ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வெள்ளி, அக்டோபர் 20, 2023

புரிகிறதா...!??

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

புரிகிறதா...!??

குருவின் குணம் என்னவென்று அறியாத நாம் குருவை கோபித்து கொள்கிறோம்..குரு எந்த செயலை செய்தாலும் அதில் நமக்கு நல்லது மட்டுமே இருக்கும் ...அதை அறியாது நாம் புலம்புகிறோம்...ஒரு காட்டில், சிங்கமும், மானும் நண்பர்களாக இருந்தன. என்ன அதிசயம்! இரண்டும் தங்கள் நட்பிற்காக ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தன. “நீ என் உணவு என்றாலும், ஒரு போதும் உன்னை சாப்பிட மாட்டேன்’ என்றது சிங்கம்..“உனக்கு என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றுவேன்’ என சத்தியம் செய்தது மான். அந்த மானை குருவாக கொண்டிருந்தது ஒரு சின்னஞ்சிறு குட்டி மான்...

சிங்கத்தை நான்கு நாட்களாக காணவில்லை. மான் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. சிஷ்யனான மான் ஓடி வந்து, உங்கள் நண்பர் ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். என்னால் அந்த வலையை அறுக்க  முடியவில்லை, உடனே வாருங்கள்” என அழைத்தது...ஒப்பந்தப்படி, தன் சிங்க நண்பனைக் காப்பாற்றச் சென்றது மான். சிங்கம் பலவீனமான குரலில், ஒரு வேடன் விரித்த வலையில் நான்கு நாட்களாக மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்து விடுவான், அதற்குள் என்னை காப்பாற்று…என்றது.

மான், தன் வாயால், வலையை, மெதுவாகக் கடித்து அறுக்க ஆரம்பித்தது. குட்டி மான் சொன்னது…இந்த வலையை நீங்கள் வேகமாக ஒரு இழு இழுத்தால் போதும்… ஆனால் மெதுவாகக் கடிக்கிறீர்களே…வேகமாக இழுங்கள்…பெரிய மான், சிரிப்பை பதிலாகத் தந்து விட்டு மீண்டும் மிக மெதுவாக வலையைக் கடித்தது… சிங்கம், சீக்கிரமாகக் காப்பாற்று…” எனக் கெஞ்சியது....

 என்ன  நண்பன் நீங்கள்..? உங்கள் நண்பன் நான்கு நாட்களாக தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கிறான். வேகமாக வலையை அறுத்துக் காப்பாற்றாமல், இப்படி மெதுவாக வலையைக் கடிக்கிறீர்களே… இது நண்பனுக்கு செய்யும் துரோகம் இல்லையா… நான் உங்களைப் போல பெரிய ஆளாக இருந்திருந்தால், ஒரே கடியில் வலையை அறுத்து,சிங்கத்தைக் காப்பாற்றியிருப்பேன்…என்றது குட்டி மான்.

பெரிய மான் இப்போதும் புன்னகைத்து விட்டு, வலையை மெதுவாகவே அறுத்துக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் வேடன் வருவதை பார்த்ததும், வலையை வேகமாக ஒரு இழு இழுத்தது மான். வலை அறுந்து, சிங்கம் ஒரு புறமும், மான்கள் இன்னொரு பக்கமுமாக தப்பித்து ஓடின...

குட்டி மான், குருவைப் பார்த்து கோபமாக...வேடனைப் பார்த்தவுடன் வேகமாக வலையை அறுத்ததை முன்பே செய்திருக்கலாமே, எத்தனை முறை சொன்னேன், ஏன் வலையை மெதுவாக அறுத்தீர்கள்..?” என கோபப்பட்டது...மான் இப்போதும் சிரித்த படி சொன்னது...குழந்தாய்…வேகமாக ஒரே தடவை இழுத்து என்னால் வலையை அறுத்திருக்க முடியும். உள்ளே இருக்கும் சிங்கம், நான்கு நாட்களாகப் பட்டினி. “என்னை சாப்பிட மாட்டேன்’ என்று மட்டுமே ஒப்பந்தம் போட்டிருக்கிறதே தவிர, உன்னோடு அல்ல. வெளியே வந்த வேகத்தில் உன்னைச் சாப்பிட்டிருக்கும். அதனால் தான் வேடன் வரும் வரை வலையை மெதுவாக அறுத்தேன்” எனக் கூறி விட்டுப் புன்னகைத்தது....

நாம் எல்லோருமே அந்த குட்டி மான் போலத்தான்…அவசரமாக முடிவெடுக்கிறோம். நிதானிப்பதில்லை.... தான் நினைப்பதே சரி என்ற பிடிவாதம் இதெல்லாம் நமக்கே ஆபத்தாக வரும். அப்போது குருவானவரே நம்மை காப்பாற்ற வல்லவர்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...