ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  அருள்மொழிகள்....🙏🙏🙏

🔥🔥🔥உனது நம்பிக்கை, பொறுமையின் அளவை நான் சோதித்துக்கொண்டே இருக்கிறேன். நீ இன்னும் பக்குவப்படவில்லை...நீங்கள் குழப்பமடைவதையும், கோபப்படுவதையும்,குறை கூறுவதையும் குறைத்துக்கொள்ளும் வரை என்னால் உனக்கு ஏற்றதை செய்ய இயலாது.🔥🔥

உன் வாயிலிருந்து பிறரைப் பற்றிய அவதூறான வார்த்தைகள் வராமல் இருந்தால், எப்போதும் எனது நாமம் உனது வாயின் துதிகளாக இருந்தால் விலை ஏதும் இல்லாமல் கஷ்டத்திலிருந்து விடுதலை அடைவாய் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்....

நீங்கள் எனது குழந்தைகள், நான் உங்கள் தந்தை. என்னிடமிருந்து அனைத்தையும் நீங்கள் பெறவேண்டும்". என்னிடமிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ள முன் வந்துவிடுவீராக....

என்னிடமிருந்து பெறுவதற்கு விரதங்கள் தேவையில்லை... கடுமையான முயற்சி தேவையில்லை..பிறரிடம் ஓட வேண்டும் என்ற அவசியம் இல்லை...தனி அறையில் உட்கார்ந்தோ, நின்றோ, நடந்தோ என்னிடம் முழு மனதோடு கேட்டால் போதும்...

நீங்கள் உருகும்போது நான் தாரை தாரையாய் அழுகிறேன்.... இந்தக் கிழவனின் கன்னங்கள் ஒட்டிப் போகும் வரை உங்களுக்காக நான் விரதமிருக்கிறேன். உங்களுடைய தேவைகளுக்காக நான் ஓடியாடிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய உணர்வுகளை மதித்து, மரியாதையோடும், உனக்கு கண்ணியக் குறைவு வரக்கூடாது என்பதற்காகவும் நல்ல வழிகளை உருவாக்கிச் செய்து கொண்டிருக்கிறேன்..ஆகவே  யான் உங்களில் இருந்து செயலாற்ற வேண்டுமெனில் பூரண நம்பிக்கையையும், திடமான விசுவாசத்தையும் கடைப்பிடிப்பீராக..

ஸ்ரீசீரடி சாய்பாபா...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...