ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
பகவான் கூறுகிறார்...உன்னை(ஆத்ம ஞானத்தை) தேடி( வெளியே அலையாதே..!?
ஆத்ம ஞானம் என்பது மிக எளிதாகப் பெறக்கூடிய ஒன்று.ஏனெனில் அதை எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது உன்னிடத்திலேயே உள்ளது. எப்போதும் இருந்து கொண்டே இருப்பது. நீ செய்ய வேண்டியதெல்லாம் வெளியே நோக்குவதை விட்டு, விட்டு உள்ளே திரும்பி நோக்க வேண்டும். அவ்வாறு நோக்க, நோக்க. நீ உடனே ஒரு பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்கிறாய்.ஆத்ம சிம்மாசனத்தில் அமர்ந்து ஞான சாம்ராஜ்யத்தை ஆளத்துவங்குகிறாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் திரும்பி காண வேண்டியதுதான்.அதுவே ஆத்ம ஞானத்தின் திறவுகோல்.
இது வரை நீ கற்றதெல்லாவற்றையும் மறந்து விடு.உனது புத்திசாலித்தனம், சாதுர்யம் எல்லாவற்றையும் துறந்து, ஒரு குழந்தை போன்ற தன்மையுடனும், நம்பிக்கையுடன் உள் நோக்கிச்செல்.. உன்னைத் தவிர வேறு ஒன்றுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை. எனவே ஒரு திறந்த இதயத்துடன் ஞானத்தை வரவேற்பாய்.. இதுவே உண்மையான சிரத்தை உண்மையான அறிதல் என்கிறார் பகவான்...
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக