ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

தன்னலமற்ற பிரேமை பக்திக்கான கண்ணணின் நாடகம்..!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவானின் உபதேச பொன்மொழிகள்...🙏🙏

தன்னலமற்ற பிரேமை பக்திக்கான கண்ணணின் நாடகம்..!🙏ஒரு முறை துவாரகையில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை காண நாரத மகரிஷி வந்தார் அப்போது அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருக்கையில் நாரத முனிவர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நோக்கி கேட்டார். துவாராகையில் உள்ள தங்களது பத்தினிகளை பிருந்தாவனத்தில் இருக்கும் கோபிகைகளிடம் தங்கள் மனம் எப்போதும் எண்ணி கொண்டிருப்பதன் காரணம் என்ன. அதை நான் எவ்வாறு உணர்ந்து கொள்வது என்றார்..பகவான் கிருஷ்ணரும் நாரதரை நோக்கி சிரித்து பின்னர் மௌனமானார்...சிறிது நேர உரையாடலுக்கு பின்னர்  பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நாரதரை நோக்கி எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது" என்று சொன்னார். அதற்கு நாரதர், "இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள், எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்" என்று சொன்னார்..கிருஷ்ணரும், "நாரதரே,.! எங்கும் செல்ல வேண்டாம். இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னார். ருக்மிணியும் ஸத்யபாமாவும்,"எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா..? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்லவா..? மகாபாவம் வந்து சேருமே" என்று பதறினார்கள். நாரதர், மற்றும் அங்கு உள்ள அனைவரும், அந்தப் பாவத்தை நாங்கள் சுமக்க முடியாது" என்று கூறி மறுத்துவிட்டனர். நேரம் ஆக ஆக, கிருஷ்ணருக்கு தலை வலி அதிகரித்தது கொண்டே இருக்கிறது என்றார்.

பின்னர் நாரதரிடம் நீ உடனே பிருந்தாவனம் சென்று கோபிகைகளிடம் அவர்களது பாததூளியைக் கேட்டு வாங்கி வா. சீக்கிரம்" என்று சொன்னார். , நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று இடைப்பெண்களிடம் கண்ணனுடைய தலைவலியைப் பற்றியும், அதற்கான தீர்வையும் கூறினார். அதைக் கேட்ட உடனேயே, ஒரு கோபிகை தனது மேலாக்கை அவிழ்த்துத் தரையில் போட்டாள். எல்லா கோபிகைகளும் மண்ணில் குதித்து, தங்களது காலில் ஒட்டியிருந்த மண்ணை அந்த மேலாக்கில் ஏறி நின்று உதிர்த்தனர் இவ்வாறு ஒரு சிறு மண் மூட்டையை செய்து நாரதரிடம் கொடுத்தனர். கண்களில் நீர் வழிய , "நாரதரே.,! சீக்கிரம் சென்று எங்களுடைய பிரியமான கண்ணனுடைய நெற்றியில் இதைத் தடவுங்கள்" என்று சொன்னார்கள். நாரதர் அவர்களிடம், இது பெரிய பாவமென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்க, கோபிகைகள், "கண்ணனுடைய தலைவலி தீர்ந்தால் போதும், நாங்கள் எந்தப் பாவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை" என்று கூறினார்கள்.....

நாரதரும் துவாரகை சென்று பகவான் கிருஷ்ணரிடம் அந்த மூட்டையைக் கொடுத்தார். கிருஷ்ணர், மூட்டையிலிருந்த கோபிகைகளின் பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் தடவ தலைவலியும் சரியாகிவிட்டது. நாரதர், ருக்மிணி ஸத்யபாமாவிற்கும் உண்மையான பக்தியைப் பற்றிப் புரிந்தது. பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறினார் , "தலையில் இருந்து ஒரு சுமையை இறக்கி வைத்தாற்போல் உள்ளது, தலைவலி சரியாகிவிட்டது" என்று சொன்னான் இவ்வாறு , பிருந்தாவனத்து கோபியர்களின் உண்மையான தன்னலமற்ற பிரேம பக்தியின் பெருமையை நாரதருக்கும் மற்றவர்க்கும் உணர்த்த விரும்பிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தலைவலி நாடகம் நடத்தி புரியவைத்தார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...