ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, செப்டம்பர் 30, 2023

சரணடையுங்கள்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

உன்னைப் படைத்த சக்தியே..இந்த உலகத்தையும்  படைத்துள்ளது..அது  உன்னை  காக்குமானால்,  அதுவே  உலகத்தையும்  காக்கும்...இறைவன்  இந்த உலகை  படைத்தார்  என்றால்...அதை  காக்கும்  பொறுப்பு   அவருடையதே... 

இதில்  நீ  யார்... ?

சந்தேகத்தை நீக்குவதால் எந்த பயனும் இல்லை. ஒரு சந்தேகத்தை நாம் தீர்த்துக் கொண்டால் மற்றொன்று எழுகிறது, சந்தேகங்களுக்கு முடிவே இருக்காது. சந்தேகப்படுபவர் மற்றும் அவரது ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அனைத்து சந்தேகங்களும் நிறுத்தப்படும். சந்தேகப்படுபவரின் மூலத்தைத் தேடுங்கள், அவர் உண்மையில் இல்லாதவர் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். சந்தேகம் நீங்கும், சந்தேகங்கள் நீங்கும்.

( ஆசை ,  இன்பம்,  சுக போகங்கள்   )

விஷயங்களை  அனுபவித்து  ஒழித்தல்  என்பது தீயைப்  பெட்ரோலால் அணைக்க முயல்வது போன்றதே...அனுபவிக்க அனுபவிக்க விஷய வாசனை  வலுத்து, மேன்மேலும்  நம்மை  துன்புறுத்தும புலனின்  இன்பத்தைத்  தவிர்த்தாலேயே அவற்றின்  நாட்டம்  பலவீனமுறும் அப்பொழுதே  ஆன்ம நாட்டத்தால் அவற்றை அறவே அகற்ற முடியும்....எது  இங்கு  உன்னை  இழுத்து  வந்ததோ, அது தன் வேலையை கால கர்மத்தில் செய்யும்  இறைவன்கிட்டே  முறையிடாதே...

சரணடையுங்கள்..அகங்காரம் ('அஹந்தா') தோன்றினால், அனைத்தும் இருப்புக்கு வரும்; ஈகோ இல்லை என்றால், எல்லாம் இல்லை. ஈகோ தானே எல்லாம். ஆதலால், அது என்னவென்று விசாரிப்பதே அனைத்தையும் துறப்பது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏.

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

!..குரு..!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

 🙏!..குரு..!🙏

நீங்க நினைக்கற மாதிரி  குரு  வெளியே  இல்லை உள்ளே  இருக்கின்றார்..அது  ஆத்மா  அதை  உணருங்கள்..! அங்கேயே  எப்பவும்  இருங்கள்..!அதுதான்  குரு கூடவே  இருக்கறது..!அருள் உங்களை  எப்பவும்  கைவிடாது.. நீங்களும்  குருவை  விட்டு  எங்கேயும்  போயிட முடியாது...! காலத்தை, கி.மு, கி.பி என்று பிரிப்பதுபோல, மனிதனின் வாழ்க்கையையும், சத்குரு ஒருவனுக்கு அறிமுகமாவதற்கு முன், அறிமுகமான பின் என்று பிரிக்கலாம். சத்குருவாம் ஷீரடி சாய்பாபாவினை அறிந்துகொள்வதற்கு முன் அவன் பயணித்த பாதையானது,..அவரை அறிந்துக் கொண்ட பின் முற்றிலும் மாறி விடுகிறது. அவன் தன் பழைய பொல்லாத பழக்கங்களை விட்டு, சத் சங்கத்தைத் தேடி ஓடுகிறான். குருவின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறான். அதனால், அவனுக்கு உண்டாகும் சகல தீமைகளையும் மாற்றி நன்மைகளாக்கிக் கொள்கிறான்... 

சாயீ, தன்னை சரணாகதி செய்த கணத்திலிருந்து ஒருவனைக் காக்கிறார். அவன் கூடவேயிருந்து அவனுக்கு அருள்கிறார். அவன் அவரிலிருந்து விலகிச் செல்லும்போது, ஒரு குதிரைக்காரன் தன் குதிரையின் லகானைப் பிடித்துத் தன் பாதைக்குத் திருப்புவது போலத் திருப்புகிறார்...மனித வாழ்க்கை, முன்வினைப் பயன்களால் ஆனது. அதை உணராது, பலர் இந்த வாழ்வில் நிகழும் துயரங்களுக்காக இறைவனைச் சபிக்கிறார்கள். மெய்யான குருவைக் காணும் வரைக்கும் அவர்களுக்கு இந்த சஞ்சலம் இருக்கிறது...

ஸ்ரீசாயீயை பணிக..🙏ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

உனக்கு புரிகிறதா...உண்மையின் உருவம்..!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

உனக்குப் புரிகிறதா...உண்மையின் உருவம்..!?

சாதனை அல்லது சாதனா என்பது ஒருவன் தனது சுயமுயற்சியுடன் தன்னை சுயகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சுய முன்னேற்றமடையச் செய்து, தெய்வ குணங்கள் உடையவனாக தன்னை உருமாற்றம் செய்யும் முயற்சி சாதனா எனப்படுகிறது. ஒருவன் சாதனா மூலம் மனப்பாங்கு எப்போதும் நேர் எண்ணங்கள் உடையதாகவும், மனம் விரிவடைந்து எல்லாவற்றையும் ஏற்று சிந்தித்து புரியும் ஆற்றல் உள்ளதாகவும், உயர்ந்த குணங்களை மனப்பண்புகளையும் உருவாக்கும் செயல்முறையை செய்கிறான்....

ஆக சுருக்கமாக சாதனை என்பது ஒருவன் தனது ஆளுமையில் தூய்மையை கொணர்ந்து, தனது செயல்கள் நேர்மையுடனும், உணர்ச்சிகளுலும் எண்ணத்திலும் ஞானத்துடனும், செய்கையில் தர்மத்துடனும் சரியான செயல்களை செய்யும் உள்ளவனாக மாறுதலே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கம்...

இப்படி ஒருவன் செய்தால் அதுவரை தான் அல்லது நான் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த வட்டம் விரியத்தொடங்கும்.... இதை உணர்வு சக்தி அல்லது சேதன சக்தி என்று சொல்லுவார்கள். இந்த உணர்வு சக்தி சாதரணமானவர்களில் நான் ராமன், இன்னாருடைய மகன், இந்த வேலை செய்கிறேன், இந்த ஜாதியை சேர்ந்தவன், என்ற அடிப்படையில் தாம் ஏற்படுத்திக்கொண்ட அபிமானங்களின் அடிப்படையிலேயே செயல்புரிகிறது. ஆனால் சாதனையால் தன்னை விரிவு படுத்திக்கொண்ட ஒருவனின் உணர்வு சக்தி மெதுவாக விரிவடைந்து பிரபஞ்ச உணர்வு சக்தியாக மாறுகிறது. தான் என்ற உணர்வை பிரபஞ்ச உணர்வாக விரிவடைய செய்யும் செயல் முறையே ஆன்ம விஞ்ஞானத்தின் இலக்காகும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கடவுள் அப்படிங்கிறது ஒரு பெயர்ச்சொல் இல்லை அது ஒரு வினைச்சொல்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🙏

🔥அணுவிலும் இயக்கத்திலும் சிவமே...குருவிலும் சாவமே... இறையே.....யாவரிலும் அவனின்றி எவரில்லை...நான் என்கிற பேதத்தில் அவனில்லை...நாமாகி போன இருமையைக் கடந்த ஒருமையில் அவனிருக்கிறான்...அனைத்திலும் அவனே...வேடத்தைப் போட வைத்தவுனும் அவனே...ஆகவே எவ்வேடத்தைப் போட்டாலும் அதனுடன் அறத்தைப் பொருத்துங்கள்.வாழ்வில் உயர்வது திண்ணம்..🔥

திடீர்னு அரசாங்கம் இனிமே தண்ணீரை யாரும் இனிமேல் தண்ணீர் என்று சொல்லக்கூடாது அப்படின்னு சட்டம் போட்டுட்டாங்க. நீங்க தாகம் எடுத்தா பெயர் மாற்றப்பட்ட அந்த திரவத்தை குடிப்பீங்களா அல்லது அதன் பெயர் மாத்திட்டதால இனிமே அதனை குடிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லுவீங்களா...? பேரென்ன வச்சாலும் தண்ணீர் தண்ணிதான். நீங்க தண்ணீர் என்று சொல்லுங்க, வாட்டர் என்று சொல்லுங்க, பாணி என்று சொல்லுங்க, நீலுண்ணு சொல்லுங்க, ஆனா தண்ணீர் என்னமோ ஒன்னு தான். பேர்ல என்ன இருக்கு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.

கடவுள் அப்படிங்கிறது ஒரு பெயர்ச்சொல் இல்லை அது ஒரு வினைச்சொல், அது ஒரு தன்மையை குறிக்கும் சொல். எங்கேயும் எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் கடவுள் தன்மை வெளிப்பட்டு கிட்டதான் இருக்கு. நாமதான் அதை புரிஞ்சுக்கணும். நீங்க சொன்னது போல என்ன பேர் வந்தாலும் வச்சுக்கோங்க. பேருல என்ன இருக்கு...?!

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

உடலுக்குள் ஆத்மா உண்டா..??

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

உடலுக்குள் ஆத்மா உண்டா..?அது அழிந்து போகாதா..??உடல் அழிந்து போகிறதே...?விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார் ...!

பால் பயனுள்ளதுதான்…ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்.. அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது…தயிரான பால் இன்னும் ஒருநாள்தான் தாங்கும்…. அப்படியே விட்டால் கெட்டுப் போகும்… அதைக் கடைய வேண்டும்…. கடைந்தால் வெண்ணெய் ஆகி விடும் கெடாது…வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது…. அப்படியே விட்டால் கெட்டுப் போகும்…. அதை உருக்க வேண்டும்… சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்…அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது..கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா...?? அதுபோலத்தான்..அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா(ஆத்மா) உண்டு….!!!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

புதன், செப்டம்பர் 27, 2023

ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

🔥இறைவன் இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு...எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு...! ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல.... தர்ம கணக்கு...!!🔥

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா..? என்றார் வந்தவர்..முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு.நான் ஒரு வழி சொல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்..!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொழுது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்...ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்....பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்...ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்...மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்...சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது...அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்....மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்...ஒரு காசு வழங்கப்பட்டவர்  மன்னா ... இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுத்தார்...அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்...

நீதி...ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்...இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு! ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தர்ம கணக்கு...!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏!

கடவுள் யார்....? எப்படி இருப்பார்...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

கடவுள் யார்....? எந்த ரூபத்தில் எப்படி இருப்பார்...? என்கிற பாமரனின் கேள்விக்கான விழிப்புணர்வு விளக்கம்...🙏

மகாபாரதத்தில் அர்ச்சுனன் கண்ணனிடம், "என் அன்பு கேசவா..! பரம்பொருளாகிய பரமாத்மா என்னும் கடவுள் யார்.? அவர் எங்கே இருப்பார்...? எப்படி இருப்பார்..?" என்று வினவினார்...

அப்போது பரந்தாமனாகிய கண்ணன் பின்வரும் அற்புதமான விளக்கத்தை அருளினார். இந்த விளக்கம் எக்காலத்துக்கும் பொருந்தும்..

"தனஞ்சயா..! பாதாளத்தின் இருளறையில் இருக்கும் ஒருவன் கதிரவனின் தரிசனத்தைப் பெறவேண்டுமாயின் அவனிடம் நீ என்ன உரைப்பாய்..? பாதாள இருட்டறையிலிருந்து வெளியே வந்து அகண்ட ஆகாயத்தின் கீழ் நில். உனக்கு சூரிய தரிசனம் கிட்டும் என்பாய். அதேபோல் மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள சுயநலம், பயம், பேராசை, பொறாமை மற்றும் அனைத்து அதர்ம குணங்களிலும் இருந்து வெளிவந்து தன் தூய ஆத்மாவை எப்போது உணர்கின்றானோ அப்போது கடவுள் அவனுள்ளேயே குடிகொண்டு இருப்பதை உணர முடியும்.

பார்த்தா..! நானே பரமாத்மா..! என்னைப்போல் நீயும் பரமாத்மாதான். ஆனால் இன்னும் நீ அந்த உண்மையை உணரவில்லை..!நம் கூட்டில் குடியிருப்பது ஆத்மாதான். நாம் பரமாத்மாவின் அங்கம் எனும் உண்மையை உணர்ந்தவன் கடவுளை அறிய முடியும்"...

அனைவரின் நம்பிக்கை என்கிற ஊற்றின் வடிவமே கடவுள்....எவ்வாறு கல்லைக் கூட இறைவனாக நினைத்து பாவித்தால் அதிலும் இறைவனானவன் வெளிப்பட்டே தீருவான்....ஆகவே நம்பிக்கையே ஸ்திரப்படுத்துங்கள்...வாழ்வில் உயரிய நிலையைப் பெறுவது உறுதி....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏


ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...பாபாவே குரு..கடவுள் ...!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...சீரடி பாபா காட்டிய பாதை... மனமே  குரு....குருவே சிவம்...🙏

ஒரு தீபத்தில் இருந்துதான் இன்னொரு தீபத்தை ஏற்ற முடியும்... அதுபோலதான் குருவிடம் இருந்தே சாதாரண நிலையில் இருப்பவர்கள் குரு அந்தஸ்துக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியும். அதன் பிறகே குரு மூலம் தெய்வீகத்தை எட்ட முடியும்...எனவே முதலில் பாபாவை குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றே பெரும்பாலான மகான்கள், ஞானிகள் சொல்லி சென்றுள்ளனர். உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்கள் சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டு தங்களது ஆன்மீக பாதையில் மேம் பாட்டை எட்டியுள்ளனர்.

சரி.... சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அதன் பிறகு அவரை எப்படி நெருங்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி அவரது கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று பலரும் யோசிக்கலாம். இதற்கு சரணாகதி தத்துவமே விடையாகும்...சீரடி சாய்பாபாவை அப்பா என்றும், தாத்தா என்றும் பெரும்பாலானவர்கள் அழைப்பதை நாம் பார்த்து இருக்கலாம். அப்பா என்று அழைக்கும்போது ஆத்மார்த்தமான உரிமை ஏற்படுவதாக பலரும் சொல்வது உண்டு. அதாவது பாபாவை அவர்கள் தங்கள் குடும் பத்தில் ஒரு உறுப்பினராக கருதுவது போல நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் சீரடி சாய்பாபாவை அதையும் விட உயரமான இடத்தில் ஒவ்வொரு வரும் வைக்க வேண்டும் என்பது முக்கியம் ஆகும். அந்த வகையில் பாபாவை ஆத்மஞானம் தரும் குருவாக ஏற்பதே சாலச்சிறந்தது. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் குரு தான் முதன்மையான இடத்தில் இருக்கிறார்... அதனால் தான் நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம்  என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்கள்.


 எனவே முதலில் பாபாவை குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றே பெரும்பாலான மகான்கள், ஞானிகள் சொல்லி சென்றுள்ளனர். உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்கள் சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டு தங்களது ஆன்மீக பாதையில் மேம் பாட்டை எட்டியுள்ளனர்.

சரி.... சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அதன் பிறகு அவரை எப்படி நெருங்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி அவரது கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று பலரும் யோசிக்கலாம். இதற்கு சரணாகதி தத்துவமே விடையாகும்...

உடல், பொருள், ஆவி அனைத்தையும் குருவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அல்லும் பகலும் குருவுக்கு சேவை செய்ய வேண்டும். தனது ஒவ்வொரு அணுவையும் குருவுக்கே சமர்ப்பிக்க வேண்டும். குருவிடம் எந்த அளவுக்கு நாம் பக்தியும், நம்பிக்கையும் வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு முக்தியும், யோக சக்திகளும் நமக்கு கிடைக்கும். சீரடி சாய்பாபா இந்த வழியைதான் கையாண்டார். தனது குருவிடம் இப்படிதான் நடந்து கொண்டார். அதன் பிறகு தாமே குருவாக இருந்து தனது ஆத்மஞான அனுபவங்கள் அனைத்தையும் தன் ஒவ்வொரு பக்தருக்கும் கிடைக்கும்படி செய்தார்.

“குருவிடம் பரிபூரண விசுவாசத்துடன் இரு. குருவே தெய்வம் என்று மனதார நம்பு. பார்க்கும் ஒவ்வொன்றையும் குருவாகவே நினைத்துக் கொள். அப்படி இருந்தால்தான் உண்மையான பக்தன் என்னை தன்னிலும் சகல உயிர்கள் இடத்திலும் காண முடியும். நாளடைவில் அவனே நானாகி விடுவேன்” என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வது உண்டு.

இதன் அடிப்படையில் பார்த்தால் பாபா சமர்த்த சற்குரு ஆவார். தன்னை நம்பி வரும் பக்தர்களின் லௌகீக தேவைகள், ஆன்மீக தேடல்கள் இரண்டையும் சமர்த்த சற்குரு கவனித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல நிறைய பேருக்கு தாமாகவே முன்சென்று குருவாக இருந்துள்ளார். காந்தம் இரும்பை ஈர்ப்பதை போல அவர் பக்தர்களை தன் வசம் ஈர்த்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “நானே கவர்ந்து இழுக்காமல் என்னை நாடி ஒருவரும் வந்தது இல்லை. பல காரணங்களை வைத்து அவர்களை என்னிடம் நான் இழுத்து விடுகின்றேன். ஒரு சிறுவன் நூலின் நுனியில் பறவையை கட்டி இழுப்பது போல நான் என் பக்தனை இழுத்துக் கொள்கிறேன். இது பூர்வஜென்ம தொடர்பு” என்று பாபா சொல்வது உண்டு.

அதோடு பாபா விட்டு விடுவது இல்லை. தன்னிடம் இழுக்கப்பட்ட ஒவ்வொரு பக்தனுக்கும் பிரம்மஞானத்தை ஏற்படுத்த பலவகைகளிலும் அவர் முயல்வார்...இதுபற்றி அவர் கூறுகையில், “என்னிடம் வந்த ஒவ்வொரு பக்தனிடமும் நான் 5 விஷயங்களை எதிர்பார்க்கிறேன். மனம், புத்தி, அகங்காரம், சிந்தனை, தன்னம்பிக்கை ஆகிய ஐந்தையும் தந்து என்னிடம் முழுமையாக சரண் அடைய வேண்டும். இல்லாவிட்டால் பணம், பொருள் என்ற உலகியலில் இருந்து அவனால் மீள முடியாது. அவனால் பிரம்மஞானத்தை அடையவே முடியாது” என்கிறார்.

மேலும், “நமது வாழ்க்கையில் சூத்திர கயிற்றை சற்குரு விடம் நம்பிக்கையோடு ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தால்தான் எப்போதும் ஆனந்த நிலைக்கு செல்ல முடியும்” என்றும் சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வது உண்டு...இதன் மூலம் குருவின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். ஒரு தடவை அவர் குருவின் முக்கியத்துவம் குறித்து மிக அழகான விளக்கம் ஒன்றை தனது வாழ்வியல் நிகழ்வில் இருந்தே வெளியிட்டார். பாபா சொன்ன அந்த விளக்கம் வருமாறு:-

என் குரு எதனுடனும் ஒப்பிட முடியாதவர். நிகரற்றவர். அன்பின் வடிவமானவர். அன்பின் வற்றாத ஊற்றாக அவர் இருந்தார். அவரிடம் நான் 12 ஆண்டுகள் இருந்து சேவை செய்தேன். என் மீது அவர் அளவு கடந்த அன்பை பொழிந்தார். அந்த அன்பின் ஆழத்தை நான் எதைக் கொண்டு அளந்து சொல்ல முடியும்?எப்போதும் நான் அவர் அருகிலேயே அமர்ந்து இருப்பேன். அவரை பார்த்துக் கொண்டே இருப்பேன். அவரை உற்றுப் பார்ப்பதையே நான் விரும்பினேன். சிறிது நேரம் என் கண் பார்வையில் அவர் இல்லாவிட்டாலும் எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் வந்து விடும். எனவே என் கண்கள் அவரை பார்த்துக் கொண்டு இருப்பதையே நான் விரும்பினேன்.என் குருவை தவிர எல்லாவற்றையும் நான் மறந்தேன். என் உயிர் என் பார்வையிலும், என் பார்வை என் குரு மீதும் நிலைத்து நின்றது. ஒவ்வொரு வினாடியும் என் உயிர் பார்வை அப்படிதான் இருக்கும். என் லட்சியமே அதுதான். மவுனமாக நான் இதை ஒவ்வொரு நாளும் செய்தேன். அதே போன்றுதான் என் குருவும் என்னை நோக்குவார். நாங்கள் இருவருமே அந்த சமயத்தில் பேரானந்தத்தை உணர்வோம். அளவிட முடியாத ஆனந்தம் எங்களை நிரப்பி இருக்கும். அத்தகைய சமயங்களில் நான் என் குருவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன். எதன் மீதும் என் கண்களை நான் திருப்ப மாட்டேன். திருப்பவும் முடியாது...

எனது குருவின் அன்பால் இரவு-பகலாக என்னையே மறந்து கிடந்து இருக்கிறேன். குருவின் பார்வை அன்பால் நிறைந்தது. என் பசியையும், தாகத்தையும் மறக்க வைத்தது. எனவேதான் என் குருவை மட்டுமே நான் தியானம் செய்தேன். குரு தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்குள் ஏற்பட்டது இல்லை. வேறு எந்த குறிக்கோளும் எனக்கும், என் குருவுக்கும் இடையில் வந்ததே இல்லை.என் ஒரே இலக்கு என் குருநாதர் மட்டுமே. அப்படி என்னை கட்டிப்போட்டு வைத்திருந்த குருவின் கலை இப்போதும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவரது அன்பை என்னால் விவரிக்கவே இயலாது. அந்த அன்பை தவிர எனக்கு வேறு எதுவும் தேவைப்படவில்லை. அதுபோலவே அவருக்கும் வேறு எதுவும் தேவைப்படவில்லை. அன்பை மட்டுமே என்னிடம் இருந்து என் குரு எதிர்பார்த்தார்.

ஒரு நிமிடம் குரு என்னை விட்டு பிரிந்தாலும் நான் கலக்கம் அடைந்து விடுவேன். அவரை பார்த்த பிறகே எனக்குள் ஆனந்தம் பூத்து குலுங்கும். அவரது கடைக்கண் பார்வையால் அவர் என்னை பாதுகாத்து கொண்டே இருந்தார்.என் குரு பெரும்பாலும் எதுவும் செய்யாதது போல காணப்படுவார். ஆனால் அவரது அன்பு பார்வை என் மீது வந்து வந்து சென்று கொண்டே இருக்கும். அதுதான் என்னை மேம்படுத்தியது...மற்றபடி என் குரு எனக்கு எந்த மந்திரத்தையும் சொல்லி தரவில்லை. மற்ற குருமார்கள் போல என் காதுக்குள் வந்து அவர் எதையும் ஓதியதே கிடையாது. அவருடைய நிகரற்ற கருணை ஒன்றினால் மட்டுமே நான் இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

அவருடைய அருள் ஆசிதான் என்னை ஆத்மஞான வளர்ச்சி அடைய செய்து மேம்படுத்தியது. எனவே எவன் ஒருவன் தன் எண்ணங்கள், குறிக்கோள்கள் ஆகிய அனைத்துக்கும் குரு ஒருவரையே ஒரே லட்சியமாக கொள்வதன் மூலம் மிக உன்னதமான இலக்கை  அடைய முடியும். என் குரு எனக்கு போதித்த உண்மை இது ஒன்றுதான்....இந்த உண்மையை அறிய முடியாமல் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். குருவிடம் முழுமையாக சரண் அடைந்தால் மட்டுமே உன்னதமான இலக்கை எட்டி பிடிக்க முடியும். மற்றபடி இதற்கு நான்கு விதமான சாதனைகளும், ஆறு விதமான சாஸ்த்திரங்களும் தேவையே இல்லை. குருவை பரிபூரணமாக நம்பி இருப்பது ஒன்று மட்டுமே போதுமானது. குருவை முழுமையாக நம்பினால் ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்துக்கு தாமாக சென்று விட முடியும்...

இவ்வாறு சொல்லிய பாபா சிலரிடம், “உனக்கு குரு வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாம் உனக்கு உள்ளேயே இருக்கிறது. உள்நோக்கி கேட்பதற்கு முயற்சி செய். அது தரும் உத்தரவுக்கு ஏற்ப நடந்து கொள். அந்த    உத்தரவுதான் உனக்கு குரு. அப்படி செய்தால் ஆன்மீக மேம்பாடு பெறுவாய்” என்று சொல்லியது உண்டு. இது அந்தந்த பக்தனின் முதிர்ச்சியை அளவிட்டு பாபா சொன்ன வார்த்தைகள் ஆகும். மற்றபடி குருவின் முக்கியத்துவத்தை பாபா ஒவ்வொரு நாளும் உணர்த்த தவறியதே இல்லை. ஒரு தடவை சீரடி சாய்பாபா தனது பக்தர்களிடம், “நீங்கள் அனைவரும் குருவை அறிய வேண்டும். இல்லாவிட்டால் எதற்காக சீரடிக்கு வருகிறீர்கள். வரட்டிகளை சேகரிக்கவா வருகிறீர்கள்....” என்று கோபத்தோடு கேட்டார். அந்த அளவுக்கு குருவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் பாபா உறுதியாக இருந்தார். எனவே இன்றே சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்று சரண் அடையுங்கள். அதன் பிறகே சீரடி சாய்பாபா நம்மை காக்க வந்த அவதாரப்புருஷர் என்பதை நீங்கள் முழுமையாக உணர முடியும். அப்படி உணரும்போது பாபா நம் இஷ்ட தெய்வம் என்பது ஒளிக்கீற்றாக தோன்றி மனதுக்குள் புரிய வைக்கும். இந்த புரிதலுக்கு பாபாவை குருவாக ஏற்று சரண் அடைவது ஒன்றே வழி. அப்படி அடைந்தால் மட்டும் போதுமா..? பாபாவிடம் நம்பிக்கை வேண்டும் அல்லவா..? பாபாவும் தன்னிடம் வரும் ஒவ்வொரு பக்தருக்கும் நம்பிக்கை, பொறுமை இரண்டும் அவசியம் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ஆன்மீகத்தின்(உட்கருத்து) ஒரு பகுதி...?

 ஆன்மீகத்தின்(உட்கருத்து) ஒரு பகுதி...?


ஆன்மிகம் என்பது வாழ்க்கையைத் துறப்பது அல்ல..அது முழுமையாக வாழும் கலை. ஆன்மிகம் என்பது தூய்மையான வடிவில் உங்களை உங்களோடும் சர்வ வல்லமையோடும் இணைக்கும் பாதை. ஆன்மீகம் என்பது உண்மையைத் தேடுவது மட்டுமே. ஆன்மீகம் உலகத்தைப் பார்க்கிறது, பிறகு சுயத்தைப் பார்க்கிறது, பிறகு உலகத்திற்கும் சுயத்திற்கும் இடையே உள்ள நேரடியான தொடர்பைக் காண்கிறது, எனவே, இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறது.


அடிப்படையில், கடவுளின் வழிகாட்டுதலுடன் மனிதகுலத்திற்கு சேவை செய்யக்கூடிய உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைத் தேடுவதற்கான தூண்டுதலே ஆன்மீகத்தின் அடித்தளம் .


உண்மையில், கடவுள் ஒருவரே மற்றும் பரம ஆன்மா (ஆன்மா / அமைதி உலகில் இருக்கும் ஒளி புள்ளி). அவர் உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் (ஆத்மன் அல்லது ஆவி) தந்தை. ஆன்மாக்கள் அழியாதவை, அவை வாழ்க்கைச் சுழற்சியில் அதன் பங்கைச் செய்ய பூமிக்கு வருகின்றன. ஆன்மா (ஆத்மன் அல்லது ஸ்பிரிட்) ஒரு சிறிய நட்சத்திரம், நெற்றியின் மையத்தில் உள்ளது, எண்ணங்கள் (அதாவது தியானம்) மூலம் உச்ச ஆத்மாவுடன் தொடர்பை அனுபவிக்க முடியும்.


ஆன்மிகம் என்பது தன்னைக் கண்டறியும் செயல்முறையாகும், அதாவது தன்னை அறிவது அல்லது நம்மைப் புரிந்துகொள்வது. அது நமக்குள் இருக்கும் இறைவனை உணர்தல். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரே மற்றும் ஒற்றை ஆற்றல் மூலத்திலிருந்து உருவாகியுள்ளன, மேலும் அந்த வாழ்க்கையின் ஆதாரத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றன. அந்த ஆதாரத்தைத் தேடுவது, அதைத் தெரிந்துகொள்ளும் தாகம், ஆன்மிகப் பயணம் . ஆன்மீகம் என்பது ஒரு நோக்கத்திற்காக நாம் இருக்கிறோம் என்பதை அறிவது, ஒரு நாள் நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தெய்வீகத்துடன் இணைவோம்.


எனவே, ஆன்மீகம் என்பது எல்லாப் பொருட்களிலும் கடவுளைக் காணும் ஆழமான வேரூன்றிய உணர்வைக் குறிக்கிறது. ஆன்மீகம் என்பது கடவுளுடனான உங்கள் தொடர்பை மேம்படுத்துவதாகும். கடவுளுடனான நமது உறவை வலுப்படுத்துவதற்கான அர்த்தமும் பொருளும் ஆன்மீகத்திலிருந்து வருகிறது . ஆன்மீகம் என்பது அமைதியைத் தேடுவதிலிருந்தும், பிரார்த்தனை மற்றும் தியானத்திலிருந்தும், நீங்கள் யார் என்பதை அங்கீகரிப்பதிலிருந்தும், உங்கள் ஆன்மாவுக்கு சிறந்ததைச் செய்வதன் மூலமும், நல்ல செயல்கள் மற்றும் செயல்களைச் செய்வதிலிருந்தும் வருகிறது.


ஆன்மிகம் இல்லாமல் , வாழ்க்கை ஒன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆன்மீகம் இந்து மதத்தில் மனிதகுலத்திற்கு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறது. ஆன்மிகம் வாழ்க்கையில் உற்சாகத்தையும் ஆற்றலையும் தருகிறது.


ஆன்மிகம் என்பது வாழ்வின் முக்கியமான அம்சம். துன்ப நேரத்தில் அமைதியாக இருக்கக் கற்றுக்கொடுக்கிறது, நல்லது கெட்டது என்று பாகுபாடு காட்டக் கற்றுக்கொடுக்கிறது, கடவுள் பக்திக்கான பாதை போன்றது. எல்லாரையும் நிபந்தனையின்றி நேசிக்க வைக்கிறது, கடவுளின் சொந்தக் குழந்தையாக உங்களை உணர வைக்கிறது, கடவுளுடன் நெருக்கமாக இருக்கும் மனநிலை.


ஆன்மீக மக்கள் தெய்வீகத்துடன் தனிப்பட்ட உறவைத் தேடுகிறார்கள், மேலும் அவர்களின் சொந்த அனுபவம் மற்றும் ஆன்மீக மனிதர்கள் மற்றும் அவர்கள் இணைக்கப்பட்ட ஆற்றல்களின் வழிகாட்டுதலை நம்பியிருக்கிறார்கள்.


மக்கள் ஏன் தியானம் செய்கிறார்கள் என்பது புரிகிறதா...? ஏனென்றால், அவர்கள் தங்கள் நனவான எண்ணங்களை அமைதிப்படுத்துகிறார்கள், அதனால் அவர்கள் ஆத்மாவின் ஆழ் பகுதியின் எண்ணங்களை நாம் உயர் சுயம் என்று அழைக்கிறோம். உதாரணமாக, உங்கள் உள்ளுணர்வு மற்றும் மனசாட்சி உங்கள் உயர்ந்த சுயத்தின் குரல். உங்கள் உயர்ந்த சுயம் என்பது உங்கள் ஆன்மாவின் ஆழ் பகுதி, இது உங்கள் விழிப்புணர்வும் கூட.

செவ்வாய், செப்டம்பர் 26, 2023

கடைவிரித்தேன் கொள்வாரில்லை...!! கடவுளைக் காண முடியுமா...?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

கடைவிரித்தேன் கொள்வாரில்லை...!கடவுளைக் காண முடியுமா..இதற்கான விழிப்புணர்வு விளக்கத்தைப் பார்ப்போம்...🙏

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் - கடவுள்...'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' - என்றார்கள்!..குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்....மலைத்து நின்றேன் - மலையடிவாரத்தில்..ரொம்ப உயரம் இருக்கும் போலவே...ஏற முடியுமா என்னால்...?மலையைச் சுற்றிலும் பலப்பல வழிகள் - மேலே போவதற்கு.

அமைதியான வழி..

ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..

சாஸ்திர வழி...

சம்பிரதாய வழி..

மந்திர வழி..

தந்திர வழி..

கட்டண வழி..

கடின வழி...

சுலப வழி...

குறுக்கு வழி..

துரித வழி...

சிபாரிசு வழி...

பொது வழி..

பழைய வழி..

புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா... ஏகப்பட்ட வழிகள்...அடேங்கப்பா.. என மலைக்க வைக்கும் மலையின் வழிகள்... ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..கண்டுக் கொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை' - ஒதுக்கினர் சிலர்..நான் கூட்டிப் போகிறேன் வா...கட்டணம் கூடத் தேவையில்லை..என் வழியி்ல் ஏறினால் போதும்..எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'என கை பிடித்து இழுத்தனர் சிலர்..மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம். உனக்குப்பதில் நான் போகிறேன்..கட்டணம் மட்டும் செலுத்து'...என சிலர்....பார்க்கணும் அவ்ளோதானே.....இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..!அது போதும்....அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...' உன் மொழி அவருக்குப் புரியாதே.. என்ன செய்வாய்..?' - எனஆணவ அதிகாரத்துடன் சிலர்.... 'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..உன்னால் ஏறமுடியாது...தூரம் அதிகம்.. திரும்பிப்போ...அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..பார்த்து ஆகப்போறது என்ன..'அதைரியப்படுத்தினர் சிலர் ...'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்


அது ஒரு வழிப்பாதை...ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'பயமுறுத்தினர் சிலர்...சாமியாவது...பூதமாவது..அது வெறும் கல்.அங்கே ஒன்றும் இல்லை..வெட்டி வேலை...போய் பிழைப்பைப் பார்...'பாதையை அடைத்து வைத்துப் பகுத்தறிவு பேசினர் சிலர் ...என்ன செய்வது..ஏறுவதா...திருப்பிப் போவதா...குழம்பி நின்ற என்னிடம் கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..கடவுளுக்கென்று கொணர்ந்ததை அந்தக் கையில் வைத்தேன் .." மவராசனா இரு...! " வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..நன்றியுடன் எனை நோக்கிய அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கட வுள் ..!!!!ஆம்… கடவுளேதான்..! உணர்ந்த வியப்பிலிருந்து விலகியபின் கேட்டேன்..' இங்கென்ன செய்கிறீர்..?'"நான் இங்கேதானே இருக்கிறேன்..."அப்போ அங்கிருப்பது யார்..?'

மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்.."ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...எங்கேயும் இருப்பவனல்லவா நான்..!இங்கே எனைக் காண முடியாதவர்அங்கே வருகிறார்...சிரமப்பட்டு..!!!!..."'ஆனால்'..திணறினேன்...'இது உமது உருவமல்லவே...'"அதுவும் எனது உருவமல்லவே...எனக்கென்று தனி உருவமில்லை....நீ என்னை எதில் காண்கிறாயோ அது நானாவேன்..." அப்படியென்றால்..??' "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே...பசித்த வயிற்றோடு கைநீட்டியவன், உணவளித்த உன் கண்களில் காண்பதும் எனையே..தருபவனும் நானே..பெறுபவனும் நானே...நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..மனது தான் வேண்டும்..."' அப்போ உனைப் பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறாயா...??குழப்பத்துடன் கேட்டேன்.."தாராளமாக ஏறி வா...அது உன் விருப்பம்...அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே...அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.."கடவுளே'...விழித்தேன்...எனக்குப் புரியவில்லை...'"புரிந்துக் கொள்வது அவ்வளவு கடினமல்ல..

🔥🔥உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்.." என்னைக் காண, நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...நீ இருக்குமிடத்திலேயே எனைக் காண்பாய்."🔥🔥

புன்னகைத்தார் கடவுள்...!!

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

# கஜேந்திரமோட்சம்



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

ஒவ்வொரு தனி மனித உயிர்களும் புனித நிலையை அடைய என்னென்ன சூட்சம மாற்றங்கள் நம்மினுள்  நிகழ வேண்டும் மற்றும்   கஜேந்திர மோட்சத்தின் தத்துவத்தினுள் உள்ளங்கியுள்ள சூட்சமம் என்ன என்பதைப் பார்ப்போம்...🙏

உண்மையில் கஜேந்திர மோட்சத்தின் தத்துவம்  உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆஞ்ஞை அதற்கு மேலாக சகஸ்ரஹாரம் என்ற நிலை தலைக்கு மேலே இருக்கிறது. அது கடவுளுடைய நெருக்கத்திற்குப் போன நிலை. அதை விட்டுவிடுவோம்...

கீழே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் என்ற மூன்றும் மனிதனுடைய உடம்போடு சம்பந்தப்பட்டவை. மூலாதாரத்தின் சக்தி உங்களை, உங்கள் நாடிகளை இழுத்துப் பிடித்து வைத்து உங்களை உயிர்ப்போடு இருக்க வைக்கிறது. நீங்கள் நடமாடவும், பேசவும், புரிந்துக் கொள்ளவும் உண்டான பலத்தின் மூலம் அங்குதான் இருக்கிறது.

அடுத்தது சுவாதிஷ்டானம். இது உங்கள் குறி உள்ள இடத்தில் இருக்கிறது. வம்ச விருத்திக்காக, உங்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்காக, போகத்தை அனுபவிக்க பலம் தரும் இடம் அது.

அதற்கு மேல் இருப்பது மணிபூரகம். உணவு நன்கு உண்டு செரிமானம் ஆனால்தான் நீங்கள் போகத்தை அனுபவிக்க முடியும். உணவு மலக்குடலில் தங்கி வெளியே போனால்தான் உங்களால் நன்றாக பேசிச் சிரித்து, ஜீவித்து இருக்க முடியும்.

மணிபூரகத்தின் வேலை ஒரு அக்னியியை ஏற்படுத்தி வருகின்ற உணவுகளை தகித்து, அதனுடைய ஜீரண சக்தியை உடம்புக்குள் அனுப்பி சக்கையை வெளியேற்றும். இந்த மூன்றும் ஒரு தனிக் குழுவாக இருக்கின்றன.

அனாகதம், கடவுள் என்ற, பிரபஞ்சம் என்ற, அல்லது இயற்கை என்ற, அல்லது தான் என்கின்ற ஒரு நிலையை கண்டுபிடிக்கின்ற, தேடுகின்ற இடமாக, மனமாக இருக்கிறது. அதற்கு மேல் இருப்பது விசுத்தி..

அந்த விசுத்தியில்தான் மனம் இழுபட்டு ஒரு புள்ளியில் நின்று ‘அதோ அதோ’ என்று கதறியபடி கடவுளை நோக்கிப் போகவேண்டிய சத்தத்தை உண்டு பண்ணுகிறது...வேதங்கள் அங்கிருந்துதான் கிளம்பின. பரவச நிலையில் அங்கிருந்துதான் எல்லாவித சொற்களும் வெளியே வந்தன....

ஆஞ்ஞை என்பது அந்த சத்தம் தாண்டி இருக்கின்ற அமைதியை உள்வாங்கிக் கொண்டு மிக உறுதியாக கடவுளுக்கு நெருக்கமாக, கடவுளைக் காணுகின்ற ஆவலோடு கம்பீரமாக இருக்கின்ற இடம். அதிலிருந்து கிளம்பி சகஸ்ரஹாரம் தொடுகிறபோது கடவுளோடு தொடர்பு ஏற்படுகிறது.

கடவுள், இயற்கை, பிரபஞ்சம், ஆத்மா என்கிற எல்லா விஷயங்களும் ஒன்றே. கீழே இருக்கிற சுவாதிஷ்டானம், மணிபூரகம், மூலாதாரம் இந்த மூன்றும் உங்களை இந்த பூமியிலிருக்கும் சுகங்களை நோக்கி இழுக்க முயற்சிக்கின்றன.

இந்த மூன்றும் முதலை என்று உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது. சேற்றில் இருக்கின்ற முதலை, மிகப் பலம் பொருந்திய முதலை. நீரில் இருக்கின்ற முதலைக்கு வலு அதிகம். அது பெரிய யானையை புரட்டிப் போட்டு அடித்துக் கொன்றுவிடும்.

யானை அதிலிருந்து விடுபடவே முடியாது. யானை என்பது இங்கே அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. இவையெல்லாம் கடவுளைத் தேடுகின்ற உயர்நிலையாக உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது...

உயர்நிலையில் இருக்கின்ற ஞானியை கீழ் நிலையில் இருக்கின்ற ஆசாபாசங்கள், பெண் ஆசை, இது வேண்டும் அது வேண்டும் என்ற எண்ணங்கள், சொத்து சேர்க்கின்ற மனோ பாவங்கள், அதற்குண்டான துரோகச் செயல்களை, கேவலங்களை, உத்தியை அந்த முதலை ஏற்படுத்துகிறது...

வயிற்றுக்குச் செல்லும் உணவு, உணவால் ஏற்படுகின்ற திமிர், அந்தத் திமிரால் ஏற்படுகின்ற அகங்காரம் இவையெல்லாம் இந்த மூன்று விஷயங்களோடு தொடர்புடையவை...

நான் என்று மூலாதாரம் நிற்க வைக்க, அதை செயலாக்குகின்ற திமிராக சுவாதிஷ்டானம் இயங்க, மணிபூரகம் அதற்குண்டான சக்தியை அவற்றுக்குக் கொடுக்க, அந்தத் திமிர் உச்சகட்ட நிலையை அடைகிறது..

இந்தத் திமிரோடு உள்ள மனிதர்கள் அனைவரும் அந்த மூன்று சக்கரங்களிலும் மிக உன்னதமாக இருக்கிறார்கள். அவை முதலையாகி அவர்களிடம் இருக்கின்றன.

மனம் அனாகதம் தொட்டவுடன், அனாகதம் மலர்ந்தவுடன் உங்களுக்குள் இருக்கின்ற மனோநிலை இது சரியில்லையே நாம் வேறுபக்கம் போகவேண்டுமே என்று நிமிர்கிறது..

எத்தனை பொய்கள் சொல்கிறோம், எத்தனை அபத்தங்கள் செய்கிறோம், எத்தனை துரோகங்கள் செய்கிறோம், எவ்வளவு பொறாமை கொள்கிறோம் என்ற எண்ணங்கள் வர, மனம் குவிந்து கடவுளை நோக்கி ஆடுகிறது..பாடுகிறது,..பேசுகிறது... உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கித் தவிக்கிறது...

தவிப்பின் உச்சியில் தொண்டைக்குழியில் அதாவது விசுத்தியில் பலமான சத்தம், சொற்களற்ற சப்தம் எழுகிறது...அலறலாயும் ஏற்படுகிறது..விக்கி விக்கி அழுகிறது. அந்த அழுகை தாண்டி ஆஞ்ஞையில் அதாவது நெற்றியின் நடுவில் மனம் வியக்க அமைதிப்படுகிறது.

யானை என்ற இந்த மூன்றையும் காப்பாற்றுவதற்காக, முதலை என்ற அடுத்த மூன்றையும் கட்டி வைப்பதற்காக, கீழே உள்ள மூன்றும் இழுப்பின் மேலே உள்ள மூன்றும் சரியாகச் செயல்படாது என்று சகஸ்ரஹாரத்தின் மேல் இருந்த அந்த பிரபஞ்ச சக்தி, அந்தக் கடவுள் சக்தி, விஷ்ணு என்கிறவர் தன்னுடைய சக்கரத்தால் அந்த முதலையை அழிக்கிறார்.

கீழ் மூன்று விஷயங்களையும் தகர்க்கிறார். காமத்தை அழிக்கிறார். கோபத்தை அழிக்கிறார். பொறாமை பொய்யை அழிக்கிறார். நான் என்ற அகங்காரத்தை அழிக்கிறார். முதலை இறந்துபோக யானை கடவுளை வாழ்த்திக்கொண்டு போகிறது.

அந்தத் தாமரை என்ன..? அதுதான் சகஸ்ரஹாரம். ஆயிரம் இதழ்கள் கொண்ட அந்தத் தாமரை மலர்ந்து இறைவனை நோக்கி, பிரபஞ்சத்தை நோக்கி, சக்தியை நோக்கி நிற்க, அந்த சக்தியினுடைய தொடல், அந்த சக்கரத்தினுடைய தொடல், கடவுளுடைய தொடல் திடீரென்று ஏற்பட்டு உங்களை புனிதமாக்கி விடுகிறது. உங்களை மனித ரூபத்திலிருந்து விலக்கி விடுகிறது

நீங்கள் உணவிலிருந்தும், பல ஆசைகளிலிருந்தும் விடுபட்டு விடுகிறீர்கள். இதுதான் முதலையும், யானையும் கொண்ட விஷயம். கடவுளுடைய தொடுதலைத்தான், ஏங்கினால் கடவுள் வருவார் என்ற நம்பிக்கையைத்தான் இந்த குண்டலினி அடுக்கு மூலம் சொல்கிறது.

குண்டலினி நகர நகர, சகஸ்ரஹாரம் தொட, இந்தக் கடவுளுடைய நெருக்கம், அண்மை, தெளிவு ஏற்பட்டுவிடும். அதற்கு மற்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய இந்த மூன்றும் செயல்பட வேண்டியது அவசியம். அனாகதத்தில் மனம் லயிக்க வேண்டியது அவசியம். இது மிக மிகப் பெரிய விஷயம்...இதனை சிந்தித்தால் சந்திக்கலாம் மெய்ஞானத்தை...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

குரு தாமே பிரம்மமாக இருக்கவேண்டும்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

குரு தாமே பிரம்மமாக இருக்கவேண்டும்...!

ஞானத்தேடல் கொண்ட ஒருவன் தனது அண்ணனிடம் தன்னை ரட்சிக்கும் மந்திர தீட்சை ஒன்றைத் தந்து, ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கி வைக்கும் படிக் கேட்டுக்கொண்டான். "உறவினருக்கு உபதேசிப்பது கடினம், அதிலும் சொந்தத் தம்பிக்கு உபதேசிப்பது மிகவும் கடினம். ஆகவே, சாட்சாத் பரமசிவனே குருவடிவில் வந்தவராகிய தட்சிணாமூர்த்தியிடம் போய்க் கேள்" என்று அண்ணன் கூறினார். அவரை எப்படி அடையாளம் காண்பது என்று தம்பி கேட்டான். "எவர் ஒருவர் எல்லா மனிதர்களையும், எல்லாப் பொருள்களையும் சமமாகக் கருதுகிறாரோ அவரே நான் கூறும் குரு" என்றார் அண்ணன். தம்பி அத்தகைய குருவைத் தேடிக் கிளம்பினான்...

அவன் தன் கையில் ஒரு தங்கமோதிரத்தை அணிந்துக் கொண்டு ஒவ்வொரு ஆசிரமமாகப் போனான்...சிலர் அதைப் பார்த்துவிட்டுத் தங்கம் என்றனர்...மற்றவர்கள் அதைப் பித்தளை, தாமிரம், ஈயம், வேறு உலோகக் கலவை என்று பலவாறாகக் கூறினர்..அவன் போய்க்கொண்டே இருந்தான். சுடர்வீசும் கண்கள் கொண்ட இளந்துறவி ஒருவரை அவன் பார்த்தான். அவரிடம் அவன் "இது தங்கமா..?" என்று கேட்டான்...."ஆமாம்" என்றார் அவர்... "இது பித்தளை அல்லவா..?" என்றான். அதற்கு "ஆமாம், இது பித்தளைதான்" என்றார்... அவன் அதை என்னவெனக் கூறினாலும் அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார்...ஆகவே அந்தச் சாது தட்சிணாமூர்த்தியே என இவன் முடிவுசெய்தான்...மனதின் சமநிலை ஏகத்துவத்தை உணர்வதால் ஏற்படுகிறதே அன்றி வேறு வகையில் அல்ல...

ஒருமுறை சனத்குமாரர் தீவிரமாகத் தவம் செய்துக் கொண்டிருந்த போது அவர்முன் கடவுள் தோன்றினார்... "உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றார் கடவுள். "தாங்கள் இப்போது எனது விருந்தினர்...இங்கே நான் சில காலமாக இருக்கிறேன்.. இவ்விடத்துக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். விருந்தினர் கேட்பதை நான் கொடுத்தே தீரவேண்டும்" என்றார் சனத்குமாரர்...

பிரம்மத்தை அறிந்ததனால் அவர் பிரம்மமாகவே ஆகிவிட்டார். அதனால் அவரால் கடவுளைத் தனக்குச் சமமாகக் கருதிப் பேச முடிந்தது. "நான் நீயே" என்கிற நிலைமையை அவர் எட்டியிருந்தார். அவர் அப்படிப் பேசியதில் ஆச்சரியமில்லை. 'அவன்' எப்போதும் இருக்கிறான். 'அவனிடமிருந்து' பிரிந்த பின்னர்தான் ஜீவன் 'நான்' ஆகிறான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏


ஞாயிறு, செப்டம்பர் 24, 2023

ஆன்மீகத்தின்(உட்கருத்து) ஒரு பகுதி...?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

ஆன்மீகத்தின்(உட்கருத்து) ஒரு பகுதி...?

உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸிடம் ஒருவர், “உங்களை விட பணக்காரர் உலகில் யாராவது இருக்கிறார்களா...?” என்று கேட்டார்...

அதற்கு பில் கேட்ஸ், "ஆம், என்னை விட பணக்காரர் ஒருவர் இருக்கிறார்" என்றார்.

அப்போது அவர் ஒரு கதை சொன்னார்...“நான் பணக்காரனாகவோ பிரபலமாகவோ இல்லாத காலகட்டம் அது..."நான் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்தபோது ஒரு செய்தித்தாள் விற்பனையாளரைப் பார்த்தேன்..."நான் ஒரு செய்தித்தாளை வாங்க விரும்பினேன், ஆனால் என்னிடம் போதுமான மாற்றம் இல்லை. அதனால் வாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டு விற்பனையாளரிடம் திருப்பிக் கொடுத்தேன்..."மாற்றம் இல்லை என்று நான் அவரிடம் சொன்னேன். விற்பனையாளர், 'இதை இலவசமாக தருகிறேன்' என்றார். அவரது வற்புறுத்தலின் பேரில் நான் செய்தித்தாளை எடுத்தேன்...“தற்செயலாக, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, நான் அதே விமான நிலையத்தில் தரையிறங்கினேன், மீண்டும் ஒரு செய்தித்தாளுக்கு மாற்றம் இல்லாமல் இருந்தேன். விற்பனையாளர் எனக்கு செய்தித்தாளை மீண்டும் வழங்கினார். நான் மறுத்துவிட்டேன், இன்றும் எனக்கு மாற்றம் இல்லை என்பதால் என்னால் எடுக்க முடியாது என்றேன். நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், எனது லாபத்தில் இருந்து இதைப் பகிர்ந்து கொள்கிறேன், எனக்கு நஷ்டம் வராது' என்றார். செய்தித்தாளை எடுத்தேன்...

“19 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பிரபலமடைந்து மக்களால் அறியப்பட்டேன். திடீரென்று அந்த விற்பனையாளரின் நினைவு வந்தது. நான் அவரைத் தேட ஆரம்பித்தேன், சுமார் 1½ மாத தேடலுக்குப் பிறகு, நான் அவரைக் கண்டுபிடித்தேன்...

நான் அவரிடம், 'என்னை உங்களுக்குத் தெரியுமா...?' அதற்கு அவர், 'ஆம், நீங்கள் தான் பில் கேட்ஸ்' என்றார்.

"நான் அவரிடம் மீண்டும் கேட்டேன், 'ஒருமுறை நீங்கள் எனக்கு ஒரு செய்தித்தாளை இலவசமாகக் கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா...?'

"விற்பனையாளர், 'ஆம், எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு முறை கொடுத்தேன்.'

"நான் சொன்னேன், 'அந்த நேரத்தில் நீங்கள் எனக்கு வழங்கிய உதவியை நான் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன். உன் வாழ்க்கையில் நீ எதை விரும்புகிறாயோ, அதைச் சொல்லு, நான் அதை நிறைவேற்றுவேன்.

"விற்பனையாளர், 'ஐயா, அப்படிச் செய்வதால் என் உதவியை உங்களால் செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கவில்லையா...?'

"நான், 'ஏன்...?'

அவர் கூறினார், 'நான் ஏழை செய்தித்தாள் விற்பனையாளராக இருந்தபோது நான் உங்களுக்கு உதவி செய்தேன், இப்போது நீங்கள் உலகின் மிகப்பெரிய பணக்காரராக ஆனபோது எனக்கு உதவ முயற்சிக்கிறீர்கள். உங்கள் உதவி எப்படி என்னுடையதுடன் ஒத்துப்போகும்..?'

"பத்திரிகை விற்பனையாளர் என்னை விட பணக்காரர் என்பதை அன்று நான் உணர்ந்தேன், ஏனென்றால் அவர் ஒருவருக்கு உதவுவதற்காக பணக்காரர் ஆக காத்திருக்கவில்லை."

நிறைய பணத்தை விட பணக்கார இதயத்தை வைத்திருப்பவர்களே உண்மையான பணக்காரர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...மற்றவர்களுக்கு உதவக்கூடிய ஒரு கருணையுடன் கூடிய  இதயம் இருப்பது மிகவும் முக்கியம்...

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

நம் உயிர்நாடியாக உள்ள பாபா எவ்வாறு திருப்தியுடன்‌ உண்பிக்கப்பட்டார்‌...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

நம் உயிர்நாடியாக உள்ள பாபா எவ்வாறு திருப்தியுடன்‌ உண்பிக்கப்பட்டார்‌...?

ஒருமுறை திருமதி தர்கட்‌ ஷீர்டியில்‌ ஒரு குறிப்பிட்ட வீட்டில்‌ தங்கியிருந்தார்‌. மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள்‌ பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய்‌ அங்குவந்து குரைக்கத்‌ தொடங்கியது. திருமதி தர்கட்‌ உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்‌ துண்டை விட்டெறியவும்‌, அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்‌ கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது. பிற்பகல்‌ அவள்‌ மசூதிக்குச்‌ சென்று சிறிது தூரத்தில்‌ அமர்ந்தபோது சாயிபாபா அவளிடம்‌ “அம்மா நான்‌ பெருமளவு திருப்தியுறும்‌ வகையில்‌ எனது பிராணன்கள்‌ யாவும்‌ நிறைவுபெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில்‌ வைக்கும்‌. இம்மசூதியில்‌ அமர்ந்துகொண்டு பொய்‌ பேசவே மாட்டேன்‌. என்னிடம்‌ இவ்விதமாக இரக்கங்கொள்வாய்‌.

முதலில்‌ பசியாய்‌ இருப்போர்க்கு உணவு கொடுத்துப்பின்‌ நீ உண்பாயாக. இதை நன்றாகக்‌ கவனித்துக்கொள்‌” என்று கூறினார்‌. முதலில்‌ அவளால்‌ இதன்‌ பொருளை உணர இயலவில்லை. எனவே அவள்‌, “எங்ஙனம்‌ நான்‌ தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்‌...? நானே உணவுக்கு மற்றவர்களைச்‌ சார்ந்து பணம்‌ கொடுத்துச்‌ சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்‌” எனக்கூறினாள்‌...இதற்கு பாபா, “அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான்‌ மனப்பூர்வமாகத்‌ திருப்தியடைந்தேன்‌. நான்‌ இன்னும்‌ ஏப்பம்‌ விட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌. உணவு வேளைக்கு முன்னர்‌ நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன்‌ ஒன்றியதாகும்‌. இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும்‌ (பூனைகள்‌, பன்றிகள்‌, ஈக்கள்‌, பசுக்கள்‌ முதலியன) என்னுடன்‌ ஒன்றானவைகளாகும்‌. நான்‌ அவைகளின்‌ உருவத்தில்‌ உலாவிக்‌ கொண்டிருக்கிறேன்‌. என்னை இவ்வனைத்துப்‌ படைப்புயிர்களிலும்‌ பார்க்கிறவன்‌ எனக்கு உகந்தவன்‌. எனவே த்‌வைதத்தையும்‌, பேதத்தையும்‌ ஒழித்து இன்று செய்ததைப்போல்‌ எனக்குச்‌ சேவை செய்‌” என்று கூறினார்‌. இவ்வமிர்தத்தினை நிகர்‌ மொழிகளைக்‌ கேட்டு அவள்‌ உருகி, அவளது கண்கள்‌ பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது.

நீதி :

கடவுளை எல்லா படைடப்புயிர்களிலும்‌ காண்பாயாக” என்பதே இந்த நிகழ்ச்சிகளின் நீதியாகும்‌. உபநிஷதங்கள்‌, பகவத்கீதை, பாகவதம்‌ இவைகளெல்லாம்‌ ஜீவராசிகள்‌ அனைத்திலும்‌ கடவுள்‌ அல்லது தெய்வீகத்தைக்‌ காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன. இங்கு  முடிவில்‌ சொல்லப்பட்ட நிகழ்ச்சியாலும்‌ இன்னும்‌ பல சந்தர்ப்பங்களிலும்‌, உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக்‌ கொண்டுவருவது என்று சாயிபாபா விளக்கிக்‌ காட்டியிருக்கிறார்‌. இவ்வாறாக சாயிபாபா உபநிஷத்தின்‌ விரிவுரையாளராக அல்லது குருவாக இருந்தருளினார்‌...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

குரு என்பவர் யார்...?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

குரு என்பவர் யார்...?

தண்ணீரைத் தொடாமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது; குரு இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. அத்தகு குருவின் தன்மைகளைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்...

ஓம் அக்ஞான-திமிராந்தஸ்ய  ஜ்ஞானாஞ்ஜன - ஷலாகயா

சக்ஷுர் உன்மீலிதம் யேன  தஸ்மை ஸ்ரீ-குருவே நம.

“நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.”

இந்த ஸ்லோகம், நம்முடைய அறியாமையை நீக்கி உண்மையான ஞானத்தை விருத்தி செய்ய உதவுபவர் ஆன்மீக குரு என்று விளக்குகின்றது. ஆன்மீக குருவின் மூலமாகநாம் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடைய முடியும்..ஆன்மீக ஞானத்தை அடைவதற்கு குருவிடம் சரணடைய வேண்டும் என்பது ஸ்ரீமத் பாகவதத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (11.3.21), அதாவது பரம சத்தியத்தைப் பற்றிய திவ்ய ஞானத்தை அறிய விரும்புபவர் ஆன்மீக குருவை அணுக வேண்டும்...ஆன்மீக குரு புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்

ஆன்மீக குருவின் தகுதிகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தன்னுடைய உபதேசாமிருதம் என்னும் நூலின் முதல் ஸ்லோகத்தில் பின்வருமாறு விளக்குகிறார்..!

🔥ஒரு உயர் குருவானவர் “பேச்சின் தூண்டுதல், மனதின் தேவைகள், கோபத்தின் செயல்கள் மற்றும் நாக்கு, வயிறு, பாலுறுப்புகள் ஆகியவற்றின் தூண்டுதல்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய நிதான புத்தியுள்ள ஒருவர் உலகம் முழுவதிலும் சீடர்களை ஏற்கும் தகுதி வாய்ந்தவராவார்.”🔥

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

ஆன்மாவிற்கு வலி, வேதனை, துன்பம், துயரங்கள் உண்டா இல்லை உடலுக்கு மட்டும் தானா..? ஆத்மா என்றால் என்ன..??? ஆத்மாவின் வேலை என்ன..???


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மாவிற்கு வலி, வேதனை, துன்பம், துயரங்கள் உண்டா இல்லை உடலுக்கு மட்டும் தானா..?ஆத்மா என்றால் என்ன..??? ஆத்மாவின் வேலை என்ன..???இவற்றை யாராவது சரியாக சொல்ல முடியுமா..???

கடோபனிஷததில், நசிகேதஸ் என்ற பெயருள்ள ஒரு சிறு பையனுக்கு, யமதர்ம ராஜன் பதிலளிக்கிறார்..

ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவது

புத்திம் து சாரதிம் வித்தி, மனம் ப்ரக்ரஹமேவது

இந்திரியாணி ஹ்யானாஹுர் விஷயாம்தே சு கோசரான்

ஆத்மேந்திரிய மனோ யுக்தம் லப்த்வா தாதுர் மணிசினஹ.....

அதாவது ஆத்மாதான் பயணி, உடல்தான் ஊர்தி அறிவு தான் ஓட்டுனர், மனம்தான் கடிவாளம்...இந்திரியங்கள் தான்  குதிரைகள், விஷயங்கள்தான் பாதைகள்...ஆத்மன், இந்த்ரியம், மனம் ஆகியவையின் கூட்டை இப்படி அறிந்துக் கொள்....

Note : ஆத்மா என்பது ஒரு சக்தி (energy). எப்படி battery என்பது சக்தியின் கொள்கலனோ (container), அதே போல், ஆத்மா என்ற சக்தியின் கொள்கலன் நம் உடம்பு. இதில் ஆத்மா பயணிக்கிறது..அவர் மேலும் சொல்கிறார் :

ஹந்த சேன் மன்யதே ஹந்தும்

ஹதச்சேன் மந்ததே ஹதம்

உபௌ தௌ ந விஜானீதோ

நாயம் ஹந்தி ந ஹன்யதே.

கொல்பவன் கொல்வதாக எண்ணினாலும், கொல்லப்பட்டவன் கொல்லப்பட்டதாக எண்ணினாலும், இருவருமே (ஆத்மாவை) அறியாதவர்கள்...ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை...

அவர் மேலும் சொல்கிறார் :

அணோரணீயான் மஹதோ மஹீயான்

அத்மஸ்ய ஜந்துர் நிஹிதோ குஹாயாம்

தமக்ரதுஹு பஷ்யதி வீத ஷோகோ,

தாதுப்ரசாதன் மஹிமானம் ஆத்மனஹ.

அணுவிலும் சிறிதான, பெரிதிலும் பெரிதான ஆத்மன், ஒவ்வொரு ஜந்துவின் இதய குகைக்குள் இருக்கிறது...தனக்குள் அந்த ஆத்மனை உணர்பவன், சோகத்தை களைகிறான்...ஆத்மனின் மகிமையை உணர்கிறான்......

Note : இந்த ஆத்மா நம் இதய குகையில் (இது heart அல்ல). இது நம் நாபிக்கு (தொப்பிளுக்கு) ஒரு சாண் மேலே அமைந்திருக்கிறது. இது மார்புக்குழி. இந்த இடத்தை Solar pleaxus என்று கூறுவார்கள்......

இந்த ஆத்மா, ஒரு ஆண் சாப்பிடும் உணவு, தண்ணீர், அல்லது சுவாசிக்கும் காற்று வழியாக ஒரு ஆணின் உடலுக்குள் புகுந்து, அவன் விந்து வழியாக ஒரு பெண்ணுக்குள் சென்று, அவள் கரு முட்டையுடன் கலந்து, ஒரு கருவாக உருவாகிறது. அந்த கரு உருவான உடனே, அந்த உடலுக்கு மனம் உருவாகிறது....

தாத்ரீய உபனிஷதம்....

அந்த மனம், தான்தான் அந்த உடல் என்று நினைக்கிறது...ஆனால், அந்த "நான்" என்ற உணர்வு ஆத்மனுடையது....அந்த "ஆத்மனே நான் என்ற உணர்வுதான்"...ஒரு உயிரினத்துக்கும், ஜடப்பொருளுக்கும் என்ன வித்தியாசம்..???

ஒரு உயிரினம், வேறு ஒரு உயிரினத்திலிருந்து பிறக்கிறது, உணவு தேடி உண்கிறது, உடல் கழிவை வெளியேற்றுகிறது, வளர்கிறது, தன் இனத்தை பெருக்குகிறது, சாகிறது...ஆனால், ஒரு ஜடப்பொருள் இவற்றில் ஒரு காரியத்தையும் செய்வதில்லை..ஆதலால், ஒரு உயிரினத்தை இந்த காரியங்கள் எல்லாம் செய்ய வைப்பது "நான்" என்ற உணர்வே...இது தான் ஆத்மா..!!! சரி..எது கடவுள்..??? எல்லா உயிரினங்களின் 'உள்' ளே இருக்கக் 'கட' வது - கடவுள்...அப்படியென்றால், அந்த ஆத்மாதான் கடவுள்...அப்படியென்றால் அந்த "நான்" என்ற உணர்வுதான் கடவுள்...

திருமூலர் சொல்கிறார்...

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

அவர் மேலும் சொல்கிறார்...

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானே தான்செய்த வினப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே.

திருமூலர் சொன்ன "தன் / தான்" எல்லாமே "நான்" தான்.

"அகாயோ நிர்குணோஹ்யாதமா"

- சிவ சங்கல்ப சூக்தம் (சுக்ல யஜுர் வேதம்)

காயம் - உடல்....அப்படியென்றால், ஆத்மனுக்கு உடலில்லை. ஆகையால் மனம் என்பதுமில்லை. அதனால், இன்பதுன்பங்களும் இல்லை.மேலும், ஆத்மா - குணமில்லாதது. சுகுணம், மற்றும் துர்குணம் அற்றது...இப்போது புரிந்ததா, அந்த "நான்" தான் ஆத்மா என்று...???

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...