ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼
🙏🏼ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏🏼
🙏 அத்தியாயம் ::நாற்பத்தொன்று (41)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய்சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்...
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்..மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்...
மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...
அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம் ::நாற்பத்தொன்று(41)🙏
🙏முன்னுரை...🙏
சீரடி பாபா தன்னுடைய உயரிய பக்தன் ஹேமாட்பந்தின் கனவில் தோன்றி இல்லத்திற்கு வருவதாகக் கூறியதை நிரூபிக்கும் வகையில் ,எவ்வாறு பாபா புகைப்படத்தின் மூலமாக ஹேமாட்ப்ந்தின் இல்லத்திற்கு சென்றார் மற்றும் அப்புகைப்படம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதைப் பற்றிய அனுபவ விளக்கம்...
சீரடி பாபா, தன் பக்தன் தேவ் என்பவர் மற்றவர்களைக் கேட்டு விசாரிப்பதை விரும்பாமல், தானே அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கத் தயாராக இருக்கின்றேன் என்பதை கண்டித்து அவருக்கு அறிவுருத்தியதைப் பற்றிய விளக்கமும், எவ்வாறு தேவின் ஞானேஷ்வரி பாராயணத்தடையை நீக்கி, அப்புத்தகத்தைப் படிக்க ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை....
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாக கீழே காண்போம்...
🔥முதலில் சீரடி பாபா தன்னுடைய உயரிய பக்தன் ஹேமாட்பந்தின் கனவில் தோன்றி இல்லத்திற்கு வருவதாகக் கூறியதை நிரூபிக்கும் வகையில் ,எவ்வாறு பாபா புகைப்படத்தின் மூலமாக ஹேமாட்ப்ந்தின் இல்லத்திற்கு சென்றார் மற்றும் அப்புகைப்படம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதைப் பற்றிய அனுபவ விளக்கம் இங்கே...🔥
அலி முஹமது என்பவர், தனக்கு எவ்வாறு, யார் மூலமாக பாபாவின் புகைப்படம் கிடைத்தது என்பதை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஹேமாட்பந்திடம் கூறுகின்றார்..அந்த நிகழ்வைப் பற்றி இங்கேப் பார்ப்போம்.. பம்பாய் வீதிகளில் ஒருமுறை அலி முஹமது சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்தப் படத்தை ஒரு தெரு வியாபாரியிடமிருந்து வாங்கினார்... பின்னர் அதை கண்ணாடி, சட்டம் போட்டு பாந்த்ராவில் உள்ள தம் வீட்டில் தொங்க விட்டார்...அவர் பாபா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.. ஆகவே அப்படத்தைத் தினந்தோறும் தரிசித்து வந்தார்... ஹேமாட்பந்திற்கு அதைக் கொடுப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, காலிலுள்ள கட்டிக்காக (வீக்கத்திற்காக) அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது..பம்பாயில் அவரது மைத்துனரான நூர் முஹமது பீர்பாயின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்... பாந்த்ராவில் உள்ள அவரது வீடு மூன்றுமாத காலமாக சாத்தப்பட்டிருந்தது.. ஒருவரும் அங்கு வசிக்கவில்லை. புகழ்பெற்ற பாபா அப்துல் ரஹ்மான், மௌலானா சாஹேப், முஹமது ஹுஸேன், பாபா சாயி, பாபா தாஜூதின் மற்றும் பல உயிருடன் இருந்த ஞானிகள் படங்களும் அங்கு இருந்தன... காலச்சக்கரம் இவைகளையும் விட்டு வைக்கவில்லை.. பம்பாயில் அலி முஹமது உடல்நலக் குறைவால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்... படங்கள் எல்லாம் ஏன் அங்கு (பாந்த்ராவில்) இருக்க வேண்டும்...? அவைகளுக்கும் உள்ளே வருதலும் வெளியே போதலும் (பிறப்பும், இறப்பும்) உண்டு எனத் தெரிகிறது..எல்லாப் புகைப் படங்களும் தங்கள் விதியைச் சந்தித்தன....ஆனால் பாபாவின் புகைப் படம் எங்ஙனம் விடுப்பட்டது என்பதை ஒருவரும் எனக்கு இதுவரை விளக்கியதே இல்லை...
சாயீயின் எங்கும்நிறை தன்மையையும், சர்வவியாபித்துவத்தையும் அறிவுக்கெட்டாத அவரின் சக்தியையும் இந்த நிகழ்வு காண்பிக்கின்றது என்று கூறலாம்... அலிமுஹமது பல வருடங்களுக்கு முன் முஹமது ஹுஸேன் தாரியா டோபணிடமிருந்து, ஞானி பாபா அப்துல் ரஹ்மானின் சிறியப் புகைப்படம் ஒன்றைப் பெற்றார்..அதை அவர் தன் மைத்துனரான நூர் முஹமது பீர்பாயிடம் கொடுத்தார்..அப்படம் அவரது மேசையில் எட்டு வருடங்கள் இருந்தது... ஒருமுறை நூர் முஹமது பீர்பாய் அதை ஒரு புகைப்படக்கலை நிபுணரிடம் எடுத்துச்சென்று சற்று பெறிய அளவுப் படமாக உருவாக்கம் செய்து , அதன் பிரதிகளை அலிமுஹமது உட்பட தமது உறவினர்களிடையேயும், நண்பர்களிடத்தும் விநியோகித்தார். அலிமுஹமது அதை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மாட்டினார்...
நூர் முஹமது, ஞானி அப்துல் ரஹ்மானின் சீடர்.. தமது குருவிடம், அவரால் நடத்தப்பட்ட ஒரு திறந்த தர்பாரில் அப்படத்தை அளிக்கச் சென்றபோது குரு கோபமடைந்து அவரை உதைப்பதற்காக ஓடினார்..அவரை வெளியில் தள்ளினார்.. அவர் மிகவும் வருத்தமுற்று மனம் உடைந்தார்...நூர் முஹமது தனது பெரும் பணத்தையும் இழந்து, குருவின் கோபத்தையும், துன்பத்தையும் பெற்றதற்காக வருந்தினார். அவருடைய குருவுக்கு உருவ ஆராதனை பிடிக்காதாகையால், பெரிதாக்கபட்ட அப்படத்தை அப்போலோபந்தருக்கு எடுத்துச்சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி நீரில் சென்று மூழ்கடித்தார்... நண்பர்களையும், உறவினர்களையும் தங்கள் பிரதிகளைத் திருப்பிக் கொடுக்கும்படி வேண்டி, அவைகளைத் திரும்பப் பெற்றபின் (மொத்தத்தில் ஆறு பிரதிகள்) அனைத்தையும் பாந்த்ரா கடலில் மீனவனைக் கொண்டு அப்படத்தை எறியச் செய்தார்.. இச்சமயத்தில் அலிமுஹமது அவரின் மைத்துனரது வீட்டில் இருந்தார்..
ஞானிகளின் படங்களையெல்லாம் உடனே தண்ணீரில் மூழ்கடித்துவிட்டால் அவரது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று நூர் முஹமது கூறினார்... இதைக்கேட்ட அலிமுஹமது தனது மேதாவை (அதிகாரி) பாந்த்ரா வீட்டிற்கு அனுப்பி அங்கிருந்த ஞானிகள் அனைவரது படங்களையும் கடலில் எறியச்செய்தார்...இரண்டு மாதத்திற்குப்பின் அலிமுஹமது தன் வீட்டிற்குத் திரும்பியதும் சுவரில் பாபாவின் படம் முன்போலவே மாட்டியிருந்ததைக் கண்டு வியந்தார்...
அலி முஹமதுவின் அதிகாரி இதைத் தவிர்த்துப் பிற படங்களை எங்ஙனம் எடுத்துவந்தார் என்பது அவருக்குப் புரியவில்லை...அவரது மைத்துனர் அதைக் கண்டால், அதையும் வழக்கப்படி செய்துவிடுவார் என்று பயந்து உடனே அப்படத்தை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டார்...யார் இப்படத்தை நன்றாக வைத்துக் காப்பாற்றுவார்கள்...? அதை என்ன செய்ய வேண்டும் என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கையில், மௌலானா இஸ்மு முஜாவர் என்பவரைச் சென்றுபார்த்து, அவர் கூற்றுப்படி செய்யவேண்டும் என்று சாயிபாபாவே தெரிவித்ததுபோல் இருந்தது.
தீவிர ஆலோசனைக்குப் பின் இருவரும் அப்படம் ஹேமத்பந்த் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டால், அவர் இந்தப் புகைப்படத்தை நன்கு பாதுகாப்பார் என்று தீர்மானித்தனர்.. பின்னர் இருவரும் ஹேமத்பந்த்தின் இல்லத்திற்குச் சென்று தக்க சமயத்தில் அதனை வெகுமதியாக அளித்தனர்.. இவ்வாறாகத் தான் பாபா புகைப்படம் மூலமாக ஹேமாட்பந்தின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார்.
🔥சீரடி பாபா, தன் பக்தன் தேவ் என்பவர் மற்றவர்களைக் கேட்டு விசாரிப்பதை விரும்பாமல், தானே அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கத் தயாராக இருக்கின்றேன் என்பதை கண்டித்து அவருக்கு அறிவுருத்தியதைப் பற்றிய விளக்கமும், எவ்வாறு தேவின் ஞானேஸ்வரி பாராயணத்தடையை நீக்கி, அப்புத்தகத்தைப் படிக்க எவ்வாறு ஆசிர்வதித்தார் என்பதைப் பற்றிய அனுபவ விளக்கவுரையை இங்கு காண்போம்....🔥.
தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூவின் மம்லதார் B.V.தேவ் என்பவர், நெடுநாளாக ஞானேஸ்வரியை (பகவத்கீதைக்கு ஞானேஸ்வர் எழுதிய புகழ்பெற்ற மராத்திய வியாக்கியானம்) மற்ற நூல்களுடன் பாராயணம் செய்ய வேண்டுமென்று ஆர்வம் கொண்டிருந்தார்....தினந்தோறும் அவருக்கு பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தையும், மற்ற புத்தகங்களின் சில பகுதிகளையும் படிக்க இயன்றது...ஆனால் ஞானேஸ்வரியைக் கையில் எடுத்தவுடன் ஏதாவதொரு தடை ஏற்பட்டு அதைப்படிக்க முடியவில்லை.. மூன்றுமாத விடுமுறையில் சீரடிக்குச் சென்று பின்னர் பவுண்டில் உள்ள தனது சொந்த இல்லத்திற்குச் சென்றார்...அங்கு அவர் மற்ற புத்தகங்களைப் படிக்க முடிந்தது...ஆனால் ஞானேஷ்வரியைப் படிக்க முயன்றபோது, சில நூதனமான சம்பந்தமற்ற அல்லது தீய எண்ணங்கள் அவர் மனதில் திரளாகத் தோன்றி அவரது முயற்சியைத் தடைசெய்தன.. எவ்வளவு அதிகமாக முயற்சி செய்தபோதிலும் அப்புத்தகத்தின் சில வரிகளைக்கூட அவரால் எளிதாகப் பார்த்து பாராயணம் செய்ய முடியவில்லை...எனவே பாபா அப்புத்தகத்தின் மீது தனக்கு ஈடுபாடு ஏற்படும்படி செய்து ஆசிர்வதித்து, படிக்கக் கட்டளை இடும் போதுதான் தான் ஞானேஸ்வரியைப் பயில ஆரம்பிக்கவேண்டும் என்றும், அதுவரை அதைப் படிக்கக்கூடாது என்றும் தீர்மானித்தார்...
பின்னர் 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்தம் குடும்பத்துடன் சீரடிக்குச் சென்றார்... அங்கு ஜோக், அவரைத் தினந்தோறும் ஞானேஸ்வரி படிக்கிறாரா என்று கேட்டு வினவினார்.. தேவ் அதற்கு தாம் அதைப் பயில்வதற்கு ஆர்வம் உள்ளவராக இருப்பினும், தம்மால் ஞானேஸ்வரியைப் பாராயணம் செய்ய இயலவில்லை என்றும், பாபா அவருக்குக் கட்டளையிடும் போது தான் அதைப் படிக்க ஆரம்பிக்கப் போவதாகவும் கூறினார்... அப்புத்தகத்தின் பிரதி ஒன்றை எடுத்துச்சென்று அதை பாபாவுக்கு அளித்து, பாபாவின் கரங்களினால் புனிதமாக்கப்பட்டுத் திருப்பி அளிக்கப்படும் போது அதைப் படிக்கலாம் என்று ஜோக் அறிவுருத்தினார்...பாபா அவரது உள்ளத்தை அறிவாராதலால் இந்தமாதிரி செய்ய தாம் விரும்பவில்லை என்று தேவ் பதிலளித்தார். அவரது ஆவலை சாயீபாபா அறியமாட்டாரா...? அதைப் படிக்கக் கூறித் தெளிவான உத்தரவை அவர் கொடுக்க மாட்டாரா...? பின்னர் தேவ் பாபாவைப் பார்த்து ஒரு ரூபாயைத் தக்ஷிணையாகக் கொடுத்தார்... பாபா இருபது ரூபாய் கேட்டார். தேவ் கொடுத்தார்... இரவில் தேவ் அவர்கள் பாலக்ராம் என்பவரைப் பார்த்து, அவர் எங்ஙனம் பாபாவின் அன்பையும், பக்தியையும் பெற்றார் என்று விசாரித்தார். பாலக்ராம் தாம் எல்லாவற்றையும் அடுத்தநாள் ஆரத்திக்குப்பின் தெரிவிப்பதாகக் கூறினார்... தேவ் அடுத்தநாள் தரிசனத்திற்காகச் சென்றிருந்தபோது பாபா அவரை மேலும் இருபது ரூபாய் கேட்டார்...அதை அவர் விருப்பத்துடன் அளித்தார்.. பின்னர் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனியாக மசூதியின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தார்.
பாபா தேவ் என்பவரை அழைத்து, தம் அருகில் வந்து அமைதியான மனதுடன் அமரும்படி கூறினார்...அங்ஙனமே அவர் செய்தார்... பின்னர் மத்தியான ஆரத்தி முடிவடைந்தது.. மக்கள் எல்லோரும் கலைந்து சென்றதும், தேவ் மீண்டும் பாலக்ராமைச் சந்தித்து, பாபா உமக்கு என்ன கூறினார்...? எங்ஙனம் தியானம் செய்யக் கற்றுக் கொடுத்தார்..? என்று அவரது முந்தைய சரித்திரத்தைக் கேட்டார்... பதிலளிக்கும் தறுவாயில் பாபா, சந்துரு என்ற ஒரு தொழுநோய்க் கொண்ட அடியவரை, தேவ்வை அழைத்துவரும்படி அனுப்பினார்... தேவ் பாபாவிடம் சென்றபோது, யாருடன் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று பாபா கேட்டார்... அவர் தாம் பாலக்ராமுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், பாபாவின் புகழைக் கேட்டதாகவும் கூறினார்.
பாபா அவரை மீண்டும் ரூ.25 தக்ஷணையாக கேட்டார். அவரும் அதை மகிழ்வுடன் கொடுத்தார்...பின்னர் பாபா அவரை உள்ளே அழைத்துச்சென்று கம்பத்தருகில் அமர்ந்துகொண்டு, "என்னுடைய கந்தல் ஆடைகளை எனக்குத் தெரியாமல் நீ திருடினாய்" என்று குற்றம் சாட்டினார். தேவ் கந்தல் ஆடைகள் பற்றி தமக்கு எதுவும் தெரியாதென்று மறுத்தார். ஆனால் பாபா அவரைத் தேடச் சொன்னார்..தேடிய அவரால் ஒன்றையும் காண முடியவில்லை... பாபா கோபமடைந்து, "இங்கு வேறு ஒருவரும் இல்லை. நீயேதான் திருடன்... தலை நரைத்து கிழவனாகியும் நீ இங்கு திருடுவதற்கு வந்திருக்கிறாய்" என்றார்...
இதன்பின் பாபா பொறுமை இழந்து, கடுமையாக கோபமுற்று பலவிதமாக திட்டவும், குற்றம் சாட்டவும் ஆரம்பித்தார்...தேவ் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டு தனக்கு அடியும் கூடக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின் பாபா அவரை வாதாவுக்குப் போகச்சொன்னார்...அவர் வாதாவுக்குத் திரும்பிவந்து பாலக்ராமிடமும், ஜோகிடமும் நடந்தவை அனைத்தையும் கூறினார்... பின்னர் மாலையில் பாபா, தேவ்வையும் மற்ற எல்லோரையும் கூப்பிட்டு அனுப்பினார்...தமது வார்த்தைகள் கிழவரைத் துன்புறுத்தி இருக்கலாமென்றும், ஆயினும் அவர் திருடியிருப்பதால் தம்மால் வெளியே கூறாமல் இருக்க முடியவில்லை என்றும் கூறினார்...பின்னர் பாபா மீண்டும் பன்னிரண்டு ரூபாய் தேவ்விடம் கேட்டார்...தேவ் அதைச் சேகரித்து கொடுத்து அவர்முன் சாஷ்டாங்கமாகப் பணிந்தார்.
பாபா கூறினார் : போதியை (ஞானேஸ்வரி) தினமும் படிப்பீராக... வாதாவில் போய் அமர்ந்து தினந்தோறும் ஒழுங்காக கொஞ்சமாவது படிப்பீராக.. அவ்வாறு படிக்கையில் நீ படித்த பகுதியை அனைவருக்கும் அன்புடனும், பக்தியுடனும் விளக்கிச் சொல்...நான் இங்கு உனக்குத் தங்கச்சரிகை போட்ட மதிப்புமிக்க சால்வை அளிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றேன்... அப்படியிருக்க மற்றவர்களிடம் நீ ஏன் கந்தலைத் திருடுகிறாய்..? ஏன் திருட்டுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்..?
பாபாவின் மொழிகளைக் கேட்டு தேவ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்...ஏனெனில் அவர் போதியைப் படிக்க ஆசி வழங்கிவிட்டார்...தாம் விரும்பியதைப் பெற்றுவிட்டதாக தேவ் நினைத்தார்...இனி அந்நூலை எளிதில் படிக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டார்... மீண்டும் அவர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தாம் பாபாவிடம் சரணாகதி அடைந்திருப்பதாகக் கூறித் தம்மை ஒரு குழந்தையைப்போல் பாவிக்குமாறும், தனது பாராணயத்தின்போது உதவி செய்யுமாறும் வேண்டிக்கொண்டார். 'கந்தலைத் திருடுவது' என்று பாபா கூறியதன் பொருளை அவர் உணர்ந்து தெளிந்தார்...பிறரை விசாரிப்பது போன்ற செயலான, பாலக்ராமிடமிருந்து தேவ் கேட்டது தான் கந்தல் என்று பொருள் கொள்ளப்பட்டது...பிறரிடம் தன்னைப் பற்றித் தேவையற்ற விசாரணை என்கின்ற இந்நடத்தை பாபாவுக்குப் பிடிக்கவில்லை.... எக்கேள்விக்கும் பாபா தாமே விடையளிக்கத் தயாராய் இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும், அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் அவர் விரும்பவில்லை... எனவே பாபா அவரைத் திட்டித் தண்டனைக்கு உள்ளாக்கினார். உண்மையில் பாபா அவரைத் துன்புறுத்தவோ, திட்டவோ இல்லையென்றும், பாபா தமது ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களைக் கேட்டுத் தெரிவது பயனில்லை என்று தனக்குப் போதித்ததாகவும் நினைத்தார்... தேவ் , பாபா பேசிய வார்த்தைகள் அனைத்தையும், தனக்கு பாபா வழங்கிய புஷ்பங்களாகவும், ஆசீர்வாதமாகவும் கருதி திருப்தியுடனும், மனநிறைவுடனும் அவருடைய இல்லத்திற்குச் சென்றார்.
இவ்விஷயம் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. பாபா படிப்பதற்கு உத்தரவு செய்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை...அந்த வருடத்திற்குள் அவர் தேவ்விடம் சென்று அவரின் முன்னேற்றத்தைப் பற்றி வினவினார். .. 1914 ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை காலை பாபா அவருக்கு 'தெய்வீகக் காட்சி' ஒன்றை அளித்தார்...மேல் திண்ணையில் அமர்ந்துக் கொண்டு தேவ் போதியைப் புரிந்துகொண்டாரா என்று கேட்டார்...
தேவ் : இல்லை..
பாபா : பின் எப்போது நீ புரிந்துகொள்ளப் போகிறாய்...?
தேவ் : (அழுகை பொங்க) நீங்கள் உங்கள் அருளைப் பொழிந்தாலன்றி பாராயணம் ஒரு தொந்தரவாகவும் புரிந்துகொள்ளுதல் கஷ்டமாகவும் இருப்பது நிச்சயம் என்று கருதுகிறேன் என்றார்..
பாபா : படிக்கும்போது துரிதமாகப் படி...எனது சந்நிதானத்தில் என்முன் படிப்பீராக..
தேவ் : எதை நான் படிக்கவேண்டும்...?
பாபா : அத்யாத்மிகம் (ஆன்மிகம்) படி என்றார்...
தேவ் நூலைக் கொணர்வதற்காகச் சென்றபோது காட்சியிலிருந்து விடுபட்டு முழு விழிப்புணர்வு எய்தினார்...தேவ் இதன் மூலம் அளவற்ற மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் பெற்றார்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்.🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக ....அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக