ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🏻🙏🏻
🔥🔥சாய்சரித்திர அத்தியாயம் இரண்டில் இடம்பெற்றுள்ள மூல விளக்கவுரை என்னவென்றால் ...சீரடி பகவான் எவ்வாறு தன் பக்தர்களை ஆழமாக உற்றுநோக்கி வழிகாட்டுகின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இரு பக்தர்கள் பேசிய அனுபவ உரை...🔥🔥
குருவின் வழிக்காட்டுதலைப் பற்றி காகா சாஹேப் தீஷித்திற்கும் பாலா சாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம் நடைபெற்றது.... "நம் சுதந்திரத்தை நாம் ஏன் இழக்கவேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்" என்று நான் விவாதித்தேன். "நாம் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார்..? ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்... தூங்குவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்..?" இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன்... பாடே கர்மத்திற்க்காக (தலைவிதி) வாதாடிக் கூறியதாவது, "நடப்பது நடந்தே தீரும். பெரியோர்கள் எல்லாம் தோல்வியுற்று இருக்கின்றார்கள். மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் வேறுவழியில் செயல்படுகிறது... உம்முடைய புத்தி சாதூர்யத்தைத் தள்ளிடுக. பெருமையும் அகங்காரமும் உமக்கு உதவாது"... கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்குமேல் நடைபெற்றும் வழக்கம்போல் ஒரு முடிவும் காணப்படாது முடிவாக களைப்படைந்து விட்டோம்... நானும் மன அமைதியை இழந்தேன்...வலிவான சரீர அபிமானம், அகங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையெனக் கண்டேன். அகங்காரமே விவாதத்தை வளர்க்கின்றது என்றே கூறலாம்...
பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து பாபா பின்வருமாறு வினவினார். சாதே வாதாவில் என்ன நடந்துக் கொண்டிருந்தது..? விவாதம் எதைப் பற்றியது..? என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, "ஹேமத்பந்த் என்ன கூறுகிறார்..?" இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்... நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாதே வாதாவானது மசூதியினின்று சற்று தூரத்திலிருக்கின்றது... சர்வ வியாபியாகவும், அகத்திலிருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பகவான் எங்ஙனம் அறிந்திருக்க முடியும்..? என்பதை உணரும் போது அண்ட சராசரத்திலும் நீக்கமற நிறைந்த ஆதி மூல சூட்சம ஆற்றலுக்கு நம்முடைய உரையாடலை அறிய முடியாதா என்று உணர்ந்தேன்.. இதிலிருந்து பகவான் நம்மை கணம் நேரம் தவறாது உற்று நோக்கி கொண்டு இருக்கின்றார் என்பது உணர்ந்து நல்வழியில் செல்வோமாக...
ஓம் ஶ்ரீ சாய்ராம்..🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக