ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
உன்னோடு நான் இரவு பகலாக இதைத்தான் சொல்கிறேன்...!
"இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப் போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப் போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப் போகிறார்..ஆன்மீக வாழ்விலும் தோற்றுப் போகிறார்...இதயத்தை தூய்மை செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞான கர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி .."ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்...எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே..."என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன்...
ஓம ஶ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக