ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், ஜனவரி 29, 2024

சூரியனின் பிரகாசமான ஒளியினால் உலக மக்கள் அவரவர் தமக்கான தொழிலைச் செய்வது போல....!!??

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

ஞானவொளி ஆன்மாவை நண்ணி உடல் பொறிகள்

மானதம் புத்தியிவை மன்னு தமக்கு ..ஆன தொழில்

ஆற்றிடும் ஆதித்தன் அவிர் ஒளியால் மக்கள் தொழில்

ஆற்றுவது போலும் அறி....!

சூரியனின் பிரகாசமான ஒளியினால் உலக மக்கள் அவரவர் தமக்கான தொழிலைச் செய்வது போல, ஞானப் பிரகாசமான ஆத்மாவைச் சார்ந்து உடல், இந்திரியங்கள், மனம், புத்தி முதலானவைகள் தமக்குண்டான தொழில்களான விஷயங்களில் பொருந்தி செயல்படும் என்று அறிவாயாக..ஆன்மாதான் எல்லாம், அது இருப்பதால்தான் மற்றதெல்லாம் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமானமாக சூரியன் உதித்ததும் அனைவரும் தத்தமது தினப்படி வேலைகளை ஆரம்பித்துச் செய்துகொண்டு இருப்பதைக் காட்டுகிறார். அந்த வேலைகள் நடப்பது சூரியன் உதித்தபின்தான் என்பதால் அவைகளுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்...? அவை செய்யப்பட்டாலும், செய்யப்படாமலே இருந்தாலும் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு வந்தது? ஒன்றுமில்லை அல்லவா, அதேபோல ஆன்மா இருப்பதால்தான் இந்திரியங்களும், மனமும், புத்தியும் இயங்குகின்றன என்றாலும் அவைகளின் இயக்கத்தால் ஆன்மா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. உலகையே ஒளிர்விக்கும் சூரியனைப் போல, எல்லா இந்திரியாதிகளையும் ஒளிர்வித்தாலும் ஆன்மா நடக்கும் எல்லாவற்றிற்கும் வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது. ஆன்மா எந்த இயக்கத்திலும் பங்கு கொள்வதில்லை.

இந்திரியங்கள், மனம், புத்தி இவைகளில் எதனை எடுத்துக்கொண்டாலும் மனிதர்களிலும் சரி மற்ற உயிர்வாழ் இனங்களிலும் சரி ஒன்றுக்கொன்று வேற்றுமைகள்தான் இருக்கும். மற்ற இனங்கள் அதைப் புரிந்துகொள்ளாது போனாலும், மனிதனும் அதைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு சமத்துவப் பார்வை வளர வாய்ப்பே இல்லை. அது வளர வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் ஆன்மா ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வதையும், அதுவே அனைத்தின் அடிப்படை உண்மை என்று தெளிந்து கொள்வதையும் மனித வளர்ச்சியின் பரிமாணங்களில் ஒன்று எனக் கொள்ளலாம்..

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻.

ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...