ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏
நம்பினால் நம்புங்கள்..வணங்கினால் வணங்குங்கள்...!
உயிர்களுக்கு ஆதாரனமானது சிவம் என்கிற ஆற்றல்..சொல்லால் அளவிடமுடியாத அளவில் சிறியவையான இந்த ஆற்றல் உயிர்களின் தனித் தன்மையை நிர்ணயிப்பது எப்படி...! இதை இயக்கும் அந்த வல்லவன் யார்...! உலக உயிர்களின் அனைத்து ஜீன்களையும் ஒன்று சேர்த்தால் ஓர் கட்டைவிரல் அளவிற்குத்தான் இருக்கும் என்கிறது விஞ்ஞானம். இவ்வளவு சிறிய ஜீன்களும் அதன் துணைகளான குரோமஸோம் செல்களும் ஒவ்வோர் உயிர் மூலத்துணுக்கில் இருந்து கொண்டு அந்தந்த உயிர்களின் அதாவது அனைத்து மனித, விலங்கு, பறவை, தாவரங்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதன் யார்....
இயற்கையில் சிக்கனத்தை பார்க்க முடியுமா...! முடியும். நிர்வாக சிக்கனம் காணமுடியும். அவற்றை உருவாக்கியவன் யார்...!வேலியாக ஒரு வகைக் கள்ளிச் செடியை நட்டார்கள். இந்த கள்ளியை அழிக்கக்கூடிய பூச்சி வகைகளே அவ்விடத்தில் இல்லாததால் கள்ளி வளர்ந்து பரவி விட்டது. மக்கள் அப்பகுதியில் வாழமுடியா நிலைக்கு கள்ளி வளர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் முயன்று அந்தக் கள்ளிச் செடிக்கு ஒரு மாற்றாக ஒரு பூச்சியைக் கண்டு பிடித்தனர். நாளடைவில் அந்தக் கள்ளியினம் அழிந்தது, கள்ளி இல்லாததால் அந்த பூச்சினமும் அழிந்தது. இது போன்ற தடைகளும் அதை சமன் செய்ய மாற்றுகளும் புவி எங்கும் நிறைந்துள்ளன.
அதி வேகமாக இனவிருத்தி செய்யும் பூச்சிகள் பெரிய அளவிற்கு வளர்வதில்லை. அவற்றிற்கு மனிதனைப் போல சுவாசப்பைகள் கிடையாது. குழாய் வழியே மூச்சை விடும். அவை வளரும் அளவிற்கு குழாய்கள் வளர்வதில்லை. இந்த வரம்பு அவற்றின் பெரிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது. இல்லாவிடின் யானையைப் போல் ஒரு குளவி வளர்ந்தால் என்ன ஆவது! இந்த வரைமுறையை நிர்ணயித்த வலியவன் யார்...! இதுதான் சிவம்...
மனிதனுக்குத்தான் கற்பனை வளம் உண்டு. இந்த கற்பனைச் சக்தியால் மனித உயிர்கள் கண்ணுக்குப் புலனாகாத பொருள்கள் அனைத்திற்கும் சான்று தேடி அந்த எல்லையற்ற காட்சியை காண்கின்றன. அதே சக்தி பக்குவமடைய அடைய பிரபஞ்சப் பொருள்கள் எல்லாவற்றிலும் ஓர் திட்டத்தையும் நோக்கத்தையும் காண்கின்றான். அப்போது ஓர் ஆன்மீக உண்மை அவனுக்கு புலப்படுகின்றது.
உயிர்கள் உண்ட உணவு எப்படி ஜீரணமாகின்றது. உணவிலிருந்து சக்திகள் எப்படி உடல் இயங்க உடலுக்கு கிடைக்கின்றது. மழை காற்று வெய்யில் குளிர் இதெல்லாம் எப்படி நடக்கின்றது என்பது கண்ணுக்குத் தெரியா உண்மைகள் என்றாலும் கண்ணுக்குத் தெரிந்த உடலே அந்த உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நடந்த .நடக்கின்ற நடக்கப்போகின்ற எல்லாவற்றையும் கண்காணித்து அவ்வப்போது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயக்கங்களைச் செய்யும் அந்த அற்புத சக்தி எது...! அது தான் சிவம்...
மாகா சூட்சுமமான தந்திரமும் சிருஷ்டித் திறன் வாய்ந்த பரம் ஞானம் பெற்ற ஒன்றிலிருந்தே எல்லாம் தோன்றியிருக்க வேண்டும் இந்த அதிசய சிருஷ்டி சித்தாந்தத்தை வேறு எந்த விதமாக நினைக்க முடியும்.! அந்த சித்தாந்தபதி யார்...!பிரபஞ்சத்தை ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை, சித்தாந்தபதியை, அவற்றிற்கு வரைமுறையை நிர்ணயித்த வலியவனை, சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளியை. உயிர்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதனை, நிர்வாக சிக்கனத்தை உருவாக்கியவனை, உயிர்களுக்கு ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவனை, சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தியான அவனை வணங்கி வழிபடுவதில் என்ன தவறு...!
காரணங்களைச் சொல்லிவிட்டோம்...! நம்புங்கள்...! வழிபடுங்கள் இறைவனை...!
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக