ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏🙏
🔥🔥கலங்கரை விளக்காக பாபாவின் உபதேச மொழிகள் பக்தர்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றது என்பதன் மூல விளக்கம் என்னவென்றால்...🔥🔥
🔥மாலுமிகள், படகோட்டிகள் ஆகியோர்கள், பாறைகள், அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி பத்திரமாக பயணம் செய்வதற்காக, கடலின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கம் கட்டப்படுகிறது..அதேப்போல் சம்சாரம் என்னும் சாகரத்தில் பகவானின் கதைகள் அத்தகைய பயனை நல்குகின்றன. அவைகள் அமிர்தத்துக்குச் சுவையூட்டுகின்றன..நமது உலகப் பாதையை மிருதுவாகவும், கடப்பதற்கு எளியதாகவும் ஆக்குகின்றன என்பதே சத்தியம்..... 🔥🔥
ஞானிகளின் கதைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள்...நமது செவிகளின் வழியாக உள்ளத்தினுள் புகும்போது சரீராபிமானம் அல்லது அகங்காரம், த்வைத உணர்ச்சி ஆகியவை மறைகின்றன....நம் உள்ளத்தில் அவைகள் தேக்கப்படுமானால் சந்தேகம் பறந்தோடும்.., சரீரத்தின் பெருமை உணர்ச்சி கீழே இறங்கும். ஏராளமாக விவேகம் சேகரிக்கப்படும்....
பாபாவின் தூய புகழை விவரிப்பதும், அதையே அன்புடன் கேட்பதும் அடியாரின் பாபங்களை அழிக்கும்... கிருதயுகத்தின் ஆன்மீகப் பயிற்சியானது சமதமா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை), த்ரேதாயுகத்திற்கு தியாகம், த்வாபரயுகத்திற்கு வழிபாடு, கலியுகத்திற்கு இறைவனின் புகழையும், நாமத்தையும் இசையாகப் பாடுவதுமாகும். கடைசிப் பயிற்சியானது நான்கு வர்ணத்தைச் சேர்ந்த எல்லாருக்கும் உரியதாகும்....
மற்றைய பயிற்சிகளான யோகம், தியாகம், தியானம், தாரணை (ஒரு முகப்படுத்துதல்) ஆகியவை பழகுவதற்கு மிகவும் கடினமானவை. இறைவனாகிய சாய்பகவானின் புகழைச் செவிமடுப்பது மிகவும் எளியதாகும்...நாம் நமது கவனத்தை அவைகள் மீது திருப்ப மாத்திரமே வேண்டும்.... கதைகளைக் கேட்பதும், கீர்த்தனையாகப் பாடுவதும் புலனுணர்வுப் பொருட்கள் மீதுள்ள உறவை நீக்கி, அடியவர்களைப் பற்றறுத்தவர்களாக்கி முடிவில் ஆன்ம உணர்வுக்கு வழிநடத்திச் செல்லும்....
இக்குறிக்கோளையே கருத்திற்கொண்டு பகவான் 'சத்சரிதாம்ருதா' என்னும் அவரது கதைகளை எழுதச்செய்தார், அல்லது உதவி செய்தார். அடியவர்கள் இப்போது இக்கதைகளை எளிதாகப் படிக்கவோ, கேட்கவோ செய்யலாம். அங்ஙனம் செய்யும்போது அவரைத் தியானம் செய்வீராக..
ஓம் ஶ்ரீ சாய்ராம் ....🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக