ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥பகவானின் பாதுகாப்பில் இருக்கும்போது, கர்மா வலுவிழந்துபோகின்றது... ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய காரியங்கள் பாபாவின் அருளால் சரியான நேரத்தில் கச்சிதமாக நல்லபடியாக நடக்கும் ...🔥🔥
நாம் வாழ்வில் மிகவும் எதிர்ப்பார்த்த காரியங்கள் (வேலை, கல்வி, திருமணம் மற்றும் பல) தடைப்பட்டோ, நடக்காமலோ போகலாம்... அதற்காக சிறிதும் வருத்தப்பட தேவையில்லை. ஏன்..? பாபாவின் பிடியில் நாம் இருக்கும்போது, பகவானன்றோ நம்முடைய காரியத்தை நடத்துகிறார்...நாம் நிகழ்காலத்தை மட்டுமே அறிவோம்...ஆனால் பாபாவுக்கு மட்டுமே தெரியும், எதிர்காலத்தில் நமக்கு எது நன்மை விளைவிக்கும், எது நல்லது என்று அதை மட்டுமே தனது குழந்தைகளுக்கு அளிக்கிறார்... நாம் வேண்டுவதையெல்லாம் பகவான் அளிப்பதில்லை....நம்முடைய கர்மப்பலனைப் பொறுத்தே நமது செயல்களில் வெற்றியும் தோல்வியும் அமையும்...எல்லாம் விதிப்படி என்று நாம் கூறுவதும் இதைத்தான்...ஆனால் மற்றவர்களுக்கும் குருவினிடம் சரணடைந்தவர்களுக்கும் இங்கு தான் வித்தியாசம் உள்ளது....
பகவானின் பாதுகாப்பில் இருக்கும்போது, கர்மா வலுவிழந்துப் போகிறது...ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.. உங்களுடைய காரியங்கள் பாபாவின் அருளால் சரியான நேரத்தில் கண கச்சிதமாக நல்லபடியாக நடக்கும்..பாபா உணர்த்துகின்றார் இதோ பார், உனக்கு நடப்பவையெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டமே. நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துக் கொள்ளுங்கள்....ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது...!
எவன் தன்னுடைய அகங்காரத்தை அழித்துவிட்டு, நன்றி நிறைந்த மனத்துடன் என்மீது தன் பாரத்தைப் போடுகின்றானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼
🙏🏼ஶ்ரீ சாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியானபீடம்..🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக