ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய் பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகளும் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும்.🙏🏼.
🔥🔥பரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான்...ஆனால் இறைவனின் அருள் ஒன்றே அவனை சாயீயின் பாதங்களுக்கு கொண்டுவருகிறது...ஆகையால் கிடைத்ததற்கரிய பொக்கிஷமான இந்த சாய் அன்னையை குருவாக ஏற்றுக் கொண்டு, ஆன்மீக வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவோமாக...🔥🔥
சாயீயினுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்துகொள்ள முடியாதவை ; அவற்றைப் பற்றிய பூரணமான ஞானத்தை அடையவே முடியாது ! ஸாயீ லீலைகளின் ஒரு பகுதியையாவது அறிந்து கொள்ள முடிந்த மனிதன் மஹாபாக்கியசாலி..கோடிப் புண்ணியம் செய்தும், மஹா பாக்கியங்களாலும் இம்மனிதப்பிறவி கிடைத்திருக்கிறது...ஆகவே, இந்த நல்வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி பாபாவின் பாதங்களை இறுகப்பற்றிக் கொள்ளவேண்டும் நாம் அனைவரும்..பகீரதப் பிரயத்தனம் (கடுமையான தவம் ) செய்தாலும் மனிதப்பிறவியை அடையமுடியாது..அது விதி வசமாக கிடைக்கும் அதிர்ஷ்டமே !ஆகையால் இந்த மனிதப் பிறவியை வீணாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடாமல், பிறவி எடுத்ததன் பெரும்பலனை அடையக் காரணமாக இருக்கின்ற குருவின் கரங்களில் நாம், நம்மை ஆத்மார்த்தமாக ஒப்படைக்க வேண்டும்....
மனிதவாழ்வில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் பாபாவின் பக்தியில் முற்றிலும் மூழ்குங்கள் ! அசையாத நம்பிக்கை, திடமான விசுவாசம், உறுதியான பக்தி இந்த மூன்றினால் மட்டுமே சாயீயின் பரிபூரண அனுபவம் கிட்டும், கேட்காமலேயே கிட்டும்... இதனோடு சேர்ந்து வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்..சாயீன் பக்தனாக நாம் இருப்பது என்பது ,பக்தனின் வாழ்வில் கிடைக்கும் ஒரு அற்புதம் !..ஆகையினால் குருவோடு நம்மை இணைத்துக் கொண்டால், அவரின் பேராற்றலை உணர முடியும் பின்னாட்களில் அன்பர்களே.
ஆகையால் சாய் பகவான் காட்டிய சத்தியப் பாதையில் பயணித்து, சாயீன் அருள்மோழிகளை ஆத்ம உணவாக ஏற்றுப் பாவித்து, அதனை சத்சங்கமாக பாராயணம் செய்து, ,சத்சரிதத்தில் இருக்கின்ற வாழ்வியல் நெறிமுறைகளைக் படித்துக் கடைப்பிடித்து, அதனை வாழ்க்கையில் நாம் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்..மேலும் பகவான் கூறிய தாரக மந்திரமான பொருமை மற்றும் நேர்மையைக் கடைப்படித்து தன்னப்பிக்கையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்..,நாம் அனைவரும் குருவிடம் ஒளிவு மறைவின்றி நம்மை ஒப்படைத்து, சிறு குழந்தையாக நம்மை பாவித்து அவரின் கருணைப் பார்வைக்காகவும் பேரன்புக்காகவும்,நான் என்கின்ற அகந்தையின்றி காத்திருக்கப் பழக வேண்டும்.....
இவ்வாறாக நாம் நம்மை குருவோடு பிணைத்துக் கொண்டு, நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தோமேயானால், குருவானவர் நம்மை பலர் போற்றும் அளவிற்கு உயர்ந்த நிலையை அடையச் செய்து பிறவி எடுத்தப் பலனையும் ஒரு சேரப் பெறச் செய்வது என்பது திண்ணம்.....ஆகையினால் குருவின் நாமத்தை உச்சரித்து, குருவைப் பணிந்து, குருவின் அருள்மொழிகளை வாசித்து குரு சேவையாற்றுவோம்......
ஓம் ஶ்ரீ சாய்ராம்.... 🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புண்வு தியான பீடம்.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக