ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
🙏🏼 அத்தியாயம்:: பதிமூன்று (13)🙏🏼
🔥முதலில் புனித வேத நூலான சாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் சீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்..
இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்....நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக...🙏🏻🙏🏻
🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும் இந்த சத்சரித வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது..
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்.... அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்.... சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥
🙏🏼அத்தியாயம்::..பதிமூன்று(13)🙏🏼
🙏🏻முன்னுரை..🙏🏻
மாயையின் அளப்பறியச் சக்தியைப் பற்றி விளக்கமும், தன்னை ( சீரடி பகவான்) மாயை எவ்வாறு ஆட்கொண்டு வழி நடத்துகின்றது என்பதைப் பற்றி பகவானின் சூட்சம உரை....
பகவானின் ஆத்மார்த்தமான பக்தர்களாகிய
1. பீமாஜி பாடீல்
2. பாலா ஷிம்பி
3. பாபு சாஹேப் பூட்டி
4. ஆலந்தி ஸ்வாமி
5. காகா மஹாஜனி
6. ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்... ஆகியோர்களைப் பற்றிய குறிப்புரையும், பகவான் மேற்க்கண்ட பக்தர்களின் தீர்க்க முடியாத நோய்களை எவ்வாறு குணப்படுத்தி உயரிய நிலையை அடையச் செய்தார் என்பதன் விளக்கவுரை....
மேற்க்கண்ட தலைப்புகளின் விளக்கவுரைகளை ஒவ்வொன்றாக இங்கே காண்போம்...
🔥முதலில் மாயையின் அளப்பறியச் சக்தியைப் பற்றி பகவானின் விளக்கமும், தன்னை( சீரடி பகவான்) மாயை எவ்வாறு ஆட்கொண்டு வழி நடத்துகின்றது என்பதைப் பற்றி பகவானின் சூட்சம உரையைப் பற்றி இங்கே காண்போம்..🔥
பாபாவின் சாய்சரித்திர அருளுரைகளும், உபதேச மொழிகளும் ,மறை ஞான விளக்கவுரைகளும் எப்போதும் சுருக்கமானவை, மிருதுவானவை, ஆழமானவை,பொருள் செறிந்தவை, சத்தியத்தன்மையை எடுத்துக்காட்டுபவை... பகவான் எப்போதும் அனைத்திலும் திருப்தியடைந்தவராய் பற்றில்லாமல் இருந்தார்.எதற்கும் கவலைப்படவில்லை...பகவான் கூறுகின்றார்.. "நான் ஒரு பக்கிரியானபோதும், எனக்கு வீடோ, வாசலோ இல்லாதிருப்பினும் எல்லாக் கவலைகளையும் விட்டொழித்து நான் ஒரே இடத்தில் வசித்தாலும் தடுக்கமுடியாத விஷ்ணு மாயை என்னை அடிக்கடி துரத்துகிறாள்... என்னை மறந்தாலும், அவளை மறக்கமுயயவில்லை... அவள் என்னை எப்போதும் சூழ்ந்துகொள்கிறாள். பரமாத்மா ஸ்ரீ ஹரியினுடைய தோற்ற சக்தி பிரம்மா, மற்றவர்களையும் துரத்துகிறது.. பின் என்னைப்போன்ற ஏழைப் பக்கிரியைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது..? பரமாத்மாவிடம் சரண் புகுந்தோர், அவரது அருளால் அவளது பந்தங்களினின்றும் விடுவிக்கப்படுவார்கள் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு கூறுகின்றார்....உயரிய பேராற்றலாக அனைத்தும் தன் வசம் இருந்தாலும் பகவான் தன்னை எளிமையின் பிறப்பிடமாக திகழ்கின்றார்....
மாயையின் சக்தியைப் பற்றி இம்மொழிகளால் பாபா கூறியிருக்கின்றார்... கிருஷ்ண பரமாத்மா ஞானிகள் தமது உயிருள்ள ரூபங்கள் என்ற பாகவதத்தில் உத்தவருக்கு உபதேசித்திருக்கிறார்..பாபா தமது அடியவர்களின் நலனுக்காக என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.. "யார் அதிஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள்.. 'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக் கொண்டு இருந்தால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன்... இம்மொழிகளை நம்புங்கள்... நீங்கள் நிச்சயம் நன்மை அடைவீர்கள்... வழிபாட்டின் கூறுகள் எட்டோ, பதினாறோ எனக்குத் தேவையில்லை... எங்கு முழுமையான பக்தி இருக்கின்றதோ அங்கு நான் அமர்கிறேன்"...
🔥ஆத்மார்த்தமாக சரணாகதி அடைந்த பக்தர்களாகிய ...
1. பீமாஜி பாடீல்
2. பாலா ஷிம்பி
3. பாபு சாஹேப் பூட்டி
4. ஆலந்தி ஸ்வாமி
5. காகா மஹாஜனி
6. ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்... ஆகியோர்களைப் பற்றிய குறிப்புரையும், பகவான் மேற்க்கண்ட பக்தர்களின் தீர்க்க முடியாத நோய்களை எவ்வாறு குணப்படுத்தி உயரிய நிலையை அடையச் செய்தார் என்பதன் விளக்கவுரையைக் காண்போம்...🔥
🔥முதலில் பீமாஜி பாடீல் பற்றிய அனுபவ விளக்கம் இங்கே...🔥
புனே ஜில்லா, ஜுன்னர் தாலுக்கா நாரயண்காவனைச் சேர்ந்த பீமாஜி பாடீல் என்பவர் பல வியாதிகளாலும், நெடுநாள் நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார். முடிவில் அது கொடிய நோயாக மாறியது...அவர் எல்லாவித சிகிச்சைகளையும் முயன்று ஒரு பிரயோசனமுமில்லை...அனைவரின் நம்பிக்கைகளையும் இழந்து, முடிவாகக் கடவுளை நோக்கி அவர் வேண்டிக்கொண்டார். "ஓ..! நாராயண மூர்த்தியே, இப்போது என்னைக் குணப்படுத்தும்".சூழ்நிலைகள் எல்லாம் நன்றாய் இருக்கையில் நாம் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை. ..கேடும், துரதிஷ்டமும் நம்மைத் தாக்கும்போது நாம் அவரை நினைக்கிறோம்...எனவே பீமாஜி இப்போது கடவுளை நோக்கித் திரும்பினார். இவ்விஷயத்தில் பாபாவின் பெரும் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்க்கரைக் கலந்தாலோசிக்க அவருக்குத் தோன்றியது. தனது துன்பங்கள் அனைத்தையும் கூறி, அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய கருத்தைத் தெரிவிக்கக் கேட்டிருந்தார் பீமாஜி...
நானா பதிலுரை எழுதுகின்றார்.....பீமாஜி உனது நோய் தீர ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது.. அதாவது பாபாவின் பாதங்களினின்று உதவி பெறுவதேயாகும் என்று கூறுகின்றார்...சீரடிக்கு பீமாஜி அழைத்து வரப்பட்டு பாபாவின் முன்னர் அமர்த்தப்பட்டார்... நானா சாஹேப்பும், ஷாமாவும் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) அங்கு இருந்தனர்...முன்னைய தீய கர்மங்களாலேயே இவ்வியாதி என்று பகவான் சுட்டிக்காண்பித்து முதலில் இதில் தலையிடத் தீர்மானம் இல்லாதவராய் இருந்தார்... நோயாளியோ தாம் அனாதரவானவர் என்றும், உங்களையே சரணாகதி அடைந்து இருப்பதாகவும், நீங்கள் தான் கடைசி கதியென்றும், கருணை காட்டும்படியும் கூறி அலறத் தொடங்கினார்.... அப்போது பாபாவின் உள்ளம் உருகியது... அவர் கூறியதாவது, "பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர ஏறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு, வேதனைப்பட்டவனாக இருப்பினும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்.. இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர்...அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். எல்லோரையும் அன்புடனும், ஆசையுடனும் பாதுகாப்பார்"... ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நோயாளி இரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் பாபாவின் சந்நிதானத்தில் எவ்வித வாந்தியும் இல்லை.. நம்பிக்கையும், கருணையும் கொண்ட மொழிகளை பாபா உதித்த அதே தருணத்திலிருந்தே வியாதி குணமடையும் நிலைக்குத் திரும்பியது...அசௌகரியமும், சுகாதாரக் குறைவுமுள்ள பீம்பாயின் வீட்டில் தங்கும்படி பாபாவால் அறிவுருத்தப்பட்டார்... ஆனால் பாபாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவேண்டும்...அவர் அங்கு தங்கியிருக்கையில் பாபா அவரை இரண்டு முறை கனவுகள் மூலம் குணப்படுத்தினார்.
முதல் கனவில் தன்னை ஒரு பையனாகவும், மராட்டிச் செய்யுள் ஒப்பிக்காததற்காக உபாத்தியாயரின் கடுமையான பிரம்படியை வாங்கிக் கஷ்டப்படுவதைப் போன்றும் கண்டார்... இரண்டாவது கனவில் ஒரு கல்லை யாரோ ஒருவர் தனது நெஞ்சின்மீது மேலும் கீழும் உருட்டிக் கடுமையான வலியையும், வேதனையையும் உண்டாக்குவதாகக் கண்டார். கனவில் அவர்பட்ட இக்கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்து அவர் வீடு திருப்பினார். பின்னர் அடிக்கடி சீரடி வந்து பாபா தனக்குச் செய்ததை நன்றியுடன் நினைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் பீமாஜி.. மகாராஷ்டிர மக்கள் பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை தங்களது இல்லங்களில் சத்யநாராயண பூஜையை எப்போதும் செய்கிறார்கள். ஆனால் தனது கிராமத்திற்கு திரும்பியபோது பீமாஜி பாடீல் புதிய சத்யசாயீ விரத பூஜையை, சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக தனது இல்லத்தில் ஆரம்பித்தார்....
🔥பாலா கண்பத் ஷிம்பி என்ற பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே ....🔥
பாபாவின் மற்றொரு பக்தரான பாலா கண்பத் ஷிம்பி என்பவர், கொடியவிஷத்தைச் சேர்ந்த மலேரியாவினால் மிகவும் கஷ்டப்பட்டார். எல்லாவித மருந்துகளையும், கஷாயங்களையும் உபயோகித்தார், பலனேதுமில்லை. காய்ச்சல் சிறிதளவும் குறைந்தபாடில்லை.. அவர் சீரடிக்கு ஓடி பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார். பாபா இவ்விஷயத்தில் ஒரு நூதனமான செயல்முறையை அனுசரிக்கச் செய்தார். கொஞ்சம் சாதத்தைத் தயிருடன் கலந்து, லக்ஷ்மி கோவிலுக்கு முன்னால் உள்ள கருப்பு நாய்க்கு உணவு கொடுக்கும்படி கூறினார்... பாலாவுக்கு இதை எங்ஙனம் நிறைவேற்றுவதென்று புதிராக இருந்தது. ஆனால் அவர் வீட்டிற்குப் போனவுடனேயே, தயிரையும் சாதத்தையும் கண்டார். அவை இரண்டையும் கலந்து லக்ஷ்மி கோவிலுக்கு அருகில் கொணர்ந்தார். அப்போது ஒரு கருப்பு நாய் வாலையாட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டார். நாயின் முன்னர் தயிருடன் கலந்த சாதத்தை வைத்தார். நாயும் அதை உட்கொண்டது. ஆச்சர்யமாகவே, பாலா கண்பத் ஷிம்பி மலேரியாவிலிருந்து விடுபட்டார்.....
🔥பாபு சாஹேப் பூட்டி என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே...🔥
பாபு சாஹேப் பூட்டி, ஒருமுறை வாந்தியெடுத்தல், வயிற்றுப்போக்கு முதலியவற்றால் அவதியுற்றார். அவருடைய அலமாரி மருந்து, மாத்திரைகளால் நிறைந்து இருந்தது. ஆயினும் அவற்றால் ஒரு பயனும் இல்லை...வாந்தியெடுத்து வயிற்றுப்போக்கு ஆனதன் காரணமாக பாபு சாஹேப் மிகவும் தளர்ச்சி அடைந்தார். எனவே பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்லக்கூட அவரால் இயலவில்லை...பாபா அப்போது அவரைக் கூட்டனுப்பி, அவரைத் தன்முன் உட்காரச் செய்து, "இப்போது கவனி, இனிமேல் நீ வெளியேறக்கூடாது" என்று கூறி, தமது ஆட்காட்டி விரலை ஆட்டி, மேலும் "வாந்தியெடுத்தலும் நிற்கவேண்டும்" எனக் கூறினார். இப்போது பாபாவின் சொற்களில் உள்ள சக்தியைக் கவனியுங்கள்... இரண்டு வியாதிகளும் ஓடிவிட்டன.... பூட்டியும் குணமானார்....
மற்றோர்முறை காலராவால் அவர் தாக்கப்பட்டு கடினமான தாகத்தால் அல்லலுற்றார். டாக்டர் பிள்ளை எல்லாவித சிகிச்சைமுறைகளைக் கையாண்டும் குணமளிக்க முடியவில்லை... பின்னர் அவர் பாபாவிடம் சென்று தனது தாகத்தைத் தணித்துத் தன்னைக் குணமாக்கும் ஒரு பானத்தைப் பற்றிக் கலந்தாலோசித்தார்.. பாபா அவருக்கு, சர்க்கரை கலந்த பாலில் வேகவைக்கப்பட்ட கலவைக்கூழாகிய பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு, பிஸ்தா பருப்பு இவற்றைச் சாப்பிடுவதைத் தேர்ந்து அருளினார்...எந்த வைத்தியராலும் இது நிலைமையை மோசப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று கருதப்படும். ஆனால் பாபாவின் கட்டளைக்கு கீழ்ப்படியும் குணத்தால் இவை உட்கொள்ளப்பட்டு அதிசயப்படும் வகையில் குணமாக்கப்பட்டது...
🔥ஆலந்தி சுவாமி என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே...🔥
பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய ஒரு சாமியார் ஆலந்தியிலிருந்து சீரடிக்கு வந்தார்...தன் காதிலுள்ள கடுமையான வலியால் அவர் அல்லலுற்றார்...அது அவரைத் தூங்க விடாமல் தடை செய்தது. இதற்க்காக அவர் ரணசிகிச்சை செய்யப்பட்டார்..ஆனால் அது அவருக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை..இவ்வலி மிகவும் கடினமானதாய் இருந்தது...அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...அவர் திரும்பிச் செல்லும்போது பாபாவின் அனுமதியைப் பெற வந்தார்...அப்போது ஷாமா, ஸ்வாமிகளின் காது வலிக்கு ஏதாவது வழங்குமாறு பாபாவை வேண்டினார்.. "அல்லா அச்சா கரேகா!" எனக் கூறித் தேற்றினார்...பிறகு சுவாமிகள் புனேவுக்குத் திரும்பினார்... ஒருவாரம் கழித்து சீரடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்..அதில் தனது காதுவலி மறைந்துவிட்டது என்றும், வீக்கம் இருந்தது என்றும், அவ்வீக்கத்தைப் போக்குவதற்காக பம்பாய்க்கு, ரணசிகிச்சை செய்துகொள்ளச் சென்று இருந்ததாகவும், ஆனால் மருத்துவர்கள் காதைச் சோதித்துவிட்டு ரணசிகிச்சை தேவையில்லை எனக்கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்....பாபாவின் மொழிகளுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தது இந்த நிகழ்வின் மூலம் மேலும் உறுதியாகின்றது..
🔥காகா மஹாஜனி என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே..🔥
பாபாவின் மற்றொரு அடியவரான காகா மஹாஜனி என்பவர் ஒருமுறை வயிற்றுப் போக்கால் அவதியுற்றார்..பாபாவுக்குத் தனது சேவை தடைப்படாமல் இருக்க, ஒரு மூலையில் பானையில் தண்ணீரை வைத்துவிட்டு, பாபா கூபிடும் போதேல்லாம் செல்வார். சாயீபகவான் அனைத்தையும் அறிந்தவராயிருப்பதால், தனது வியாதியையும் அவர் சீக்கிரம் குணப்படுத்துவார் என்று எண்ணிய காகா அதைப்பற்றி எதையுமே பாபாவிடம் தெரிவிக்கவில்லை... மசூதிக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கும் தாழ்வாரத்தின் வேலை, பாபாவால் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் வேலை தொடங்கியவுடன் பாபா கொந்தளிப்புற்று பலமாகக் கூச்சலிடத் தொடங்கினார்... எல்லோரும் ஓடினார்கள். காகாவும் ஓடினார். பாபா அவரைப் பிடித்து அங்கேயே உட்கார வைத்தார்....
பின்னர் நேரிட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய நிலக்கடலைப் பையை விட்டு ஒடியிருந்தார்...பாபா கைநிறையக் கடலைப் பருப்புக்களை எடுத்து தமது கைகளால் அவற்றைத் தேய்த்து, தோலை ஊதி சுத்தமான கடலைப் பருப்புக்களை காகாவிடம் கொடுத்துச் சாப்பிடக் கூறினார்.. திட்டுவது, கடலையைச் சுத்தம் செய்வது, காகாவைச் சாப்பிடக் கூறியது அனைத்தும் சமகாலத்தில் நடைபெற்றன.... பாபா தாமே சிலவற்றைச் சாப்பிட்டார்...பையில் உள்ளவை தீர்ந்ததும், பாபா அவரைத் தாம் தாகமாய் இருப்பதால் தண்ணீர் கொணரக் கூறினார். பின்னர் பாபா சிறிது தண்ணீர் அருந்திவிட்டு, காகாவைத் தண்ணீர் குடிக்கும்படி கூறினார். பாபா அப்போது, "உனது வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. நீ இனிமேல் தாழ்வாரத்தின் வேலையைக் கவனிக்கலாம்" என்று கூறினார்...
இதற்கு இடையில் ஓடிப்போனவர்கள் எல்லாம் திரும்பிவந்தனர்.. தனது வயிற்றுப்போக்கு நின்றுபோன காகாவும் திரும்பி வந்து வேலையில் கலந்துகொண்டார். நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து,..? நிகழ்கால மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரிக்கும். அதைக் குணப்படுத்தாது...பாபாவின் மொழிகளே இவ்விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் உள்ள உண்மையான சிகிச்சையாகும் என்பதனை உணர்வதற்கான அனுபவ விளக்கம் என்று கருத வேண்டும்...
🔥ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த் என்ற ஆத்மார்த்தமான பக்தரின் அனுபவ விளக்கம் இங்கே....🔥
ஹர்தாவிலிருந்து வந்த தத்தோபந்த் என்னும் பெருந்தகை பதினான்கு ஆண்டுகளாக வயிற்றுவலியால் அல்லலுற்றார்....எவ்விதச் சிகிச்சையும் அவருக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.... பின்னர், பாபா பார்வையாலேயே வியாதியைக் குணப்படுத்துகிறார் என்ற அவரின் புகழைக் கேள்விப்பட்டு சீரடிக்கு ஓடிவந்து பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்... பாபா அவரை அன்புடன் நோக்கி ஆசீர்வாதங்கள் அளித்தார்.... பாபா தமது கரத்தை அவரது தலையின்மீது வைத்து ஆசீர்வாதத்தையும், உதியையும் அளித்தபின் அவர் குணமடைந்தார். அதற்கப்பால் இவ்வியாதியைப் பற்றி எவ்விதத் தொந்தரவும் இல்லை.....இந்த அத்தியாயத்தின் முடிவில் மூன்று நிகழ்ச்சிகள் அடிக்குறிப்பில் காணப்படுகின்றன....
(1) மாதவ்ராவ் தேஷ்பாண்டே மூல வியாதியால் அல்லலுற்றார். பாபா அவருக்கு சோனமுகியின் (சூரத்தாவாரை - மிதமான பேதி மருந்து) கஷாயத்தைத் தேர்ந்து கொடுத்தார்....இது அவரைக் குணமாக்கியது .. இரண்டு ஆண்டுகளுக்குப்
பின் இத்தொந்தரவு மீண்டும் தலையெடுத்தது.... மாதவ்ராவ் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் அதே மருந்தை உட்கொண்டார். பெருமளவிற்கு இது வியாதியை அதிகப்படுத்தியது...ஆனால் பின்னர் அது பாபாவின் அருளால் குணமாக்கப்பட்டது.....
(2) கங்காதர் பந்த் என்பவர், காகா மகாஜனியின் அண்ணன்...பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியுற்றுக் கொண்டிருந்தார் ... பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு சீரடிக்கு வந்து தன்னைக் குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார்...பாபா அவரின் வயிற்றைத் தொட்டு "கடவுள் குணமாக்குவார்" என்று கூறினார்...அது முதற்கொண்டு அவருக்கு வயிற்றுவலி ஏதுமில்லை...அவர் முழுவதுமாகக் குணமாக்கப்பட்டார்....
(3) ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கரும் கடுமையான வயிற்றுவலியால் அல்லலுற்றார்.. இரவு, பகல் முழுவதும் அவரால் இருப்புக் கொள்ள முடியவில்லை...மருத்துவர்கள் ஊசி போட்டும் பலனளிக்கவில்லை...பின்னர் அவர் பாபாவை அணுகினார்....பின்னர் அவரை பர்ஃபி என்ற இனிப்புப் பண்டத்தை நெய்யுடன் உண்ணச் சொன்னார்....இச்செயல் முறையைப் பின்பற்றியதும் அவர் முழுக்கக்குணமடைந்தார்.
பாபாவின் சொற்களும், கருணையுமே பல்வேறு வியாதிகளை நிரந்தரமாகக் குணப்படுத்திய உண்மையான மருந்தாகும் என்று இக்கதைகள் மூலம் படித்து உணர்ந்து தெளிவடைந்தோம்.
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼🙏🏼.
ஸ்ரீ சாயீயைப் பணிக....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏻🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக