ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ..🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏
🔥ஶ்ரீசீரடி சாய் பகவான் தன் பக்தர்களை எவ்வாறு கடைத்தேற்றம் அடையச் செய்கின்றார் என்பதன் விளக்கம்....🔥🔥
நமது சத்குருவான சீரடி சாய்நாதர் , நம் சித்தத்தை மட்டுமே நோக்கி நம்மை நல்வழிப்படுத்திக் கடைத்தேற்ற காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.. அதாவது சொல், செயல், மனம் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இயங்கி சித்தம் தூய்மையாக இருக்கின்றதா என்பதைத் தான் நோக்குகின்றார்கள்..
அவ்வாறு நம்மில் பெரும்பாளரினர் குரு மற்றும் ஆதி மூல இறையாற்றல் வகுத்த கோட்பாட்டு நெறி முறைகளைப் பின்பற்றிட, ஒரு தனி மனித உயிரால் சாத்தியமில்லை என்ற காரணத்தினால் தான் குருவை நாடுகின்றோம்..ஏனென்றால் குருவானவர் நம் சித்தத்தை சீர்செய்து, நம் கர்ம வினைகளை கரைத்து, நான் என்ற அகந்தையையும், அகங்காரத்தையும் , கர்வத்தையும் அகற்றி, நம்மை புடம் போட்டு நம் வாழ்வியல் இயக்கத்தில் எவ்வாறு மனிதமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனித்து ,அதனை சூட்சமமாக நமக்கு உணர்த்தி தாய்மையுணர்வோடு போதித்து அதன் படி நம்மை செயல்பட வைக்கின்றார்..மேலும் தீய நிலைப்பாட்டிலிருந்து நம்மை அகற்றி புனித நிலைக்கு உயரவும், வஞ்சகம், பேராசை, ,காழ்ப்புணர்ச்சி,பழி வாங்குதல், புறம் கூறுதல், பிறர் வாழ்வதை பார்த்து அதனை ஏற்றுக்கொள்ளாத நிலை, நன்னெறியைக் கடைப்பிடிக்காமல் தான் தோன்றித் தனமாக வாழ்தல் , ,
நான் என்கின்ற அகந்தையில் என்னால் தானே அனைத்தும் சாத்தியம் என்ற வீணான பிற்போக்குச் சிந்தனையில் இருப்பவர்களை சாய் குருவானவர், ஒவ்வொரு பக்தனின் அகங்காரத்தை நீக்கி நல்வழிப்படுத்தி, தன் பக்தர்களின் வாழ்க்கை முழுவதும் தாய்மையுணர்வோடு இருந்து வழி நடத்துகின்றார்..அவ்வாறு குரு நம்மை வழிநடத்த நாம் அவர்களோடு எவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டும் என்றால்... நம்மை ஆத்மார்த்தமான குருவிடம் ஒப்படைத்து, தூய்மையான நிலையான அன்புடன் பக்தி செய்து, நம்பிக்கை, பொருமையைக் கடைப்பிடித்து அதனுடன் சேர்த்து நேர்மை, வைராக்கியத்தை மேற்கொண்டு, மேலும் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு, குரு கூறிய அருள்மொழிகளை நம் காதால் கேட்டு, குரு வழிப்பாதையில் செல்ல வேண்டும்...மேலும் குருவின் சூட்சம பேராற்றலை உணர்ந்து,
அதனுடன் கலந்து.. கரைந்து .. காதலாள் கசிந்து உருகி.. மனதை வெற்றிடமாக்கி பஞ்சு பொதியாய் வைத்துக் கொண்டு, சிறு குழந்தையாக நம்மை பாவித்து குருவின் மேல் தீராத ஏக்கத்தோடு நிவைமாறாத அன்பால் அவரை நம்பால் ஈர்த்து முழுமையாக ஒப்படைத்து சாட்சியாக குருவை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டும் ...குரு என்ற பேராற்றல் அன்பின் வடிவமாக இருக்கின்றது... தூய்மையின் வடிவமாக இருக்கின்றது..பேர் ஆனந்தத்தின் இருப்பிடமாகவும் , பேர் ஆதிக்கத்தின் பிறப்பிடமாகவும் இருக்கின்ற காரணத்தினால் குருவை அன்பினால் எளிதாக நம்மோடு பிணைத்துக் கொள்ள முடியும் ...இந்த மேற்கூறிய மூல சூட்சம தன்மைகளைப் படித்து உள்வாங்கி நாம் அனைவரும் குருவழிப் பாதையைக் கடைப்பிடித்து பரிபூரணமாக குருவின் ஆசிப்பெற்று.. இக வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து, சித்தத்தை தூய்மைப் படுத்தி சித்தத்தில் வீற்றீருக்கும் சித்தம் பரமான ஆதி திரு மூலத்தையும் ஒரு சேர அடையவே குருமார்கள் வழி நடத்துகின்றார்கள்...நம் அனைவரும் குருவை சிரம் தாழ்த்தி பணிந்து அவர் வகுத்த பாதையில் பயணிப்போம்...குரு சேவைப்புரிவோம்...நாம் அனைவரும் சீரடி சாயீன் நாமத்தை உச்சரித்து குருவழிப் பாதையில் பயணித்து, குருவின் ஆசியைப் பெற்று வாழ்வில் மேன்மை நிலையை அடைவோம்......
ஓம் ஶ்ரீசாய்ராம்...🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக