ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻
ஞானம் என்றால் என்ன....? ஞானத்தை எப்படி விளக்குவது...?
ஞானம் என்பது ... ஒரு பிரமாண்டமான அனுபவம் அல்ல. ஞானம் என்பது ஒரு எளிய அறிவு ப்பூர்வமான புரிதல் மட்டுமே...ஞானம் பெறுவதற்கு பயிற்சியும் தேவை இல்லை, முயற்சியும் தேவை இல்லை. ஒரு நொடிபொழுது போதும் இதனை புரிந்துக் கொள்வதற்கு...
ஞானம் என்பது ... நம் அறிவு தன் எல்லையை புரிந்து கொள்ளுவது …. நம் அறிவு ... தனக்கு எங்கே வேலை இருக்கிறது... தனக்கு எங்கே வேலை இல்லை என்று புரிந்து கொள்ளுவது தான் ஞானம்...
நாம் நமது மனோ இயக்கம் சம்பந்தமாக, நாமாகச் செயல்படுவதற்கு எதுவும் இல்லை என்பதைக் கண்டுகொள்வதே 'ஞானம்'...நம்முடைய மன உணர்வுகளைச் சீரமைக்கும் வல்லமை நமக்கு கிடையாது என்ற நமது இயலாமையை நாம் அறிவுப்பூர்வமாகப் புரிந்துக் கொள்வது தான் ஞானம்'....நம் அறிவு புறச்செயல்களை நிர்வாகம் செய்யலாம். மனதையும் நிர்வாகம் செய்ய முயலுவது தான் நம் எல்லா மன பிரச்சனைகளுக்கும் காரணம். நம் அறிவு நம் மனதை நிர்வாகம் செய்ய முடியாது என்று புரிந்து கொள்வது தான் … ‘ஞானம்’....
மனதில் எண்ணங்கள்....அதன் போக்கில் தான் வரும்... அவை நம் அறிவின் கட்டுபாட்டுக்குள் இல்லை என்று புரிந்துக் கொள்வது தான் … ‘ஞானம்’...நாம் தூங்குவதற்கு செல்கிறோம் ...எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன..." எண்ணங்களே...! நான் தூங்க போகிறேன்.... நாளை வாருங்கள் " என்று சொன்னால் கேட்குமா...? "மனசே, இன்று முழுவதும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மட்டுமே வர வேண்டும் ... கோபம், துக்க எண்ணங்கள் வர கூடாது" என்று நம் மனதிடம் நம் அறிவு ஒரு கோரிக்கை வைத்தால் … நம் மனது கேட்குமா?நம் மனம் நம் அறிவின் கைகளில் இல்லை என்று அறிவுபூர்வமாக புரிந்து கொள்வது தான் ‘ஞானம்’....
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக