ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
🔥🔥சீரடிபகவான், எவ்வாறு தன்னை நாடி வந்த நோயாளிகளின் தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்தினார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கம்....🔥🔥
பிறத்தல் அரிது.. ஆனால் அந்த மானிடப் பிறவியிலும் அரிதானவர்களாக இருந்து, மக்களுக்கு சமூக, ஆன்மிக தொண்டாற்றி இறைவனோடு கலந்தவர்களின் வாழ்க்கை புனிதத்துவம் வாய்ந்தது... அப்படிப்பட்ட புனிதர், மகான்களில் ஒருவதான் சீரடி சாயீபாபா....ஒரு முறை மசூதியில் தங்கியிருந்த பாபாவிடம், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவரது குறையைக் கேட்டறிந்த பகவான் அவருக்கு மருந்தளித்தார்..... மருந்தை உட்கொண்ட பக்தர்கள் உடனடியாக குணமடைந்து தெளிவடைந்தார்.
அந்த சம்பவத்தில் இருந்து சாயீபாபாவி டம், பூரண குணம் வேண்டி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.... சாயீபாபாவின் சக்தி மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்களில் ஆமன்பாய் என்ற பெண்மணியும் ஒருவர்.... அவரது மகன் கண்பத்ஷரி கனாடே என்பவர் தொழு நோயினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்... மேலும் அவருக்கு கடுமையான காய்ச்சலும் இருந்தது... இதனால் தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருந்த கனாடேவை, அவரது தாய் ஆமன் பாய், சாயீபாபாவிடம் அழைத்துச் சென்று, தன் மகனை குணப்படுத்தும்படி வேண்டிக்கேட்டார்...
கண்பத்ஷரி கனாடேவின் உடல் நிலையை பரிசோதனை செய்த பகவான், அவனுக்கு வந்திருக்கும் தொழுநோயை குணப்படுத்த முடியும் என்று கூறினார்...ஆனால் அதற்கான விஷம் தேவை என்பதையும் தெரிவித்தார்.... மருந்து தயாரிப்பதற்காக நல்ல பாம்பினை யார் பிடித்துக் கொண்டு வருவது என்பதில் இப்போது சிக்கல் ஏற்பட்டு விட்டது....அதற்கான வழியையும் பகவானே தெரிவித்தார்.... கனாடேவிடமே, நல்ல பாம்பை பிடித்து வரும் படி கூறினார் பாபா..அவனோ அச்சம் காரணமாக தயங்கினான்... 'நல்ல பாம்பு, தொழு நோயாளியை கடிக்காது. எனவே எவ்வித அச்சமும் இன்றி பாம்பை பிடிக்கலாம்' ....என்று கூறி கனாடேவுக்கு ஊக்கம் அளித்தார் சாயீபாபா.....
பகவான் கூறியபடியே காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து ஒரு நல்ல பாம்பை பிடித்தான் கனாடே....அவன் கையில் சிக்கிய பாம்பு, அவனிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதே தவிர, அவனை கடிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை...பாம்பைக் கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்தான் கண்பத்ஷரி கனாடே..நல்ல பாம்பின் விஷத்தைக் கொண்டு மருந்து தயாரித்து அவனுக்கு கொடுத்தார் சாயீபாபா.... மருந்தை சாப்பிட்ட சில நாட்களிலேயே கண்பத்ஷரியின் உடல் நலனின் அதிசயிக்கத்தக்க, ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு, அவர் முழுமையாக குணமடைந்தார்..பாபாவின் சிகிச்சை முறைகள் ஒவ்வொன்றும் விசித்திரம் உள்ளதாக இருந்தன.ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவையே...
இங்கே நம்பிக்கையும் விசுவாசமுமே பகவான் நமக்கு ஆசியை வழங்க ஏதுவான வழியாகத் தெரிகின்றது....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக