ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏
மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை சுகம் மற்றும் பாதுகாப்பைத்தேடும் வேட்கையே...எதையெல்லாம் சுகம் தரும்... எதெல்லாம் பாதுகாப்பைத் தரும் என்று மனம் எண்ணுகிறதோ அதை அடைய மனம் ஏங்குகிறது. வீடு, பணம் சொத்து சுகம் மற்றும் பாதுகாப்பைத் தரும் என்று சிலர் எண்ணுகின்றனர். மனைவி, மக்கள், உறவு, நட்பு சுகம், பாதுகாப்பைத் தரும் என்று சிலர் எண்ணுகின்றனர்...ஆனால் நிரந்தரமான சுகம் என்பது உலகில் உள்ள எந்த பொருளிலும் கிடைப்பதே இல்லை. அந்த நிரந்தரமான சுகம் தன்னிலேயே இருக்கிறது என்பதை மனிதன் உணர்வதே இல்லை. சுகம் என்பது ஆத்மாவின் சொரூபமே...மனம் வெளியே உள்ள பொருட்களில் கூடி அனுபவிக்கும் போது துக்கத்தை அடைகிறது. மனம் மீண்டும் தன்னுடைய உண்மையான சொரூப சுகத்தை நாடித் திரும்புகிறது. இது மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
உதாரணமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, சுகமாக இருப்பதாக நினைக்கிறோம் ஆனால் சிறிது நேரத்திலேயே போரடிப்பதாக உணர்கிறோம். தூக்கம், சமாதி, மூர்ச்சை போன்றவற்றிலும் எப்போது மனம் அந்தர்முகமாகிறதோ அப்போதும் மனம் ஆத்ம சுகத்தை அனுபவிக்கிறது. தூக்கத்தில் எதையும் செய்யாவிட்டாலும் சுகமாக தூங்கினேன் என்கிறோம். இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளிக் கிளம்புவதும் மீண்டும் ஆத்மாவை அடைவதும் போக்கும் வரவுமாக நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது...
ஒரு ஞானியின் மனம் பிரம்மத்தை விட்டு என்றுமே அகலுவதில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ உலக விஷயத்தில் ஈடுபட்டு துக்கப்படுகிறது. சிறிது நேரம் பிரும்மத்திற்கு திரும்பி சுகமடைகிறது....
இறைவனை உணர்ந்தவர்கள் உலக பொருட்கள் சுகம் மற்றும் பாதுகாப்பை தரும் என்ற மாயையிலிருந்து விடுபடுவார்கள். மலை போன்ற சொத்துக்களையும் துச்சம் என்று கருதிய பல மகான்களை இந்த உலகம் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது....
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக