ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, ஜூன் 12, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்து மூன்று (33)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய  அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🏼

🙏🏼 அத்தியாயம்::- முப்பத்து மூன்று (33)🙏🏼

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய்  சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள  மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.. இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக....🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்..இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏🏼

🙏🏼அத்தியாயம்::-முப்பத்து மூன்று(33)🙏🏼

🙏🏼முன்னுரை...🙏🏼

பாபா தன்னை நாடி வந்த பக்தர்கள் அனைவருக்கும் ஏன் உதியை  வழங்கினார் என்பதன் விளக்கமும், உதியில்  அடங்கியுள்ள மறை ஞான மூல சூட்சமமும், உதியின்(விபூதி)  மூலமாக  பெறப்போகும் பலன்கள்  என்ன என்பதன் விளக்கவுரைகள்....

சீரடி பகவானின் அருட்பிரசாதமான உதியைப் பயன்படுத்துவதன் மூலம்,  நாராயண் மோதிராம் ஜனி என்பவர்  எவ்வாறு தேள்கடி விஷத்  தாக்கத்திலிருந்து மீண்டார் என்பதன் விளக்கவுரை..

பாபாவின் பக்தர் ஒருவர் தன்னிடம்  உதி இல்லாத காரணத்தினால், தனது காலடி மண்ணையே உதியாகப் பாவித்து  பயன்படுத்தி எவ்வாறு பிளாக் வியாதிருந்து மீட்டார் என்பதன் விளக்கவுரை..

நானா சாஹேப் சாந்தோர்கரின் மகள் மைனாதாயினுடைய பிரசவத்தில் உள்ள பிரச்சினைகளைத் போக்குவதற்காக,  எவ்வாறு பாபா உதி வழங்கி ஆசிர்வதித்து காப்பாற்றியதன்  அனுபவ விளக்கவுரை.

நாராயண்ராவ் என்ற பக்தருக்கு, பாபா கனவுக்காட்சியின் மூலமாக  ஆசிர்வதித்து, எவ்வாறு தீராத நோயை குணப்படுத்தினார் என்பதைப்  பற்றிய  அனுபவ விளக்கவுரை....

அப்பா சாஹேப் குல்கர்ணி என்ற பக்தரின் பேரன்பால் ஈர்க்கப்பட்ட பாபா, எவ்வாறு சாஹேப்பின் வீட்டிற்கு வருகைப்புரிந்து ஆசிர்வதித்து தக்ஷிணை பெற்றுக்கொண்டார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை...

பாலாபுவா சுதார் என்ற பக்தர் பாபாவின் புகைப்படத்தை ஈடுபாட்டுடன் வழிப்பட்டு, பாபாவிடம் ஆசி  பெற்றதைப் பற்றி அனுபவ விளக்கவுரை...

அப்பா சாஹேப் இல்லத்திற்கு வருகைப் பரிந்த பாபா எவ்வாறு ஆசியும் அனுக்கிரமும் செய்தார் என்பதைப் பற்றியும்..மேலும் நவவித பக்தியைக் குறிப்பது போல் ஒன்பது ரூபாய்களை அப்பா சாஹேப்பிற்கு வழங்கி ஆசிர்வதித்ததைப் பற்றிய அனுபவ விளக்கவுரை...

ஹரிபாவ் கர்ணிக்  என்ற அடியவரின்  கொடுக்க மறந்து  தக்ஷிணையை பாபா எவ்வாறு நரசிங்க மஹராஜ்  என்ற ஞானி மூலம் பெற்று  பாபா தான் அனைவருக்குள்ளும் இருக்கின்றேன் என்பதை தெளிவுபடுத்திய அற்புத விளக்கவுரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்..

🔥 முதலில் பாபா தன்னை நாடி வந்த பக்தர்கள் அனைவருக்கும், ஏன் உதியை வழங்கினார் என்பதன் விளக்கமும், உதியில்  அடங்கியுள்ள மறை ஞான மூல சூட்சமமும், உதியின் மூலமாக நாம்  பெறப்போகும் பலன்கள்  என்ன என்பதன் விளக்கவுரைகளை இங்குக் காண்போம்..🔥

சென்ற அத்தியாயத்தில்  குருவின் சிறப்பியல்புகளைப்  பற்றி நாம் விவரித்தோம்.. இந்த அத்தியாயத்தில் உதியின் அடங்கியுள்ள மறைஞான மூல சூட்சமத்தையும், உதி என்கிற விபூதியைப்  பயன்படுத்துவதால் பெறப்போகும் பலன்களைப்  பார்ப்போம்...இப்போது நமது சத்குருநாதர் சீரடி பாபாவை  தலைதாழ்த்தி வணங்குவோம்.  அவர்களின் கருணை நிறைந்த கடைக்கண் பார்வையே மலைப் போன்ற பாவங்களை அழித்து, நமது  மனதில் உள்ள  தீய கறைகளை நீக்கிச் சீர்படுத்துகிறது.. பாபாவின் உபதேசமே  நம் வாழ்க்கையை  நல்வழியில் இட்டுச் செல்கின்றது... நமக்கு அழியாத இன்பத்தை நல்குகின்றது...'இது எங்களுடையது, அது உங்களுடையது' என்ற பாகுபாடு அவர்கள் மனதில் எழுவதே இல்லை... அவர்களது கடனானது இப்பிறவியிலும், இனிவரும் பிறவிகளிலும் நம்மால் திருப்பிக் கொடுக்கப்படப் போவதேயில்லை....

உதி என்கிற விபூதியைப் பற்றி இங்கே காண்போம்...

பாபா அனைவரிடமிருந்தும் தக்ஷிணையைப் பெற்றார்...இவ்வாறாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து அவர் பெருமளவு தான  தர்மத்திற்கும், மீதியை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார்..அவர் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்த துனி என்ற புனித யாகத்தின் நெருப்பில் விறகை இட்டார்...இந்த  புனித நெருப்பிலிருந்து வரும் சாம்பலானது 'உதி'(விபூதி ) என்று அழைக்கப்பட்டது...  பக்தர்கள் சீரடியை விட்டுப் புறப்படும் சமயத்தில் இந்த உதியானது தாராளமாக வினியோகிக்கப்பட்டது ..

உதியின் முக்கியத்துவத்தைப் பற்றி பாபா குறிப்பிடுவது அல்லது உபதேசிப்பது என்னவென்றால், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சாம்பலைப் போன்று நிலையற்ற பொருள் என்பதே..பஞ்ச பூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து முடித்து ஓய்ந்த பின்னர் சாம்பலாக்கப்படும்...  அவர்களின் உடல் சாம்பலாக்கப்படும் என்ற உண்மையை பக்தர்களுக்கு நினைவூட்டவே பாபா உதியை வழங்குகிறார்.  பிரம்மம் ஒன்றே மெய்ப்பொருள் என்பதையும், பிரபஞ்சம் நிலையற்றது என்றும், தந்தை, தாய், மகன் இவர்கள் யாவரும் உண்மையில் நம்முடையவர் அல்ல என்றும் இதன் மூலம்  உபதேசித்தார்.  இவ்வுலகத்துக்கு நாம் தனியாக வந்தோம்...  தனியாகவே உலகைவிட்டுப் போகவேண்டும்... உதி பலவிதமான உடல் மற்றும் மன நோய்களைக் குணப்படுத்தியது என்பது அறியப்பட்டது...இப்போதும் கூட  உதியை நம்பிக்கையுடன் பயன்படுத்துபவர்கள்  பலருடைய வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்கின்றன ...

நித்ய மற்றும் அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், மற்றும் அநித்ய வஸ்துக்களில் பற்றின்மை  பற்றிய  உயரிய மூல சூட்சம  தத்துவங்களை பாபா அவரது உதி மற்றும்  தக்ஷிணையின் மூலம் அடியவர்களுக்கு அறிவுருத்த  விரும்பினார்...உதி என்பது  விவேகத்தையும்,  தக்ஷிணைப்  பற்றின்மையையும்  நமக்கு அறிவுறுத்துகின்றது...இவ்விரண்டும் நம்மிடத்தில் இருந்தாலொழிய நாம் இச்சம்சார சாகரத்தைக் கடக்க முடியாது.. எனவே பாபா தக்ஷிணையைக் கேட்டுப் பெற்றார். அவர்கள் விடைபெறும்போது உதியைப் பிரசாதமாக அளித்து அதை அவர்கள் நெற்றியிலிட்டுத் தமது வரம் நல்கும் கரத்தை அவர்கள் தலைமீது வைத்தார்...பாபா மகிழ்வான மனநிலையில் இருக்கும்போது ஆனந்தமாகப் பாடுவார்...  அத்தகைய ஒரு பாட்டு, உதியைப் பற்றியதாகும்..

அந்தப் பாடலை இங்கே காண்போம்....

ரமதே ராம் ஆவோஜி..! ஆவோஜி..! 

உதியாங்கி கோனியா லாவோஜி..! லாவோஜி..! 

ஓ..! விளையாட்டு ராமா, வாரும்..! வாரும்..!

பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில் பாடுவது வழக்கம்... உதியைப் பற்றி ஆன்மிகக் குறிப்பாகச் சொல்லப்பட்ட பொருள் இவ்வளவே...உதியின் பயன்பாட்டில் அதற்கு  லௌகீக தனிமுறைச் சிறப்பும்கூட உண்டு....உதியைப் பூசுவதாலும், நீரில் கலந்து பருகுவதாலும்  தீராத நோய்  குணமாகுதல்,  மன அமைதி, சாந்தம் ஆரோக்கியம், சுபிட்சம், கவலைகளினின்று விடுதலை மற்றும் பல லோகாயத லாபங்களை அளித்தது...உதி என்கிற விபூதியைப் பயன்படுத்தி நன்மை அடைந்தவர்களின் அனுபவ  விளக்க உரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம் ... 

🔥சீரடி பகவானின் அருட்பிரசாதமான உதியைப் பயன்படுத்துவதன் மூலம்,  நாராயண் மோதிராம் ஜனி என்பவர்  எவ்வாறு தேள்கடி விஷத்  தாக்கத்திலிருந்து மீண்டார் என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

நாசிக்கைச் சேர்ந்த நாராயண் மோதிராம் ஜனி என்பவர் பாபாவின் பக்தராவார்...இவர் ராமச்சந்திர வாமன் மோடக் என்ற பாபாவின் மற்றுமொரு அடியவரின் கீழ் வேலை பார்த்து வந்தார்...ஒருமுறை அவர் தமது தாயாருடன் சீரடிக்கு  சென்று பாபாவை தரிசனம் செய்தார்... .அப்போது பாபா அவளிடம், அவரது மகன் இனிமேல் வேலைசெய்யக் கூடாதென்றும் சுய வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றும் கூறினார்... சில நாட்களுக்குப் பின் பாபாவின்  வாக்குரை உண்மையானது...  நாராயண் ஜனி வேலையை விட்டுவிட்டு ஆனந்தாஸ்ரம் என்ற ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்...அது செழிப்பாக வளர்ந்தது.

ஒருமுறை இந்த நாராயண் ஜனியின் நண்பர் ஒருவரைத் தேள் கடித்தது..அதனால் ஏற்பட்ட வலி தீவிரமாக இருந்திருக்கின்றது.. தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்து இருக்கின்றார்..அத்தகைய சந்தர்ப்பங்களில் உதி மிகவும் பலனுள்ளதாக இருந்திருக்கின்றது....வலிக்கும் இடத்தில் அது தடவப்படவேண்டும்.எனவே நண்பர்  நாராயண் உதியைத் தேடினார்....ஆனால்  கண்டுபிடிக்க முடியவில்லை...பின்னர் அவர் பாபாவின் படத்தின்முன் நின்று பாபாவின் உதவியை வேண்டி, அவர் நாமத்தை ஜெபித்து பாபாவின் படத்தின் முன்னால் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து அதை பாபாவின் உதியாக நினைத்துக் கொண்டு வலிக்கும் இடத்திலும், கடிவாயிலும் தடவினார்..அவர் விரலை எடுத்த உடனேயே வலி மறைந்துவிட்டது....இருவருமே உணர்ச்சிவசப்பட்டுப் பெருமகிழ்ச்சியுற்றனர்.

🔥பாபாவின் பக்தர் ஒருவர் தன்னிடம்  உதி இல்லாத காரணத்தினால், தனது காலடி மண்ணையே உதியாகப் பாவித்து  பயன்படுத்தி  எவ்வாறு  பிளாக் வியாதிருந்து மீட்டார் என்பதன் விளக்கவுரை இங்கே..🔥

ஒருமுறை பாந்த்ராவிலுள்ள  பாபாவின் அடியவர் ஒருவர், வேறோர் இடத்திலுள்ள தனது மகள், நெறிகட்டும் பிளேக் வியாதியால் துன்புற்றுக்  கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்தார்...அவரிடம் உதி இல்லை.  எனவே அவர் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் உதியை  அனுப்பும்படி விஷயத்தைத் தெரியப்படுத்தினார்...நானா சாஹேப் தனது மனைவியுடன் கல்யாணுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது தாணே ரயில் நிலையத்துக்கருகில் உள்ள ஒரு சாலையில் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டார்...அப்போது அவரிடம் உதி இல்லை. எனவே அவர் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து பாபாவைத் தியானித்து , பாபாவின் ஆசியை  தொழுது வேண்டிக் கொண்டு, அருகிலிருந்த தனது மனைவியின் நெற்றியில் இட்டார்.  அடியவர் இவையெல்லாவற்றையும் கண்டார்.. .பின்பு அவர் தமது மகள் வீட்டுக்குச் சென்றபோது மூன்று நாட்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தனது மகள், தாணே ரயில் நிலையத்தருகில் நானா பாபாவை வேண்டிக் கொண்ட அதே சமயத்திலிருந்து  குணமடையலானாள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்...

🔥நானா சாஹேப் சாந்தோர்கரின் மகள் மைனாதாயினுடைய பிரசவத்தில் உள்ள பிரச்சினைகளைத் போக்குவதற்காக,  எவ்வாறு பாபா உதி வழங்கி ஆசிர்வதித்து காப்பாற்றியதன்  அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥

1904-ஆம் ஆண்டில், நானா சாஹேப் சாந்தோர்கர் சீரடியிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள கான்தேஷ் ஜில்லாவிலுள்ள ஜாம்நேரின் மம்லதாராக இருந்தார்....அவரது மகளான மைனாதாயி கருவுற்றுப் பிரசவிக்க இருந்தாள்...அவளது பிரசவம் மிகவும் கடினமான நிலையில்  இரண்டு மூன்று நாட்களாக பிரசவ வேதனையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்....நானா சாஹேப் எல்லாவிதப் பரிகாங்களைச் செய்ய முயற்சித்தும் பலனில்லை...அவர் பாபாவை நினைவுகூர்ந்து அவரின் உதவியைத் தொழுது வேண்டினார்... அப்போது சீரடியில் பாபுகீர்புவா என்று பாபா கூப்பிடும் ராம்கீர்புவா என்பவர் காந்தேஷிலுள்ள  தமது சொந்த ஊருக்குப் போக விரும்பினார்....பாபா அவரைக் கூப்பிட்டு, அவர் வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள ஜாம்நேரில் சிறிது தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு செல்லுமாறும்,  நானா சாஹேப்பிடம்  உதியையும், ஆரத்தி பாட்டையும்  அளிக்கும் படியும் கூறினார்....ராம்கீர்புபா தன்னிடம் இரண்டே ரூபாய்கள் தான் இருப்பதாகவும் ஜல்காவன் வரையிலுள்ள ரயில்வே கட்டணத்திற்கு மட்டுமே இது போதுமானது என்றும், ஜல்காவனில் இருந்து முப்பது மைல் தூரத்திலுள்ள ஜாம்நேர் வரை போவது தம்மால் இயலாது என்றும் கூறினார்...இதற்கு பாபா, எல்லா ஏற்பாடுகளும் செய்யப்ப்படுமாதலால் அவரைக் கவலைப்பட வேண்டாம் என்றும் உறுதியளித்தார்...

பின்னர் மாதவ் அட்கரால் புனையப்பட்ட புகழ்பெற்ற ஆரத்திப்பாடலை (அதன் மொழிபெயர்ப்பு இறுதியில் அளிக்கப்படுகிறது) ஷாமாவிடம் எழுதச்சொல்லி, அதன் பிரதியுடன் உதியையும் இணைத்து  ராம்கீர்புபாவிடம் கொடுத்து, நானா சாஹேப்பிடம் கொடுக்கும்படி கூறினார்...பின்னர் ராம்கீர்புவா பாபாவின் மொழிகளை நம்பி சீரடியைவிட்டுப் புறப்பட்டு ஜல்காவனை அதிகாலை இரண்டு மணியளவில்  அடைந்தார்...அப்போது அவரிடம் இரண்டே அணாக்கள்தாம் மீதமிருந்தன..மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தார்...அவரது பெருஞ்சுமை தணிவுறும் வகையில், "யார் சீரடியைச் சேர்ந்த பாபுகீர்புவா..?" என்று யாரோ கூப்பிடுவது கேட்டது...பின்னர் அவர் அவனிடம் சென்று, தாமே பாபுகீர்புவா என்று கூறினார்.. .தாம் நானா சாஹேப்பிடமிருந்து வருவதாகவும் அவருடைய வேலையாள் என்றும் கூறி நல்ல ஜோடிக் குதிரைகளுடன் கூடிய ஒரு பிரமாதமான வண்டியிடம் அழைத்துச் சென்றார்...அவர்கள் இருவரும் அதில் பிரயாணம் செய்தார்கள்...வண்டி வேகமாக ஓடியது..  அதிகாலையில் அவர்கள் ஓடைக்கரையொன்றை அடைந்தனர்.  வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிக்க அழைத்துச் சென்றான்...பியூன், ராம்கீர்புவாவை சிறிது உணவு உட்கொள்ளுமாறு கூறினார் ...பியூனின் தாடி, மீசை இவைகள்  அனைத்தும்  ராம்கீர்புவா பார்த்துவிட்டு அவனை முகம்மதியனாகச் சந்தேகப்பட்டு எவ்விதச் சிற்றுண்டியையும் அவனிடமிருந்து பெற விருப்பமில்லாதவராய் இருந்தார்....ஆனால் வண்டியை ஓட்டி வந்தவர்  தாம் ஒரு இந்து, கார்வாலைச் சேர்ந்த க்ஷத்திரியன் என்றும், நானா சாஹேப் இந்தசிற்றுண்டிகளை எல்லாம் அனுப்பியிருந்ததாகவும் இதை ஏற்றுக் கொள்வதில் எவ்விதக் கஷ்டமோ, சந்தேகமோ வேண்டியது இல்லையென்றும் கூறினார்... பின்னர் அவர்கள் இருவரும் சிற்றுண்டி உண்டு மீண்டும் புறப்பட்டனர்.. பொழுது விடியும்போது ஜாம்நேரை அடைந்தனர்.. 

ராம்கீர்புவா சிறுநீர் கழிக்கச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தார்...அப்போது குதிரைவண்டியையும், வண்டியோட்டியையும் காணாது பேச்சற்றவரானார்...பின்னர் அருகிலுள்ள கச்சேரிக்குச் சென்று விசாரித்து மம்லதார், வீட்டில் இருப்பதை அறிந்துக் கொண்டார்.. நானா சாஹேபின் வீட்டுக்குச் சென்று தம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு பாபாவின் உதியையும், ஆரத்தியையும் அளித்தார்.  இத்தருணத்தில் மைனாதாயின் விஷயம் மிகமிகத் தீவிரமடைந்து வீட்டிலிருந்தோர் அனைவரும் அவளைக் குறித்து ஆழ்ந்த கவலையுற்றனர்...நானா சாஹேப் தனது மனைவியை அழைத்து உதியைத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கும் படியும், ஆரத்தியைப் பாடும்படியும் கேட்டுக் கொண்டார்... பாபாவின் உதவி, உற்ற சமயத்தில் கிடைத்திருக்கிறதென அவர் நினைத்தார்..சில நிமிடங்களில் பிரசவம் நன்றாக முடிந்தது  என்றும், மிகப்பெரியக் கண்டம் கடந்து போய்விட்டது என்றும், பிரசவ அறையிலிருந்து செய்தி கிடைத்தது.. ராம்கீர்புவா  நானா சாஹேப் அவர்களிடம்  பியூன், வண்டி, சிற்றுண்டி முதலியவைகளுக்காக நன்றி செலுத்தியபோது  பெருமளவு  நானா சாஹேப்  ஆச்சரியப்பட்டார்...  ஏனெனில் அவர் ஸ்டேஷனுக்கு ஒருவரையும் அனுப்பவில்லை.  சீரடியிலிருந்து எந்த ஆள் வருவதும் அவருக்குத் தெரியாது....

தாணேவைச் சேர்ந்த திரு B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதார் இதைப்பற்றி நானாவின் புதல்வனான பாபுராவ் சாந்தோர்கரிடமும், சீரடியைச் சேர்ந்த ராம்கீர்புவாவிடமும் விசாரித்துவிட்டு தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்ட பின்பு, சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 13, எண்.11,12 &13) ஒரு பகுதி உரைநடையாகவும், ஒரு பகுதி கவிதையாகவும் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்...மேலும்  சகோதரர் B.V.நரசிம்மஸ்வாமி, மைனாதாயி,  பாபு சாஹேப் சாந்தோர்கர்,  ராம்கீர்புவா இவர்களிடமிருந்து 1.6.1936, 16.9.1936, 1.12.1936 ஆகிய தேதிகளிடப்பட்ட வாக்குமூலத்தைப் பெற்று "அடியவர்களின் அனுபவங்கள்" பகுதியில்  பதிப்பித்து இருக்கிறார்.  ராம்கீர்புவாவின் வாக்குமூலம் கீழ்வருமாறு... 

"ஒருநாள் பாபா என்னை அவரிடம் அழைத்து, உதிப்பொட்டலம் ஒன்றையும், பாபாவின் ஆரத்தியின் பிரதி ஒன்றையும் கொடுத்தார்..  அச்சமயம் நான் கான்தேஷ் போக வேண்டியிருந்தது...பாபா என்னை ஜாம்நேர் போகும்படியும்,  ஆரத்திப்பாடலையும், உதியையும் ஜாம்நேரில் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் கொடுக்கும்படியும் கூறினார்.  என்னிடம் இருப்பதெல்லாம் ரூ.2 என்றும் கோபர்காவனிலிருந்து ஜல்காவன், பின்னர் வண்டியில் ஜல்காவனிலிருந்து ஜாம்நேர் செல்வதற்கும் அது எங்ஙனம் போதும் என்று நான் அவரிடம் கேட்டேன்...பாபா "கடவுள் கொடுப்பார்" என்று கூறினார்...அன்று வெள்ளிக்கிழமை...நான் உடனே புறப்பட்டேன்...  மன்மாட் இரவு 7:30 மணிக்குச் சென்றேன்.  பின்னர் ஜல்காவனிற்கு காலை 2:45க்குச் சென்றேன்.. அந்த நாட்களில் பிளேக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன...எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  ஜாம்நேர் செல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று நான் கண்டுபிடிக்க வேண்டியதிருந்தது.  காலை சுமார் மூன்று  மணியளவில் பூட்ஸ், டர்பன், நல்ல உடைகளுடன் கூடிய ஒரு வேலையாள் என்னிடம் வந்து என்னை வண்டியில் அமர்த்தி ஓட்டிச்சென்றான்.. நான் திகிலுடன் இருந்தேன்... வழியில் பாகூரில் சிற்றுண்டி உட்கொண்டேன். ஜாம்நேரை நாங்கள் அதிகாலை அடைந்தோம்.. நான் சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பியபோது குதிரைவண்டியைக் காணவில்லை... வண்டிக்காரனும் மறைந்துப் போனான்" என்று ராம்கீர்புவா கூறினார்....

🔥நாராயண்ராவ் என்ற பக்தருக்கு, பாபா கனவுக்காட்சியின் மூலமாக  ஆசிர்வதித்து, எவ்வாறு தீராத நோயை குணப்படுத்தினார் என்பதைப்  பற்றிய  அனுபவ விளக்கவுரை இங்கே....🔥

பக்தர் நாராயண்ராவ் (தந்தை பெயரும், உபபெயரும் தரப்படவில்லை) பாபாவை நேரடியாக  இரண்டுமுறை  சந்திக்கும்  நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தார்.. பாபா காலமான 1918..ஆம் வருடத்தின் பிறகு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் சீரடிக்குச் செல்ல விரும்பினார்...ஆனால் அவர் செல்ல முடியவில்லை..பாபாவின் மகாசமாதியான ஓர் ஆண்டிற்குள் அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் அவதியுற்றார்...  எல்லாவிதமான சாதாரண சிகிச்சைகளும் அவருக்குப் பலன் அளிக்கவில்லை...எனவே பாபாவை அல்லும், பகலும் தியானித்தார்... ஒரு நாளிரவு கனவில் அவர் ஓர் காட்சி கண்டார்..பாபா நிலவறை ஒன்றிலிருந்து வெளிவந்து அவருக்கு ஆறுதலளித்து, "கவலைப்படாதே, நாளையிலிருந்து நீ குணமடைவாய்..மேலும்   ஒரு வாரத்திற்குள் நன்றாக நடமாடுவாய்" என்று கூறினார்...கனவில் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் நாராயண்ராவ் பூரண குணமடைந்தார்...  இப்போது நாம் அனைவரும்  உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்...

"உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்துக் கொண்டிருந்தார் எனவும்,  உடலை விட்டுவிட்டதனால் இறந்துவிட்டாரா..?  என்று நினைக்கின்றீர்களா...இல்லையே..பாபா எப்போதுமே வாழ்கின்றார்...ஏனெனில் 'பிறப்பு - இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர்.  எவனொருவன் முழுமத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான்.  நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார்....எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்கிறார்...பிரியமுள்ள பக்தனிடத்தில்  தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார்."

🔥அப்பா சாஹேப் குல்கர்ணி என்ற பக்தரின் பேரன்பால் ஈர்க்கப்பட்ட பாபா, எவ்வாறு சாஹேப்பின் வீட்டிற்கு வருகைப்புரிந்து ஆசிர்வதித்து தக்ஷிணை பெற்றுக்கொண்டார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே....🔥

1917-ஆம் ஆண்டு அப்பா சாஹேப் குல்கர்ணி என்பவருக்கு  பாபாவை வழிபடும்  ஒரு வாய்ப்பு நேரிட்டது... அவர் தாணேவுக்கு மாற்றப்பட்டு, பாபா சாஹேப் பாடேயால் அளிக்கப்பட்ட பாபாவின் படத்தை வழிபடத் தொடங்கினார்.  உண்மையான ஆர்வத்துடன் அவர் வழிபாடு செய்தார்.  பூ, சந்தனம், நிவேதனம்   இவைகளைத் தினமும் பாபாவின் படத்தின்முன் சமர்ப்பித்தார்..அவரை நேரில் காணவும் விரும்பினார்...இது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிடலாம்... பாபாவின் படத்தை ஆர்வத்துடன் பார்த்து தரிசிப்பது  அவரை நேரில் காண்பதற்குச் சமமாகும்.  கீழ்வரும் கதை இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.

🔥பாலாபுவா சுதார் என்ற பக்தர் பாபாவின் புகைப்படத்தை ஈடுபாட்டுடன் வழிப்பட்டு, பாபாவிடம் ஆசி  பெற்றதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே....🔥

பம்பாயைச் சேர்ந்த பாலாபுவா சுதார் என்னும் அருட்தொண்டர், அவர்தம் கடவுள்பற்று, பக்தி மற்றும் பஜனை முதலியவற்றால் நவீன துகாராம் என்று அழைக்கப்பட்டார்...அவர் முதல்முறையாக 1917 -ஆம் ஆண்டில் சீரடிக்கு வந்தார்...பாபாவின் முன்னால் நமஸ்கரித்தபோது பாபா, "இம்மனிதரை நான் நான்கு ஆண்டுகளாக அறிவேன்" என்றார்...பாலாபுவா ஆச்சரியப்பட்டு, இதுவே தமது முதல் சீரடி விஜயமாதலால், அஃதெங்கனம்  இருக்கமுடியும் என்று எண்ணினார்...ஆனால் அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபோது நான்காண்டுகளுக்கு முன்னர் பம்பாயில் பாபாவின் படத்தின் முன்னர் வீழ்ந்து நமஸ்கரித்தது நினைவிற்கு வந்தது...தனக்குள் தன்னை அறிந்த ஞானிகள் எத்தகைய நிறைபேரறிவு உடையவர்களாகவும், சர்வவியாபிகளாகவும் இருக்கிறார்கள். தமது அடியவர்களிடம் அவர்கள் எத்தகைய அன்புடன் விளங்குகின்றனர்.  அவர்தம் புகைப்படத்தின முன்னர் நான் பணிந்தேன்.  இவ்வுண்மை பாபாவால் கவனிக்கப்பட்டது.. உரிய தருணத்தில் தமது படத்தைக் காண்பது நேரில் தம்மைக் காண்பதற்குச் சமமாகும் என்பதை அவர் உணரும்படி செய்தார் என்று கூறுகின்றார் பாலா புவா... 

🔥அப்பா சாஹேப் இல்லத்திற்கு வருகைப் பரிந்த பாபா எவ்வாறு ஆசியும் அனுக்கிரமும் செய்தார் என்பதைப் பற்றியும்..மேலும் நவவித பக்தியைக் குறிப்பது போல் ஒன்பது ரூபாய்களை அப்பா சாஹேப்பிற்கு வழங்கி ஆசிர்வதித்ததைப் பற்றிய அனுபவ விளக்கவுரை இங்கே...🔥

அப்பா  சாஹேப் தாணேவில் இருந்தபோது பிவண்டி என்னுமிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது...ஒரு வாரத்திற்குள் அப்பா சாஹேப்  திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படவில்லை..அவர் இல்லாதபோது மூன்றாவதுநாள், பின்வரும்  ஒரு வியப்பூட்டும்  சம்பவம் நிகழ்ந்தது.. மத்தியானம் ஒரு பக்கிரி, அப்பா சாஹேபின் வீட்டிற்கு வருகைப் புரிந்தார்..அவருடைய அங்க அமைப்பெல்லாம் பாபாவின் படத்துடன் சரியாக ஒத்திருந்தன.  குல்கர்ணியின் மனைவியும், குழந்தைகளும் அவரை அவர் சீரடி சாய்பாபாவா..? எனக் கேட்டனர்..அதற்கு அவர் இல்லை என்று கூறினாலும், யான் பாபாவின்  பணிவுள்ள ஒரு வேலையாள் என்றும், உங்களின் இல்லத்திற்கு பாபாவின் கட்டளைப்படியே உங்களின்  குடும்ப நலத்தை விசாரிக்க வந்திருப்பதாகவும் கூறினார்...பின்னர் அவர் தக்ஷிணை கேட்டார்.  அப்பெண்மணி ஒரு ரூபாய் கொடுத்தாள்..அவர் உதிப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்து அதை வழிபாட்டுக்காக பூஜையறையில் படத்துடன் வைக்கும்படி கூறினார்..பின்னர் அவர் வீட்டை விட்டுச் சென்று விட்டார்...மேலும்  அப்பா சாஹேப், தனது குதிரை பிவண்டியில் நோய்வாய்ப்பட்டதால் பயணத்தைத் தொடர முடியவில்லை..அந்நாள் மாலை அவர் வீட்டிற்குத் திரும்பினார்..மனைவியின் மூலம் பக்கிரி விஜயத்தைப் பற்றி கேட்டு  அறிந்தார்...தான் அப்பக்கிரியின் தரிசனம் பெறாததையும், ஒரே ஒரு ரூபாய் மட்டும் தக்ஷிணையாக அளிக்கப்பட்டது குறித்து திருப்தியில்லாததையும் நினைத்து மனதில் சிந்தனை செய்தார்.. தாம் அப்போது இருந்திருந்தால் பத்து ரூபாய்க்குக் குறைவாக தக்ஷிணை அளித்திருக்கமாட்டேன் என்று கூறினார்...பின் உடனே பக்கிரியைத் தேடிக்கொண்டுச்  சென்றார்.உணவு உட்கொள்ளாமல் மசூதியிலும் மற்ற இடங்களிலும் அவரைத் தேடினார்...எங்கு தேடியும் காண இயலவில்லை... 

பாபாவின் கொள்கையை வாசகர்கள் முப்பத்திரெண்டாம்  அத்தியாயத்தில் பாராயணம் செய்திருப்பீர்கள்...அதாவது வெறும் வயிற்றுடன் கடவுளைத் தேடுதல் கூடாது என்பதாகும்... உணவுக்குப்பின் சித்ரே என்ற நண்பருடன் அவர் உலாவப் புறப்பட்டார். சிறிதுதூரம் சென்றபின், விரைவாக ஒரு பக்கிரி அவர்களை நோக்கி வருவதைக் கண்டனர்...  பாபாவின் புகைப்படத்தில் இருந்த அந்த அடையாளங்களுடன் இப்பக்கிரியின்  உருவமும் ஒத்திருந்ததால் இவரே மத்தியானம் தமது வீட்டிற்கு வந்தவராக இருக்கக்கூடும் என்று அப்பா சாஹேப் கருதினார்..பக்கிரி உடனே தமது கையை நீட்டி தக்ஷிணை கேட்டார்..அப்பா சாஹேப் அவருக்கு ஒரு ரூபாயை அளித்தார்...  அவர் மீண்டும் கேட்கவே அப்பா சாஹேப் மேலும் இரண்டு ரூபாய் வழங்கினார்..அப்போதும் அவர் திருப்தி அடையவில்லை...பின்னர் அவர் சித்ரேயிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி அதை அவருக்கு வழங்கினார்...பக்கிரி மேலும் விரும்பினார்..அப்பா சாஹேப் மீண்டும் அவருக்கு மூன்று ரூபாய் வழங்கினார்....  மொத்தத்தில் ஒன்பது ரூபாய்.. பக்கிரி அவர்கள்  திருப்தியடைந்தவராகக் காணப்படவில்லை.. மேலும் கேட்டார்...பின்னர் தம்மிடம் ஒரு பத்து ரூபாய்  நோட்டாக  இருப்பதாக அவரிடம் கூறினார்..பக்கிரியும் அதையே கேட்டு வாங்கிக்கொண்டு ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்....முன்னர் அப்பா சாஹேப் தாம் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறினார்...  அத்தொகையும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது...பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட ஒன்பது ரூபாய்களும் அவரிடமே திருப்பித்தரப்பட்டன..ஒன்பது என்ற எண் குறிப்பிடத்தக்கது...இது நவவித பக்தியைக் குறிக்கிறது. (21ஆம் அத்தியாயத்தில் நவவிதப் பக்தியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது..பார்க்கவும் ).

லக்ஷ்மிபாயீ ஷிண்டேவுக்கு பாபா தமது கடைசித் தருணத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்ததை இங்கே ஒப்பிட்டு நவவிதப் பக்தியின்  முக்கியத்துவத்தையும், சிறப்பியல்புகள் பற்றி மேலும் உணரக் கூடிய நிகழ்வாக இந்நிகழ்வும் இருக்கின்றது....அப்பா சாஹேப் உதிப்பொட்டலத்தைச் சோதனை செய்தார்.  அதில் சில மலர் இதழ்களும், அக்ஷதைகளும் இருப்பதைக் கண்டார். பின் சில நாட்களுக்குப் பிறகு சீரடி சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று அவருக்குக் கிடைத்தது...ரோமத்தையும்  உதிப் பொட்டலத்தையும் ஒரு தாயதிற்குள் வைத்து எப்போதும் தமது புயத்தில் அணிந்துக் கொண்டார்.  அப்பா சாஹேப் உதியின் சக்தியை உணர்ந்துக் கொண்டார்... அவர் மிகவும் புத்திசாலியாய் இருந்தபோதும் ஆரம்பத்தில் சம்பளமாக ரூ.40 பெற்று வந்தார்.  பாபாவின் படமும், உதியையும் பெற்றான பிறகு நாற்பது ரூபாயைப் போலப் பலமடங்கு அவர் மாதச் சம்பளமாகப் பெறக் கூடிய நிலையை அடைந்தார்...அதிக ஆற்றலும், செல்வாக்கும் படைத்தவரானார்....இந்த ஆசியானது  உலக நன்மைகளுடன் கூட அவர்தம் ஆன்மிக முன்னேற்றமும் துரிதமானது...எனவே பாபாவின் உதியைப் பெற்றிருக்கும் நல்லதிர்ஷ்டம் உடையவர்கள், அதை குளித்தபின் நெற்றியில் இட்டுக்கொண்டு சிறிதளவு எடுத்துத் தண்ணீரில் கரைத்துப் புனித தீர்த்தமாகக் குடித்துவிடவேண்டும்...

🔥ஹரிபாவ் கர்ணிக்   என்ற அடியவரின்  கொடுக்க மறந்து  தக்ஷிணையை பாபா எவ்வாறு நரசிங்க மஹராஜ்  என்ற ஞானி மூலம் பெற்று  பாபா தான் அனைவருக்குள்ளும் இருக்கின்றேன் என்பதை தெளிவுபடுத்திய அற்புத விளக்கவுரை இங்கே.....🔥

1917-ஆம் ஆண்டில் தாணே ஜில்லாவைச் சேர்ந்த ஹரிபாவ் கர்ணிக் என்பவர்,  சீரடிக்குக் குருபூர்ணிமா தினத்தன்று (ஆவணி மாதம்) சென்று  உரிய சம்பிரதாயங்களுடன் பாபாவை வணங்கினார்.  உடைகளையும், தக்ஷிணையையும் அவர் சமர்ப்பித்தார்...ஷாமா மூலமாக பாபாவிடம் விடைபெற்ற பிறகு மசூதியின் படிகளில் இருந்து இறங்கினார்...  பிறகு இன்னுமொரு ரூபாய் பாபாவுக்குத் தக்ஷிணை வழங்க  எண்ணினார்..எனவே அவர் சற்றே திரும்பி, திரும்பவும் படிகளில் ஏற முயற்சித்தார்.  ஆனால் அவர் பாபாவின் விடையைப் பெற்றுக் கொண்டதால் போகும்படியும், திரும்பி வரவேண்டாம் என்றும் ஷாமா ஜாடை காண்பித்தார்...எனவே அவர் வீட்டுக்குக் கிளம்பினார்...திரும்புகையில் நாசிக்கில் காலாராமரின் கோவிலுக்குத் தரிசனத்துக்குச் சென்றார்...கோவிலின் பெரிய கதவுக்கு சிறிதே உட்புறம் அமரும் நரசிங்க மஹராஜ் என்ற ஞானி தமது அடியவர்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஹரிபாவிடம் வந்து, அவரின் மணிக்கட்டைப் பிடித்து "எனது ஒரு ரூபாயைக்" கொடு என்றார்...கர்ணிக் வியப்படைந்தார்..மிகுந்த இஷ்டத்துடன் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்தார்... சாயிபாபா எங்ஙனம் தான் கொடுக்க இஷ்டப்பட்டிருந்த ரூபாயை நாசிக்கைச் சேர்ந்த நரசிங்க மஹராஜ் வழியாக வாங்கினார் என்று எண்ணினார்... இக்கதை ஞானிகள் அனைவரும் ஒன்றே என்ற உண்மையையும், பாபாவின் பேராற்றல்  எங்கும் நீக்கமற  நிறைந்திருக்கின்றது என்ற மூல சூட்சமத்தையும், எங்ஙனம் அவர்கள் ஒத்திசைவுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது....

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு  தியான பீடம்...🙏🙏🙏🏻


https://youtu.be/z9GwOAvI06o

https://youtu.be/V_AUIPmahv8


வெள்ளி, ஜூன் 11, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்திரெண்டு (32)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏻🙏🏻

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏 அத்தியாயம்:: முப்பத்திரெண்டு (32)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...ஶ்ரீசாய்  சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்... இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்..🙏

🙏அத்தியாயம்:: முப்பத்திரெண்டு(32)🙏

🙏முன்னுரை..🙏

சத்குருவின் சிறப்பியல்புகள் என்ன?.சீரடிபாபா தன்னுடைய  முதன்மை குருவை எவ்வாறு கண்டுணர்ந்து  ஏற்றுக்கொண்டார் என்பதன் பற்றி விளக்கவுரைகளும், மற்றும் சீரடி பாபாவிற்கும் அவருடைய குருவிற்கும் இடையேயான பிணைப்பைப் பற்றியும், மேலும் பாபா தன்னுடைய குரு, எவ்வாறு  தமக்கு சத்திய உயரிய ஞான மார்க்கத்தை அடைய வழி காண்பித்தார்  என்பதைப் பற்றிய விளக்கவுரை..

சீரடி பாபாவிடம், விரதம் இருக்க  அனுமதிக் கேட்ட பக்தை கோகலேயை  விரதமிருக்க அனுமதிக்காததன் காரணம் என்ன  என்பதைப் பற்றிய  விளக்கவுரை...

சீரடி பாபா இளம் பிராயத்தினராக இருந்தபோது எவ்வாறு இயல் வாழ்க்கையை  மேற்க் கொண்டார் என்பதைப் பற்றியும், பாபா உபதேசித்த  செய்த   உபதேச மொழிகளைப் பற்றிய உரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்..

🔥முதலில் சத்குருவின் சிறப்பியல்புகள் என்ன.?..என்பது பற்றியும்,சீரடி பாபா  தன்னுடைய  முதன்மை குருவை எவ்வாறு கண்டுணர்ந்து  ஏற்றுக்கொண்டார் என்பதன் பற்றி அனுபவ  விளக்கவுரைகளும், மற்றும் சீரடி பாபாவிற்கும் அவருடைய குருவிற்கும் இடையேயான பிணைப்பைப் பற்றியும், மேலும் பாபா தன்னுடைய குரு,  எவ்வாறு   தமக்கு  சத்திய உயரிய  ஞான மார்க்கத்தை அடைய வழி   காண்பித்தார்  என்பதைப் பற்றிக் கூறும்  விளக்கவுரைகளை இங்கு காண்போம் ...🔥

முதலில் கண்ணுக்குத்தெரியும் இச்சம்சார வாழ்க்கையை ஹேமாட்பந்த் ஆலமரத்துடன் ஒப்பிடுகின்றார்...கீதையின் சொற்களில் வேர் மேலும், கிளைகள் கீழும் என்பதாக  குணங்களால் போஷிக்கப்படுகின்றன...அதன் துளிர்கள் புலன்களாகின்றன...அம்மரத்தின்  வேர்கள் செயல்களாக மனிதர்களின் இவ்வுலகம் வரை நீண்டிருக்கின்றன... இவ்வுலகத்தில் அதன் ரூபமோ, முடிவோ, ஆரம்பமோ அல்லது அதன் பற்றுக்கேடோ தெரியாது...வலிமையான வேர்களுள்ள இந்த ஆலமரத்தைப் பற்றின்மை என்னும் கூரிய ஆயுதத்தால் வெட்டுவதன் மூலம் அதற்கப்பாலுள்ள பாதையை ஒருவன் தேடவேண்டும்...அதில் செல்பவன் திரும்பி வருதல் கிடையாது...இப்பாதையில் செல்வதற்கு நல்ல வழிகாட்டியாகிய சத்குருவின்  உதவி இன்றியமையாதது... ஒருவன் எவ்வளவுதான் கற்றறிந்தவனாய் இருப்பினும், வேத வேதாந்தங்களில் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுடையவனாக இருப்பினும், தனது உயரிய இலக்கை நோக்கி ஒவ்வொருவரும் பத்திரமாகச் சென்றடைய முடியாது...சத்குருவின்றி ஒருவரால் விரைவில் மேன்மைப் பெறுவது கடினமான ஒன்றேயாகும். வழிகாட்டி ஒருவர் உதவிட  அங்கிருந்தால் சரியான வழியைக் காண்பித்துப் பயணத்தின் போதுள்ள இடர்கள், குழிகள், கொடிய மிருகங்கள் இவற்றை ஒதுக்கிச் செல்லமுடியும்... பயணமும் எளிதாகிவிடும்...இவ்விஷயத்தில் நம் சத்குருநாதர்  பாபாவிற்கு ஏற்பட்ட   உயரிய  அனுபவங்களும்,  உபதேங்களும்  ஆழமானது.. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது...கேட்டுப் பின்பற்றுபவர்கள் பாக்கியசாலிகளே....மேலும் பகவான் உணர்த்துகின்ற அனைத்து ஞான உரைகள், அற்புத அனுபவங்கள் , ஞானப் பாதைக்குரிய வழிக் காட்டுதல்கள் போன்றவற்றை  பின்பற்றுபவர்களுக்கும், பாரயணம்  செய்பவர்களுக்கும்,  கேட்பவர்களுக்கும்  நம்பிக்கை, பக்தி, பொறுமை, சத்தியம், வைராக்கியம், நேர்மை, நல்வொழுக்கம் ஆகியவற்றை அளிக்கிறது.....

ஒருமுறை எங்களில் நால்வர் மத சாஸ்திரங்களையும், மற்ற புத்தகங்களையும் படித்துக் கொண்டிருந்தோம்...இவ்வாறாக உற்சாகம் பெற்றுப் பிரம்மத்தின் குணத்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். எங்களுள் ஒருவர்.. "அவரவர் ஆன்மாவைத் தத்தம் ஆன்மாவாலேயே உயர்த்தவேண்டும் என்றும் பிறரை நாடக்கூடாது என்றும் கூறினார்"....

இதற்கு இரண்டாமவர்.. "யார் மனத்தைக் கட்டுப்படுத்துகின்றானோ, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்....எண்ணங்கள், யோசனைகள் இவற்றிலிருந்து நாம் விடுபட்டவர்களாக இருக்கவேண்டும்...  நாமில்லாமல் இவ்வுலகத்தில் ஒன்றும் கிடையாது" என்றார்...

மூன்றாமவர் உலகத்தின்  தோற்றம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது...ஆகவே அருவமே நிலைத்தது (முடிவற்றது)..எனவே நாம் எது நிலையானது, மற்றும்  எது நிலையற்றது என்பதனைப்  பகுத்துணர வேண்டும் என்றார்..

நான்காம் நபராகிய பாபா கூறுகின்றார்... தீவிரமான ஏட்டறிவு பயனற்றது...நமக்கிடப்பட்ட கடைமைகளைச் செய்து, குருவின் பாதத்தில் உடல், மனம், ஐந்து பிராணன்கள் இவற்றைச் சமர்ப்பித்துவிட வேண்டும்.குருவே கடவுள், சர்வ வியாபி என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். இவ்வுறுதியான மனநிலை பெறுவதற்கு எல்லையற்ற திடநம்பிக்கை அவசியமாகும்...

இவ்வாறாக விவாதித்துக்கொண்டு கற்றறிந்த நாங்கள் நால்வரும் காடுகளில் கடவுளைத் தேடி அலையத் தொடங்கினோம்...அம்மூவரும் அறிவின் துணைகொண்டே சுதந்திரமாக எவர் உதவியுமின்றி தேட முயன்றனர்...வழியில் ஒரு வனஜாரி எதிர்பட்டார்..அதாவது வனஜாரி என்றால், எருமையின் மீது தானியத்தைக் கொண்டுசென்று விற்பவன் என்று அர்த்தம்...இப்போது வனஜாரி இந்த நால்வரிடம் உரையாடுகின்றார் இதோ..

வனஜாரி : இப்போது உஷ்ணமாயிருக்கிறது...எங்கே இவ்வளவு தூரம் போகிறீர்கள்? என்று கேட்கின்றார்...

நால்வர் : நாங்கள் காட்டில் தேடுகின்றோம்...

வனஜாரி : எதைத் தேடிச் செல்கின்றீர்கள்.

நால்வர் : நாங்கள் அனைவரும்  வனஜாரி  நம்பமுடியாத மழுப்பும் விதத்தில் ஒரு பதில் கொடுத்தோம்... 

வனஜாரி கூறுகின்றார்...திக்குதிசை தெரியாமல் காட்டில் நீங்கள் அலைந்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.., "காடுகளை முழுவதும் அறியாமல், திடீரென்று நீங்கள் இப்படி திசை தெரியாமல் அலையக்கூடாது...  காடுகளிடையே நீங்கள் செல்ல விரும்பினால் ஒரு நல்ல வழிகாட்டியை அழைத்துச் செல்லவேண்டும்..இந்த கடுமையான உச்சிவேளையில் அனாவசியமாக ஏன் அலைந்துக் கொண்டிருக்கின்றீர்கள்.  தேடும் உங்களது இரகசியத்தை நீங்கள் எனக்கு வெளியிட வேண்டாம்..ஆயினும் நீங்கள் அமர்ந்து, சாப்பிட்டு, நீர் குடித்து இளைப்பாறிய பின் செல்லலாம்...உள்ளத்தில் எப்போதும் பொறுமையாய் இருங்கள்" என்று கூறினார்....  அவ்வளவு இனிமையாகப் பேசியபோதும் அவரது வேண்டுதலை நிராகரித்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கினோம்.

நாங்கள் தன்னறிவு நிரம்பியவர்கள் என்றும், ஒருவரின் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை என்றும் நினைத்தோம்...காடு பரந்ததாகவும், பாதையற்றதாகவும் இருந்தது... சூரியஒளி கூட உட்புகாத அளவுக்கு மரங்கள் அவ்வளவு நெருக்கமாகவும், உயரமாகவும் வளர்ந்து இருந்தன...எனவே நாங்கள் வழிதவறி இங்குமங்கும் நெடுநேரம் அலைந்துக் கொண்டிருந்தோம்...முடிவாக நல் அதிர்ஷ்டம் ஒன்றினால் மட்டுமே எங்குவிட்டோமோ அங்கேயே வந்துசேர்ந்தோம்...வனஜாரி திரும்பவும் எங்களைச் சந்தித்தார்... 

வனஜாரி : உங்கள் சொந்த புத்திசாதுர்யத்தை மட்டுமே நம்பி வழியை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள்.. சிறிய அல்லது பெரிய விஷயங்களில் வழிகாட்ட, ஒரு வழிகாட்டி நமக்கு எப்போதும் தேவை.  வெறும் வயிற்றுடன் எந்த இலட்சியத்திலும் வெற்றியடைய இயலாது... கடவுள் நினைத்தாலன்றி ஒருவரும் நம்மை வழியில் சந்திப்பதில்லை... உணவளிக்கப்படுவதை மறுக்காதீர்கள்...  பரிமாறப்பட்ட உணவை  நிராகரிக்கக்கூடாது..  ரொட்டி, உணவு ஆகியவை கிடைப்பது வெற்றியின் அடையாளமாகும் என்றார் வனஜாரி...இதைக் கூறிக்கொண்டே, அவர்  மீண்டும் எங்களுக்கு உணவை வைத்து அமைதியுடனும், பொறுமையுடனும் இருக்கும்படி கூறினார்.. மீண்டும் என்னுடன் இருந்தவர்களுக்கு  இந்த நல்ல விருந்தோம்பல் பிடிக்கவில்லை..வனஜாரி கூறுவதை  நிராகரித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.. தாகத்தையும், பசியையும் தீர்த்துக் கொள்ளாமலேயே  மூவரும்  செல்லும் அளவுக்குப் பிடிவாதமாக இருந்தனர்...எனக்குப் பசியாகவும், தாகமாகவும் இருந்ததால் வனஜாரியின் அசாதாரண அன்பில் உருகினேன்..மிகவும் கற்றறிந்தவர்கள் என்று எங்களை எண்ணிக்கொண்டோம்..அன்புக்கும், இரக்க குணத்திற்கும் நாங்கள் புதியவர்களாகவே இருந்தோம்...வனஜாரி கல்வியறிவற்றவர், தகுதியற்றவர், கீழ்குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் உள்ளத்தில் அன்பு நிலைக்கொண்டு  இருந்தது.. அவர்  எங்களை உண்ணக் கூறினார்...  மற்றவர்களை நிஷ்காமியாக நேசிப்பவர் உண்மையிலேயே உயர்த்தப்படுகின்றார்... வனஜாரியினுடைய  விருந்தோம்புதலை ஏற்றுக்கொள்ளுதலே ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கான  சிறந்த ஆரம்பமாகுமென நான் நினைத்தேன்....எனவே அளிக்கப்பட்ட ரொட்டித்துண்டை மிக்க மரியாதையுடன் நான் ஏற்றுக் கொண்டேன்.தண்ணீரையும் பருகினேன்...

அப்போது ஆ...! குருவே எங்கள்முன் வந்து நின்றார்.. "எதைப்பற்றி சர்ச்சை...?" என்று அவர் கேட்டார்...நடந்த எல்லாவற்றையும் நான் கூறினேன்..அப்போது அவர், "நீ என்னுடன் வர விரும்புகின்றாயா..?  உனக்குத் தேவையானதை நான் காண்பிப்பேன்.ஆனால் நான் கூறுவதில் " "நம்பிக்கையுடையவனே வெற்றியடைவான்" என்றார்...மற்றவர்கள் அவர் கூறியதை ஒப்புக்கொள்ளாமல் அவரை விட்டுச் சென்றனர். ஆனால் நான் அவரை வணங்கி அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டேன்.  பின்னர் அவர் என்னை ஒரு கிணற்றின் அருகில்  அழைத்துச் சென்றார்...என் கால்களைக் கையிற்றால் கட்டினார்...என்னைத் தலைகீழாக பக்கத்தில் இருந்த மரத்தில் தொங்கவிட்டார்... கிணற்று நீர் மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே தொங்க விடப்பட்டிருந்த  எனக்குத்  தண்ணீர் கைகளுக்கோ வாய்க்கோ எட்டவில்லை..நாலைந்து மணிநேரம் தலைகீழாகக் கிணற்றில் தொங்க விடப்பட்டேன்...இவ்வாறு  தலைக்கீழாக தொங்கவிடப்படுதல் என்பது ஒரு  சமாதி நிலையைக் குறிக்கும் உயரிய நிகழ்வாகும்... உணர்வுகளில் இரண்டு வகைகள் உண்டு... 

(1 )  புலன் வழி உணர்வுகள்.

(2 )  ஆன்ம வழி உணர்வுகள்

தங்கள் இலட்சியத்தை அடைய புலன்களும், மனதும் வெளியேறி தங்கள் ஆசையை அடையும்படி படைக்கப்பட்டிருக்கின்றன.நமக்கு அப்போது இன்பமோ அல்லது துன்பமோ, தனியோ அல்லது கலப்போ ஆகிய புலன்வழி உணர்வுகள் ஏற்படுகின்றன...ஆனால் பேரின்ப நிலையோ, மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை...  புலன்களும், மனதும் தங்கள் ஆசையிலிருந்து திருப்பிவிடப்பட்டு தலைகீழான நிலை அவைகளுக்குக் கொடுக்கப்படும்போது, அதாவது உள்நோக்கி ஆன்மாவில் சங்கமிக்கும்போது, மற்றொன்றான ஆன்ம உணர்வைப் பெறுகிறோம்...அது சொற்களால் விவரிக்க முடியாத அளவு பேரின்பத்தையும், கலப்பற்ற மகிழ்ச்சியையும் நமக்கு அளிக்கிறது.. "நான் பேரானந்தத்தின் உச்ச நிலையில் இருந்தேன்..நான் அனுபவித்த மகிழ்ச்சியை எங்ஙனம் கூறுவேன்" என்கின்றார் பாபா..இந்த வார்த்தையின் அர்த்தம் என்பது,  குரு அவரை சமாதிநிலையில் வைத்தாரென்றும், தண்ணீர் மேலெ தொங்கவிடப்பட்டதன் காரணம்  அமைதியற்ற புலன், மனம் இவைகளுக்கு அப்பால் என்பதாம்...  

இவ்வாறாக என்னைத் தொங்கவிட்டு அவர் போய்விட்டார்.. எங்கு போனாரென்பது ஒருவருக்கும் தெரியாது...நாலைந்து மணிநேரம் கழித்து அவர் திரும்பி வந்தார்...என்னைத் துரிதமாக வெளியில் எடுத்து, எப்படி இருந்தது என்று கேட்டார்..."நான் பேரானந்தத்தின் உச்சநிலையில் இருந்தேன்...என்னைப் போன்ற முட்டாள் அந்தப் பேரானந்தத்தை எங்ஙனம் விவரிக்க முடியும்..?" என்று பதில் கூறினேன்... இவ்விடையைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.எம்மை  அவர்பால் இழுத்துத் தட்டிக் கொடுத்து, தாய்மையுணர்வுடன் அவரிடம் வைத்துக் கொண்டார்...தாய்ப்பறவை தன் குஞ்சைப் பேணுதல் போன்று என்னை அன்புடன் கவனித்தார்...அவருடைய குருகுலத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டார்.. எத்தகைய அழகுடையது அது!  அங்கே என் பெற்றோர்களை மறந்தேன்....பாசத்தைத் துறந்தேன்..அனைத்து பற்றுக்களிலிருந்தும்  எளிதாக விடுவிக்க ப்பட்டேன்...அவரது கழுத்தைக் கட்டியணைத்து எப்போதும் அவரையே உற்றுநோக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தேன்..அவரது ரூபம் எனது கண்மணியில் பதிக்கப்படாவிட்டால் நான் குருடாயிருப்பதே நலம் என்று தோன்றியது..  குருகுலம் அத்தகையது..அதனுள் ஒருமுறை நுழைந்த யாரும் வெறுங்கையுடன் திரும்ப இயலாது...எனது வீடு, சொத்து, தாய், தந்தை அனைத்தும் முழுக்க முழுக்க குருவேயானார்.  எனது அங்க  உணர்வுகள் எல்லாம் தங்கள் இடத்தை விட்டுவிட்டு எனது கண்களிலேயே ஒருமை அடைந்தன..எனது பார்வை அவரை மையமாகக் கொண்டிருந்தது...எனது தியானத்தின் ஒரே இலட்சியமாக அவர் மட்டுமே  இருந்தார்...எனது குருவைத்  தவிரப் பிறரைப்பற்றி நான் உணரவில்லை.. எண்ணவில்லை...இவரே எனது குரு..அவரைத் தியானம் செய்யும்போது எனது மனமும், புத்தியும் அசையாமல் நின்றுவிட்டன... இவ்வாறாக நான் அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று...அமைதியுடன் அவரை வணங்க வேண்டியதாயிற்று...  

இங்கே நீங்கள் முழுவதும் வேறான காட்சிகளைக் காணும் மற்ற குருகுலங்கள் உள்ளன...ஞானத்தைப் பயில்வதற்காக சீடர்கள் அங்கு செல்கிறார்கள்...பணம், காலம், உழைப்பு இவைகளைச் செலவழிக்கிறார்கள்...  ஆனால் முடிவாக அவர்கள் வருத்தப்பட நேரிடும்...  அங்கேயுள்ள குரு தனது இரகசிய ஞானத்தைப் பற்றியும், தனது நேர்மையைப் பற்றியும் பெருமைப் யடித்துக்கொள்கின்றார்.  தனது புனிதத் தன்மையையும், தூய்மையையும் அவர் ஒரு காட்சியாக்கிக் கொள்கிறார்...ஆனால் அவருடைய  உள்ளமானது  உயரியத் தன்மையில் இல்லை...தனது புகழைப் பற்றியே அவர்  புகழ்ந்து பாடிக்கொள்கிறார்.  ஆனால் அவரது சுய உபதேச  மொழிகளின் மூலமாக அடியவர்களை உருவாக்குவதில்லை.. அவர்களும் தெளிவடைவதில்லை....  தன்னையறிதலைப் பொறுத்தவரை அவரிடம் ஒன்றுமில்லை...சீடர்களுக்கு அத்தகைய குருகுலப்  பள்ளிகள் என்ன விதத்தில் பயன்படும்...?அதனால் அவர்கள் என்ன நன்மை அடைவார்கள்..?

இதற்கு முன்னர் யான் குறிப்பிட்ட எமது குருவானவர் வேறுவிதமானவர்..அவரது அருளால் எவ்வித முயற்சி, படிப்புமின்றியே ஞானம் தானாகவே எனக்குப் பளிச்சிட்டது... நான் எதையும் தேடவில்லை...ஆனால் எனக்கு அனைத்து மறை ஞான மூல உரைகளும் புரிய ஆரம்பித்தது..குரு மட்டுமே 'தலைகீழ் தொங்கவிடுதல்' எவ்வாறு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை அறிவார்...அந்நான்கு பேர்களில் ஒருவன் கர்மகர்த்தா...அவனுக்கு எவ்வாறு சில சடங்குமுறைகளை செய்வது அல்லது செய்யாமல் இருப்பது என்று மட்டுமே தெரியும்...  இரண்டாமவன் ஞானி... தனது ஞானப் பெருகையில் ஊறியவன்... மூன்றாவது ஆள் கடவுள் ஒருவரே ஆட்டுவிப்பவர் என்று நம்பி அவரிடம் தம்மை முழுமையாக சரணாகதியாகி ஆகிவிட்ட பக்தன்.. மூவரும் விவாதித்து வாதம் பண்ணிக் கொண்டிருக்கையில் கடவுளைப் பற்றிய கேள்வி எழுந்தது...முறையான வழிகாட்டுதல் இல்லாத அறிவுடன் அவரைத் தேடிக்கொண்டு போனார்கள்..விவேகம், பற்றின்மை இவைகளின் அவதாரமான  சீரடி சாயீ  அந்த நால்வருள் ஒருவர்..சீரடி பாபா  பிரம்ம அவதாரமாயிருந்தும், ஏன் மற்ற மூவர்களுடன் சேர்ந்து முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார் என்று சிலர் கேட்கலாம்... மக்கள் நன்மையடைவதற்கும், அவர்கள் தம்மைப் பின்பற்றும்படி தாம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவுமே அவர் இதைச் செய்தார்...தாமே ஒரு அவதாரமாயிருந்தும் கீழான வனஜாரியை மதித்து, 'உணவே கடவுள்'  அதாவது அன்னம் என்பதே  பிரம்மம் என்று உறுதியான நம்பிக்கையுடன் அதை ஏற்றுக்கொண்டார்...

வனஜாரியின் விருந்தோம்பலை ஏற்காதவர்கள் எங்ஙனம் கஷ்டப்பட்டார்கள் என்றும், குருவின்றி ஞானம் அடைவது இயலாதென்பதையும் அவர் காண்பித்தார்...ஸ்ருதி என்பது  (தைத்ரீய உபநிஷதம்) நமக்கு மாதா, பிதா என்பது  குருவின் வழிபாட்டையும், புனித கிரந்தங்களைக் கற்பதையும், கற்பிக்க வேண்டுவதையும் வற்புறுத்துகின்றது...  இவைகளே நமது மனதைத் தூய்மைப்படுத்தும். இத்தூய்மை செய்யப்பட்டாலொழிய தன்னையறிதல் இயலாததாகும்... உணர்ச்சிகளோ,  மனதோ, புத்தியோ ஆன்மாவை எட்டுவதில்லை..  காணுதல், அறிந்துகொள்ளுதல் என்பதும் இவ்விஷயத்தில் நமக்கு உதவாது...குருவின் அருள் ஒன்றே அனைத்தையும் கடக்க வழியாகின்றது..  நமது வாழ்க்கையின் இலட்சியங்களான  சகல ஐஸ்வர்யப்பலம், மேன்மை, தானதர்மம், ஆகியவை நமது முயற்சியாலேயே அடையப்படுகிறது.  ஆனால் மோட்ஷம் (விடுதலை) குருவின் உதவியாலேயே அடையப்படுகிறது. 

சாயீயின் தர்பாரில் பல மனிதர்கள் தோன்றி தங்கள் பாத்திரத்தை நடித்தார்கள்.ஜோசியர்கள் வந்து தங்கள் ஜோசியங்களைக் கூறினார்கள்.  இளவரசர்கள், கனவான்கள், ஏழைகள், பணக்காரர்கள், சந்நியாசிகள், யோகிகள், பாடகர்கள் மற்றும் பலரும் தரிசனத்திற்காக வந்தனர்.  மஹார் என்ற  கீழ்ஜாதியினர்  கூட வந்து தனது ஜோஹாரைத் அதாவது  வந்தனத்தைத் தெரிவித்துவிட்டு சாயீபாபாவே தனது உண்மையான பெற்றோர் என்று பாவித்து ஏற்று சரணாகதி அடைந்தனர்...  ஜாலவித்தைக்காரன்,  கோந்தலிகள் என்றழைக்கப்படுகின்ற  வில்லுப் பாட்டுக்காரர்கள், குருடு, நொண்டி, நாத்பன்திகள்  (பாடகர்கள்), நாட்டியக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வாறாக மற்றும் பலரும் வந்தனர்.  உரிய வரவேற்பு அளிக்கப்பட்டனர்...வனஜாரியும் தனது தருணத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்தார்..நாம் இப்போது அடுத்த விளக்கவுரைக்கு செல்வோம்...  

 🔥சீரடி பாபாவிடம், விரதம் இருக்க  அனுமதிக் கேட்ட பக்தை கோகலேயை  விரதமிருக்க அனுமதிக்காததன் காரணம் என்ன  என்பதைப் பற்றிய  விளக்கவுரை இங்கே....🔥

பாபா ஒருபோதும் உணவை உட்க்கொள்ளாமல்  இருந்ததில்லை...மற்றவர்களையும் அவ்வாறு விரதமோ அல்லது உணவு உண்ணாமல் இருக்க  அனுமதிக்கவில்லை...விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பதே இல்லை...  பின்னர் அவன் எங்ஙனம் பரமார்த்திகத்தை அடையமுடியும்..?  வெறும் வயிற்றுடன் கடவுள் அறியப்படமாட்டார்.  முதலில் ஆன்மா சாந்தப்படவேண்டும்... வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர்தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்க முடியும்...?  கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்...?  அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்..?சுருக்கமாக, நமது எல்லா உறுப்புக்களும் அவைகளுக்குரிய  ஊட்டத்தைப்  பெற்று நன்றாக இருக்கும்போது மட்டுமே ,  கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும் பல சாதனைகளையும் நாம் பெற முடியும்... எனவே பசியோடிருத்தல் நல்லதல்ல...மேலும்  அதிகமாக உணவு  உண்பதும் கூட  சரியான முறையாகாது..ஆகவே   உடலுக்கும், மனதுக்கும் மிதமான போக்கே உண்மையில் நல்லது... 

திருமதி.கோகலே என்ற பெண்மணி, பாபாவின் பக்தையான திருமதி காஷிபாய் கனிட்கர்  என்பவளிடமிருந்து  தாதா கேல்கருக்கு ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிவந்தாள்.  அதற்கு முந்தின தினம் பாபா, தாதா கேல்கரிடம் தமது குழந்தைகளை ஷிம்கா என்கின்ற அதாவது புனித நாட்களின்  போது உணவு உட்கொள்ளாமல் இருப்பதை  தாம் அனுமதிக்க முடியாது என்று கூறினார்..?.

அடுத்த நாள் அப்பெண்மணி தாதா கேல்கருடன் சென்று பாபாவின்முன் அமர்ந்தபோது பாபா, உடனே அவளை நோக்கி, " உணவு உட்கொள்ளாமல் விரதமிருக்க இப்போது  தேவையென்ன..? என்று கேட்டார்.  தாதாபட்டின் வீட்டுக்குப் போய் பூரணப் போளியைச் (கடலை மாவு, வெல்லம் சேர்ந்த கோதுமை ரொட்டி) செய்து அவர் குழந்தைகளுக்குக் கொடுத்து நீயும் உண்பாய் என்று கூறினார்.  பண்டிகை நன்னாட்களாக  இருந்தன...திருமதி கேல்கர் அப்போது வீட்டு விலக்கம் ஆகியிருந்தாள்...

தாதாபட்டின் வீட்டில் சமையல் செய்ய ஒருவரும் இல்லை..எனவே பாபாவின் அறிவுரை 'காலத்திநாற்' செய்ததாயிற்று...  திருமதி கோகலே தாதாபட்டின் வீட்டிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. பாபா அறிவுருத்தியபடி  அப்பண்டத்தைச் செய்ய வேண்டியதாயிற்று.  அன்றைக்கு அவள் உணவை  சமைத்து மற்றவர்களுக்கும் அளித்து  தானும் உண்டாள்...என்ன அருமையான கதை.  எத்தகைய ஆழமான படிப்பினை..!

🔥சீரடி பாபா, தான் இளம் பிராயத்தினராக இருந்தபோது எவ்வாறு இயல் வாழ்க்கையை  மேற்க்கொண்டார் என்பதைப் பற்றியும், மேலும் பாபா உபதேசித்த  உபதேச மொழிகளைப்  பற்றிய  அனுபவவுரை இங்கே ..🔥

பாபா தமது பால்யப் பருவத்தின் கதை ஒன்றைப் பின்வருமாறு கூறினார்."நான் சிறு வயதினனாக  இருந்தபோது  உணவுக்காக வேலை தேடிக் கொண்டிருந்தேன்...  பீட்காவனுக்கு சென்றேன்..அங்கு எனக்கு எம்ப்ராய்டரி வேலை கிடைத்து.. ஒரு துன்பத்தையும் பாராது கடுமையாக உழைத்தேன்..முதலாளி என்மீது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்..எனக்கு முன் மற்ற மூன்று நபர்கள்  வேலை செய்தனர்..முதல்வனுக்கு ஐம்பது ரூபாய் ஊதியமும், இரண்டாமவன்  நூறு ரூபாய் ஊதியமும், மூன்றாமவன் நூற்றைம்பது ரூபாய் ஊதியமும்  பெற்றனர்..இவர்களின் மொத்தத் தொகையைப் போல் இரண்டு மடங்கு  நான் ஊதியம் பெற்றேன்...அதாவது அறநூறு ரூபாயை ஊதியமாக  பெற்றேன்.. எனது புத்தி சாதுர்யத்தைக் கண்ட முதலாளி என்னை நேசித்தார், துதித்தார்.. முழுஆடை, தலைக்கு டர்பன், உடம்புக்கு ஷேலா(சால்வை) முதலியவற்றைத் தந்து என்னைக் கௌரவித்தார்...இவற்றை உபயோகிக்காமல் நான் பத்திரமாக வைத்திருந்தேன்...எந்த ஒரு மனிதன் அளிப்பதும் நெடுநாள் இருப்பதில்லை...அது முழுமையுடையது அல்ல...ஆனால் எனது எஜமானராகிய கடவுள்  அளிப்பதோ காலமுடிவு பரியந்தம் நிலைத்திருக்கிறது....கடவுள் ஆசிர்வதித்த  வெகுமதியை வேறெந்த வெகுமதியுடனும் ஒப்பிடமுடியாது...எனது எஜமானரோ, 'எடுத்துக்கொள், எடுத்துகொள்' என்கிறார்...  ஆனால் எல்லோரும் என்னிடம் வந்து 'கொடு, கொடு' என்கிறார்கள்...நான் கூறுவதன் பொருளை ஒருவரும் கவனத்துடன் பார்ப்பதில்லை...எனது எஜமானரின் கஜானா நிரம்பியிருக்கிறது..நிரம்பி வழிகிறது...நான் கூறுவதாவது., வண்டிகளிலா  இச்செல்வத்தை எடுத்துச் செல்லுங்கள்...சத்தியவதியான தாயாரால்  ஆசீர்வதிக்கப்பட்ட மகன் இச்செல்வத்தால் தன்னை நிரப்பிக் கொள்ளட்டும்...எனது பக்கீரின் திறமை, எனது பகவானின் லீலை, எனது எஜமானரின் இயகையான செயல்வன்மை இவை மிகவும் நூதனமானவை.என்னைப்பற்றி என்ன..?  உடம்பு (மண்) மண்ணுடன் கலந்துவிடும்.  இந்நேரம் இனிமேல் மீண்டும் வராது.  நான் எங்கோ செல்கிறேன்.  எங்கோ அமர்கிறேன். மாயை என்னைக் கடுமையாகத் தொல்லைப்படுத்துகிறது.  இருப்பினும் எனது மாந்தர்களுக்காக எப்போது நான், ஆசைபூண்டு கவலைப்படுகிறேன். ஆன்மிக முயற்சி செய்யும் ஒருவன் அதன் பழத்தை அறுவடை செய்கிறான்... எனது இம்மொழிகளைக் கேட்பவன் விலைமதிப்பற்ற சந்தோஷத்தைப் பெறுகிறான்"...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼 

ஸ்ரீ சாயீயைப் பணிக.....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ  சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்...🙏🏼🙏🏼🙏🏻

https://youtu.be/z9GwOAvI06o


https://youtu.be/V_AUIPmahv8

வியாழன், ஜூன் 10, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பத்தொன்று (31)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏻

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🙏🏻🙏🏻

🙏 அத்தியாயம் ::முப்பத்தொன்று (31)🙏

 🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...

ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது...ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...

இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்....சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..

🙏அத்தியாயம் ::முப்பத்தொன்று(31)🙏

🙏முன்னுரை..🙏

ஒவ்வொருவரும் வாழ்நாட்களில் கடைநிலை வரை, ஏன் இறை  நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்  என்பதன்  மூல சூட்சம விளக்கவுரை...

சந்நியாசி விஜயானந்தின் முக்காலத்தையும் உணர்ந்த சீரடி  சாய்பாபா, எவ்வாறு உபதேசம் செய்து உயரிய நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் அனுபவ உரை...

சீரடி பாபா, தன்னுடைய ஆத்மார்த்தமான பக்தன் பாலாராம்  மான்கர் என்பவருக்கு,, எவ்வாறு பிரசன்னக்காட்சியின் மூலம் உபதேசங்களைப் போதித்து உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன் அனுபவ விளக்கவுரை..

தாத்யா சாஹேப் நூல்கர் என்ற அடியவர்,  எவ்வாறு பாபாவின் பேரன்பாலும், உபதேச மொழிகளாலும் ஈர்க்கப்பட்டு பாபாவிற்கு சேவை செய்தார் என்பதன் அனுபவ உரை... 

மேகா எவ்வாறு சீரடி பாபாவின் ஆசிர்வாதத்தோடு  இறைவனடி சேர்ந்தார் என்பதன் குறிப்புரை..

சீரடி பாபாவின் பேராசியால்  புலி எவ்வாறு  உயிர்நீத்து  நற்கதி அடைந்தது என்பதன் குறிப்புரை..

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...

🔥முதலில் ஒவ்வொருவரும்  வாழ்நாட்களில் கடைநிலை வரை, ஏன் இறை  நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க  வேண்டும்  என்பதன்  மூல சூட்சம விளக்கவுரையை இங்கு காண்போம்..🔥

ஒவ்வொரு மனித உயிர்களின்  மரணத் தறுவாயில் ஒருவருக்குள் உள்ள  ஆசை அல்லது எண்ணம் அவரவர்களின்  எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது..கிருஷ்ணர்  கீதையில் உபதேசிக்கின்றார்.. "எவன் என்னை முடியுந்தறுவாயில் எண்ணுகின்றானோ, அவன் உண்மையில் என்னிடமே வருகிறான்" , அத்தருணத்தில் வேறெதையும் பற்றி எண்ணுபவன் அவன் விரும்பியபடியே செல்கிறான்" என்று கூறுகிறார்...நமது கடை நிலைத்  தறுவாயில் ஒரு குறிப்பிட்ட நல்லெண்ணத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்க முடியாது..இல்லை என்பதைவிடப் பெரும்பாலும் பல்வேறு காரணங்களால்  அதாவது  ஒருவித பயம்  அச்சத்தில் நாம் நம்மை மறக்க  அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன...ஆகவே நாம் வாழும் வாழ்நாட்களில் தினமுமே இறை நாமத்தை உச்சரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், நம்முடைய உயிர் பிரிமும்  தருணத்தில்  தானாகவே  நமது நாவானது  இறைநாமத்தை  ஜெபிக்கின்ற நிலையை நாம் அடைந்து விடுவோம்...இவ்வாறாக  நாம் விரும்புகிற புனித நினைவுகளை நம் மனதில் நிலைப்படுத்த நிலையான பயிற்சி அவசியம்... எனவே  இறுதிநேரம் வரும்போது குழப்பம் அடையாமல் இருப்பதற்காக, எப்போதும் இறைவனை நினைவுக் கூர்ந்து இறை  நாமத்தைச் சதாகாலம் உச்சரிக்குமாறு எல்லா ஞானிகளும் போதிக்கிறார்கள்.  அடியவர்கள் தம்மைத்தாமே முழுமையாக ஞானிகளிடம் அர்ப்பணித்து சரணாகதி அடைகின்றார்கள்... சர்வமும் அறிந்த  ஞானிகள் தன்னிடம்  சரணாகதி அடைந்த பக்தர்களை  கடைசிக் காலத்தில்  வழிநடத்தி உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்...  இம்மாதிரியான சில நிகழ்சிகள் பின்வருமாறு காணலாம்....

🔥சந்நியாசி விஜயானந்தின் முக்காலத்தையும் உணர்ந்த சீரடி  சாய்பாபா, எவ்வாறு உபதேசம் செய்து உயரிய நிலையை அடைய வழிக்காட்டினார் என்பதன் அனுபவ உரை இங்கே...🔥

சென்னையைச் சேர்ந்த விஜயானந்த் என்ற ஞானி மானஸரோவருக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார்...வழியில் பாபாவின் புகழைக் கேள்வியுற்று சீரடியில் தங்கினார்...அங்கு ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் சுவாமியைச் சந்தித்தார்...மானஸரோவர் பயணத்தைப்பற்றி அந்த சுவாமியிடம்  விசாரித்தார்.  கங்கோத்ரிக்கு மேல் மானஸரோவர் ஐந்நூறு  மைல் உயரத்திலுள்ளது என்றும், ஏராளமான பனி, ஐம்பது காத தூரத்திற்கு ஒருமுறை மொழிமாற்றம், வழியில் யாத்ரீகர்களுக்கு ஏராளமாக தொல்லை கொடுக்கும் பூட்டான் மக்களின் சந்தேக குணங்கள் போன்ற யாத்திரையிலுள்ள கடினமான சூழலை  விவரித்தார் சோமதேவ்..இதைச் செவிமடுத்த துறவி மனந்தளர்வுற்றார்...தமது விஜயத்தை இரத்துச் செய்தார்..அவர் பாபாவிடம் சென்று சாஷ்டாங்கமாகப் பணிந்தபோது பாபா கோபாவேஷம் அடைந்து கூறினார், "அந்த உபயோகமற்ற துறவியைத் துரத்துங்கள், அவரின் நட்பு பயனற்றது" என்றார்...

பாபாவின் குணத்தை அத்துறவி விஜயானந்த் அறியார்..ஆயினும் அங்கு அமர்ந்து அங்கே நடந்துக் கொண்டிருந்த நிகழ்சிகளை  எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்..அது காலை நேரமாதலாள்  மசூதியில் கூட்டம் அதிகமாய் இருந்தது...பாபா பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டார்..சிலர் அவரின் கால்களைக் கழுவிக் கொண்டிருந்தனர். சிலர் அவர் கால் கட்டைவிரலினின்று புனிதநீரை எடுத்து மனநிறைவுடன் குடித்துக். கொண்டிருந்தனர்... சிலர் சந்தனம் பூசினர்...சிலர் அவர்தம் புனிதமேனிக்கு நறுமணம் தடவினர்...குலம், ஆசாரம் இவற்றை மறந்து அனைவரும் வழிபாடு செய்தனர்..பாபா அத்துறவியின் மேல் கோபம் கொண்டவராய் இருந்தாலும், அவர் பாபாவின்பால் பேரன்பு  நிரம்பியவராய் மசூதியைவிட்டுப் போகவில்லை..சீரடியில் அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.. 

அப்போது  சென்னையிலிருந்து  அவருடைய தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருக்குக் கடிதம் வந்தது...அவர் மிகவும் மனம் தளர்ந்து, தமது தாயார் அருகில் செல்ல விரும்பினார்..ஆனால் அவரால் பாபாவின் அனுமதியின்றிச் செல்ல முடியாது..எனவே தமது கரத்தில் கடிதத்துடன் சென்று  பாபாவிடம் தாம்  வீடு திரும்ப அனுமதி கேட்டார்... வருங்காலத்தை அறிந்த எங்கும்நிறைந்த பேரறிவாளர்  பாபா அவரிடம் "உன்னுடைய தாயாரை நீ இவ்வளவு நேசிக்கும்போது ஏன் துறவியானாய்..? சொந்தபந்தங்களும், ஆபாசங்களும் காவி உடைக்கு ஒத்துவராது.. உன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று அமைதியாக அமர்ந்து பொறுமையுடன் சில நாட்கள் காத்திரு.வாதாவில் கொள்ளைக்காரர்கள்  இருக்கிறார்கள்.. உனது கதவுகளை நன்றாகத் தாழிடு... அதிக ஜாக்கிரதையாக இரு...திருடர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவர்.  செல்வமும், சுபிட்சமும் நிலையற்றவை.. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது.  இதை உணர்ந்து இம்மை, மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்றுக்கள்  அனைத்தையும் விடுத்து விட்டு உனது கடைமையைச் செய்வீராக..  

இவ்வாறாக  எவரொருவர்  ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகின்றாரோ, அவர்கள்  தொல்லைகள் யாவினின்றும் விடுபட்டு 'பேரானந்தப் பெருநிலை' எய்துகின்றார்கள்...எவரொருவர் அன்புடனும், வைராக்கியத்துடனும்  இடைவிடாது  இறைவனை  நினைத்துத் தியானிக்கின்றாரோ, பரமாத்மா அவனுக்கு ஓடிச்சென்று உதவி புரிகின்றார்...உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம்..எனவே நீ இங்கு வந்துள்ளாய்...இப்போது நான் சொல்வதைக் கவனி...உனது அந்திம வாழ்க்கையை உணர்..  ஆசைகளற்று நாளைமுதல் பாகவதத்தைப் பாராயணம் செய்யத் தொடங்குவீராக... மூன்றுமுறை சப்தாஹம் செய்..அதாவது பக்தி பூர்வமாக மூன்றுவாரம் மூன்று முறை பாராயணம் செய்வீராக...பரமாத்மா உன்னிடம் மகிழ்வெய்தி உனது தேவையற்ற  கவலைகளை அழிப்பார்....உனது துயர் நிலை மறைந்து நீ அமைதியுறுவாய்" என்று கூறினார் பாபா.. அவரது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பாபா இந்த உபதேசத்தை வழங்கினார்.. மரணத் தெய்வமான எமனை மகிழ்விக்கும் 'ராம விஜயம்' படிக்கும்படிக் கூறினார்...அடுத்தநாள் காலை குளித்து மற்ற தூய சம்பிரதாயங்களைச் செய்த பிறகு லெண்டித் தோட்டத்திலுள்ள ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று பாகவதம் படிக்கத் தொடங்கினார் விஜயானந்த்...இரண்டு முறை பாகவதப் பாராயணம் செய்தார்...அதன் பின்னர் மிகவும்  சோர்வடைந்தார்...  வாதாவிற்குத் திரும்பினார்...இரண்டு நாட்கள் தமது இருப்பிடத்தில் தங்கினார்.மூறாவது நாள் 'பக்கீர் பாபா' என்ற படேபாபாவின் மடியில் உயிர் துறந்தார்..பாபா, அவரது உடலை ஒருநாள் ஒரு நல்ல காரணம் கருதி பாதுகாக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்...பின்னர் காவல் துறையினர்  உரிய விசாரணை செய்து, உடலை அடக்கம் செய்யும்படி அனுமதி அளித்தனர்... உரிய இடத்தில் தக்க மரியாதையுடன் அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.. இவ்விதமாக பாபா துறவிக்கு  உபதேசம் அளித்து  நற்கதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

🔥சீரடி பாபா, தன்னுடைய ஆத்மார்த்தமான பக்தன் பாலாராம்  மான்கர் என்பவருக்கு,, எவ்வாறு பிரசன்னக்காட்சியின் மூலம் உபதேசங்களைப் போதித்து உயரிய நிலையை அடைய வைத்தார் என்பதன் அனுபவ விளக்கவுரை இங்கே....🔥

பாலாராம் மான்கர் என்ற இல்லறவாசியான பாபாவின் அடியவர் ஒருவர், தம் மனைவி காலமான பின்பு பெரிதும் சஞ்சலமடைந்தார்.. வீட்டுப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டைத் துறந்து சீரடி  சென்று பாபாவுடன் வாழ்ந்து வந்தார்.. பாபா அவர்தம் பக்தியால் மகிழ்ந்து, அவரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பத்தை அளிக்க விரும்பினார்..ஆகவே மான்ருக்கு ரூ.12 அளித்து சாதாரா ஜில்லாவில் உள்ள மச்சிந்த்ரகட்டுக்குச் சென்று வாழும்படி அறிவுருத்தினார்...மான்கர் முதலில் பாபாவைப் பிரிந்துச் சென்று அங்கு தங்குவதில் மனமில்லாதவராய் இருந்தார்... ஆனால் இதன்மூலம் அவருக்கொரு சிறந்த வாழ்க்கை முறையைக் கொடுத்துள்ளதாக உறுதிகூறி மான்கரைத்  தேற்றினார் பாபா...ஒரு நாளைக்கு மூன்றுமுறை தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.  பாபாவின் சொற்களை வேதவாக்காக எண்ணி  மச்சிந்த்ரகட்டுக்குச் சென்றார் மான்கர்...இயற்கைக்  காட்சிகள், தூயநீர், ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறம் இவற்றால் மிகவும் மகிழ்ந்து ஏகாந்த மனநிலையுடன், பாபா அறிவுறுத்தியபடி தியானம் செய்யத் தொடங்கினார்..சில நாட்களுக்குப் பிறகு ஒரு தெய்வீகக் காட்சி அவருக்கு ஏற்பட்டது.  அடியவர்கள் பொதுவாக அவர்களது சமாதி நிலையில் அல்லது தியானத்தில் தான் அதனைப் பெறுகிறார்கள்.  ஆனால் மான்கரைப் பொறுத்தவரையில் , தியான நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்தபோதே அவ்வித உயரிய நிலையைப்  பெற்றார்...பாபா தாமே அவர்முன் தோன்றினார்..மான்கர் பாபாவைப் பார்த்தது மட்டுமல்லாது, தான் ஏன் இங்கு  மச்சிந்த்ரகட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறேன்  என்றும் கேட்டார்....

பாபா பதில் அளிக்கையில், "சீரடியில் பல்வேறு எண்ணங்களும், கருத்துக்களும் உன் மனதில் உருவாக ஆரம்பித்தன..ஆகவே  உனது நிலையற்ற மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக உன்னை இங்கு அனுப்பினேன் என்றார் பாபா...மேலும் நான் சீரடியில் இருப்பதாக நீ எண்ணுகிறாய்... பஞ்ச பூதங்களால் ஆனதும், 3 1/2 முழ நீளம் ஆனதுமாகிய உடம்பில் நான் வசிக்கிறேன் என்றும் அதற்கு வெளியில் நான் இல்லை என்றும் நீ நினைக்கிறாய்...இப்போது நீ கண்ணார சீரடியில் கண்ட அதே மனிதர் தானா இவர் என்று தீர்மானித்துக் கொள். இந்த காரணத்திற்காகத் தான் உன்னை நான் இங்கு அனுப்பினேன்" என்று கூறினார் பாபா... குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் மான்கர் மச்சிந்த்ரகட்டை நீங்கி தன் சொந்த ஊரான பாந்த்ராவை நோக்கி புறப்பட்டார்...புனேவில் இருந்து தாதர் வரை அவர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பினார்..ஆனால் அவர் நுழைவுச் சீட்டுப்  பெறும் அலுவலகத்திற்கு  சென்றபோது மிகவும் கூட்டமாக இருப்பதைக் கண்டார்... விரைவில் அவரால் நுழைவுச் சீட்டைப்  பெற முடியவில்லை..

அப்போது தனது இடுப்பில் கோவணத்துடன் ஒரு கிராமவாசி அவரருகில் வந்து, "நீங்கள் எங்கு போகிறீர்கள்..?" எனக் கேட்டார்.  மான்கர், "தாதருக்கு" என்று பதிலளித்தார்.அவர், "தயவுசெய்து என்னுடைய தாதர் நுழைவுச்சீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.... இங்கு எனக்கு சில அவசர வேலைகள் இருப்பதால் நான் தாதர் பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்" என்று கூறினார்...மான்கர் நுழைவுச் சீட்டைப்  பெற்றுக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார்...பணத்தைத் தம் பையிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த கிராமவாசி கூட்டத்தில் மறைந்துவிட்டார்.  மான்கர், அவரைக் கூட்டத்தில் தேடியும் பயனில்லை..இரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்படும் வரை  மான்கர் அவருக்காகக் காத்திருந்தார்..ஆனால்  அவர்  வருவதற்கான எவ்வித  தடயமும் காணவில்லை...இது மான்கர் விநோதமாகப் பெற்ற இரண்டாவது அனுபவ  காட்சியாகும்...மான்கர் பின்னர் தனது வீட்டிற்குச் சென்று, பிறகு  மீண்டும் சீரடிக்குத் திரும்பி பாபாவிற்கு  சேவை  செய்து வந்தார்... அங்கேயே பாபாவின் பாதங்களிலேயே இருந்தார்... பாபாவின் முன்னிலையிலேயே, அவருடைய ஆசீர்வாதங்களுடனேயே இந்த உலகத்தைத் துறக்கும்  அனுபவத்தைப் பெற்றார்...

🔥தாத்யா சாஹேப் நூல்கர் என்ற அடியவர்,  எவ்வாறு பாபாவின் பேரன்பாலும், உபதேச மொழிகளாலும் ஈர்க்கப்பட்டு பாபாவிற்கு சேவை செய்தார் என்பதன் அனுபவ உரை இங்கு காண்போம்...🔥

தாத்யா சாஹேப் குறித்து, சீரடியில் உயிர் நீத்தார் என்று மட்டுமே ஹேமாட்பந்த் குறிப்பிட்டுள்ளார்.  சாயீலீலா சஞ்சிகையில் அவரைப்பற்றி வெளியானதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது...1909-ஆம் ஆண்டு நானா சாஹேப் அங்கு மம்லதராக இருக்கும்போது பண்டரீபுரத்தில் தாத்யா சாஹேப் ஒரு சப்-ஜட்ஜாக இருந்தார்....இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினர்...தாத்யா சாஹேப் ஞானிகளை நம்புவதில்லை...ஆனால் நானா சாஹேப் அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தார்.. சாயீபாபாவின் லீலைகளை நானா சாஹேப் அவருக்குக் கூறினார்..சீரடிக்குச் சென்று சாயீபாபாவைப் பார்க்க அவரை வற்புறுத்தினார்...முடிவாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் சீரடிக்குப் போகச் சம்மதித்தார்.அவை என்னவென்றால்.. 

(1)  ஒரு பிராமண சமையற்காரர் அவருக்குக் கிடைக்கவேண்டும் என்பது...

(2)  அன்பளிப்பிற்காக நல்ல நாக்பூர் ஆரஞ்சுப் பழங்களைப்  பெறவேண்டும்...

இவ்விரண்டு நிபந்தனைகளும் தெய்வாதீனமாக நிறைவேறின...நானா சாஹேப்பிடம் சேவைக்காக ஒரு பிராமணர் வந்தார்..அவர் தாத்யா சாஹேப்பிடம் அனுப்பப்பட்டார்....தாத்யா சாஹேப் நூறு அழகிய ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய பார்சலைப் பெற்றார்..அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதால் தாத்யா சாஹேப் சீரடிக்குப் போக வேண்டியதாயிற்று...முதலில் பாபா அவரிடம் மிகவும் கோபாவேஷம் அடைந்தார்...ஆனால் படிப்படியாக தாத்யா சாஹேப் தமது அனுபவங்களால் பாபா கடவுள் அவதாரமே என்று உறுதி பெற்றார்...பாபாவிடம் அத்தகைய அன்பு பூண்டு தான் இறக்கும் வரையில்  அங்கேயே தங்கினார்..அவருடைய முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் புனித வேதங்கள் படிக்கப்பட்டன.  இறக்கும் தறுவாயில் பாபாவின் பாததீர்த்தம் கொண்டுவரப்பட்டு குடிப்பதற்காக அவருக்கு  வழங்கப்பட்டது..பாபா அவருடைய மரணத்தைக் கேள்விப்பட்டு, "ஓ..! தாத்யா, நம்மை விட்டுச் சென்றுவிட்டார்..அவர் மீண்டும் பிறக்கமாட்டார்" என்றார்...

🔥மேகா எவ்வாறு சீரடி பாபாவின்  ஆசிர்வாதத்தோடு  இறைவனடி சேர்ந்தார் என்பதன் அனுபவ உரை இங்கே...🔥

மேகாவைப் பற்றிய அனுபவ உரையை  முன்பே  28.. ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது.  மேகா இறந்தபின்பு கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்...பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று மலர்களை மேகா உடல்மீது பொழிந்தார்.. சடங்குகள் செய்யப்பட்ட பிறகு சாதாரண மனிதர்களைப் போன்று பாபாவின் கண்களினின்றும் நீர் வழிந்தது.. பெருந் துக்கத்தாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டிருப்பதாகக் காணப்பட்டார்...பின்னர் அவரது  உடம்பை  மலரால் மூடி நெருங்கிய உறவினரைப் போல் அழுதபின்பு பாபா மசூதிக்குத் திரும்பினார்..மனிதர்களுக்குப் பல ஞானிகள் சத்கதி அளிப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், சாயிபாபாவின்  ஆசிர்வாதத்துடன்  இறைவனடிச் சேர்வது  என்பது ஒப்புவமையற்றது.

🔥சீரடி பாபாவின் பேராசியால் புலி எவ்வாறு உயிர்நீத்து நற்கதி அடைந்தது  என்பதன் குறிப்புரை இங்கே....🔥

பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்குமுன் சீரடியில் ஓர் வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது...ஒரு கிராமப்புற வண்டி வந்து மசூதிக்கு முன்னால் நின்றது...அந்தப் புலியின் முகம் வண்டியின் பின்புறம் நோக்கித் திரும்பியிருக்க இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு புலி வண்டியில் இருந்தது...அது ஏதோவொரு நோயால் அல்லது பயங்கர துன்பத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தது..அதனுடைய காவலாளர்களான மூன்று தெர்வஷிகள் அதை ஊர்  ஊராக எடுத்துச் சென்று காண்பிப்பதன் மூலம் பொருளீட்டி வந்தனர்..அதுவே அவர்களின் ஜீவனுக்கு  ஆதாரமாக இருந்தது... அந்தப் புலி அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகளினின்று அதை விடுவிக்க, குணமளிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட பலவித சிகிச்சைமுறைகளும் பலனற்றதாய்விட்டன....

அப்போது அவர்கள் பாபாவின் புகழைக் கேள்வியுற்று மிருகத்துடன் அவரைப் பார்க்க வந்தனர்.  தங்கள் கைகளில் சங்கிலியுடன் அதை அவர்கள் கீழிறக்கி, கதவருகில் அதை நிற்கும்படி செய்தனர்..அது இயற்கையிலேயே குரூரமானது...அத்துடன் நோய்வாய்ப்பட்டது...  எனவே அது இருப்புக் கொள்ளாமல் இருந்தது...  மக்கள் அதை பயத்துடனும், வியப்புடனும் பார்க்கத் துவங்கினர்...தெர்வஷிகள் உள்ளேசென்று புலியைப் பற்றிய அனைத்தையும் பாபாவுக்குக் கூறி, அவருடைய அனுமதியுடன் அதை அவர் முன்னர் கொணர்ந்தனர்...புலி படிகளை நெருங்கியதும் பாபாவின் ஒளியினால் அதிர்சியுற்றுத் தனது தலையைத் தாழ்த்தியது..பாபாவும், புலியும் சந்தித்துக் கொண்டபோது, அது படியேறி பாபாவைப் பாசத்துடன்  உற்று நோக்கியது... தனது வாலில் உள்ள மயிர்க்கொத்தை அசைத்து  அதை மூன்றுமுறை தரையில் அடித்து உணர்ச்சியற்று சாய்ந்தது..புலி இறந்தது கண்டு தெர்வஷிகள் முதலில் பெருந்துன்பமுற்று சோகம் நிரம்பியவர்களாய் இருந்தனர்..ஆனால் பக்குவமடைந்த எண்ணத்திற்குப்பின், அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பினர்...புலி வியாதியால் பீடிக்கப்பட்டிருந்ததால் அது தனது முடிவை நெருங்கிகொண்டிருந்தது என்றும், அது மிகுந்த தகைமை உடையதாய் இருந்ததால் பாபாவின் பாதாரவிந்தகளில் அவர்தம் முன்னிலையில் மரணத்தைச் சந்திக்கும் நிலை அடைந்ததென்றும் கருதினார்கள்..அது அவர்களின் கடனாளி.. கடன் தீர்ந்ததும் விடுதலையடைந்து தன் முடிவை சாயீயின் சரண கமலங்களில் சமர்ப்பித்தது. (சீரடியில் மஹாதேவ் மந்திரின் எதிரில் இந்தப் புலியின் சமாதி உள்ளது)  ஏதேனும் ஒரு ஜந்து ஞானிகளின் பாதங்களில் தலை தாழ்த்தித் தன் முடிவைச் சந்தித்தால் அது நற்கதியடைந்ததாகி விடுகிறது...அத்தகைய ஜந்துக்களைப் பொறுத்தவரை, அவைகள் புண்ணியசாலிகளாக  இருந்தாலன்றி எங்ஙனம் அத்தகைய மகிழ்சிகரமான முடிவை எய்தவியலும்..? என்பதனை நாம் அனைவரும் சிந்தித்துப் பார்த்து ஆத்மார்த்தமான தூய்மையான அன்புடன் சத்குருநாதரை சரணாகதி அடைவோமாக....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்..🙏🏼🙏🏼


https://youtu.be/FWRdsuHuXKo

புதன், ஜூன் 09, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் முப்பது(30)

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ🙏🙏

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🙏🏼🙏🏼

🙏 ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

 🙏 அத்தியாயம்:: முப்பது(30)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்.....ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து  படர்ந்து இருக்கின்றது..ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...இவ்வாறாக நாம் அனைவரும்  ஶ்ரீசாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை  மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்  பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும்  இந்த சாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம்  மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.. அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்....சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்.🙏

🙏அத்தியாயம்:: முப்பது(30)🙏

🙏முன்னுரை..🙏

ஶ்ரீசீரடி சாய்பாபா தன்னை நாடி வந்து தம்மிடம் சரணாகதி அடைந்த அனைத்து  மனித உயிர்களையும் , மிகுந்த  தாய்மையுணர்வுடன் சத்திய உபதேச நெறிமுறைகளைக் கற்பித்து, ஒவ்வொருவரும்  தன்னைத் தானே பண்படுத்திக் கொண்டு, எவ்வாறு கடைத்தேற்றம் அடைய வைத்தார் என்பதைப்  பற்றிய விளக்கவுரை...

காகாஜி வைத்யா என்பவரின் கனவில்  சப்தசிருங்கி தேவி தோன்றி, சீரடி பாபாவை தரிசிக்கும்படி கூறியதன் மூல சூட்சமம்  என்ன என்பதன் விளக்கவுரை...

ஷாமா என்ற பக்தர்,  வணியில் இருக்கின்ற தேவி  சப்தசிருங்கியின் ஆலயத்திற்கு, ஏன் வருகைப் புரிந்தார் என்பதன் விளக்கமும்.... மேலும் காகாஜி என்ற பக்தரின், சீரடி செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை எங்ஙனம்  ஷாமா பூர்த்திச் செய்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை...

ரஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த் என்ற பக்தரின்  கனவில் பாபா தோன்றி  சீரடி வருமாறு உணர்த்தியதைப் பற்றிய அனுபவ உரை....

பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்  என்ற பக்தரின் கனவில் தோன்றிய  பாபா சீரடி வருமாறு அறிவுருத்தியதைப் பற்றிய குறிப்புரை...

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்..

🔥முதலில் ஶ்ரீசீரடி சாய்பாபா தன்னை நாடி வந்து தம்மிடம் சரணாகதி அடைந்த  அனைத்து  மனித உயிர்களையும் , மிகுந்த  தாய்மையுணர்வுடன் சத்திய உபதேச நெறிமுறைகளைக் கற்பித்து, ஒவ்வொருவரும்  தன்னைத் தானே பண்படுத்திக் கொண்டு, எவ்வாறு கடைத்தேற்றம் அடைய வைத்தார் என்பதைப்  பற்றிய விளக்கவுரை இங்கே ...🔥

கருணையின் இருப்பிடமாம் சீரடி சாயீநாதர், தம் அடியவர்களிடம் அளவில்லா தாய்மையுணர்வும், பாசமும், நேசமும் காட்டி அவருடைய வெறும் தரிசனத்தாலேயே இச்சம்சார வாழ்க்கையில் உள்ள  பயத்தைப் போக்குகிறார்.. ஒவ்வொருவரின்  பெருங்கேடுகளை அழிக்கிறார்..அவர் முதலில் அருவமாய் இருந்தார்..ஆயின் தம் அடியவர்களின் பக்தியின் பொருட்டு ஓர் உருவத்தை எடுக்க வேண்டியவரானார்..ஞானிகளின் வருகையின் காரணம் அடியவர்களுக்கு 'விடுதலை',' தன்னையறிதல்' ஆகியவற்றை அளித்து ஆத்ம மறுமலர்ச்சி அளிப்பதேயாகும்...எவர், அவர்தம் பாதார விந்தங்களில் சரணாகதி அடைகின்றார்களோ, அவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது.. பாபாவின்  பாதார விந்தங்களை நினைத்துக் கொண்டு புனிதக்ஷேத்திரங்கள் இருந்தும்  வருகைப் புரிந்து  அவர்தம் சன்னிதானத்தில் வேதங்களை ஓதுகின்றார்கள்....காயத்திரி மந்திரத்தை ஜெபிக்கின்றார்கள்...பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் 'பக்தி' என்றால் என்ன என்பதை அறியோம்.  ஆனால் மற்ற அனைவராலும்  கைவிட்ட போதிலும் சாய்நாதர்  நம்மைக் கைவிடமாட்டார் என்பதை உணர வேண்டும்.  எந்த மனித உயிரை  பாபா  ஆசீர்வதிக்கின்றாரோ, அவர்கள் எல்லையற்ற வலிமைபெற்று, மெய் மற்றும்  பொய் ஆகிய தன்மைகளை  பகுத்துணரும் ஞானம் எய்துகிறார்கள் என்பதே உண்மை....     

தம் அடியவர்களின் ஆசையை சாய்பாபா  முழுமையாக அறிந்து, அவைகளை நிறைவேற்றுகின்றார்.. எனவே அவர்கள் விரும்பியதைப் பெற்று நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்...எனவே சீரடி பாபாவை  பிரார்த்திக்கின்றோம்...அவர்முன் வீழ்ந்து வணங்குகின்றோம்...நமது குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக் கொண்டு கவலைகளினின்றும் நம்மை பாபா  விடுவிக்கின்றார்..பெருந்துயரங்களால் அவதியுற்றுக் கொண்டிருப்பவன் சாயீயை விடாமல் நினைத்துத் தியானிக்கிறான்.அவரது அருளாலே அவன் மனம் அமைதியடைகிறது..

இந்த சாயீநாதர் கருணைக்கடல்.... தம்மீது பாபா கருணை பொழிந்ததன் விளைவே இந்த சத்சரித்திரம் எழுதக் காரணம்  என்கிறார் ஹேமாட்பந்த்.அல்லாவிடில் எமக்கு  என்ன தகுதி இருக்கிறது..! யார்தான் இவ்வேலையை மேற்க்கொள்ள இயலும்..! ஆனால் சாயீபாபா  எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதால், யான்  எவ்வித பாரத்தையும் உணரவில்லை என்று ஆசிரியர் ஹேமாட்பந்த் கூறுகிறார்...மேலும் இது குறித்து யான்  எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை.. என்னின் எண்ணங்களையும்,உணர்வுகளையும்  உணர்வூட்ட ஆற்றல் மிக்க ஞான ஒளியாகிய  பாபா  இருக்கும்போது யான் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆனேன்...ஏன் எவ்விதக் கவலையும் கொள்ள வேண்டும் என்று என்னுள் எழுந்தது என்று கூறுகிறார் ஆசிரியர்.. மேலும் ஹேமாட்பந்த் கூறுகிறார், இது  என்னுடைய  முன்வினைப் புண்ணிய வசத்தால் ஸ்ரீசாய் பாபா  அவர்கள், இச்சேவைக்குத் தம்மை ஆட்படுத்தி, ஆசீர்வதித்த அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்கிறேன் என்று  கூறுகிறார், சத்சரித்திர ஆசிரியர் ஹேமாட்பந்த் அவர்கள்..

கீழே நீங்கள் அனைவரும் பாராயணம்  செய்யும்  நிகழ்ச்சிகள்  அனைத்தும்   பக்தர்களின்  அனுபவ விளக்கவுரைகள்..இது  புனிதமான அமுதமுமாகும்.. இதைப் பருகுபவர்கள்  சாயீயின் பெருமையையும், அவர்தம் எங்கும்நிறை தன்மையையும் உணர்வார்கள்... விவாதிக்க, விமர்சிக்க விரும்புவோர், இந்த அனுபவ உரைகளைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலாபலனைக் கோட்டை விட்டவராவீர்கள்..இங்கு தேவையாய் உள்ளது விவாதமல்ல...அளவற்ற அன்பும், பக்தியுமேயாகும்....நான் என்ற  அகந்தையின்றி  கற்றறிந்தோர், குருவின் மீது அதீத  பக்தியுடையோர், சத்குரு  மீது உண்மையுடன் நம்பிக்கை கொண்டுள்ளோர் மட்டுமின்றி ஞானிகளின் சேவகர் என்று தம்மைக் கருதுவோர்களும் இந்த அனுபவ விளக்கவுரைகளை  விரும்பிப் பாராயணம் செய்து தம்மை உயர்த்திக்கொள்வர் என்பதே உண்மை..மற்றவர்கள் அவைகளைக் கற்பனைக் கதைகள் என்றுக் கொள்வர்....சாயீயின் அதிர்ஷ்டம் வாய்ந்த அடியார்கள் சாயீ சத்சரித்திரத்தை  கற்பகதருவாகக் கருதுவர்... இந்த சாயீ லீலைகளின் அமிர்தத்தைப் பருகுவது அறியாமையில் மூழ்கியுள்ள ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும்... இல்லறத்தார்க்கு மன நிறைவை அளிக்கும்.  இலட்சியவாதிகளுக்குச் சாதனை கைகூடும்.. இப்போது கீழ்வரும் ஒவ்வொரு பக்தர்களின் ஆத்மார்த்தமான  அனுபவ உரைகளை  பற்றிக்  கவனிப்போம்.....

🔥காகாஜி வைத்யா  என்பவரின் கனவில்  சப்தசிருங்கி தேவி தோன்றி, சீரடி பாபாவை தரிசிக்கும்படி கூறியதன் மூல சூட்சமம்  என்ன என்பதன் விளக்கவுரை இங்கே...🔥

நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணி என்கின்ற இடத்தில் காகாஜி வைத்யா என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் அங்கே சப்தசிருங்கிதேவி உபாசகர்...சாதகமற்ற சூழ்நிலைகளாலும், துயரங்களாலும் அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார்...  இத்தகைய சூழ்நிலையில் ஒருநாள் மாலை சப்தசிருங்கி தேவியின் கோவிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளிலிருந்து மீட்குமாறு மிகவும் பக்திபூர்வமாக, மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்...தேவி அவரது பக்தியால் மிகவும் மகிழ்ந்து, அதேநாள் இரவு கனவில் தோன்றி காகாஜி வைத்யாவிடம்  கூறினாள், " சீரடியில் வாசம் செய்யும் பாபாவை தரிசிப்பாயாக" அதற்குப் பின் உன் மனம் முழுஅமைதியடையும்" என்று தேவி அறிவுருத்தினாள்..இந்த பாபா யார் என்று அவளிடமிருந்து அறிவதில் காகாஜி வைத்யா  ஆர்வமுற்றார்...ஆனால் எவ்வித விளக்கமும் பெறும் முன்னரே தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார்..தேவி, காணுமாறு உணர்த்திய   பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார் காகாஜி வைத்யா... 

சிறிது  நேர எண்ணிப் பார்த்தப் பின்பு  இந்த பாபா திரயம்பகேஸ்வராக  இருக்க வேண்டும் என முடிவு எடுத்தார் வைத்யா..எனவே அவர் திரயம்பகேஸ்வரர் ஆலயத்திற்குச்  (நாசிக் ஜில்லா)  சென்றார்...அங்கு பத்து நாட்கள் தங்கினார்... அவ்வமயம் தினந்தோறும் அதிகாலை குளித்து, 'ஸ்ரீருத்ரம்' ஓதி, அபிஷேகம் மற்றபிற சமய சம்பிரதாயங்களையும் செய்தார் வைத்யா... இவைகள் எல்லாம் செய்தும் கூட முன்போலவே வைத்யா  சலனமுற்றவராகவே இருந்தார்..பின்னர் அவர் தமது இருப்பிடத்திற்குச் சென்று மீண்டும் இரங்கத்தக்க நிலையில் வேண்டினார்... அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, "நீ ஏன் திரயம்பகேஸ்வரத்திற்குச் சென்றாய்..?  நான் பாபா என்று கூறியது சீரடியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயீயை" என்றாள் தேவி....எப்போது  சீரடிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் இப்போதைய கேள்வியாக இருந்தது...  ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார்.  உண்மையில் 'ஸந்த்'தும் (ஞானி), 'அனந்த்'தும் (கடவுள்) ஒருவரே.  எள்ளளவும் அவர்களிடையே வேறுபாடு இல்லை...ஒரு ஞானியைப் பார்க்க  வேண்டும் ஒருவர் நினைத்தால் அது வெறும் டம்பமேயாகும்...ஞானியின் அருளின்றி,  அனுமதியின்றி எவரும் அவரை அணுகித் தரிசிக்க இயலுமா..? மரத்தின் இலைகூட அவன் ஆணையின்றி அசைவதில்லை...ஒரு  ஞானியைத் தரிசிக்க வேண்டும் என்று எந்தப்  பக்தன் அதீத  கவலையுள்ளவனாக இருக்கின்றானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றானோ, அவ்வளவு விரைவில்  மனநிறைவு அடையும் வண்ணம் பக்தர்களின்  எண்ணம் நிறை வேற்றப்படும் என்பதே சத்தியம்..

🔥ஷாமா என்ற பக்தர்,  வணியில் இருக்கின்ற  தேவி சப்தசிருங்கியின் ஆலயத்திற்கு,  ஏன் வருகைப் புரிந்தார் என்பதன் விளக்கமும்..... மேலும் காகாஜி என்ற பக்தரின், சீரடி செல்ல வேண்டும் என்கின்ற ஆவலை எங்ஙனம்  ஷாமா பூர்த்திச் செய்தார் என்பதைப் பற்றி அனுபவ விளக்கவுரை இங்கே....🔥

சீரடிக்கு  பயணம் மேற்க்கொள்ளும்  விஷயத்தைப் பற்றி காகாஜி நினைத்துக் கொண்டிருக்கையில் அவரை அழைத்துச் செல்ல ஒருவர், அவர் இருப்பிடத்திற்கே வந்தார்...அவர் வேறு யாருமல்ல...பாபாவின் மிக்க நெருங்கிய  உயரிய   அடியவரான ஷாமாவே ஆவார்...இத்தருணத்தில் பக்தர் ஷாமா வணிக்கு எங்ஙனம் வந்தார் என்பதைப் பற்றிய அனுபவத்தை  தற்போது பார்ப்போம்... ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்...அவரது தாயார் அவர்களின் குல தெய்வமான வணியில் உள்ள சப்தசிருங்கி தேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டாள்... தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள்..அத்தருணத்தில் அந்தத் தாயார்...தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள்.  இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன...அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்துக் கூறி அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள்...சில நாட்களுக்குப் பின்னர் ஷாமா இந்த இரண்டு  வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார்.  இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்தன...

இத்தருணத்தில் ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் சீரடிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார் ஸ்ரீமான் புட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின...அனைவரும் மகிழ்ந்தனர்...  ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார்.. அப்போது அவரது தாயார், தனது  வேண்டுதல்களை  ஷாமாவின் சகோதரரிடமும்  தான்  மரணப்படுக்கையில் இருக்கும் போது  கூறியதை  நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  எனவே  தேவி  மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார் ஜோதிடர். பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவரும் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார்...மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் ஆபத்தானது என எண்ணி ஒரு பொற்க் கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி  ஸ்தனங்களைத்  தயாரிக்கக் கூறினார்கள்...

பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து, அவர் முன்னர் இரண்டு வெள்ளி ஸ்தனங்களையும் வைத்து ஏற்றுக்கொண்டு தம்மை வேண்டுதல்களினின்று விடுவிக்கும் படி (ஏனெனில், பாபாவே ஷாமாவுக்கு சப்தசிருங்கி தெய்வம்) வேண்டிக் கொண்டார்..சப்தசிருங்கி கோவிலுக்கு ஷாமாவையே  போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில்  சுயமாக  சமர்ப்பிக்கும் படியும் பாபா வற்புறுத்தினார்...  பாபாவின் அனுமதியையும், உதீயையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார்... அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார்...காகாஜி வைத்யா  அப்போதுதான் பாபாவை தரிசனம்  செய்ய  கவலையுள்ளவராக இருந்தார்.. .அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார்...எத்தகைய வியத்தகு ஒற்றுமை இது..! 

காகாஜி வைத்யா, ஷாமாவை  யார் என்றும், எப்போது நீங்கள்  வந்தீர்கள்  என்று நலம்  விசாரித்தார்...அவர் சீரடியிலிருந்து தான்  வந்திருக்கின்றார் என்றறிந்தவுடன் உடனே அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.... பாபாவின் அன்பால் அவர் அந்த அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தார்...பின்னர் அவர்கள்  இருவரும்  சாயீன் லீலைகளைப் பற்றிப் பேசினார்கள்...ஷாமா தன்னுடைய  வேண்டுதல்களை நிறைவேற்றியப் பின்னர் இருவரும் சீரடிக்குப் புறப்பட்டனர்..காகாஜி மசூதிக்குச் சென்று பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார்...உடனே அவர் கண்கள் குளமாயின...  அவர் அமைதியுற்றார்.சப்த சிருங்கதேவி, தனக்கு அறிவுருத்திய  காட்சியின்படியே பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாகவும், அடக்கமாகவும் ஆயிற்று..தமது மனதில் காகாஜி கீழ்கண்டவாறு எண்ண ஆரம்பித்தார், "என்ன வியத்தகு சக்தி இது..!  பாபா ஒன்றும் பேசவில்லை... எவ்விதக் கேள்வி பதிலும் இல்லை..ஆசீர்வதிக்கவில்லை..வெறும் தரிசனம் ஒன்றே இவ்விதமாக மகிழ்ச்சிக்கு அடிகோலுகிறது.... எனவே அமைதியின்மை அவரது வெறும் தரிசனத்தாலேயே மறைந்து 'இன்ப உணர்வு' காகாஜிக்கு வந்திருக்கிறது.  

இதுவே 'தரிசனத்தின் சூட்சம  மகிமை ' எனப்படுவதாகும்..அவரது பார்வை சாயீயின் பாதங்களில் நிலைகொண்டது..அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலவில்லை.  பாபாவின் உபதேசங்களையும், லீலைகளையும்  கேட்டு கரைகாணா மகிழ்ச்சியடைந்தார்...பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார்... கலப்பற்ற  நீடித்த இன்பத்தை அவர் பெற்றார்.. அங்கு காகாஜி  பன்னிரெண்டு நாட்கள் தங்கி இருந்தார்...பாபாவிடம் விடைபெற்று உதி, ஆசீர்வாதம் இவைகளுடன் வீடு திரும்பினார்....

🔥ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த் என்ற பக்தரின் கனவில் பாபா தோன்றி  சீரடி வருமாறு உணர்த்தியதைப் பற்றிய அனுபவ  விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥

அதிகாலை நேரங்களில் நாம் காணும் கனவானது, விழித்திருக்கும்போது நனவாகிறது என்று கூறப்படுகின்றது...ஆனால் பாபாவின் கனவுக் காட்சிகளுக்கு  எவ்விதக்கால நியதியில்லை.அதற்கு எடுத்துக்காட்டாக  நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்குங்கால்..ஒருநாள் மாலை பாபா, காகா சாஹேப் தீஷித்தை அழைத்து, ராஹாதாவிற்குச் சென்று, தாம் நெடுநாள் குஷால்சந்தை பார்க்காத காரணத்தால் அவரை சீரடிக்கு அழைத்து வருமாறு கூறினார்..அங்ஙனமே காகா சாஹேப் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ராஹாதா சென்று பாபாவின் செய்தியைத் தெரிவித்தார்..அதைக்கேட்டு குஷால்சந்த் ஆச்சரியமடைந்தார்....அன்று மதியம் உண்டபின் சிறுதுயில் கொண்டிருந்த போது, குஷால்சந்தின்  கனவில்  சீரடி பாபா தோன்றி உடனே சீரடிக்கு வரும்படி கூறினார்.  பக்கத்தில் தமது குதிரை இல்லாததால், தமது மகனை பாபாவுக்கு அறிவிக்கும் படியாக அனுப்பியிருந்தார்...அவருடைய மகன் கிராம எல்லைக்குப் போய்க்கொண்டிருந்த போது தீஷித்தின் வண்டி எதிரே வந்தது...தீஷித் குஷால்சந்தை அழைத்துவரவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார்....பின் இருவரும்  சீரடி திரும்பினர்.  குஷால்சந்த் பாபாவைக் கண்டார்..அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்..பாபாவின் இந்த லீலையைக் கண்டு குஷால்சந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்...

🔥பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்  என்ற பக்தரின் கனவில் தோன்றிய  பாபா சீரடி வருமாறு அறிவுருத்தியதைப் பற்றிய குறிப்புரை இங்கு காண்போம்....🔥

 பம்பாயைச் சேர்ந்த ராம்லால் என்ற பஞ்சாபி பிராமணர் ஒரு கனவுக்காட்சி  கண்டார். அந்தக் கனவுக் காட்சியில்  பாபா தோன்றி  சீரடிக்கு வரும்படி அறிவுருத்தி இருக்கின்றார்.... காட்சியில் அவர் ஒரு மகான்  போன்றத் தோற்றத்தில் காட்சிக் கொடுத்து இருக்கின்றார். ஆனால் அவர் எங்கிருப்பார் என ராம்லால் அறியவில்லை..பாபாவைச்  சென்று பார்க்க எண்ணினார். ஆனால்  பாபா எங்கு இருக்கின்றார் என்ற  விலாசத்தை வைத்திருக்கவில்லை...ஆகவே  என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை... ஒரு பேட்டிக்காக ஒருவரை அழைப்பவன் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான்..இந்த விஷயத்தில் அதுவே நடந்தது...அதேநாள் மாலை, வீதிகளில் மெதுவாக நடந்துக் கொண்டிருக்கும் போது பாபாவின் ஒரு படத்தை ஒரு கடையில் அவர் கண்டார்...அவர் கனவில் கண்ட மகானின் உருவ அம்சங்கள் இங்கு கண்ட  இப்படத்துடன் மிகப்பொருத்தமாக இருந்தது...விசாரித்ததில் அவர் சீரடியைச் சேர்ந்த சாயிபாபா எனத் தெரிந்துகொண்டார்...சீரடிக்கு உடனே செல்ல ஆயத்தமானார்..தனது இறுதிக் காலம்வரை அங்கேயே தங்கினார். தரிசனத்துக்காக இவ்விதமாக பாபா சீரடிக்குத் தமது அடியவர்களைத் தானே  வரவழைக்கின்றார்... பாபா நினைத்தால் மட்டுமே சீரடி  சென்று தரிசனம் செய்ய முடியும் என்பது பலருடைய அனுபவமாக இருக்கின்றது...தன்னை நாடி வந்த ஒவ்வொரு பக்தர்களின்  ஆத்மார்த்த, லௌகீகத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றார்  சீரடி பகவான்....

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🙏🏼

ஸ்ரீ  சாயீயைப்  பணிக...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼


https://youtu.be/hDNH3TcMyi8

செவ்வாய், ஜூன் 08, 2021

ஶ்ரீ சீரடிபாபாவின் சாய்சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாயத்தின் வெளியீடு..அத்தியாயம் இருபத்தொன்பது(29)🙏

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள  இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼

🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏

🙏அத்தியாயம் ::..இருபத்தொன்பது (29)🙏

🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய்  சத்சரித்திரம்  பாராயணம் செய்வதன்  முக்கியத்துவமும், பெறப்போகும்  நன்மைகள்  என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத  எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது..ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது....

ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில்  இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்... இவ்வாறாக நாம் அனைவரும் சாய்  சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும்  அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே ஶ்ரீசாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக....🙏

🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப்  பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥

தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....வேத பாராயணத்தின் மூலமாக  ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை  அடையும் நிலையைப்  பெறலாம்.. மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற  இறைப்பண்புகளைப்  பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும், இந்த ஶ்ரீசாய் சத்சரித்திர  வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது....

மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில்  வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள்  விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்....மேலும் அனைத்து விதமான  கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி  பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும்  ஒருசேரப்பெறலாம்....🙏

 🙏 அத்தியாயம்::.. இருபத்தொன்பது(29)🙏

🙏முன்னுரை..🙏

சீரடி பாபா தன்னை நாடி வந்த  வறுமையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய  பக்தர்களுக்கு எவ்வாறு தானதருமம் செய்தார் என்பதைப் பற்றியும், இவ்வாறு தானம் அளிப்பதைக் கேள்விப்பட்டு  வந்த பஜனைக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு  பாபா  ஆசிகளையும், அற்புதக் காட்சியும்  அளித்து  எவ்வாறு உபதேசம் செய்தார்  என்பதைப் பற்றி விளக்கவுரை..... 

டெண்டுல்கர் என்ற பக்தரின் குடும்பம் பாபா மீது  ஆத்மார்த்தமான பக்தி செய்து, ஶ்ரீசாய்நாத் பஜன்மாலா என்ற நூலை  திருமதிடெண்டுவ்கர்  எழுதி, எவ்வாறு  பாபாவின் அதீத  அனுக்கிரகத்தையும் ஆசியையும்  பெற்றார் என்பதைப் பற்றிய விளக்கவுரை...

கேப்டன் ஹாடே என்ற பக்தரின்  ஆத்மார்த்தமான அன்பு மற்றும் பக்தியை ஏற்றுக்கொண்டு, எவ்வாறு  கனவில் தோன்றிக் காட்சியளித்தார் என்பதையும்,  ஹாடே அளித்த நாணயத்தை எவ்வாறு புனிதப்படுத்தி மீண்டும் வழங்கினார் என்பதைப் பற்றிய  விளக்கவுரை... 

வாமன் நார்வேகர் என்ற பக்தர்,  ஆத்மார்த்தமான பக்திக்கொண்டு, இறை உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயத்தை பாபாவிற்கு அளித்ததைப் பற்றியும்,  அதனை பாபா என்ன செய்தார் என்பதைப் பற்றிய விளக்கவுரை.... 

மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்....

🔥 முதலில் சீரடி பாபா தன்னை நாடி வந்த  வறுமையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய  பக்தர்களுக்கு எவ்வாறு தானதருமம் செய்தார் என்பதைப் பற்றியும், இவ்வாறு தானம் அளிப்பதைக் கேள்விப்பட்டு  வந்த பஜனைக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு  பாபா ஆசிகளையும், அற்புதக் காட்சியும்  அளித்து  எவ்வாறு உபதேசம் செய்தார்  என்பதைப் பற்றி விளக்கவுரை இங்கே....🔥

இந்த அத்தியாயம் சாயீபாபாவைப் பற்றிய மற்ற பல அற்புதமான, சுவையான கதைகளை விவரிக்கிறது...முதலில் இங்கு சென்னை பஜனை சங்கத்தினர்  பற்றிய அனுபவ உரையைக் காண்போம்...1916- ஆம் ஆண்டில் இந்தக் குழு காசிக்குத் தீர்த்தயாத்திரையாக புறப்பட்டது...ஒரு மனிதர், அவரின்  மனைவி, மகள், மைத்துனி ஆகியோரையே அக்குழு கொண்டிருந்தது...துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை... போகும் வழியில் அகமத்நகர் ஜில்லா கோபர்காவன் தாலுக்காவிலுள்ள சீரடியில், தமது பக்தர்களுக்கும், அங்கு சென்று தங்களது திறமைகளைக் காட்டிய திறமைசாலிகளுக்கும், தினந்தோறும் தானதர்மங்களைச் செய்யும்       தாய்மையுணர்வும், தாராளமும், அமைதியும், சாந்தியும் உடைய பெரும்ஞானி ஒருவர் இருக்கின்றார் என்று பஜனைக் குழுவினர் கேள்விப்பட்டனர்..

சாயிபாபாவால் தக்ஷிணையாக ஏராளமான பணம் தினந்தோறும் சேகரிக்கப்பட்டது. இத்தொகையிலிருந்து பக்த கொண்டாஜியின் மகளான அமனி என்ற  மூன்று  வயது குழந்தைக்குத் தினந்தோறும் ரூ.1ம், வேறு சிலருக்குத் தினந்தோறும் ரூ.2 முதல் ரூ.5 வரையும், அமனியின் தாயாருக்குத் தினந்தோறும் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், சமயத்தில் ரூ.50 கூட அவர் வினியோகம் செய்யப்பட்டது....

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அந்தப் பஜனைக் குழுவினர்  சீரடிக்கு வந்து தங்கினர்...அக்குழுவினர்கள் மிக நன்றாக பஜனை செய்து மிகச்சிறந்த பாடல்களையெல்லாம் பாடினார்கள்..ஆனால் அந்தரங்கமாக அவர்கள் பணத்துக்காக பெரும்  ஆவல் கொண்டனர்..அந்தக்  குழுவினர் மூவர் பேராசை பிடித்தவர்களாய் இருந்தனர்..ஆனால் அவ்வீட்டுத் தலைவியின் குணம் வேறுபட்டதாய் இருந்தது..அவளுக்கு பாபாவின் மேல் அன்பும், பக்தியும், பிரியமும் இருந்தது...ஒருநாள் மத்தியான ஆரத்தியின்போது அவளது பக்தி, நம்பிக்கை இவற்றில் பெருமகிழ்வடைந்த பாபா அந்த பெண்ணிற்கு, அவளது இஷ்ட தெய்வக் காட்சியை அளித்தார்..வழக்கப்படி சாயிநாதனுக்குப் பதில் சீதாநாதனாக (ராமனாக) காட்சியளித்தார்...அவளது இஷ்ட தெய்வத்தைக் கண்டு மிகமிக உருகிப் போய்விட்டாள்...கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள்...மக்கள் அவளது ஆனந்த நிலையைக் கண்டு அதிசயமுற்றனர்.. ஆனால் அதன் காரணத்தை அவர்கள் அறிய இயலவில்லை.

பின்னர் மாலைப் பொழுதில் எல்லாவற்றையும் அவள் தன் கணவனுக்கு விளக்கினாள்... சாயிபாபாவுக்குப் பதிலாக அவள் எங்ஙனம் ராமரைக் கண்டாள் என விளக்கமாகக்  கூறினாள்...மிகுந்த எளிமையும், பக்தியும் உடையவளாதலால் அது அவளது 'மனப் பிராந்தியே' என அவளின் கணவர் நினைத்தார். "மற்றவர்கள் எல்லாம் சாயிபாபாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது  நீ மட்டும் ராமனைக் காண்பதாவது" என்று கணவர்  அவளைக் கேலி செய்தார்...அவளது மனம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்தபோதெல்லாம் அடிக்கடி ஸ்ரீராம தரிசனத்தைக் கண்டாள்.ஆதலால் அவள் இக்கூற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.... இம்மாதிரியாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும்  போது ஒருநாள் இரவு அவள் கணவர் தன் கனவில் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார்...அது கீழ்வருமாறு...அவர் ஒரு பெரிய நகரத்தில் இருக்கிறார்...போலீஸ் அவரைக் கைதுசெய்து கைகளைக் கட்டி, லாக்-அப்பில் வைத்திருக்கிறது. போலீஸ் நன்றாக அழுத்திக் கட்டிக் கொண்டிருக்கும் போது ஜெயிலுக்கு வெளியில் சாயிபாபா அமைதியாக நின்றுக் கொண்டிருப்பதைக்  காண்கிறார்...பாபா இவ்வளவு அருகில் இருப்பதைக் கண்டு வெளிப்படையான குரலில் அவரிடம் "உமது புகழைக் கேள்விப்பட்டு நான் உமது திருவடிகளிடையே வந்தேன்..தாங்களே நேரில் நின்றுகொண்டிருக்கும்போது எனக்கு இந்தக் கேடு ஏன் நிகழ வேண்டும்..? என வினவுகின்றார். 

பாபா :  உனது கர்மத்தின் விளைவை நீ அனுபவித்தாக வேண்டும் என்கிறார்...

பக்தர் :  இந்தப் பிறவியில் இத்தகைய துரதிர்ஷ்டத்தை அளிக்கும் விதத்தில் நான் ஏதும் செய்யவில்லையே..?

பாபா :  இப்பிறவியில் இல்லையென்றால் உனது போன பிறவியில் நீ ஏதும் பாவம் செய்திருப்பாய்.

அவர் :  எனது முந்தைய பிறவிப்பற்றி எனக்கு ஏதும் தெரியாது...ஆனால் அப்படியே நான் செய்திருப்பதாகவே வைத்துக் கொண்டபோதிலும் தங்கள் சாந்நித்யத்தின் முன்னர், நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று ஏன் அவைகள் அழிக்கப்படக்கூடாது..?

பாபா:  உனக்கு அத்தகைய நம்பிக்கை உண்டா..?

அவர்:  ஆம்...

பாபா :  உனது கண்களை மூடு...

அவர் கண்களை மூடியது தான் தாமதம்...ஏதோ ஒன்று நிலத்தில் விழுந்து பலத்த அடி விழுவதுபோல் கேட்டது...அவர் கணைகளைத் திறந்த போது தாம் விடுதலையாகி இருப்பதையும், போலீஸ் இரத்தம் சிந்தி கீழே விழுந்து கிடப்பதையும் கண்டார்.. மிகவும் பீதியடைந்து பாபாவை அவர் பார்த்தார்.

பாபா :  நீ இப்போது நன்றாகப் பிடிபட்டுக்கொண்டாய்....இப்போது அதிகாரிகள் வந்து உன்னைக் கைது செய்வார்கள்... 

அவர் : (கெஞ்சினார்) தங்களைத் தவிர என்னைக் காப்பாற்றுவார் வேறு ஒருவரும் இல்லை...எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறுகிறார்...

பின்னர் பாபா அவரை மீண்டும் கண்களை மூடக் கூறினார்...அவர் அதே மாதிரியாகச் செய்து பின் கண்களைத் திறந்ததும், அவர் ஜெயிலுக்கு வெளியே விடுதலையாகி இருப்பதையும் பாபா அவரருகில் இருப்பதையும் கண்டார்...பாபாவின் காலடிகளில் அப்போது அவர் வீழ்ந்தார், "இந்த நமஸ்காரத்திற்கும் முந்தைய நமஸ்காரங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா..?" என்று பாபா கேட்டார்.  "ஏராளமான வித்தியாசம் இருக்கிறது...எனது முந்தைய நமஸ்காரங்களெல்லாம் தங்களிடமிருந்து பணம் பெறுவதற்காகச் செய்யப்பட்டன.. ஆனால் இந்த நமஸ்காரமோ தாங்கள் கடவுள் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது...அத்துடன் தாங்கள் முகம்மதியனாக  இருந்துகொண்டு இந்துக்களைப் பாழ்படுத்துவதாக நினைத்தேன்.

