ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻
எத்தனை தடவை சொன்னாலும் இது தான் உண்மை...!
மாயை, ஒரு மலைப் பாம்பைப்போல் உடலைச் சுற்றிக் கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்தில் இருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்து விடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது...?"நான் கேட்ட ஐந்து ரூபாயைப் போல ஐம்பது மடங்கு வைத்துக் கொண்டு, எதிலுமே சம்பந்தபடாதவர் போல் அங்கு உட்கார்ந்து இருக்கிறீர்..! அதை இப்பொழுது வெளியே எடும்...! அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறது..!"
பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்தார்... இருபத்தைந்து பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணினார்...மனதின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிபோனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.
பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், "உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக் கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது...
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக