ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏🏼
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகளும் இங்கே....🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥சாய் பகவான் தன் பக்தர்களுக்கு மிகவும் எளிமையான வழியையே போதித்தார்..அதுவே நம்பிக்கை, பொறுமை🔥🔥
முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக் கொள்கின்றார்...மிகவும் வியாபார மயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என்று அவரவர்கள் தனிப்பட்ட முறையில் பாபாவின் பேரைச் சொல்லி தேவையற்ற செயல் முறைகளைக் கையாள்கின்றார்கள்...சத்சத்சரித்திரமே நமது வேதம்....அதை நன்கு படித்தீர்களேயானால் நீங்கள் பாபாவின் முழுமைத் தன்மையை உணர்வீர்கள்.....
பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது தன்னை முழுமையாக அவரின்பால் ஒப்படைத்தல்.. பாபாவே அனைத்திற்கும் சூத்திரதாரி என்று உணர்ந்து கொள்வது... அனைத்து செயல்பாட்டுக்களையும் அவரின்பால் ஒப்படைப்பது...அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்க்கையை பகவான் பார்த்துக் கொள்வார்....சேவகனாகவும் இருப்பார்... இதனை உணர்ந்த பக்தர்கள் ஏராளமானோர்கள்...
பாபாவிற்க்கென்று தனிப்பட்ட விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை...அன்றாட ஆத்மார்த்தமாக உங்கள் இல்லறத்தில் உருவாக்கி வைத்திருக்கின்ற பூஜை முறைகளில், பாபாவிற்கும் சேர்த்து பூஜை செய்து அனுக்கிரகத்தைப் பெறலாம்...பகவான் தன்னை முழுமையாக நம்பும் பக்தனிடம் எப்போதும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது...மந்திர மாந்திரீக மற்றும் தாந்திரீக பூஜை செய்வது, இவை அனைத்தும் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையேக் காட்டுகின்றது...விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை..பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா அறிவுருத்துகின்றார்...இப்போது கடைகளில் கிடைக்கும் சாயீ விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை...
பகவான் விருப்பு வெறுப்புத் தன்மைக்கு அப்பாற்ப்பட்டவர்...பகவான் கூறியதன் அடிப்படையில் பார்த்தோமேயானால் "சாயீ..சாயீ...ஓம் சாய்ராம் .என்ற மகா மந்திரத்தையும் , சத்சரித்திரம் மற்றும் குருசரித்திரப் பாராயணத்தையும் பாராயணம் செய்யுமாறு அறிவுருத்தினார்..ஆனால் பின்னாட்களில் சாய் அன்பர்களால் பல்வேறு மூல சூட்சமங்கள் அடங்கிய மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள, சாயீன் வர்ணனைப் பற்றியப் பாடல்கள்,சுலோகங்கள் ஆகியவற்றை உருவாக்கினர் ....இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் சாய் பகவான் வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி....
பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் ஸ்தாபணம் செய்ய முயற்சிக்கின்றனர்...உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடியில் மட்டுமே உருவகம் செய்யக்கூடிய உருவமல்ல, எங்கும் நீக்கமற நிறைந்தவர்...பஞ்ச பூதங்களையும் ஆட்சி செய்பவர் ...அவர் இல்லாத உயிரினங்களே இல்லை எனலாம்....பகவான் அனைத்திலும் அனைத்துமாக வியாபித்து இருக்கின்ற ஒரு மூல பேராற்றல்...இதனை பல்வேறு நிலைகளில் நாம் விழிப்புணர்வோடு இருந்தால், அன்றாட வாழ்க்கை செயல்பாட்டிலேயே பாபாலின் பேராற்றலை உணர முடியும்...பகீரதப் பிரயத்தனம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவரின் பால் ஆத்மார்த்தமாக அன்பு கொண்டு, நான் என்ற அகந்தையின்றி நம்பிக்கையையும்... பொருமையையும்... கடைப்பிடித்து, அவரின் சத்திய அருள்மொழிகளைப் பின்பற்றி, சூட்சமமாக உணர்த்துகின்ற விஷயங்களை உணர்ந்து சாட்சியாக எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்தால் போதுமானது...
இவற்றையெல்லாம் பின்பற்றி, குருவழிப்பாதையைக் கடைப்பிடித்து , இறைப்பண்புகளோடும் பிறர்க்கு தீங்கிழைக்காமல் வாழ்ந்து, நம்மால் இயன்ற அளவில் தான தருமங்களைக் கடைப்பிடித்தோமேயானால் சாய் பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் எளிதாகப் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது திண்ணம் ...
ஓம் ஶ்ரீ சாய்ராம்.....🙏🏼🙏🏼
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக