ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
பக்தர் :...மனத்தை நல்ல வழியிலேயே நிலைத்திருக்கச் செய்வதெப்படி...?
பகவான்...எல்லா உயிர்களுமே தங்கள் இருப்பையும் தங்களைச் சூழ்ந்திருப்பவற்றையும் உணர்ந்து அப்புத்தியால் வாழ்க்கையை நடத்துகின்றன . ஆனால் தினசரி வாழ்க்கையோடு நில்லாது , மேற்கொண்டு ஆலோசிக்கும் திறமை மனிதனிடம் காணப்படுகிறது ..இருக்கும் நிலைமையிலுள்ள குறைகளைக் கண்டு குறைவற்ற வாழ்க்கையை நாடி ஏதேதோ முயல்கிறான்...எதனிலும் நிலைத்த இன்பம் காணாது தவிக்கிறான்..நிலைத்த இன்பமே அவனது இயல்பாதலால் அதை அறிந்தடைந்தாலன்றி மனம் அமைதியுறாது .. முடிவில் நிலைத்த இன்பத்தை நாடி முயலும் தனது நிஜஸ்வரூபமே நிலைத்த இன்பமயமென்று உணர்ந்து அதனில் நிலைத்து அமைதியுறுகின்றான்...நிறைவுறுகின்றான்... தனதாற்றலால் புத்தி எவ்வெதனையோ நாடி முயன்று நிறைவுறாது..தனக்கொளி தருவதும் தன்னை இயக்கிக்கொண்டிருப்பதுமாம் , ஓர் பேரொளியை , ஓர் மஹாசக்தியை , ஓர் பரவுண்மையைச் சரணடைகிறது. அகந்தை அவ்வாறு ஒடுங்கியவிடத்தே அகண்டான்ம சொரூபம் தடையின்றியொளிர்கின்றது . அதுவே வாழ்க்கைப் பயன் , ஜன்ம ஸாபல்யம் ..
ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏.
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக