ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், அக்டோபர் 02, 2023

இறைவனை அடைதல்...!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழிதான் உள்ளது. இருப்பதில், மிக மிக இலகுவானதிலும் இலகுவான வழி இவ்வழி ஒன்றே..முதலில் இறைவனை அடைதல் என்றால் என்ன...?

முதலில் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியது இறைவன் என்பது எங்கோ இருக்கும் ஒரு பொருளோ, ஒரு நபரோ, ஆணோ, பெண்ணோ, அலியோ, அக்ரினையோ, உயர்தினையோ.. அல்ல. இறைவன் என்பது நம் அறிவால் விளங்கிக்கொள்ள வேண்டிய மாபெரும் சத்தியம்...!!!நம் உடல் என்பது ஒரு பொருளாக தோன்றினாலும், சற்றே சிந்தித்தால், பல எண்ணற்ற உயிரணுக்களின்/ செல்களின் ஒருங்கிணைப்பே நம் உடம்பு ஆகும். இதை யாராலும் மறுக்க முடியாது. பல அனந்தகோடி உயிரணுக்கள் ஒன்றிணைந்து உடம்பு என்னும் ஒருபொருள் ஆவது போல, சத்தியத்தில் உள்ள, சூரியன், சந்திரன், நீங்கள், நான், நாய், நரி, மீன், மான், கோள்கள், அண்டங்கள்...இவை அனைத்தின் ஒருங்கிணைந்த ஒன்றிற்கு அளிக்கும் பெயரே  பிரபஞ்சம், இறைவன்...என்றெல்லாம்...இதை நாம் அறிவால் தான் விளங்கவேண்டும்.. இதைத்தான் இறைவன் அறிவுஸ்வரூபன் என்பது... 

இறைவனை அடைதல்...

இங்கு நம் அறியாமையை எண்ணி நாம் கட்டாயம் முட்டிக்கொள்ளதான் வேண்டும். இறைவனில் ஒரு பகுதியாக, இறைவனில் ஒரு அங்கமாக, ஏன் இறைவனாகவே இருக்கும் நாம், நம்மை தனி ஜீவன் என்று எண்ணுவது எத்துனை மடமை. நாம் உடலளவில் என்றுமே இறைவனை பிரிந்தது இல்லை. ஏனெனில், உடம்பு முழுமையே வடிவான இறைவனில் ஓரங்கம். ஆனால் நாம் இறைவனில் இருந்து பிரிவது மனத்தால், எண்ணத்தால்....

நான் வேறு, இறைவன் வேறு என்ற எண்ணம் ஒன்றே நம்மை இறைவனிடம் சேராமல் தடுக்கிறது. எண்ணங்கள் ஓய்ந்த நிலையே இறைநிலை ஆகும்...அந்த எண்ணங்கள் ஓய இரண்டு அவசியம். ஒன்று ஞானம், மற்றொன்று பக்தி....இவை இரண்டுமே பறவையின் இரண்டு இறகுகளைப்போன்று நமக்கு. ஞானம் என்பது முன்கூறினார் போல, இறைவன் யார்...? அவனிடம் இருந்து நாம் எவ்வாறு பிரிகிறோம்? என்று "அறிதல்" (Theory), அறிந்தபடி, எண்ணங்கள் உதிக்காமல் வாழ்வதே பக்தி (Practical) இவை இரண்டில் எதில் தேர்ச்சி அடையாவிட்டாலும் தோல்வியே...

ஞானம் கண்களை போல - நடக்க சரியான பாதையை காட்டும்...

பக்தி கால்களைப்போல - சரியான பாதையில் நடக்கும்... 

"பக்தி இல்லா ஞானி முடவன் ஆவான்.

 ஞானம் இல்லா பக்தன் குருடன் ஆவான்"

ஆக அறிதலும், நடைமுறை படுத்துதலும் இரண்டும் அவசியம்...

இந்த நவீன யுகத்தில் மனதை கட்டுப்படுத்த எந்த உக்தியாலும் இயலாது. யாதாலும் பயன் இல்லை.யோகம் பழகினாலும், யோகம் செய்யும் அந்த அரைமணிநேரம் மனம் சும்மா இருக்கும். பிறகு தன் வேலையை துவங்கிவிடும்.பூஜையும், புனஸ்காரமும்,,தீர்த்த யாத்திரையும், புத்தகம் படித்தாலும்...அனைத்துமே அவ்வாறே..ஆனால் மகான்கள் கண்ட எளிய ஒரே வழி "இறைவன் திருநாமத்தை சொல்வது" ஒன்றே.. தியானம் செய்ய, யோகம் பழக, பூசை செய்ய...தனி நேரமும் இடமும் தேவை. ஆனால் இறைவனின் நாமத்தை கூற இடம் பொருள் ஏவல் ஏதும் இல்லை. எப்பொழுதும் எங்கும் கூறலாம்..

அனைத்தும் அவன் பெயர்களே. ஏதாவது ஒரு பெயரை திரும்பத்திரும்ப கூறுவதால் மனம் தானே நசிக்கும். சிந்தனைகள் தானே குறையும். எதைப் பற்றியும் கவலை வேண்டாம். இறைவன் நாமம் கட்டாயம் நம்மை காக்கும்...இறைநாம ஜபம் ஒன்றே முக்திக்கு ஒரே வழி...!!

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...