ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, மே 09, 2021

🔥🔥சாய் பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம்....சத்சரித்திரம் என்கின்ற தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயீயின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின்  சாய்சரித்திர  அருள்மொழிகள்  மற்றும்  சுய  விழிப்புணர்வு போதனைகள்....🙏🙏🙏

🔥🔥சாய் பக்தர்கள் அனைவருக்கும்  ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம்..சத்சரித்திரம் என்கின்ற  தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயீயின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல..பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே....🔥🔥

பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை... உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும்  வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே...இதில் சந்தேகமே வேண்டாம்... இதனை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்...கோவிலில் தான் பாபா இருக்கின்றார் என்பது மனித கணக்கு....சூட்சம சரீரத்தில் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்பது நிதர்சனமான  சத்திய உண்மை...

ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பகவான்  கூறியுள்ளார் சத்சரிதத்தில்... ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார்.... அது எவ்வாறு எப்படி நடத்துவார் என்பதெல்லாம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. ரிஷி மூலம் நதி மூலம் ஆராயக் கூடாது..நாம் நம்மின் பண்புகளை ஆராய்ந்து, நாம் குருவழிப் பாதையைப் பின்பற்றுகின்றோமா என்பதில் தெளிவு இருந்தால் போதுமானது...

எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள்...இது போன்ற பக்தர்களிடம் எப்பொழுதும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார்..பட்டினியாய் இருப்பதை ( விரதம் ) இருப்பதை பாபா ஒருபோதும் அங்கிகரிக்கவில்லை...நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே... பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார். 

சகல ஜீவராசிகளும் நானே எனவும், யாரெல்லாம் பேதம் பாராமல் அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றீர்களோ , அவர்களை யான் இதயத்தில் வைத்து உயிராய் ஆசி வழங்குவேன்  என உறுதியளித்துள்ளார்.. ஏனென்றால் சகலத்திலும் யானே வியாபித்து இருக்கின்றேன் என்று அறிவுருத்துகின்றிர்... பிறரைப் பற்றி குறைக் கூறிக் கொண்டே இருப்பவர்கள்  என்னையே காயப்படுத்துகின்றான்...பிறருக்கு நிந்தனை செய்பவர்கள்  எம்மையே நிந்திக்கின்றார்கள்... பிறருக்கு வஞ்சனை செய்பவர்கள் என்னையே வஞ்சிக்கின்றார்கள்....பிறர் குறைகளை வெளிப்படையாகப் பேசி, மற்றவர்களை கூனிக் குருக வைப்பவன் எம்மையே வேதனைக்கு உள்ளாக்குகின்றான்....

பிறரை எள்ளி நகையாடுபவர்கள் எம்மையே காயப்படுத்துகின்றீர்கள்...ஏழை எளியவரின் நிலையைக் கண்டு இகழ்வது எம்மை புறக்கணித்தல் போலாகின்றது...ஆகவே அனைவரையும் சமமாக நேசித்து ஏற்றத்தாழ்வு பாராமல் ஏற்றுக்கொண்டு, முடிந்தளவு  சத்தியப் பாதைகளைக் கடைப்பிடித்து, நேர்மையுடனும்,  உண்மையுடனும்  நடந்து, ஆத்மார்த்தமாக நிலையான பக்தி செய்து, எம்மிடம் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி ஒப்படைத்து வழிப்பட்டீர்களேயானால் யான் என்றென்றும் சேவகனாக இருப்பேன் எனது குழந்தைகளே.....எதற்கும் கலங்க வேண்டாம்...யாமிருக்கப் பயம் ஏன்.....

ஓம்  ஶ்ரீ  சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...