ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏
🔥பிரார்த்தனை என்பதன் மூல சூட்சமம் என்ன...🔥
இறைவனிடம் தன்னை ஆத்மார்த்தமாக விசுவாசத்தோடு தன்னை ஒப்புவித்துக் கொள்வது தான் உண்மையான பிரார்த்தனை... நம்பிக்கை என்பது ஒரு உண்மையான சக்தியை, அதனுடைய பேராற்றலை கருணையை அறிந்து கொள்வதாகும்...குருவின் மீதோ அல்லது திரு மற்றும் தேவதா சக்திகளின் மீதோ வைக்கின்ற தீவிர நம்பிக்கையின் ஆழமே மாபெரும் பேராற்றலை நமக்காக இயங்க வைக்கின்றது..நாம் எந்த அளவு நம்பிக்கையும் விசுவாசமும் கொள்கின்றோமோ அந்த அளவுக்குத் தான் அந்த பேராற்றல் செயல்பட முடியும்....
ஒவ்வொருவருடைய சரணாகதி தன்மையாலும் கூட பக்தனின் அகந்தை முற்றாக நீங்குகிறது. குருவின் மேலும் விரும்பிய தெய்வங்களின் மீதும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு , எல்லாம் அவன் சித்தம் என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறது...இப்படித் பக்தனாவன் தன்னை ஒப்படைத்துக் கொள்கிற நிலையில், அவன் தெய்வத்திடமோ குருவிடமோ பிரார்த்தனை என்ற பெயரில் விண்ணப்பத்தை வைக்க மாட்டான்.. பேரமும் பேச மாட்டான்... அவ்வாறு இருந்தால் அது சுயநலத்தை ஒரேயடியாக அழித்துப் போடுகிற காரியமாகும்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக