ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏
எமது அன்பார்ந்த குழந்தைகளே....நீங்கள் வீட்டிற்குள் நுழையும்போது உனக்கு முன் நான் வாசலில் வந்து வரவேற்பதும், நீ வெளியில் செல்லும்போது உன்னை வழியனுப்பி விட்டு, துணையாகவும் வருவதும், உன் குரலுக்கு பதில் கொடுப்பதும் நானே! உன் வேண்டுதல் தாமாக நிறைவேறும் என்பதை புரியவைக்க இனி வெளிப்படையாக நான் செயல்படுவேன்....அனைத்தும் இருக்கிறது என்ற குணாதிசயமோ, இல்லை என்னும் பாகுபாடோ , இரண்டுமே இல்லாததும் லிங்க (ஆண்/பெண்) பேதம் இல்லாததும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒலியாலும், ஒலியினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டது எம் ரூபத்தில் இருக்கிறது என்பதை அறிவீர்களாக.. .
நாயாயினும், பன்றியாயினும், ஈயாயினும் சரி, யாரையும் எதையும் அவ மரியாதையுடன் வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்யாதீர்கள்... ஏனெனில் முன் ஜென்ம பந்தம் இல்லாமல் யாரும் எதுவும் நம்மிடம் வருவதில்லை... உனக்கும், எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக... அப்பொழுது நமக்குப் போகவும், வரவும் பயமில்லாத ஒரு பாதை கிடைத்துவிடும்.... 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே அந்த தடுப்புச் சுவர்.. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடையமுடியாது என்பதை மனதில் இருத்துவீர்களாக...
தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும், இரக்கமாகவும், கெஞ்சுகிறீர்கள்..; காரியம் கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைபடுவதில்லை! என் பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்".பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை, சிருஷ்டியனைத்திலும் (கண்களுக்கு புலப்படும்) சாயீ சூட்சுமத்தை விட சூட்சமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர். அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும், வடிவமும், வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது..
ஸ்ரீ சாய் சத்ச்சரித்திரம்...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக