ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
உன் கேள்வியில் என் பதில்...!
பார்த்தால் தான் தெரியும்..பால் வெள்ளையாக இருக்கும், பசுவின் மடியில் இருந்து கறந்தால் வருவது, நீர்மம் போல் இருக்கும் என்று எவ்வளவு சொன்னாலும் பாலின் சுவையை உணரவே முடியாது. இதுபோல எவ்வளவுதான் மெய்யறிவுநூல்களை ஆழ ஆழ நுணுகி நுணுகிப்படித்தாலும், "நான் யார்" என்றறியும் அறிவு பெறுவது அரிது...
திருநாவுக்கரசர் பெருமான் பாடிய புகழ்பெற்ற ஒரு...பாட்டின் கடைசி இருவரிகளில் பேருண்மை உள்ளது...ஆனாலும் பாலின் சுவையை அறியாதார் நூலறிவால் அறிய முற்படுவது போன்றே இருக்கும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பார்களே அதுபோலவே.....
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே
இதே போல காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்னும் பாட்டில்
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவா(ய்) அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே; விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்...
இதில் 'நான் யார்' என்பதற்கான 'விளக்கம்' நேர்பட உள்ளது...ஆனாலும் பாலின் சுவை போன்றதே.
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக