ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, மே 09, 2021

பரம்பொருளான சாய்நாதர் நமக்காக அருளிய திருவாய்மொழி இதோ🙏🏻...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின்  சாய்சரித்திர உபதேச பொன்மொழிகள் ..🙏🙏🙏

🔥🔥பரம்பொருளான சாய்நாதர் நமக்காக அருளிய திருவாய்மொழி இதோ..🔥🔥

🙏🏻என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் யார் ஜபிக்கிறார்களோ ,அவர்களுக்கு நான் விரும்பியது எல்லாம் அளிக்கின்றேன்...இதன் விளைவாக என்மேல் கொண்ட பக்தி பெருகுகிறது....

🙏🏻என்னுடைய கீர்த்தனைகளை பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன் இது சத்தியமான வார்த்தை...

🙏🏻வேறெதிலும் பற்றில்லாமல் என்னையே சரணடைந்து ,முழு விசுவாசத்துடனும் என் புகழைப்பாடி ,என்னைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பவனை நான் கடைத்தேற்றம் செய்கிறேன் என்பது சத்திய  பிரமானம்...

🙏🏻எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள் பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ அங்கு எப்படி புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்...

🙏🏻என்னுடைய கதைகள் கேட்டால் கூட போதும் வியாதிகள் நிவாரணம் செய்யப்படும் ...என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியிலிருந்தும் விடுவிப்பேன்...

🙏🏻பக்தியுடன் கதைகளை செவிமடுங்கள் கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிபலியுங்கள்.அதன்பிறகு தியானம் செய்யுங்கள்.உன்னதமான திருப்தியை பெருவீர்....

🙏🏻நான் என்னும் பிரக்ஞை மறைந்து நானே அவன் என்னும் உணர்வு உதயமாகும்... வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால் ,சித்தம் தெய்வீக சக்திகளால் நிறைந்து கனக்கும்....

🙏🏻சாயீ சாயீ என்ற நாமஸ்மரணம் கலியுகத்தில் மலங்களை எரிக்கும். பேச்சினாலும் கேள்வியினாலும் விளைந்த பாவங்கள் என் முன்பாகச் செய்யப்படும் நமஸ்காரத்தால் அழிக்கப்படும்...

🙏🏻எட்டு பிரகிருதிகளின் ரூபமும் நானே... பிரபஞ்சத்தில் நான்கு பக்கங்களிலும் நிறைந்து இருக்கிறேன்...

🙏🏻ஓம் என்ற பிரணவம் என்னுடைய ஒலியாகும்...நானே இவ்வொலியின் பொருள்...பிரபஞ்சத்தில் எத்தனை வஸ்துகள் உண்டோ அவையனைத்திலும் நானே...

🙏🏻என்னுடைய சர்வ வியாபக விழிப்பில் நான், எனது என்னும் உணர்வுகள் கரைந்து விட்ட நிலையில் அனைத்தும் முழுமை அடைந்து இருக்கின்றன....

🙏🏻உலகியல் ஆசைகள் பலவிதமானவை. ஆயினும் நான் யார் என்ற சூட்சமம் புரிந்து விட்டால் அவையனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகும்...

🙏🏻மனிதன் தான் யார் என்பதை மறந்து போவதே மாயை...எல்லா இருப்புகளுக்கும் சாரமான என்னை அறிந்து கொள்வதே உள்ளிருக்கும் தூய  பூரண பரமானந்தத்தைப் பெறுவதாகும்...

🙏🏻இந்த ஆத்மாவே பிரம்மம்...சுத்த ஞானம் பிரம்மம்...ஆனந்தம் பிரம்மம்.  .இந்த பிரபஞ்சமே ஒரு பிரமை..

🙏🏻நான் வாசுதேவன்.ஓம் என்பதும் நானே.நான் நித்தியன், சுத்தன், புத்தன், முக்தன்...ஆகவே  சிரத்தையுடனும் பக்தியுடனும் என்னை வழிபடுவது சுய உயர்வு அளிக்கும்...இவ்வாறாக என்னை யார் என தெரிந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்... என்னை முழுமனதுடனும், என்னை சரணாகதி அடைந்து என்னுடன் கலந்து விடவேண்டும்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்....🙏🏼🙏🏼🙏🏼


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...