🔥 விழிப்புணர்வுப் பெற்றவன் எது தனக்குத் தெரிந்ததோ அதையே தன்னிலையறியும் தவமாக்குகின்றான் என்பதை அறிவீர்களாக🔥
நீங்கள் எவ்விடத்தில் ஓட்டத்தை துவங்கினீர்களோ அங்கே மறைபொருளாக்கப்பட்டுள்ளது....ஒரே ஒருமுறை அதை திரும்பிப் பார்த்தாலே அதுவே தன்னை உனக்கு காட்டும். 24 மணி நேரத்தில் ஒரு அரை மணி நேரம் உனது உடல், மனம், புத்தி எப்படி இயங்குகின்றது..? அது நலமாக இருக்கின்றதா.. ? இந்த கணம் நாம் உயிர்ப்புடன் குடும்ப சூழலை அணைத்திருக்கின்றோமோ என்பதை உணர்வது அவசியமாகின்றது... அவசியமானதை வசியமாக்கும் தந்திரம் இந்த மனித எந்திரத்துக்கு மட்டுமே உண்டு. எனக்கு நேரமே இல்லை இத்தனையையும் படிப்பதற்கு பொறுமையும் இல்லை என்று நழுவிச் செல்லும் மனநிலை எழுந்தால் நாம் நமது ஆத்ம சக்தியின் அழைப்பை தவற விட்டவர்கள் ஆவோம். படிக்கும் போது நீங்கள் படிப்பதில்லை, ஐம்புலன்களையும் ஒடுக்கி உங்கள் ஆத்மா படிக்கிறது. நமது உடலை வளர்த்த உணவிடுவது போல் ஆத்மாவை எழுப்ப இறையின் வார்த்தைகளை படிப்பதும், உள்வாங்குவதும் அடிப்படையான தன்மை. இறையின் அதிர்வு கனலாக வெளிவர இடைவெளியை உருவாக்கும் அஸ்திரம் இதுவே.....ஆகவே இறையதிர்வு வாசகங்களைப் படியுங்கள்...உணருங்கள்... தெளியுங்கள்.... அனுபூதி அடைய முயற்சி செய்வோம்..ஆகவே அனைத்தும் நம்மிடமே என்பதை உணர்ந்து, நம்மை நாமே சுயப் பரிசோதனையை மேற்க்கொண்டு வாழ்வில் உயரிய நிலையை அடைவோம்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🏽
ஶ்ரீசாயீ சுயவிழிப்புணர்வு தியான பீடம்..🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக