ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி சாயீ பகவானின் உபதேச மொழிகளும், போதனைகளும்...🙏

எனதன்பு குழந்தைகளே...என் குழந்தையான உங்களை ஒவ்வொரு  நிமிடமும் நான் கவனித்துக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்.... நீங்கள்  எந்த வேலையாக சென்றாலும், உங்களுக்கு முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பேன்....பணம், பொருள், பதவி, அதிகாரம் படைத்தவர்களாக இருப்பது மட்டுமே பாக்கியம் என்று நீ நினைத்து கொள்கின்றீர்கள்....ஆனால் உண்மை அது அல்ல, பாவங்கள் நீங்கப் பெற்றவர்களே உண்மையான அதிர்ஷ்டசாலிகள் என யான் கூறுவேன்..... அதுதான் மகிழ்ச்சியான நிறைவான வாழ்வைத் தரும்....எனவே நீ தெரிந்தோ, தெரியாமலோ பிறருக்கு செய்த தவறை உணர்ந்து அதற்காக வருந்தி  இறையிடம் மன்னிப்பைக் கேளுங்கள்..

எப்போதும் நீங்கள் எம்மை ஆத்மார்த்தமாக வழிபட  ஆரம்பித்தீர்களோ lஅன்றே உங்களின்  பாவங்களை நீங்கி நீங்கள் நல்வாழ்வு பெறுவீர்கள்..விரோதங்களையும், வீண் வாதங்களையும் தவிர்ப்பீராக....உங்களால்  முடிந்த நன்மையை நீங்கள்  எப்போதும் பிறருக்கு செய்வீராக...நிச்சயம் அதுவே உங்களை  இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றும்....தீங்குக்கு தீங்கு என்பதை தவிருங்கள் குழந்தைகளே.. பிறருடைய அவசொற்கள் உங்களுக்கு தீங்கிழைக்காது. ...அந்த பாவசெயல்களின் வினை செய்தவர்களையே போய் சேரும்..நீங்கள்  அமைதியாக இருப்பீராக... இதனால் நீங்கள் என்றும் தாழ்ந்து போகமாட்டீர்கள்... என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைப்பீராக...உங்களின்  கர்மவினைகளை அழித்து உங்களுக்கு உதவவே நான் இதை செய்யும் படி கூறுகிறேன்...நீங்கள்  இனி சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, என சகல செளபாக்கியங்களையும் பெற்று சீரும் சிறப்புமாய் நற்பெயருடன் வாழ்வீர்கள்..

என் பிள்ளைகளாகிய உங்களுக்கு எனதன்பும் ஆசியும் என்றைக்கும் உண்டு..

ஓம் ஸ்ரீ சாய்ராம்..🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...