சனி, டிசம்பர் 30, 2023

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள்...!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான முதிர்ந்த நிலையில் இருப்பார்கள். அவரவர்களுக்கு எந்த மாதிரியான மார்க்கம் தேவையோ அதை அவர்களுக்குக் காட்டி, அவர்களை அதில் நிலைத்து நிற்கவும் செய்வேன் என்று அனைவருக்கும் கண்ணன் உறுதிமொழி  அளிக்கிறார். தான் செய்வது சரியோ, தனது வழி சரியோ என்று எந்த சாதகனும் ஐயம் கொள்ள வேண்டாம். ஆன்மீக வழியில் ஈடுபடும் எவரும் இறைவன் மேல் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு முக்கியமான கோட்பாடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சாட்சாத் பரமாத்வாவே கூறும்போது, எவருக்கும் அவர் செல்லும் வழியிலோ, தான் கடைத்தேறுவேனோ என்ற எந்த விதமான சந்தேகமும் வந்தால் சாதகன் இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடையவில்லை என்றே பொருள். அந்த நிலையை எவரும் தவிர்க்கவேண்டும். நீயே எல்லாம் என்று கண்ணனிடம் ஐக்கியமாவதே அனந்னிய பக்தி பாவம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ...சரணாகதி அடையுங்கள் ...!



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

சரணாகதி அடையுங்கள் ...!

மேக திரைகளைக் கடந்து சூரியன் வெளியே வரும்போது அது மட்டும் பிரகாசிக்காது, சுற்றியுள்ள அனைத்தையும் பிரகாசிக்கச் செய்வதுபோல, சாதகன் தன் உண்மை நிலையை அறிய வரும்போது அவனது அறிவும் அனைத்துலகையும் உள்ளது உள்ளபடி அறிய முடிகிறது. அது மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆன்மா பற்றி அறிய வைக்கவும் முடிகிறது...

ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்று விட்டார்...அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்னது..“நான் பாம்பை இன்னொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டு நின்றேன், பாம்பும் என்னை இன்னொரு பாம்பாகப் பார்த்துகொண்டு நின்றிருந்தது”. ஆக மற்றதைச் சரியாகப் பார்க்கும் அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அதனால் ரமணர் சொல்வதுபோல், “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு”. மற்றதெல்லாம் அறிவின்மை கலந்த அறிவே...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

வெள்ளி, டிசம்பர் 29, 2023

ஆன்மா...!

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மா..! 

எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்வாயாக…. உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றி விட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற ஞானானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்…. வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும் போது தான். அப்போது தான் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும் போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் கிடையாது.. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான் என்ற இரு “நான்”கள் அல்லவா இருக்கவேண்டும். “நான்” என்ற நமது உணர்வு எப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளதால், அது என்றும் ஒன்றானதாகவே இருக்கும். அங்கு இரு “நான்”கள் இல்லாததால் முப்புடிகளான வேற்றுமைகள் ஆன்மாவிற்குப் பொருந்தாது…

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

நீ அறிந்ததும் அறியாததும்...!?

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

நீ அறிந்ததும் அறியாததும்...!?

இறை சக்தி நம்மைத் துக்கப்படுத்திப் பார்ப்பதற்காக உருவாக்கவில்லை..நம் மூலமாக அது வாழுகின்றது. நம் மூலமாக அது தன்னை பூர்த்தி செய்து கொள்கிறது. நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகின்றது..நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சில நேரத்தில் நான் பார்ப்பதுண்டு. சிலர் தாங்கள் நினைத்ததைத் தங்கள் குழந்தைகள் மூலமாகப் பூர்த்தி செய்வார்கள். சில பேருடைய குழந்தைகளும் அவர்களைப் பூர்த்தி செய்வார்கள்...நாம் பிரபஞ்சத்தின் குழந்தைகள். பிரபஞ்சம் ஆனந்தத்தின் வெளிப்பாடு....எல்லாமே ஆனந்தமாகத்தான் இருக்க முடியும்...நாம் ஆனந்தமாக வாழ்ந்தோமானால், பிரபஞ்சம் நம் மூலமாக எதை அடைய வேண்டுமென்று நினைக்கிறதோ, அதை நிறைவேற்றிக் கொள்ளும். அப்போது நாம் பிரபஞ்சத்தின் இச்சையைப் பூர்த்தி செய்கின்றோம்...அதாவது, நம்முடைய குடும்பத்தில் பார்த்தோமென்றால், அப்பா சொத்து எழுதி வைத்திருப்பார்..

அதேசமயம், ஏதாவதொரு கடமையையும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். "இந்த சொத்தெல்லாம் உனக்குத்தான். ஆனால், வருடத்தில் ஒரே ஒரு முறை அண்ணாமலையாருக்கு ஒரு மண்டகப்படி நடத்திவிடு" என்று எழுதியிருப்பார்...அந்தக் கடமையைச் செய்தேமானால், சொத்தை அனுபவிப்பதற்கான தகுதி உண்டு. ஆனால், அந்தக் கடமையைச் செய்யவில்லை என்றால், சொத்தை அனுபவிப்பதற்கான தார்மீகமான தகுதி நமக்குக் கிடையாது...இந்தப் பிரபஞ்சம், கடவுள் நமக்கு அளித்த சொத்து. அவர் நமக்கு இட்டிருக்கின்ற கட்டளை, "ஆனந்தமாக வாழுங்கள்."

ஆனந்தமாக வாழுங்கள்" என்ற அவருடைய விருப்பத்தை "ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்" என்று அவர் கொடுத்த பொறுப்பை வாழ்வோமானால், இந்தப் பிரபஞ்சத்தை அனுபவிப்பதற்கான சுதந்திரம், தார்மீகமான உரிமை நமக்கு உண்டு....ஆனால், அவர் சொன்ன மாதிரி "ஜீவன் முக்தர்களாக" நாம் வாழவில்லை என்றால், அவர் கொடுத்த இந்த சொத்தை அனுபவிப்பதற்கான எந்தவிதமான தார்மீக உரிமையும் நமக்கு இல்லை..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ..!

ஆர்வமும் சிரத்தையுமுள்ள பக்தர்களின் விருத்தியில் நான் இருந்து கொண்டு, அவர்களின் தொன்று தொட்டு இருக்கும் அடர்ந்த அஞ்ஞானமாகிய இருளை என்னுடைய கருணையினால், மிக்க ஒளியுடன் விளங்கும் விவேகமென்னும் ஞான தீபத்தினால் முற்றும் நாசமடையும்படி செய்வேன் என்று உணர்ந்திடுவாய்....நல்லது ஒன்றை அடைய வேண்டும் என்ற சிரத்தை ஒருவனுக்கு இருந்தாலே, அவனிடம் இறைவன் குடி கொண்டுள்ளான் என்றே பொருள். இல்லையென்றால் அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது கூடத் தோன்றாதிருக்கலாம். ஆதலால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்புபவனுக்கே பிரபஞ்சமும் அதன் இயக்கங்களும் ஒவ்வொன்றாகப் புரிய வரும். அது மட்டுமல்லாது அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்ற இறுதி உண்மையும் தெரிய வரும். செய்யும் தொழிலே தெய்வம் என்று அப்படி செயல் புரிபவனுக்கு தொன்று தொட்டு விளங்கும் அறியாமை எனும் இருளைப் போக்கி ஞானத்தை நான் வலிய வந்து தந்திடுவேன் என்று பகவான் கிருஷ்ணர் நமக்கு உத்திரவாதம் தருகிறார். அந்த ஞானம் அடைந்தவனுக்கு வேறு எந்தப் பாதையிலும் செல்வதற்குத் தோன்றாது.

“தொன்று தொட்டு இருக்கும் இறைவன்” என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன “தொன்று தொட்டு விளங்கும் அறியாமை” என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா..? ஆமாம், “என்று நீ, அன்று நான்” என்று ஒரு சிவனடியார் கால அளவைப் பற்றிச் சொல்வாராம். அதாவது, என்று இறைவன் தான் தானாக இல்லாமல் இயற்கையின் பலவடிவினனாகக் காட்சி தந்து அருளினானோ, அன்றிருந்தே அறியாமை எனும் இருளும் “நான்” என்ற வடிவில் தொடங்கி உலவுகிறது என்று அதற்குப் பொருள். அப்படி இறைவனையும் தன்னையும் பிரித்துக் காண்பதினாலேயே நாம் அனைவரும் எண்ணிலாப் பிறவிகள் எடுத்து வருகிறோம். ஆக அனைத்தையும் ஒன்றாகக் காணவேண்டும் என்பதே நமது வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும். அதற்காகவே நமக்கு இறைவனிடமிருந்து தன்னைப் பிரித்து அறியாத அனந்னிய பக்தி வேண்டும்..

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻 

வியாழன், டிசம்பர் 28, 2023

இதில் 'நான் யார்' என்பதற்கான 'விளக்கம்' நேர்பட உள்ளது.

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

உன் கேள்வியில் என் பதில்...!

பாலின் சுவை என்பதைப் பாலைச் சுவைத்துப் பார்த்தால் தான் தெரியும்.பால் வெள்ளையாக இருக்கும், பசுவின் மடியில் இருந்து கறந்தால் வருவது, நீர்மம் போல் இருக்கும் என்று எவ்வளவு சொன்னாலும் பாலின் சுவையை உணரவே முடியாது. இதுபோல எவ்வளவுதான் மெய்யறிவு நூல்களை ஆழ ஆழ நுணுகி நுணுகிப்படித்தாலும், "நான் யார்" என்றறியும் அறிவு பெறுவது அரிது.

திருநாவுக்கரசர் பெருமான் பாடிய புகழ்பெற்ற ஒரு பாட்டின் கடைசி இருவரிகளில் பேருண்மை உள்ளது...ஆனாலும் பாலின் சுவையை அறியாதார் நூலறிவால் அறிய முற்படுவது போன்றே இருக்கும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பார்களே அதுபோலவே...

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே

இதே போல காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்னும் பாட்டில்

அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவா(ய்) அறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே; விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருளும் தானே அவன்⁠

இதில் 'நான் யார்' என்பதற்கான 'விளக்கம்' நேர்பட உள்ளது.

ஆனாலும் பாலின் சுவை போன்றதே..

உணர முற்பட்டாலெழிய இறையாற்றலின்  தன மையை  உணர முடியாது....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எங்கும் நிறைந்து வியாபித்துள்ள சத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள பிரம்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும்.

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

சருவத்தும் சார்ந்த தாம் சச்சிதானந்தப் பிரமத்தை ஞானக்கண் பெற்றான் – தரிசிப்பான் ஞானக்கண்ணில்லாதான் நண்ணானே காட்சி ஒளிர் பானுவை அந்தன் போலப் பார்..எங்கும் நிறைந்து வியாபித்துள்ள சத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள பிரம்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும். அவ்வாறு ஞானக் கண் இல்லாதவன், அதி பிரகாசத்துடன் கூடிய சூரியனை ஒரு குருடன் பார்க்க முடியாதது போல, அதை அணுகவே இயலாது..பிரம்மம் எங்கும், என்றும் இருந்து, எதிலும் வியாபித்துள்ளது என்றால் அது இங்கு, இப்போது தெரிய வேண்டுமே என்று கேட்போர்க்கு இந்த ஸ்லோகம் பதில் அளிக்கிறது. ஆதி காலத்தில் நாம் கண்ணால் பார்ப்பதுவும், காதால் கேட்பதுவும் வெவ்வேறு வழிமுறைகளால் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவை மட்டுமல்லாது வேறு பல வகைத்  தகவல்களும், வெவ்வேறு அலைக் கற்றைகளால் வந்தடைகின்றன என்பதை வளர்ந்து வந்த விஞ்ஞானம் நமக்குக் கற்பித்தது. எந்த அலை வரிசையில் ஒன்று வருகிறதோ அதை அறிந்துகொள்ள அதற்கேற்ற கருவி நம்மிடம் இருக்க வேண்டும். ஒளியைப் பார்ப்பதற்கு நமக்குக் கண்ணும், ஒலியைக் கேட்பதற்கு நமக்குக் காதும் என்று இருவேறு கருவிகள் இருக்கின்றன. அதேபோல நாம் கேட்கும் வானொலி மூலம் வரும் பேச்சுக்களும், பாட்டுக்களும் வெவ்வேறு அலை வரிசைகளில் வருகின்றன. அதனாலேயே அவ்வாறு வரும் வானொலி விவரங்களை நாம் கேட்க நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு ரேடியோ தேவைப்படுகிறது. அது போல பிரம்மத்தை உணர்வதற்கும் அதற்கு உரிய சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.

நமது ஊனக் கண்ணால் நமக்கு முன் உள்ளதைத்தான் பார்க்க முடியும். அதனால் கூட நம் முகத்தையே நாம் பார்க்க முடியாது..அதன் அமைப்பு அப்படி. ஞானம் எனப்படுவது நமது உள்ளார்ந்த நிலையைப் பற்றிய அறிவு. அதை உணர்வதற்கு அதற்கேற்ற கருவியான ஞானக்கண் வேண்டும். அந்தக் கண்ணைப் பெறுவதற்குத்தான் முன்பே சொல்லப்பட்டுள்ள சிரவணம், மனனம், நிதித்யாசனம் போன்ற வழிமுறைகள் தேவை. சூரியன் என்னதான் பிரகாசமாக இருந்தாலும், ஊனக்கண் இல்லாதவன் அதைப் பார்க்க இயலாது. அதே போல ஞான சூரியனான பிரம்மம் என்னதான் பிரகாசமாக இருந்து, சர்வ வியாபியாக இருந்தும் அதை உணரக்கூடிய ஞானக்கண் இல்லாதவன் எங்கும், எப்போதும் நிறைந்து, சத்- சித்- ஆனந்தம் என்ற தன்மைகளைக் கொண்ட பிரம்மத்தை அறிய முடியாது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

நினைவும் நீயே...நிலவும் நீயே...சகலமும் நீயே...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

நினைவும் நீயே...நிலவும் நீயே...சகலமும் நீயே...!

தாமு அண்ணாவும்‌, பம்பாய்‌ நண்பரொருவரும்‌ கூட்டாகப்‌ பஞ்சு பேர வியாபாரம்‌ செய்ய வேண்டுமென்றும்‌ அது பல லட்சங்களை லாபமாகக்‌ கொணரும்‌ என்ற எண்ணத்தின் விளைவு. (ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம்‌* 1936ல்‌ தாமு அண்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, பம்பாய்‌ விவகாரம்‌ கூட்டாளி இல்லாமல்‌ தரகர்‌ ஒருவரிடமிருந்து பெற்றதென்பதும்‌, தாமு அண்ணா மட்டும்‌ லாபம்‌ பெறுவார்‌ என்றும்‌ கூறப்பட்டிருக்கிறது).

வியாபாரம்‌ நன்றாயிருக்கிறது என்றும்‌, எவ்வித அபாயமும்‌ இல்லை என்றும்‌ வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என்றும்‌ தரகர்‌ எழுதி இருந்தார்‌. தாமு அண்ணா மனதில்‌ ஊசலாடிக்‌ கொண்டிருந்தார்‌..இந்த விவகாரத்தில்‌ உடனே முடிவெடுக்க அவரால்‌ முடியவில்லை. இதைப்பற்றி அவர்‌ சிந்தித்தார்‌. அவர்‌ பாபாவின்‌ பக்தர்‌. எல்லாத்‌ தகவல்களையும்‌ கொடுத்து அவர்‌ ஷாமாவுக்கு ஒரு கடிதம்‌ எழுதினார்‌. இது குறித்து பாபாவைக்‌ கேட்டு அவரது ஆலோசனையை எழுதும்படியும்‌ வேண்டிக் கொண்டிருந்தார்‌...அடுத்த நாள்‌ கடிதம்‌ ஷாமாவுக்குக்‌ கிடைத்தது. மத்தியானம்‌ மசூதிக்கு வந்து, அதை பாபாவின்முன்‌ வைத்தார்‌. ஷாமாவை விஷயம்‌ என்னவென்று கேட்டு, கடிதம்‌ எதைப்‌ பற்றியது என்று வினவினார்‌.

ஷாமா :..சில விஷயங்கள்‌ பற்றி அஹமத்நகரைச்‌ சேர்ந்த தாமு அண்ணா தங்களைக்‌ கேட்க விரும்புகிறார்‌.

பாபா :..அவன்‌ என்ன எழுதுகிறான்‌..? என்ன திட்டம்‌ போடுகிறான்‌ கடவுள்‌ கொடுத்ததைக்‌ கொண்டு திருப்தியடையாமல்‌ ஆகாயத்தைப்‌ பிடிக்க முயற்சி செய்வதாகத்‌ தெரிகிறது. கடிதத்தைப்‌ படி.

ஷாமா : தாங்கள்‌ இப்போது கூறியதைத்தான்‌ இக்கடிதம்‌ கூறுகிறது. ஓ! தேவா, நீங்கள்‌ இங்கே அமைதியாகவும்‌, அடக்கமாகவும்‌ அமர்ந்துகொண்டு பக்தர்களைக்‌ குழம்பச்செய்து அவர்கள்‌ அமைதியற்றுத்‌ தவிக்கும்போது சிலரைக்‌ கடிதம்‌ மூலமாகவும்‌, சிலரை நேரடியாகவும்‌ இங்கு இழுக்கிறீர்கள்‌. 

தங்களுக்குத்‌ தெரியுமென்றால்‌ பின்‌ என்னை ஏன்‌ படிக்கும்படிச்‌ சொல்லி வற்புறுத்துகிறீர்கள்‌..?

பாபா : ஓ..! ஷாமா, தயவுசெய்து அதைப்படி, சந்தர்ப்பவசமாக நான்‌ ஏதாவது பேசுவேன்‌. அதை யார்‌ நம்புவார்கள்‌..?

பின்‌ ஷாமா அக்கடிதத்தை வாசித்தார்‌. பாபா அதைக்‌ கவனத்துடன்‌ கேட்டு உணர்ச்சியுடன்‌ கூறினார்‌, “சேட்டுக்கு (தாமு அண்ணாவுக்கு) பைத்தியம்‌ பிடித்துவிட்டது. அவனது வீட்டில்‌ எதுவும்‌ தேவையிருக்கவில்லை. இப்போது அவனுக்கு இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து லட்சங்களைப்‌ பற்றிக்‌ கவலைப்படாமல்‌ இருக்கும்படி பதில்‌ எழுது... தாமு அண்ணா ஆவலுடன்‌ காத்திருந்த பதிலை ஷாமா அனுப்பினார்‌..அதைப்‌ படித்துவிட்டு லட்ச ரூபாய்களை லாபமாகப்‌ பெறவிருந்த அவரின்‌ ஆர்வமும்‌, நம்பிக்கையும்‌ தரைமட்டமாக்கப்பட்டதை அறிந்தார்‌. பாபாவைக்‌ கலந்தாலோசித்ததில்‌ தாம்‌ தவறு செய்துவிட்டதாகக்‌ கருதினார்‌. ஆனால்‌ பதிலில்‌ ஷாமா, பார்ப்பதற்கும்‌ கேட்பதற்கும்‌ அதிக வித்தியாசம்‌ இருப்பதாகவும்‌, அவரே ஷீர்டிக்கு நேரடியாக வரவேண்டுமெனவும்‌, பாபாவைக்‌ காணவேண்டும்‌ என்றும்‌ குறிப்பிட்டிருந்ததால்‌ தாமே ஷீர்டிக்குச்‌ சென்று பாபாவை நேரடியாக இவ்விஷயத்தைப்‌ பற்றிக்‌ கேட்பதே சரியானது என்று நினைத்தார்‌. எனவே அவர்‌ ஷீர்டிக்குச்‌ சென்று பாபாவைக்‌ கண்டு, வீழ்ந்துபணிந்து அவரது கால்களைப்‌ பிடித்துவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்‌. விவகாரத்தைப்‌ பற்றி வெளிப்படையாகக்‌ கேட்க அவருக்குத்‌ தைரியமில்லை. பாபாவுக்கு கொஞ்சம்‌ பங்கு கொடுத்தால்‌ நலமாயிருக்கும்‌ என அவர்‌ எண்ணினார்‌.

பாபா இந்த வியாபாரத்தில்‌ தமக்கு உதவி செய்தால்‌ அவருக்குக்‌ கொஞ்சம்‌ பங்கையோ, லாபத்தையோ அளிக்கலாம்‌ என மனதில்‌ நினைத்தார்‌. தாமு அண்ணா தன்‌ மனதில்‌ ரகசியமாகச்‌ சிந்தித்துக்கொண்டிருந்தார்‌. ஆனால்‌ பாபாவுக்கு எதுவுமே திரையிடப்பட்டிருக்கவில்லை. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது யாவும்‌ அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல்‌ தெளிவாக இருந்தது. குழந்தை இனிப்பை விரும்புகிறது. ஆனால்‌ தாய்‌ அதற்குக்‌ கசப்பான மாத்திரைகளைப்‌ புகட்டுகிறாள்‌. முன்னது அதன்‌ தேக நிலைக்குக்‌ கேடு செய்கிறது. பின்னது நலப்படுத்துகிறது. சிசுவின்‌ நலங்கருதியே தாய்‌ கசப்பான மாத்திரையை அதற்குச்‌ சமாதானம்‌ செய்து புகட்டுகிறாள்‌.

அன்பான தாயான பாபாவும்‌, பக்தர்களின்‌ நிகழ்கால, எதிர்கால நன்மைகளை அறிந்தவரானதால்‌ தாமு அண்ணாவின்‌ மனதில்‌ இருப்பதை அறிந்து, “பாபு, அம்மாதிரியான உலக விவாகாரத்திலெல்லாம்‌ (லாபப்பங்கு) நான்‌ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை” என்றார்‌. பாபாவின்‌ சம்மதமின்மையை அறிந்த தாமு அண்ணா அந்த எண்ணத்தைக்‌ கைவிட்டார்‌...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


புதன், டிசம்பர் 27, 2023

தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

கோவிலில் சென்று இறைவனை வணங்கும்போது, நமக்குத் தீபம் அல்லது கற்பூரம் ஆரத்தியின் மகிமையை புரிந்து கொள்ள முடிகிறதா...?

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை... சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை.. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்..? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன...ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை ரசித்தோம், பிரசாதத்தைப் பெற்று மகிழ்ந்தோம், வீடு திரும்பினோம் என்று நமது தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிட்டு வெறுமனே இருந்து விடக் கூடாது. கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர நடக்கும் கிரியைகளின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால், “ஐயா, நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. நீ பார்ப்பதனால் அது அங்கு அப்படி இருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா..? உடல் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே இருந்தது உலகம்? அதனால் உன் உடல் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு உடல் உணர்வு வரும்போது, நீ வெறும் தூலமாகிய உடல்தானா..? அப்போது சூட்சமமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிசூட்சமமான நான் எனும் எண்ணமாகிய அகங்காரம் இவைகள் இல்லையா..? ஆக அவை இல்லாமல் உடல் எங்கே இருக்கிறது..? அப்போது அந்த நான் என்னும் அதிசூட்சமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா...? அந்த உணர்வே பிரம்மம், ‘அதுவே நீ’. நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது” என்ற உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்...? இந்த சத்-சித்-ஆனந்த மய உண்மையை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம-ரூபத்தில் அல்லவா மயங்கி நிற்கின்றோம்....

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

கண்ணனிடம் கேளுங்கள் ..சரணாகதி அடையுங்கள் ...!

எப்படி “இருட்டில் பார்த்த இது பாம்பல்ல, கயிறுதான்” என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அதற்கு வேண்டிய ஒளி தேவைப்படுகிறதோ, அதே போன்று அஞ்ஞானமாகிய இருளில் மூழ்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ஞானமாகிய ஒளி தேவைப்படுகிறது. அப்படி ஒளி கிடைத்தாலும் பலருக்கு உடனே அது அனுபவமாக மாறாது.தை..இதை  காஞ்சி மகா முனிவர் இப்படிச் சொல்வார். பல வருடங்களாக ஒரு கிணற்றுத் தண்ணீரில் மூழ்கியிருந்த ஒரு பித்தளைச் சொம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தவுடனே அது பளபளவென்று இருக்காது. பாசி படர்ந்து, களிம்பு ஏறி  அதன் நிறமே மாறிப் போயிருக்கும். அதை புளி, சாம்பல் முதலான பொருட்கள் கொண்டு அழுத்தித் தேய்க்கத்  தேய்க்க பளபளப்பு வருவது போல நமது முயற்சியின் வலிமை கொண்டு நம்மை நாம் அறிய வேண்டும் என்பார். இதுதான் சிரத்தை எனப்படுகிறது...

முயற்சி என்பதன் அளவும் ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்தது. வேறோர் இடத்தில் கண்ணபிரானே சொல்வதுபோல் நெருப்பைச் சூழ்ந்துள்ள புகையை அகற்ற ஒரு மெல்லிய தென்றல் போதும். ஆனால் ஒரு கண்ணாடியின் மேல் இருக்கும் கறையை அகற்ற ஓர் ஈரத் துணியும், அழுத்தித் துடைத்தலும் வேண்டும். ஒரு தாயின் சூலில் இருக்கும் சிசு வெளி வருவதற்கோ, அதற்கு வேண்டிய முயற்சிகள் தவிர அதற்குண்டான காலம் வரும் வரை காத்திருக்கவும் வேண்டும். இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித் தரும் பாடம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உன்னை நீயே கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் இருக்கிறாய்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🏻🙏🏻🙏🏻

உன்னை நீயே கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் இருக்கிறாய்...!

ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்...

சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்..?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக் கொண்டாராம்...

மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.

குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்...

சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


திங்கள், டிசம்பர் 25, 2023

சில சமயங்களில் அவனது மறுமொழி ‘இல்லை’.



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

சில சமயங்களில் அவனது மறுமொழி ‘இல்லை’...

இறைவன் தங்களது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பது இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்...ஏனெனில் இறைவன் சில சமயங்களில் அவர்கள் எதிர்பார்த்ததிலிருந்து அல்லது கேட்பதிலிருந்து மாறுபட்டு வேறுவிதமாக பதிலளிக்கிறான்...மனிதர்களின் முழு நிறைவு எனும் இறைவனது விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றும் வரை இறைவன் மனிதர்களின் விருப்பங்களுக்கிணங்க பதிலளிக்க மாட்டான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உலகத்திற்கும் சந்யாஸத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

உலகத்திற்கும் சந்யாஸத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. சம்பந்தமும் இல்லை... சந்யாஸத்தால் துறக்கவேண்டியது உலகத்தை அல்ல, நம் அறியாமையைத்தான். உலகத்தைத் துறத்தல் சந்யாஸமல்ல. ஞானத்தை உணர்தல் சந்யாஸம். இந்த ஞானம் துறவறத்திற்கு இட்டுச்செல்லும். துறவறம் என்பது இங்கு உலகத்தை துறத்தலன்று. அதன் மீதான பற்றைத்துறத்தல். உலகம் எப்போதும் போல அங்கேயே இருக்கும், ஆனால் அதன் மீதான நமது பார்வை மாறிவிடும். ஞானத்தை அடைந்தவன் எதையும் துறக்க வேண்டியதில்லை...அவசியமில்லாததும், மிகுதியானவையும் தானாகவே அறுந்துவிடும். துறவறம் என்பதற்கும் உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அகம் சம்பந்தப்பட்டது. அகத்தூய்மை அடைவது. நானென்பது இந்த உடல்மட்டுமல்ல, ஆத்மாவும் சார்ந்தது என்றுணர்வதனால், நமது அறியாமையும் பற்றும் அகல்கிறது...அதுவே முழுமையான ஆன்மீகம்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஞாயிறு, டிசம்பர் 24, 2023

நினைக்காத நிமிடங்களும்...மறக்காத மனமும்,..!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நினைக்காத நிமிடங்களும்...மறக்காத மனமும்,..!!

ஹேமத்பந்த்‌ :

பபபா பொருட்களைத்‌ தனியாகத்‌ தின்று நானறியேன்‌. பின்னர்‌ என்‌ மீது இக்கெட்ட வழக்கத்தை ஏன்‌ சுமத்துகிறீர்கள்‌..? ஷீர்டி சந்தையையே நான்‌ இன்னும்‌ பார்த்தது இல்லை. இன்றைக்கு, சந்தைக்கு நான்‌ போகவே இல்லை. பின்னர்‌ எங்ஙனம்‌ நான்‌ பருப்பு மணிகள்‌ வாங்கியிருக்க முடியும்‌..? அவைகளை வாங்காதபோது எப்படி நான்‌ உண்ண முடியும்‌..? எனதருகில்‌ உள்ளவர்களுக்குப்‌ பகிர்ந்து கொடுக்காமல்‌ நான்‌ ஒருபோதும்‌ எதையும்‌ சாப்பிடுவதில்லையே..!

பாபா :..அருகிலிருப்பவர்களுக்கு நீர்‌ கொடுப்பது உண்மைதான்‌. ஆனால்‌ ஒருவரும்‌ அருகில்‌ இல்லையென்றால்‌ நீரோ, நானோ என்ன செய்யமுடியும்‌..? ஆனால்‌ நீங்கள்‌ உண்ணும்முன்‌ என்னை நினைவில்கொள்கிறீரா..? எப்போதும்‌ நான்‌ உம்முடன்‌ இருக்கவில்லையா.,? பின்பு நீர்‌ உண்ணும்‌ முன்பாக எதையேனும்‌ எனக்கு அளிக்கிறீரா..?

சுதாமரின்‌ கதை..

மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமத்பந்த்‌ அதே மாதிரியான சுதாமரின்‌ கதையை நினைவுகூர்கிறார்‌. அதே தத்துவத்தை இக்கதையும்‌ விளக்குவதால்‌ இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது..

ஶ்ரீகிருஷ்ணரும்‌, அவரது அண்ணனான பலராமரும்‌ சுதாமர்‌ என்ற தோழருடன்‌ அவர்களது குரு சாந்தீபனி முனிவரின்‌ ஆசிரமத்தில்‌ வசித்து வந்தனர்‌. ஒருமுறை கிருஷ்ணரும்‌, பலராமரும்‌ காட்டிற்கு விறகு கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்டனர்‌. பின்னர்‌ சாந்தீபனியின்‌ மனைவி அதேபோல்‌ சுதாமரையும்‌ மூவருக்குமான கடலைப்‌ பருப்புக்களுடன்‌ காட்டுக்கு அனுப்பினாள்‌.

கிருஷ்ணர்‌, சுதாமரைக்‌ காட்டிடையே கண்டபோது அவரிடம்‌, “தாதா, நான்‌ தாகமாயிருப்பதால்‌ எனக்கு தண்ணீர்‌ வேண்டும்‌” என்றார்‌, அதற்கு சுதாமர்‌ “வெறும்‌ வயிற்றுடன்‌ தண்ணீர்‌ குடிக்கக்கூடாது. சிறிது நேரம்‌ இளைப்பாறுவது நல்லது‌” என்றார்‌. அவர்‌ தன்னிடம்‌ கடலை இருப்பதாகவோ, அதைச்‌ சிறிது அவர்‌ எடுத்துக்கொள்ளலாம்‌ என்றோ கூறவில்லை. கிருஷ்ணர்‌ களைப்பாய்‌ இருந்தமையால்‌ சுதாமரின்‌ மடியில்‌ தலைவைத்துப்‌ படுத்து குறட்டை விட்டார்‌. இதைக்‌ கண்டு சுதாமர்‌ தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத்‌ தொடங்கினார்‌. கிருஷ்ணர்‌ திடீரெனக்‌ கேட்டார்‌, “தாதா என்ன சாப்பிடுகிறாய்‌.,? சப்தம்‌ எங்கிருந்து வருகிறது..?”

அதற்கு சுதாமர்‌, “சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது..? நான்‌ குளிரால்‌ நடுங்கிக்கொண்டு இருக்கிறேன்‌. எனது பற்கள்‌ தாளம்‌ அடித்துக்கொண்டிருக்கின்றன. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக்‌ கூட என்னால்‌ திருத்தமாகப்‌ பாராயணம்‌ செய்யமுடியவில்லை” என்றார்‌.

இதைக்‌ கேட்ட சர்வவியாபியான‌‌ கிருஷ்ணர்‌, “மற்றவர்களது பொருட்களை உண்ணும்‌ ஒரு மனிதனைக்‌ கனவில்‌ கண்டேன்‌, அதைப்பற்றிக்‌ கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில்‌, ‘என்ன..? மண்ணா தின்பதற்கு உள்ளது..!’ எனக்‌ கேட்டான்‌. அதற்கு மற்றொருவன்‌ ‘அது அங்ஙனமே இருக்கட்டும்‌’ என்றான்‌. தாதா இது ஒரு கனவுதான்‌. நீ எதையும்‌ எனக்கில்லாமல்‌ உண்ணமாட்டாய்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌. ஆயினும்‌ கனவில்‌ கண்ட ஞாபகத்தில்‌ நீ என்ன உண்கிறாய்‌ என்று நான்‌ கேட்டேன்‌.,?” என்றார்‌.

சர்வவியாபியான கிருஷ்ணரைப்‌ பற்றியும்‌, அவர்தம்‌ லீலையைப்‌ பற்றியும்‌, சுதாமர்‌ எள்ளளவேனும்‌ அறிந்திருப்பாராயின்‌ அவர்‌ அவ்வாறு நடந்துகொண்டிருக்கமாட்டார்‌. எனவே தன்‌ செய்கைக்காக அவர்‌ வருந்தவேண்டியதாயிற்று. அவர்‌ கிருஷ்ணரின்‌ நெருங்கிய நண்பரானபோதும்‌ தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில்‌ கழிக்க வேண்டியதாயிற்று.

ஆனால்‌ பின்னர்‌ அவர்‌ கிருஷ்ணருக்குத்‌ தன்‌ மனைவியின்‌ சொந்த உழைப்பால்‌ ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர்‌ மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன்நகரத்தை அளித்தார்‌. மற்றவர்களுடன்‌ பகிர்ந்துண்ணாது தனியாகத்‌ தின்போர்‌ இக்கதையை நினைவில்‌ வைக்கவேண்டும்‌. கடவுளுக்கு முதலில்‌ சமர்ப்பித்து அவைகள்‌ அவரால்‌ திருப்தி அடையப்பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும்‌ என்று ஸ்ருதியும்‌ பகர்கின்றது. பாபாவும்‌ நமக்கு அதையே அவர்தம்‌ ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில்‌ கற்பித்திருக்கிறார்‌...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻🔥

நிறம் மாறாத பூக்களாக இருக்க பழகு..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

நிறம் மாறாத பூக்களாக இருக்க பழகு..!

மனதிலே தோன்றும் எண்ணங்களை மட்டுமே நன்றாகக் கவனித்து வாருங்கள் அந்த எண்ணங்களே சொற்களாக வெளிப்படுகின்றன. நாம் பேசுகின்ற சொற்களை நன்றாகக் கவனித்துப் பேசுங்கள் சொற்களே செயல்களாக மாறுகின்றன. நமது செயல்களை நன்றாகக் கவனித்து வாருங்கள் செயல்களே நம்மை இந்த சமுதாய மதிப்புக்கும் அவ மதிப்புக்கும் ஆளாக்குகின்றன. செயற்கரிய செய்வார் பெரியர் என்கின்றார் வள்ளுவர். வையத்துள் வாழவாங்கு வாழ்பவர் வானத்துள் உறைகின்ற தெய்வத்துள் வைத்துப் போற்றப்படுவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றாகின்றது. இதற்கு பலர் பயிற்சிகளையும் தருவதைப் பார்க்கின்றோம். இன்னும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்து இந்தப் பயிற்சியை மக்கள் பெற்று வருகின்றனர். ஆனால் சில காலங்கள் மட்டுமே பயிற்சியும் செய்கின்றனர், அதே போல சில காலங்கள் மட்டுமே எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர். பின்னர் காலப் போக்கில் மீண்டும் தனது பழைய நினைவுகளுக்கே சென்று கண்டதையும் போட்டு மனதை காம, குரோத, மோக, லோப, மத மாத்சரியங்களால் மாசினை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு இணையம், தொலைக்காட்சி, அலைபேசி போன்ற ஊடகங்களும் உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்பட்டு தவறான எண்ணங்களை வளரச் செய்கின்றது. நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பது த்தவமசி எனும் வேத வாக்கியம். நமது ஆழ் மனதிற்கு அளப்பரிய சக்திகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்..ஆனாலும் என்னால் அப்படி நல்ல எண்ணங்களை வளரச் செய்ய முடியவில்லையே என்று என்னிடம் பலர் புலம்புகின்றார்கள். அவர்களுக்கெல்லாம் அடியேன் சொல்வது குரு சேவை செய்யுங்கள் என்று.

ஒரு உன்னத குருவுடன் தொடர்பில் இருக்கும் போது நமது எண்ணங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. அப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்த எண்ணங்கள் நல்ல சொற்களாக பரிமளிக்க ஆரம்பிக்கின்றது. நல்ல சொற்களையே பேசும் நாம் விரைவில் பல நல்ல செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். குரு தொடர்பு தொடர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும். கரும்பில் இருந்து சக்கைகள் பிழியப்பட்டு எப்படி கரும்புச்சாறு எடுக்கப்படுகின்றதோ அப்படி இனிய பேச்சினால் பேசி நமது கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளின் பார்வையில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும். அவர்கள் பார்வையினால் நாம் அழிந்து விடக்கூடாது. அப்படியே இருந்தாலும் நமது மனதிலே தோன்றுகின்ற எண்ணங்கள் நமது ஊழ்வினையினால் ஏற்படுபவையாகும். சஞ்சிதம் பிராரப்தம் ஆகாமியம் ஆகிய மூன்று வினைகள் உண்டு. இந்த வினைகள் நமது பூர்வ ஜென்மத்தின் கர்மாவின் அடிப்படையில் வருபவையாகும். ஆனால் இந்த வினைகளெல்லாம் ஒரு உன்னத குருவின் திருவடி தீண்டியவுடன் நமக்கு தீமைகள் சுட்டுப் பொசுக்கப்பட்டு தூய வடிவினில் வாழ்வைத் தொடர ஏதுவாகின்றது..

தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவார் என்கிறது கந்த புராணம்....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

சனி, டிசம்பர் 23, 2023

சரணாகதி ...!!

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

சரணாகதி ...!!

ஸரண் + ஆகதி = ஸரணாகதி. ’ஸரணம்’ என்றால் அடைக்கலம். ’ஆகதி’ என்றால் அடைதல். பாவம் அகலவும், தவறுகளை திருத்தி கொள்ளவும் கடவுளிடம் அடைக்கலம் புகுவது என்பது இதன் பொருள் .சரணடைந்தவரை காப்பது கடவுளின் தலையாய பொறுப்பு .பராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். 

பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று..? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா.? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா..?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்...ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்”என்றார் பட்டர். “என்ன காட்சி..?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல்,அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக்கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும்படிக் கெஞ்சியது.அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன்,முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான். இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்”என்றார் பட்டர்.

“இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது..?” என்று கேட்டார்கள். “என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்..? சரணாகதியை எப்படிச் செய்யவேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா..?இல்லை சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா..? அதற்கும் வாய்ப்பில்லை.

ஆனாலும்,அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து,அது கேட்டதைத் தந்துவிட்டான் அல்லவா..? சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படி கருணைக் காட்டுகிறான் என்றால், சரணாகத சாயியை,அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வார்...? அவனே கதி என்று அவர் கால்களைப்பற்றும் நம்மைக் கைவிடுவாரா...?

ஶ்ரீசாயியை அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல், இத்தனைக் காலம் வீணாகக் கழித்துவிட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி, இன்னும் என் மனத்தில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்துவிட்டேன்”என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

என்பாலே சித்தம் இருத்தி எப்போதும் உள்


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

"என்பாலே சித்தம் இருத்தி எப்போதும் உள்

அன்பாலே பத்தி செயும் அன்பருக்கு  என்னை அவர்...

சார்வார் எதனால் அச் சற்புத்தி யோகத்தை

ஈவேன் நான் என்னருளால் எண்"......

பொருள்... வெளி விஷயங்களை விட்டு, என்னிடத்திலேயே மனதை திடமாக நிறுத்தி, சதா சர்வ காலமும் மனப்பூர்வமாக என்னிடம் உள்ளமுருகிய பக்தியுடன் ஈடுபடும் பக்தர்களுக்கு, எந்த யோகத்தினாலே என்னை அவர்கள் அடையக் கூடுமோ, அந்த நல்ல மேன்மையான புத்தி யோகத்தை நான் என்னருளினால் அவர்களுக்குக் கொடுத்திடுவேன் என்று அறிந்து கொள்....

“எல்லோரும் ஆத்மா என்றால், அனைவருக்குமே பகவானின் தரிசனம் கிட்டி அனைவருமே மோக்ஷம் அடைய வேண்டும் அல்லவா?” என்று எவருக்குமே கேட்கத் தோன்றும். உண்மை அதுதான் என்றாலும் அந்த உறுதியான இறுதி நிலையை அடைய ஒவ்வொருவரும் அதற்கு வேண்டியபடி தங்களை தயார் செய்துகொண்டு அந்த முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எப்போதும் உள்ள ஆன்மா ஏதோ காரணத்தால் தன்னை அளவில் குறுக்கிக்கொண்டு பரமாத்மாவாக இல்லாது ஒரு உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் ஜீவாத்மாவாக ஆகி, தான் செய்யும் செயல்களால் மேலும் பேதங்களைக் கற்பித்துக் கொண்டதால், அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதும் அதனுடைய பொறுப்பு என்றே ஆகிறது.

தனது உண்மை நிலை பற்றி தனக்கு வெளியில் இருந்து ஒருவன் அறிய வந்தாலும், அந்த ஞானமானது  அறிவார்த்தமாக இருந்து மேலும் அதைப் பற்றி யோசிக்க வைக்குமே அல்லாது தனது அனுபவமாக மாறுவதற்கு அந்த அகங்கார நிலை உடனே இடம் கொடுக்காது. அதற்குத்தான் பகவான் கிருஷ்ணர் சொல்கிறபடி அவரிடம் சித்தம் வைப்பது மட்டும் அல்லாது, அவரிடம் உள்ளன்பும் வேண்டும். அப்படி இல்லையேல் அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது. அந்த அகங்காரம் ஒருவனைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கும் ஆண்டவன் அருள் வேண்டும். முதலில் அது பற்றி வெளியில் இருந்து தெரிய வரும், அப்புறம் சாதகன் மென்மேலும் இடைவிடாது முயற்சி செய்யும் போது, இறைவனுடன் கலக்கும் வழிகள் அவரவர்களுக்கு ஏற்றபடி அவ்வப்போது தெரியவரும். அதுதான் யோகத்தின் பல படிகள்

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.

வியாழன், டிசம்பர் 21, 2023

ஓம்சாய்ராம் 🙏

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஒரு ஊரில் ஒர் வியாபாரி இருந்தான் அவன் ஒரு சமயம் வெளியூர் சென்று வியாபாரம் செய்து மிகுந்த பொருளீட்டினான். திரும்ப வீட்டிற்கு வர எண்ணி தான் சம்பாதித்த பொன்னும், பொருளும், ரத்தினத்தையும்,  மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தான்...அவன் ஊரை அடைவதற்குமுன் ஒரு ஆற்றைக் கடந்தாக வேண்டும். அவன் ஆற்றிற்கருகே வந்து விட்டான்....ஆனால் அவனுக்கு நீச்சல் தெரியாது.ஆற்றில் அப்போதுதான் புது வெள்ளம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் ஏறுவதற்குள் ஆற்றை கடந்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டவன்  முட்டையை தலைக்குமேல் வைத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான்...பாதி ஆற்றைக் கடப்பதற்குள் திடீரென அதிகரித்த வெள்ளம் அவனை அலைக்கழித்தது. சமாளிக்க முடியாமல் வெள்ளம் கரைபுரண்டு வந்தது. ஒரு நிலைக்குமேல் வெள்ளம் வியாபாரியை இழுத்துச் சென்றது.

வியாபாரி எவ்வளவோ முயன்றும் மூட்டையை காப்பாற்ற முடியவில்லை.மூட்டையை வெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது வியாபாரி கத்தினான். அய்யோ எனது மூட்டை தண்ணீரில் போகிறது பிடியுங்கள் அதைப் பிடியுங்கள் என்று கூப்பாடு போட்டான்...இவனது கூக்குரல் கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் காதில் விழுந்தது. அவன் குபீரென தண்ணீரில் குதித்து மூட்டையை நோக்கி நீந்தினான்.  பலகட்டப் போராட்டத்திற்குப்பின் ஒரு வழியாக மூட்டையை காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தான்...

மூட்டையை கரையில் இழுத்துப் போட்டுவிட்டு கூப்பாடு போட்டவனை நோக்கி, உங்களது மூட்டையை காப்பாற்றி விட்டேன்.நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள். வந்து உங்களது மூட்டையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கத்தினான். அவன் இருந்தால்தானே, அவன் ஆற்றோடு போய் வெகு நேரமாகிவிட்டது...என்னை காப்பாற்றுங்கள் என்று கூப்பாடு போட்டிருந்தால் அந்த இளைஞன் அவனை காப்பாற்றியிருப்பான். மூட்டையை காப்பாற்றச் சொன்னதால் இப்போது மூட்டை காப்பாற்றப்பட்டது... 

நம்முடைய பிரார்த்தனை எப்போதுமே இவ்வாறாகத்தான் இருக்கின்றது...என் கஜானா எப்போதும் திறந்தே இருக்கின்றது. எவ்வளவு வேண்டுமானாலும் வந்து வாரிக்கொள்ளுங்கள் என்றார் பாபா...அவரது கஜானாவில் அப்படி என்ன இருக்கும்...? வீடு, கார், ஏ.சி, நிலம், தங்கம், வைரம், குழந்தை, பணம், புகழ். மனைவி, உத்யோகம்….. இப்படியாகவா இருக்கும். இவை எல்லாம் அழியும் பொருளல்லவா...? கடவுளே அவதாரம் எடுத்து வந்த பாபாவின் கஜானாவில் அழியும் பொருட்களா..? இதையா தன் பக்தர்களுக்கு கொடுக்க விரும்புவார் பாபா..?அழியா பொருட்களான,  சத்யம், நேர்மை, ஞானம், தவம்,கருணை, அன்பு,என்றல்லவா அவரது கஜானாவில் நிரம்பியிருக்கும். 

அழியும் பொருட்களை கொடுப்பதற்கு மனிதனே போதுமே, அவனால் அதுமட்டும் முடியும். அழியாத பொருளான ஞானத்தை கொடுப்பதற்காகத்தான் இறைவனே குருவடிவாக நம்மிடம் வருகின்றான். ஏனெனில் அவனால்தான் ஞானம் கொடுக்க முடியும். அவனையே, என்னிடம் ஞானம் கேட்பார் ஒருவருமில்லை. என்று வருந்த வைப்பவர் தானே நாம்....

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

பிரபஞ்ச பேறாற்றலின் வழியே உன்னை தேடு..!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

பிரபஞ்ச பேறாற்றலின் வழியே உன்னை தேடு..!நீ என்னை வந்தடைவது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. நம் சந்திப்பைத் தடுக்கும் சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அறியாமையின் காரணத்தால் ‘தானே ஆன்மா’ என்ற நோக்கில் மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...இதனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அது பல தடைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், மனத்தின் ஆற்றல் மிகவும் வரையறைக்குட்பட்டது. அதனால் ஒன்றும் செய்ய முடியாது...

நீங்கள் என்னை வந்து சேரும் நிகழ்வு ஏற்கெனவே முடிவாகிவிட்டது. ஆனால், அது எந்தவிதத்தில், எப்போது நடக்கும் என்பது ஓரளவுக்கு உன்னையும், ஓரளவுக்கு என்னையும் சார்ந்து இருக்கிறது. நீ எப்போது, என்ன செய்யப் போகிறாய் என்பதைப் பொறுத்தே நான் என்ன செய்வேன் என்பது முடிவாகும். ஒருவிதத்தில் சொல்லப்போனால் எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது...நான் எப்போதுமே உன்னைச் சேர்த்துக் கொள்வதற்கு ஆயத்தமாகத் தான் இருக்கிறேன்...இப்போதே கூட. நீதான் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நான் உன்னோடுதான் இருக்கிறேன். அதனால் என்னிடம் பிரிவுணர்வு இல்லை.

நீ எவ்வளவு தான் அலைந்தாலும்  அலைந்துக் கொண்டிருக்கிறாய். உன் தாகம், உன் தாபம், உன் வேதனை, உன் பிரிவாற்றாமை, ஏக்கம், எதிர்பார்ப்பு, எப்போதாவது சிலகணங்களில் என்னைத் தூரத்து நறுமணமாக உணரும் கணங்களில் நீ அடையும் சந்தோஷம், எல்லாவற்றிலும் நான் இழைந்திருக்கிறேன். உனக்குள் எழும் ஒவ்வோர் எண்ணத்திலும், ஒவ்வோர் உணர்ச்சியிலும், ஒவ்வோர் உணர்விலும் உள்ளே நான் பொதிந்திருக்கிறேன்...நிரந்தரமான தீர்வு...!

உனக்குள்ளிருந்து எழும் அன்பு, அறிவுணர்வு, புத்தி, அமைதி, சந்தோஷம், படைப்பூக்கம் அனைத்தும் என் பிரதிபலிப்புகள்தாம். என்னை அறிந்துகொள்ளாமல் இவை எவற்றையும் நீ தெரிந்துகொள்ள முடியாது. இப்போது உலகில் இவையெல்லாம் பொய்ப்பிம்பங்களாக உலவுகின்றன. உண்மையறிவு விழித்துக்கொண்டால்தான் இன்று உலகில் இருக்கும் துன்பம் எல்லாவற்றுக்கும் நிரந்தரமான தீர்வு வரும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உன் வழிகாட்டியாக நான் இருப்பதை மறந்து விடாதே...மறந்தால் உன் நிகழ்கால பாதையும் மறைந்துவிடும் ..,!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

 உன் வழிகாட்டியாக நான் இருப்பதை மறந்து விடாதே...மறந்தால் உன் நிகழ்கால பாதையும் மறைந்துவிடும் ..,!

ஞானம் என்றால் அறிவு என்பது பொருள். பொதுவாக உலகில் அஞ்ஞானத்தையே அறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் பிறக்கும்போது கூடவே இருக்கின்ற அறிவு தன்னைப் பற்றிய அறிவுதானே ஒழிய மற்றவையெல்லாம் கற்றுக்கொள்வதால் பெற்றுக்கொள்கின்ற புற அறிவு..

உலக விஷயங்கள் அத்தனையையும் கரைத்துக் குடித்திருப்பது தான் அறிவு என நினைப்பது தவறு. அந்த ஆள் மெத்தப் படித்தவர் என்கிறோம். ஆனால் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டிருக்கின்ற பட்டங்களின் பட்டியல் பெரிதல்ல. தன்னை அறிவதே உண்மையான அறிவு. ஆனால் இந்த அறிவைப் பற்றிய எண்ணமே பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. “அறியும் தன்னை அறியாமல் அறிவதெல்லாம் அஞ்ஞானம்” என்று கூறினார் ரமணர்...

இந்த உடலைத் தானாக எண்ணிக்கொண்டு புலன் இன்பங்களில் ஈடுபட்டு அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் வரை ஒருவனுக்கு மெய்யறிவு ஏற்படுவதில்லை. அதைப்பற்றி அறியும் ஆர்வமும் இயல்பாக ஏற்படுவதில்லை. பல பிறவிகளாகத் தொடர்ந்த தூண்டுதலின் காரணமாகவே ஒருவனுக்குப் பிரம்மஞானத்தைப்பற்றி அறிகின்ற அவா ஏற்படக்கூடும். அறிய வேண்டியதான இந்த மெய்யறிவைப் பற்றியே ஸ்ரீ கிருஷ்ணர் ஞான விஞ்ஞான யோகமாக அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார்.

இவ்வுலக விஷயங்களைப் பற்றிய கல்வியைப் பெறுவதற்கு ஒருவனுக்கு ஐம்புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றின் உதவி தேவை. இவற்றைப் பயன்படுத்தித்தான் உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆத்ம ஞானமாகிய மெய்யறிவை அடைவதற்கு இவை எதுவுமே பயன்படாது. சொல்லப்போனால் இவற்றை ஒதுக்கித் தள்ளி இவற்றிலிருந்து விடுபட்டால்தான் இவ்வறிவைப் பெறவே முடியும்...

இவ்வறிவைப் பெற சப்தப் பிரமாணம் ஒன்றுதான் வழி. அதாவது சொற்களின் வாயிலாக ஒன்றைப்பற்றி அறிவது. வேறு எந்த விதத்தாலும் அறிந்துகொள்ள இயலாத தன்னைப்பற்றி சொற்களால் விளக்குவதால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் ஒருவன் தன்னை சுத்த சைதன்யமாக அறிந்துகொண்டுவிட்டால் பிறகு அவனுக்கு இவ்வுலகில் அறிந்துகொள்வதற்கு வேறு எவ்வித அறிவுமே தேவையில்லை.

இப்படித் தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது. அப்படி முயல்பவர்களும் தானாக அறிந்துகொள்ள முடியாது. பிரம்மத்தைப்பற்றி அறிந்த, பிரம்மத்தைத் தான் என்று உணர்ந்துகொண்ட, அந்த பிரம்மத்திலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்ட, அதைப்பற்றி அறிந்தவர்களின் தொடர்பிற்குள்ளே இருப்பவரான தக்க குருவின் மூலமாகவே ஒருவன் இந்த அறிவைப் பெற முடியும்.

அப்படிப்பட்ட குருவாகவே கண்ணபிரான் நின்று அர்ச்சுனனுக்கு இந்த மெய்யறிவை எடுத்துரைக்கின்றார். தன்னையறிதலாகிய மெய்யறிவைப் பெற முயல்கின்றவனுக்குப் பகவத்கீதை தான் எளிய வழிகாட்டி. ஏனெனில் தெய்வமே மனித குலத்திற்கு நேரடியாக வழங்கிய கொடை இது. இதனை அறிவாகப் பெறுவதை விட அனுபவமாக உணர்தலே மிக உயர்ந்த பயனைத் தரும்....

அறிவு என்பது சேமிப்பு மட்டுமே. அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது. அனுபவிக்கின்ற நிலை அது. அனுபவத்தைச் சொல்ல முடியாது. உணரத்தான் முடியும். அப்படி உணர்ந்ததை உணர்த்தவும் சொற்கள் மட்டும் தான் வழி. இது தான் ஞான விஞ்ஞானச் சிறப்பு. உணர்த்தவும் உணரவும் கூடிய யோக வழி இது. அதுவே சொல்கின்றது. அப்படிச் சொல்வதை அதுவே கேட்கின்றது.

நீ முழுமையானவன். நீ பிரம்மம்! என்று சொல்வது வேதாந்தம். வேதத்தின் முடிவு இதுதான். வேதங்கள் நம்மைப்பற்றித்தான் எடுத்துச் சொல்கின்றன. நம்மைக் கடவுளாக நமக்குத் தெரியப்படுத்துகின்றன. வேதம் நீ, நீ என்று என்னை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதற்குக் குருவின் சொற்களே பிரமாணமாக அமைகின்றன.

ஒன்றைப்பற்றி அறிவதற்கு அறிபவர், அறியக்கூடிய பொருள், அறிவதற்கு உரிய கருவி ஆகிய மூன்று அம்சங்கள் தேவை. இங்கு குருவின் சொற்களைக் கேட்கின்ற நான், என் காது, கேட்கும் சத்தம் மூன்றும் என்னைப்பற்றி அறிய உதவுபவை. இவை மூன்றும் ஒத்து இருந்தால் தான் இவ்வறிவு ஏற்பட முடியும்.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

புதன், டிசம்பர் 20, 2023

மனிதன் தெய்வமாகலாம்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

மனிதன் தெய்வமாகலாம்...!

பிரம்மம் தன்னிலிருந்து உலகங்களைப் படைத்து, படைக்கப்பட்டவை எல்லாம் தானேயாகிக் கடைசியில் வெளிப்படுத்தியவற்றையெல்லாம் தானே தனக்குள் இழுத்துக்கொண்டு விடுகிறது. எல்லாமே பிரம்மம். சர்வம் பிரம்ம மயம் எனில் நமக்கு எல்லாமே சொந்தம். இதைப் புரிந்துகொண்டு நிகழ்வன எல்லாம் அவன் செயலே என்ற ஞானம் நமக்குள் பதிந்துவிட்டால் பிறகு எதனாலும் பாதிப்பில்லை. இதற்கு நாம் நம்மை அவனுடன் இணைத்துத் தியானத்தால் ஒன்றிவிட வேண்டும். நான் அல்லாதவற்றை எல்லாம் துறந்து விட வேண்டும். நான் அவன்! அவன் நான்! நானே பிரம்மம்...!

இருண்டு கிடந்த அறைக்குள் ஒரு விளக்கை ஏற்றிய கணமே ஒளி பரவவுதைப் போல் இந்த ஞானம் இக்கணமே முழுமையாக நம்மில் ஏற்படவேண்டும். எல்லாம் நானே என்ற இந்த ஞானத்தை மனித மனதில் உருவாக்குவதற்காகத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘‘அர்ச்சுனா! தண்ணீரில் நான் சுவையாக, சூரிய சந்திரனில் நான் ஒளியாக, வேதங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் பேராண்மையாக, பூமியில் புனிதமான மணமாக, தீயில் சூடாக, எல்லா உயிர்களிலும் ஜீவசக்தியாக, தவ சீலர்களிடம் தவமாக இருந்து வருகிறேன்!” என்கிறார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

உன்னில் உள்ளவன் யார்..?

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

உன்னில் உள்ளவன் யார்..?

பகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா..?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே..?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்..?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

பகவான் சொல்...!

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

பகவான் சொல்...!‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார..நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்...ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்..? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்..?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கேட்கிறோம்,  ‘முக்தியாவது யாது..?’

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்..? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் – எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.)  ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :-  ‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது’ என்று பொருள்படும்..இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்,  ‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

சனி, டிசம்பர் 16, 2023

விதியும் மதியும் யாருக்கு...!?!?

 

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

விதியும் மதியும் யாருக்கு...!?!?

" விதிமதி மூலம் விவேகம் இலார்க்கே

விதிமதி வெல்லும் விவாதம்  விதிமதிகட்கு

ஓர் முதலாம் தன்னை  உணர்ந்தர் அவை  தணந்தார்

சார்வரோ பின்னுமவை சாற்று..! "

பொருள் :... விதி மதிகள் என்னும் இரண்டுக்கும் ஆதாரமாயுள்ள அகங்காரத்தின் உண்மையை அறியாத அஞ்ஞானிகளுக்கு விதியை மதி வெல்லுமா, மதியை விதி வெல்லுமா என்ற வாத விவாதங்கள் தோன்றும். விதி மதிகளாகிய இரண்டுக்கும் ஒரே அடிப்படையான அகந்தையின் ஆதார உண்மையாகிய தனது ஞான சொரூபத்தை உணர்ந்தவர் அந்த விதி மதியென்ற இரண்டையும் ஒழித்தவராவர். அவர்கள் மீண்டும் விதி மதிகளாகிய அவற்றைச் சார்ந்து பாதிக்கப்படுவார்களோ..சொல்...!?

சாதாரணமாக விதி என்பதை ஈஸ்வர நியதி என்றும், மதி என்பது நமது முயற்சியால் ஆவது என்றும் சொல்வார்கள். சிலர் இரண்டுமே இறைவனின் சித்தப்படி நடக்கிறது என்று கொள்வர். மற்றவர்களோ மதி என்பதை நாம் நினைத்தபடி செய்வதால் அடைவது என்றும் அதற்குக் காரணம் நாமே என்றும் கொள்வர். ஆனால் தாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் சிலர் அது விதியின் சதி என்று அலுத்துக் கொள்வர். எப்படிப் பார்த்தாலும் விதி-மதி என்ற இரண்டுமே காரணம்-விளைவு (cause and effect) என்ற நியதிக்குள் கொண்டு வரப்படுவது என்று தெரிகிறது. அதாவது நாம் தற்போது நினைத்துச் செய்வதால் விளைவது என்றும் முன்னர் செய்த வினையால் விளைவது என்றும் இவைகளுக்கு காரண கர்த்தாவாக நாமோ, இறைவனோ இருக்கிறோம் என்றும் கொள்ளப்படுகிறது.  

கூர்ந்து கவனித்தால், விதி-மதி என்ற இரண்டுக்குமே மூலமாக நமது தேக-ஆத்ம பாவனையைத்தான் சொல்ல முடியும். ஏனென்றால் நாம் உடம்பு என்று கொள்ளும் போதுதான் நமக்கு ஆன்ம சிந்தனை வேண்டும் என்று தோன்றுகிறது. அப்போதுதான் மற்றவர்களை உள்ளடக்கிய உலகம் தெரிகிறது. அந்த நிலையில்தான் நமது முயற்சி, நமது செயல், அதன் விளைவுகள் என்றெல்லாம் தெரிகிறது. அங்குதான் விதியால் வந்தது, மதியால் விளைந்தது, விதி மதியை வெல்லுமா அல்லது மதி விதியை வசப்படுத்துகிறதா என்ற வாதங்களும் கிளைத்து எழுகின்றன.ஆக இவை அனைத்துக்கும் காரணமான “நான்” என்னும் அகந்தை என்ன என்று அதைத் தேடி அதன் மூலமான ஞான சொரூபத்தை உணர்ந்தவர்கள், விதி-மதி என்று ஏதும் தனியாக இல்லை என்றறிந்து அவை இரண்டையும் அழித்தவர்கள் ஆவர்...ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எத்தனை முறை என்னை நோக்கி எத்தனை கேள்விகளை எத்தனை பேர் கேட்டாலும் இதுதான் என் மொழி ...!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

எத்தனை முறை என்னை நோக்கி எத்தனை கேள்விகளை எத்தனை பேர் கேட்டாலும் இதுதான் என் மொழி ...!

"நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்துஇருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்..எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன், காப்பவன்,அழிப்பவனுமாம்"

ஸ்ரீசாயீ சச்சரித்திரம்..🙏🏻

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻

இதயவெளி தோன்றி இருளையழி ஞான

உதயரவி ஆன்மா ஒளிரும் – நிதமுமே

எல்லாவற்றும் பரவி எல்லாமும் தாங்கி நின்(று)

றெல்லாம் ஒளிர்விக்கும் எண்..!

அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாய்.

நமது ஊனக்கண்ணைப் பொருத்தவரை நாம் காண்பனவற்றுள் சூரியன் ஒன்றே தானே ஒளிர்வதாகவும், அதிலும் மிகப் பிரகாசமானதாகவும் இருப்பதால் தான்  ஆன்மாவிற்கு அதை ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. நமது உண்மை நிலையைப் பற்றி குரு மூலமோ, வேறு வழிகளிலோ அறிந்த ஒருவன் அதை உணர்ந்துக் கொள்ள, சாதாரணமாக வெளியுலகை நோக்கியுள்ள தனது பார்வையை உள்முகமாகத் திருப்பி, தியானம் செய்து அதனால் இடைவிடாது இருக்கும் உள்ளொளியை அனுபவத்தில் உணர்வதே ஆன்ம போதம் எனப்படுகிறது.

சூரியன் உதித்ததும் வேறு எந்த முயற்சியும் இல்லாது இருள் தானே அகலுவது போல ஆன்மாவைப் பற்றிய ஞானம் பிறந்ததும் நம் உண்மை நிலை பற்றி நமக்கு முன்பு இருந்த அறியாமையும் தானே விலகுகிறது. ஆனால் சூரியனோ காலத்திற்குக் கட்டுப்பட்டு காலையில் உதிப்பதும், மாலையில் மறைவதுமாக இருக்க, அனைத்தையும் ஒளிர்விக்கும் ஆன்மாவைப் பற்றிய போதமோ எப்போது உதிக்கிறதோ அதன்பின் அதற்கு அழிவோ, மறைவோ இல்லாது எப்போதும் நின்று நிலைத்து நிற்கிறது. எப்படி சூரியனின் ஒளியில் நாம் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோமோ, அதே போல ஆன்மா தரும் ஒளியினாலேயே நமது அனுபவங்கள் எல்லாமே நிகழ்கின்றன. ஆன்மாவின் தன்மைகளே உலகில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் வியாபித்து நமக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தருகின்றன...ஆனால் அதை அறியாத போது நாம் அவைகள் எல்லாம் அந்தந்தப் பொருட்களின் தன்மைகள் என்று தவறாக எண்ணுகிறோம். அந்த அறியாமையைப் போக்குவதே ஆன்ம போதம்.

அதனால் ஆன்மாவே தனது ஒளியால் அனைத்துப் பொருட்களையும் காட்டுவதோடு அல்லாமல், அனைத்திற்கும் ஆதாரமாகவும் அமைகிறது. அது இல்லாமல் அனுபவிப்பவன் இல்லை என்பதாலும், அனுபவிப்பவன் இல்லாமல் அனுபவிக்கப்படும் எதுவும் இல்லை என்பதாலும் அதுவே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

வியாழன், டிசம்பர் 14, 2023

எதை எதையோ கேட்டும்.,.எதை எதையோ கண்டும் ..எதை எதையோ பேசியும் என்னை சங்கடபடுத்தாதீர்கள் என் மொழி ஒன்றுதான் அது இதுவே...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

எதை எதையோ கேட்டும்.,.எதை எதையோ  கண்டும் ..எதை எதையோ பேசியும் என்னை சங்கடபடுத்தாதீர்கள் என் மொழி ஒன்றுதான் அது இதுவே...!

ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்...எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை...என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம்ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துக் கொள்கிறேன் "...பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில்கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும் இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார்...ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான்....இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற முடியும் ; தோன்றுகிறார்."

"ஸ்ரீசாயீ சச்சரித்திரம்..🙏🏻

உனக்கான பாதையை நோக்கி ஒரு பயணம் ...!


ஓம் ஶ்ரீ சாலயீநாதாய நமஹ..🙏🙏

ஒருவருக்கு  சொரூப ஞானம் வந்ததும் சீவனுக்கு தன்னையும் உலகையும் பற்றிய குழப்பம் நீங்கிவிடும்...ஜீவன் எனத் தன்னைப் பாவிக்கும் ஒருவன், இப்பரந்த உலகத்தில் தான் மற்ற எல்லோரையும் போல இன்னுமொருவன் என்றே நினைக்கிறான். “நான்என்று ஒருவன்” என்ற அந்த எண்ணத்தில் இருக்கும் அவனுக்கு, “தனக்கு” என்று சில பொருட்களும் சில மனிதர்களும் இருப்பதாகவும் எண்ணங்கள் வளர்கின்றன. இந்த எண்ணம் அவனுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் அவனுக்கே அது புரியாது. அவனைப் போலவே மற்றவர்களும் “தான் – தனது” என்று இருப்பதால் அவனுக்கு தனக்கு உள்ள அந்த எண்ணத்தைப் பற்றிய சந்தேகமும் வருவதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவனது உண்மை நிலையை அவன் அறியாமல் இருப்பதே. இந்த அறியாமை தான் அவனது இருள்...

வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவனுக்கு தனது நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, அவனை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான சூழ்நிலைகளும் அமைகின்றன. அப்போது அவனுக்குப் பொதுவாக இரண்டு வழிகளே இருக்கின்றன என்று ரமணர் சொல்வார். ஒன்று அவன் தன்னை யார் என்று கேட்டு தன் உண்மை சொரூபம் தெரிந்துகொள்வதற்கு ஞான விசாரம் செய்து தெளிவடைவது. மற்றொன்று தேர்ந்த குருவிடம் தனக்கு வழி காட்டுமாறு வேண்டி அவரைத் தஞ்சம் அடைவது. அப்படி அடைக்கலம் வேண்டிச் சென்றவனின் மனத்தை குரு நிர்மூலம் ஆக்கி அவனது உண்மை சொரூபத்தை அவனுக்குக் காட்டுவார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் அதே போலச் சொல்லி, நரேந்திரர் எப்படி தனது அகங்காரத்தை பூதாகாரமாக்கி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொண்டார் என்றும், நாக மகாஷயர் எப்படி தனது அகங்காரத்தைச் சுருக்கி தன்னை ஒன்றும் இல்லாமல் செய்துகொண்டார் என்றும் சொல்வார். முன்னது விசாரம் செய்து பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே தான் என்று உணர்வது, பின்னது குருவே எல்லாம் என்று அடிபணிந்து தன்னை ஒன்றும் இல்லாமல் ஆக்கிக்கொள்வது.

இந்த இரண்டு வழிகளில் தனக்கு ஒத்துக்கொள்ளும் வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னேறி தனது உண்மை சொரூபத்தை அறிபவனுக்கு, உதிக்கும் சூரியன் முன் இருள் ஓடிப்போய் திசைகள் தானே விளங்குவதுபோல, அதுவரை அவனை ஆட்கொண்டிருந்த அறியாமை தானே விலகும். எல்லாம் அப்போது ஒன்றே என்று தெரியவருவதால் “நான்-எனக்கு” என்ற எண்ணங்களும் அங்கு நிலைப்பதில்லை..

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏

புதன், டிசம்பர் 13, 2023

(தன்னை நன்கு அறிந்த விஞ்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.)

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

தன்னை அறிந்த விஞ்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.

இங்கு விஞ்ஞானி என்ற சொல் அனுபவத்தில் காண்பவன் என்ற பொருளைக் குறிக்கிறது. எப்போது ஒருவன் ஆன்ம விசாரம் செய்து அனுபவத்தில் தன்னைத்தான் நன்கு உணர்கிறானோ அப்போதே அவன் யோகியாகிறான். அவனுக்குத் தான் காணும் உலகில் உள்ள எல்லாமுமே, தான் காண்பதால், தன்னுள்ளே இருப்பதாகவும் தெரிகிறது. தன்னிருப்பைச் சார்ந்தே அனைத்தும் காணப்படுவதால் காணப்படும் அனைத்தும் தன்னைப் போலவே ஆன்ம மயமாய் இருப்பதாகவும் உணர்கிறான். இதுதான் யோகம் என்பதன் பொருளாகும்...

சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும். அதாவது முற்றும் உணர்ந்த யோகிக்கும் உலகம் உண்டு; ஆனால் அது ஆன்ம வடிவாய்த் தெரியும். அதனாலேயே அவனைப் பொருத்தவரை எல்லோருமே ஞானம் அடைந்தவர்கள்தான்; சிலர் அதை அறிந்தவர்கள், வேறு சிலர் அதை அறியாதவர்கள்.....ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


சாதாரணப் பார்வையில் எல்லோரும் வேற்றுமையைக் காண்கின்றனர்; யோகியோ அனைத்திலும் ஒற்றுமையைக் காண்கிறான். இந்த இரண்டையும் சம்ஸ்க்ருதத்தில் முறையே “பேத திருஷ்டி” என்றும் “அபேத திருஷ்டி” என்றும் கூறுவார்கள். இங்கு இந்த சித்தர் பாடலை நினைவு கூறுவது நல்லது: “கண்ணும் தானே, காணும் பொருளும் தானே; பேணும் அறமும் தானே, பேசா அனுபூதியும் தானே; எல்லாம் தானே, யாதும் அல்லாதானே”. அதாவது எதுவும் இல்லாதான் யாதுமாகி நிற்கின்றான்.

"அன்புக் குழந்தையே...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ பகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

"அன்புக் குழந்தையே...!

உனக்கு வருவதாக நினைக்கிற நன்மையும் தீமையும் நான் உன்னை சரிபடுத்துவதால் வருகிறது என்பதை உணர்ந்துகொள். உன்னை மேம்படுத்தவே, இதை மேற்கொண்டு வருகிறேன். உனது உணர்வு பக்தியாக மாறி என்னையே நீ குலதெய்வமாக வழிபடுவாய்.

ரயிலில் பயணம் செய்பவர்கள், தாம் கொண்டுவந்த எல்லாப் பை மூட்டைகளையும், பாரங்களையும் தலையில் ஏன் சுமக்கவேண்டும். தன்னையும் சேர்த்துப் பாரத்தையும் ரயிலே சுமக்கிறது என்பதை அறிவதுபோல் சாய் அனைத்தையும் நடத்துபவர் என்று அவர் மீது பாரங்களைச் சுமத்துவதல்லவா நியாயம்..! வீணாகச் சுமைகளைத் தலையில் (கவலை) சுமப்பது எதற்கு...?

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஞாயிறு, நவம்பர் 19, 2023

ஞானத்தை தேடி...!

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

ஞானத்தை தேடி...!

இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு முற்றிலும்  மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்...ஒரு சாது கடைத்தெரு வழியே நடந்துகொண்டு இருந்தார்..இறைச்சி விற்கும் கடையில் நின்றிருந்த ஒரு வாடிக்கையாளரின் குரல் சாதுவின் காதில் விழுந்தது. “பன்றி இறைச்சி வேண்டும். இருப்பதிலேயே எது முதன்மையான பகுதியோ, அங்கே இருந்து வெட்டிக் கொடு...!கடைக்காரன் குரல் சொன்னது...“இந்த இறைச்சியில் முதன்மையான பகுதி என்று எதுவும் இல்லை”இதைக் கேட்டதும் சாது ஞானம் அடைந்தார்...ஞானம் அடைவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, எல்லாமே புனிதம் என்று பார்ப்பது. இரண்டாவது எல்லாமே அசிங்கம் என்று பார்ப்பது. இரண்டிலும் பாரபட்சமற்ற தன்மை இருக்கிறது...இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு முற்றிலும்  மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்...

‘பன்றி இறைச்சியில் இந்தப் பகுதி ருசியாக இருக்கும். இதில் அவ்வளவு ருசி இருக்காது’ என்று இறைச்சி விற்பவன் பாகுபாடு பார்க்கத் தயாராக இல்லை. இதைக் கவனிக்கும் சாதுவுக்கு, இந்தப் பிரபஞ்சத்தில் மேன்மையற்ற அம்சம் என்று எதுவும் இல்லை என்பது சடாரென்று உறைக்கிறது. பகுதி பகுதியாகப் பிரிவினை செய்து, ஒரு பகுதியைக் கொண்டாடிக் கொண்டும், மற்றதை அவதூறு சொல்லிக்கொண்டும் உலகத்தைப் பார்ப்பதை விடுத்து, எல்லாவற்றையும் ஒருமித்த ஒன்றாகவே பார்க்கத் தொடங்குவதே ஞானத்துக்கான வழி என்பது விளங்குகிறது...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

உண்மையே ஆன்மீகம், சத்தியமே ஆன்மீகம்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻

🙏🏻🙏🏻உண்மையே ஆன்மீகம், சத்தியமே ஆன்மீகம்...!  அதைவிடச் சிறந்த ஆன்மீகமில்லை...🙏🙏

யார் உண்மையைப் பின்பற்றி மனம், மொழி, செயல்களால் நல்லவர்க்கு உதவியாயிருக்கின்றாரோ அவரே சிறந்த ஆன்மீகவாதி.  கற்றல், கேட்டல், தெரிதல், அறிதல், புரிதலால் மட்டுமே ஒருவர் ஆன்மீக குருவாக முடியாது...உணர்பவரே மற்றவர்களை வழிநடத்த முடியும்.  ஆம், இயற்கையின் நியதிகளை, பிரம்மத்தின் செயல்களை உணர்பவரே பிரம்மஞானி...உண்மை பேசுபவனுக்கே இயற்கை (பிரம்மம்) தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.  காரணம், இயற்கை உண்மையானது.  இயற்கையை  உணரும் ஒருவரே ஆன்மீக குருவாக முடியும்.  மற்றவர்கள் பெரும்பாலும் தமது தவறான வழிகாட்டுதலால் மக்களிடையே குழப்பத்தையே விளைவிப்பர்.  அது ஆன்மீகத்தின் தவறன்று.  போலி ஆன்மீகவாதிகளின் தவறு...

ஒரு நாள் வகுப்பறையில்  மாணவர்களிடம் ‘இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்..?  கையை உயர்த்துங்கள்’ என்றார் ஆசிரியர் .  அனைவரும் கையை உயர்த்தினர். ஆசிரியர்  அவர்களிடம், ‘இந்து என்றால் யார் தெரியுமா..? இந்து மதம் கூறுவதைப் பின்பற்றுபவனே இந்து.  சும்மா கோவிலுக்கு மட்டும் போய் நெற்றியில் பட்டையும், நாமமும் போடுபவன் இந்துவாக முடியாது.  மதம் என்ன கூறுகிறது...? 

உண்மையே பேசு, உழைத்து முன்னேறு, உன்னுடைய நன்மைக்கு அடுத்தவனைக் கெடுக்காதே என்பதே. .கிறிஸ்தவமும், இஸ்லாமும் இதையே போதிக்கின்றன. உங்களில் எத்தனை பேர் உண்மை பேசுகின்றீர்...?  கையை உயர்த்துங்கள்’ என்றார் ஆசிரியர் ...  ஒருவன் கூட இல்லை.  ‘ஆதலால் இங்கு இருக்கும் யாரும் இந்துவுமில்லை கிறிஸ்தவனுமில்லை முஸ்லிமுமில்லை.  மக்களும் இப்படித்தான் மதத்தைப் பின்பற்றுவதாக நினைத்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்’.  இதற்குக் காரணம் போலி ஆன்மீக குருக்களே. இயற்கை நிகழ்வுகளை உணர்தல் மிகவும் கடினம். 

 ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.  அரசர் ஒருவர் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று யோசித்துக் கொண்டிருந்தார்.  பல நாட்கள் காலையில் கடற்கரைக்கு வந்து மாலையில் தான் அரண்மனை திரும்புவது வழக்கம்.  ஒரு நாள் கடற்கரையில் ஒரு சிறுவன் காலையிலிருந்து மாலை வரை கடல் நீரை தேங்காய் மூடியில் எடுத்து கடற்கரைக்கு அப்பால் ஊற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார்.  சிறுவனின் அருகில் சென்று காரணம் கேட்டார்.  சிறுவனோ, ‘கடலை வற்றச் செய்யப் போகிறேன்’ என்றான். அரசரோ, ‘நீயோ சிறுவன்.  இந்த, சிறு தேங்காய் மூடியால் எப்படி பெருங்கடலை வற்றச் செய்ய முடியும்’ என்றார்...சிறுவனோ, ‘உங்கள் சிறிய தலையில் இருக்கும், சிறிய மூளையால் இப்பெரிய பிரபஞ்சத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ள நீங்கள் முயற்சிக்கும் போது இந்தக் கடலை வற்றச் செய்ய நான் ஏன் முயற்சிக்கக் கூடாது’ என்றான்.  அரசர் திகைத்தார்.  சிறுவன் மறைந்தான். 

சிறுவனாய் வந்தது இறைவனே என்றறிந்தார்.  ஆம்..! பிரபஞ்ச இரகசியங்களை அறிவது, உணர்வது மிகவும் கடினம்....உண்மையான குரு எல்லோரையும் சமமாகவே பாவிப்பார்...காரணம் அவர் பிரம்மத்தை உணர்ந்தவர்... எல்லா மதங்களும் ஒரே பிரம்மத்தின் வித்தியாசமான வெளிப்பாடுகளே என்று அவருக்குத் தெரியும்.  ஆம் பிரம்மத்தை உணர்பவரே ஆன்மீக குருவாக தகுதி உடையவர்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றல்.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றல். பிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு விசித்திரமான, அதிசயமான, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ சக்தியோ அல்ல. இயற்கையின் அத்தனை படைப்புகளும், உயிரினங்களும், உயிரற்றவையும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன. நீங்களும், நானும், மற்ற உயிரினங்களும், உருவாக காரணமாக இருந்த சக்தி அது....

பிரபஞ்ச ஆற்றலானது, தான் இயங்கும் இடத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கவாறு உருவமும், செயலும், தன்மையும், ஆற்றலும் அமையப்பெறுகிறது...“இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக இறைவனையன்றி எதுவுமே இல்லாதிருந்ததால், ஏதோ ஒன்றை எடுத்து இறைவன் அனைத்தையும் படைத்திருக்கிறான் என்பதல்ல. இறைவன் தன் சுயத்திலிருந்து அனைத்தையும் படைத்திருக்கிறான். அதனால் நாம் காணும் அனைத்தும் இறைவனின் மாறுபட்ட உருவங்களாக இருக்கின்றன” 

இறைவன்  கூறுவதைப் போன்று இந்த பூமியில் எந்த ஒரு படைப்பு உருவானாலும், அந்த படைப்பின் அடிப்படை, பிரபஞ்ச ஆற்றலாக இருப்பதினால், நாம் காணும் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலின் மறு உருவமாகவே இருக்கின்றன. எளிமையாகச் சொல்வதானால் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் கண்களால் காணக்கூடிய மனிதனாகவும், விலங்குகளாகவும், தாவரங்களாகவும், கருவிகளாகவும், பொருட்களாகவும் பரிமாணம் அடைந்திருக்கிறது.

டார்ச்லைட் வெளிச்சத்தின் மீது மனிதர்களின் கையை நெருக்கமாக காட்டினால், டார்ச்லைட் வெளிச்சம் கையின் மறுபக்கம் தெரியும். இதற்குக் காரணம் மனித உடலானது திடமான அமைப்பைக் கொண்ட உருவமல்ல, பல கோடி நுண்ணிய செல்களின் கோர்வைதான் மனித உடல்...மனித உடலின் செல்கள் உருவாக அடிப்படை ஆதாரமாக இருந்தது பிரபஞ்ச ஆற்றல்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏.

சனி, நவம்பர் 18, 2023

ஆன்மீக அனுபவத்தை மழையாக பொழிய சாய் இருக்க...


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

ஆன்மீக அனுபவத்தை மழையாக பொழிய  சாய் இருக்க...அந்த மழையில் சிறிதும் நனையாமல் மாயை என்னும் குடை பிடித்து தன்னை மறைத்துக் கொண்டிருப்பது ஏனோ..

நீங்கள் இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் கடினமான சூழ்நிலைகள் யாவும் ,உங்கள் சிறுவயது முதல் உங்களால் உருவாக்கப்பட்டவையே...!!

நீங்கள் அறிந்தும் அறியாமலும்  செய்த தவறுகளை உங்களுக்கு நினைவுபடுத்தவே இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டுருக்கும் இந்த கடினமான சூழ்நிலைகள் ..!

நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்றால் தண்டணைக்கு ஆளாக மாட்டீர்கள் ..தவறு என்று இங்கு குறிப்பிடுவது .சொல்,செயல்,பார்வை, உணர்ச்சி இவைகள் மூலமாக அடுத்த உயிரை காயப்படுத்துவதே...!

உங்கள் மனதில் இந்த நிமிடம் இந்த பதிவை படிக்கும் பொழுது ..உங்கள் மனம் பாரமற்றதாக..மனஉளைச்சல் இல்லாமலும் இருந்தால் நீங்களும் சாயீயின் ஆன்மீக அனுபவ மழையில் நனைந்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்  என்று உணர்வீராக..

அதே சமயம் உங்கள் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கினால்..நீங்கள் இன்னும் குடை(மாயை) பிடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று உணர்வீராக ..!

மழைச்  சாரலில் நனைய உங்களை நீங்களே இனியாவது தயாராக்குங்கள்..!

இந்த பதிவை எந்த நேரத்திலும் நீங்கள் படிக்க உங்கள் அனுபவம் உங்களுக்கு உங்களை யார் என்று உணர்த்தும்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

உன்னை போல் பலர் உண்டு...உன்னை போல சிலரே உண்டு...!!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

உன்னை போல் பலர் உண்டு...உன் தன்மைப் போல  சிலரே உண்டு...!!

தந்தையோடு கடைவீதிக்குச் செல்லும் குழந்தை தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொள்கிறது. அந்த சின்ன ஒரு பற்றுதல் குழந்தைக்கு அதீத நம்பிக்கையைத் தருகிறது. தந்தை தன்னைக் கைவிடமாட்டார், தந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என குழந்தை சந்தேகத்துக்கு இடமின்றி நம்புகிறது. தந்தை மீது அந்த குழந்தை வைக்கும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன...? தந்தையின் சுண்டு விரலின் வலிமையா...? இல்லை, குழந்தை தந்தையை அறிந்திருக்கிறது என்பது தான்.

அதே போல தான் இறைவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கைக்கு அடிப்படையும் ‘அவர் எப்படிப்பட்டவர்’ என்பதை நாம் அறிந்து கொள்வதில் தான் அடங்கியிருக்கிறது. இறைவனின் தன்மைகளை முழுமையாய் அறிந்துக்  கொள்ளாமல் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அறிந்து கொள்ளாமல் வைக்கின்ற நம்பிக்கைகள் வலுவிழந்து போய், வாழ்க்கைப் புயலில் சின்னாபின்னமாகி விடும்.

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

வியாழன், நவம்பர் 16, 2023

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்..?


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்..?

குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.

“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்...? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா...?” என்று கேட்க்கிறான்.

“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்” என்று கூறுகிறார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள். மாணவர்களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன. “இங்கே இருப்பது என்ன..? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா..?” என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு.

மாணவர்கள் ஒரு கணம் கழித்து “இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான் என்றார்கள்.

“இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா..? என்று குரு மாணவர்களை பார்த்து கேட்கிறார். மாணவர்கள் தெரியவில்லை என்று கூறினார்கள்.

“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. ”மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது.. அது வெளியே தெரியாமல் இருந்தது...ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.

இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போது தான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது.

நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார் குரு...

மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்..? என்று கேட்டார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்! என்றார்கள்.

“இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்...? சற்றுயோசித்து பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான் ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை...

இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻🙏🏻

பொறுமையின் காய் மிக மிக மிக கசப்பானது ஆனால் அதன் கனியோ இனிப்பானது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

பொறுமை என்கிற காய் மிக மிக மிக கசப்பானது ஆனால் அதன் கனியோ இனிப்பானது..

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ...ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....!ஒவ்வொரு மனிதனும்  தனித்தனி ஜென்மங்கள்...தனித்தனி பிறவிகள்..தனித்தனி ஆன்மாக்கள் அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்..அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா..? கெட்டதா..? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது....இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை...அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்...அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே...அவர்களுக்கு அனுபவம் தான் குரு.அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு...

ஓம் ஸ்ரீ  சாயீராம்...🙏🏻🙏🏻

புதன், நவம்பர் 08, 2023

அனைத்தும் பிரம்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரம்மத்தின் இயல்பும் வெவ்வேறானது.


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

பிரமம் உலகில் பிறிதாகும் அந்தப்

பிரமத்தணுவில் பிறிதாய்ப்  பிரமத்திற்கு

அன்னியம் ஏதும் அவிர்ந்தால் அது மித்தை

உன்னுக கானல் நீர் ஒத்து...!

அறியும் பிரம்மம் அறியப்படும் உலகத்திற்கு மாறான இயல்பு உடையது. பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு வேறெந்தப் பொருளும் இல்லை. பிரம்மத்திற்கு அன்னியமாக வேறெதுவும் தோன்றினால், அது உண்மையில் இல்லாததாயினும் காட்சிக்குத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்த் தோற்றம் ஆகும்...எங்கும் எப்போதும் இருப்பது பிரம்மம் என்றால், காணப்படும் உலகப் பொருட்களைக் கொண்டே பிரம்மத்தை அறியலாகாதா என்ற சந்தேகக் கேள்விக்குப் பதில் அளிப்பது போல இந்தச் செய்யுள் விளக்கம் கொடுக்கிறது.

அனைத்தும் பிரம்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரம்மத்தின் இயல்பும் வெவ்வேறானது....உலகம் நிலையற்றது; வரும், போகும் இயல்புடையது. அதனால்தான் நமது விழிப்பு நிலையில் காணப்படும் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் அறியப்படுவதில்லை. நமது கனவிலோ நாம் வேறோர் உலகத்தையே உருவாக்கிக் கொள்கிறோம். உலகின் நிலை இப்படி இருக்க, பிரம்மமோ எப்போதும் உள்ளது; நிலையானது. உலகம் ஓர் அறிவற்ற ஜடம்; பிரம்மமோ அறிவுமயமானது. உலகம் துன்ப மயமானது. பிரம்மமோ ஆனந்தமயமானது. அதனால் உலகம் பிரம்மம் அல்ல. நாம் முன்பு கண்ட அனலில் இட்ட ஓர் இரும்புக் குண்டு அனலின் தன்மையை எடுத்துக்கொள்வது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் பிரம்மம் வியாபித்து இருப்பதால், அவைகள் பிரம்மத்தின் தன்மைகளை எடுத்துக் கொள்கின்றன....இப்படியாக பிரம்மத்திற்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை என்பதால், பிரம்மத்தை விடுத்து உலகத்தின் உண்மையை அறியமுடியாது. அதனால் உலகில் உள்ளவைகளைக் கொண்டு பிரம்மத்தை அறியமுடியாது...

மேலும் பிரம்மத்திற்கு அன்னியமாக உலகம் இருப்பதாகத் தோன்றினால், அது இருப்பது போலத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்க் காட்சியே. உண்மையை அறியாதவனுக்கு இல்லாத கானல் நீர் இருப்பதாகத்தான் தோன்றும். உண்மையை அறிய முயற்சிப்பவனுக்கே அது மாயை என விளங்கும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஆசைகளைத் துறந்த பின் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது..?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏🙏

ஆசைகளைத் துறந்த பின் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது..?

மீன் ஒன்றைத் தூக்கிச் சென்ற ஒரு பருந்தை, வேறு சில பருந்துகளும், பல காக்கைகளும் சூழ்ந்து கொண்டு பருந்தைக் கொத்தி, மீனைப் பிடுங்க முயன்றன. அப்பருந்து எப்பக்கம் சென்ற போதிலும்,விடாது அவை கத்திக்கொண்டு பின் தொடர்ந்தன.. தொந்தரவு பொறுக்காது மீனைப் போட்டுவிடும்படி அதனைச் செய்தன. உடனே மற்றொரு பருந்து அம்மீனைக் கவ்விக் கொள்ள, அவையெல்லாம் இப்பொழுது அதைப் பின்தொடர்ந்தன. முந்தைய பருந்து, தொந்தரவு ஒழிந்து, ஒரு மரத்தின் கிளையில் அமைதியாக உட்கார்ந்தது. ஒருவன் தனக்குள்ள உபாதிகளை விட்ட பிறகே அவனுக்கு இவ்வுலகில் மன அமைதி உண்டாகும். புரிகிறதா..? ஆகவே பற்றின்மையை வளர்த்துக் கொண்டு தேவையற்ற ஆவலைக் குறைத்தால் மனநிறைவும் இயல் ஆனந்தமும் தானாக வெளிப்படும் தானே....ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏


செவ்வாய், நவம்பர் 07, 2023

பகவான் சொல்...!

 


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

பகவான் சொல்...!

‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்...நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்...நீங்கள்  பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல்...மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்...

ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்..? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்..?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கேட்கிறோம்,  ‘முக்தியாவது யாது..?’

எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்..? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துக் கொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

🙏. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ 🙏என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம்... எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் – எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.)  ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது  ‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது சிவம் மயமானது’ என்று பொருள்படும்....

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்,  ‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்..

ஓம் நமசிவாய..🙏

ஓம் ஸ்ரீ சாயீராம்.🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏.

விதை தூங்காது....!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

விதை தூங்காது....!

என்னுடைய மனதைப் போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு. வேலையைப் பாருங்கள்....விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்...அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்...நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்...நம் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்…நம்மைச் சுற்றி எதிராக நடப்பதைப் பற்றி கவலைப் படவேண்டாம்...நமக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றி பொருட்படுத்த வேண்டாம்...பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்...நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருங்கள்....நமது வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...நமது நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

விதைத்தவன் தூங்கி விடுவான் விதை தூங்காது .எண்ணியவன் தூங்கி விடுவான் எண்ணம் தூங்காது ...எண்ணம் போல் வாழ்க்கை...எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

சரணாகதி என்றால் என்ன என்பதை மீண்டும் ஒரு முறை மிகவும் எளிய முறையில் விளக்குகிறேன். நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு கொடுக்கிறேன்.


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

சரணாகதி என்றால் என்ன என்பதை மீண்டும் ஒரு முறை மிகவும் எளிய முறையில் விளக்குகிறேன்.....நான் ஒரு உதாரணத்தை உங்களுக்கு கொடுக்கிறேன்.....இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். முதல் நபர் நன்றாக உழைத்து சம்பாதித்து பணம்வைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டாவது நபர் ஒரு பரம ஏழை... பிச்சைக்காரர் என்று கூட வைத்து கொள்ளலாம்...இருவரும் ஒரு பெரிய கடைக்கு சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள் வாங்க செல்கிறார்கள்...முதல் நபர்  வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்க வேண்டும்...அவர் பணம் கொடுக்க முயலும் பொழுது தன்னிடம் ஒரு நூறு ரூபாய் குறைவாக இருப்பதை உணர்ந்தார். இப்பொழுது முதல் நபர்   நூறு ரூபாய் குறைவாக இருப்பதாக கடைக்காரரிடம் சொல்ல முடியாமல் சுய கௌரவம் தடுக்கிறது.  அதனால் அவரால் தனக்கு வேண்டிய பொருளை வாங்க முடியாமல் திரும்புகிறார். 

இப்பொழுது இரண்டாவது நபர் பிச்சைக்காரர் கடைக்காரரிடம் கேட்கிறார். எப்படி கேட்கிறார். “ஐயா என்னிடம் பணம் இல்லை...சம்பாதிக்கும் திறமையும் இல்லை. பசி காதை அடைக்கிறது.. கொஞ்சம் ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று பிச்சை கேட்டால் கடைக்காரர் எதையாவது எடுத்து இரண்டாவது நபர் பசியாற கொடுப்பார்...மேலும் அந்த பிச்சைகாரருக்கு ஏதாவது வேலையோ அல்லது வேறு ஒரு நல்ல வழியையோ சொல்லுவார்...

இப்பொழுது புரிகிறதா..!

நம்முடைய சுய கௌரவத்தை களைந்து இயலாமையை ஏற்றுக் கொண்டு இறைவனிடம் கையை உயர்த்தி என்னை ஏற்றுக்கொள் என்று கேட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வான்..இதைத் தான் சரணாகதி என்று சொல்கிறோம்.

சரணாகதியின் மேலும் ஒரு முக்கிய அம்சம்.

நாம் இறக்கும் தருவாயில் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அதுவாகவே பிறப்போம் என்பது வேதத்தில்  கூறப்பட்டுள்ள உண்மை...இது பல புராணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது... பொதுவாக மரணத் தருவாயில் நம்முடைய உபாதைகளும் கர்மாக்களும் நம்மை இறைவனை நினைக்க விடாது...

அப்பொழுது நம்மால்  இறைவனை அடைவது சாத்தியம்  இல்லாமல்  போகும். சரணாகதி செய்துவிட்டால் நாம்  மறந்தால் கூட  நாம் இறக்கும் தருவாயில் நம்மை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நம்மை கரையேற்றி விடுவான் நாராயணன்....இது ஒரு சரணாகதியின் முக்கிய அம்சம் ஆகும்...இதனை சிந்தித்தால் சந்திக்கலாம் மெய்ஞானத்தை....

ஓம் ஸ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்.....🙏🙏🙏

திங்கள், நவம்பர் 06, 2023

உங்களிடம் ஒரு கேள்வி ...?(ஒவ்வொரு தனி மனிதனுக்கும் )

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

இறைவன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறான்...? (ஒவ்வொரு தனி மனிதனுக்கும் )....நீங்கள் யாராவது ஒருவருக்கு ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு கொடுத்தால் அந்த பொருளை அந்த நபர் பயன்படுத்தி விட்டு கொடுக்கும் பொழுது  அந்த பொருள் நீங்கள் கொடுத்தது போலவே நன்றாக இருந்தால் நீங்கள் அப்பொழுது என்ன நினைப்பீர்கள் ..?

அந்த நபர் மீது உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் அந்த நம்பிக்கை எப்படி என்றால் அந்த நபருக்கு நீங்கள் திரும்பவும் அவர் கேட்கும்  பொருளை கொடுக்க முன்வருவீர்கள் அப்படிதானே..? அதே அந்த நபர் உங்கள் பொருளை பழுதாக்கியோ அல்லது சேதபடுத்தியோ உங்களிடம் திரும்ப கொடுத்தால் ..உங்களுக்கு அவர் மீது என்ன எண்ணம் தோன்றும்..?

அந்த நபர் திரும்ப எத்தனை முறை கேட்டாலும் நீங்கள் எந்த பொருளையும் கொடுக்க மறுப்பீர்கள் அப்படிதானே..?மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலேயே இப்படிப்பட்ட நம்பிக்கை சார்ந்த செயலாற்றம் இருக்கும் பொழுது நாம் இறைவனிடம் (பிரபஞ்சத்திடம்) கேட்கும் எந்த ஒரு பிரார்த்ததனைக்கும் எவ்வளவு நம்பிக்கை சார்ந்த செயல்முறை தேவை...!!

பிரபஞ்சம் உன்னிடம் கொடுத்த காற்று, நீர்,உணவு,உணர்ச்சி ,நிலம் ஆகியவற்றை அது கொடுத்தது போலவே அவற்றை அதன் தன்மை மாறாமல் நீ இதுவரை கொடுத்திருக்கிறாயா..! அல்லது கொடுக்க முயற்சியாவது எடுத்திருக்கிறாயா..!?தனித் தனியே ஒவ்வொரு  மனிதனுக்கும் இந்த பிரபஞ்சம் மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பயன்படுத்த கொடுத்தது...ஆனால் நீ அவற்றையெல்லாம் எப்படி திரும்ப  கொடுத்திருக்கிறாய்..?

கொஞ்சம் சிந்தித்து பார்..?கொடுத்ததை எல்லாம் சேதபடுத்தி வைத்திருக்கிறாய் அதனால் தான் உன் பிராத்தனையோ அல்லது வேண்டுதலோ இறைவனிடம் ஏற்றுக் கொள்ள மறுக்கபடுகிறது....உன் சுயசிந்தனையில் உனக்கு என்றைக்கு இறைவன் கொடுத்ததை நாம் சரியாக தான் பயன்படுத்தியிருக்கிறோம் என்று உணர்கிறாயோ அன்று உனக்கு நீ கேட்கும் பதில் கிடைக்கும்..இதுவும் நம்பிக்கை சார்ந்ததே.... அந்த நம்பிக்கையே இறைநம்பிக்கை...!

உங்கள் சுற்றுசூழல் நன்றாக இருந்தால் நீங்களும் நோய் நொடி இல்லாமல் நன்றாக இருப்பீர்கள்.நீங்கள் உண்ணும் உணவையும் , அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் சுத்தமாக இருக்க கவனியுங்கள்.. ..சேதபடுத்திவிட்டு திரும்பவும் உங்களுக்கு புது வாழ்க்கை  கேட்டால் படைப்பின் சக்தி எப்படி கொடுக்கும் ...?!

மீண்டும் பேசுகிறேன்...!? இன்னும் பேசுவேன் ஏனென்றால் பொருள் என்னுடையது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🙏🙏

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னிதமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி..!

இதன் பொருள் : அங்கே சூரியன் ஒளிர்வதில்லை... சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்..? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன...ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை ரசித்தோம், பிரசாதத்தைப் பெற்று மகிழ்ந்தோம், வீடு திரும்பினோம் என்று நமது தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிட்டு வெறுமனே இருந்து விடக் கூடாது. கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர நடக்கும் கிரியைகளின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால், “ஐயா, நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. நீ பார்ப்பதனால் அது அங்கு அப்படி இருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா..? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா...? உடல் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே இருந்தது உலகம்..? அதனால் உன் உடல் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு உடல் உணர்வு வரும்போது, நீ வெறும் தூலமாகிய உடல்தானா..? அப்போது சூட்சமமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிசூட்சமமான நான் எனும் எண்ணமாகிய அகங்காரம் இவைகள் இல்லையா..? ஆக அவை இல்லாமல் உடல் எங்கே இருக்கிறது..? அப்போது அந்த நான் என்னும் அதிசூட்சமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா..? அந்த உணர்வே பிரம்மம், ‘அதுவே நீ’. நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது” என்ற உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்..? இந்த சத்-சித்-ஆனந்த மய உண்மையை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம ரூபத்தில் அல்லவா மயங்கி நிற்கின்றோம்..!இதையே தான் ரமணர் “காணும் தனை விட்டுத் தான் கடவுளைக் காணல், காணும் மனோமயமாம் காட்சி..தனைக் காணும் அவன்தான் கடவுள் கண்டானாம்” என்று சொன்னார்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

ஞாயிறு, நவம்பர் 05, 2023

நான் ஒளி..காண்பதும் நானே காண வைப்பதும் நானே..!



ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🙏

நான் ஒளி..காண்பதும் நானே... காண வைப்பதும் நானே...🙏

எதன் ஒளியினால் ஒளிருமே இரவி யாதி எதனை அவை ஒளிர்க்க வேலாது  எதனாலே இந்த உலகெல்லாம் இலகும் அதுதானே அந்தப் பிரமம் அறி..! எது தரும் ஒளியால் சூரியன் முதற்கொண்டு அனைத்தும் பிரகாசமாக இருக்கின்றனவோ, எதனை அவைகள் எதுவும் ஒளிரச் செய்ய முடியாதோ, எதன் ஒளியால் இந்த உலகமெல்லாம் பிரகாசமாய் இருக்கிறதோ, அந்தப் பொருளே பிரம்மம் என்று அறிவாய்....

நாம் காணும் ஒளி என்று தொடங்கி நம்மைக் காண வைக்கும் ஒளியைப் பற்றிய மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய இந்த ஸ்லோகத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உலகத்தை நாம் காண்பது ஏதேனும் ஒரு ஒளியைக்கொண்டே நடக்கிறது. பகல் நேரம் என்றால் அது சூரிய ஒளியாகவும், இரவு நேரம் என்றால் சந்திரன், நக்ஷத்திரம் அல்லது ஒரு விளக்கின் துணை கொண்டோ நாம் எதனையும் காண்கிறோம். நமக்குப் பார்ப்பதற்குக் கண் இருந்து, நமது அந்தக்கரணங்களும் நம்முடன் ஒத்துழைப்பதனால் ஒன்றை நாம் காண முடிகிறது என்றாலும், ஒளி இல்லையேல் நம்மால் எதையும் பார்த்து அறிய முடியாது.

இந்தத்  தத்துவத்தைத்தான் நாம் கோவிலில் சென்று இறைவனை வணங்கும்போது, நமக்குத் தீபம் அல்லது கற்பூரம் ஆரத்தி காட்டி, பின் வரும் முண்டக உபநிஷத ஸ்லோகத்தையும் சொல்லி நமது உண்மையை நமக்கு நினைவூட்டபடுகிறது....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஆன்மாவை அறிய சாஸ்திர அறிவோ , புத்தக அறிவோ தேவையில்லை .

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

பகவான்.....

நான் படித்தவள் இல்லை , எனக்கு  ஏழு  குழந்தைகள்...தியானம் செய்ய  இவ்வளவு   பெரிய  குடும்பத்தில்  சிறிதும் நேரம்  கிடைப்பதில்லை ...." ஆன்ம  விசாரம்  எனக்குப் புரியவில்லை...எனவே  எனக்கு   எளிய வழிமுறையை கூறுங்கள்!

பகவான்....

ஆன்மாவை  அறிய  சாஸ்திர  அறிவோ,  புத்தக  அறிவோ தேவையில்லை ....வீட்டு  வேலைகளும் ,பொறுப்பும்  ஆன்மாவை அறிய  தடையில்லை .என்ன   வேலை   செய்து கொண்டுஇருந்தாலும்  சரி , உட்கார்ந்து  இருந்தாலும் , நடந்து  கொண்டிருந்தாலும்  சரி எப்போதும் உன்  மனதிற்கு "நான்,  நான் , நான்   என  இடை விடாமல் கூறிக் கொண்டு இரு...."இது  ஒரு  நாள்  நிச்சயம் ஆன்மாவில் கொண்டு போய்ச்  சேர்த்து விடும் ..."நான் " என்பது  கடவுளின்  பெயர் .... எல்லா  மந்திரங்களைக்   காட்டிலும்   இதுவே முதன்மையான  மிகச்சிறந்த  மந்திரம்....." ஓம்  "  மந்திரம் கூட இதற்கு  அடுத்தபடி தான் வருகிறது ....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

குருவின் உபதேசம் என் சுய நிலை அறிய எவ்வாறு உதவும் ?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

குருவின் உபதேசம் என் சுயநிலை அறிய    எவ்வாறு  உதவும் ?

பகவான்...காட்டில்  தன்  குடும்பத்தை விட்டு சந்தர்ப்பவசத்தால்  பிரிந்த  சிங்கக்குட்டி   ஒன்று ஆட்டு மந்தையில்  சேர்ந்தது ...இதனால் தானும் ஒரு ஆட்டுக்குட்டியே  என பாவித்துக்கொண்டது .ஆட்டைப் போலவே கனைத்தது ..சில  காலம் கழித்து ஒரு பெரிய சிங்கம் அந்த  ஆட்டு மந்தையை  நோக்கி வந்தது...ஆடுகள் நாலாபுறமும்  சிதறி ஓடின....இந்த   சிங்கக் குட்டியும் தான் ஒரு  ஆடாய்  என்றெண்ணி   பயந்தோடியது ...அதைக்கண்ட   பெரிய சிங்கம்  தன்னினத்தைச சேர்ந்த  அக்குட்டியை   தாவிப்பிடித்து  " நீயும் என்னைப் போல  ஓர்  சிங்கம்  தானே! ஏன் ஆட்டைப்போல   பயந்து  ஓடுகிறாய் ? அருகிலுள்ள  நீர்க் குட்டையில்   உன்  முகத்தைப் பார்  என்றது ..அவ்வாறே   அக்குட்டி  குட்டை நீரில் முகத்தை  பார்த்து   தான்  ஒரு  சிங்கம் தான் என்றுணர்ந்தது .  ஆடுபோல்  கனைப்பதை  விட்டு  அக்கணமே   சிங்கம் போல   கர்ஜித்து  தன்  சுயநிலை   பெற்று  மகிழ்ந்தது...இவ்வாறுதான்   ஒருவன்   குருவின்   உபதேசத்தால்  தன் சுயநிலை  (  ஆத்ம சொரூபம் )  மீட்கப் பெறுகிறான்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு  தியான பீடம்....🙏🙏🙏

வியாழன், நவம்பர் 02, 2023

என் கேள்வியில் உன் பதில்..!

 

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

🔥தனக்குள் இருக்கின்ற இயல் ஆனந்தத்தை உணர தன்னை தன்னுள் உணர வேண்டும்...இதற்கு தான் குருவின் போதனைகள் என்பதை உணர்ந்து இறை நாமத்தை உச்சரித்து  குருவின் உபதேசங்களை கடைப்பிடிப்பீர்களாக..🔥

என் கேள்வியில் உன் பதில்..!

"எல்லாருமே துக்கம் என்பதே இன்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புகிறார்கள்.. எல்லாருக்குமே தன்னிடத்தில் தான் மிக அதிகம் பிரியம் இருக்கிறது...எங்கு சுகம் இருக்கிறதோ அங்கு பிரியம் இருக்கிறது. மனம் வேலை செய்யாது இருக்கும் ஆழ்ந்த உறக்கநிலையில் தினமும் அந்த சுகத்தையே சுபாவமாகவே அனுபவிக்க முடிகிறது. ஆக, தன்னுள்ளேயே பொதிந்திருக்கும் அந்த சுகத்தை அடைய தன்னைதானே அறிதல் வேண்டும். அப்படி அறிவதற்கு ‘நான் யார்’ என்னும் ஞான ஆராய்ச்சியே முக்கிய சாதனம் ஆகும்...

திருச்சிற்றம்பலம்..தில்லையம்பலம்..🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

உன்னை உணர உன்னில் உள்ளவன் நானே என்று அறிவாயாக...!?



ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

உன்னை உணர உன்னில் உள்ளவன் நானே என்று அறிவாயாக...!?

"God is within us"...கடவுள் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதாகும்...இதை அறியும்போது கடவுள் ஆகிறான்.

."தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்..

தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை

தன்னை அறியும் அறிவால் அறிந்த பின்

தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தேனே. "

- திருமூலர்

"உள்ளும் உள்ளான், புறத்தும் உள்ளான் என்பார்க்கு....

உள்ளும் உள்ளான் புறத்தும் உள்ளான்...


உள்ளும் இல்லை புறத்தும் இல்லை என்பார்க்கு


உள்ளும் இல்லை புறத்தும் இல்லை" 


 திருமூலர் - திருமந்திரம்...

திருச்சிற்றம்பலம்..தில்லையம்பலம்...🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

புதன், நவம்பர் 01, 2023

நம் மனம்...!!??

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

🔥🔥நான் என்கிற நினைவு  இல்லாத இடமே சொரூபமாகும்.....அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே..🔥🔥

என்னென்ன நினைவுகள் நம் மனம் எத்தனை எண்ணங்களை எழுப்பினால் என்ன, ஜாக்கிறதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும்...நினைவே மனிதன் சொரூபம்... நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்..

மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்....

தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியுமா, முடியாதா என்கிற சந்தேக நினைவுக்கு இடம் கொடுக்காமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான்  என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்ததேறுவான்.....

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை உள்ளதாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை உள்ளதாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்...

உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் – மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது...எ

எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்...நான் என்கிற நினைவு  இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே.

என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.

🙏எவன் தன்னையே கடவுளாகிய – சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்....🙏

திருச்சிற்றம்பலம்...🙏தில்லையம்பலம்.🙏

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏


நீ இறைவனை காண வேண்டுமா அல்லது இறைவனே உன்னை தேடி வந்து காட்சி கொடுக்கவேண்டுமா...!??

  

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

🔥🔥படைத்தவனையே ஈர்க்கக்கூடிய தன்மைகளாக  சத்தியம், உண்மை, நேர்மை, மனிதநேயம், கருணை, ஒழுக்கத்துடன் கூடிய நற்பண்புகள், நல் எண்ணங்கள், ஒழுங்கியல் சார்ந்த  உணர்வுகள்,சிந்தனைகள், சொற்கள், அறச்செயல்கள் ஆகியவற்றை உட்புகுத்திக்கொண்டு  வாழ்ந்து அது நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு…நல்லது செய்யுமெனில்…இறைவனை நாம் தேட வேண்டியதில்லை…இறைவனே நம்மை தேடி வருவார்…இறைவனையே நாம் ஈர்த்துக்கொண்டால் அவன் படைத்தையும் பெற்று விடலாம் தானே..🔥🔥 

நீங்கள்  இறைவனை காண வேண்டுமா அல்லது இறைவனே உன்னை தேடி வந்து காட்சி கொடுக்க வேண்டுமா...!புரிகிறதா..

இல்லையென்றால் குரு சொல்வதை கேளுங்கள் ...சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,“ஆன்மீகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா..?”

புதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மீகத்தின் நோக்கம்…”

“அப்படியா..?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்… அப்படித்தானே இருக்க முடியும்..?”

“சரி… இத்தனை நாள் ஆன்மீகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ..?”

“இல்லை… ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது… உண்மையிலேயே இறைவனை அறிந்துக் கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா..?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்… இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது..?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது… எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே…

இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்.

நீ ஆண்டவனைத் தெரிந்துக் கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா…?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே..?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே..! நீ இறைவனை அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்…”

“மிகவும் சந்தோஷம் குருவே… இந்த வழிக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது…ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை....!

ஒரு அரசன் இருக்கிறான்…

பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா...அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல.முடியவும் முடியாது.”“ஆம்.”“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜையில், ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்…அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான்...பல அறச் செயல்களைச் செய்கிறான்...இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது....உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார்...அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார்.அவனோடு உரையாடுகிறார்…பாராட்டுகிறார்...பரிசுகள் தருகிறார்...இது நடக்கும் இல்லையா...?”

“நிச்சயமாக நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்...நீதான் அவன்...நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம்..ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்…அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார்...எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு.இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு…இறைவனே உன்னை வந்து அடைவான்… சரிதானே…?”

“மிகவும் சரிதான் குருவே…”“நல்லது சீடனே, இனி ஆன்மீகம் உனக்கு கை கூடும். போய் வா…”சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...!

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும்,சொல்களும், செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு…நல்லது செய்யுமெனில்…இறைவனை நாம் தேட வேண்டியதில்லை…இறைவனே நம்மை தேடி வருவார்…

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏

ஞாயிறு, அக்டோபர் 29, 2023

குரு உபதேசம்...எல்லோருக்குமான ஒரு ரகசிய பெட்டி..உங்கள் கைகளில் கொடுத்துள்ளேன் ...!?


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்.....🙏🙏🙏

🙏குரு உபதேசம்.....🙏

எல்லோருக்குமான ஒரு ரகசிய பெட்டி..உங்கள் கைகளில் கொடுத்துள்ளேன் ...!?குரு மரண படுக்கையில் இருந்தார்....அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்...குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்..? உனக்காக நான் எப்பொழுதும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”!?கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது..?”அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதைப் போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனைப் பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது...

நாட்கள் சென்றன....தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்...குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்....சிஷ்யன் ஞானம் அடைந்தான்..நாட்கள் சென்றன...சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்...மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...நாட்கள் சென்றன..தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்.....அதில் எழுதி இருந்த வாசகம்...“இன்னொரு முறை முயற்சி செய்”சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்....

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.....எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏


குருவின் உபதேசம்...!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

குருவின் உபதேசம்...!?

சிஷ்யனுக்கு பெருத்த சந்தேகம். பலகாலமாக குருவுடன் இருக்கிறோம். அவரின் கண் அசைவை புரிந்து கொண்டு செயல்படும் முதல் மாணவனாக இருக்கிறோம். இருந்தும் நமது குரு நம்மை பாரட்டுவதில்லையே. நமக்கு சுகந்திரமாக பொறுப்புகளை கொடுப்பதில்லையே என கவலை...குருவை போல ஆன்மீக விஷயங்கள் பேசுவதற்கும் சாஸ்திர கருத்திகளுக்கு பதில் சொல்ல தெரிந்தாலும் நம்மை அவர் அளவுக்கு யாரும் மதிப்பதில்லையே ஏன் இந்த நிலை என யோசிக்க துவங்கினான்....

குருவுடன் தனியாக பயணப்படும் தருணத்திற்காக காத்திருந்தான்....அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. ஓர் தொழிற்சாலையில் உழியர்களுக்கான கூட்டத்தில் அவர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு குரு அழைக்கப்படிருந்தார்...கூட்டத்தில் பேசியது அனைத்தும் சிஷ்யனுக்கு புதிய விஷயமாக தெரியவில்லை. குருவுடன் எப்பொழுதும் இருப்பதால், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தை மனதில் உதிக்கும் வண்ணம் அவனுக்கு குருவின் உரை பழகி இருந்தது. அது வரை பொருமையாக இருந்த சிஷ்யன்  தனது கேள்வியை இன்று கேட்டே விட வேண்டும் என முடிவு செய்தான்.

அன்று மதிய உணவு அருந்திய பின் குரு ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரின் கால்களை மெல்ல பிடித்து விட்டபடியே சிஷ்யன்  கேட்டான், “குருவே, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா..?”படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த குரு ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தார். சிஷ்யனின் கேள்விக்கு “ம்” என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாலும் அவரின் கண்கள் வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தது...சிஷ்யன்  தனது கேள்விகளை கேட்க துவங்கினான்...“நீங்கள் சொன்ன அனைத்து ஆன்மீக சாதனைகளையும் செய்து வருகிறேன். மக்களுக்கு நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் எனக்கு தெரிந்த விஷயம் தான். நானும் குரு நிலையை அடைந்து விட்டேனா...? இன் நிலையில் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்..?” என்றான்.

கேள்வி கேட்கும் வரை திரும்பாத அவர் முகம் , கேள்வி கேட்டு முடித்ததும் அவனை பார்த்து திரும்பிய போது சிறிது கலங்கித்தான் போனான் சிஷ்யன்...அவனது கலக்கத்தை போக்கும் வகையில் அவரின் முகத்தில் ஓர் புன்னகை வெளிப்பட்டது....“சிஷ்யா, வெளியே ஓர் கட்டிடத்தின் முகப்பில் என்ன எழுதியிருக்கிறது என பார்” என்றார் குரு...கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக இருந்தாலும், குருவின் கட்டளைக்காக உட்கார்ந்த நிலையிலேயே எட்டி பார்த்துவிட்டு சொன்னான். “Go Down" - கீழே போ என எழுதியிருக்கிறது குருவே..”

குரு அவனை மேலும் ஓர் அகலமான புன்னகையுடன் பார்த்துவிட்டு சொன்னார்... “சிஷ்யா , இந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அது Godown (கிடங்கு). உனக்கு அது Go Down.(கீழே போ). ஆனால் எனக்கோ அது God Own (கடவுளுக்கு சொந்தமானது)...சாமானிய மனிதர்கள் சாஸ்திரங்களை மூதாதயர்களின் சேமிப்பாக பார்க்கிறார்கள். நீ அதை கீழ் நிலையில் ஓர் புத்தகமாகவோ உரையாகவோ பார்க்கிறாய். நான் அதை கடவுளின் சொந்த பொருளாக பார்க்கிறேன். குரு நிலையை அடைய சாஸ்திரம் தேவையில்லை. விழிப்புணர்வே தேவை”....

அன்று முதல் மஞ்சுநாதன் தன்னை கடவுளுக்கு சொந்தமாக்க துவங்கினான்....குரு நிலை என்பதை நாம் எளிமையாக எண்ணி விடுகிறோம். பகவத் கீதையையோ அல்லது வேறு ஆன்மீக கருத்துக்களையோ சுவை பட பிரசங்கம் செய்பவர்கள் குரு நிலையில் இருக்கிறார்கள் என நினைத்து கொள்ளுவது தவறு. அதே நேரத்தில் கடவுளை பற்றி சுவை பட பேச தெரியாதவர்கள் எல்லாம் குரு இல்லை என முடிவு செய்வதும் தவறு. குருவை விழிப்புணர்வு நிலையிலேயே புரிந்துகொள்ள முடியும்...

குரு நிலை அடைய விரும்புனால் விழிப்புணர்வு அடைவதே வழி அதை விடுத்து, சித்துக்களை கற்பதோ- புராணங்களை மனப்பாடம் செய்வதோ முட்டாள் தனம்....விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு எதுவும் கற்க வேண்டியதில்லை...விழிப்புணர்வற்றவர்களுக்கு அனைத்தையும் கற்றாலும் எதுவும் பயனில்லை....

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏

சனி, அக்டோபர் 28, 2023

கடவுளிடம் தீர்வுகளை எதிர்பார்க்கக்கூடாது என்றால், வேறு எதற்காகத்தான் பிரார்த்தனைகள்...?

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏

கடவுளிடம் தீர்வுகளை எதிர்பார்க்கக் கூடாது என்றால், வேறு எதற்காகத் தான் பிரார்த்தனைகள்...? பிரார்த்தனைகள் என்பது  உங்களுக்கு  இப்படித்தான்..??

சாதகமாக ஏதாவது நடந்துவிட்டால், அது கடவுள் அருளால் நடந்தது என்பார்கள். நடக்கவில்லை என்றால், அது கடவுளின் சித்தம்.. அதைக் கேள்வி கேட்கக்கூடாது என்பார்கள் பிரார்த்தனை...என்பது மண்டியிட்டு, சில குறிப்பிட்ட சுலோகங்களைச் சொல்வதோ, துதிப்பாடல்களைப் பாடி நம் ஆசையை நிறைவேற்றும்படி கடவுளிடம் மன்றாடுவதோ அல்ல... அது கடவுளுக்காக அல்ல....

உங்களுக்காக..! உங்கள் வேதனைகளைக் கடவுளிடம் கொண்டு செல்லாதீர்கள்..துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. முதலில், ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.... எதற்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள்..? கடவுளை அறிந்து கொள்வதற்காகவா..? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு முட்டாள் இயந்திரமாகக் கடவுளை நினைத்திருக்கிறீர்கள்..பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், ஒருவித உள்ளுணர்வாக மலர வேண்டும். ஆலயத்தில் பணிவாக சேவகன் போல் நடந்து கொள்கிறீர்கள். ஆனால், உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் நீங்களே கடவுள் போல் இறுமாப்பாக நடந்து கொள்கிறீர்கள். இதுவா பிரார்த்தனை உணர்வு..?

முதியவர் ஒருவர் பிரார்த்தனை நேரத்தில் கோயிலுக்கு  வருவார். அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த அர்ச்சகர், ஒருநாள் அவரைக் கூப்பிட்டனுப்பினார்..."பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக்கூடப் பார்த்ததில்லை. பின் எதற்காக வருகிறீர்கள்...?""நான் கடவுளிடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்" என்றார் முதியவர்..."ஓ கடவுள் உங்கள் காதில் மட்டும் பேசுகிறாராக்கும்! அப்படி என்னதான் சொல்கிறார்..?""அவரும் என்னைப் போல்தான். பேச வருவதில்லை. கவனிக்கத்தான் வருகிறார்..!"

வாழ்க்கை அப்படித்தான்...வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்... நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும். கடவுளிடம் நீங்கள் இரைச்சலாகப் பேசிக்கொண்டு இருப்பதாலேயே எதையும் கவனிக்க முடியாமல் போகிறது...கவனிக்கத் தவறிவிட்டு, பிரார்த்தனைகள் மூலம் கடவுளைக் கூப்பிட்டால், அவர் தன் சுண்டுவிரலைக்கூட உங்களுக்காக அசைக்க மாட்டார். அது புரியாமல் நீங்களும் இது சாபம், அது அருள் என்று பேசிக் கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்....

கடவுள் சந்நிதியில் சொல்வது மட்டும் தான் பிரார்த்தனை என்பது அல்ல....இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்ளுவதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்...உலகில் இருப்பதையெல்லாம் ரசிக்கிறேன், மதிக்கிறேன். வாழ்க்கையையே பிரார்த்தனை போல் நடத்திச் செல்வதுதான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனைகள் சொல்கிறேன்' என்றால், அதில் அர்த்தம் இருக்கிறது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