ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2023

சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் ஒரு அற்புதமான சம்பவம் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏

ஶ்ரீசீரடி பகவானின் உபதேச மொழிகள்...🙏

சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் ஒரு அற்புதமான சம்பவம் ...!.🙏

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஓர் தருணம்...ஓர் அடர்ந்த புல் வெளியைக் கண்டது...அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு....இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது..அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன...! மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன...பலத்த மழை வரும்போல் இருந்தது...மான் தன் இடப்பக்கம் பார்த்தது...அங்கே, ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்...! மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது...மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது...! ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்..?அதற்கு வலியும் வந்து விட்டது..!என்ன நடக்கும்..?மான் பிழைக்குமா..?...மகவை ஈனுமா..?குட்டி பிழைக்குமா...இல்லை,..காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா..?வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா...?புலியின் பசிக்கு உணவாகுமா...? பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம்..! பசியோடு புலியும்,வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்..மான் என்ன செய்யும்..?கண்ணீருடன் கடவுளை சரணாகதி அடைந்தது..! 

இறைவன் விட்ட வழி என, மனதைத் தேற்றிக்கொண்டு, எதைப் பற்றியும் கவலைப் படாமல்.....தன் கவனம் முழுவதையும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.... மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை..... கடவுள் காப்பாற்றுவான் என்பதில் திட நம்பிக்கை கொண்டது...! அப்போது நடந்த நிகழ்வுகள்..!? மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்...!அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது..!தீவிர மழை, காட்டுத் தீயை தீயை அணைத்தது..! அந்த மான் அழகான ஒரு குட்டி மானைப்பெற்றெடுக்கிறது..!வாழ்வின் பெரும் புயலில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்...நாம் நம் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்..!அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்..!கடவுள் தூங்குவதும் இல்லை..! நம்மை துயரப்படுத்துவதும் இல்லை..!உன் செயலில் நீ முழு கவனம் செலுத்து..!மற்றவை நடந்தே தீரும்..!

ஓம் ஶ்ரீ  சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...