ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏
🔥🔥எறும்பின் காலில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கூட துல்லியமாகக் கேட்கிற காதுள்ள அவர், உங்கள் கூப்பிடுதலைக் கேட்கமாட்டாரா என்ன.? பொறுமை, நம்பிக்கை, விவேகம், விசுவாசம் மற்றும் வைராக்கியத்தோடு செயல்படுங்கள்...🔥🔥
ஒவ்வொரு சாயீ பக்தரும் தனது எண்ணம், செயல் மீது பாபாவைச் சார்ந்தே நம்பிக்கை வைக்கின்றார்கள்... எதைச் செய்தாலும் இதை பகவானே செய்கின்றார் என நம்புகின்றார்கள், எதை சிந்தித்தாலும் பாபா சிந்திக்க வைக்கிறார் என்றே எண்ணமிடுகின்றார்கள்... அதே சமயம், சிறிது யோசிக்கவும் வேண்டும்...பாபாவின் பெயரால் தொழில் ஆரம்பிக்கலாம், கச்சேரி நடத்தலாம் என முன் பின் தெரியாதவர்கள், அல்லது புதியதாக அறிமுகமான நபர்கள் கூறினால் எச்சரிக்கையாக இருங்கள் சாய் அன்பர்களே....நம்முடைய ஆசையினால் நாம் ஏமாறுகின்றோம், நப்பாசையினால், நிறைய கிடைக்கும் என நினைத்து இருப்பதை முதலீடு செய்வதாக நினைத்துத் தந்துவிடுகிறோம்... பிறகு, பாபா பெயரில் பழியைப் போட முயற்சிக்கின்றோம்.எது கிடைக்கிறதோ அதுவே போதும் என நினைத்துக் கொண்டிருங்கள். விரைந்து கிடைக்க வேண்டும் என ஒரு போதும் குறுக்கு வழியை நாடாதீர்கள்.... உங்களைப் படைத்த சாயீதேவன், உங்களை எல்லா நேரங்களிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்...எதிலும் ஏமாறுவதை விட சற்று கால அவகாசம் கொடுத்துக் காத்திருந்து பார்த்தால், நமக்கு வரவேண்டியது வரும், வராமல் தட்டிப்போவது சுவடு தெரியாமல் ஓடிப் போகும்...இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு நிமிடம் பகவானிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் இழந்த பொருள் அவர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று கூறி நம்பிக்கையுடன் காத்திருக்க கூறவும்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக