ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

சீரடி சாயீன் புனித வேதநூலான சாய் சத்சரித்திரத்தில் அத்தியாயம் இரண்டில் அடங்கியுள்ள மறை ஞான மூல விளக்கவுரை.....ஹேமத்பந்த் என்ற பெயர் நாமத்தை, சாய் சத்சரித்திரத்தை எழுதிய ஆசிரியருக்கு பகவான் பெயரிடக் காரணம் என்னவென்றால்...🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

🔥சீரடி சாயீன் புனித வேதநூலான சாய்  சத்சரித்திரத்தில்  அத்தியாயம்  இரண்டில் அடங்கியுள்ள  மறை ஞான மூல விளக்கவுரை....ஹேமத்பந்த் என்ற பெயர் நாமத்தை,  சாய் சத்சரித்திரத்தை எழுதிய ஆசிரியருக்கு பகவான் பெயரிடக் காரணம் என்னவென்றால்...🔥

 ஶ்ரீசாய் சத்சரித்திரத்தை எழுதிய ஹேமத்பந்த் இங்கே கூறுகின்றார்....என்னை ஏன் ஹேமத்பந்த் என்னும் பெயரால் அழைக்க வேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன்...இச்சொல் 'ஹேமத்ரியபந்த்' என்ற வார்த்தையிலிருந்து திருத்தப்பட்டதாகும்.. இந்த ஹேமத்ரியபந்த் யாதவ அரசவம்சத்தைச் சேர்ந்த ராமதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ்பெற்ற மந்திரியாவார்...கல்வி, கேள்வி நிரம்பப்பெற்று, நற்பண்புகள் நிறையப்பெற்ற அவர், ஆன்மீக விஷயங்கள் அடங்கிய 'சதுர்வர்க சிந்தாமணி' மற்றும் 'ராஜ ப்ரஷஸ்தி' போன்ற பல உயர்ந்த நூல்களின் ஆசிரியருமாவார்.  கணக்குப் பேரேடுகளில் புதியமுறைகளைக் கண்டுபிடித்துப் புகுத்தியவரும் மற்றும் மராத்தியச் சுருக்கெழுத்தின் கர்த்தாவுமாவார்.... ஆனால் நான் முற்றிலும் மாறுபட்டவன்....  அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர பாமர எண்ணத்தோன்...எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்காகச் சூட்டப்பட்டது என்பது விளங்கவில்லை..ஆனாலும் அதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து அது என் அகங்காரத்தை அழித்து, பணிவாகவும் , அடக்கமுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது  என நினைத்தேன்... விவாதத்தில் எனக்குள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப்பட்டதாகும்.

எதிர்கால  நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில், பகவானின் சொற்கள் ( ஆசிரியர் தபோல்கரை ஹேமந்த்  என்று  பகவான்  பெயரிட்டது) முக்கியமானதும் தீர்க்க தரிசனம்  நிறைந்ததும் ஆகும்..ஏனெனில்  மிகவும் புத்திசாலித்தனமாக சாயீ சமஸ்தானத்தின் நிர்வாகங்களைக் கவனித்தது, எல்லாக் கணக்குகளையும் நன்றாக வைத்திருந்தது, முக்கியமானதும் ஆத்மார்த்த விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை, 'நான்' அகந்தை தன்மையை  விட்டுவிடல், தன்னையுணர்தல் போன்றவற்றைக் குறிக்கும் சாய் சத்சரிதம் என்ற அத்தகைய சிறப்பான நூலின் ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்.ஹேமத்பந்த் பகவான் மீது அளவற்ற குருபக்தியும் பணிவும் அடக்கமும் கர்வமின்மையும் கொண்ட காரணத்தால் சாய்சத்சரித்திரம் எழுதுகின்ற புனிதமான பணியை பகவான் ஹேமத்பந்த் அவர்களுக்கு  வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...