ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர அருள்மொழிகள்....🙏🙏

🔥பரபிரம்ம மூர்த்தியான சீரடிநாதர் சத்சரிதத்தில் கூறிய.அருளுரைகள் என்னவென்றால்...🔥

 என் முன்னாள் மனித உயிர்கள் அனைவரும்  சமம் என்றும்,எமக்கு ஜாதியோ, மதமோ, ஏழையோ,பணக்காரனோ போன்ற ஏற்றத்தாழ்வை நான் பார்ப்பதில்லை என்றும் ,நான் அனைவருக்குள்ளும் இருக்கின்ற ஆத்மாவை மட்டுமே  பார்க்கின்றேன் என்று கூருகிறார்.நாமும் அவரை பின்பற்ற.வேண்டும் என்பதற்காக, தான் தோற்றத்தின் மூலமாகவும் ,தன் நடைமுறை பண்புகள் மூலமாகவும் , அனைவருடைய விழாக்களையும்  ஜாதி ,இன, மத பாகுபாடு இல்லாமல் தான் கொண்டாடி மகிழ்வதன் மூலமாக,நாமும் அவ்வாறே ஜாதி ,மத ,பேதம் மற்றும் ஏற்றத்தாழ்வு  பார்க்கமல் நாம்  வாழவேண்டும் என்பதற்காக அவர் நமக்கெல்லாம் முன் உதாரணமாக அவர் வாழ்ந்து காட்டினார்.பகவான் இவ்வாறு இருக்கும் பொழுது நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதனை நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

சாய்பகவானை ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்றாற் போல் இந்துவா, முஸ்லிமா, கிரிஸ்தவரா இப்படி பல்வேறு கோணங்களில் அவரைப்பற்றிய சிந்தனையில் அவரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காண்பிக்கின்றார்கள்...இதன்காரனமாக வழிபடும் போது அதற்குரிய பலனையும் ,ஆசிர்வாதத்தையும் கோட்டை விடுகிறார்கள்.ஞானிகள்,மகான்கள், சித்த புருஷர்கள் இவர்கள் அனைவரும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர்கள் ...

இவர்கள் அனைவரும் முச்சந்தியில் மூச்சை அடக்கி தன் ஸ்தூல சரீரத்தை ஒலி உடலாக மாற்றி சூட்சம சரீரத்தோடு பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள்.இவர்களை நாம் ஆராய்ந்தால் நாம் ஆன்மீகத்தில் பின்தங்கிய நிலையை அடைவோம்.மகான்களால் கிடைக்க கூடிய ஆசிர்வாதம் நமக்கு கிடைக்காது.இவர்கள் நம்முடைய பாவனைக்கும், பக்திக்கும்,உள்ளார்ந்த அன்பிற்கும் ஏற்றாற் போல நம்மை ஆசிர்வாதம் செய்து  வழிநடத்துகிறார்கள்.

சாய்பகவான் தமக்கு அனைவரும் சமம் எனவும்,ஏற்றத்தாழ்வு பார்க்க கூடாது என்பதை வலியுருத்த சத்சரிதத்தில் வார்த்தைகளை மட்டும் பிரயோகம் செய்யவில்லை .ஒவ்வொரு செயலையும் தான் வாழ்ந்த காலத்தில்  முன் மாதிரியாக இருந்து தான் நடைமுறைப்படுத்தி அனைவருக்கும எடுத்துக்காட்டாக  வாழ்ந்தும் காண்பித்தார்.....உயரிய பரம்மபிரம்ம பீடமான பரமாத்மாவாகிய சாய்மாதா இவ்வாறு இருக்கும் போது நாமும் சாய் அன்னையைப் போல் இல்லாவிட்டாலும் மற்ற உயிர்களை சமமாக நேசித்தும் ,அனுசரித்தும்,எந்த பேதமும் பாகுபாடும் பார்க்காமல் ஆத்மார்த்தமாக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அன்று அவ்வாறு வாழ்ந்தார்..இறைவன் ஒருவனே ...மூலம் ஒன்றே ...அதன் ஒருதுளியே நாம் என்ற சூட்சமத்தினை உணர்ந்து குரு வழிப்பாதையை பின்பற்றுவோம்..ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடைவோம்...

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏽🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...