ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻
🔥சீரடி பகவான் தன் பக்தர்களிடம் எவ்வாறு மிகுந்த விழிப்புணர்வுடன் உற்று நோக்கி கடைத்தேற்றம் அடையச் செய்கின்றார் என்பதை சுட்டிக்காண்பிக்க உவமானத்துடன் விளக்கம் இங்கே...🔥
தன் இளங்கன்றை பசு எவ்வாறு நேசிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள்...அதன் மடி எப்போதும் நிறைந்திருக்கின்றது...கன்று பால் வேண்டி மடியை முட்டும்போது தடையின்றி பால் பெருக்கெடுக்கின்றது..அவ்வாறாகவே தாயாரும் தக்க தருணத்தில் தன் குழந்தையின் பசியறிந்து முலையமுது தந்து ஊட்டுகின்றாள்.. அதற்கு ஆடை அழகுற அணிவிப்பதிலும், சிறப்புச் சிங்காரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகின்றாள்...குழந்தை எதைப்பற்றியும் அறிவதுமில்லை, கவலையுறுவதுமில்லை... ஆயின் தன் குழந்தை நன்றாக உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கபட்டு இருப்பதைக் கண்ணுறும் தாயின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை....
தாயன்பு விசித்திரமானது.. அசாதாரணமானது,. பற்றில்லாதது,...இணையில்லாதது...ஈடு இல்லாதது...எதிலும் ஒப்பிட முடியாதது.. தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பை விட மேலான அன்பை காண்பிக்கின்றார்கள்...இத்தகைய அன்பே சாய்பகவான் என்னிடம் கொண்டிருந்தது... அதைப் பற்றிய நிகழ்ச்சியே கீழ்வருமாறு....
பகவானை ஆத்மார்த்தமாக அன்புடன் பூஜித்த பக்தர் ஒருவர் கூறுகின்றார்....
நான் அரசாங்க வேலையிலிருந்து 1916-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்...கௌரவமாக என் குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குத் தீர்மானித்துத் தரப்பட்ட உதவித்தொகை போதவில்லை...குருபூர்ணிமா அன்று நான் சீரடிக்குச் சென்றிருந்தேன்...அங்கு அண்ணா சிஞ்சணீகர் அவராகவே பகவானிடம் எனக்காக வேண்டினார்..."தயவு செய்து அவரை அன்புடன் நோக்குங்கள்...அவர் பெறும் உதவித்தொகை அறவே போதாது...அவரது குடும்பமோ வளர்ந்து வருகிறது...அவருக்கு வேறு வேலை ஏதும் கொடுங்கள் என்று வேண்டுகின்றார்..."
பகவான் பதில் அளிக்கின்றார்.. "அவர் வேறு ஏதாவது வேலை பெறுவார்...ஆயின், இப்போது எனக்குப் பணி செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்...அவரது உணவு எப்போதும் நிறைந்திருக்கும்....ஒருபோதும் காலியாய் இராது...அவர் தனது கவனம் அனைத்தையும் என்பால் திருப்பி நாத்திகர்கள், மதப்பற்று அற்றவர்கள், கொடுமையாளர்கள் இவர்களின் கூட்டுறவைத் தவிர்த்து, எல்லோரிடமும் பணிவாகவும், அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும், உயிராலும் எம்மை வணங்க வேண்டும்... இதைச் செய்வாராகில் அவர் எல்லையற்ற பேரின்பத்தை அடைவார் என்று அறிவுருத்தினார் பகவான்...உடனே அதற்கு கீழ்படிந்து பகவான் பாதகமலத்தில் சரணாகதி அடைந்தார் பக்தர்..நாமும் இவ்வாறாக நமது தாயுமானவர் சத்குருநாதர் சீரடி பகவானின் அன்பைப் பெற ஆழமாக தூய்மையான அன்புடன், ஆத்மார்த்தமாக நிலைமாறாது தன்மையில் பூஜித்து, நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டு பிணைத்துக் கொண்டோமேயானால் சாய் மாதாவின் தாயன்பைப் பெற இயலும்...ஆகவே சாயீயைப் பணிவோம்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக