ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாயின் உபதேச அருள்மொழிகள்...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயின்  உபதேச அருள்மொழிகள்...🙏🙏

வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்...

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமேயானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்..ஆகவே பகவான் கூறிய இறைப் பண்புகளோடு வாழ்ந்து, இறையச்சத்தோடு மனித நேயம் காத்து, பிறர் உயிரை நேசித்து, சத்திய வழிகளைக்  கடைப்பிடித்து ,புனித நூல்களையும் சத்சரிதத்தையும் பாராயணம் செய்து, நம்மை பண்படுத்திக் கொண்டு, பிறர் நலம் வாழ பிரார்த்தனை செய்து  வாழ்வில்  உயரிய நிலையை அடைவோம் அன்பர்களே....
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...