ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏
ஆன்மீக அனுபவத்தை மழையாக பொழிய சாய் இருக்க...அந்த மழையில் சிறிதும் நனையாமல் மாயை என்னும் குடை பிடித்து தன்னை மறைத்துக் கொண்டிருப்பது ஏனோ..
நீங்கள் இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் கடினமான சூழ்நிலைகள் யாவும் ,உங்கள் சிறுவயது முதல் உங்களால் உருவாக்கப்பட்டவையே...!!
நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை உங்களுக்கு நினைவுபடுத்தவே இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டுருக்கும் இந்த கடினமான சூழ்நிலைகள் ..!
நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்றால் தண்டணைக்கு ஆளாக மாட்டீர்கள் ..தவறு என்று இங்கு குறிப்பிடுவது .சொல்,செயல்,பார்வை, உணர்ச்சி இவைகள் மூலமாக அடுத்த உயிரை காயப்படுத்துவதே...!
உங்கள் மனதில் இந்த நிமிடம் இந்த பதிவை படிக்கும் பொழுது ..உங்கள் மனம் பாரமற்றதாக..மனஉளைச்சல் இல்லாமலும் இருந்தால் நீங்களும் சாயீயின் ஆன்மீக அனுபவ மழையில் நனைந்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் என்று உணர்வீராக..
அதே சமயம் உங்கள் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கினால்..நீங்கள் இன்னும் குடை(மாயை) பிடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று உணர்வீராக ..!
மழைச் சாரலில் நனைய உங்களை நீங்களே இனியாவது தயாராக்குங்கள்..!
இந்த பதிவை எந்த நேரத்திலும் நீங்கள் படிக்க உங்கள் அனுபவம் உங்களுக்கு உங்களை யார் என்று உணர்த்தும்..
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக