவன் பணத்தாசை பிடித்தவனாக இருந்தான்.. மேலும்  தான் சம்சாரியாக இருப்பதால் பணம் சம்பாதிக்க  என்னை உதவி செய்யுமாறு கூறினான்...

அதன்பின் விசித்திரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன..விலைவாசிகளில் ஒரு திடீர் ஏற்றம் கண்டது.  கௌரியின் நல்ல  அதிர்ஷ்டத்தினால் நிலத்துக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டு, அந்தத் தர்ம நிலம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.. (அவளது ஆபரணத்தின் மதிப்பைப்போல் நூறு மடங்கு) பாதித்தொகை பணமாகவும், மீதித்தொகை ரூ.2000 வீதமாக இருபத்தைந்து தவணைகளில் கொடுக்கப்படவும் இருந்தது... இந்த விவகாரத்தை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.. ஆனால் பணத்துக்காகச் சண்டைப்  பிடித்துக் கொண்டனர்.. எனது யோசனைக்காக அவர்கள் என்னிடம் வந்தனர்...  கடவுளுக்குரிய அந்த சொத்து பூசாரியின் பாதுகாப்பில் இருந்தது. கௌரியே அதன் பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசுக்காரி, உரிமைக்காரி..அவளது சம்மதமின்றி எந்தப் பணமும் செலவழிக்கப்படக்கூடாது...அவளது கணவனுக்கு அதில் எவ்வித உரிமையில்லை என்று நான் கூறினேன்...என்னுடைய கருத்தைக்கேட்டு வீரபத்ரப்பா என்மீது கடுமையான கோபமடைந்தான்..நான் கௌரியின் உரிமையைப் பலப்படுத்தி அவளது சொத்தைக் கவர விரும்புவதாக என்னைக் குற்றம்  கூறினான்..அவன் கூற்றைக்கேட்டு நான் கடவுளை நினைவுகூர்ந்து அமைதியாய் இருந்தேன்..வீரபத்ரப்பா அவனது மனைவியைத் திட்டினான்.  மதியம் அவள் என்னிடம் வந்து பிறர் மொழிகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், எனது மகளாயிருப்பதால் அவளைக் கைவிட வேண்டாம் என்றும் கூறினாள்..இவ்வாறாக அவள் எனது பாதுகாப்பை வேண்டியதன் காரணமாக, அவளைக் காப்பதற்காக நான் ஏழ்கடலையும் கடப்பேன் என்று அவளுக்கு வரம் கொடுத்தேன்...

பின்னர் அன்றிரவு கௌரி மீண்டும் ஒரு கனவுக் கண்டாள்..மஹாதேவ் அவளது கனவில் தோன்றி, "பணம் முழுவதும் உன்னுடையது.. அதை யாரிடமும் கொடுக்காதே, கொஞ்சம் பணத்தை கோவில் வேலைக்காக சனபசப்பாவிடம் கலந்து ஆலோசித்துச் செலவிடு..  வேறெதற்காவது அதை நீ செலவிட விரும்பினால் மசூதியிலுள்ள பாபாவிடம் கலந்தாலோசி" என்று அறிவுருத்தினார் என்று .  கௌரி என்னிடம் அக்கனவைக் கூறினாள்...  இவ்விஷயத்தில் அவளுக்கு நான் உரிய ஆலோசனை கூறினேன்..அசல் தொகையை அவளே எடுத்துக்கொள்ளவும், வட்டியில் பாதியை சனபசப்பாவுக்குக் கொடுக்கவும், இவ்விஷயத்தில் வீரபத்ரப்பாவுக்கு ஒன்றுமில்லையென்றும் கூறினேன்...இவ்வாறு நான் பேசிக் கொண்டிருக்கும்போது வீரபத்ரப்பாவும்,  சனபசப்பாவும் சண்டை போட்டுக் கொண்டே வந்தனர்..அவர்களைச் சாந்தப்படுத்த என்னாலான முழு முயற்சியைச் செய்து அவர்களுக்குக் கௌரியின் கனவைக் கூறினேன்..வீரபத்ரப்பா மூர்க்கனாகிக் கோபமடைந்து, சனபசப்பாவை கண்டத்துண்டமாக வெட்டப்போவதாக பயமுறுத்தினான்..

சனபசப்பா பீதியடைந்து என் கால்களைப் பிடித்துக் கொண்டு எனது அடைக்கலத்தை வேண்டினான்...அவனது எதிரியின் கடுமையானக்  கோபத்திலிருந்து அவனைக் காப்பதற்காக, நான் என்னுடையதான வாக்குறுதியைக் கொடுத்தேன்..சிலக் காலத்திற்குப்பின் வீரபத்ரப்பாவும், சனபசப்பாவும் காலமாகி முறையே பாம்பாகவும், தவளையாகவும் பிறந்தனர்... சனபஸப்பாவின் ஓலத்தைக் கேட்டதும் எனது வாக்குறதியை நினைவுகூர்ந்து இங்குவந்து அவனைப் பாதுகாத்து என் வார்த்தையைக் காப்பாற்றினேன்...தமது அடியவர்களின் அபாயகாலத்தில் கடவுள் ஓடிச்சென்று உதவுகிறார்...அவர் என்னை இங்கு அனுப்பியதன் மூலம் சனபஸப்பாவைக் காத்தார்.  இவைகளெல்லாம் கடவுளின் லீலை அல்லது திருவிளையாடல்  என்பதை உணர வேண்டும்..

 நீதி போதனை..

ஒருவன் விதைப்பதை அவனே அறுவடைச் செய்து தீரவேண்டும் என்றும், மற்றவர்களிடம் பட்ட பழைய கடனையும், விவகாரங்களையும் கஷ்டத்துடன் அனுபவித்து தீர்த்தாலன்றி வேறு விமோசனம் இல்லையென்றும், பணத்தின் மீதுள்ள பேராசையானது அப்பேராசைக் காரனைக் கீழான நிலைக்கு இழுத்துச்சென்று கடைசியில் அவனுக்கும், பிறருக்கும் அழிவைக் கொணர்கிறது என்பதுமே இக்கதையின் நீதியாகும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

வியாழன், ஜூன் 24, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தாறு (46 )

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🙏🏼🙏🏼

 🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம்:: நாற்பத்தாறு (46 )🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய  சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்பு ரிகின்றது..மேலும் இப்பாராயணத்தின் மூலம்   மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்...அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம் நாற்பத்தாறு (46)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருநாதர் சீரடி பாபா, தன்னை நாடிவந்து சரணாகதி அடைந்த  பக்தர்கள் அனைவரையும், பேதம் பாராது தாய்மையுணர்வுடன்  அரவணைத்து, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய மறைப்பொருள் சூட்சம விளக்கவுரை....

சத்குருநாதர் சீரடி பாபா, அண்ட சராசரத்திலும் நீக்கமற வியாப்பித்து  நிறைந்திருக்கின்றேன்  என்பதை நிரூபிக்கும் வகையில், தன் பக்தர்களான காகா சாஹேப் தீஷித் மற்றும் நானா சாந்தோர்கர் ஆகியவர்களின் அழைப்பு விடுத்த  இல்லத் திருமண வைபவத்திற்கு ஷாமாவை அழைத்துச் செல்லுமாறு கூறி, மேலும் காசி,கயா மற்றும் பிரயாகைக்குச் சென்றப் பின்பு நான் ஷாமாவை விட  முன்னரே சென்று அங்கிருப்போம் என்று அறிவுருத்தி,  எங்கும் தான்  வியாப்பித்து இருக்கின்றேன் என்பதை, நாம் அனைவரும்  உணர  வைத்த நிகழ்வின் உவமான விளக்கவுரை....

சீரடி பாபா, ஒரு ஆட்டு மந்தையை தான்  கண்டபோது, தன் கவனத்தை ஈர்த்த இரண்டு ஆடுகளை அதிக விலைக் கொடுத்து வாங்கினார்.. அதனைப் பார்த்தவுடன்  தாத்யா கோதே  மற்றும் ஷாமாவும் ஏன் இவ்வாறு அதிகமாக ரூபாயைக் கொடுக்கின்றீர்கள்  என்று விளக்கம் கேட்டதற்கு  பாபா  கூறியப் பதிலுரையைப் பற்றிய விளக்கவுரை..

மேற்க்கண்ட  தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக இங்கு கீழேக் காண்போம்....

🔥முதலில் சத்குருநாதர் சீரடி பாபா, தன்னை நாடிவந்து சரணாகதி அடைந்த  பக்தர்கள் அனைவரையும், பேதம் பாராது தாய்மையுணர்வுடன்  அரவணைத்து, எவ்வாறு உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதைப் பற்றிய மறைப்பொருள் சூட்சம விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

ஓ..! சாயீநாதா..எங்களின் சத்குருநாதரே.. தங்களின் பாதக் கமலங்களும், தங்களைப் பற்றிய நினைவுகளும், தங்களது தரிசனமும் புனிதமானவை...அவை எங்களை கர்ம வினை போராட்டங்களிலிருந்தும், அனைத்து அறியாமை தன்மைகளிலிருந்தும், மாயைச் சுழற்சியிலிருந்தும்  எங்களை  விடுவிக்கிறது...  எங்களுக்குத் தங்கள் ரூபம் தெரியாமலிருந்தாலும், இப்போதும் அடியவர்கள் தங்களை நம்பினால், பிரத்தியட்சமான அனுபவங்களை உடனே தங்களிடமிருந்து பெறுகின்றார்கள்..

கண்களினால்  தென்படாத சூட்சமமான நூலால், தாங்கள் அருகிலும், தொலைவிலுள்ள பக்தர்களைத் தங்கள் பாதகமலங்களுக்கு ஈர்த்து இழுத்து, அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல மிகுந்தக் கனிவுடன் அரவணைக்கின்றீர்கள்.  தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லை என்றாலும், தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து, அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரித்து ஆசி வழங்குகின்றீர்கள்  என்பதைக் கடைமுடிவாக ஒவ்வொரு பக்தனும்  உணர்ந்துக் கொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கின்றீர்கள்... 

ஒவ்வொரு மனித உயிரும், தன்னுடைய அகங்காரத்தின் காரணமாக அதாவது  புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் ஆகியோர்கள் அனைவரும்  சம்சாரக் குழியில் விழுகின்றார்கள..ஆனால் மிகவும் ஏழ்மையான, சாதாரண பக்தர்களைத் தங்கள் சக்தியினால் காப்பாற்றுகிறீர்கள்.. ஆன்மஸ்வரூபமாகவும், யாரும் அறியாதபடியும், எல்லா லீலைகளையும் புரிந்துவிட்டு, அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதது போல் தோற்றமளிக்கின்றீர்கள்... தாங்களே செயல்களைச் செய்கின்றீர்கள்.. ஆனால் செய்யாதவரைப் போன்று காட்சியளிக்கின்றீர்கள்..ஒருவருக்கும், ஒருபோதும் தங்கள் வாழ்க்கையைப் பற்றித் தெரியாது..எனவே  எங்களது பாவங்களைப் போக்கும் எங்களுக்கு உண்டான சிறந்த வழி, மனம், மொழி, மெய் இவற்றால் தங்கள் பாதார விந்தங்களைச் சரணடைந்து தங்களது நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்வதேயாகும்... 

அடியவர்களின் ஆசைகளைத் தாங்கள் பூர்த்தி செய்கின்றீர்கள்....பற்றற்றவர்களுக்குப் பேரானந்தப் பெருநிலையை அளிக்கின்றீர்கள்... தங்கள் இனிமையான நாமத்தை ஸ்மரணம் செய்வதே அடியவர்களுக்கு மிகமிக எளிதான சாதனமாகும்...இச்சாதனங்களால் ராஜச, தாமசப் பண்புகள் மறைந்து சத்துவ குணமும், நேர்மையும், சத்தியப் பண்புகளையும் அடியவர்கள் அடைகின்றனர்.. விவேகம், பற்றின்மை, ஞானம் முதலியவையும் நம்மை ஆட்கொள்கின்றது. பின்னர் நாம், நமது ஆன்மாவுடனும், குருவிடமும் ஒன்றிவிடுவோம்..  (இரண்டும் ஒன்றே) இதுவே குருவிடம் பூரண சரணாகதி அடைவது என்பதாகும்...மேலும் நமது மனம் அமைதியும், சாந்தியும், பற்றின்மையும்  பெறுவதே இதற்கான ஒரே தீர்விற்கான  அடையாளமாகும்...இச்சரணாகதியானது, பக்தி, ஞானம் இவற்றின் பெருமையும்,  தனித் தன்மையும் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.... ஏனெனில் அமைதி, பற்றின்மை, புகழ், முக்தி முதலியவை அதைத் தொடர்ந்து வருகின்றன...

ஒரு அடியவரை பாபா ஏற்றுக்கொண்டால், அவரை முக்காலமும்  தொடர்கின்றார்..இரவும், பகலும், வீட்டிலும், வெளியிலும் அவருடனேயே இருக்கின்றார்...அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்... ஆராய்ச்சிக்கும், அறிவுக்கெட்டாத வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் தன் பக்தர்களுக்கு  முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார்.  கீழ்வரும் கதை இதை விளக்குகிறது.

🔥சத்குருநாதர் சீரடி பாபா, அண்ட சராசரத்திலும் நீக்கமற வியாப்பித்து  நிறைந்திருக்கின்றேன்  என்பதை நிரூபிக்கும் வகையில், தன் பக்தர்களான காகா சாஹேப் தீஷித் மற்றும் நானா சாந்தோர்கர் ஆகியவர்களின் அழைப்பு விடுத்த  இல்லத் திருமண வைபவத்திற்கு ஷாமாவை அழைத்துச் செல்லுமாறு கூறி, மேலும் காசி,கயா மற்றும் பிரயாகைக்குச் சென்றப் பின்பு நான் ஷாமாவை விட  முன்னரே சென்று அங்கிருப்போம் என்று அறிவுருத்தி,  எங்கும் தான்  வியாப்பித்து இருக்கின்றேன்  என்பதை, நாம் அனைவரும் உணர  வைத்த நிகழ்வின் உவமான விளக்கவுரை இங்கே..🔥

காகா சாஹேப் தீஷித் என்பவர் பாபாவின் மீது  ஆத்மார்த்தமான அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்.. தனது மூத்த மகன் பாபுவுக்கு, நாக்பூரில் பூணூல் திருமணம் நிகழ்த்த நிச்சயித்தார்..  ஏறக்குறைய அதே தருணம் நானா சாஹேப் சாந்தோர்கர் என்ற பக்தரும், தமது மூத்த மகனுக்கு குவாலியரில் திருமண வைபவம் நிகழ்த்த நிச்சயித்தார்.  காகா சாஹேப் தீஷித், மற்றும்  நானா சாஹேப்  சாந்தோர்கர் ஆகிய இருவரும் சீரடிக்கு வந்து, இவ்வைபவங்களுக்கு பாபாவை அன்புடன் வரவேற்றனர்...தமது பிரதிநிதியாக ஷாமாவை ஏற்றுக் கொள்ளும்படி பாபா அவர்களிடம் கூறினார்...தன்னுடைய சத்குருநாதர் பாபாவே  நேரடியாக வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட போது, ஷாமாவை அவர்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவர்களிடம் கூறி, காசிக்கும், பிரயாகைக்கும் சென்றபின்பு நாம் ஷாமாவைவிட அங்கு  முன்னால்     சென்றிருப்போம்  என்று சூட்சமமாக  கூறினார். இந்த சூட்சமம்  வாய்ந்த பாபாவின் மொழிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஏனெனில் அவைகள் பாபாவின்  சர்வ வியாபகத்தைக் காண்பிக்கின்றன..

ஷாமா, பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த வைபவங்கள், விழாக்கள், ஆகியவற்றுக்காக நாக்பூருக்கும், குவாலியருக்கும் சென்றுவிட்டு பின்னர் காசி, பிரயாகை மற்றும் கயாவுக்கும் செல்லத் தீர்மானித்தார்.  ஆபாகோதேவும்  ஷாமாவுடன்  செல்வதாக இருந்தார்...இருவரும் முதலில் நாக்பூருக்கு பூணூல் விழாவுக்குச் சென்றனர்... காகா சாஹேப் தீஷித், ஷாமாவுக்கு அவரின் செலவுக்காக ரூ.200 வழங்கினார்..பின்னர் அவர்கள் குவாலியருக்குத் திருமண வைபவத்திற்காகச் சென்றனர்..அங்கே நானா சாஹேப் சாந்தோர்கர், ஷாமாவுக்கு நூறு ரூபாயும், அவரது சம்பந்தியான ஜடார் நூறு ரூபாயும் அன்பளிப்பாக வழங்கினார்கள்... பின்னர் ஷாமா காசி, அயோத்தி முதலிய இடங்களுக்குச் சென்றார்...காசியில் ஜடாரின் அழகான லக்ஷ்மி நாராயணர் கோவிலிலும், அயோத்தியில் ராமர் கோவிலிலும் ஜடார் என்பவரின் அதிகாரியால்  நன்கு வரவேற்கப்பட்டார்.

ஷாமாவும் , ஆபாகோதேயும்  அயோத்தியில் இருபத்தொரு நாட்களும், காசியில் இரண்டு மாதங்களும் தங்கினர்...பின்னர் அங்கிருந்து கயாவுக்குப் புறப்பட்டனர்...கயாவில் பிளேக் பரவியிருக்கிறது என்பதை ரயிலில் அவர்கள் கேள்விப்பட்டு மனக்கிலேசம் அடைந்தனர்... இரவில் கயா இரயில் நிலையத்தில்  இறங்கி தர்மசாலையில் தங்கினார்கள்...காலையில் கயாவாலா (யாத்திரீகர்களுக்கு உணவும், இருப்பிடமும் அளிக்கும் அந்தணர்) வந்து "யாத்ரீகர்கள் எல்லாம் முன்னரே புறப்பட்டு சென்றுவிட்டனர்.. ஆகவே  நீங்களும் சீக்கிரம் புறப்படுவது நல்லது" என்றார்... ஷாமா தற்செயலாக அவரை கயாவில் பிளேக் இருக்கிறதா என்று வினவினார்...இல்லை என்றார் கயாவாலா.  "தயவுசெய்து எவ்விதக் கவலையும், பயமுமின்றி வந்து தாங்களே பாருங்கள்" என்றார்... பின்னர் அவர்கள் அவருடன் சென்று அவரது இல்லத்தில் தங்கினார்கள்..அது பெரிய விசாலமான சத்திரமாகும்..தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி ஷாமா மிகவும் மகிழ்ந்தார்...ஆனால் கட்டிடத்தின் முற்பகுதியில் நடுவே மாட்டப்பட்டிருந்த பாபாவின் பெரிய அழகான பகவான்  படமே அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...இப்படத்தைப் பார்த்ததும் ஷாமாவுக்கு உணர்ச்சி பொங்கியது...ஷாமா அப்போது பாபா கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்...பாபா கூறிய வார்த்தைகள் என்னவென்றால் ,  காசிக்கும்,கயாவிற்க்கும் பிரயாகைக்கும் சென்ற பிறகு ஷாமாவுக்கு முன்னதாகவே நாம் அங்கு இருப்போம்" என்ற பாபாவின் மொழிகள் தற்போது அப்படியே நிகழ்ந்தது...ஷாமாவிற்கு  கண்களில் கண்ணீர் பொங்கியது...  மயிர்க்கூச்செறிந்து தொண்டை  அடித்துத் தேம்பி அழத் தொடங்கினார்...அங்கு பிளேக் இருப்பது குறித்துப் பயந்து, அதனால் அவர் அழுகிறார் என கயாவாலா நினைத்தார்... ஆனால் ஷாமா பாபாவின் படத்தை எங்கிருந்து, எப்போது அவர் பெற்றார் என்று  கயாவாலாவிடம்  விசாரித்தார்...கயாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனித்துக் கொள்வதற்காக கயாவாலாவிற்கு,  இருநூறு  இடைத்தரகர்கள்  மன்மாடிலும், புண்தாம்பேயிலும் வேலை செய்வதாகவும், அவர்களிடமிருந்து பாபாவின் புகழைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்...

மேலும்  ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கயாவாலா  சீரடிக்குச்  சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று இருக்கின்றார்...அங்கு ஷாமாவின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பாபாவின் படத்தை பாபாவின் அனுமதிபெற்று, ஷாமா கயாவாலாவிற்கு  அப்பொழுது கொடுத்து இருக்கின்றார்..அந்தப்  புகைப்படம் தான், ஷாமா தற்போது பார்த்தப் புகைப்படம்..இந்த முந்தைய நிகழ்ச்சியை ஷாமா இப்போது நினைவுக் கூர்ந்தார் கயாவாலாவிடம்....முன்னால் தனக்கு பணிவன்பு புரிந்த அதே ஷாமாதான் தனது விருந்தினர் என்று தெரிந்தவுடன் கயாவாலாவின். மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. பின்னர் இவர்களிருவரும் அன்பையும், சேவையையும் பரிமாறிக் கொண்டார்கள்.. மிகமிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருவரும்  இருந்தனர்..கயாவாலா அவருக்குச் சரியான ராஜோபசாரம் செய்தார்..அவர் பெரும் பணக்காரர்...  தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து, யானையின் மேல் ஷாமாவை அமரச்செய்து அவரது தேவை, சௌகர்யங்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்..  

இக்கதையின் நீதியாவது பாபாவின் மொழிகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாகின்றன..தமது அடியவர்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பு எல்லையற்றதாகும்.. பகவான் அனைத்து  ஜீவராசிகளையும் பேதமின்றி  சமமாக நேசித்தார்...ஏனெனில் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் வியாப்பித்து, நீக்கமற நிறைந்து  ஒன்றியவராக இருந்தார்.... பின்வரும் நிகழ்வு  இதனை பறைச்சாற்றுகின்றது... 

🔥சீரடி பாபா, ஒரு ஆட்டு மந்தையை தான்  கண்டபோது, தன் கவனத்தை ஈர்த்த இரண்டு ஆடுகளை அதிக விலைக் கொடுத்து வாங்கினார்.. அதனைப் பார்த்தவுடன்  தாத்யா கோதே  மற்றும் ஷாமாவும் ஏன் இவ்வாறு அதிகமாக ரூபாயைக் கொடுக்கின்றீர்கள்  என்று விளக்கம் கேட்டதற்கு  பாபா  கூறியப் பதிலுரையைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

ஒருமுறை பகவான்  லெண்டியிலிருந்து  திரும்பி வந்துக் கொண்டிருக்கும்போது, ஆட்டு மந்தையொன்றைக் காண நேர்ந்தது..  அவைகளில் இரண்டு அவரின் கவனத்தைக் கவர்ந்தன...ஆடுகளிடம்  சென்று அவற்றைத் தடவிக்கொடுத்து அன்புசெலுத்தி , அந்த ஆடுகளை ரூபாய் 32-க்கு  விலைக்கு வாங்கினார்..பாபாவின் இந்தச் செயலைக் ழ்கண்டு பக்தர்கள் ஆச்சரியமுற்றனர்.  இவ்வியாபாரத்தில் பாபா ஏமாற்றப்பட்டார் எனவும், ஒரு ஆடு ரூ.2 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 அல்லது 4 வீதம் இரண்டு ஆடுகளும் ரூ.8 மட்டுமே பெறும் எனவும் நினைத்தனர்..ஆகவே அவர்கள் இதற்காக பாபாவைக் கடிந்துக் கொண்டனர்...ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்...ஷாமாவும், தாத்யா கோதேவும் விலை அதிகம் கொடுத்ததற்காக பாபாவிடம்  விளக்கம் கேட்டனர்.. தமக்கென வீடும், கவனிக்கக் குடும்பமும் இல்லாதபடியால் தாம் பணத்தைச் சேமிக்கக்கூடாது என்று பாபா  கூறினார்...தமது செலவில் நான்குசேர் பருப்பு வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படி கூறினார்... இது முடிந்தபின், பாபா அவ்வாடுகளை மந்தையின் சொந்தகாரருக்குக் கொடுத்து விட்டு, பின்னர்  ஆடுகளைப் பற்றிய பூர்வ ஜென்மக்  கதையைக்   கூறினார்...  

"ஓ...! ஷாமா, தாத்யா...! இவ்வியாபாரத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என நீங்கள் நினைக்கின்றீர்கள்..அவ்வாறு  கிடையாது...  அவைகளின்  பூர்வ ஜென்மக் கதையைக் கேளுங்கள்..இந்த ஆடுகள்  முந்தைய பிறவியில் மனிதர்களாய் இருந்தனர்.  எனது நண்பர்களாய் இருந்து, எனது அருகில் அமரும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர்...அவர்கள் ஒருதாய் மக்கள்.  முதலில் ஆழமாக  ஒருவரையொருவர் நேசித்தனர்..ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாய் ஆகிவிட்டனர்...மூத்தவன் சோம்பேறி, பின்னவன் சுறுசுறுப்பானவன்...ஆதலால்  சிறியவன் பெரும்பொருள் திரட்டினான்.. மூத்தவன் பேராசையும், பொறாமையும் கொண்டு பின்னவனைக் கொன்று பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினான்...

தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவர் சண்டையும், வாக்குவாதமும் செய்யத் தொடங்கினர்..மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு அவனது முயற்சிகளில் தோல்வியடைந்தான்.  இவ்வாறாக அவர்கள் மரண விரோதியானார்கள்.... முடிவாக ஒரு சந்தர்ப்பத்தில் மூத்தவன், இளையவன் தலையில் தடிக்கம்பால் பலத்த மரணஅடி ஒன்று கொடுக்க, இளையவன் மூத்தவனை கோடாரியால் தாக்க இதன் விளைவாக இருவரும் அவ்விடத்திலேயே மாண்டனர்... அவர்களின்  வினைப்பலனின்  காரணமாக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர்...சற்றுமுன் என்னைக்கடந்து சென்றபோது, நான் அவர்களை அறிந்துக் கொண்டேன்...  அவர்களின் முந்தைய பிறவிகளை நினைவுக் கூர்ந்து இரக்கம் கொண்டு, ஆடுகள் ரூபத்தில் இருக்கின்ற அவைகளுக்கு  இளைப்பாறுதலும், சௌகரியமும் தர விரும்பி என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன்...  இதற்காகத்தான் நீங்கள் என்னைப் குறை கூறுகின்றீர்கள்....

நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவைகளை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன்", என்றார்..இன்றளவு வரை பகவான்,  தமது சூட்சம பேராற்றலாள் நம் அனைவரின் மீதும் பேதமின்றியும் தாய்மையுணர்வுடனும் நீங்காத  அன்பு  செலுத்துகின்றார்..அதற்கு  ஈடு இணையில்லை என்றேக் கூறலாம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

புதன், ஜூன் 23, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு...அத்தியாயம் நாற்பத்தைந்து (45 )

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.🙏🏽🙏🏽

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு...🙏🏽🙏🏽

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம்::: நாற்பத்தைந்து (45 )🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்...

மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...

அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

 🙏அத்தியாயம் ::நாற்பத்தைந்து(45)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருவிடம்  எவ்வாறு  நாம்  சரணாகதி அடைந்து உயரிய நிலையை‌ அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..

காகா சாஹேப் தீஷித் வாசித்த ஏக்நாத் பாகவதத்தில், பதினோராவது காண்டத்தில் ஜனகரின் கேள்விக்கு  ஒன்பது நாதர்கள்  பக்தியைப் பற்றி உபதேசித்த விளக்கவுரை..

ஒன்பது நாதர்கள் கூறிய பக்தியின் விளக்கத்தைக் கேட்டு தம்மால் இதனை அடைவது சாத்தியமில்லை என்று சோர்வடைந்த காகா சாஹேப் தீஷித்திற்கு மாதவராவ் கூறியதைப் பற்றிய விளக்கமும் மற்றும்  மேலும் திருப்தியடையாத நிலையில்  இருந்த  காகா சாஹேப் தீஷித்திற்கு , ஆனந்த் ராவ் பாகாடே என்பவரின் கனவின்  மூலம்  பாபா  அறிவுருத்திய  தெய்வீகக் காட்சியைப் பற்றிய  விளக்கவுரைகள்......

நாலு முழ நீளமும்,ஒரு முழ நீளமும் உள்ள மரப்பலலகையில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா எவ்வாறு உறங்கினார் என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..

மேற்க்கண்ட தலைப்புக்களில் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் சத்குருவிடம்  எவ்வாறு  நாம்  சரணாகதி அடைந்து உயரிய நிலையை‌ அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥

முந்தைய மூன்று அத்தியாயங்களில் பாபாவின் மறைவைக் குறித்து நாம் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது நிலையற்ற ஸ்தூல உருவம் நமது காட்சியிலிருந்து மறைந்ததில் ஐயமில்லை..  ஆனால் அவரது அழிவற்ற சூட்சும உருவம் எப்போதும் வாழ்கிறது...அவரது வாழ்நாளில் நடைபெற்ற லீலைகளும், அற்புதங்களும், அனுபவங்களும்  இன்றும் பெருமளவில்  நிகழ்ந்துக் கொண்டு  வருகின்றன.. பகவான் சமாதி அடைந்தப்   பின்னரும் அவரது லீலைகள்  இன்று வரை ஒரே மாதிரியாக நடைபெறுகின்றன...இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..பாபா எப்போதும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதையும், அவர்தம் பக்தர்களுக்கு முன்னைப்போலவே உதவிக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகின்றன...பாபாவின் வாழ்நாளில் அவரது தொடர்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகளே....ஆனால் அவர்களில் யார் இவ்வுலகப் பற்றையும், இன்பங்களின் மேல் விருப்பத்தையும் விடாமல், கடவுள்மேல் உள்ளத்தைத் திருப்பவில்லை என்றால் அது அவர்களது துரதிர்ஷ்டமேயாகும்....அப்போதும், இப்போதும் தேவை என்னவென்றால் பாபாவின் பால் நாம்  வைத்திருக்கும்  ஆத்மார்த்தமான உண்மையான, முழுமனதான பக்தியே முக்கியமாகக் கருதப்படுகின்றது...நமது புலன்கள், உறுப்புக்கள், மனம் யாவும் பாபாவை வழிபடுவதில் ஒருங்கிணைத்து அவருக்குச் சேவைபுரிய வேண்டும்..வழிபாட்டில் முழுவதுமாக நம்மை அர்பணிப்பது மிகவும் நல்லது....அவ்வாறில்லாமல்  மற்றவற்றை வேறுபக்கம் செலுத்துவது பயனற்றது.  வழிபாடு, தியானம் போன்றவை மனப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்யப்படவேண்டும். 

தம் கணவரிடம் எதிர்பார்ப்பில்லாத இல்லறத்தாள்  கொண்டிருக்கும் அன்பு, சீடன் குருவிடம் கொண்டிருக்கும் அன்புடன் சிலசமயம் ஒப்பிடப்படுகிறது.. எனினும் முதலில் கூறியது  குருபக்தியை விட மிகத்தாழ்வான படியால் இரண்டையும் ஒப்பிட இயலாது... தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது வேறு எந்த உறவினரோ நம் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய (ஆத்ம உணர்வு பெற) உதவிக்கு வரமாட்டார்கள்.  நாமே திட்டமிட்டுக் கொண்டு ஆன்ம உணர்வு பெறும் பாதையில் வழிநடக்க வேண்டும்.. உண்மைக்கும், மாயைக்கும் இடையில் பேதம் கண்டு இகபர இன்பங்களையும், பொருட்களையும் துறந்து, புலன்களையும், மனதையும் அடக்கி முக்தியை அடைவதில் மட்டுமே விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்...  மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக நம்மிடமே நமக்குப் பூரண நம்பிக்கை வேண்டும்...பேதங்கள் உணர பயிற்சி செய்யத் தொடங்கும் போது, உலகம் ஒரு மாயை என்றும், நிலையற்றது என்றும் அறிந்து கொள்வதால் உலக ஆசைகள் மீதான பற்று குறைந்து முடிவில் பற்றற்ற நிலையைப் பெறுகிறோம்...பிரம்மம் என்பது நமது குருவைத் தவிர வேறல்ல என்றும், அவரே முழுமையாக  நாம் காணும் அண்ட சராசரங்களிலும் வியாபித்து நீக்கமற நிறைந்து ஆட் கொண்டிருப்பதையும் உணர்ந்து, அவரை எல்லா உயிர்களிடத்திலும் கண்டு வணங்கத் தொடங்க வேண்டும்...இதுவே  வழிபாடாகும் என்பதை உணர்வீர்களாக...

இவ்விதம் குருவாகிய பிரம்மத்தை மனமுருகி வழிபடும்போது நாம் அவர்களுடன், ஒன்றி ஆன்ம உணர்வைப் பெறுகிறோம்.. சுருக்கமாக, குருவின் நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்துக்கொண்டு இருப்பதும், அவரைத் தியானிப்பதும் எல்லா ஜீவராசிகளிலும் அவரைக் காணச்செய்து நம்மீது அழியாத பேரின்பத்தைச் சொரிகிறது.  பின்வரும் கதை இதனை விளக்குகிறது....

🔥காகா சாஹேப் தீஷித் வாசித்த ஏக்நாத் பாகவதத்தில், பதினோராவது காண்டத்தில் ஜனகரின் கேள்விக்கு  ஒன்பது நாதர்கள் பக்தியைப் பற்றி உபதேசித்த விளக்கவுரை🔥

ஏக்நாத்தின் நூல்களான ஸ்ரீமத் பாகவதம், பாவார்த்த ராமாயணம் இரண்டையும், காகா சாஹேப் தீஷித்தை தினந்தோறும் வாசிக்குமாறு  பாபா உத்தரவிட்டார்.. காகா சாஹேப் தீஷித், பாபா உயிருடன் இருக்கும் போதும், அவர் மறைந்த பின்பும் இதனைப் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது....  பம்பாய் சௌபாத்திலுள்ள காகா மஹாஜனியின் வீட்டில் ஒருநாள் காலை காகா சாஹேப் தீஷித் ஏக்நாத்தின் பாகவதத்தை வாசித்துக் கொண்டிருந்தார்...

அப்போத  ஷாமா என்றழைக்கப்படும் மாதவராவ் தேஷ்பாண்டேயும், காகா மகாஜனியும் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் பதினோராம் காண்டம் படிக்கப்பட்டதைக் கவனத்துடன் கேட்டனர்..  அதில் ரிஷபக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது சித்தர்கள் அல்லது நாதர்கள் என்றழைக்கப்பட்ட கவி, ஹரி, அந்தரிக்ஷா, பிரபுத்தா, பிப்பலாயன், அவிர்ஹோத்ரர், த்ருமில், சமஸ், கரபாஜன் முதலியோர் பாகவத தர்மத்தை ஜனகராஜனுக்கு உபதேசித்தார்கள்..ஜனகர் அவ்வொன்பது நாதர்களையும் மிகமிக முக்கியமான கேள்விகளைக் கேட்டார்.  அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் திருப்திகரமான முறையில் பதிலளித்தார்கள்...

இதனைப் பற்றிய விளக்கம் பின்வருமாறு..

முதல்வரான கவி என்பவர் பாகவத தர்மம் என்றால் என்ன..!  என்பதைப் பற்றி  விவரித்தார்... 

ஹரி என்பவர் பக்தனின் குணநலன்களைப் பற்றி விளக்கினார்...

மாயை  என்றால் என்ன என்பதைப் பற்றி  அந்தரிக்க்ஷா விளக்கினார்...

மாயையை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதைப் பற்றி பிரபுத்தா விளக்கினார்... 

பரப்பிரம்மம் என்றால் என்ன என்பதன் மூல சூட்சமத்தைப் பற்றி  பிப்பலாயன் விவரித்தார்...

கர்மத்தைப் பற்றி அவிர்ஹோத்ரர் விளக்கினார்...

த்ருமில் கடவுள் அவதாரங்களைப் பற்றியும், இறையதிர்வின் சூட்சம  செயல்பாடுகளைப் பற்றியும்  விளக்கினார்.

மரணத்துக்குப்பின் பக்தனில்லாதவன் எங்ஙனம் கூலி கொடுக்கப்படுகிறான் என்பதை சமஸ் கூறினார். 

வெவ்வேறு யுகங்களில் விவ்வேறு விதமான கடவுள் வழிபாட்டைப் பற்றி கரபாஜன் விளக்கினார்...

கலியுகத்தில் ஹரி அல்லது சத்குருவின் பாதங்களை நினைவூட்டிக் கொள்வதே விடுதலைக்கு ஒரேவழி என்பதே எல்லா விளக்கங்களின் கருத்துமாகும்....  

🔥ஒன்பது நாதர்கள் கூறிய பக்தியின் விளக்கத்தைக் கேட்டு தம்மால் இதனை அடைவது சாத்தியமில்லை என்று சோர்வடைந்த காகா சாஹேப் தீஷித்திற்கு மாதவராவ் கூறியதைப் பற்றிய விளக்கமும் மற்றும்  மேலும் திருப்தியடையாத நிலையில்  இருந்த  காகா சாஹேப் தீஷித்திற்கு , ஆனந்த் ராவ் பாகாடே என்பவரின் கனவின்  மூலம்  பாபா  அறிவுருத்திய  தெய்வீகக் காட்சியைப் பற்றிய  விளக்கவுரைகள்...🔥

மேற்க்கூறிய ஒன்பது நாதர்கள் பக்தியைப் பற்றிக்  கூறிய  விளக்கங்கள்  முடிவடைந்த பின்னர், மாதவ்ராவிடமும், மற்றவர்களிடமும் காகா சாஹேப்  கூறினார், "பக்தியைப் பற்றி ஒன்பது நாதர்களின் விளக்கமும் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது பாருங்கள்...!  அதே நேரத்தில் அதை அப்பியாசத்திற்குக் கொண்டுவருவது எவ்வளவு கடினம்...!  என்று நான் உணர்கின்றேன் என்றார்.. நாதர்கள் பூரணத்துவம் பெற்றவர்கள்... ஆனால் அவர்களால் விவரிக்கப்பட்ட  பக்தியை நம்போன்ற அறிவற்றவர்கள் அடைவது சாத்தியமா...?  பல பிறவிகளுக்குப் பின்னரும் நாம் அதை அடையப் போவதில்லை..பின்னர் எங்ஙனம் நாம் முக்தியடைய முடியும்...?  நமக்கெல்லாம் கதிமோட்சத்திற்கான நம்பிக்கையே இல்லையென்றே தோன்றுகிறது" என்று கூறுகின்றார்...ஆனால் காகா சாஹேப்பின்  எண்ணத்தை மாதவ்ராவ் விரும்பவில்லை....

மேலும் மாதவ்ராவ் கூறுகின்றார்... "வைரத்தைப் போன்ற பாபாவைக் குருவாக அடைந்த நல்லதிர்ஷ்டம் உள்ள ஒருவர் இவ்வளவு தாழ்வுணர்ச்சியுடன் உரைப்பது பரிதாபமானது..  பாபாவிடம் உங்களுக்கு நிலையான,  அசைவற்ற நம்பிக்கை இருக்குமானால் ஏன் இவ்வாறு  மனச்சலனமடைய வேண்டும்.. நாதர்களின் பக்தி உறுதியானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம்...ஆனால் நாம் சத்குருவின் மீது வைத்துள்ள  தூய்மையான பக்தியும், ஆத்மார்த்தமான உயரிய  அன்பும் ஆழமானதல்லவா.?. ஹரியினுடைய அல்லது குருவினுடைய பெயரை ஸ்மரணம் செய்துக் கொண்டிருப்பதே நமக்கு முக்தியை அளிக்கும் என்று பாபா நமக்கு ஆணித்தரமாகக் கூறவில்லையா...? பின்னர்  பயத்துக்கும், கவலைக்கும் என்னக்  காரணம்...?" ஆனால்   மாதவ்ராவின் விளக்கத்தால் காகா சாஹேப் தீஷித் திருப்தியடையவில்லை...  அன்று முழுவதும் அவர் நாதர்களின் சிறந்த பக்தியுணர்வைப் போல் தாமும் எவ்விதம் பெறுவது என்ற சிந்தனையிலும், எண்ணத்திலும், கவலையாகவும், மன அமைதியற்றும் இருந்தார்.  அடுத்த நாள் காலை பின்வரும் அற்புதம் நிகழ்ந்தது...

ஆனந்த்ராவ் பாகாடே என்ற பக்தர்,  மாதவ்ராவைத் தேடி மசூதிக்கு வந்தார்... அப்போது அங்கு  பாகவத பாராயணம் அப்போது நடந்துக்கொண்டிருந்தது.அப்போது ஆனந்தராவ்  பாகாடே, மாதவ்ராவின் அருகில் அமர்ந்து எதையோ அவரிடம் கூறிக்கொண்டு இருந்தார்..அவர் தாம் கண்ட தெய்வீகக் காட்சியை மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தார்.  பாராயணத்திற்கு இடையில் இருவரும் பேசுவது  சிறிது இடையூறாக இருந்ததால் காகா சாஹேப் தீஷித் படிப்பதை நிறுத்திவிட்டு மாதவ்ராவை விஷயம் என்னவென்று கேட்டார்.. மாதவ்ராவ்,"நேற்று உங்கள் சந்தேகத்தை எழுப்பினீர்கள்...இப்போது அதற்கு விளக்கம் கிடைத்திருக்கின்றது...  பக்தி மார்க்கத்தில் எவ்வாறு  நம்பிக்கை மற்றும் பொறுமையின்  குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், குருவின் பாதங்களை வணங்குதல், வழிபடுதல், விசுவாசத்துடன் சத்குருவோடு பிணைத்துக் கொள்ளல், பூரண சரணாகதி போன்றத் தன்மைகளைப் பெற்றிருந்தால்  மட்டுமே போதுமானது என்று பாபா,  கனவின் மூலம்  ஆனந்த்ராவ் பாகாடேவிற்கு சூட்சமமாக உணர்த்தியதைக் கேளுங்கள்" எனக் கூறினார் மாதவ்ராவ்..அனைவரும்  குறிப்பாக காகா சாஹேப் தீஷித் உட்பட, அக்கனவுக் காட்சியைக் கேட்க ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர்..அவர்களது யோசனையின்பேரில் பாகாடே தமது காட்சியைப் பின்வருமாறு வர்ணிக்கத் தொடங்கினார்.... 

ஆழமான கடலில் இடுப்பளவு நீரில் நான் நின்றுக்கொண்டிருந்தேன்.  திடீரென்று அங்கு சாய்பாபாவைக் கண்டேன்...அவர்தம் பாதங்கள் நீரில்பட வைரங்கள் பதிக்கப்பட்ட  அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தார்... பாபாவின் ரூபத்தைக் கண்டு  தரிசித்த நான் மிகமிக மகிழ்வுக் கொண்டு திருப்தியடைந்தேன்....கனவு என்று நினைக்க முடியாத அளவுக்கு தத்ரூபமாக அக்காட்சி இருந்தது..மிகுதியான ஆர்வத்துடன் மாதவ்ராவும் அங்கு நின்றுக் கொண்டிருந்தார்.  அவர் உணர்ச்சி வசப்பட்டு, "ஆனந்த்ராவ், பாபாவின் பாதத்தில் விழு...!"என்றார்..  "நானும் அவ்வாறே  செய்ய விரும்புகிறேன், ஆனால் பாபாவின் பாதங்கள் தண்ணீரில் இருக்கின்றன...எங்ஙனம் எனது சிரசை அவற்றின் மேல் வைக்கமுடியும்...? என்று எண்ணி  நான் இயலாதவனாக இருக்கிறேன்" என்று வருந்தினேன்....பின்னர் நான் பாபாவிடம், "ஓ...! தேவா, நீரில் இருக்கும் தங்கள் பாதங்களை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்...  உடனே பாபா தமது பாதங்களை வெளியே எடுத்துக்கொண்டார்.  தாமதமின்றி நான் அவைகளைப் பற்றிக்கொண்டு வணங்கினேன். இதைக்கண்டு பாபா என்னை ஆசீர்வதித்து, "இப்போது போ, வாழ்வில் உயரிய  நன்மையை நீ பெறுவாய்..பயத்திற்கோ, கவலைக்கோ எதுவும்  காரணமில்லை...எனது ஷாமாவிற்கு பட்டுக்கரை வேட்டி ஒன்றைக் எடுத்துக்கொடு.. நீ நன்மை அடைவாய்" என்றார். 

பாபா கனவில் அறிவுருத்திய  ஆணைக்கேற்ப  ஆனந்த்ராவ் பாகாடே ஒரு வேஷ்டி கொணர்ந்து அதை மாதவ்ராவிடம் கொடுக்கும்படி காகா சாஹேப் தீஷித்தை வேண்டிக்கொண்டார்...  ஆனால் பாபா அதனை ஏற்றுக்     கொள்வதற்கேற்ற  ஏதாவதொரு குறிப்பு அல்லது யோசனை கூறினாலன்றி தாம் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று மாதவ்ராவ் கூறிவிட்டார்....

சிறிது விவாதத்திற்குப்பின் காகா சாஹேப் திருவுளச் சீட்டுப் போடத் தீர்மானித்தார்.  ஐயப்பாடுள்ள எல்லா விஷயங்களிலும் திருவுளச் சீட்டுப்போட்டு பொறுக்கி எடுக்கப்பட்ட சீட்டில் கண்டுள்ளபடி நடப்பது காகா சாஹேபின் நிரந்தரமான வழக்கமாகும்.  இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி எழுதி  'ஏற்றுக்கொள்ளலாமா', அல்லது  ' மறுப்பதா' என்று இரு சீட்டுக்களில் எழுதப்பட்டு பாபாவின் படத்தின் அடியில் வைக்கப்பட்டு, ஒரு குழந்தையால் ஒரு சீட்டு எடுக்கும்படி கேட்கப்பட்டது.  'ஏற்றுக்கொள்' என்ற சீட்டே குழந்தையால் எடுக்கப்பட்டு வேஷ்டியும் மாதவ்ராவிடம் கொடுக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது...  இவ்விஷயமாக ஆனந்த்ராவ், மாதவ்ராவ் இருவருமே திருப்தியடைந்தனர்.  காகா சாஹேபின் பிரச்சனையும் தீர்ந்தது...   

மற்ற ஞானிகளின் மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை  இக்கதை நமக்கு வலியுருத்துகின்றது...அதே சமயம் நமது அன்னையிடம் அதாவது சத்குருவிடம் முழு நம்பிக்கைக் கொண்டு அவரது அறிவுரைகளின் படி நடக்கவும் கூறுகிறது.. ஏனெனில் அவர் வேறு எவரையும் விட சிறப்பாக நமது நலத்தை அறிந்து வழிக்காட்டக் கூடிய பேராற்றல் படைத்தவர்... தாயுமானவர்...முக்காலத்தையும் உணர்ந்தவர்.. பின்வரும் பாபாவின மொழிகளை உங்கள் உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ளுங்கள்... "இவ்வுலகில் எண்ணற்ற ஞானிகள் இருக்கிறார்கள்.  ஆனால் 'நமது தந்தையே' (சத்குருவே), 'உண்மையான தந்தை' (நிஜமான குரு) ஆவார்...மற்றவர்கள் பல நல்ல விஷயங்களைக் கூறலாம்...ஆனால் நமது குருவின் மொழியை மறக்கவே கூடாது.  சுருக்கமாக உங்கள் குருவை முழு மனதுடன் நேசியுங்கள்..அவரிடமே பரிபூர்ண சரணாகதி அடையுங்கள்..பயப் பக்தியுடன் அவர்முன் சாஷ்டாங்கமாக வணங்குங்கள்..பின்னர் ஆதவனுக்கு முன் இருள் இல்லாதிருப்பதைப் போல் உங்கள் முன் நீங்கள் கடக்கவேண்டிய உலக வாழ்வெனும் கடல் இல்லாததைக் காண்பீர்கள்."

🔥நாலு முழ நீளமும்,ஒரு முழ நீளமும் உள்ள மரப்பலலகையில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா எவ்வாறு உறங்கினார் என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..🔥

தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துகொண்டிருக்க பாபா உறங்கினார்.. பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுத்துண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்...  (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார்... இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்கவிடுகிறேன்" என்றார்...

பாபா :  மகல்சாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை என்று பதில் உரைக்கின்றார்....

காகா :  மகல்சாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன் என்று பணிந்து வேண்டுதலை வைக்கின்றார்....

பாபா :  அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்...?  பலகையின் மீது தூங்குவது எளிதல்ல...  தன்னிடத்து பல நல்ல குணங்கள் மற்றும் பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும்.  தனது கண்கள் அகல அறிதுயில் நிலையில் விழிப்புணர்வுடன்  தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும்...நான் தூங்கப் போகும் முன் மகல்சாபதியை என் அருகில் அமருமாறு கூறி, எனது இதயத்தின்  மீது கைவைத்து நாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன்... இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை... தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்...எனது இதயத்தில்  அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ...! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான்...தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்க முடியாமல் தடுமாறுபவனும்,  தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்...?  என்று பதில் உரைத்தார்..மற்ற அநேக முறைகளில் அடியார்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது...  எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...