பாபா :  முகம்மதியக் கடவுள் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா..? என்று கேட்கின்றார்..

அவர் :  இல்லை என்றுக் கூறுகிறார்...

பாபா:  'பஞ்ஜா' என்ற உலோகத்தாலான கை அடையாளம் உங்கள் வீட்டில் இல்லையா..?  'தாபூத்' (மொஹரம்) சமயத்தில் நீ அதனை வழிபடுவதில்லையா..?  கல்யாணம் மற்றும் இதர பண்டிகைக் காலங்களில் நீங்கள் அமைதிப்படுத்தி ஆற்றும் காட்பீபீ என்ற மற்றொரு முகம்மதியப் பெண் தெய்வம் உங்கள் வீட்டில் இல்லையா..? பாபா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆம் என்று  ஏற்றுக்கொண்டார்...

பாபா:  உனக்கு வேறென்ன வேண்டும்..?

அவரது குரு ராம்தாஸின் தரிசனத்தைப் பெற அவர் மனதில் அவா ஒன்று எழுந்தது...அப்போது பாபா பின்னால் திரும்பிப் பார்க்கச் கூறினார்....அவர் திரும்பியபோது ராம்தாஸ் நின்றுக் கொண்டிருந்தார்.  அவர் காலடியில் விழப்போன போது ராம்தாஸ் மறைந்துவிட்டார்.  பின்னர் அவர் பாபாவை விருப்பத்துடன் "நீங்கள் வயதானவராகத் தோன்றுகிறீர்களே, உங்கள் வயது என்னவென்று தெரியுமா..?" என்று கேட்டார்.

பாபா:  என்ன.! நான் கிழவன் என்றா சொல்கிறாய்..? என்னோடு ஒரு ஓட்டப்பந்தயம் விட்டுப் பார்த்துவிட்டுக் கூறு என்றார்...

இதைக் கூறிவிட்டு பாபா ஓடத் தொடங்கினார்.  அவரும் பின்னால் ஓடினார்.  ஓடும்போது பாபா அவர்தம் பாதத்தால் எழுப்பிய தூசியில் மறைந்துவிட்டார்..அவரும் கண்விழித்தார்.. விழித்தபின் கனவுக்காட்சியைப் பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார்..அவரது மனோபாவனை முற்றிலுமாக மாறிவிட்டது... பாபாவின் பெருமையை அவர் உணர்ந்துக் கொண்டார்.. இதன்பின் அவரது தேவையற்ற ஆவல்  குணமும், சந்தேகமும் மறைந்து ஒழிந்தன.  பாபாவின் பாதாம்புயத்தில் உண்மையான பக்தி அவருக்கு ஏற்பட்டது...அக்காட்சி கனவாக இருந்தாலும் கூட, அங்கு கேட்கப்பட்ட வினா விடைகள் மிகவும் விருவிறுப்பானதும் பொருள் செறிந்ததும் ஆகும்...

மறுநாள் காலை எல்லோரும் ஆரத்திக்காக மசூதியில் குழுமியபோது பாபா அவருக்கு இரண்டு ரூபாய் மதிப்புள்ள இனிப்புக்களையும், தம் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் பணமும் எடுத்து பிரசாதமாக அளித்தார்.. மேலும் சில நாட்கள் அவரை அங்கு தங்கச்செய்து, "அல்லா உனக்கு தாராளமாக அளிப்பார்...உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்" என்று ஆசி கூறினார்...அங்கு அவர் அதிகமாகப் பணம் பெறவில்லை..ஆனால் அதற்கும் மேலானவைகளைப் பெற்றார்...அதாவது பாபாவின் ஆசியை! அது அவருக்குத் தொடர்ந்து நன்மையளித்து வந்தது...பின்னால் அப்பஜனைக் குழுவிற்கு  ஏராளமான வருமானம்  கிடைத்தது..அவர்களது பிரயாணம் வெற்றிகரமாக முடிவடைந்தது...அவர்கள் பிரயாணத்தின் போது எவ்வித அசௌகரியமோ, தொல்லையோ ஏற்படவில்லை... பாபாவின் அருளால் எய்திய ஆனந்தத்தையும், ஆசிகளையும் நினைத்தவாறே பத்திரமாகவும், சௌக்கியமாகவும் வீடு திரும்பினர்...

🔥டெண்டுல்கர் என்ற பக்தரின் குடும்பம் பாபா மீது  ஆத்மார்த்தமான பக்தி செய்து, ஶ்ரீசாய்நாத் பஜன்மாலா என்ற  நூலை திருமதிடெண்டுவ்கர்  எழுதி, எவ்வாறு  பாபாவின் அதீத  அனுக்கிரகத்தையும் ஆசியையும்  பெற்றனர் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம்...🔥

பாந்த்ராவில் டெண்டுல்கர் என்பவர், தனது  குடும்பத்துடன்  வசித்து வந்தார்.. அக்குடும்பத்தின்  உறுப்பினர்கள் அனைவரும்  பாபாவிடம் பக்தி பூண்டவர்களாக வாழ்ந்து வந்தனர்.. ஸ்ரீ சாயிநாத் பஜன்மாலா' என்னும் என்னூறு  செய்யுள்கள் கொண்ட ஒரு நூலை திருமதி. சாவித்ரிபாயி டெண்டுல்கர் பதிப்பித்திருக்கிறார்...அப்புத்தகம்  பாபாவின் லீலைகள் அனைத்தையும் உள்ளடக்கியது..  பாபாவைப்பற்றி ஆர்வம் கொண்டோர் எல்லோரும் படிக்க உகந்த நூல் அது... 

ஒருமுறை பாபு டெண்டுல்கரின்  புதல்வன் இரவும், பகலும் அரும்பாடுபட்டு படித்துக் கொண்டிருந்தான்...அவன் மருத்துவத் தேர்விற்கு  செல்லவேண்டும்....சில ஜோதிடர்களைக் கலந்தாலோசித்தார்கள்.. அவனது ஜாதகத்தைப் பரிசீலித்துவிட்டு கிரகங்கள் அவனுக்கு இவ்வருடம் சாதகமில்லை என்றும், எனவே அடுத்த வருடம் அவன் தேர்வுக்குச் சென்றால் நிச்சயம் வெற்றிப் பெறுவான் என்றும் அவர்கள் கூறினர்...இது அவனைக்   கவலைக்குள்ளாக்கி, நிலைக் கொள்ளாமலிருக்கச் செய்தது...சில நாட்களுக்குப்பின் அவனது தாயார் சீரடி சென்று பாபாவைத் தரிசித்தாள்....

பல விஷயங்களுடன், சில நாட்களில் பரீட்சை எழுதவிருந்த தன் மகனின் கவலைக்கிடமான நிலைமைகளையும் அவள் பாபாவுக்குக் கூறினாள்... இதைக்கேட்டுவிட்டு பாபா கூறினார், "உனது மகனிடம் என்னை நம்பும்படி சொல். ஜாதகம், கைரேகைக்காரர்களின் ஜோதிடம் ஆகிய முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு அவன் பாட்டுக்குப் படித்துக் கொண்டிருக்கட்டும்..தேர்வை அமைதியாக எழுதட்டும்..அவன் இவ்வாண்டு தேர்ச்சிப் பெருவது உறுதி...என்னை நம்பும்படியும் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் சொல்"..என்று பாபா அறிவுருத்தினார்..உடனே அந்தத் தாயானவள் வீட்டிற்குத் திரும்பி இச்செய்தியை மகனுக்குத் தெரிவித்தாள்.. பின்னர் அவன் கஷ்டப்பட்டுப் படித்து உரிய காலத்தில் தேர்வையும் எழுதினான்...எழுதியத் தேர்வை  அவன் நன்றாகச் செய்திருந்தான்.. ஆனால் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டு தேர்ச்சிப்  பெறுவதற்குப் போதுமான மதிப்பெண்  தான் பெறப்போவதில்லை என்று எண்ணினான்... எனவே  வாய்மொழித் தேர்வுக்கு  செல்வதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை...ஆனால் தேர்வு  அதிகாரி அவனை விடுவதாக இல்லை....

அவன் எழுதிய பேப்பர்களில் தேர்ச்சிப்  பெற்று விட்டதாகவும், வாய்மொழித் தேர்விற்கு  அவன் வரவேண்டும் என்றும் சகமாணவன் ஒருவன் மூலம் செய்தியனுப்பினார்...இவ்வாறாக அவன் அத்தேர்வில்  தேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றியடைந்தான்...கிரகங்கள் அவனுக்கு எதிராக இருந்தபோதிலும், பாபாவின் அருளால் அவன் இவ்வாறாக வெற்றிப் பெற்றான்...ஐயங்களும், கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே சூழ்கின்றன என்பதை இங்கே அறிந்து கொள்ளல் வேண்டும்....நாம் வாழ்க்கையில்  பல்வேறு விதமான சோதனைக்கு  உள்ளாக்கப்படுகிறோம்...முழு நம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக சிறந்தத் தீர்வைப் பெற்றுத்தரும்..

இவர்களின் தந்தையாரான ரகுநாத்ராவ் பம்பாயில் உள்ள வெளிநாட்டு வணிக நிறுவனம்  ஒன்றில் பணியாற்றி வந்தார்.  வயதாகிவிட்டபடியால் அவரால் வேலையைச் சரியாகச் செய்ய இயலவில்லை...எனவே அவர் ஓய்விற்காக விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று. விடுமுறையின்போது அவர் தேகநிலை முன்னேறாததால் லீவை அதிகப்படுத்துவதோ அல்லது வேலையினின்று ஓய்வு பெறுவதோ தவிர்க்க முடியாததாகிவிட்டது...அவர் முதுமையும், நம்பிக்கையும் வாய்ந்த பணியாளராக இருப்பதால் அந்த ஸ்தாபனத்தின் முக்கிய அதிகாரி அவருக்கு ஓய்வுத் தொகையுடன் விடுப்பு ஓய்வும் வழங்கத்  தீர்மானித்தார்....

எவ்வளவு ஓய்வுத்தொகை வழங்குவது  என்ற பிரச்சனை இத்தகைய தீர்மானத்திலிருந்து வந்தது...அவர் மாதம் ரூ.150 பெற்று வந்தார்...ஓய்வுத் தொகையான ரூ.75 வீட்டுச் செலவுகளைப் பராமரிக்கப் போதுமானவை அன்று..ஆகவே  குடும்பத்தில் அனைவரும் இவ்விஷயத்தில் கவலையுள்ளவர்களாக இருந்தனர்...முடிவானத் தீர்விற்கு  பதினைந்து தினங்களுக்கு  முன்பாக பாபா, திருமதி டெண்டுல்கரின் கனவில் தோன்றி, "பென்ஷன் நூறு ரூபாயாக அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்...இது உனக்குத் திருப்திதானே...?"என்று கேட்டார்.  "பாபா இம்மாதிரி ஏன் என்னைக் கேட்கவேண்டும்..?  நாங்கள் உங்களையே முழுவதும் நம்புகிறோம்" என்று திருமதி டெண்டுல்கர் பதிலளித்தார். பாபா ரூ.100 என்று கூறியபோதும், ரூ.10 இன்னும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது...இது ஒரு விசேஷ நியதியாக, தமது பக்தர்களுக்கு அத்தகைய அற்புதமான அன்பையும், பாதுகாப்பையும் பாபா தாய்மையுணர்வுடன்  காண்பிக்கிறார் என்பதை உணர்த்துகிறது..

🔥கேப்டன் ஹாடே என்ற பக்தரின் ஆத்மார்த்தமான அன்பு மற்றும் பக்தியை ஏற்றுக்கொண்டு, எவ்வாறு பாபா கனவில் தோன்றி காட்சியளித்தார் என்பதையும், ஹாடே அளித்த நாணயத்தை எவ்வாறு புனிதப்படுத்தி மீண்டும் வழங்கினார் என்பதைப் பற்றிய விளக்கவுரையை இங்கே காண்போம்...🔥 

குவாலியரில் தங்கியிருந்த கேப்டன் ஹாடே என்பவர் பாபாவின் மிகப்பெரும் பக்தர்... ஒருமுறை அவரது கனவில் பாபா தோன்றி "என்னை மறந்துவிட்டாயா..?" என்று கேட்டார்.. ஹாடே உடனே பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, "தனது தாயைக் குழந்தை மறந்துவிட்டால் அது எங்ஙனம் காப்பாற்றப்படும்...?" என்றார்..பின்னர் ஹாடே தோட்டத்திற்குச் சென்று அவரைக்காய் பறித்து ஒரு விருந்துக்கும், தஷிணைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, இவைகளை எல்லாம் பாபாவுக்குச் சமர்ப்பிக்க இருந்தபோது விழித்துக்கொண்டார்...சிலநாட்களுக்குப்பின் அவர் குவாலியர் வந்தவுடன் ஒரு நண்பருக்கு ரூ.12ஐ மணியார்டர் மூலம் அனுப்பி ரூ.2ஐ ஷிதா (மளிகை) பொருட்களுக்கும், காய்கறிகளுக்கும் ரூ.10ஐ பாபாவுக்குத் தக்ஷிணையாக அளிக்கும் குறிப்பையும் அனுப்பியிருந்தார்..அந்த நண்பர்  சீரடிக்குச் சென்று குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும்  வாங்கினார்..ஆனால் காய்கறிகள் கிடைக்கவில்லை.. சிறிது நேரத்தில் தலையில் சுமந்துகொண்டு ஒரு கூடைக்காரி வீதியில் எதிர்ப்பட்டாள்.  வியப்பிற்கேற்ப அந்தக் கூடையில் வேண்டிய அவரைக்காய் கிடைத்தது. அது வாங்கப்பட்டு மற்று அனைத்துப் பொருட்களுடன் சேர்த்து கேப்டன் ஹாடேயின் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன....

நிமோண்கர் அடுத்த நாள் நிவேதனம் தயார் செய்து பாபாவுக்கு,  கேப்டன் ஹாடேயின் சார்பில் சமர்ப்பித்தார்...சாப்பிடும்போது அவரைக்காயையே பாபா முதலில் எடுத்துச் சாப்பிட்டதையும், சாதம் முதலியவற்றைத் தொடாதது கண்டும் அனைவரும் அதிசயப்பட்டனர்....இதைத் தன் நண்பன் மூலமாகக் கேட்டறிந்த ஹாடேயின் மகிழ்ச்சி கரைகாணாது போயிற்று.. மேலும்  நாணயம் ஒன்று  பாபாவின் ஸ்பரிசத்தால்  புனிதமாக்கப்பட்டு, தன் வீட்டில் இருக்க வேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார்..சீரடிக்குப் போய்க் கொண்டிருந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தார்.. அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார்... அந்த நண்பர் சீரடிக்குச் சென்று நமஸ்கரித்தபின் முதலில் தமது ரூபாயைத் தக்ஷிணையாக அவர் பாபாவுக்கு அளித்தார். அதை அவர் வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்....பின் நண்பர் ஹாடேயின் நாணயத்தைக் கொடுத்தார்...அதை பாபா வாங்கி உற்றுப் பார்த்துவிட்டு, தமது வலதுகை கட்டைவிரலால் சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்....

பின் அந்த நண்பரிடம் அவர் உதிப் பிரசாதத்துடன் இதை அதன் உரிமையாளரிடம் திரும்பக்கோடு...அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு... அமைதியுடனும்,  திருப்தியுடனும் அவரை வாழச்சொல்" என்று கூறினார்...அந்த நண்பர் குவாலியருக்குத் திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேவிடம் திரும்ப அளித்து, சீரடியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவருக்குக் கூறினார்.  இம்முறை ஹாடே மிகவும் மகிழ்ந்து, பாபா எப்போதும் தாம் விரும்பிய மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவித்து ஆசிர்வதிக்கின்றார் என்று உணர்ந்தார்.... பாபாவும் அதையே முறையாக  நிறைவேற்றினார்....

🔥வாமன் நார்வேகர் என்ற பக்தர் தூய்மையான  பக்தியுடன், இறை உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயத்தை பாபாவிடம் சமர்ப்பித்து  ஆசிப்பெற நினைத்ததை, பகவான்  வாங்கி   என்ன செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரையைக் இங்கே காண்போம்.. 🔥

இப்போது வாசகர்கள் மற்றொரு கதையைக் கேளுங்கள்..வாமன் நார்வேகர் என்ற பக்தர்  ஒருவர் பாபாவை மிகவும் நேசித்தார்..அவர் ஒருமுறை ஒரு நாணயம் கொண்டு வந்தார்... அதன் ஒரு பக்கத்தில் ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோரின் உருவங்களும், மற்றொரு பக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது.  அதை பாபா தமது ஸ்பரிசத்தால் புனிதப்படுத்தி உதீயுடன் திருப்பி அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பாபாவுக்கு நாணயத்தை  அளித்தார்...ஆனால் பாபா உடனே அதைத் தம் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டுவிட்டார்...வாமன்ராவின் எண்ணத்தை அறிந்த  ஷாமா, பின்னர் பாபாவுக்கு தெரிவித்து அதைத் திருப்பியளிக்க வேண்டினார்....

பாபா பின்னர் வாமன்ராவின் முன்னிலையில் இவ்வாறு பேசினார்.  "அது ஏன் அவருக்குத் திருப்பியளிக்கப் படவேண்டும்..? அதை நாமேதான் வைத்துக் கொள்ளவேண்டும்... அதற்காக ரூ.25 கொடுத்தாரானால் அது திருப்பியளிக்கப்படும்"....வாமன்ராவ் ரூ.25 சேகரித்து அவற்றை பாபாவின் முன்னிலையில் வைத்தார்....பின்னர் பாபா, "அந்த நாணயத்தின் மதிப்பு 25 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும்.. ஷாமா இந்த ரூபாயை எடுத்து நம்மிடத்தில்  வைத்துக்கொள்....நாணயத்தை உனது பூஜை அறையில் வைத்து வழிபடு" என்றார்..பாபா இம்மாதிரியான செயலை ஏன் பின்பற்றினார் என்பதைக் கேட்க ஒருவருக்கும் தைரியமில்லை. ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, எது மிகப் பொருத்தமானது, எது தேவை  என்பதை பாபா மட்டுமே அறிவார்  என்பதை உணர்ந்து பகவானுடைய  பாத கமலத்தில் சரணாகி அடைய வேண்டும்..

ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼

ஸ்ரீ சாயீயைப் பணிக..அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்..🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்..🙏🏼🙏🏻🙏🏻

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...