ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻
🔥எமது குழந்தைகளே..உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் சாத்தியமில்லாதது கூட சாத்தியமாகும்!’ என்பதனை உணர்வீர்களாக.🔥
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் சீரடி சாயிபாபா.... தன்னுடைய சாந்நித்தியத்தை சீரடி எனும் கிராமத்தில் இருந்துகொண்டு, உலகம் முழுவதும் தன் சூட்சம பேராற்றலை படரவிட்டு வியாபிக்கச் செய்தவர் சாய் பகவான் என்று பக்தர்கள் போற்றுகின்றார்கள்...பாபா எனும் அற்புதமான மனிதரின் பேரன்பும், அவரின் சூட்சம அருளாடல்களும் , அவரின் ஆசிர்வாதத்தில் உள்ள தீர்க்கமும் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஈர்த்து அனைவரையும் கொண்டாட வைத்தது...உலகை உய்விக்க வந்த மகான்களில் மிகச்சிறந்து விளங்குபவர் சாய்பகவான்.. எண்ணுகின்ற கணத்தில் தீர்க்க தரிசனமாக..பிரசன்னமாக கணம் நேரம் தவறாமல் தோன்றுபவர் சாய்நாதர் என்று பக்தர்கள் கொண்டாடி பூஜை செய்து, குருவாக சீரடி சாயீ பகவானை ஏற்றுக் கொள்கின்றனர்....
சீரடி எனும் புனித நகரத்துக்குச் சென்று அங்கே பாபாவின் திருவடி பட்ட பூமியை, ஆஸ்ரமத்தை, ஆலயத்தை வணங்கி வருகிறார்கள்...சீரடி எனும் புனித பூமியில் இருந்து பிடி மண்ணெடுத்து வந்து, இந்தியாவில் பல ஊர்களில் பாபாவுக்கு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளது...அந்தக் கோயில்களிலெல்லாம் பாபாவின் சாந்நித்தியத்தை உணர்ந்து வேண்டிக் கொள்கின்றார்கள் பக்தர்கள்..பாபாவின் சக்தியால், தங்களின் குறைகளும் கவலைகளும் நிவர்த்தியாகின்றன என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்...பாபா தன் பக்தர்களிடம் சொன்ன அருளுரைகள் ஏராளம்..‘நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை... இந்த நம்பிக்கையில் தான் ஒருவருக்கொருவர் அன்பாக நடந்து கொள்கின்றோம்.. அதே கடவுளிடம் வைக்கிற போது பக்தியாகச் சொல்லப்படுகிறது...
உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையைத் தான் தன்னம்பிக்கை என்று சொல்லுகிறோம்.. வாழ்வில்நம்பிக்கை என்பது மிக மிக அவசியம்... நம்பிக்கையை ஒருபோதும் புறந்தள்ளிவிடாதீர்கள். உங்கள் மனதில் இருந்து நம்பிக்கையை அகற்றிவிடாதீர்கள். இந்த நம்பிக்கைதான் உங்களை உயர்த்தும். ...வாழ்வில் உங்களுக்குத் தேவையானது அனைத்தும் வழங்கும்...எனவே, நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நம்பிக்கை வலுவாக இருந்துவிட்டால், இங்கே சாத்தியமில்லாதது கூட உங்களுக்குச் சாத்தியமாகும்....உங்கள் நம்பிக்கை அனைத்தும் உங்களுக்குப் பலனாகக் கிடைக்கும் என்பது உறுதி...நம்பிக்கையை வலுவாக்கிக் கொண்டேஇருங்கள்...
அனைத்தையும் நான் நடத்தித் தருவேன் என சாய் பகவான் அருளியுள்ளார்...ஆகவே குருவை விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டு ஆத்மார்த்தமாக பூஜை செய்யுங்கள்...அவர் கற்பக விருக்ஷமாவார்...கேட்டதை அருளக் கூடியவர்...ஆனால் அதனை ஏற்றுக் கொள்பவர்களாக நாம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக