ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼
🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்..🙏🏼
🙏🏼அத்தியாயம்::ஏழு(7)
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதநூல் என்பது ஶ்ரீசாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல் ,மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சத் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்....
இவ்வாறாக நாம் அனைவரும் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்..நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக.🔥
🔥குறிப்பு...சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும். அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரிய தன்மையை அடையலாம்...வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரிய நிலையை அடையும் நிலையைப் பெறலாம்...மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம், நேர்மறை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுபெறவும் இந்த சத்சரித வேதப்பாராயணம் துணைப்புரிகின்றது....
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள் வேண்டியது கிடைக்கப்பெறும்.. சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்.... 🔥🔥
🙏அத்தியாயம்::ஏழு(7) 🙏
🙏முன்னுரை..🙏
சீரடி பகவான் எதிலும் பற்றில்லாமல் எவ்வாறு எளிமை மற்றும் சமநிலையில் ஏகத் தன்மையுடன், வாழ்ந்த விதத்தைப் பற்றிய விளக்கம்...
சத்குருநாதர் சீரடி பாபா, எவ்வாறு மிகுந்த தாய்மையுணர்வுடனும், உயரிய சிறப்பியல்புகளோடும், தன்னுடைய பக்தர்களுக்கு உபதேசம் செய்து வழி நடத்தினார் என்பதைப் பற்றிய விளக்கவுரை..
சத்குருநாதர் சீரடி பாபா, எவ்வாறு பேதமின்றி அனைவரையும் நேசித்து, தனக்குரியதை பகிர்ந்து அளித்து, தன் பக்தர்களுடைய தீராத நோயை எவ்வாறு குணப்படுத்தினார் என்பதன் விளக்கவுரை..
எங்கும் நிறைத்தன்மையும், கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக் காண்பிக்கும் அத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புரை....
ஆத்மார்த்தமான உயரிய பக்தன், பாகோஜி என்ற பெயர் கொண்ட குஷ்டரோக அடியவரின் சேவையைப் பகவான் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதைப் பற்றிய குறிப்புரை..
தாதா சாஹேப்பின் குழந்தையினுடைய பிளேக் வியாதியை பகவான் எவ்வாறு நீக்கிக் காப்பாற்றிய அற்புதத்தைப் பற்றிய அனுபவ விளக்கவுரை....
சத்குருநாதர் சீரடி பாபா, தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால், எவ்வாறு தன் பக்தனாகிய நானா சாஹேப் சாந்தோர்கருடைய சீரடிக்கு வருகைப்புரிந்து தன்னை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலைப் பூர்த்திச் செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரை...
சீரடி பாபா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்த காஷிபாய் கனிட்கர் என்ற பக்தைக்கு பகவான் அளித்த விளக்கவுரை...
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்....
🔥முதலில் சீரடி பகவான் எதிலும் பற்றில்லாமல் எவ்வாறு எளிமை மற்றும் சமநிலையில் ஏகத் தன்மையுடன், வாழ்ந்த விதத்தைப் பற்றிய விளக்கத்தை இங்கே பார்ப்போம்..🔥
சாயீபகவான் அனைத்து வித யோகப் பயிற்சிகளையும் அறிந்திருந்தார்...அவர் தவ்தி என்பது 22½ அடி நீளமும், 3 அங்குல அகலமும் உள்ள சணல்நார் அதாவது லினன் துணியினால் வயிறு சுத்தம் செய்தல், கண்ட யோகமான உடல் உறுப்புகளைத் தனியாகக் கழற்றி பின்னர் சேர்த்தல் போன்ற சமாதி உள்ளிட்ட ஆறு முறைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார்..அவரை ஒரு இந்து என்று நீங்கள் கருதுவீர்களேயானால், ஒரு யவனரைப் போன்று தோற்றமளித்தார்.... நீங்கள் அவரை ஒரு யவனர் என்று கருதுவீர்களேயானால், பகவான் எந்த மதத்தையும் சேராத மனிதராக தோற்றமளித்தார்...அவர் ஒரு இந்துவா, முகம்மதியரா என்று ஒருவரும் திட்டமாக அறிந்திருக்கவில்லை...
இந்துக்களின் விழாவான ராமநவமியை உரிய சகல மரியாதைகளுடனும் கொண்டாடி, அதேநேரத்தில் முகம்மதியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்தையும் அனுமதித்தார்... திருவிழாக்களில் குத்துச்சண்டையை ஊக்குவித்து, வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கினார். கோகுலாஷ்டமி வந்தபோது, 'கோபால்காலா' திருவிழாவை (கிருஷ்ணர் மேனியைக் கருமை நிறமாக்கும் வைபவம்) உரியமுறைப்படி செய்வித்தார்... ஈத்திருவிழாவின் போது முகம்மதியர்களைத் தங்கள் தொழுகையை (நமாஸ்) தமது மசூதியில் செய்ய அனுமதித்தார்...ஒருமுறை மொஹரம் திருவிழாவின்போது சில முகம்மதியர்கள், மசூதியில் ஒரு 'தாஸியா' அல்லது 'தாபூத்' (முஸ்லிம் ஞானியரின் பாடை உருவகம்) செய்யவும், அதைச் சிலநாட்கள் மசூதியில் வைத்திருந்து, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கவும் தீர்மானித்தனர்..நான்கு நாட்களுக்கு தாபூத்தை மசூதியில் வைத்திருக்க சாயீபாபா சம்மதித்தார்..ஐந்தாவது நாள் சிறிதளவும் தமது செயல்களுக்காக வருந்தும் தன்மையேயின்றி மசூதியில் இருந்து அதை அப்புறப்படுத்தினார்.. நீங்கள் அவரை ஒரு முகம்மதியர் என்று கூறுவீர்களானால், (இந்து மத வழக்கப்படி) காது குத்தப்படிருந்தார். நீங்கள் அவரை ஒரு இந்து என்று கருதுவீர்களானால், அவர் சுன்னத் என்ற நிகழ்வு செய்கின்ற வழக்கத்தை ஆதரித்தார்....
B.V. தேவ் எழுதிய 'பாபா ஹிந்து கி யவன்?' என்ற கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில் (பக்கம் 562) பார்க்க... நீங்கள் அவரை இந்து என்று அழைத்தால் எப்போதும் மசூதியில் வாழ்ந்தார். முகம்மதியர் என்றால் துனி என்னும் அகண்ட நெருப்பை அவர் எப்போதும் மசூதியில் வைத்திருந்தார். மற்றும் முகம்மதிய மதத்திற்கு விரோதமான பின்வரும் மூன்று பழக்கங்களையும் கொண்டிருந்தார். அதாவது திருக்கையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது, தீயில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயீபாபாவின் பாதத்தை அர்க்கிய வழிபாடு செய்தல் முதலியன எப்போதும் அங்கு அனுமதிக்கப்பட்டன. நீங்கள் அவரை முகம்மதியர் என்று நினைத்தால் பிராமண ஸ்ரேஷ்டர்களும், அக்னிஹோத்ரிகளும், தங்கள் வைதீகச் சம்பிரதாயத்தை விட்டிவிட்டு அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தனர். அவரது தேசம் முதலியவற்றை விசாரிக்கப் போனவர்கள் அவரது தரிசனத்தால், கவரப்பட்டுத் திகைத்து வாயடைத்து ஊமையானார்கள்.
எனவே அவர் ஒரு முகம்மதியரா, இந்துவா என்பது ஒருவராலும் நிச்சயமாகத் தீர்க்க இயலாததாய் இருந்தது..அகங்காரத்தையும், உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் பரமாத்மாவுடன் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, சரணாகதியடைந்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை. சாயீபாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிக்குள்ளேயும், ஜந்துக்குள்ளேயும் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. பக்கிரிகளுடன் மாமிசமும், மீனும் அவர் உண்டார். நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும், அவர் சகிப்புத்தன்மையுடன் இருந்தார்...சாயீபாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவார். முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நான் அவர் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிஷ்டத்தைப் பெற்றேன். அதிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் தன்நிகர் இல்லாதவை.
🔥 பகவான் எவ்வாறு மிகுந்த தாய்மையுணர்வுடனும், உயரிய சிறப்பியல்புகளோடும், தன்னுடைய பக்தர்களுக்கு உபதேசம் செய்து வழி நடத்தினார் என்பதைப் பற்றிய விளக்கவுரை🔥
உண்மையில் பகவான் பரிபூரண ஆனந்தமும், உணர்வும் ஆவார்...அவரின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும் போதுமான அளவிற்கு நான் விளக்க இயலாது... அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கப்படுகிறான். முக்தியில் ஆர்வமுள்ள பல சந்நியாசிகள், சாதகர்கள் மற்றும் எல்லாவித மக்களும் சாயீபாபாவிடம் வந்தனர்.... எப்போதும் அவர் நடந்தார், பேசினார், அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்....எப்போதும் தம் நாவினால், 'அல்லாஹ் மாலிக்' (இறைவனே எஜமானர்) என மொழிந்தார். அவர் விவாதத்தையோ, கலகத்தையோ விரும்பவில்லை....
அவர் சிலநேரங்களில் கடுமையாக இருப்பினும் எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தார். எப்போதும் முழு வேதாந்தத்தையும் போதித்தார். கடைசிவரை பாபா யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. அரசர்களும், ஏழைகளும் பகவான் முன் சமமாக நடத்தப்பட்டனர். அனைவருடைய ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிவார்... அதை பாபா மொழிகளால் வெளியிட்டபோது அனைவரும் வியந்தனர். சர்வ விஞ்ஞானிகளின் கருவூலம் சீரடி பாபா., எனினும் அறியாதவர்போல் நடித்தார்.. புகழை பகவான் விரும்பவில்லை இவைகளே சாயீபாபாவின் குணாதிசயங்கள்...அவர் மானிட உருவத்தில் இருப்பினும், அவரின் செய்கைகள் பகவான் கடவுளின் அவதாரமாகவே திகழ்ந்தார் என்பதைக் காட்டுகின்றது..
அனைவரும் அவரை சீரடியில் இருக்கும் உயரிய பரமாத்மா என்றே வழிப்பட்டனர்...
🔥எவ்வாறு பேதமின்றி அனைவரையும் நேசித்து, தனக்குரியதை பகிர்ந்து அளித்து, தன் பக்தர்களுடைய தீராத நோயை எவ்வாறு குணப்படுத்தினார் என்பதன் விளக்கவுரை.🔥
பகவானின் அசாதாரணப் பெருந்தன்மைக்கு ஒரு எல்லையை ஒருவராலும் காண இயலாது... அவரது புகழ் நெடுந்தூரம் பரவி, எல்லா திசைகளிலிருந்தும் யாத்ரீகர்கள் சீரடியை நோக்கித் திரண்டனர்... பாபா எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார்...அங்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்...எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தார்... சில சமயங்களில் குளித்தும், மற்றநேரங்களில் குளிக்காமலும் இருந்தார். தமது தலையில் ஒரு வெள்ளை டர்பனும்(தலைப்பாகை), இடுப்பில் சுத்தமான வேஷ்டியும், தமது உடம்பில் ஒரு சட்டையும் அணிவது வழக்கம்... ஆரம்பத்தில் இதுவே அவரது உடையாகும்.. அவர் கிராமத்தில் முதலில் வைத்தியம் செய்தார்... நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுத்தார்... அவர் எப்போதும் வெற்றிபெற்று ஹகீமைப் (வைத்தியர்) போன்று புகழடைந்தார்.
ஒரு வினோதமான விஷயத்தை இங்கு கூறலாம். ஓர் அடியவரது கண்கள் சிவந்தும், வீங்கியும் இருந்தது...சீரடியில் ஒரு வைத்தியவரும் கிடைக்கவில்லை.. மற்ற அடியவர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றனர்...அதைப்போன்ற வியாதிக்கு மற்ற டாக்டர்கள் களிம்பு, அஞ்சனம், பசும்பால், கற்பூராதி மருந்துகள் முதலியன உபயோகிப்பர். ஆனால் பாபாவின் சிகிச்சையோ முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. சிறிது பிப்பாவை (சலவை செய்பவர் குறியிடும் செங்கோட்டைக் காயின் பசை) கைகளால் இரண்டு உருண்டைசெய்து, நோயாளியின் ஒவ்வொரு கண்களிலும் அவ்வுருண்டையைத் திணித்துவிட்டு துணியால் கண்களைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார்... மறுநாள் கட்டு அவிழ்க்கப்பட்டுத் தண்ணீரால் சுத்தப்படுத்தப்படது... எரிச்சல் மறைந்து கண்மணி வெண்மையாய் சுத்தமாகிவிட்டது.... கண்கள் நுண்ணிய உறுப்பான போதும் செங்கோட்டை பசை அவற்றுக்கு எவ்விதத் தீங்கையும் அளிக்கவில்லை. இம்மாதிரிப் பல வியாதிகளைக் குறிப்பிடலாம்..ஆனால் இந்நிகழ்ச்சியே குறிப்பில் உள்ளது... பகவானுடைய வழிமுறைகள் எளிமையாக இருப்பினும் ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்ட ஆழமான சூட்சமங்களை உள்ளடக்கியது..
🔥பகவானின் தனித்தன்மை வாய்ந்த யோகப் பயிற்சிகளும், அதனை பகவான் கையாண்ட விதத்தைப் பற்றிய குறிப்புரை...🔥
பாபா யோகத்தின் எல்லாப் பயிற்சிமுறைகளையும் அறிவார்.. அவைகளில் இரண்டை இங்கே குறிப்பிடுவோம்...
தவ்தி அல்லது சுத்த விருத்தி என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம்...சில நேரங்களில் பாபா யாரும் தன்னை பார்க்காத நேரத்தில் , மசூதியிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச் சென்று தமது வாயைக்கழுவிக் குளிப்பார்... ஒரு சந்தர்ப்பத்தில் தமது குடல், கும்பி முதலியவற்றை அவர் வாந்தியெடுத்து, அவைகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து பக்கத்திலுள்ள நாவல் மரத்தில் உலர்வதற்காக வைத்தது கவனிக்கப்பட்டது... இதனைப் பார்த்தவர்கள் சீரடியில் உள்ளனர். அவர்கள் இவ்வுண்மையைச் சோதனை செய்து பார்த்துவிட்டனர்....
3 அங்குல அகலமும், 22½ அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியால் தவ்தி செய்யப்படுகிறது...இது தொண்டைக்குள் விழுங்கபட்டு ஏறக்குறைய அரைமணி நேரத்திற்கு வயிற்றுக்குள்ளேயே கிரியைகள் நடத்த வைத்திருக்கப்பட்டுப் பிறகு வெளியே எடுக்கப்படுவதே சாதாரண தவ்தியாகும்... ஆனால் பாபாவின் தவ்தியோ மிகவும் தனிச்சிறப்பானதும், அசாதாரணமானதும் ஆகும்....
கண்டயோகம்... பாபா, தமது உடம்பிலிருந்து வெவ்வேறு உறுப்புக்களைப் பிய்த்தெடுத்து, மசூதியில் அவற்றைப் பல இடங்களிலும் தனியாக வைத்திருத்தார். ஒருமுறை, ஒரு பெருந்தகை மசூதிக்குச் சென்று பாபாவின் உடல் உறுப்புக்கள் தனித்தனியாக மசூதியின் பல இடங்களிலும் கிடப்பதைக் கண்டார். அவர் மிகவும் பீதியடைந்து, முதலில் கிராம அதிகாரிகளிடம் சென்று, பாபா கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை அறிவிக்க எண்ணினார்... அவரே முதல் தகவல் தந்தவராகி விடுவராதலாலும், அவ்விஷயத்தைப் பற்றி சிறிது அறிந்து இருந்தாலும், அவர்மீது பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என எண்ணி யாரிடமும் ஏதுமே பேசாமல் இருந்துவிட்டார். ஆனால் மசூதிக்குச் சென்றபோது, பாபா தேக ஆரோக்கியத்துடன் முன்போலவே இருப்பதைக் கண்டு மிகவும் அதிசயம் அடைந்தார்... தான் முதல்நாள் பார்த்தது வெறும் கனவு என்றே அவர் எண்ணினார்.
பாபா தமது சிசுப் பருவத்தில் இருந்தே யோகம் பயின்றார்.பாபா பெற்றுள்ள திறமையை ஒருவரும் அறிந்திருக்கவில்லை அன்றி ஊகிக்கவும் இல்லை...தமது சிகிச்சைகளுக்கு எவ்வித பணமும் அவர் வசூலிக்கவில்லை. தமது தகைமைகளின் திறத்தின் பயனால் புகழ்பெற்றுப் பெருமையுற்றார். பல ஏழைகளுக்கும், துன்பப்படும் மக்களுக்கும் அவர் ஆரோக்கியம் அளித்தார்... வைத்தியர்களில் எல்லாம் தலைசிறந்த புகழ்பெற்ற வைத்தியரான அவர் தமது தேவைகளை லட்சியம் செய்யவில்லை. மற்றவர்களின் நன்மைக்கும், சௌகரியத்திற்குமே எப்போதும் உழைத்தார். தாங்கமுடியாத பயங்கர வலிகளை எல்லாம் தாமே பலமுறை, இம்முறைகளில் தாங்கித் துயருற்றிருக்கிறார்..பகவான் தன் பக்தர்களுக்காக எதையும் ஏற்றுக்கொண்டு துயரத்திலிருந்து மீட்டார்...
🔥எங்கும் நிறைத்தன்மையும், கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக் காண்பிக்கும் அத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புரையை இங்கே காண்போம்..🔥
1910..ஆம் ஆண்டில் தீபாவளி விடுமுறையின் போது, பாபா துனிக்கருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.... பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த துனியில் விறகை நுழைத்தார்.. சிறிது நேரத்திற்குப்பின் விறகுகளை நுழைப்பதற்குப் பதில், பாபா தமது கரத்தையே துனி உள்ளே நுழைத்துவிட்டார்... கரம் உடனே கருகி வெந்துவிட்டது....இதனை ஆத்மார்த்தமான உயரியப் பக்தர் மாதவ்ராவ் தேஷ்பாண்டே உடனே கவனித்தார்... உடனே அவர்கள் பாபாவிடம் ஓடினார்கள்.. மாதவ்ராவ் தனது கைகளை பாபாவின் இடுப்பில் கொடுத்துச் சேர்த்து, வலிந்து பின்னால் இழுத்து, "தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர்" என்று கேட்டார்...பின்னர் பாபா தம் உணர்வுவந்து பதில் அளித்தார்.. "தொலை தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில், ஒரு கொல்லனின் மனைவி உலைக்களத்தில் இருந்த துருத்தியில் வேலை செய்துக் கொண்டிருந்தாள்...அப்போது அவளது கணவன், அவளைக் கூப்பிட்டான்..அவள் தனது இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவசரமாக ஓடினாள்...அதனால் ஊதுஉலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்துவிட்டது. நான் உடனே உலைக்களத்தில் கையைவிட்டு குழந்தையைக் காப்பாற்றினேன்....எனது கரங்கள் வெந்துப் போனதைப் பற்றி, நான் பொருட்படுத்தவில்லை...குழந்தையின் உயிர் காக்கப்பட்டதை எண்ணி நான் மகிழ்வடைகிறேன்."...என்று கூறினார் பகவான்...
🔥ஆத்மார்த்தமான உயரிய பக்தன், பாகோஜி என்ற பெயர் கொண்ட குஷ்டரோக அடியவரின் சேவையைப் பகவான் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதைப் பற்றிய அனுபவ சூட்சம உரையை இங்கே காண்போம்....🔥
மாதவ்ராவ் தேஷ்பாண்டேயிடமிருந்து, பாபாவின் கரங்கள் வெந்துபோனதைக் கேள்விப்பட்ட நானா சாஹேப் சாந்தோர்கர், பம்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டரான பரமானந்த் என்பவரை ஆயின்மென்ட், லிண்ட் துணி, பாண்டேஜ் துணி உட்பட மருத்துவச் சாமான்களுடன் அழைத்துவந்து, பாபாவின் கரத்தைப் பரிசோதிக்கவும், வெந்ததினால் ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை செய்யவும் வேண்டிக்கொண்டார். ஆனால் பாபாவினால் இது மறுக்கப்பட்டது...அது முதற்கொண்டு பாகோஜி ஷிண்டே என்ற குஷ்டரோகி அடியவரால், பாபாவுக்குச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது....வெந்துபோன இடத்தை நெய்போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு இலையை அதன்மீது வைத்துக் கட்டிவிடுவது அவரது சிகிச்சையாகும்...நானா சாஹேப் பலமுறை பாபாவிடம் அந்தக்கட்டை நீக்கிவிட்டு, டாக்டர் பரமானந்தை காயத்தைச் சோதிக்கவும், சிகிச்சை செய்யவும், குணப்படுத்தவும் (அது விரைவில் குணப்படும் என்ற எண்ணத்துடன்) கேட்டுக்கொண்டார்...மருத்துவர் பரமானந்தும் அதைப்போல் பலமுறை வேண்டுகோள் விடுத்தார்...ஆனால் அல்லாவே அவரது மருத்துவர் என்றுகூறி பாபா மறுத்துவிட்டார். ....
தனது கையைச் சோதிக்க யாரையும் அனுமதிக்கவேயில்லை...மருத்துவர் பரமானந்தின் மருந்துகள் சீரடியில் உபயோகப்படுத்தப் படவில்லை...இருப்பினும் டாக்டருக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறும்படியான நல்லதிஷ்டம் இருந்தது... தினந்தோறும் பாகோஜி, அவர் கரத்திற்குச் சிகிச்சை செய்யஅனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப்பின் பாபாவின் கரம் குணப்படுத்தப்பட்டது...அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்...ஏதோ இலேசான வலி இன்னும் இருந்திருக்குமோ இல்லையோ என்பதை நாம் அறியோம்...தினந்தோறும் பாகோஜி கட்டுக்களைத் தளர்த்தி, நெய்யினால் அதை நன்றாக மீண்டும் தேய்த்து, அழுத்திக் கட்டுப்போடுவார். இது சாயிபாபாவின் மகாசமாதிவரை நடைபெற்றது...
பகவான் அனைத்தையும் கடந்தவர் என்பதால் இந்த சிகிச்சை உண்மையில் அவருக்குத் தேவையிருக்கவில்லை...ஆனால் தமது அடியவர் மீதுள்ள அன்பின் காரணத்தால் பாகோஜியினது உபாசனையை (சேவையை) முழுவதுமாகத் தடையின்றி நடத்த அனுமதித்தார்...பாபா லெண்டித் தோட்டத்திற்க்குப் புறப்பட்டபோது பாகோஜி அவருக்குக் குடைபிடித்து அவருடன் கூடச் சென்றார். துனிக்கருகில் உள்ள கம்பத்தருகில் பாபா அமர்ந்ததும் பாகோஜி தனது சேவையை ஆரம்பித்தார்...பாகோஜி முந்தைய ஜென்மத்தில் தீவினையின் காரணமாக குஷ்டரோகத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்...அவரது கைகள் சுருங்கியிருந்தன...அவர் உடம்பு முழுவதும் சீழாகி, மோசமாக, நாற்றம் அடித்தது.... வெளியில் அவர் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதைப்போல் தோன்றினாலும், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், மகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார்...ஏனெனில் அவரே பாபாவின் முதன்மையான சேவகர்.... பாபாவின் அருகில் அமரும் பெரும் பேற்றை அடையக்கூடிய வாய்ப்பைப் பெற்றார் பாகோஜி....
🔥தாதா சாஹேப்பின் குழந்தையினுடைய பிளேக் வியாதியை பகவான் எவ்வாறு நீக்கிக் காப்பாற்றிய அற்புதத்தைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥
பாபாவின் மற்றொரு வியத்தகு லீலையை இப்போது கூறுகிறேன். அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி சீரடியில் தன் இளம் புதல்வனுடன் சிலநாட்கள் தங்கியிருந்தாள். அப்போது அவளது புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது... தாயார் பயந்துபோய் மிகவும் மனவேதனை அடைந்தாள்...பின்பு அமராவதிக்குச் செல்ல நினைத்து, பாபா வழக்கமாக மாலையில் சுற்றுவரும்போது, வாதாவுக்கு (சமாதி மந்திர்) அருகில் வந்து கொண்டிருக்கையில் அவரது அனுமதியைப் பெறுவதற்காகப் பக்கத்தில் சென்று நடுங்கும் குரலில் தனது இளம் புத்திரன் பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தாள்...பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது, அவைகள் உருகி ஓடிவிடும். எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார். இவ்வாறு கூறிக்கொண்டே தமது கஃப்னி உடையை இடுப்புவரை தூக்கி அங்கு பிரசன்னமாயிருந்த அனைவருக்கும் நன்றாகப் பெரிதாக முட்டை அளவிற்குத் தோன்றியிருந்த பிளேக் கட்டிகளைக் காண்பித்து, "பாருங்கள், எனது அடியவர்களுக்காக நான் எங்கனம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார்.....
இந்தச் சிறப்பான அசாதாரணச் செயலை (லீலை) மக்கள் கண்ணுற்று, ஞானிகள் தங்கள் அடியவர்களின் துன்பங்களைத் தாங்குகிறார்கள் என்று உறுதியடைந்தனர். ஞானிகளின் உள்ளமோ மெழுகை விட மிருதுவானது. உள்ளும், புறமும் அது வெண்ணெயைப் போன்று மிருதுவாக இருக்கிறது. எவ்வித இலாபம் பெரும் நோக்கமின்றியே அவர்கள் தங்கள் அடியவர்களை நேசிக்கிறார்கள்..பாபாவை தன்னுடைய உண்மை உறவினராகக் கருதி அன்பு செய்தனர்...
🔥சத்குருநாதர் சீரடி பாபா, தன்னுடைய எங்கும் நிறைந்த பேரறிவால், எவ்வாறு தன் பக்தனாகிய நானா சாஹேப் சாந்தோர்கருடைய சீரடிக்கு வருகைப்புரிந்து தன்னை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலைப் பூர்த்திச் செய்தார் என்பதைப் பற்றிய அனுபவ உரையை இங்கே காண்போம்...🔥
கான்தேஷில் உள்ள நந்துர்பாரின் மம்லதார் என்பவர் நானா சாஹேப் சாந்தோர்கர்...இவர் பாபாவின் பெரும் அடியவர் ஆவார். அவருக்குப் பண்டரீபுரத்துக்கு மாற்றலாகும் உத்தரவு வந்தது...சாயீ பாபாவிடம் அவர் கொண்டுள்ள பக்தி எல்லையில்லாதது.. ஏனெனில், அவருக்குப் 'பூலோக வைகுண்டம்' என்றழைக்கப்படும் பண்டரீபுரத்துக்குச் செல்ல உத்தரவு கிடைத்திருக்கிறது... நானா சாஹேப் அவசரமாக வேலையை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால், அவர் அவ்விடத்திற்கு உடனே ஒருவருக்கும் தெரிவிக்காமலும், எழுதாமலும் புறப்பட்டார்... அவர் தனது பண்டரீபுரமான சீரடிக்கு, ஒரு திடீர் விஜயம் செய்ய விரும்பினார்...தமது விட்டோபா என்று பாவித்த சாயிபாவைப் பார்த்து வணக்கம் தெரிவித்தப் பின்னர் புறப்பட எண்ணினார்.. ஒருவரும் நானா சாஹேப் சீரடிக்குச் செல்வார் என்று கனவு கூடக் காணவில்லை....ஆனால் சாயிபாபா இது அனைத்தையும் அறிவார். ஏனெனில் அவர் கண்கள் எங்கும் வியாபித்திருந்தன. (சர்வாந்தர்யாமி)
சீரடியிலிருந்து சில மைல்கள் உள்ள நீம்காவனை நானா சாஹேப் அடைந்தபோது, சீரடியில் மசூதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.. பாபா அமர்ந்துக் கொண்டு மகல்சாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று, "நாம் நால்வரும் பஜனை செய்வோம்... பண்டாரீபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன...நாம் மகிழ்ச்சியாய்ப் பாடுவோம்" என்றார் பகவான்..
அப்போது கோஷ்டியாக அவர்கள் பாடத் தொடங்கினர்..அதன் பல்லவி கீழே.....
"நான் பண்டரீபுதத்துக்குப் போகவேண்டும்..!
அங்கே தங்க வேண்டும்..!
ஏனெனில் அதுவே என் பரமாத்மாவின் வீடு..!".
என்று பாபா பாடினார்...அடியவர்களும் அவரைத் தொடர்ந்து பாடினர்...சிறிது நேரத்தில் நானா சாஹேப் தனது குடும்பத்துடன் வந்து பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவரைத் தங்களுடன் தங்கும்படியும் வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுகோள் பாபாவுக்குத் தேவையாய் இருக்கவில்லை..... ஏனெனில் மற்ற அடியவர்கள் நானா சாஹேபிடம், பாபா ஏற்கனவே பண்டரீபுரத்திற்குப் போவதற்கும், அங்கு தங்குவதற்குமான ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு நானா சாஹேப் உணர்ச்சிவசப்பட்டார்...பாபாவின் காலடியில் வீழ்ந்தார்..பிறகு பாபாவின் அனுமதி, உதி மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, நானா சாஹேப் பண்டரீபுரத்துக்குப் புறப்பட்டார்.....
பாபாவின் கதைகளுக்கு ஒரு முடிவில்லை. ஆனால் இங்கு நிறுத்தி, அடுத்த அத்தியாயத்தில் மானிட வாழ்க்கையின் முக்கியத்துவம், பாபாவின் இறந்து வாழும் வாழ்க்கை, பாயஜாபாயின் சேவை மற்றும் பலகதைகளையும் கூறுகிறேன்...பாபாவின் நெருங்கிய பக்தரும், அவருடன் எப்போதும் மசூதியிலும், சாவடியிலும் படுத்து உறங்கியவருமான மகல்சாபதி, பாபா தம்மிடம் ஒருமுறை தாம் 'பாத்ரி'யைச் சேர்ந்த பிராமணர் என்றும், பிறந்தபோதே (முஸ்லிம்) ஃபக்கீர் ஒருவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்...இந்த உரையாடல் நிகழ்ந்த சமயம் பாத்திரியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்ததையும் அவர்களிடம், பாபா அங்கு வசிப்பவர்களைப்பற்றி விசாரித்ததையும் தெரிவித்திருக்கிறார். (சாயிலீலா சஞ்சிகை - வருடம் 1924, பக்கம் 179)
திருமதி. காஷிபாய் கனிட்கர், புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற கற்றறிந்த பெண்மணி ஆவார். இவர் தம்முடைய அனுபவமாக கூறியவை... சாயீலீலா சஞ்சிகையில் (வருடம் 1934, தொகுப்பு 2, பக்கம் 79) பதிக்கப்பட்டிருக்கிறது....
🔥சீரடி பாபா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்த காஷிபாய் கனிட்கர் என்ற பக்தைக்கு பகவான் அளித்த விளக்கம் பின்வருமாறு...🔥
பாபாவின் அற்புதங்களைக் கேள்விப்பட்ட பிறகு எங்களுடைய பிரம்மசமாஜ நம்பிக்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்ப பாபா மாயவேலை செய்யும் முகம்மதியரா அல்லது இந்து சித்தரா..! என்று விவாதித்துக் கொண்டிருந்தோம்....
பின்பு ஒருமறை சீரடி செல்லும்போது இதைப்பற்றிய எண்ணம் என் மனதில் சுழன்றுகொண்டிருந்தது. ஆனால் மசூதியின் படிகளை நான் நெருங்கியபோது, பாபா வெளியேவந்து என்னை உற்றுநோக்கி, சற்றே கடுமையான குரலில் தனது நெஞ்சை சுட்டிக்காட்டி, "நான் ஒரு பிராமணன்... தூய பிராமணன்...எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை....அது மாதிரியான சித்து வேலைசெய்யும் எந்த முகம்மதியனும் இங்கு நுழையத் துணிய முடியாது" என்றார் பாபா..மீண்டும் தன்னைச் சுட்டிக்காட்டி, "இந்த பிராமணர் இலட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளிநிறைந்த பாதைக்கு இழுத்து, அவர்களின் இலட்சியத்தை அடைய இட்டுச்செல்வார்...இது பிராமண மசூதி. இங்கு மாயவேலை செய்யும் எந்த முகம்மதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்" என்றார்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🏼🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்....🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
ஓம் சாய் நாதாய நமக
பதிலளிநீக்கு