ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.🙏🏽🙏🏽
ஶ்ரீசீரடி சாயீன் புனித வேதமான சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இன்றைய அத்தியாய வெளியீடு...🙏🏽🙏🏽
🙏ஶ்ரீசாய் சத்சரித்திரம்🙏
🙏 அத்தியாயம்::: நாற்பத்தைந்து (45 )🙏
🔥முதலில் புனித வேத நூலான ஶ்ரீசாய் சத்சரித்திரம் பாராயணம் செய்வதன் முக்கியத்துவமும், பெறப்போகும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம் இங்கே...🔥
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் புனித வேத நூல் என்பது சாய் சத்சரித்திரம் என்பதாகும்...இதில் ஶ்ரீசீரடி சாய் பகவானின் மூல பேராற்றல் ஒவ்வொரு சாய்சரித்திர வேத எழுத்திலும் வியாப்பித்து படர்ந்து இருக்கின்றது...
ஶ்ரீசாய் சத்சரிதத்தை படிக்கும் மனித உயிர்களின் சொல், செயல், மனம் மற்றும் சிந்தையை ஒரே நேர்க்கோட்டில் இயங்க வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரச் சொற்களாக இந்த வேத நூலாகிய சாய் சத்சரித்திரம் செயல்படுகின்றது..ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி படித்து சாய் சத்சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள மறை ஞான மூல சூட்சம கருத்துக்களை உள்வாங்கி அதனை பின்பற்றிட முயல வேண்டும்.....
இவ்வாறாக நாம் அனைவரும் சாய் சத்சரித்திர வேத பாராயணத்தை மேற்க்கொண்டால் சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் பெற ஏதுவாக அமையும்..ஆகவே சாய் சத்சரித்திர வேத பாராயணம் செய்வோம்...நாம் அனைவரும் உயரிய நிலையை அடைய சாயீன் பாதகமலத்தில் சரணடைவோமாக..🙏
🔥குறிப்பு..சாய் சத்சரித்திர வேதப் பாராயணத்தை மேற்க்கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால்....🔥
தனி மனித உயிரின் சித்தம் தெளிவடையும்... மேலும் அகத்தெளிவுப் பெற்று ஞான மார்க்கத்தில் உயரியத் தன்மையை அடையலாம்...இவ்வேத பாராயணத்தின் மூலமாக ஆத்மா மறுமலர்ச்சிப் பெற்று உயரியத் தன்மையை அடையும் நிலையைப் பெறலாம்...
மேலும் இக ஜெக வாழ்வில் ஒரு தனி மனித உயிரானது எவ்வாறு சத்தியம்,நேர்மை, மனிதநேயம் போன்ற இறைப்பண்புகளைப் பெற்று இறையச்சத்துடன் வாழ்வது என்பதை உணர்ந்து தெளிவுப் பெறவும் இந்த சாய் சத்சரித்திர வேதப் பாராயணம் துணைப் புரிகின்றது...மேலும் இப்பாராயணத்தின் மூலம் மிகச்சிறந்த கர்ம யோகியாக புற வாழ்வியலின் இயக்க செயல்பாடுகளில் வெற்றி வாகை சூடலாம்...
அவரவர்கள் விரும்பி வேண்டியது கிடைக்கப் பெறும்...சகல சௌபாக்கியங்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்வது திண்ணம்...மேலும் அனைத்து விதமான கர்ம வினைகள் நீங்கப்பெற்று, பாவ தோஷத்திலிருந்து விடுபட்டு, சீரடி பகவானின் ஆசியையும் அனுக்கிரகத்தையும் ஒருசேரப்பெறலாம்..🙏
🙏அத்தியாயம் ::நாற்பத்தைந்து(45)🙏
🙏முன்னுரை..🙏
சத்குருவிடம் எவ்வாறு நாம் சரணாகதி அடைந்து உயரிய நிலையை அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..
காகா சாஹேப் தீஷித் வாசித்த ஏக்நாத் பாகவதத்தில், பதினோராவது காண்டத்தில் ஜனகரின் கேள்விக்கு ஒன்பது நாதர்கள் பக்தியைப் பற்றி உபதேசித்த விளக்கவுரை..
ஒன்பது நாதர்கள் கூறிய பக்தியின் விளக்கத்தைக் கேட்டு தம்மால் இதனை அடைவது சாத்தியமில்லை என்று சோர்வடைந்த காகா சாஹேப் தீஷித்திற்கு மாதவராவ் கூறியதைப் பற்றிய விளக்கமும் மற்றும் மேலும் திருப்தியடையாத நிலையில் இருந்த காகா சாஹேப் தீஷித்திற்கு , ஆனந்த் ராவ் பாகாடே என்பவரின் கனவின் மூலம் பாபா அறிவுருத்திய தெய்வீகக் காட்சியைப் பற்றிய விளக்கவுரைகள்......
நாலு முழ நீளமும்,ஒரு முழ நீளமும் உள்ள மரப்பலலகையில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா எவ்வாறு உறங்கினார் என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..
மேற்க்கண்ட தலைப்புக்களில் விளக்கவுரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்...
🔥முதலில் சத்குருவிடம் எவ்வாறு நாம் சரணாகதி அடைந்து உயரிய நிலையை அடைவது என்பதன் மூல சூட்சம விளக்கவுரையை இங்கே காண்போம்..🔥
முந்தைய மூன்று அத்தியாயங்களில் பாபாவின் மறைவைக் குறித்து நாம் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது நிலையற்ற ஸ்தூல உருவம் நமது காட்சியிலிருந்து மறைந்ததில் ஐயமில்லை.. ஆனால் அவரது அழிவற்ற சூட்சும உருவம் எப்போதும் வாழ்கிறது...அவரது வாழ்நாளில் நடைபெற்ற லீலைகளும், அற்புதங்களும், அனுபவங்களும் இன்றும் பெருமளவில் நிகழ்ந்துக் கொண்டு வருகின்றன.. பகவான் சமாதி அடைந்தப் பின்னரும் அவரது லீலைகள் இன்று வரை ஒரே மாதிரியாக நடைபெறுகின்றன...இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..பாபா எப்போதும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதையும், அவர்தம் பக்தர்களுக்கு முன்னைப்போலவே உதவிக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகின்றன...பாபாவின் வாழ்நாளில் அவரது தொடர்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகளே....ஆனால் அவர்களில் யார் இவ்வுலகப் பற்றையும், இன்பங்களின் மேல் விருப்பத்தையும் விடாமல், கடவுள்மேல் உள்ளத்தைத் திருப்பவில்லை என்றால் அது அவர்களது துரதிர்ஷ்டமேயாகும்....அப்போதும், இப்போதும் தேவை என்னவென்றால் பாபாவின் பால் நாம் வைத்திருக்கும் ஆத்மார்த்தமான உண்மையான, முழுமனதான பக்தியே முக்கியமாகக் கருதப்படுகின்றது...நமது புலன்கள், உறுப்புக்கள், மனம் யாவும் பாபாவை வழிபடுவதில் ஒருங்கிணைத்து அவருக்குச் சேவைபுரிய வேண்டும்..வழிபாட்டில் முழுவதுமாக நம்மை அர்பணிப்பது மிகவும் நல்லது....அவ்வாறில்லாமல் மற்றவற்றை வேறுபக்கம் செலுத்துவது பயனற்றது. வழிபாடு, தியானம் போன்றவை மனப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்யப்படவேண்டும்.
தம் கணவரிடம் எதிர்பார்ப்பில்லாத இல்லறத்தாள் கொண்டிருக்கும் அன்பு, சீடன் குருவிடம் கொண்டிருக்கும் அன்புடன் சிலசமயம் ஒப்பிடப்படுகிறது.. எனினும் முதலில் கூறியது குருபக்தியை விட மிகத்தாழ்வான படியால் இரண்டையும் ஒப்பிட இயலாது... தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது வேறு எந்த உறவினரோ நம் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய (ஆத்ம உணர்வு பெற) உதவிக்கு வரமாட்டார்கள். நாமே திட்டமிட்டுக் கொண்டு ஆன்ம உணர்வு பெறும் பாதையில் வழிநடக்க வேண்டும்.. உண்மைக்கும், மாயைக்கும் இடையில் பேதம் கண்டு இகபர இன்பங்களையும், பொருட்களையும் துறந்து, புலன்களையும், மனதையும் அடக்கி முக்தியை அடைவதில் மட்டுமே விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்... மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக நம்மிடமே நமக்குப் பூரண நம்பிக்கை வேண்டும்...பேதங்கள் உணர பயிற்சி செய்யத் தொடங்கும் போது, உலகம் ஒரு மாயை என்றும், நிலையற்றது என்றும் அறிந்து கொள்வதால் உலக ஆசைகள் மீதான பற்று குறைந்து முடிவில் பற்றற்ற நிலையைப் பெறுகிறோம்...பிரம்மம் என்பது நமது குருவைத் தவிர வேறல்ல என்றும், அவரே முழுமையாக நாம் காணும் அண்ட சராசரங்களிலும் வியாபித்து நீக்கமற நிறைந்து ஆட் கொண்டிருப்பதையும் உணர்ந்து, அவரை எல்லா உயிர்களிடத்திலும் கண்டு வணங்கத் தொடங்க வேண்டும்...இதுவே வழிபாடாகும் என்பதை உணர்வீர்களாக...
இவ்விதம் குருவாகிய பிரம்மத்தை மனமுருகி வழிபடும்போது நாம் அவர்களுடன், ஒன்றி ஆன்ம உணர்வைப் பெறுகிறோம்.. சுருக்கமாக, குருவின் நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்துக்கொண்டு இருப்பதும், அவரைத் தியானிப்பதும் எல்லா ஜீவராசிகளிலும் அவரைக் காணச்செய்து நம்மீது அழியாத பேரின்பத்தைச் சொரிகிறது. பின்வரும் கதை இதனை விளக்குகிறது....
🔥காகா சாஹேப் தீஷித் வாசித்த ஏக்நாத் பாகவதத்தில், பதினோராவது காண்டத்தில் ஜனகரின் கேள்விக்கு ஒன்பது நாதர்கள் பக்தியைப் பற்றி உபதேசித்த விளக்கவுரை🔥
ஏக்நாத்தின் நூல்களான ஸ்ரீமத் பாகவதம், பாவார்த்த ராமாயணம் இரண்டையும், காகா சாஹேப் தீஷித்தை தினந்தோறும் வாசிக்குமாறு பாபா உத்தரவிட்டார்.. காகா சாஹேப் தீஷித், பாபா உயிருடன் இருக்கும் போதும், அவர் மறைந்த பின்பும் இதனைப் பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.... பம்பாய் சௌபாத்திலுள்ள காகா மஹாஜனியின் வீட்டில் ஒருநாள் காலை காகா சாஹேப் தீஷித் ஏக்நாத்தின் பாகவதத்தை வாசித்துக் கொண்டிருந்தார்...
அப்போத ஷாமா என்றழைக்கப்படும் மாதவராவ் தேஷ்பாண்டேயும், காகா மகாஜனியும் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் பதினோராம் காண்டம் படிக்கப்பட்டதைக் கவனத்துடன் கேட்டனர்.. அதில் ரிஷபக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது சித்தர்கள் அல்லது நாதர்கள் என்றழைக்கப்பட்ட கவி, ஹரி, அந்தரிக்ஷா, பிரபுத்தா, பிப்பலாயன், அவிர்ஹோத்ரர், த்ருமில், சமஸ், கரபாஜன் முதலியோர் பாகவத தர்மத்தை ஜனகராஜனுக்கு உபதேசித்தார்கள்..ஜனகர் அவ்வொன்பது நாதர்களையும் மிகமிக முக்கியமான கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் திருப்திகரமான முறையில் பதிலளித்தார்கள்...
இதனைப் பற்றிய விளக்கம் பின்வருமாறு..
முதல்வரான கவி என்பவர் பாகவத தர்மம் என்றால் என்ன..! என்பதைப் பற்றி விவரித்தார்...
ஹரி என்பவர் பக்தனின் குணநலன்களைப் பற்றி விளக்கினார்...
மாயை என்றால் என்ன என்பதைப் பற்றி அந்தரிக்க்ஷா விளக்கினார்...
மாயையை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதைப் பற்றி பிரபுத்தா விளக்கினார்...
பரப்பிரம்மம் என்றால் என்ன என்பதன் மூல சூட்சமத்தைப் பற்றி பிப்பலாயன் விவரித்தார்...
கர்மத்தைப் பற்றி அவிர்ஹோத்ரர் விளக்கினார்...
த்ருமில் கடவுள் அவதாரங்களைப் பற்றியும், இறையதிர்வின் சூட்சம செயல்பாடுகளைப் பற்றியும் விளக்கினார்.
மரணத்துக்குப்பின் பக்தனில்லாதவன் எங்ஙனம் கூலி கொடுக்கப்படுகிறான் என்பதை சமஸ் கூறினார்.
வெவ்வேறு யுகங்களில் விவ்வேறு விதமான கடவுள் வழிபாட்டைப் பற்றி கரபாஜன் விளக்கினார்...
கலியுகத்தில் ஹரி அல்லது சத்குருவின் பாதங்களை நினைவூட்டிக் கொள்வதே விடுதலைக்கு ஒரேவழி என்பதே எல்லா விளக்கங்களின் கருத்துமாகும்....
🔥ஒன்பது நாதர்கள் கூறிய பக்தியின் விளக்கத்தைக் கேட்டு தம்மால் இதனை அடைவது சாத்தியமில்லை என்று சோர்வடைந்த காகா சாஹேப் தீஷித்திற்கு மாதவராவ் கூறியதைப் பற்றிய விளக்கமும் மற்றும் மேலும் திருப்தியடையாத நிலையில் இருந்த காகா சாஹேப் தீஷித்திற்கு , ஆனந்த் ராவ் பாகாடே என்பவரின் கனவின் மூலம் பாபா அறிவுருத்திய தெய்வீகக் காட்சியைப் பற்றிய விளக்கவுரைகள்...🔥
மேற்க்கூறிய ஒன்பது நாதர்கள் பக்தியைப் பற்றிக் கூறிய விளக்கங்கள் முடிவடைந்த பின்னர், மாதவ்ராவிடமும், மற்றவர்களிடமும் காகா சாஹேப் கூறினார், "பக்தியைப் பற்றி ஒன்பது நாதர்களின் விளக்கமும் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது பாருங்கள்...! அதே நேரத்தில் அதை அப்பியாசத்திற்குக் கொண்டுவருவது எவ்வளவு கடினம்...! என்று நான் உணர்கின்றேன் என்றார்.. நாதர்கள் பூரணத்துவம் பெற்றவர்கள்... ஆனால் அவர்களால் விவரிக்கப்பட்ட பக்தியை நம்போன்ற அறிவற்றவர்கள் அடைவது சாத்தியமா...? பல பிறவிகளுக்குப் பின்னரும் நாம் அதை அடையப் போவதில்லை..பின்னர் எங்ஙனம் நாம் முக்தியடைய முடியும்...? நமக்கெல்லாம் கதிமோட்சத்திற்கான நம்பிக்கையே இல்லையென்றே தோன்றுகிறது" என்று கூறுகின்றார்...ஆனால் காகா சாஹேப்பின் எண்ணத்தை மாதவ்ராவ் விரும்பவில்லை....
மேலும் மாதவ்ராவ் கூறுகின்றார்... "வைரத்தைப் போன்ற பாபாவைக் குருவாக அடைந்த நல்லதிர்ஷ்டம் உள்ள ஒருவர் இவ்வளவு தாழ்வுணர்ச்சியுடன் உரைப்பது பரிதாபமானது.. பாபாவிடம் உங்களுக்கு நிலையான, அசைவற்ற நம்பிக்கை இருக்குமானால் ஏன் இவ்வாறு மனச்சலனமடைய வேண்டும்.. நாதர்களின் பக்தி உறுதியானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம்...ஆனால் நாம் சத்குருவின் மீது வைத்துள்ள தூய்மையான பக்தியும், ஆத்மார்த்தமான உயரிய அன்பும் ஆழமானதல்லவா.?. ஹரியினுடைய அல்லது குருவினுடைய பெயரை ஸ்மரணம் செய்துக் கொண்டிருப்பதே நமக்கு முக்தியை அளிக்கும் என்று பாபா நமக்கு ஆணித்தரமாகக் கூறவில்லையா...? பின்னர் பயத்துக்கும், கவலைக்கும் என்னக் காரணம்...?" ஆனால் மாதவ்ராவின் விளக்கத்தால் காகா சாஹேப் தீஷித் திருப்தியடையவில்லை... அன்று முழுவதும் அவர் நாதர்களின் சிறந்த பக்தியுணர்வைப் போல் தாமும் எவ்விதம் பெறுவது என்ற சிந்தனையிலும், எண்ணத்திலும், கவலையாகவும், மன அமைதியற்றும் இருந்தார். அடுத்த நாள் காலை பின்வரும் அற்புதம் நிகழ்ந்தது...
ஆனந்த்ராவ் பாகாடே என்ற பக்தர், மாதவ்ராவைத் தேடி மசூதிக்கு வந்தார்... அப்போது அங்கு பாகவத பாராயணம் அப்போது நடந்துக்கொண்டிருந்தது.அப்போது ஆனந்தராவ் பாகாடே, மாதவ்ராவின் அருகில் அமர்ந்து எதையோ அவரிடம் கூறிக்கொண்டு இருந்தார்..அவர் தாம் கண்ட தெய்வீகக் காட்சியை மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தார். பாராயணத்திற்கு இடையில் இருவரும் பேசுவது சிறிது இடையூறாக இருந்ததால் காகா சாஹேப் தீஷித் படிப்பதை நிறுத்திவிட்டு மாதவ்ராவை விஷயம் என்னவென்று கேட்டார்.. மாதவ்ராவ்,"நேற்று உங்கள் சந்தேகத்தை எழுப்பினீர்கள்...இப்போது அதற்கு விளக்கம் கிடைத்திருக்கின்றது... பக்தி மார்க்கத்தில் எவ்வாறு நம்பிக்கை மற்றும் பொறுமையின் குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், குருவின் பாதங்களை வணங்குதல், வழிபடுதல், விசுவாசத்துடன் சத்குருவோடு பிணைத்துக் கொள்ளல், பூரண சரணாகதி போன்றத் தன்மைகளைப் பெற்றிருந்தால் மட்டுமே போதுமானது என்று பாபா, கனவின் மூலம் ஆனந்த்ராவ் பாகாடேவிற்கு சூட்சமமாக உணர்த்தியதைக் கேளுங்கள்" எனக் கூறினார் மாதவ்ராவ்..அனைவரும் குறிப்பாக காகா சாஹேப் தீஷித் உட்பட, அக்கனவுக் காட்சியைக் கேட்க ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர்..அவர்களது யோசனையின்பேரில் பாகாடே தமது காட்சியைப் பின்வருமாறு வர்ணிக்கத் தொடங்கினார்....
ஆழமான கடலில் இடுப்பளவு நீரில் நான் நின்றுக்கொண்டிருந்தேன். திடீரென்று அங்கு சாய்பாபாவைக் கண்டேன்...அவர்தம் பாதங்கள் நீரில்பட வைரங்கள் பதிக்கப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தார்... பாபாவின் ரூபத்தைக் கண்டு தரிசித்த நான் மிகமிக மகிழ்வுக் கொண்டு திருப்தியடைந்தேன்....கனவு என்று நினைக்க முடியாத அளவுக்கு தத்ரூபமாக அக்காட்சி இருந்தது..மிகுதியான ஆர்வத்துடன் மாதவ்ராவும் அங்கு நின்றுக் கொண்டிருந்தார். அவர் உணர்ச்சி வசப்பட்டு, "ஆனந்த்ராவ், பாபாவின் பாதத்தில் விழு...!"என்றார்.. "நானும் அவ்வாறே செய்ய விரும்புகிறேன், ஆனால் பாபாவின் பாதங்கள் தண்ணீரில் இருக்கின்றன...எங்ஙனம் எனது சிரசை அவற்றின் மேல் வைக்கமுடியும்...? என்று எண்ணி நான் இயலாதவனாக இருக்கிறேன்" என்று வருந்தினேன்....பின்னர் நான் பாபாவிடம், "ஓ...! தேவா, நீரில் இருக்கும் தங்கள் பாதங்களை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்... உடனே பாபா தமது பாதங்களை வெளியே எடுத்துக்கொண்டார். தாமதமின்றி நான் அவைகளைப் பற்றிக்கொண்டு வணங்கினேன். இதைக்கண்டு பாபா என்னை ஆசீர்வதித்து, "இப்போது போ, வாழ்வில் உயரிய நன்மையை நீ பெறுவாய்..பயத்திற்கோ, கவலைக்கோ எதுவும் காரணமில்லை...எனது ஷாமாவிற்கு பட்டுக்கரை வேட்டி ஒன்றைக் எடுத்துக்கொடு.. நீ நன்மை அடைவாய்" என்றார்.
பாபா கனவில் அறிவுருத்திய ஆணைக்கேற்ப ஆனந்த்ராவ் பாகாடே ஒரு வேஷ்டி கொணர்ந்து அதை மாதவ்ராவிடம் கொடுக்கும்படி காகா சாஹேப் தீஷித்தை வேண்டிக்கொண்டார்... ஆனால் பாபா அதனை ஏற்றுக் கொள்வதற்கேற்ற ஏதாவதொரு குறிப்பு அல்லது யோசனை கூறினாலன்றி தாம் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று மாதவ்ராவ் கூறிவிட்டார்....
சிறிது விவாதத்திற்குப்பின் காகா சாஹேப் திருவுளச் சீட்டுப் போடத் தீர்மானித்தார். ஐயப்பாடுள்ள எல்லா விஷயங்களிலும் திருவுளச் சீட்டுப்போட்டு பொறுக்கி எடுக்கப்பட்ட சீட்டில் கண்டுள்ளபடி நடப்பது காகா சாஹேபின் நிரந்தரமான வழக்கமாகும். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி எழுதி 'ஏற்றுக்கொள்ளலாமா', அல்லது ' மறுப்பதா' என்று இரு சீட்டுக்களில் எழுதப்பட்டு பாபாவின் படத்தின் அடியில் வைக்கப்பட்டு, ஒரு குழந்தையால் ஒரு சீட்டு எடுக்கும்படி கேட்கப்பட்டது. 'ஏற்றுக்கொள்' என்ற சீட்டே குழந்தையால் எடுக்கப்பட்டு வேஷ்டியும் மாதவ்ராவிடம் கொடுக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது... இவ்விஷயமாக ஆனந்த்ராவ், மாதவ்ராவ் இருவருமே திருப்தியடைந்தனர். காகா சாஹேபின் பிரச்சனையும் தீர்ந்தது...
மற்ற ஞானிகளின் மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை இக்கதை நமக்கு வலியுருத்துகின்றது...அதே சமயம் நமது அன்னையிடம் அதாவது சத்குருவிடம் முழு நம்பிக்கைக் கொண்டு அவரது அறிவுரைகளின் படி நடக்கவும் கூறுகிறது.. ஏனெனில் அவர் வேறு எவரையும் விட சிறப்பாக நமது நலத்தை அறிந்து வழிக்காட்டக் கூடிய பேராற்றல் படைத்தவர்... தாயுமானவர்...முக்காலத்தையும் உணர்ந்தவர்.. பின்வரும் பாபாவின மொழிகளை உங்கள் உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ளுங்கள்... "இவ்வுலகில் எண்ணற்ற ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால் 'நமது தந்தையே' (சத்குருவே), 'உண்மையான தந்தை' (நிஜமான குரு) ஆவார்...மற்றவர்கள் பல நல்ல விஷயங்களைக் கூறலாம்...ஆனால் நமது குருவின் மொழியை மறக்கவே கூடாது. சுருக்கமாக உங்கள் குருவை முழு மனதுடன் நேசியுங்கள்..அவரிடமே பரிபூர்ண சரணாகதி அடையுங்கள்..பயப் பக்தியுடன் அவர்முன் சாஷ்டாங்கமாக வணங்குங்கள்..பின்னர் ஆதவனுக்கு முன் இருள் இல்லாதிருப்பதைப் போல் உங்கள் முன் நீங்கள் கடக்கவேண்டிய உலக வாழ்வெனும் கடல் இல்லாததைக் காண்பீர்கள்."
🔥நாலு முழ நீளமும்,ஒரு முழ நீளமும் உள்ள மரப்பலலகையில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருக்க பாபா எவ்வாறு உறங்கினார் என்பதன் மூல சூட்சம விளக்கவுரை..🔥
தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி (அகல்) விளக்குகள் எரிந்துகொண்டிருக்க பாபா உறங்கினார்.. பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுத்துண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார்... (அத்தியாயம் 10) ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார்... இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்கவிடுகிறேன்" என்றார்...
பாபா : மகல்சாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை என்று பதில் உரைக்கின்றார்....
காகா : மகல்சாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன் என்று பணிந்து வேண்டுதலை வைக்கின்றார்....
பாபா : அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்...? பலகையின் மீது தூங்குவது எளிதல்ல... தன்னிடத்து பல நல்ல குணங்கள் மற்றும் பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும். தனது கண்கள் அகல அறிதுயில் நிலையில் விழிப்புணர்வுடன் தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும்...நான் தூங்கப் போகும் முன் மகல்சாபதியை என் அருகில் அமருமாறு கூறி, எனது இதயத்தின் மீது கைவைத்து நாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன்... இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை... தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான்...எனது இதயத்தில் அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ...! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான்...தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்க முடியாமல் தடுமாறுபவனும், தனது ஆசனம் (தோற்ற அமைவு) நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்...? என்று பதில் உரைத்தார்..மற்ற அநேக முறைகளில் அடியார்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ (நன்மையோ, தீமையோ) அது நம்மிடம் இருக்கிறது... எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏼🙏🏼
ஸ்ரீ சாயீயைப் பணிக... அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்...🙏🏼🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக