ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, மே 09, 2021

🔥🔥தீவிர நம்பிக்கை கொண்டு சீரடி சாய் பகவானை அணுகினால், தானே இறைவன் என்று பகவானே தன்னை வெளிப்படுத்துவார் என்பதற்கான அனுபவ விளக்கம்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய  நமஹ...🙏🏼🙏🏼🙏🏼

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....

🔥🔥தீவிர நம்பிக்கை கொண்டு சீரடி சாய்   பகவானை அணுகினால், தானே இறைவன் என்று  பகவானே தன்னை  வெளிப்படுத்துவார் என்பதற்கான  அனுபவ விளக்கம்...🔥🔥

சீரடிபகவான்  மும்மூர்த்திகளின் அவதாரம்.... இதை உணர்ந்தவன் மிகப்பெரும் பாக்கியவான்  என்பதை உணர்ந்து வழிபடுவீராக....

சீரடி மாஜே  பண்டரீபுரா , சாயி பாபா ரமாவர ', அதாவது, சீரடியே எனது பண்டரிபுரம், சாயிபாபாவே விட்டல்' என்ற பொருள்கொண்ட, ஆரத்தி பாடல் தினமும் சாயி பாபாவின் ஆரத்தி பாடல் தினமும் சாயிபாபாவின் பூஜையில் பாடப்பட்டு வருகிறது. இதை இயற்றியவர் தாஸ்கணு. பம்பாய் மாகாணம் முழுவதும் சாயியின் பெயர் விரைவாகப் பரவ தாஸ்கணுவின் முயற்சிகளே முக்கிய காரணம். பாபாவே விட்டல்  என்று ஆரத்தி பாடினாலும், கடைசிவரை அவர் பாபாவை தெய்வமே என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. பாபாவிடமும் அவருடைய சக்திகள் மீதும் அவருக்கு பெரும்  மதிப்பு இருந்தும், தமது கவித்திறனைக் கொண்டு பாபாவை 'ரமாவர' அதாவது ஸ்ரீ விஷ்ணுவே, எனப் போற்றி ஒரு பாட்டு இயற்றிய போதும், அவரால் தமது குரு தேவராக ஏற்க முடியவில்லை. உதட்டளவு துதியே செய்ய முடிந்தது. ஆகவே தான், பாபாவை சந்தித்த நீண்ட காலத்திற்குப் பின்னும் உபதேசம் பெரும் நோக்கத்துடன் இஸ்லாம்பூர்கர்  என்ற பிராம்மண குரு ஒருவரை அவர் நாடிச் சென்றார். ( தாஸ்கணு இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை). தாஸ்கணுவின் நலனுக்காக பாபாவின் வியக்கத்தக்க உதவி கிட்டியும், பாபா கடவுள் என்ற அபிப்பிராயம் அவருக்கு ஏற்படவில்லை. பாபா அவருக்கு செய்ததை விட மிகக் குறைந்த அளவு பலன் பெற்றவர்கள் கூட பாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெற்றனர்...தாஸ்கணுவுக்கு பாபா மிகச் சிறந்த நலன்களை அளித்தார்.. ஆனால் துரதிருஷ்டவசமாக  ( பாபாவை அணுகும் பல பக்தர்களின் விஷயங்களிலும் நாம் காண்பது போல் ) பாபா இறைவனே என்று உணர முடியாமல் போயிற்று. நம்மில் பலரும் சாயி சாயி என்று பாபா நாமம் சொல்லி வந்தாலும், வீட்டில் பாபா படமும் சிலையும் வைத்திருந்தாலும், பாபாவை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைப்பதில்லை. ஆனால் தீவிர நம்பிக்கை கொண்டு பாபாவை அணுகினால், தானே இறைவன் என்று பாபாவே வெளிப்படுத்துவார்.

பாபா மும்மூர்த்திகளின் அவதாரம். இதை உணர்ந்தவன் மிகப்பெரும் பாக்கியவான் ."
மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...