ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🏼🙏🏼🙏🏼
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு....🙏🏼🙏🏼🙏🏼
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம் :: நாற்பத்திரெண்டு (42)🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய ஶ்ரீசாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து ஶ்ரீசாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்...ஆகவே ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணம் செய்வோம்... நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்.. மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்....இவ்வேதப் பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்... மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப் பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த ஶ்ரீசாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப்புரிகின்றது...
மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்... அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம் ::நாற்பத்திரெண்டு(42)🙏
🙏முன்னுரை..🙏🏼
அனைத்தையும் கடந்து சாட்சியாக வீற்றிருக்கின்ற பகவானை , பக்தர்கள் இந்துவா, முகம்மதியனா என்று பரிசோதித்த காரணத்தால், தன்னுடைய உடைகளை கழட்டி துனியில் எறிந்து பாருங்கள் என்னை என்றுக் கூறி, கோபஆவேசத்துடன் சூட்சமமாக இந்த தசராவே தனது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்று தன் இறப்பின் இறுதி நாளையும் சூட்சமமாக குறிப்பிட்டதைப் பற்றிய அனுபவ விளக்கம்...
தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராமச்சந்திர பாடீலின் கனவில் தோன்றி உமது மரண ஓலை பெற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறி குணப்படுத்திக் காப்பாற்றியதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை மற்றும் தாத்யா பாடீல் இறக்கும் நாளைக் குறிப்பிட்டு, எவ்வாறு பாபா, தன் பெயருக்குப் பதிலாக தாத்யா பாடீல் பெயரை மாற்றி மரணிக்கும் தருணத்தை சூட்சமமாக அறிவுருத்தியதைப் பற்றிய அனுபவ உரை..
சீரடி பாபா, தன்னுடைய பக்தன் தாஸ்கணுவின் கனவில் தோன்றி தன்னுடைய இறப்பைக் குறிப்பிட்டு அறிவுருத்தியதைப் பற்றிய விளக்கவுரை..
தன் உயரிய பக்தையான லஷ்மிபாய் ஷிண்டேவிற்கு பாபா, தான் சமாதி அடைவதற்கு முன் நவநாணயங்களை வழங்கியதில் இருக்கின்ற மூல சூட்சம விளக்கம்....
மேற்க்கண்ட தலைப்புக்களின் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழை காண்போம்..
🔥 முதலில் அனைத்தையும் கடந்து சாட்சியாக வீற்றிருக்கின்ற பாபாவை , பக்தர்கள் இந்துவா, முகம்மதியனா என்று பக்தர்கள் பரிசோதித்த காரணத்தால், தன்னுடைய உடைகளை கழட்டி துனியில் எறிந்து பாருங்கள் என்னை என்றுக் கூறி, கோப ஆவேசத்துடன் கூச்சவிட்டு, இந்த தசராவே தனது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்று தன் இறப்பின் இறுதி நாளையும் சூட்சமமாக குறிப்பிட்டதைப் பற்றிய அனுபவ விளக்கம் இங்கே...🔥
ஒவ்வொருவரும் இவ்வுலக வாழ்க்கையின் இருக்கின்ற அச்சம்,பயம், தேவையற்ற குழப்பங்கள், எண்ணப்போராட்டங்கள், முன் ஜென்ப சாப பாவ தோஷங்கள் மற்றும் மாயைச் சுழற்சிகளால் ஆட்படுகின்ற அனைத்து விளைவுகளையும் குருவின் கிருபை என்ற ஒளி நீக்குவதை முந்தைய அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளும், அனுபவ விளக்கங்களும் எடுத்துரைக்கின்றனர்..
அனைத்து உபதேச மொழிகளுமே முக்திக்கு வழி வகுக்கின்றன...நமது துன்பத்தை இன்பமாக மாற்றுகின்றன... சத்குருவின் பாதங்களை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்போமேயானால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன... மரணம் கூட தன் வலிமையை இழந்து இறுதி நாளை தள்ளி வைக்கின்றது.. இவ்வுலக வாழ்வின் துயரங்கள் நீக்கப்படுகின்றன.. எனவே, தங்கள் நலத்தை விரும்புவோர் மனதைத் தூய்மைப்படுத்தும் சமர்த்த சாயீயின் சாய்சரித்திர உபதேசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.. ஆரம்பத்தில் ஹேமாட்பந்த், மருத்துவர் பண்டிட்டின் வழிபாட்டையும், அவர் பாபாவின் நெறியில் மூன்று பட்டைகள் இட்டதைப் பற்றியும் கூறுகின்றார்.. ஆனால் இந்த நிகழ்வுப் பற்றிய விளக்கங்களை ஏற்கெனவே அத்தியாயம் பதினொன்றில் முன்பே கூறப்பட்டுவிட்டதால், இவ்விடம் நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது...
நாம் அனைவரும் இதுவரை பாபாவின் வாழ்க்கையைப் பற்றிய நிகழ்வுகள், உபதேச அருளுரைகள், ஞான மார்க்கப்பாதைக்கு வழிக்காட்டும் விதமாக மறை ஞான விளக்கவுரைகள், உயர்ந்த இறைப்பண்புகளைப் பெற்று, மிகச்சிறந்த கர்ம யோகியாக வாழ்வதற்குரிய அனைத்து உபதேச உரைகளைப் பலவிதமான உவமான விளக்கத்துடன் பாராயணம் செய்தோம்.. இப்பொழுது பாராயணம் செய்பவர்கள், எடுத்துக் கூறுபவர்கள் அனைவரும் பாபாவின் மறைவைப்பற்றிய நிகழ்வுரையை கவனத்துடன் பாராயணம் செய்து எடுத்துக் கூறுவீர்களாக.. பாபாவுக்கு 1918- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி லேசான காய்ச்சல் தோன்றியது... காய்ச்சல் இரண்டு, மூன்று நாட்கள் இருந்தது. பின்னர் பாபா உணவு உண்பதை நிறுத்திக் கொண்டார்.. அதனால் நாளுக்கு நாள் பலவீனமானார்...உடல் குன்றிய பதினேழாவது நாளன்று, அதாவது 1918-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி மாலை சுமார் 2:30- மணியளவில் பாபா தமது பூத உடலை நீத்தார்.. இதைப் பற்றிய விவரங்களுக்கு தாதா சாஹேப் கபர்டேவுக்கு, பேராசிரியர் நார்கே 1918-ஆம் ஆண்டு , நவம்பர் 5-ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் சாயிலீலா சஞ்சிகையில் (முதல் வருடம், பக்கம் 78) பார்க்க. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1916- ஆம் ஆண்டில் பாபா, தாம் இயற்கை எய்துவதைப் பற்றிய குறிப்பு ஒன்றை சூட்சமமாக உணர்த்தினார்.ஆனால் அதை அவர்கள் அப்போது புரிந்துக் கொள்ளவில்லை.அதன் விளக்கத்தை இங்கே பார்ப்போம்...
"விஜயதசமியன்று (தசரா) மாலையில் மக்கள் ஷிமோலங்கணிலிருந்து (ஷிமோலங்கண் என்பது கிராம எல்லையைத் தாண்டுதல்) திரும்பி வரும்போது பாபா திடீரென்று கோப ஆவேசமடைந்து தமது தலையணி, கஃப்னி லங்கோடு முதலியவைகளை எல்லாம் கழற்றி அவைகளைக் கிழித்து அவருக்கு முன்னால் உள்ள துனியில் எறிந்தார்.. இந்தச் சமர்ப்பணத்தை ஏற்று துனியிலுள்ள தீ, மிக்க ஒளியுடன் எரிந்து பிரகாசிக்கத் தொடங்கியது.. பாபா முற்றிலும் நிர்வாணமான நிலையில் அங்கு நின்றார்...நெருப்புப் போன்ற போன்ற சிவந்த கண்களுடன் எல்லோரையும் நோக்கி, "ஓ..! பேர்வழிகளே, இப்போது என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்து, நான் ஒரு இந்துவா அல்லது முகம்மதியனா என்பதைத் தீர்மானியுங்கள்" என்று உரக்கக் கூறினார்... எல்லோரும் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தனர்.. ஒருவருக்கும் பாபாவிடம் நெருங்கத் தைரியமில்லை.கொஞ்ச நேரத்திற்குப் பின் பாபாவின் ஆத்மார்த்தமான அடியவரான பாகோஜி ஷிண்டே தைரியத்துடன் அருகில் சென்று லங்கோடை கட்டிவிடும் முயற்சியில் வெற்றிப் பெற்றார்..."பாபா என்ன இதெல்லாம்... இன்றைக்கு ஷிமொலங்கண் - தசரா விடுமுறை" என்றார்... பாபா தமது சட்காவைத் தரையில் அடித்து, "இது என்னுடைய ஷிமொலங்கண் என்றார். இரவு பதினோரு மணிவரை சாந்தமடையவில்லை. அன்றிரவு சாவடி ஊர்வலம் நடக்குமா என்று அனைவரும் ஐயம் அடைந்தனர்...
ஒரு மணி நேரத்திற்குப்பின் பாபா தமது சாதாரண நிலைக்குத் திரும்பினார்... வழக்கம்போல் உடையணிந்துக் கொண்டு சாவடி ஊர்வலத்தில் பங்குகொண்டார்....இந்த நிகழ்ச்சியின் மூலம் தசராவே தமது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்ற கருத்தை சூட்சமமாக பகவான் தெரிவித்தார். ஆனால் ஒருவரும் அதன் ஆழமான உட்பொருளைப் புரிந்துக் கொள்ளவில்லை. மற்றுமொரு குறிப்பாலும் பாபா இதனை சூட்சமமாக உணர்த்தினார்...அது என்னவென்றால், ராமச்சந்திர பாடீல் கனவில் தோன்றி தீவிர நோயிலிருந்து அவரைக் காப்பாற்றிய பாபா, அத்தருணத்தில் தாத்யாவின் மரணக் காலத்தை சூட்சமமாக உணர்த்தியப் பின், பின்னாளில் தாத்யாவின் மரணத்தைத் தவிர்த்து, தான் அதே நாளில் இறப்பை ஏற்றுக் கொண்டதன் நிகழ்வைப் பற்றிக் கீழே காண்போம்....
🔥தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராமச்சந்திர பாடீலின் கனவில் தோன்றி உமது மரண ஓலை பெற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறி குணப்படுத்திக் காப்பாற்றியதைப் பற்றிய அனுபவ விளக்கவுரை மற்றும் தாத்யா பாடீல் இறக்கும் நாளைக் குறிப்பிட்டு, எவ்வாறு பாபா, தன் பெயருக்குப் பதிலாக தாத்யா பாடீல் பெயரை மாற்றி மரணிக்கும் தருணத்தை சூட்சமமாக அறிவுருத்தியதைப் பற்றிய அனுபவ உரையை இங்கே காண்போம்.. 🔥
பாபாவின் அடியவரான ராமச்சந்திர பாடீல் என்பவர், தீவிரமான காய்ச்சலால் அவதியுற்றார்..நோயின் தீவிரம் குறையாமல் அவர் பெரிதும் துன்பமடைந்தார். பாடீல் எல்லாவித சிகிச்சைகளையும் கையாண்டும், குணமேதும் காணாமல் தமது வாழ்வில் வெறுப்படைந்து கடைசி வினாடிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்...பின்னர் ஒருநாள் நள்ளிரவு பாபா திடீரென்று அவரது தலையணைக்கருகில் நின்றார்..பாடீல் பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, "வாழ்க்கையின் எல்லாவித நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன்.. நான் எப்போது இறப்பை சந்திப்பேன் என்று உறுதியாகக் கூறுங்கள்" என்றார்... கருணையுள்ள பாபா, "கவலைப்படாதே, உனது ஹண்டி (மரண ஓலை) மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது..நீ விரைவில் குணம் அடைவாய்...ஆனால் தாத்யா பாடீலைக் குறித்து நான் கவலைப்படுகிறேன் என்று கூறினார் பாபா. மேலும் அவன் சக வருடம் 1840-ஆம் ஆண்டில் (1918) விஜயதசமியன்று மரணமடைவான்.. யாருக்கும் இதை வெளியிட்டு விடாதே...தாத்யாவிடமும் இதைக் கூறாதே.. ஏனென்றால் அவன் மேன்மேலும் பயமுடன் பீதியடைவான்" என்றார் பாபா...
ராமச்சந்திர தாதா பாடீல் சுகமடைந்தார்.. ஆனால் தாத்யாவின் வாழ்வைப் பற்றி எண்ணி நடுக்கமுற்றார்.. ஏனெனில் பாபாவின் மொழிகள் மாற்ற இயலாதவை என்பதாலும், இரண்டாண்டுகளில் தாத்யா மரணமடைவார் என்பதைக் குறித்துமே....பாலா ஷிம்பி (தையல்காரர்) என்பவரைத் தவிர வேறொருவரிடமும் இக்குறிப்பைக் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார் ராமச்சந்திர பாடீல்... ராமச்சந்திர பாடீல், பாலா ஷிம்பி என்ற இவ்விரண்டுபேர் மட்டும் தாத்யாவின் உயிரைப்பற்றி, என்ன ஆகுமோ என்று ஒரு விதப் பயத்துடன் இருந்தனர். ராமச்சந்திர பாடீல் படுக்கையை விட்டு எழுந்து நடமாடத் தொடங்கினார்... காலம் வேகமாகச் சென்றது... சக வருடம் 1840..இல் (1918- ஆம் ஆண்டு ) பாத்ரபத் மாதம் முடிந்து ஐப்பசி மாதம் வரத் தொடங்கியது...
பாபாவின் கூற்றுப்படியே தாத்யா காய்ச்சலினால் படுத்தப் படுக்கையானார். எனவே அவரால் பாபாவின் தரிசனத்துக்கு வரமுடியவில்லை. பாபாவுக்கும் காய்ச்சல் வந்தது..பாபாவிடம் தாத்யாவுக்கு முழு நம்பிக்கை இருந்தது... தாத்யாவின் காய்ச்சல் மோசமடைந்துகொண்டே வந்தது...அவரால் அசைய முடியவில்லை..எப்போதும் அவர் பாபாவை ஞாபகப்படுத்திக் கொண்டார்... பாபாவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.. முன்னர் பாபாவால் அறிவுருத்தப்பட்ட விஜயதசமி நாளும் வந்துக் கொண்டிருந்தது.
ராமச்சந்திர தாதாவும், பாலா ஷிம்பியும் தாத்யாவைப் பற்றி நினைத்து மேலும் அச்சமும், பீதியும் அடைந்தனர்...பாபா முன்னர் உரைத்தபடி தாத்யாவின் முடிவு வந்துவிட்டது என்று எண்ணி, அவர்கள் உடல் நடுங்கி வியர்த்தது...விஜயதசமியும் மலர்ந்தது... தாத்யாவின் நாடி மிக மெதுவாக அடித்துக் கொள்ளத் தொடங்கியது.. விரைவில் அவர் மரணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது... ஆனால் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. தாத்யா பிழைத்துக் கொண்டார்... அவரது மரணம் தவிர்க்கப்பட்டது...அவருக்குப் பதிலாக பாபா உடலை உகுத்தார்.. ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டதாகத் தோன்றியது. பாபா தாத்யாவுக்காகத் தமது உயிரைக் கொடுத்தார் என்று மக்கள் கூறினர்... அவர் அங்ஙனம் செய்தாரா...? பாபாவின் வழிமுறைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை என்பதால், இதன் மூல சூட்சமம் பாபாவிற்கு மட்டுமே தெரியும் என்றாலும், இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா தமது மரணத்தைப் பற்றி தமது பெயருக்குப் பதில் தாத்யாவின் பெயரைக் கூறி, சூட்சமமாக உணர்த்தியிருக்கின்றார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்....
🔥சீரடி பாபா, தன்னுடைய பக்தன் தாஸ்கணுவின் கனவில் தோன்றி தன்னுடைய இறப்பைக் குறிப்பிட்டு அறிவுருத்தியதைப் பற்றிய விளக்கவுரையை இங்கு காண்போம் .🔥
அடுத்தநாள் காலை அக்டோபர் பதினாறாம் தேதி பண்டாரீபுரத்தில் தாஸ்கணுவின் கனவில் பாபா தோன்றி, "மசூதி இடிந்து விழுந்துவிட்டது.. சீரடியில் எல்லா எண்ணெய்க்காரர்களும், கடைக்காரர்களும் என்னைப் பெருமளவு துயரப்படுத்தினர்...எனவே நான் அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டேன்...நான் இதை உனக்குத் தெரிவிக்கவே இங்கு வந்தேன்..ஆகவே அங்கு உடனே சென்று 'பக்கல்' என்கின்ற கதம்ப புஷ்பங்களால் என்னைப் போர்த்து" என்று அறிவுருத்தினார்.தாஸ்கணு இவ்விஷயத்தை சீரடியிலிருந்து வந்த கடிதங்கள் மூலமாக அறிந்தார்...எனவே அவர் சீரடிக்குத் தமது சீடர்களுடன் வந்து பஜனையும், கீர்த்தனைகளும் செய்யத் தொடங்கினார்...இறைவன் நாமத்தை பாபாவின் சமாதி முன்னால் நாள் முழுவதும் பாடினார்...ஹரி நாமத்துடன் தாமே ஒரு அழகிய பூமாலை தொடுத்துப் பாபாவின் சமாதி முன்னர் வைத்து, பாபாவின் பெயரால் மக்களுக்கு அன்னதானமும் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
🔥தன் உயரிய பக்தையான லஷ்மிபாய் ஷிண்டேவிற்கு பாபா, தான் சமாதி அடைவதற்கு முன் நவநாணயங்களை வழங்கியதில் இருக்கின்ற மூல சூட்சம விளக்கம் இங்கே....🔥
எல்லா இந்துக்களாலும் தசரா அல்லது விஜயதசமி மிகமிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது...பாபா தமது எல்லைக் கோட்டைத் தாண்டுவதற்கு இந்நாளைத் தேர்ந்தெடுத்தது பொருத்தமேயாகும்.. இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் பகவான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் என்றாலும், எப்போதும் அவர் உள்ளுணர்வுடன் இருந்தார்...கடைசித் தருணத்திற்குச் சற்று முன்னர் எவருடைய உதவியுமின்றி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து காட்சியளித்தார்..இந்தக் காட்சியைக் கண்டவுடன் பாபாவுக்கு அபாயம் நீங்கிவிட்டதென்றும், அவர் உடல்நலம் தேறி வருகிறாரென்றும் மக்கள் கருதினர்...தாம் விரைவில் காலமாகப் போவதை அவர் அறிந்திருந்தார்..எனவே லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தாம் ஏதும் தர்மம் செய்யவேண்டுமென்று நினைத்தார்.
இந்த லக்ஷ்மிபாய் ஷிண்டே ஒரு நல்ல வசதியுள்ள பெண்மணி...இரவும் பகலும் அவள் மசூதியில் வேலை செய்தாள்...பகத் மகல்சாபதி, தாத்யா, லக்ஷ்மிபாய் இவர்களைத் தவிர, வேறு எவருக்கும் இரவில் மசூதிக்குள் அனுமதியில்லை...ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துக் கொண்டிருக்கும்போது லஷ்மிபாய் வந்து வணங்கினாள்...பாபா அவளிடம், "ஓ..! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்" என்றார்... அதற்கு அவள், "பாபா சிறிதுநேரம் பொறுங்கள்...நான் ரொட்டியுடன் வருகிறேன்" என்று கூறிக்கொண்டு சென்றாள்...பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள்... அவற்றை பாபாவின் முன் வைத்தாள்...அவர் அதை எடுத்து நாய்க்குக் வழங்கினார்..அதற்கு லக்ஷ்மி, "பாபா..! இது என்ன..? உங்களுக்காக நான் அவசரமாக ஓடி நானே ரொட்டி தயாரித்தேன்...நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துக் கொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகின்றீர்களே...! வீணாக எதற்கு எனக்குத் தொல்லைக் கொடுத்தீர்கள்.?" என்றாள்...
அதற்கு பாபா, "ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய்... நாயின் பசியைப் போக்குவது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம்...அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் யான் நீக்கமற நிறைந்திருக்கின்றேன்...ஜீவராசிகள் அனைத்தும் வெவ்வேறாயிருப்பினும், யாவற்றிலும் இருக்கின்ற பசி ஒன்றல்லவா.. பசியாய் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பவன் எவனோ, அவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துக் கொள்வாயாக. இதை ஒரு ஆதார நீதியாகக் கருது" என்று பதிலளித்தார்...இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான்..ஆனால், ஒரு மிகப்பெரும் ஆதி மூல சூட்சமத்தை, ஏகத்தன்மையை பாபா இதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார்... தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருதலை, எவருடைய இயல்பானத் தன்மையும் பாதிக்காத நிலையில் அறிவுருத்தினார்...
இத்தருணத்திலிருந்து லக்ஷ்மிபாய் பாபாவிற்கு, தினந்தோறும் பாலையும், ரொட்டியையும் அன்புடனும், பக்தியுடனும் அளித்து வந்தாள்... பாபா அதை ஏற்றுக்கொண்டு பசி தணியும் வரை உண்டார்...இதில் ஒரு பகுதியை அவர் ராதாகிருஷ்ணமாயீக்கு லக்ஷ்மிபாயிடமே கொடுத்தனுப்புவார்..அந்த அம்மையாரும் பாபாவின் மீதியான பிரசாதத்தை உவப்புடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டாள்..இந்த நிகழ்வை ஒரு சம்பந்தமில்லாத விஷயமாகக் கருதக்கூடாது...இதன் மூலம் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எங்ஙனம் சாயீபாபா எல்லா ஜீவராசிகளிடமும் வியாபித்து ஊடுருவி நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்றும், அவைகளைக் கடந்தும் இருக்கின்றார் என்றும் அறிவுருத்தப்படுகின்றது..பாபா சர்வவியாபி, பிறப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர்...
பாபா லக்ஷ்மிபாயின் சேவையை நினைவு கூர்ந்தார்...அவளை எங்ஙனம் அவர் மறக்கமுடியும்....? உடம்பைவிட்டு உயிர் நீங்குவதற்கு முன் தமது கரங்களினால், ஒருமுறை ஐந்து ரூபாயும், மீண்டும் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்தார்... இதற்கு முன்னர் ஒன்பது நவநாணயத்தின் மூல சூட்சமத்தைப் பற்றி, இருபத்தொன்றாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி நவவித பக்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது... (இந்த நவவித பக்தியும் ஸ்ரீராமரால் சபரிக்கு உபதேசிக்கப்பட்டது.) அல்லது ஷிமொலங்கண் நேரத்தில் அளிக்கப்பட்ட்ட தஷிணையாக இருக்கலாம்.லக்ஷ்மிபாயி ஒரு வசதியான பெண்மணி....எனவே பாபா அவளுக்குக் குறிப்பால் உணர்த்தி, தன்னுடைய பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்பதுவித குணங்களை அறிவுருத்தி, நவ நாணயங்களை வழங்கியிருக்கலாம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்..
பாகவதத்தில் பதினொன்றாவது காண்டத்தில், பத்தாவது அத்தியாயத்தில், ஆறாவது பாடலில் முதலாவதில் உள்ள , இரண்டாவது செய்யுளில் முறையே முதல் ஐந்து குணங்களும், பின் நான்கு குணங்களும் கூறப்பட்டுள்ளன... பாபாவும் அத்தகைய ஒழுங்கைப் பின்பற்றி முதலில் ஐந்து ரூபாயும், பின்னர் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் அளித்தார்... அப்போது மாத்திரமல்ல. பலமுறை லக்ஷ்மிபாயின் கைகளில் ஒன்பது ரூபாய் சென்றிருக்கிறது..ஆனால் பாபாவின் இந்த ஒன்பது நவ நாணயங்களை எப்போதும் லஷ்மிபாயி நினைவில் கொண்டிருப்பார்கள்., எப்போதும் மிகுந்த விழிப்புணர்வுடன் கூடிய பாபா தமது கடைசித் தருணத்தில் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்தார்...தமது அடியவர்களுடைய நீங்காத அன்பாலும், பாசத்தாலும், பிணைப்பாலும் சிக்கிக் கொள்ளாதபடி பக்தர்கள் அனைவரையும் இருப்பிடத்திற்கு செல்லுமாறும், உணவருந்துமாறும் ஆணையிட்டார்.
காகா சாஹேப் தீஷித்தும், பாபு சாஹேப் பூட்டியும் பாபாவிடம் கவலையுடன் காத்திருந்தனர்...ஆனால் பாபா, அவர்களை வாதாவுக்குப் போய் உணவுக்குப்பின் வரும்படி கூறினார்... பாபாவின் சந்நிதாதனத்தைவிட்டு அவர்களால் செல்ல முடியவில்லை.. எனினும் பாபாவுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க முடியவில்லை...எனவே அவர்கள் மிகுந்த கவலை நிறைந்த மனதுடன் வாதாவிற்குச் சென்றனர்.. பாபாவின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது என்பதை அவர்கள் அறிவார்களாதலால், அவரை அவர்களால் மறக்க முடியவில்லை... உணவுக்காக அமர்ந்தாலும் அவர்கள் மனம் பாபாவிடமே இருந்தது...அவர்கள் உணவை உண்பதற்கு முன்பாக பாபா பூதவுடலை நீத்துவிட்டார் என்ற செய்தி வந்தது...உடனே தங்கள் உணவை விட்டுவிட்டு மசூதிக்கு ஓடினார்கள்... பயாஜி கோதேயின் மடியில் இறுதியாகப் படுத்திருந்ததைக் கண்டார்கள்...அவர் தரையில் விழவில்லை. தமது படுக்கையிலும் அவர் படுத்திருக்கவில்லை...ஆனால் அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்துக் கொண்டே, தமது சொந்தக் கரங்களினால் தர்மம் செய்துக் கொண்டே தமது பூதவுடலை நீத்தார்..ஞானிகள் ஒரு குறிப்பான காரணத்துடன் இந்த உலகிற்கு வருகை தருகிறார்கள்...அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியாகவே அமைதியாகவும், எளிதாகவும் இயற்கை எய்துகிறார்கள்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக ...அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக